Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

                                                                                                                                            

 

                                                                                                                  பார்வை ஒன்றே போதுமே

                                                                               கண்கள் பேசும் காதல் மொழிக்கு வார்த்தைகள் வெறும் சுமையே.

 

                                               இருநாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் அந்த மண்சாலை குண்டும் குழியும் சேறும் சகதியுமாக இருந்தது.இரு மருங்கிலும் வயல்கள். கதிர்கள் அலைபோல் அசைய பச்சைபசேல் என்று குளிர்ச்சியாக இருந்தது. கதிர்களைத் தழுவிவரும் காற்றில் மண்மணம் கமழ்ந்து உடலுக்கு புத்துணர்சியைத் தருகின்றது. அந்தப் பாதையில் ஒரு மனிதர் தனது வீட்டை விட்டு வெளியேறி பல நாட்களாக இலக்கின்றி நடந்து கொண்டே இருக்கின்றார்.நாளும் கிழமையும் கூட அவருக்கு மறந்து விட்டது.தான் வாழ்ந்த நகரத்தையும் தனது சொகுசான வீடு, ஆடம்பரமான கார்கள்,அன்பான மனைவி வளர்ந்துவிட்ட அழகழகான ஆணும் பெண்ணுமாய் இரண்டு பிள்ளைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்தாயிற்று.

                                                                      மேலே அண்ணாந்து பார்க்கையில் சூரியன் மதியத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தது.இவ்வளவு நாளும் பசியும்,களைப்பும் தெரியவில்லை.ஆனால் இப்பொழுது வயிறு பசி பசி என்று ஓலமிடுகின்றது.பசி ஒன்றும் அவருக்கு புதிதல்ல.சிறுவயது மற்றும் இளமைப் பருவங்களில் பசியோடு பங்காளியாக இருந்தவர்தான்.கடந்த பதினைந்து இருபது வருடங்களுக்கும் மேலாக அவரது இடைவிடாத உழைப்பின் பயனாக அது அவரை விட்டு வெகுதூரம் விலகியே இருந்தது.ஆனால் இப்பொழுது அவருக்கு பசித்ததும் கூடவே சிரிப்பும் வந்தது.

                                          இப்பொழுதுதான் உடல் உபாதையும் தொடர்ந்து நன்றாகத் தோய்ந்து  குளிக்கவேண்டும் என்ற எண்ணமும் வந்தது.எங்காவது வாய்க்காலோ, குளமோ தென்படுகின்றதா என்று சுற்றிவரப் பார்த்துக்கொண்டே நடக்கின்றார்.அவர் எதிர்பார்த்த படியே அங்கு ஒரு குளத்தைக் கண்டதும் ஸ்நானம் செய்வதற்காக தனது கோட்சூட் சேர்ட் பூட்ஸ் எல்லாவற்றையும் கழட்டி ஓரமாக வைத்துவிட்டு அருகில் இருந்த பற்றைக்குள் ஒதுங்கிவிட்டு வந்து குளத்தில் அலுப்புத்தீர நன்றாக முங்கி முங்கி தோய்ந்து விட்டு வெளியே வந்தார். அங்கே பார்த்தால் அவர் கரையில் கழட்டிவைத்த ஆடைகள், பொருட்கள்  எதுவும் அங்கில்லை.யாரோ வீதியால் சென்றவர்கள் அவற்றை எடுத்து சென்றிருக்க வேண்டும். அவரது  கைபேசி மட்டும் கீழே புல்லுக்குள் கிடந்தது. அவர்கள் அவசரத்தில் எடுக்கும்போது இது நழுவி கீழே விழுந்திருக்க வேண்டும். எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டார்.

                                                   இவ்வளவு நாளும் கோபத்தில் மழுங்கிக் கிடந்த மூளை இப்பொழுதுதான் தன் உணர்வடைந்திருந்தது. தான் இப்பொழுது எங்கிருக்கிறோம் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை.தன்னை ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொண்டதும் மீண்டும் அவருக்கு சிரிப்பு வந்தது. இடுப்பில் ஒரு ஜட்டி, கழுத்தில் டாலருடன் கூடிய  தடிமனான தங்கச் சங்கிலி,கையில் தங்கச் செயின் போட்ட  கடிகாரம்,விரல்களில் வகைக்கொன்றாக நாலு மோதிரங்கள் இப்படி இருந்தால் யாருக்குத்தான் சிரிப்பு வராது. அப்படியே வயலுக்குள் இறங்கி வரப்புகளில் மேல் வெறுங் கால்களுடன் யாராவது தென்படுகினமா எனப் பார்த்துக் கொண்டு நடந்து போகிறார்......!

பார்வை .....(1)  👁️

பார்ப்போம் இனி ......!  ✍️

  • Like 16
  • Thanks 1
  • Replies 61
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவி அண்ணாவும் தொடங்கியாச்சு. தொடருங்கோ அண்ணா.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, suvy said:

தான் வாழ்ந்த நகரத்தையும் தனது சொகுசான வீடு, ஆடம்பரமான கார்கள்,அன்பான மனைவி வளர்ந்துவிட்ட அழகழகான ஆணும் பெண்ணுமாய் இரண்டு பிள்ளைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்தாயிற்று.

90க்கு முன் வெளிநாடுவந்த பலரின் நிலை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

                                            பார்வை ஒன்றே போதுமே........(2).

                                                                  ஆங்காங்கே வயல் வெள்ளத்துக்குள் வந்திருந்த சின்ன மீன்களை கொக்கு, நாரை போன்ற சில பறவைகள் கொத்திக்கொண்டு பறப்பதும் ஒன்றோடொன்று சண்டை பிடிப்பதும் பார்க்க ரம்மியமாக இருக்கின்றது. இவ்வளவு பிரச்சினைக்குள்ளும் எவ்வளவு காலமாச்சுது இப்படியெல்லாம் ரசிச்சு என மனம் எண்ணிக் கொண்டது. தூரத்தில் ஒரு மேட்டில் ஒராள் நிற்பதைக் கண்டு அங்கு செல்கிறார். அது ஒரு நடுத்தர வயதுடைய பெண் என்று தெரிகின்றது. அந்தப் பெண்ணும் இவரைக் கண்டு விடுகிறாள். இவரது கோலத்தைப் பார்த்ததும் அங்கிருந்து செல்வதற்கு எத்தனிக்கிறாள்.

                                                                                                                                                                            உடனே சாமிநாதனும் ஆம் அதுதான் அவரது பெயர் தன்னை சுதாகரித்துக் கொண்டு அவளைப் பார்த்து அம்மா போகாதேங்கோ , கொஞ்சம் நில்லுங்கோ  என்றதும் அவள் சற்று நின்று, ம்....என்ன என்பதுபோல் பார்க்கிறாள். அப்பொழுது ஒரு குமர்ப் பிள்ளையொன்று வயலுக்குள் இருந்து ஆளளவு உயர்ந்திருந்த நெற்கதிர்களை விலத்திக் கொண்டு யாரம்மா இவர் என்னவாம் என்று கேட்டவாறே வரப்பில் ஏறி வருகின்றாள். அவள், கையில் ஈர்க்கில் கோர்த்தபடி அஞ்சாறு மீன்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன. தெரியவில்லையம்மா, அதுதான் விசாரித்து கொண்டிருக்கிறேன் என்கிறாள்.

                                                                சாமிநாதனும் பயப்பிடாதையுங்கோ, கணக்க யோசிக்க வேண்டாம். நான் பக்கத்து ஊர்தான், அதோ அந்தக் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது யாரோ என்னுடைய உடுப்புகளை எடுத்துக் கொண்டு போட்டினம். சுருக்கமாக தன் கதையை சொல்லிவிட்டு எனக்கு ஒரு உதவி செய்வீங்களோ, நான் கட்டுறதுக்கு ஏதாவது ஒரு துண்டு தரமுடியுமோ என்று கேட்கிறார். ஆனாலும் அவர்களுக்கும் கொஞ்சம் யோசனையாய்த் தானிருக்கு. அவரின் நிலையைப் பார்க்க பாவமாயும் இருக்கு. அப்போது அந்தப் பிள்ளை சித்ராவும் சிறிதும் யோசிக்காமல் இந்தாங்கோ ஐயா இப்ப இந்தத் துண்டைக் கட்டுங்கோ என்று தனது தாவணியை எடுத்துக் குடுத்துவிட்டு, அதோ அங்குதான் எங்கள் வீடு இருக்கிறது அங்கே அப்பாவின் சாரம் இருக்கு வாங்கோ எடுத்துத் தாறன் என்கிறாள். அவரும் அதை வாங்கிக் கொண்டு தனது கழுத்தில் கிடந்த சங்கிலியை எடுத்து அவளிடம் குடுக்க அந்தச் சுட்டிப்பெண்ணும் என்ன ஐயா ஒரு தாவணிக்கு சங்கிலி தாறீங்கள் இது ரோல்ட்கோல்டோ என்று பகிடி விட உடனே தாய் மகேஸ்வரி சும்மா இருடி உனக்கு வாய் ரெம்ப நீளம் என்று அவளை அதட்டி விட்டு பரவாயில்லை, அது உங்களிடமே இருக்கட்டும் என்கிறாள். இப்பொழுது அவரைப்பற்றிய எண்ணம் மாறி நல்ல எண்ணமாக வருகிறது. பின் அவரைப் பார்த்து உங்களை பார்த்தால் பசியோடு இருப்பதுபோல் தெரிகிறது, வீட்டுக்கு வாங்கோ சாப்பிட்டுட்டு போகலாம் என்று சொல்ல மூவரும் கதைத்து கொண்டே வீட்டுக்கு செல்கின்றனர். 

                             அவர்களின் பேச்சில் இருந்து மகேஸ்வரியின் கணவன் மாணிக்கம் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. அங்குள்ள சிறிய நகரத்தின் கடை வீதியில் பாதையோரத்தில் சின்ன இடத்தில் இருந்து தொழில் செய்து வந்திருக்கிறார். அவர்களுக்கு முத்து, சித்ரா என்று இரண்டு பிள்ளைகள். உழைப்பதில் தான் குடிப்பதுபோக கொஞ்சம் வீட்டுக்கும் கொடுப்பார்.ஊரில் நிறையக் கடன் வாங்கி வைத்திருந்தார். கடன் குடுத்தவர்கள் மாணிக்கத்தைக் கண்டால் வேறு பக்கமாக ஓடிவிடுவார்கள்....இவர் ஒன்றும் சண்டியனில்லை எங்கே மீண்டும் கடன் கேட்டு விடுவார் என்று.... கொசுவுக்கு பயந்து நாங்கள் வலைக்குள் படுப்பதுபோல்தான் இதுவும். கடந்த வருடம் இவரது நண்பரும் இன்னொருவரும் தவறணையில் சண்டை பிடித்த பொழுது மாணிக்கம் இடையிலே புகுந்து விலக்குப் பிடிக்கப் போய் எதிர்பாராமல் வயித்தில  கத்தியால் குத்து வாங்கி இறந்து விட்டார். மாணிக்கத்துக்குப் பயந்து ஓடி ஒழிச்ச கடங்காரர் எல்லாம் இப்ப குளிர் விட்டுப்போய் வீட்டுக்கு வந்து கண்டபடி பேசி சண்டை பிடித்து விட்டு போவார்கள்.......!

பார்ப்போம் இனி......!  ✍️

  • Like 10
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பறவாயில்லை நன்றாகவே போகிறது.தொடருங்கோ...✍️😄 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதையில் நிறைய ஊர் வாசனை வருகின்றது…!கதை சொல்லி சிம்பிளாகவும், அதே நேரம் கருப்பொருளில் கவனமாகவும் கதையை நகர்த்தும் விதம் அழகு..! தொடருங்கள்…!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பார்வை ஒன்றே போதுமே........(3).

                                                                 வீட்டுக்கு வந்ததும் மகேஸ்வரி விரைவாக சோறும் ஆக்கி மீன்குழம்பும்  ஒரு கீரையும் வைக்கிறாள்.....சித்ரா ஓடிப்போய் பெட்டிக்குள் இருந்து தகப்பனின் ஒரு சாரமும் டீ - சேர்ட்டும் எடுத்து வந்து சாமிநாதனிடம் தர அவரும் அதை வாங்கி உடுத்திக் கொள்கிறார்.....பின் அவர் திண்ணையில் இருந்து பார்க்க, மழைக்கு வீட்டின் கூரையில் இருந்து  ஒழுகிய இடங்களில்  வாளி , சட்டி என்று வைத்திருந்தார்கள். திண்ணைக்கும் குசினிக்கும் இடையில் இருக்கும் பனைமட்டை  வரிச்சின் இடைவெளியில் மகேஸ்வரி குந்தியிருந்து கால்களை அகட்டி வைத்து அம்மியில் அரைப்பது தெரிகிறது.அவர் பார்வையை வேறு பக்கம் திருப்பி வெளியே எழுந்து வருகிறார்.இவ்வளவு ஏழ்மையிலும் அவர்களது விருந்தோம்பல் அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அப்போது அவர்களது மகன் முத்து ஒரு சைக்கிளில் வந்து   அதை திண்ணையில் சாத்தி விட்டு சாமிநாதனைப் பார்த்தபடி வீட்டுக்குள் போகிறான்....அங்கு அவனுக்கு சித்ரா நடந்ததை சொல்லி முடிக்கவும் மகேஸ்வரி குரல் கொடுக்கவும் சரியாக இருக்கின்றது.

                                                                                    தம்பி கத்தியை எடுத்து கொண்டுபோய் வாழையிலை ரெண்டு வெட்டிக்கொண்டு வா.  திண்ணையில பாயைப்போடு பிள்ளை சாப்பாடு முடிஞ்சுது  அவரைக் கூப்புடு.  எல்லோரும் சாப்பிட்டு முடிந்தபின்பு  வெளியே இருந்து வெறியில் வந்த ஒருவர் இவர்களிடம் பணம் கேட்டு சண்டை பிடித்து விட்டு கண்டபடி தூசண வார்த்தைகளால் பேசிக்கொண்டு போகிறார்.

                                                                    விருந்தாளிக்கு முன்பாக கடங்காரன் வந்து கத்திவிட்டுப் போனது அவர்கள் மூவருக்கும் ஒருமாதிரி கூச்சமாக இருந்தது. ஆனாலும் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தப் பையன் முத்துதான் இப்பொழுது தகப்பன் பார்த்துவந்த வேலையை செய்துகொண்டு வருகின்றான். தமக்கை சித்ரா படிப்பதற்காகவும் குடும்பச் செலவுகளுக்காகவும்  தனது படிப்பை நிறுத்தி வைத்து விட்டு சம்பாதித்து கொண்டுவந்து தாயிடம் குடுக்கிறான். ஆனாலும் தான் இப்பொழுது அவர்களுக்கு எப்படி உதவ முடியும். இன்று தான் ஒரு அசந்தர்ப்பமான சூழ்நிலையில் இவர்களைச் சந்திக்க வேண்டியதாகி விட்டது. தான் கொடுத்த சங்கிலியைக்கூட அவர்கள் வாங்கவில்லை. ம்...என்று ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டார். பின் மாலையாகி நேரத்துக்கே இருட்டத் தொடங்கி விட்டது. அதனால் அவர்களிடம் சொல்லி விடைபெற்றுக்கொண்டு அவர் கிளம்பி விட்டார்.

                                                     அடுத்தநாள் நன்றாக அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த சாமிநாதனின் தலையில் யாரோ தண்ணி ஊற்றுவதை உணர்ந்து பதறியடித்துக் கொண்டு எழுந்தவர் திகைப்புடன் நிமிர்ந்து பார்க்க கடை திறப்பதற்காக வந்து சிப்பந்தி சோமு கடை விறாந்தையில் யாரோ பிச்சைக்காரன் படுத்திருப்பதைக் கண்டு எரிச்சலுடன் அவர்மீது வாளித்தண்ணியை கொட்டி விட்டான். அவருக்கு கொஞ்சம் கோபம் வந்தாலும் அதை அடக்கிக்கொண்டு பேசாமல் எழுந்து வெளியேவர, அப்போது எதிர்ப் பக்கத்து கடையில் இருந்து ஒரு பையன் வீதியைக் கடந்து ஓடிவந்து சோமுவை கடிந்து விட்டு ஐயா நீங்களா, அட நீங்கள் இரவு வீட்டில் தங்கி விட்டு காலையில் கிளம்பியிருக்கலாமே என்று சொன்னான். அப்போது சோமு என்ன முத்து இவரை உனக்கு முன்பே தெரியுமா என்று வினாவ ஓம் சோமு தெரிந்தவர்தான் நேற்று வீட்டுக்கு வந்திருந்தார்......!

பார்ப்போம் இனி.........!  ✍️

  • Like 5
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பணமும், குணமும் ஒன்றாகப் பயணிப்பது மிகவும் அரிது...!

பணம் எனும் அச்சாணியைச் சுற்றித் தான் வாழ்க்கை எனும் சக்கரம் சுழலுகின்றது போலும்...!

சாமினாதன் மிகவும் பொறுமைசாலி போல உள்ளது! வெளி நாட்டு வாழ்க்கை முதலில் பழக்குவது பொறுமையைத் தான்...!

அதனால் படிப்புக்கும் செய்யும் தொழிலுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை....!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பார்வை ஒன்றே போதுமே..... ( 4).

                                                                                  உறவினரா என்று சோமு கேட்க  ஒரு வினாடி சுதாகரித்த முத்து, ம்....அப்பா வழியில் சொந்தம் என்று சொல்லி விட்டு அவரை தன்னோடு அழைத்துச்சென்று தான் வேலை செய்யும் இடத்தில் இருத்தி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று சூடாக பால்தேனீரும் வடையும் வாங்கி வந்து அவருக்கும் குடுத்து தானும் சாப்பிட்டான்.  பின் வாடிக்கையாளர்கள் வர வர முத்துவும் வேலையில் மூழ்கி விட்டான். அவன் வேலை செய்யும் வேகத்தையும் லாவகத்தையும் பணம் வாங்குவதும் மிகுதியை குடுப்பதுமாக அவனது சுறு சுறுப்பைப் பார்த்த சாமிநாதனுக்கு அவனை மிகவும் பிடித்து விட்டது.தன்னையறியாமல் அவனுக்கு கூடமாட எல்லா உதவிகளையும் செய்கிறார். மத்தியானம் அவருக்கும் சேர்த்து முத்து சாப்பாடு வாங்கி வர இருவரும் சாப்பிடுகின்றனர். இரவு இருவரும் ஒன்றாக வீட்டுக்கு வருவதைக் கண்ட மகேஸ்வரி ஆச்சரியத்துடன் அவர்களை வரவேற்கிறாள்.அப்போது முத்து காலையில் இருந்து நடந்ததை தாயிடம் சொல்கிறான்.

                                                                                நாட்கள் மாதங்களாக உருண்டோடுகின்றன.சாமிநாதனும் இப்போது அவர்களில் ஒருவராகி விட்டார். அவரும் செருப்பு தைக்கும் தொழிலை நன்றாக கற்றுக்கொண்டு விட்டார். அதனால் முத்துவும் இவரை அங்கே விட்டு விட்டு தான் வீடுகளுக்கு பேப்பர் போடுதல், டிப்போவில் இருந்து பால் வீடுகளுக்கு மற்றும் கடைகளுக்கு எடுத்து சென்று குடுத்தல் போன்று  வேறு சில வேலைகளையும் செய்து கொண்டிருந்தான். சாமிநாதனின் வழிகாட்டலில் அந்தக் குடும்பம் மாணிக்கம் பட்ட கடன்களை அடைத்துக் கொண்டே வந்தது. முத்து சாமிநாதனுக்கு பணம் தர முற்பட்டபோதும் அவர் வாங்கவில்லை.மறுத்து விட்டார். ஆயினும் மகேஸ்வரி அவருக்கென்று ஒரு சிறு தொகையை தனியாக சேமித்துக்கொண்டு வருகிறாள். அவரது ஊர் மற்றும் குடும்பம் பற்றி எதுவும் தெரியாததால் நாளைக்கு ஒரு பிரச்சினை மனக் கசப்பு வரக்கூடாது என்று அந்தச் சேமிப்பு. அதில் அவள் உறுதியாய் இருக்கிறாள். சித்ராவும் பரீடசைகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி இருந்தாள். இப்போது அவர்களின் கையில் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல பணமும் சேர்ந்து கொண்டிருந்தது. கூடவே மகேஸ்வரியையும் சாமிநாதனையும்  இணைத்து வதந்திகள் அக்கம் பக்கம் எல்லாம் பரவி எல்லோரும் கதைத்து மகிழ்ந்து அலுத்து அது அப்படியே புஷ்வாணமாகிப்போய் அந்தக் குடும்பத்துக்கென்று ஒரு கௌரவமும் மதிப்பும் உண்டாகியிருந்தது.

                                                 

                                                                   சாமிநாதன் வீட்டுக்கு வெளியே திண்ணையில் இருக்கும் கட்டிலில் படுத்தபடி வானத்தைப் பார்க்கிறார். நல்ல நிலா வெளிச்சமாக இருக்கிறது. நினைவுகள் பின்னோக்கி நகர தான் வீட்டை  விட்டு கிளம்பிய அன்றும் இப்படித்தான் நிலவு எறித்துக் கொண்டிருந்தது. அன்று மாலை தனது அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வருகிறார்.அங்கு அவர் மனைவி ரேகா இல்லை. கைபேசியில் அழைத்தும் அழைப்பில் இல்லை. வேலைக்காரியிடம் கேட்ட பொழுது அம்மா வெளிக்கிட்டுக்கொண்டு கிளப்புக்கு சென்றிருப்பதாக சொன்னாள். காத்திருந்தார் வரவில்லை.நேரம் நள்ளிரவாகிக் கொண்டிருந்தது. காரை எடுத்துக் கொண்டு அவள் வழக்கமாகப் போகும் கிளப்புக்கு போனார்.ஹோலில் இருந்த கூட்டத்தில் ரேகா இல்லை.எங்கு போயிருப்பாள் என்று யோசித்துக் கொண்டு மதுவுக்கு ஓடர் குடுத்து விட்டு காத்திருக்கும் பொழுது அவள் ஆடைகள் விலகிய நிலையில் ஓர் அந்நிய ஆணின் அணைப்பில் போதையில் தள்ளாடியபடி மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள். சாமிநாதனுக்கு கோபத்தில் கண்கள் எல்லாம் சிவந்து அங்கேயே அந்த இடத்திலேயே அவர்கள் இருவரையும் கொன்று விடலாம் போலத் தோன்றியது. எதுக்கும் வீட்டுக்கு வரட்டும் என்று நினைத்துக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். உள்ளே கோபம் தணலாக எரிந்து கொண்டிருந்தது. மேசை லாச்சியைத் திறந்து கைத்துப்பாக்கியை எடுத்து அதில் ரவைகளைப்   போட்டு தயார் நிலையில் வைத்துவிட்டு "குட்டி போட்ட பூனைபோல்" அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார்......!

பார்ப்போம் இனி.........!  ✍️

  • Like 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகுதி எங்க சுவி அண்ண.. ஆஹா தொடரட்டும்.

சாமிநாதன் போட்டாரா போடலையா துப்பாக்கிய வேறு ரவை நிறப்பி வச்சிக்கொண்டு இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பார்வை ஒன்றே போதுமே........ (5 ).

 

                                          அவரது மனம் அவரை இடித்துரைத்தது. "நீயோ வேலை வேலை என்று அலைகிறாய் என்றாவது ஒருநாள் என்றாவது ஒருநாள் அவளைப்பற்றி யோசித்திருக்கிறாயா. பணமும் வசதிகளும்தான் வாழ்க்கையா. அவளும் உணர்ச்சிகளோடு ஊசலாடும் பெண்தானே. எவ்வளவு காலத்துக்குத்தான் வெறும் சுவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது".

 

             ஏன்  நான் இவர்களுக்காகத்தானே ஓடி ஓடி உழைக்கிறேன். சிறுவயதில் இருந்து நான் பட்ட துன்பங்கள் இவர்களுக்கு வேண்டாம் என்றுதானே நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறேன். எவ்வளவு கஷ்டப்பட்டு இப்படி ஒரு வணிக வளாகத்தை உருவாக்கி இருக்கிறன். இதன் கிளைகள் பிறநாடுகளிலும் விரிய விரிய எனக்கும் பொறுப்புகள் அதிகரித்துக்கொண்டே போகின்றது தெரியுமா. கொஞ்சம் அசந்தாலும் அத்தனை உழைப்பும் வீணாகி விடுமே.  நான் கொஞ்சம் மது அருந்துவதுண்டுதான் ஆனால் இதுவரை உன்னைத் தவிர இன்னொரு பெண்ணை நினைத்தும் பார்த்ததில்லையே. என் தாயின் இடத்தில் அல்லவா உன்னை வைத்திருந்தேன். அதுக்காக இன்றைய பசிக்கு இன்று சாப்பிடாமல், இன்று வாழாமல் இருக்கலாமா. மனசாட்சி  கேட்டது.

                                                               எல்லாம் ஒரு சில நிமிடங்கள்தான். எடுத்த துப்பாக்கியை கீழே வீசி எறிந்துவிட்டு சற்று நேரம் பால்கனியில் நின்று வானத்தைப் பார்த்தார். நல்ல நிலவு எறித்துக் கொண்டிருந்தது. அப்படியே கிளம்பி கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். வழியில் ஒரு லொறியில் ஏறி எங்கேயோ காடாய் தெரிந்த இடத்தில் இறங்கி மீண்டும் நடந்தார் நாள் வாரம் பார்க்காமல்.

 

                                                                              அப்போது உள்ளிருந்து மகேஸ்வரி குரல் குடுக்கிறாள் சித்ரா ஐயாவை சாப்பிட வரச்சொல்லு என்று. அந்த அழைப்பில் தன்னுணர்வு பெற்றவர் பழைய நினைவுகளை உதறிவிட்டு எழுந்துவந்து சாப்பிட அமர்ந்தார்.எல்லோரும் அன்றைய சம்பவங்களை கதைத்துக் கொண்டே சாப்பிடுவது வழக்கம். அப்போது சாமிநாதன் முத்துவிடம் முத்து நான் ஒரு யோசனை சொல்கிறேன் கேட்பியா என்று சொல்ல உடனே மகேஸ்வரி குறுக்கிட்டு  இதென்ன கேள்வி ஐயா ஏதோ கடவுள் அனுப்பியதுபோல நீங்கள் வந்த பின்தான் என்ர  குடும்பம் தலையெடுத்திருக்கு. நாங்கள் பட்ட அவமானங்களில் இருந்து உங்களின் வழிகாட்டுதலும், உழைப்பும்தான் எங்களை மீட்டிருக்கு. நீங்கள் சொல்லுங்கோ அவன் செய்வான் என்கிறாள்.

முத்ததுவும் சொல்லுங்கய்யா செய்கிறேன். நீங்கள் நல்லதுதானே சொல்லுவீர்கள் என்றான்.

 சாமிநாதனும் அவர்களிடம் உங்கள் நம்பிக்கைக்கு நன்றி.

                                ஏன்  மூத்து நீ மீண்டும் கல்லூரிக்கு சென்று படிக்கலாம்தானே.இன்னும் காலம் போய் விடவில்லையல்லவா என்று கேட்கிறார். கொம்மாவும் நீ வீட்டுக் கஷ்டத்தால கல்வியை தொடரவில்லையே என்று மிகவும் கவலைப் படுகிறா. அதுவும் சரிதானே.

முத்துவும் என்னய்யா சொல்லுறீங்கள். அக்காவின் படிப்பு இன்னும் முடியவில்லை, இனிமேல்தான் நிறைய செலவுகள் இருக்கு. அது உங்களுக்கு தெரியும்தானே.

அது எனக்குத் தெரியும் முத்து அதை சமாளிக்கலாம். உனக்குரிய கல்லூரி பக்கத்து நகரத்தில் இருப்பதால் நீ கல்லூரி விட்டதும் மாலையில் கொஞ்சம் வேலையும் செய்ய முடியும் இல்லையா.

முத்துவும் அது முடியாது ஐயா சரியான கஷ்டம் என்கிறான்.

சித்ரா குறுக்கிட்டு ஏன் முடியாது தம்பி.நான் பல்கலைக்கழகம் சென்றாலும் சும்மா இருக்கப் போவதில்லை. கீழ்வகுப்பு பிள்ளைகளுக்கு டியூசன் எடுக்கப் போகிறேன். அது எனக்கும் படிச்சதை விடாமல் தொடர்வதற்கு உதவியாயும் இருக்கும். என்ன ஒரு சிறிய கணனி அல்லது கைபேசி இருந்தால் கூட நல்லதுதான். அறையில் இருந்தபடி ஆன்லைனில் வகுப்புகள் செய்ய முடியும். இப்ப அவ்வளவு வசதிகள் வந்து விட்டதுதானே. என்னுடைய சிலபல செலவுகளுக்கு அந்தப்பணம் உதவியாய் இருக்கும். ஐயா சொல்வதுபோல் நீ தயங்காமல் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம்.

                           ஏன் அக்கா உனக்கு வேணுமெண்டால் நீ என்னுடைய  போனை பாவிக்கலாம். நான் இப்பொழுது சமாளிக்கிறன் பிறகு ஒன்டு வாங்கலாம். வேண்டாமடா தம்பி. அங்க இங்க ஓடியாடி வேலை செய்யும்  உனக்கு அவசியம் போன் வேணும். அதுவும் நீ யாரோ வெளிவாட்டில் இருந்து வந்தவர்களிடம் செகன்ட் ஹான்டாக வாங்கிய பழைய நோக்கியா போன் அது. அதை வைத்து பாடம் சொல்லிகுடுக்க முடியாது, ஒன்டு செய்யலாம் சண்டைக்கு வாறவங்களின் மண்டையை உடைக்கலாம். இவர்கள் கிண்டலும் கேலியுமாக கதைக்க சாமிநாதன் மனம் விட்டு சிரிக்கிறார்.இப்படி சிரித்து எவ்வளவு காலமாகி விட்டது. தானும் ரேகாவும் தங்களது பிள்ளைகள் ரவிதாசோடும் நிமலாவோடும் எப்போதாவது சேர்ந்திருக்க நேரும் சமயங்களில் இப்படி மகிழ்ச்சியாய் இருப்பதுண்டு. அதெல்லாம் கனவாகிப் போச்சு.........!

பார்ப்போம் இனி ........!   ✍️

  • Like 8
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதொரு கற்பனை கலையை இறைவன் உங்களுக்கு தந்திருக்கின்றார், தொடருங்கள் சுவி👍

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, உடையார் said:

நல்லதொரு கற்பனை கலையை இறைவன் உங்களுக்கு தந்திருக்கின்றார், தொடருங்கள் சுவி👍

உண்மை பல ஆகங்களில் அவதானிக்க முடிந்த விடையம் நிறைய கற்பனை திறனுடையவர். புத்தகம் ஒன்று வெளியிடுவமா என்று கேட்க வேண்டும் போல் நினைப்பதுண்டு..பின் சுவியண்ணா என்ன நினைப்பாரோ தெரியாது என்றுட்டு போய் விடுவது.
 

Edited by யாயினி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, யாயினி said:

உண்மை பல ஆகங்களில் அவதானிக்க முடிந்த விடையம் நிறைய கற்பனை திறனுடையவர். புத்தகம் ஒன்று வெளியிடுவமா என்று கேட்க வேண்டும் போல் நினைப்பதுண்டு..பின் சுவியண்ணா என்ன நினைப்பாரோ தெரியாது என்றுட்டு போய் விடுவது.
 

நினைப்பதை கேட்டிட வேண்டும்  ஐயா சாமி எப்ப புத்தகமா வெளியிடுவீங்க

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நினைப்பதை கேட்டிட வேண்டும்  ஐயா சாமி எப்ப புத்தகமா வெளியிடுவீங்க

தலைவர் ரெடி எண்டா சங்கசார்பில் வெளியிடலாம். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/2/2022 at 02:15, suvy said:

அதோ அங்குதான் எங்கள் வீடு இருக்கிறது அங்கே அப்பாவின் சாரம் இருக்கு வாங்கோ எடுத்துத் தாறன் என்கிறாள். அவரும் அதை வாங்கிக் கொண்டு தனது கழுத்தில் கிடந்த சங்கிலியை எடுத்து அவளிடம் குடுக்க

ஆஆஆ

ஒரு சரத்துக்கு ஒரு சங்கிலியா?

நானென்றால் அப்பாவின் முழு உடுப்பையுமே தூக்கிக் கொடுத்திருப்பேன்.

சுவி அருமையாக போகிறது.
தொடருங்கள்.

On 25/2/2022 at 01:29, suvy said:

பார்ப்போம் இனி.........!  ✍️

சாமிநாதன் ஒரு புளியங்கொப்பு போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/2/2022 at 02:16, suvy said:

அவள் ஆடைகள் விலகிய நிலையில் ஓர் அந்நிய ஆணின் அணைப்பில் போதையில் தள்ளாடியபடி மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள். சாமிநாதனுக்கு கோபத்தில் கண்கள் எல்லாம் சிவந்து அங்கேயே அந்த இடத்திலேயே அவர்கள் இருவரையும் கொன்று விடலாம் போலத் தோன்றியது.

ஆகா ஆகா 

சூடு பிடிக்குது.எழுதுங்கோ எழுதுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பார்வை ஒன்றே போதுமே..........( 6 ).

                                                                            சாப்பிட்டுவிட்டு எழுந்த சாமிநாதன் கை கழுவிவிட்டு தான் படுக்கும் கட்டிலின் கீழேயிருந்த பெட்டியை எடுத்து அதனுள் இருந்து ஒரு கைபேசியை எடுத்து சித்ராவிடம் கொடுக்கிறார். இதைப் பார் சித்ரா இது உனக்கு உபயோகப்படுமா என்று. இது விலை கூடிய ஆப்பிள் போன் ஐயா. இப்போதைக்கு என்னால் நினைத்தும் பார்க்க முடியாது. என்கூட படிப்பவர்களில் ஓரிருவர் வசதியானவர்கள் மட்டும் வைத்திருக்கினம். இதில் எல்லா வேலைகளையும் செய்யலாம் என்கிறாள்.

அப்படியா சரி அதை நீயே வைத்துக்கொள்.

அப்போ உங்களுக்கு ....எனக்கு முத்து வைத்திருக்கும் அந்த போனே போதும். அது ஒருமுறை சார்ஜ் போட்டால் ஒருவாரத்துக்கு மேல் சார்ஜ் இருக்குமாம்.யாரோ சொன்னார்கள். அவனும் புதிதாக நல்லதாக ஒன்று வாங்கிக் கொள்ளட்டும் என்கிறார். சித்ராவும் முத்துவும் ஓடிப்போய் அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்ள மகேஸ்வரியின் கண்களில்   நட்பையும் மீறிய ஒரு சுடர் தெரிகின்றது.

பிள்ளைகள் சும்மா பகிடியை விட்டுட்டு ஐயா சொல்லுறதை கவனமாக கேளுங்கோ. எனக்கும் முன்னம்  இப்படி ஒரு யோசனை வரவில்லை. முத்து வீட்டு செலவுகள் பற்றி நீ யோசிக்காத. என்னிடமும் கொஞ்சப் பணம் இருக்கு. எங்கட வயலும் நல்லா விளைஞ்சிருக்கு, அறுவடை செய்து வித்தால் அதிலும் காசு வரும் சமாளிக்கலாம் என்று மகேஸ்வரி சொல்லிவிட்டு என்கூடப் படித்த பார்வதிதான் இப்ப கல்லூரி உப அதிபராக இருக்கிறா அவவிடம் சொன்னால் ஏதாவது செய்வா என்கிறாள். "கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமன்றோ"  முத்துவும் அரை மனதுடன் படிப்பதற்கு சம்மதம் தெரிவிக்கிறான். இந்த விடுமுறை முடிந்து கல்லூரி தொடங்கியதும் அவன் சேர்ந்து விடுவான்.

                                                            காலம் எதற்காகவும் காத்திருப்பதில்லை. சித்ரா வக்கீல் படிப்பை எடுத்துக் கொண்டு படிக்க, முத்து பிஸினஸ் மேனேஜ்மண்ட் பற்றி படித்துக் கொண்டு வருகிறான். ஒருவர் பின் ஒருவராக இருவரும் தங்களது படிப்புகளை முடித்து பட்டங்கள், சான்றிதழ்களுடன்  வெளியே வருகின்றார்கள். சித்ராவுக்கு சாமிநாதன் சங்கிலியையும், முத்துவுக்கு தனது கைக்கடிகாரத்தையும் பரிசாகக் கொடுக்கிறார்.அவர்கள் யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. வேண்டாம் என்று எவ்வளவோ மறுத்தும் அவர் வற்புறுத்தி அவர்களிடம் கொடுத்துவிடுகிறார்.

                                             அன்று நடந்தது,   கோபத்தில் சாமிநாதன் அந்த கிளப்பை விட்டு சென்றபின் ரேகா தள்ளாடியபடி ஒரு இளைஞனின் அணைப்பில் கவுண்டருக்கு வருகிறாள். அவளிடம் விடுதி மானேஜர் வந்து  ரேகாம்மா சற்று முன்புதான் உங்கள் கணவர் இங்கு வந்து உங்களை விசாரித்து விட்டு சென்றார் என்று சொல்ல,அதைக் கேட்டதும் ரேகாவுக்கு போதை சட்டென்று குறைந்து விட்டது. இப்போ அவர் எங்கே எனக் கேட்டாள். அவர் உள்ளேதான் எங்காவது இருப்பார் என நினைக்கிறேன் என்று அந்த மானேஜர் சொன்னார்.ரேகாவும் ஒவ்வொரு மேசையாக அவரைப் போய்த் தேடியும் அவரைக் காணவில்லை. அப்போது அவளுடன் பொழுதைக் கழித்த அந்த வாலிபன் இன்னொரு  நடுத்தரவயசுப் பெண்ணை அணைத்தபடி வந்து என்ன ரேகாம்மா பதட்டமாய் இருக்கிறீங்கள் ஏதாவது பிரச்சினையா என்று கேட்க ....ம் .....பிரச்சினை போலத்தான் இருக்கு. சற்று முன் எனது கணவர் இங்கு வந்திருக்கிறார் போல, என்னை உன்னுடன் சேர்த்து பார்த்திருப்பாரோ என்று சந்தேகமாய் இருக்கு. எதுக்கும் நீயும் கவனமாய் இருந்துகொள்.

அவனோ சந்தேகமே வேண்டாம் மேடம். நாங்கள் மாடியில் இருந்து இறங்கி வரும்போதே அவரை நான் பார்த்தேன். அவரும் எங்களைப் பார்த்தார். அதன்பின் அவர் கோபமாக எழுந்து சென்றதையும் நான் பார்த்தேன்.

                                                  ஓ...ஷிட் .....என்று புறுபுறுத்தவள், ஏன் நீ இதை எனக்கு முதலே சொல்லவில்லை என்று கடிந்து விட்டு வெளியே ஓடிவந்து ட்ரைவர் சுந்தரத்தை அழைக்க அவனும் பிடித்துக் கொண்டிருந்த சிகரட்டை கீழே போட்டு மிதித்து விட்டு ஓடிவந்து என்னம்மா என்றான்.

முட்டாள் உனக்கு எத்தனைதரம் சொல்வது சிகரெட் பிடித்து விட்டு என்முன்னே வராதே என்று, கொஞ்ச நேரத்துக்கு முன் ஐயாவைப் பார்த்தாயா, அவர் இங்கு வந்திருந்தாரா என்று கேட்டாள்.

அவர் வந்திருக்க வேண்டும். அவரது கார் அங்கு நின்றதைப் பார்த்தேன் ஆனால் அவரைக் காணவில்லை.

சரி ....கெதியா வண்டியை எடு வீட்டுக்கு போகலாம் என்றாள்.

                                                                                              வீட்டுக்குள் ஓடிச்சென்றவள் அவசரமாக தங்களது அறைக்கு சென்று பார்த்தாள்.அங்கே சாமிநாதன் இல்லை.கட்டிலில் அவர் கந்தோருக்கு கொண்டுசெல்லும் கணனிக்  கைப்பை கிடந்தது...........!

பார்ப்போம் இனி........!  ✍️

( அன்புள்ளங்கள் நீங்கள் தரும் ஊக்கத்துக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்).

  • Like 7
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இத்தனை வேகமாக எழுதுவதற்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் அண்ணா.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பார்வை ஒன்றே போதுமே...... (7).

 

                                                                     இப்பொழுது சாமிநாதனுக்கும் மனதில் ஒரு நிம்மதி உண்டாயிற்றுது. இனி இந்தக் குடும்பம் முன்னேறிவிடும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. அவரும் இங்கு வந்தபின் குடிப்பதையும் விட்டு விட்டார். ஒரு ஆம்பிளை இல்லாத வீட்டில் தான் இருக்க அவர்கள் அனுமதித்ததே பெரிய விஷயம். மேலும் தான் குடித்துக் கொண்டும் இருந்தால் நன்றாக இருக்காது என்று விட்டு விட்டார். இப்பொழுது தாடி மீசை எல்லாம் வளர்ந்து அவரது முகத்தோற்றமே மாறிவிட்டிருந்தது. எப்போதாவது முத்துதான் அவரை வற்புறுத்தி சலூனுக்கு அழைத்துச்சென்று கூட்டி வருவான். எப்போதும் அவன் கூடவே இருப்பதால் அவனிடம் ஒரு தனிப் பாசம் உண்டாகியிருந்தது.

                                                இப்பொழுது அவர்கள் வேலை செய்யும் இடங்களும் சுற்று சூழல்களும் மாற்றமடைந்து வந்து கொண்டிருக்கின்றது. மக்கள் நடமாட்டமும் பெருகி வருகின்றது. "மழைக் காலக் காளான்கள்" போல் அவ்விடத்தில் பல கடைகள் திறக்கப் படுவதும் சில கடைகள் வருமானமின்றி பூட்டப்படுவதுமாக இருந்தது. நடைபாதையில் வியாபாரம் செய்பவர்களை போலீசார் வந்து விரட்டி விடுவதும் பின் அவர்கள் சென்றதும் மீண்டும் இவர்கள் வியாபாரம் செய்வதுமாக இருந்தார்கள். அந்த வகையில் இவர்களது சப்பாத்து கடையும் பாதிக்கப் பட்டுக் கொண்டிருந்தது.

                                                            இப்படி இருக்கையில் முன்பு சாமிநாதன்   ஒரு கடைத் தாழ்வாரத்தில் படுத்து தூங்கியிருந்தபொழுது இவர் தலையில் தண்ணீர்  ஊற்றிய சிப்பந்தி சோமு இப்பொழுது இவரோடும் நல்ல பழக்கமாகி இருந்தான்.சில மகிழ்ச்சியான தருணங்களில் சோமுவும் முத்துவும் சேர்ந்த இவரைக் கிண்டல் கேலி செய்து கலாய்ப்பார்கள். அந்த நேரங்களில் வீட்டில் வந்து இரவு எல்லோரும் சேர்ந்திருந்து சாப்பிடும்போது முத்து அதைச் சொல்ல எல்லோரும் சிரிப்பார்கள் அதில் சாமிநாதனும் சேர்ந்து கொள்வார். அவர்கள் போனதும் மகேஸ்வரி வந்து தனியாக இவரிடம் " ஐயா பிள்ளைகள் எதோ தெரியாமல் விளையாடுதுகள் நீங்கள் அதை மனசில் வைத்திருக்கக் கூடாது மன்னிக்க வேணும்" என்று சொல்லுவாள். இவரும் இல்லையம்மா எனக்கும் அதுதான் மிகவும் பிடித்திருக்கு நீங்கள் யோசிக்க வேண்டாம் என்று ஆறுதல் சொல்லுவார். (அவருக்கு தெரியும் தன்னோடு பத்து நிமிடங்கள் சந்திப்பதற்கு அனுமதி வேண்டி வாரங்கள் மாதங்கள் என்று காத்திருந்தார்கள் பல பிரமுகர்கள். அந்த யந்திர வாழ்க்கை ஒரு பொன்விலங்கு போல் என்னைக் கட்டிப் போட்டிருந்தது. இப்பொழுதுதான் எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டு சுதந்திரமாய் மூச்சு விட முடிகிறது. சின்ன சின்ன சந்தோசங்களை அனுபவிக்கவும் மனம் விரும்புகிறது).

                                                                   முத்து கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து கடைக்கு வருவது குறைந்திருந்ததால் சோமு வந்திருந்து இவரோடு கொஞ்சநேரம் கதைத்து விட்டு போவான். இன்று கடையில் முத்துவும் வந்திருந்ததால் சோமுவும் வந்து கதைத்துக் கொண்டிருந்தான். அப்போது முத்து சோமுவிடம் என்ன சோமு இப்ப போலீஸ் கெடுபிடி எல்லாம் இங்கு அதிகமாகி இருக்காம். அடிக்கடி வந்து தொந்தரவு செய்கிறார்களாம் என்று சொல்ல, ஓம் முத்து வாரத்தில் நாலைந்து தடவை வந்து எல்லோரையும் விரட்டி விட்டு போவார்கள். இப்ப எங்கட கடையின் நிலமையைப் பார்க்கும்போது எனக்கும் வேலை போய் விடும்போல் இருக்கு. ஏண்டா என்ன விஷயம் என்று முத்து கேட்க, சோமுவும் இப்ப கடையில்  வருமானமும் குறைவு. ஐயா வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்கவே சிரமப் படுகின்றார். எனக்கே இரண்டு மாதமாக சம்பளம் வரவில்லை. அவரும் கடையை யாருக்காகவாது விற்று விடுவதற்கு முயற்சி செய்கிறார். நல்ல பார்ட்டி இருந்தால் சொல்லுபடி தனது நண்பரோடு போனில் பேசிக்கொண்டிருந்தவர். இந்த இடத்தில நல்ல பேரோடு இருக்கிற கடை இனி யார் எடுப்பார்களா தெரியாது.

                                                                      இப்படி இவர்கள் கதைத்துக் கொண்டிருக்கும் போது சிரத்தையுடன் வேலை செய்து கொண்டிருந்த போதிலும் சாமிநாதனின் வியாபார மூளை உள்ளுக்குள் சில கணக்குகளைப் போட்டபடி இருந்தது. இங்கு வந்து தங்கிய இவ்வளவு காலத்தில் அந்தப் பக்கத்து கடைகள் காணிகளின் மதிப்புகள், வியாபாரங்களில் பெறுமதிகள் எல்லாம் அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.

                     கை  வேலை செய்துகொண்டிருக்க மெதுவாக சோமுவிடம் பேச்சுக் குடுத்தார். ஏன்  சோமு, உங்க முதலாளிக்கு இப்ப கடையை விக்க வேண்டிய அவசரம் என்ன.

சோமுவும் அது வேறொன்றுமில்லை ஐயா இப்ப வியாபாரத்தால் வருமானமில்லை.அவருடைய பிள்ளைகளும் நகரத்தில் வசிக்கிறார்கள்.இனி அவர்களும் இங்கு வந்து கடையை கவனிக்கப் போவதில்லை. இவர்களுக்கும் வயதாகுதுதானே அதுதான் அவர்கள் இவைகளை வித்துவிட்டு தங்களோடு வந்திருக்கும்படி வற்புறுத்திக் கொண்டிருக்கினம்.

                                       ஓமோம்....அதுவும் சரிதான் இப்ப இந்தக் கடை என்ன ஒரு பத்து லட்சம் போகுமோ.

என்ன ஐயா நீங்கள் விவரம் புரியாமல் கதைக்கிறியள் அவர் போனில் இருப்பது லட்சம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.... சரி முத்து நேரமாச்சு நான் போட்டு பிறகு வாறன் என்று சொல்லிவிட்டு சோமு போகிறான்........!

பார்ப்போம் இனி.........!  ✍️

  • Like 8
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பார்வை ஒன்றே போதுமே..........(8).

                                                                           சோமு அப்பால் சென்றதும் சாமிநாதன் முத்துவிடம் ஏன் முத்து அந்தக் கடையை நாங்கள் வாங்கினால் என்ன என்று சொல்ல....என்னய்யா நீங்கள் புரியாமல் கதைக்கிறீங்கள். அவ்வளவு பணத்துக்கு நாங்கள் எங்கு போவது. அதுவும் மாடியுடன் கூடிய பெரிய கடை. பின்னாலும் பெரிய வளவு இருக்கு. என்னை நம்பி யார் அவ்வளவு பணம் தருவினம். சும்மா நடக்கிறதைச் சொல்லுங்கோ. அவ்வளவு அனுபவசாலியே வியாபாரம் இல்லாமல் கடையை விக்கிறார்.

 நடக்கும் முத்து நீ அவர் வந்தால் என்னிடம் சொல்லு, நாங்கள் அவரிடம் கதைத்துப் பார்ப்போம். பின் இருவரும் தமக்குள் யோசனையுடன் தங்கள் தங்கள் வேலைகளைத் தொடர்கிறார்கள். அப்போது முத்து தனக்குள் கதைப்பது போல்  நான் இப்போது படித்திருக்கும் படிப்புக்கு இப்படி ஒரு இடம் கிடைத்தால் வசதியாகத்தான் இருக்கும். ஆனால் என்ன செய்வது.....

நீ ஒன்றுக்கும் யோசிக்காதே முத்து அது சரிவரும் என்றுதான் என் மனசு சொல்லுது என்று சாமிநாதன் முத்துவுக்கு ஆறுதல் சொல்கிறார்.

                                                   அன்று மதியம் முத்து இருவருக்கும் சாப்பாடு வாங்குவதற்காக வீதியைக் கடந்து எதிரில் உள்ள உணவகத்துக்கு வருகிறான். அப்போது ஒரு கார் அவனைக் கடந்து வந்து அந்தக் கடைக்குமுன் நிற்கிறது. அதில் இருந்து இறங்கிய அந்த மனிதர் முத்துவைக் கண்டதும் "முத்து இங்கு கொஞ்சம் வந்துட்டு போ" என்று அழைத்தார். அவனும் என்ன ஐயா என்று அவர் முன் சென்று பவ்யமாக நின்றான்.மனதுக்குள் இப்பதான் இவரைப் பற்றி கதைத்தோம் பார்த்தால் முன்னே வந்து நிக்கிறார் என்று நினைக்கின்றான். அவர்தான் சோமு வேலை செய்யும் புடவைக் கடையின் முதலாளி. அவரும் முத்துவின் தந்தையும் பால்ய நண்பர்கள். அவனது தந்தையின் மரணச்சடங்குக்கு வந்தபோது முத்துவின் கையில் ஒரு என்பலப்பில் பணம் வைத்துக் குடுத்துவிட்டு சென்றவர். அந்தப் பணத்தை வைத்துதான் தந்தையின் இறுதிக் காரியங்களை ஒரு குறைவுமில்லாமல் செய்தவன்.

                           அவர் காரின் டிக்கியத் திறந்து சில சோடி சப்பாத்துகள், செருப்புகளை அவனிடம் குடுத்து இவை எனது மனிசி மற்றும் பிள்ளைகளுடையது, இவற்றை பழுதுபார்த்து பொலிஸ் பண்ணிக் கொண்டுவந்து தா என்று சொல்லி அவனிடம் கொடுக்கிறார். அவனும் சரி ஐயா நான் இந்த வேலைகளை முடித்து பின்னேரம் வீட்டுக்கு போகும்போது உங்கட வீட்டில் குடுத்து விட்டு போகிறேன் என்றான். அவர் பர்சில் இருந்து பணம் எடுத்து குடுக்க வரும்போது, அவனும் வேண்டாம் ஐயா இருக்கட்டும் என்று சொல்லி விட்டு பையை எடுத்துக் கொண்டு போகிறான்.

                                     சாமிநாதனின் வீட்டில் அவரை எல்லா இடமும் தேடிக் களைத்து விட்டார்கள். அவர் எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவர்களுடைய வணிக வளாகத்தில் அவர் கம்பெனி விஸ்தரிப்புக்காக வெளிநாட்டில் இருப்பதாகவும் விரைவில் வந்து விடுவார் என்றும் சொல்லி இருந்தார்கள்.ஆனாலும் ரேகாவுக்கு எல்லாம் விளங்கி விட்டது. தனது நடத்தைப் பிழையால்தான் அவர் வீட்டை விட்டுப் போய்விட்டார் என்று. இந்த உண்மையை பிள்ளைகளிடமும் சொல்ல முடியவில்லை. ரவிதாசும் நிர்மலாவும் மிகவும் கலங்கிப் போனார்கள். அப்பாவை யாராவது கடத்தி இருப்பார்களோ, அப்படியென்றாலும் இந்நேரம் கப்பம் கேட்டு போனாவது செய்திருக்க வேண்டுமே என்று தவிப்பாக இருக்கின்றது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. போலீசுக்கு தகவல் குடுக்கிறதுக்கும் தாயார் வேண்டாம் என்று தடுக்கிறா. ரேகா நினைக்கிறாள் போலீஸ் வந்தால் அவர்கள் நிட்சயம் வேலைக்காரர், ட்ரைவர்களிடம் அவர் வழக்கமாய் போகும் இடங்கள், கிளப்புகள் என்று விசாரிப்பார்கள். அப்படிவரும் போது தனக்கு மிகவும் அவமானமாய் போய்விடும். மேலும் இது வெளியே தெரிந்தால் வியாபாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும்.

                                                                         ரவிதாஸ்தான் மூத்த அதிகாரிகளின் உதவியுடன் கம்பெனி நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறான்.ஒரு ரகசிய ஏஜென்ட் மூலமாகவும் தகப்பனைத் தேடிக்கொண்டிருக்கிறான். நிர்மலாவும் கல்லூரி நேரம் போக மற்ற நேரங்களில் கம்பெனி வேலைகளிலும் உதவியாக இருக்கிறாள்.

                         அன்று கம்பெனியில் வேலை முடிந்து ரவிதாசும் நிர்மலாவும் ஒரேகாரில் கதைத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறார்கள். அப்போது நிர்மலா அவனிடம் அண்ணா இன்று எங்கள் கம்பெனி வக்கீல் தவராசா இருக்கிறார் எல்லோ அவர் தனது உதவியாளர் என்று ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்து அறிமுகப்படுத்தினவர். இனி எங்களது வியாபாரம் சம்பந்தமான எல்லா விடயங்களையும் அவாவிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று சொன்னவர்.  அப்படியா ....தவராசா தன்னிடம் ஒருவரை ஜூனியராக சேர்க்கிறார் என்றால் அவர் மிகவும் கெட்டிக்காரராகத்தான் இருப்பார். பேசிக்கொண்டு வரும்போது கார் வீட்டுக்கு வந்து போர்டிகோவில் நிக்கின்றது..........!

பார்ப்போம் இனி.......!  ✍️

  • Like 7
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பார்வை ஒன்றே போதுமே......! (9).

                                                அங்கே அவர்களது தாயார் யாரையோ கோபமாகப் பேசுவதும் இருவர் வாக்குவாதப் படுவதும் சத்தமாகக் கேட்கிறது. வெளிவராந்தாவில் வேலைக்காரம்மாவும் வாட்ச்மேனும் பதற்றமாய் நின்றுகொண்டிருக்கிறார்கள்.என்ன என்று ரவிதாஸ் அவர்களிடம் விசாரிக்க நிர்மலா விரைந்து உள்ளே போகிறாள். அந்த வேலைக்காரம்மாவும் அவனிடம் சின்னையா கொஞ்ச நாட்களாக அம்மாவின் கார் ட்ரைவர் சுந்தரத்தின் போக்கு சரியில்லை. அம்மாவிடம் அத்துமீறி நடந்து கொள்கிறான். அம்மாவும் ஏனோ அவனுக்கு பயந்து அவன் சொற்படி நடக்கிறா மேலும் அவன் கேட்க்கும்போதெல்லாம் பணமும் குடுக்குறா. அவன் குடித்து விட்டு வந்து தகராறு பண்ணினாலும் கண்டும் காணாதமாதிரி இருக்கிறா என்கிறாள். ரவிதாசும் ஓம்....நானும் பார்த்துக் கொண்டுதான் வாறன் அவற்ர போக்கு சரியில்லாமல்தான் இருக்கு. சரி என்ன என்று பார்க்க படியேறி தாயாரின் அறைக்குப் போகிறான்.

                                                              அங்கு ரேகாவோடு சுந்தரம் இழுபறிப்பட்டுக் கொண்டிருந்தான். இடையில் நிர்மலா அவனிடமிருந்து தாயாரைப் பிடித்து இழுக்கிறாள். அங்கு வந்த ரவிதாஸ் உடனே சுந்தரத்தின் வயிற்றில் எட்டி உதைக்க அவன் கட்டிலடியில் போய் விழுகிறான். அவனிடமிருந்து விடுபட்ட ரேகா மகளைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கதறுகிறாள். எல்லாம் என்னால்தான்.நான் குடி போதையில் செய்த தவறுகளினால்தான் என் புருசனும் எங்களை அனாதரவாய் விட்டிட்டு போயிட்டார். இன்று இந்த நாய்கூட என்மேல் கை வைக்கத் துணியுமளவுக்கு வந்து விட்டது. என்னை மன்னித்து விடுங்கோ பிள்ளைகள். முதலில் இவனை வெளியே அடித்துத் துரத்துங்கோ என்று சொல்லும்போது கட்டிலின் கீழே இருந்து எழுந்த சுந்தரத்தின் கையில் கைத்துப்பாக்கி இருந்தது.அது அன்று சாமிநாதன் கோபத்தில் எறிந்து விட்டு போன கைத் துப்பாக்கி. இண்டைக்கு உங்கள் மூவரையும் கொல்லாமல் விட மாட்டேன் என்று கத்திக் கொண்டு ரவிதாசை நோக்கி சுடும்போது மகனைக் காப்பாற்ற குறுக்கே பாய்ந்த ரேகாவின் மார்பில் குண்டு பட்டு அவள் கீழே சரிகிறாள். நிர்மலா தாயைத் தாங்கிப் பிடிக்க சுதாகரித்துக் கொண்ட ரவிதாஸ் பாய்ந்து சுந்தரத்தை மடக்குகிறான். துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடிவந்த வாட்ச்மேனும் ரவிதாஸுடன் சேர்ந்து சுந்தரத்தை அமுக்கிப் பிடித்து துப்பாக்கியைப் பறித்து விடுகிறார்கள். இருவருமாக அவனைக் கட்டிப் போட்டுவிட்டு போலீசுக்கு போன்செய்ய சற்று நேரத்தில் போலீசும் அம்புலன்ஸ் வண்டிகளும் வந்து விடுகின்றன. அதற்கிடையில் அன்று நடந்ததை ரேகா பிள்ளைகளிடம் சொல்லி மன்னிப்பு கேட்கிறாள். நான் இனி இருக்கமாட்டேன் பிள்ளைகள். நீங்கள் கவனமாய் இருங்கோ. என்றாவது அப்பாவை சந்தித்தால்  தன்னை மன்னித்து விடும்படி சொல்லுங்கோ என்று சொல்கிறாள். டொக்டர் வந்து அவளுக்கு முதலுதவி செய்து ஆம்புலன்ஸில் ஏற்றும்போது ரேகாவின் உயிர் பிரிகிறது. போலீஸ் சுந்தரத்தையும் துப்பாக்கியுடன் விலங்கிட்டு அழைத்து செல்கிறது.

                                                          இவை நடந்து இரண்டு மூண்டு  வருடங்களாகி விட்டன. நிர்மலா முழுநேரமாக கம்பெனியைக் கவனித்துக் கொள்கிறாள். ரவிதாசும் கம்பெனி வேலைகளாக அடிக்கடி அயல்நாடுகளுக்கு செல்கிறான். அவன் குடுத்த புகாரின் பேரில் போலீஸ் சாமிநாதனை வலைபோட்டு தேடிக்கொண்டிருக்கிறது..............................................!

பார்ப்போம் இனி ..................!  ✍️

  • Like 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பார்வை ஒன்றே போதுமே...........( 10 ).

                                                                முத்துவும் சாமிநாதனும் அந்தக் கடை முதலாளி குடுத்த பாதணிகளை சிறப்பாகத்  திருத்தி பொலீஸ் போட்டு எடுத்துக்கொண்டு தங்களது வீட்டுக்கு போகும் வழியில் கடை முதலாளி கண்ணப்பரின் வீட்டுக்குப் போகிறார்கள். அங்கு முற்றத்து வாங்கில் இருந்து தேனீர் அருந்திக் கொண்டிருந்த கண்ணப்பர் இவர்களைக் கண்டதும் வாங்கோ வாங்கோ என்ன இண்டைக்கே செய்து கொண்டு வந்து விட்டீர்கள் என்று முகமன் கூறி வரவேற்கிறார். முத்துவும் பாதணிகளின் பையை அங்கிருந்த திண்ணையில் வைத்துவிட்டு நிமிர அவர் மனைவி அங்கு வந்து முத்துவை நலம் விசாரித்துக் கொண்டே நன்றாக செய்திருக்கிறாய் முத்து என்று பாராட்டுகிறாள். பின்பு நீங்கள் கதைத்துக் கொண்டு இருங்கோ உங்களுக்கும் தேத்தண்ணி போட்டு எடுத்துக் கொண்டு வாறன் என்று உள்ளே போகிறாள்.

                                                                           கண்ணப்பரும் என்ன முத்து நீயும் அக்காவும் படித்து பட்டங்களும்  பெற்று விட்டீர்கள் என்று அறிந்தேன்.இப்ப என்ன செய்கிறாய்.

ஓம் ஐயா நான் வியாபாரம் சம்பந்தமான படிப்பும், அக்கா வக்கீல் படிப்பும் படித்திருக்கிறோம்.இந்த வருடம்தான் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. இனி யாரோடாவது கூட்டாக சேர்ந்து செய்வதா அல்லது சொந்தமாக செய்வதா என்று யோசிக்கிறேன்.அப்படியா நல்லது,  இதையெல்லாம் பார்க்க உனது அப்பா இல்லை என்பது வேதனையாக இருக்கு. அன்று நடந்த அந்தச் சண்டையில் அவர் மட்டும் என்னைக் காப்பாற்றவில்லை என்றால் இன்றைக்கு நான் உயிரோடு இல்லை என்று சொல்லி சிறிது நேரம் மௌனத்தில் மூழ்கிறார்.

                                                    அப்போது சாமிநாதன் அவரைப் பார்த்து ஐயா நான் ஒன்று கேட்கலாமா என்று வினாவ அவரும் ம்....என்று தலையை மட்டும் அசைக்கிறார். நீங்கள் உங்கள் கடையை விக்கப் போறதாய் கேள்விப்பட்டேன் அதுதான் என்று இழுக்க ....கண்ணப்பரும் ஓம் ....வியாபாரமும் முந்தியைப்போல இல்லை. எங்களுக்கும் வயசாயிட்டுது. மகளும் தன்னோடு வந்து இருக்கச்சொல்லி ஒரே ஆக்கினை. அவளுக்கும் இனி கலியாணம் காட்சி என்று இருக்குது. அதுதான் நகரத்துக்கு போய் அவளோடு இருப்பம் என்று யோசிக்கிறம் என்கிறார். சாமிநாதனும் நீங்கள் உங்களின் விலையை சொன்னால் ஆரும் விசாரித்தால் நாங்கள் சொல்லலாம் என்கிறார்.நான் ஒரு இருபது லட்சம் விலை வைத்திருக்கிறேன். கடை மேல் மாடி எல்லாம் போன வருடம்தான் கட்டியது. உங்களுக்கு தெரியும்தானே....ஏன் நீங்கள் யாராவது எடுக்கப் போறீங்களோ என்று கேட்கிறார்.

  தற்சமயம் எங்களிடம் அவ்வளவு பணமில்லை.வாங்கிறதெண்டாலும் தோட்டம் வீடு எல்லாம் ஈடு வைத்துதான் வாங்க வேண்டும். இவர்களும் இன்னும் சிறுபிள்ளைகளாகத்தான் இருக்கினம். இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது வழி காட்டி விட்டால் உங்கள் நண்பரின் குடும்பமும் தலைநிமிர்ந்து விடும் என்று பார்க்கிறேன்.

 கண்ணப்பர் முத்துவைப் பார்த்து, முத்து நீ என்ன சொல்கிறாய் என்று கேட்க, முத்துவும் நீங்கள் எல்லாம் பெரியவர்கள். மேலும் நீங்கள் நிர்கதியாய் நின்ற எங்களுக்கு செய்த உதவியை என்றும் நாங்கள் மறக்க மாட்டோம்.அம்மா அப்பப்ப இதைக் கதைக்கும்போது இப்பவும் கண்கலங்கி விடுவா. அக்காவும் படிப்பு முடிச்சு இப்ப பிரக்டீஸ் செய்கிறா என்று சொல்கிறார்.

                                                            சரி கொடுக்கல் வாங்கல் என்று வரும்போது நாளைக்கு இதால ஒரு பிரச்சினையும் வரக்கூடாது. உறவோ நட்போ  எதையும் "அறப்பேசி உறக் கொள்ள வேண்டும்" நான் நேராகவே விசயத்துக்கு வாறன் நீங்கள் என்ற படியால் ஒரு பதினைந்து லட்சம் தந்தால் போதுமென்கிறார்.சாமிநாதனும் ஒரு மாதம் தவணை கேட்க அவரும் சரி என்று ஒப்புக் கொள்கிறார். பின் அவர்கள் இருவரும் தேநீரைக் குடித்து விட்டு வீட்டிக்குப் போகிறார்கள். அப்போது கதவருகில் நின்று இவர்களின் உரையாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த கண்ணப்பரின் மனைவி வெளியே வந்து அவரருகில் கதிரையில் இருந்து கொண்டு, என்னங்க நான் ஒண்டு சொல்லவா என்று கேட்கிறாள். ம்...சொல்லு என்று அவர் சொல்லவும், வந்து உந்தப்பிள்ளை முத்துவும் எங்கட மகள் எல்லாரும் சின்னனில இருந்து ஒன்றாய் விளையாடித்திருந்த பிள்ளைகள். பொடியனும் நல்ல ஒழுக்கமாய் இருக்கிறான். எங்கட மகளுக்கு இவரைக் கேட்டு மகேஸ்வரியிடம் கதைப்பமே.

நான் அதை யோசிக்காமல் இருப்பனே....ஆனால் அந்தப்பக்கத்தில சில பிரச்சினைகள் இருக்கு. என்னதான் நண்பனின் குடும்பம் என்றாலும் இப்ப முன்பின் தெரியாத ஒரு ஆளோட மகேஸ்வரி ஒரே வீட்டிலேயே வாழுறா. அதோட முத்துவுக்கு தமக்கை இருக்கிறாள். அவளின் திருமணத்துக்கு பிறகுதான் இவருக்கு வழி பிறக்கும். எதுக்கும் சிறிது காலம் போகட்டும் பிறகு பார்க்கலாம். நானும் அந்த ஆளைப் பற்றி விசாரித்துப் பார்க்கிறேன் என்று சொல்ல அவளும் அதுவும் சரிதான் என்று சொல்லிவிட்டு தேத்தண்ணி குடித்த போணிகளை எடுத்துக் கொண்டு உள்ளே போகிறாள்.

                                 சாமிநாதனும் முத்துவும் வீட்டுக்கு வரும்போது வாசலிலேயே மகேஸ்வரி இவர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறாள்.இப்பொழுதெல்லாம் அவள் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொள்கிறாள். கை கால்களில் மருதாணி மலர்ந்திருக்கிறது அவளது மனம்போல. அவர்களும் வீட்டுக்கு வந்ததும் முத்து அவளிடம் அன்று நடந்ததெல்லாவற்றையும் சொல்கிறான்.சித்ரா எல்லோருக்கும் பனங் கற்கண்டுடன் தேனீர் கொண்டுவந்து தருகிறாள். அதைத் தொடர்ந்து எல்லோருமாய் ஆலோசிக்கின்றார்கள்............!

பார்ப்போம் இனி..........!  ✍️

  • Like 9
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/2/2022 at 11:00, suvy said:

இடுப்பில் ஒரு ஜட்டி, கழுத்தில் டாலருடன் கூடிய  தடிமனான தங்கச் சங்கிலி,கையில் தங்கச் செயின் போட்ட  கடிகாரம்,விரல்களில் வகைக்கொன்றாக நாலு மோதிரங்கள் இப்படி இருந்தால் யாருக்குத்தான் சிரிப்பு வராது. அப்படியே வயலுக்குள் இறங்கி வரப்புகளில் மேல் வெறுங் கால்களுடன் யாராவது தென்படுகினமா எனப் பார்த்துக் கொண்டு நடந்து போகிறார்......!

எல்லாம் பக்கா பொருத்தம்...ஒண்டே ஒண்டு குறையுது... அது தான் சண் கிளாஸ்....😎
கதை பிரமாதம் 👍👍👍👍👍

shopwavey GIFs - Find & Share on GIPHY

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடேங்கப்பா… படத்தை பகீரென்று இருக்குது. மன்னர் ஆட்சியில் நடப்பது போல், மக்களின் வரிப் பணத்தில் ராஜ வாழ்க்கை நடத்தி உள்ளார்கள். மகிந்தவுக்கு பல வாகனங்கள், இரண்டு நோயாளர் வண்டி என்றும் வைத்திருந்தவர்.  அங்காலை ரணிலுக்கு… 16 சமையல்காரர் தேவையாம். நாடு இருக்கும் நிலையில் அதனைப் பார்த்தாவது திருந்தி இருக்க வேண்டாமோ… இதற்குள்…. மக்களின் சேவகர்கள் என்று, அந்த மக்களின் தலையிலேயே சம்பல் அரைத்திருக்கின்றார்கள்.
    • சபாநாயகர் பதவிக்கு மூன்று பெயர்கள் பரிந்துரை       சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதற்கமைய,  பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பட்டி மற்றும் லக்ஷ்மன் நிபுணராச்சி ஆகியோரின் பெயர்களே முன்மொழியப்பட்டுள்ளதாக, அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கம் இது தொடர்பான இறுதி முடிவை இன்னும் சில நாட்களில் எட்டும். முன்னதாக சபாநாயகர் பதவிக்கு நிஹால் கலப்பட்டியின் பெயர் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/சபாநாயகர்-பதவிக்கு-மூன்று-பெயர்கள்-பரிந்துரை/175-348719
    • தமிழ் கட்சிகளோடு ஆட்சியமைப்பதே நோக்கம்!  தமிழரசுக்கட்சி சார்பாக  கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்றது.  தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,  எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு தேசியத்துடன் பயணிக்கும் தமிழ் கட்சிகளோடு ஆட்சியமைப்பதே நோக்கம் எனினும் நாளை (15) நடைபெறும் மத்திய குழுவில் கலந்துரையாடப்படும் என தெரிவித்தார்.   -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://tamil.adaderana.lk/news.php?nid=197279
    • எக்னெலிகொடவின் கடத்தல் குறித்து விசாரணைகளை நடத்துமாறு எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு வலியுறுத்தல் ! Posted on December 14, 2024 by தென்னவள்  8 0 ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் பக்கச்சார்பின்றியும், வெளிப்படைத்தன்மை வாய்ந்த விதத்திலும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு பிரான்ஸை தளமாகக்கொண்டு இயங்கிவரும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு (ரிப்போட்டர்ஸ் வித்தௌட் போர்டர்ஸ்) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. ‘லங்கா ஈ-நியூஸ்’ என்ற இணைய செய்தித்தளத்தில் கேலிச்சித்திர ஓவியராகவும், (கார்ட்டூனிஸ்ட்) அரசியல் பத்தி எழுத்தாளராகவும் பணியாற்றிய பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி ஹோமாகம நகரில் கடத்திச்செல்லப்பட்டார். அவரது கடத்தலுடன் தொடர்புபட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்ட இராணுவ புலனாய்வு சேவை அதிகாரிகள் 9 பேர் தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணைகள் கடந்த 2019 ஆம் ஆண்டுடன் தடைப்பட்டிருந்த நிலையில், அவ்விசாரணைகள் கடந்த 6 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில் இதுபற்றிக் கருத்து வெளியிட்டிருக்கும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு, கடந்த செப்டெம்பர் மாதம் ஜனாதிபதியாகத் தெரிவான அநுரகுமார திஸாநாயக்க, அரசியல் நோக்கங்களுக்காகப் படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளை உரியவாறு நிறைவுசெய்யப்பட்டு, பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படும் என வாக்குறுதியளித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. ‘பிரகீத் எக்னெலிகொடவின் வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பில் உண்மையை அறிந்துகொள்வதற்காக அவரது குடும்பத்தினர் 14 ஆண்டுகளாகத் தவிப்புடன் காத்திருக்கிறார்கள். எனவே இச்சம்பவம் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் வழக்கு விசாரணைகள் பக்கச்சார்பின்றியும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும் முன்னெடுக்கப்படவேண்டும் என உரிய அதிகாரிகளிடம் வலியுறுத்துகின்றோம். இச்சம்பவத்துக்குப் பொறுப்பானவர்கள் எவரெனினும், அவர்கள் கொண்டிருக்கக்கூடிய அரசியல் மற்றும் இராணுவத்தொடர்புகளுக்கு அப்பால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதுமாத்திரமன்றி சாட்சியாளர்கள் மற்றும் விசாரணையாளர்களைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும்’ என்றும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. https://www.kuriyeedu.com/?p=642470
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.