Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்தளத்தில் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பையும், உக்ரேன் மீதான அதனது இனக்கொலை யுத்தத்தையும் ஆதரிக்கும் பலர் மீண்டும் மீண்டும் கூறும் ஒரு விடயம் தாம் அவ்வாறு ரஸ்ஸியாவை ஆதரிக்கவில்லையென்பது. இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே உக்ரேனியர்கள் கொல்லப்படவேண்டும் என்று விரும்புவது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஆனால், உக்ரேன் அழிக்கப்படவேண்டும் என்று விரும்புகிற இந்த எல்லோருக்கும் இருக்கும் ஒரே காரணம் சிங்கள விமானப்படையில் உக்ரேனியர்கள் சம்பளத்திற்கு வேலைபார்த்து தமிழர் பகுதிகளில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட்டது மட்டும் தான். இதனை விட உக்ரேனியர்கள் கொல்லப்பட வேண்டும் என்று இவர்கள் விரும்புவதற்கு வேறு எந்தக் காரணங்களும் இல்லை. இதனை வெளிப்படையாக குறைந்தது இருவராவது இங்கே  கூறியிருக்கிறார்கள். மற்றையவர்கள் இக்கருத்துக்களுக்கு தமது ஆதரவினைத் தெரிவித்திருக்கிறார்கள். 

ஆனால், உக்ரேனிய கூலிப்படையினரைப் போலவே ரஸ்ஸிய, பாக்கிஸ்த்தானிய, இந்திய கூலிப்படையினரும் தமிழின அழிப்பில் பங்கெடுத்திருந்தாலும் கூட தமது வசதிக்காக இதனை அவர்கள் ஏறெடுத்தும் பார்ப்பது கிடையாது. 

இவர்களுள், ஒரு பகுதியினர் உக்ரேனியர்கள் அழிக்கப்படவேண்டும் என்பதை வெளிப்படையாகச் சொல்லத் தயங்கியவாறு இன்னோரென்ன காரணங்களுடன் இந்த இனவழிப்பை நியாயப்படுத்துகின்றனர்.

அதில் முக்கியமானது ரஸ்ஸியாவின் பாதுகாப்பு. திடீரென்று ரஸ்ஸியாவின் பாதுகாப்புக் குறித்து இவர்கள் கரிசணைப்பட காரணம் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதேவேளை இலங்கையின் பாதுகாப்பிற்காகவும், இந்தியாவின் பிராந்திய நலனிற்காகவும் எமது ஒரே நம்பிக்கையாகவிருந்த விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டதையும் இதே கண்ணோட்டத்துடம் பார்பீர்களா என்று கேட்டதற்கு நேரடியாக பதில் அளிக்காது, அதுவேறு இது வேறு என்று வியாக்கியானம் செய்கிறார்கள்.

இன்னும் சிலர் உக்ரேனில் வசிக்கும் ரஸ்ஸிய சிறுபான்மையினரைக் காப்பதற்காகவே ரஸ்ஸிய ராணுவம் உக்ரேனை அழிக்கிறது என்று நியாயம் கற்பிக்கிறார்கள். அப்படியானால், தமிழர் தாயகத்தில் வடக்குக் கிழக்கில் திட்டமிட்ட ரீதியில் ஏற்படுத்தப்பட்டுவரும் சிங்கள பெளத்த குடியேற்றங்களுக்குப் பாதுகாப்பாக சிங்கள ராணுவம் நிலை கொள்வதையும் , இன்னும் இன்னும் தமிழர் நிலம் ராணுவத்தினரின் உதவியுடன் காவுகொள்ளப்படுவதையும் ஏற்றுக்கொள்கிறீர்களா என்று கேட்டால், அதற்குப் பதில் இல்லை. 

இன்னும் சிலருக்கு இந்தப் போரில் தாம் ரஸ்ஸியா வெல்லவேண்டும் என்றோ அல்லது உக்ரேனியர்கள் கொல்லப்படவேண்டும் என்றோ விருப்பம் இல்லையாம். ஆனால் மேற்குலகின் உதவியுடன் தனது இருப்பிற்கான வாழ்வா சாவா எனும் போராட்டம் செய்யும் உக்ரேன் தோற்கடிக்கப்படவேண்டுமாம். ரஸ்ஸியாவும் வெல்லாது, அப்பாவிகளும் பலியிடப்படாது ஆனால் மேற்குலகின் உதவியுடன் போராடும் உக்ரேன் எப்படித் தோற்கடிக்கப்படும் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

சரி, உக்ரேன் அழிக்கப்படவேண்டும் என்கிற இவர்களின் மனோநிலை மேற்குலகு தோற்கடிக்கப்படவேண்டும் என்கிற நிலையிலிருந்தே வருகிறதென்றால், மேற்குலகினை இவர்கள் முற்றாக நிராகரித்திருக்க வேண்டும். ஆனால், இங்கே ரஸ்ஸியா வெல்லவேண்டும் என்று பிரார்த்திக்கும் பலரும் இருப்பதோ மேற்குலகின் செல்வச் செழிப்பில். ஆனால், இக்கேள்வி இவர்களுக்கு மொக்கைத்தனமாகப் படுகிறது. மேற்குலகின் அனைத்து வசதிகளையும், சுகங்களையும் அனுபவித்துக்கொண்டு மேற்குலகு தோற்கவேண்டும் என்று நினைப்பது மொக்கைத்தனமாகத் தெரியவில்லை போலும் இந்தச் சிந்தனையாளர்களுக்கு. 

தமிழர் அழிவில் மேற்குலகு ஆற்றிய பங்கினைக் காட்டிலும் ரஸ்ஸியா, சீனா , இந்தியா என்கிற நாடுகள் அதிகளவு பங்கினை ஆற்றியிருக்கின்றன. இன்றுவரை சர்வதேசத்தில் இலங்கையைக் காப்பாற்றி வருபவர்களும் இவர்களே. ஆனால் இந்த ரஸ்ஸிய போர் வெறியர்களுக்கு இந்த நாடுகள்  பற்றியெல்லாம் கவலையில்லை. அதுபற்றிச் சிந்திக்கவேண்டிய தேவையும் இல்லை. மேற்குலகு புரிந்த நம்பிக்கைத் துரோகம் மன்னிக்க முடியாதது. ஆனால் இந்தியாவும், ரஸ்ஸியாவும் சீனாவும் செய்துவரும் வெளிப்படையான அக்கிரமங்களை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஏனென்றால், இந்நாடுகளை தமிழர்கள் நம்பியிருக்கவில்லையாம், அதனால் இவர்கள் எதுசெய்தாலும் பரவாயில்லை என்கிறார்கள். 

இன்னும் சிலருக்கு அமெரிக்காவை தட்டிக் கேட்கிற எதிர்க்கடை வேண்டுமாம். அதனால் ரஸ்ஸியா உக்ரேன் மீது நடத்தும் இனக்கொலை வெற்றிபெற வேண்டுமாம். சரி, அமெரிக்கா இருக்கும் இடத்தில் ரஸ்ஸியாவோ அல்லது சீனாவோ இருந்தால் எப்படியிருக்கும் என்று அவர்களைக் கேட்டால் வாய் திறக்கப்போவதில்லை. ஏனென்றால், அப்படியொரு நிலைமை வந்தால் நிலைமை எப்படியிருக்கும் என்பதை இவர்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கிரார்கள். 

இன்னொருவர் அமெரிக்க பல நாடுகளை முன்னர் ஆக்கிரமித்ததுபோல இனிமேல் செய்ய முடியாத படிக்கு இந்தப் போரில் உக்ரேனை அழிப்பதன் மூலம் ரஸ்ஸியா பாடம் புகட்ட வேண்டுமாம். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் ஆதரிக்கும் ரஸ்ஸியாவே ஆப்கானிஸ்த்தானை முதலில் ஆக்கிரமித்து பல மில்லியன் அப்பாவிகளைக் கொன்றுதள்ளியது என்பது இவர்களுக்குத் தெரியவில்லை. இன்றுவரை சிரியாவின் போர்க்குற்றவாளி ஆசாத்துக்கு சகல உதவிகளையும் கொடுத்து அப்பாவிகளைக் கொன்றுவருவது ரஸ்ஸிய ராணூவமும் விமானப்படையும் தான் என்பதும் இவர்களுக்குத் தெரியாது. 2 ஆம் உலகப் போரின்பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான போலந்து ஹங்கேரி உட்பட்ட பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமித்துக் கம்மியூனிசம் என்கிற பெயரில் அடக்குமுறையினைக் கட்டவிழ்த்து விட்டிருந்ததும் இவர்களுக்குத் தெரியாது.  அதுமட்டுமல்லாமல், 1991 இன் பின்னர் சுதந்திரக் குடியரசுகளாக மாறிப்போன ஜோர்ஜியா, செச்னியா, உக்ரேன் என்று பல தனிநாடுகளை அவ்வப்போது ஆக்கிரமித்து, அந்நாடுகளைச் சிறுகச் சிறுகச் சிதைத்து தன்னுடன் இணைத்துக்கொண்டதும் தெரியாது. இதில் வேடிக்கையென்னவென்றால், ரஸ்ஸியாவின் இந்தப்போரை மட்டுமே தாம் ஆதரிப்பார்களாம், எல்லாவற்றையும் இல்லையாம், பார்டா, என்னமா யோசிக்கிறாங்கள் என்று. இந்த லட்சணத்தில் மற்றையவனை மேற்குலகினால் மூளைச்சலவை செய்யப்பட்டவன் என்று கூறிவிட்டு, வசதியாக "எம்மைப் புட்டின் மூளைச்சலவை செய்ய உங்கள் மேற்குலகு விடவில்லையே?" என்று ஆதங்கப்பட்டுக்கொள்கிறார்கள். எழுதுவது முழுக்க புட்டின் புராணம், இது போதாதென்று மூளைச்சலவை வேறு வேண்டுமாம். தாங்காதுடா சாமி.

  • Replies 477
  • Views 30.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Eppothum Thamizhan said:

ரஞ்சித் இந்த அளவுக்கு பந்தி பந்தியாய் எழுதவேண்டிய அவசியம் இல்லையே!! ஈராக், லிபியா, சிரியா, சோமாலியா இப்படி எத்தனையோ நாடுகளில் நடந்த போருக்கு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும்தான் காரணம் என்பது சிறுபிள்ளைக்கு கூட தெரியுமே!!!

ஈராக் மீதான யுத்தம் அமெரிக்காவால் வலிந்து திணிக்கப்பட்டதுதான். மாற்றுக்கருத்தில்லை.

லிபியாவில் சிவில் யுத்தம் அமெரிக்காவால் நடத்தப்பட்டதல்ல. கடாபியின் சர்வாதிகாரத்தனமான ஆட்சிக்கெதிராக அந்நாட்டு மக்களால் உருவாக்கப்பட்ட அரபு வசந்தம் எனும் முழு மத்திய கிழக்கின் அடக்குமுறையாளர்களுக்கெதிரான மக்கள் எழுச்சியின் ஒரு பகுதியே லிபியாவில் நடந்தது. எகிப்தில் தொடங்கி சவுதி தவிர்ந்த பல மத்திய கிழக்கு நாடுகலில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியின் ஒரு பாகமே அது. இது அமெரிக்காவால் உருவாக்கப்பட்டதல்ல. 

அதேபோல சிரியாவில் நடப்பதும் ஆசாத் எனும் சர்வாதிகார, மக்கள் விரோத போர்க்குற்றவாளிக்கெதிரான மக்கள் போராட்டமே. இதில் போர்க்குற்றவாளியை நீங்கள் ஆதரிக்கும் புட்டின் ஆதரிக்க, ஆசாத்தின் கொடுங்கரங்களில் இருந்து நாட்டை மீட்கும் போரில் ஈடுபடும் "Free Syrian Army" எனும் போராளிக் குழுக்களுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. 

சொமாலியாவை அமெரிக்கா ஆக்கிரமிக்கவில்லை. ஜனநாயக ஆட்சிமுறை ஒன்றில்லாமல் ஆயுதக் கோஷ்ட்டிகள் அந்நாட்டினை ஆளுக்கொரு பக்கம் பிரித்து அழித்துக்கொன்டிருந்தபோது பாரிய பட்டினிச் சாவினை எதிர்நோக்கிய சொமாலிய மக்களுக்கு உணவு வழங்கலை ஐ நா செய்ய எத்தனித்தபோது பல உணவுக்களஞ்சியங்களை ஆயுதக் கும்பல்கள் சூரையாடிச் செல்ல மக்கள் பலர் பட்டினியால் இறக்கத் தொடங்கினர். ஆகவே இந்த உணவு வழங்கலை உறுதிப்படுத்தவே சிரியளவிலான ஐ நா படையணியொன்று அங்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆயுதக் குழுக்களின் தாக்குதலில் பல ஐ நா வீரர்கள் கொல்லப்பட, உணவு வழங்கலை உறுதிப்படுத்த அமெரிக்க ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. இதன் பின்னரே சிறியளவிலான அமெரிக்க ராணுவப் பிரிவொன்று மொகடிஷுவிற்கு அனுப்பப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரஞ்சித் said:

நீங்களும் மாய்ந்து மாய்ந்து எழுதுகிறீர்கள், ஆனால் இங்கு ஒரு முடிவும் வராது. எங்களுக்கு இந்தியா பக்கத்தில் இருந்து காலம் காலமா கழுத்தறுப்பது எப்பிடியோ அப்பிடித்தான் ரஷ்யா உக்கிறைனுக்கு காலம் காலமா செய்து கொண்டு இருக்குது. இத்திரியில் ஆச்சரியமான விடயம், எமது யாழ் மக்கள் அநியாயத்துக்கு ரஷ்யாவிற்கு support பண்ணுவது. ரஷ்யா ஒன்றும் தானுண்டு தன வேலையுண்டு என்று இருக்கும் நாடு அல்ல, மேற்கு நாடுகள் போன்று யுத்தம், ஆக்கிரமிப்பு என்று இவர்களது வரலாறும் மிக நீண்டது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உக்ரேனுக்கு  மேற்குலகமும் நேட்டோவும் ஆயுதங்கள் குடுக்காட்டில் இவ்வளவு பெரிய மனித இழப்புகளும் சேதங்களும் வந்திருக்காது. வராது.

நடு நிலமை வகிக்காமல் ஆயுதங்களை ஒரு பக்கத்தாலை குடுத்துக்கொண்டு ஐயோ ரஷ்யன் அடிக்கிறான்  அழிக்கிறான் எண்டால் என்ன அர்த்தம்?

பேசித்தீர்க்க நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு. போர் இவ்வளவு நீடிக்கும் என இரு பக்கமும் நினைத்திருக்கவில்லை என்றே தற்போதைய நிலமைகளை பார்க்கும் போது புரிகின்றது.

அமெரிக்கா கூட நினைத்திருக்காது போலிருக்கின்றது. ஏனெனில் மத்திய ஐரோப்பாவில் தொடர் பிரச்சனையென்றால் பலருக்கு பல சிக்கல்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நீர்வேலியான் said:

நீங்களும் மாய்ந்து மாய்ந்து எழுதுகிறீர்கள், ஆனால் இங்கு ஒரு முடிவும் வராது. எங்களுக்கு இந்தியா பக்கத்தில் இருந்து காலம் காலமா கழுத்தறுப்பது எப்பிடியோ அப்பிடித்தான் ரஷ்யா உக்கிறைனுக்கு காலம் காலமா செய்து கொண்டு இருக்குது. இத்திரியில் ஆச்சரியமான விடயம், எமது யாழ் மக்கள் அநியாயத்துக்கு ரஷ்யாவிற்கு support பண்ணுவது. ரஷ்யா ஒன்றும் தானுண்டு தன வேலையுண்டு என்று இருக்கும் நாடு அல்ல, மேற்கு நாடுகள் போன்று யுத்தம், ஆக்கிரமிப்பு என்று இவர்களது வரலாறும் மிக நீண்டது. 

பொதுவாகவே மேற்கு நாடுகளுக்கு சாட்பான நமது மக்களில் பலர் ரஸ்ய சார்பு நிலையெடுக்கின்றனென்றால் அதற்குக் காரணம் ரஸ்யாவின் மீதான  காதலா அல்லது உக்ரேன் மீதான கோபமா..?

இரண்டும் இல்லையென்றால் வேறென்ன ?

இந்த இணையத்தில் இரஸ்ய சார்பு நிலையெடுப்பவர்கள, கடந்த காலத்தில் எமது போராட்டம் தொடர்பாக எவ்வகையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். போராட்டமும் மக்களின் அழிவின் பின்னர் அவர்களது கோபத்திற்கான அல்லது இந்த மனமாற்றத்திற்கான காரணம்  என்ன ? 

சிந்தித்துப்பார்த்தீர்களா ? 

சம தர்மத்தை சோவியத் யூனியனிடமிருந்தும், சனநாயகத்தையும், மனித உரிமையினையும் மேற்கு நாடுகளிடமிருந்து கற்றவர்கள் நாங்கள். இதனை மனதிலிறுத்தி யோசியுங்கள். விடை கிடைக்கும். 

(யுத்தத்தை விரும்பும் மனிதன் இந்த உலகில் இல்லை என்பதே என் நம்பிக்கை)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

உக்ரேனுக்கு  மேற்குலகமும் நேட்டோவும் ஆயுதங்கள் குடுக்காட்டில் இவ்வளவு பெரிய மனித இழப்புகளும் சேதங்களும் வந்திருக்காது. வராது.

என்ன அண்ணை சொல்லுறியள்?

உங்கட தியரியின்படி பார்த்தால் ஈழத்தில புலிகள் போராடி இருக்காட்டில் இவ்வளவு சனமும் செத்திருக்காதெல்லோ? ஆனால், அது உண்மையில்லையெண்டு உங்களுக்கு நல்லாத் தெரியும். ஏனெண்டால், எங்களை அழிச்சு நாடு முழுதையும் சிங்கள பெளத்த நாடாய் மாத்திறதுதான் அவனின்ட ஆக்கிரமிப்பின்ர மொத்த நோக்கமும். அதுமாதிரித்தான் ரஸ்ஸியனின்ர நோக்கமும்.  

அண்ணை, எம்மை அழிக்க வாறவனை நான் வெறும் கைகளைக் கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தால், அவனுக்கு அழிப்பது சுகமாகப் போய்விடும், நாங்கள் பலியாவதும் அதிகமாகிப் போய்விடும். ஆனால், திருப்பியடித்தல்த்தான் அவன் ஒன்றிற்கு இரண்டுமுறை எண்டாலும் சிந்திப்பான். அவனின்ர ராணுவ வல்லமையை நாம் சிறிதளவாவது அழித்தால்த்தான் அவனும் யோசிப்பான். எம்மை ஆக்கிரமிக்க வாறவனை நாம் எதிர்த்தால் அவனது அக்கிரமிப்பு அவனுக்குக் கடிணமாக இருக்கும், எதிர்க்கவில்லையென்றால் அது சுலபமாகும். இதென்ன 23 ஆம் புலிகேசியே எதிரி மன்னன் வரும்போது பேசாமல் சரணடைஞ்சால் விட்டுட்டுப் போவதற்கு? அவன் நாடு பிடிக்க வாறான் அண்ணை!

பேசித்தீர்க்கலாம் எண்டால், ஏன் அண்ணை நாங்கள் போராடின்னாங்கள்? சிங்களவனோட பேசிக்கொன்டே இருந்திருக்கலாமே? சிலவிஷயங்கள் நடக்காது, சாத்தியப்படாது எண்டு இருக்கெல்லோ? அது போலத்தான் சிங்களவன் எங்களுக்குத் தீர்வு தாறதும், ரஸ்ஸியன் உக்ரேன் காரனை சுதந்திரமா வாழ விடுறதும். இதில பேசித் தீர்க்கிறது, விட்டுக் குடுக்கிறது எண்டு சிங்களவனும் நினைக்கப்போறதில்லை, ரஸ்ஸியனும் நினைக்கப்போறதில்லை. 

24 minutes ago, Kapithan said:

பொதுவாகவே மேற்கு நாடுகளுக்கு சாட்பான நமது மக்களில் பலர் ரஸ்ய சார்பு நிலையெடுக்கின்றனென்றால் அதற்குக் காரணம் ரஸ்யாவின் மீதான  காதலா அல்லது உக்ரேன் மீதான கோபமா..?

ரஸ்ஸியா மீதான் காதல் இல்லையென்றால், அப்போ உக்ரேன் மீதான கோபம் தான் காரணம் என்கிறீர்கள்? அந்தக் கோபத்திற்குக் கார்ணம் உக்ரேன் விமானிகள் இலங்கையில் வேலை பார்த்ததுதான் என்கிறீர்கள்? ஆக மொத்தத்தில் பழிவாங்கும் எண்ணமே எங்களுக்கு மேலோங்கி நிற்கிறது என்கிறீர்கள்? அப்படியானால், உக்ரேனிய விமானமோட்டிகள் போல இன்னும் பல வெளிநாட்டவர்களும் எம்மை அழித்தார்களே, ரஸ்ஸியர்கள் உட்பட? அவர்களை என்ன செய்யலாம்? 

24 minutes ago, Kapithan said:

சம தர்மத்தை சோவியத் யூனியனிடமிருந்தும், சனநாயகத்தையும், மனித உரிமையினையும் மேற்கு நாடுகளிடமிருந்து கற்றவர்கள் நாங்கள்.

அதனால்த்தான் சமதர்ம ரஸ்ஸியாவை ஆதரித்து மனிதவுரிமைகளையும், ஜனநாயகத்தையும் போற்றும் மேற்குலகை எதிர்க்கவேண்டும் என்று கூறுகிறீர்கள்? 

24 minutes ago, Kapithan said:

யுத்தத்தை விரும்பும் மனிதன் இந்த உலகில் இல்லை என்பதே என் நம்பிக்கை

அப்ப ஏன்  மனிதன் தோன்றின காலத்திலிருந்து யுத்தம் நடக்கிறது? 

Edited by ரஞ்சித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kapithan said:

போராட்டமும் மக்களின் அழிவின் பின்னர் அவர்களது கோபத்திற்கான அல்லது இந்த மனமாற்றத்திற்கான காரணம்  என்ன ? 

தமிழினக் கொலையில் நேரடியாகப் பங்குகொண்டிருந்த சிங்களவனையும், இந்தியனையும், சீனனையும் விட்டுவிட்டு, உங்களுக்கு வசதிக்கேற்றவாறு மேற்குலகைக் குற்றஞ்சாட்டுகிறீர்கள். 

போர்க்குற்றவாளிகளான சிங்களவனையும், இந்தியனையும் தப்பிக்கவிட்டு, மேற்குலகைக் குற்றஞ்சாட்டுவதன் மூலம் எதனை அடையப் பார்க்கிறீர்கள்? நீங்கள் சொல்லும் கோபம் உண்மையானதென்றால், அது சிங்களவனின் மேலும் இந்தியனின் மேலும் அல்லவா வந்திருக்க வேண்டும்? ஆனால், இன்றைக்கு வரை இந்தியாவினால் வழிநடத்தப்படும் அரசியல்வாதிகளைத்தானே தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிவருகிறீர்கள்? இன்றுவரை ஐ நா வில் சிங்களவனை பாதுகாக்கும் ரஸ்ஸியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் மேலல்லவா எமக்குக் கோபம் வரவேண்டும்? மாறாக ஏதாவது இன்றுவரை செய்துவருகிற பேசிவருகிற மேற்குலகின் மீது கோபம் வருவது ஏன்? 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

பொதுவாகவே மேற்கு நாடுகளுக்கு சாட்பான நமது மக்களில் பலர் ரஸ்ய சார்பு நிலையெடுக்கின்றனென்றால் அதற்குக் காரணம் ரஸ்யாவின் மீதான  காதலா அல்லது உக்ரேன் மீதான கோபமா..?

இரண்டும் இல்லையென்றால் வேறென்ன ?

இந்த இணையத்தில் இரஸ்ய சார்பு நிலையெடுப்பவர்கள, கடந்த காலத்தில் எமது போராட்டம் தொடர்பாக எவ்வகையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். போராட்டமும் மக்களின் அழிவின் பின்னர் அவர்களது கோபத்திற்கான அல்லது இந்த மனமாற்றத்திற்கான காரணம்  என்ன ? 

சிந்தித்துப்பார்த்தீர்களா ? 

சம தர்மத்தை சோவியத் யூனியனிடமிருந்தும், சனநாயகத்தையும், மனித உரிமையினையும் மேற்கு நாடுகளிடமிருந்து கற்றவர்கள் நாங்கள். இதனை மனதிலிறுத்தி யோசியுங்கள். விடை கிடைக்கும். 

(யுத்தத்தை விரும்பும் மனிதன் இந்த உலகில் இல்லை என்பதே என் நம்பிக்கை)

நீங்கள் சொல்லுவது எனக்கு புரியவில்லை. எமது யாழ்கள மக்களின் மனமாற்றத்துக்கு அப்பிடி என்ன காரணம் வந்துவிட்டது? உக்கிரேன் மேற்கு சார்பாக தமது நிலையை எடுத்ததுக்கு காரணம் எல்லோருக்கும்  தெரியும். ரஷ்யா அவர்களை காலம் காலமா நிம்மதியாக வாழவிட்டிருந்தால் இந்த பிரச்னை இவ்வளுவு தீவிரமடைந்து இருக்காது. இங்கு ரஷ்யா சார்பு நிலை எடுப்பவர்கள் வாதங்கள்:

1. உக்கிரேன் பேசித்தீர்த்திருக்க வேண்டும் 
2. ரஷ்யாவை கோபப்படுத்தி இருக்கக்கூடாது
3.  ரஷ்யாவிற்கு பக்கத்தில் இருப்பதால் மேற்குலகுடம் உறவை பலப்படுத்தியது தவறு, அதாவது அவர்கள் விரும்பிய முடிவை எடுக்கக்கூடாது. கியூபாவும் இதைத்தான் செய்தது. 
4. அவர்கள் எங்களுக்கு குண்டு போட்டார்கள் 

நான் இப்ப விளங்கிக்கொண்டிருப்பது:
1. நாங்கள் ஆயுதம் எடுத்து தவறு, பேசியிருக்க வேண்டும், ஆரம்பத்தில் இருந்தே பேசிக்கொண்டே இருந்திருக்க வேண்டும்,  நாங்கள் மாத்திரம்தான் பேச்சுவார்த்தையை குழப்பியது என்று மொத்த உலகமும் சொன்னது சரியானது.    
2. இந்தியா சொன்னதை மாத்திரம் நாங்கள் செய்திருக்க வேண்டும். ஆயுதங்கள்  தந்தபோது அடித்துக்கொண்டும், இந்திய ராணுவம் வந்த பொது, அவர்களிடம் ஆயுதத்தை ஒப்படைத்து இருக்க வேண்டும், திருப்பி அடித்தது தவறு.
3. இந்தியாவைத் தவிர்த்து நாங்களும் எக்காரணம் கொண்டும் வேறு நாட்டிடம் போகக்கூடாது, அவர்கள் என்ன செய்தாலும் பொறுத்துக்கொண்டு அவர்களிடமே தீர்வுக்கு போக வேண்டும்.
4. இருவரும் எங்களுக்கு எதிராக இருந்தார்கள் அதனால் வேடிக்கை மட்டும் பார்ப்பம், என்று சொன்ன எல்லோருமே, ரஷ்ய ஆதரவு நிலையை அப்பிடியே வெளிக்காட்டுகிறார்கள், உக்கிரேனில் குண்டு விழுந்து சாவதை ரசிக்கிறோம்.

நான் அமெரிக்க வந்த ஆரம்ப காலங்களில், சில இந்தியர்களை சந்தித்தபோது உரையாடியதுண்டு, எங்கள் பிரச்சனையை உணர்ந்த ஓரிரு தீவிர தமிழர்களை தவிர, மற்றவர்கள் அனைவரும், தமிழர்கள் உட்பட சொன்னது. குண்டுகள் வைக்கும் விடுதலைப்புலிகள் ஒரு தீவிரவாத இயக்கம்,  எங்களுக்கு தீர்வு தர வந்த இந்திய படையை தாக்கியது தவறு, முக்கியமாக ராஜிவ் காந்திய கொன்றதை இந்தியா மறக்காது. அப்பொழுது கோபம் வரும், பிறகு இப்படியான உரையாடல்களை வைப்பதில்லை. இப்பொழுது பார்க்கும் பொழுது அவர்கள் சொன்னது சரிபோல் படுகிறது   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரஞ்சித் said:

என்ன அண்ணை சொல்லுறியள்?

உங்கட தியரியின்படி பார்த்தால் ஈழத்தில புலிகள் போராடி இருக்காட்டில் இவ்வளவு சனமும் செத்திருக்காதெல்லோ? ஆனால், அது உண்மையில்லையெண்டு உங்களுக்கு நல்லாத் தெரியும். ஏனெண்டால், எங்களை அழிச்சு நாடு முழுதையும் சிங்கள பெளத்த நாடாய் மாத்திறதுதான் அவனின்ட ஆக்கிரமிப்பின்ர மொத்த நோக்கமும். அதுமாதிரித்தான் ரஸ்ஸியனின்ர நோக்கமும்.  

அண்ணை, எம்மை அழிக்க வாறவனை நான் வெறும் கைகளைக் கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தால், அவனுக்கு அழிப்பது சுகமாகப் போய்விடும், நாங்கள் பலியாவதும் அதிகமாகிப் போய்விடும். ஆனால், திருப்பியடித்தல்த்தான் அவன் ஒன்றிற்கு இரண்டுமுறை எண்டாலும் சிந்திப்பான். அவனின்ர ராணுவ வல்லமையை நாம் சிறிதளவாவது அழித்தால்த்தான் அவனும் யோசிப்பான். எம்மை ஆக்கிரமிக்க வாறவனை நாம் எதிர்த்தால் அவனது அக்கிரமிப்பு அவனுக்குக் கடிணமாக இருக்கும், எதிர்க்கவில்லையென்றால் அது சுலபமாகும். இதென்ன 23 ஆம் புலிகேசியே எதிரி மன்னன் வரும்போது பேசாமல் சரணடைஞ்சால் விட்டுட்டுப் போவதற்கு? அவன் நாடு பிடிக்க வாறான் அண்ணை!

பேசித்தீர்க்கலாம் எண்டால், ஏன் அண்ணை நாங்கள் போராடின்னாங்கள்? சிங்களவனோட பேசிக்கொன்டே இருந்திருக்கலாமே? சிலவிஷயங்கள் நடக்காது, சாத்தியப்படாது எண்டு இருக்கெல்லோ? அது போலத்தான் சிங்களவன் எங்களுக்குத் தீர்வு தாறதும், ரஸ்ஸியன் உக்ரேன் காரனை சுதந்திரமா வாழ விடுறதும். இதில பேசித் தீர்க்கிறது, விட்டுக் குடுக்கிறது எண்டு சிங்களவனும் நினைக்கப்போறதில்லை, ரஸ்ஸியனும் நினைக்கப்போறதில்லை.

உங்கடை கதைய பாத்தால் உக்ரேனும் மேற்குலகமும் போச்சிப்பால் குடிச்சுக்கொண்டு நித்தா கொண்ட மாதிரியும்  ரஷ்யன் தான் அடிச்சுப்புடிச்சு ரவுடித்தனம் செய்யிற மாதிரியும் கதை போகுது. 

தெரியாமல் கேக்கிறன் என்ன கூந்தலுக்கு நேட்டோ அமைப்பு? யாரை யாரிடம் இருந்து பாதுகாக்க?

ரஷ்யாவை உசுப்பேத்தினதே  உக்ரேனும்  மேற்குலகமும் தான். சோவியத்தின் வீழ்ச்சிக்கு பின்  உக்ரேன் - ரஷ்யா- ஜோர்ஜியா(Georgia) நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்களை படியுங்கள்.

அப்படியே அமெரிக்க சனாதிபதிக்கும் அவர் மகனுக்கும் உக்ரேனில் எவ்வளவு சொத்து பத்துக்கள்,ஊழல்கள் இருக்கின்றது என்பதையும் தேடி படியுங்கள்.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, நீர்வேலியான் said:

எங்களுக்கு தீர்வு தர வந்த இந்திய படையை தாக்கியது தவறு, முக்கியமாக ராஜிவ் காந்திய கொன்றதை இந்தியா மறக்காது. அப்பொழுது கோபம் வரும், பிறகு இப்படியான உரையாடல்களை வைப்பதில்லை. இப்பொழுது பார்க்கும் பொழுது அவர்கள் சொன்னது சரிபோல் படுகிறது

அப்போது இந்திய ராணுவம் எம்மவர்கள் மீது செய்த கொலைகள் பாலியல் வல்லுறவுகள் பல்கலைகழக படு கொலைகள் பற்றி எதுவுமே அவர்களுக்கு சொல்லவில்லையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

பல்கலைகழக படு கொலைகள்

யாழ் வைத்தியசாலைப் படுகொலைகளைச் சொல்லுறீங்களோ? யாழ் பல்கலைக் கழகத்தில தரையிரங்க வெளிக்கிட்ட அவையின்ர பராக் கொமாண்டோக்கள் 30 பேரை நாங்கள்தான் போட்டனாங்கள் எண்டு நெய்க்கிறன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, ரஞ்சித் said:

யாழ் வைத்தியசாலைப் படுகொலைகளைச் சொல்லுறீங்களோ? யாழ் பல்கலைக் கழகத்தில தரையிரங்க வெளிக்கிட்ட அவையின்ர பராக் கொமாண்டோக்கள் 30 பேரை நாங்கள்தான் போட்டனாங்கள் எண்டு நெய்க்கிறன். 

உங்களுக்குரிய பதில் பாக்கி இருக்க அடுத்த படி இறங்கி வந்ததன் நோக்கம் என்ன?

5 minutes ago, ரஞ்சித் said:

யாழ் வைத்தியசாலைப் படுகொலைகளைச் சொல்லுறீங்களோ? 

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை தெருவில் படுக்க வைத்து டாங்கிகளை ஏற்றி கொலை செய்தது ஞாபகமிருக்கா சார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

வலிமை உள்ள நாடுகள் தங்களது பலத்தைக் காட்ட போர்களை தொடங்குகிறார்கள்.. பலியாவது சாதாரன மனிதர்கள். இந்த போரினால் வரப்போகும் பொருளாதார நெருக்கடி ஒருபுறம் என்றால் human trafficking இன்னொருபுறம் அதிலும் பெண்கள்/சிறுவர்களைப் பற்றி ஒரு சிந்தனையும் இல்லை.. நாங்கள் அதனை அனுபவித்தவர்கள் என்பதால் மற்றவர்களும் அனுபவித்துவிட்டுப் போகட்டும். பிறகு  வந்து இதைப் பற்றி பக்கம்பக்கமாக எழுதுவோம்

பெரும்பலான தமிழர்கள் சுயநலமாகவும் ஒற்றுமையில்லாமலும் இருப்பதால்தான் விடிவும் இல்லை நீதியும் இல்லை ஆனால் மற்ற இனங்களைப் பற்றி விரிவுரை எடுக்கிறோம்..

சிந்தனை பூர்வமாக எழுதுகின்றேன் என எழுதிவிட்டு அருவருடிகள் என விளித்த பக்கசார்பு கருத்தாளருக்கு விருப்பு வாக்களித்ததின் மூலம் இந்ததிரியில் இன்னும் கருத்தெழுத தகுதியுடையவராகின்றீர்கள். 😁
 
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

உங்களுக்குரிய பதில் பாக்கி இருக்க அடுத்த படி இறங்கி வந்ததன் நோக்கம் என்ன?

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை தெருவில் படுக்க வைத்து டாங்கிகளை ஏற்றி கொலை செய்தது ஞாபகமிருக்கா சார்?

கு.சா அண்ணா 
நீங்கள் சொல்லுவது கொக்குவில் பிரம்படி வீதி சம்பவம்.
"யாழ் பல்கலைகழக படுகொலைகள்" என்று இதை கூறுவது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிரபா said:

My 2¢

விரும்பியோ, விரும்பாமலோ எமது தாய்நாட்டை விட்டு வெளியேறி இன்னொரு நாட்டில் வாழும் நாம், எப்படி அந்தந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து வாழ்கிறோமோ, அதேபோல் அந்தந்த நாட்டு அரசுகளின் முடிபுகளை ஆதரித்தால் வரும் காலத்தில் நம்பகத்தன்மையுடைய, விரும்படும் இனமாக நாம் அடையாளப் படுத்தப்படுவோம்.

எமக்கு போதிக்கப்பட்ட சோசலிச / முதலாளித்துவ தத்துவம் எம்முடனேயே போகட்டும்.

இந்தநாட்டில் பிறந்து இந்தநாட்டின் குடிமக்களாக வாழும் எமது பிள்ளைகள்  இந்த நாட்டின் இராணுவத்தில் ( விரும்பியோ / கட்டாய பயிற்சி மூலமோ) சேர்ந்திருந்தால் அவர்களையும் வெறுக்கவா போகிறீர்கள்? அவர்களை கொல்பவர்களையா ஆதரிக்கப்போகிறீர்கள்?

நீங்கள் ரஸ்ஸியாவிலிருந்தால் அவர்களை ஆதரியுங்கள், மேற்கிலிருந்தால் மேற்கை ஆதரியுங்கள்.

When in Rome, do as the Romans do

வெள்ளைக்காற நாட்டில இருந்தால் சரிபிழை எதுவும் கதைக்காமல் குனிஞ்சு வெள்ளைக்காறன் சூவை நக்கனும் எண்டு நினைக்கிற இந்த அடிமைப்புத்தி தமிழனுக்கே உரியது.. இது தமிழர் அதிகமாக இங்கு வேலை செய்யும் இடங்களிலும் காணலாம்.. அமெரிக்கா அநியாயமாக ஏழைநாடுகள் மீது செய்யும் யுத்தங்களை எதிர்க்கும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இருக்கிறார்கள்.. அதேபோல் ஜரோப்பாவில் ஜரோப்பியர்கள் இருக்கிறார்கள்.. தங்கள் நாட்டு அரசு என்றாலும் பிழையை பிழை என்று சொல்ல வீதிக்கு இறங்கி போராட ஒருபோதும் தயங்கியதில்லை.. இங்கு வாழும் வேறு இனங்களும் அப்படி இல்லை.. எம்மவருக்கு மட்டும்தான் இந்த காலை நக்கும் அடிமைப்புத்தி கொஞ்சம் தூக்கல்… ஓவர் அக்டிங் பாத்து வெள்ளையளே கொடுப்புக்க சிரிப்பான்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, Sasi_varnam said:

கு.சா அண்ணா 
நீங்கள் சொல்லுவது கொக்குவில் பிரம்படி வீதி சம்பவம்.
"யாழ் பல்கலைகழக படுகொலைகள்" என்று இதை கூறுவது இல்லை.

சரி விடுங்க சசியர்! நானும் தெரியாமல்.......
அப்படியொரு சம்பவம் இந்திய ராணுவத்தால் நடந்ததா இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

ஈராக் மீதான யுத்தம் அமெரிக்காவால் வலிந்து திணிக்கப்பட்டதுதான். மாற்றுக்கருத்தில்லை.

லிபியாவில் சிவில் யுத்தம் அமெரிக்காவால் நடத்தப்பட்டதல்ல. கடாபியின் சர்வாதிகாரத்தனமான ஆட்சிக்கெதிராக அந்நாட்டு மக்களால் உருவாக்கப்பட்ட அரபு வசந்தம் எனும் முழு மத்திய கிழக்கின் அடக்குமுறையாளர்களுக்கெதிரான மக்கள் எழுச்சியின் ஒரு பகுதியே லிபியாவில் நடந்தது. எகிப்தில் தொடங்கி சவுதி தவிர்ந்த பல மத்திய கிழக்கு நாடுகலில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியின் ஒரு பாகமே அது. இது அமெரிக்காவால் உருவாக்கப்பட்டதல்ல. 

அதேபோல சிரியாவில் நடப்பதும் ஆசாத் எனும் சர்வாதிகார, மக்கள் விரோத போர்க்குற்றவாளிக்கெதிரான மக்கள் போராட்டமே. இதில் போர்க்குற்றவாளியை நீங்கள் ஆதரிக்கும் புட்டின் ஆதரிக்க, ஆசாத்தின் கொடுங்கரங்களில் இருந்து நாட்டை மீட்கும் போரில் ஈடுபடும் "Free Syrian Army" எனும் போராளிக் குழுக்களுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. 

சொமாலியாவை அமெரிக்கா ஆக்கிரமிக்கவில்லை. ஜனநாயக ஆட்சிமுறை ஒன்றில்லாமல் ஆயுதக் கோஷ்ட்டிகள் அந்நாட்டினை ஆளுக்கொரு பக்கம் பிரித்து அழித்துக்கொன்டிருந்தபோது பாரிய பட்டினிச் சாவினை எதிர்நோக்கிய சொமாலிய மக்களுக்கு உணவு வழங்கலை ஐ நா செய்ய எத்தனித்தபோது பல உணவுக்களஞ்சியங்களை ஆயுதக் கும்பல்கள் சூரையாடிச் செல்ல மக்கள் பலர் பட்டினியால் இறக்கத் தொடங்கினர். ஆகவே இந்த உணவு வழங்கலை உறுதிப்படுத்தவே சிரியளவிலான ஐ நா படையணியொன்று அங்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆயுதக் குழுக்களின் தாக்குதலில் பல ஐ நா வீரர்கள் கொல்லப்பட, உணவு வழங்கலை உறுதிப்படுத்த அமெரிக்க ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. இதன் பின்னரே சிறியளவிலான அமெரிக்க ராணுவப் பிரிவொன்று மொகடிஷுவிற்கு அனுப்பப்பட்டது.

நல்ல முட்டு அமெரிக்காவுக்கு..😂 புல்லா குளை அடிச்சு உருஏத்தி விட்டிருக்குரான் அமெரிக்கன்..😂 இனி யார் தடுத்தாலும் நிக்காது..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

உங்களுக்குரிய பதில் பாக்கி இருக்க அடுத்த படி இறங்கி வந்ததன் நோக்கம் என்ன?

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை தெருவில் படுக்க வைத்து டாங்கிகளை ஏற்றி கொலை செய்தது ஞாபகமிருக்கா சார்?

கொக்குவில் பிரம்படி ஒழுங்கை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, குமாரசாமி said:

சரி விடுங்க சசியர்! நானும் தெரியாமல்.......
அப்படியொரு சம்பவம் இந்திய ராணுவத்தால் நடந்ததா இல்லையா?

ஏனெனில் அப்படியான சம்பவங்களின் படங்களையோ ஆதாரங்களையோ இனி வரும் காலங்களில் எடுக்கவே முடியாது. ஒரு இடத்தில் நான் பதிவு செய்து வைத்த படங்களையே விரோதமானவை/பயங்கரமானவை என நீக்கி விட்டார்கள்.

இனி வரும் காலங்களில் நம்மவர்களே ஆதாரம் கேட்கும் போது என்ன செய்வதென்று தெரியவில்லை.

36 minutes ago, Sasi_varnam said:

கு.சா அண்ணா 
நீங்கள் சொல்லுவது கொக்குவில் பிரம்படி வீதி சம்பவம்.
"யாழ் பல்கலைகழக படுகொலைகள்" என்று இதை கூறுவது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

அப்போது இந்திய ராணுவம் எம்மவர்கள் மீது செய்த கொலைகள் பாலியல் வல்லுறவுகள் பல்கலைகழக படு கொலைகள் பற்றி எதுவுமே அவர்களுக்கு சொல்லவில்லையா?

அப்பிடி கதைக்காமல் இருக்க முடியுமா, சும்மா ஒப்புக்கு கேட்பார்கள் ஆனால் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள், இறுதியில் வெறும் மனஸ்தாபத்தில் முடியும், படிக்கு போது நாங்கள் மூன்று பேர் இருக்கும் இடத்தில் அவர்கள் நூறு பேர் இருப்பார்கள், அவர்களுடன் கதைத்து வெல்ல முடியாது. நான் அவதானித்தது, இப்பிடி இந்தியாவில் இருந்து படிக்க வருபவர்கள் பெரும்பாலும் உயர் சாதியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள், அவர்களின் பொதுவான மனநிலை வித்தியாசமானது (எல்லோரும் அல்ல). இதற்கு மேலே எழுதினால் இந்தியர்களை பொதுமை படுத்துவது மாதிரி இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் கருத்து வைத்தவர்களில் ஓணாண்டியைத் தவிர எல்லோரும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை ஆதரிக்கவில்லை என்று தெரிகின்றது. 15 பக்கம் திரி ஓடியதில் இது ஒரு நல்ல மாற்றம் என்றே தெரிகின்றது😎

மற்றும்படி ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகும் உக்கிரேனிய மக்களுக்கு தார்மீக ஆதரவு கொடுக்கமுடியாத, சக ஒடுக்குமுறைக்கு ஆளான இனம் என்று சொல்லும், தமிழர்களின் தனித்துவமான பண்புதான் நாம் ஒருபோதும் விடுதலை அடையத் தகுதியற்ற இனம் என்பதையும் சொல்லியுள்ளது. 

வேறு எதுவும் இனி இந்தத் திரியில் சொல்வதற்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

சரி விடுங்க சசியர்! நானும் தெரியாமல்.......
அப்படியொரு சம்பவம் இந்திய ராணுவத்தால் நடந்ததா இல்லையா?

38 minutes ago, குமாரசாமி said:

சரி விடுங்க சசியர்! நானும் தெரியாமல்.......
அப்படியொரு சம்பவம் இந்திய ராணுவத்தால் நடந்ததா இல்லையா?

நடந்தது அண்ணா. 😥

தேசிய தலைவரை குறிவைத்து யாழ் பல்கலைகழக கட்டிட தொகுதியில் தரை இறக்கப்பட்ட IPKF பாரா படைஅணி பெரும் இழப்பை சந்தித்தது (ஆபரேஷன் பவன்). அவர்களில் எஞ்சிய ஓரிருவரை காப்பாற்றுவதற்கு மேல்கொள்ளப்பட்ட ஒரு சிறப்பு படை நகர்வு ரயில் பாதையை மையமாக வைத்து முன்னேறியது. 
அந்த நேரத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்புகளை முகம் கொடுக்க திரணியில்லாமல் 
அவர்கள் மேற்கொண்ட காட்டு மிராண்டித்தனமான மக்கள் மீதான படுகொலைகளே (கண்ணில் அகப்பட்ட அப்பாவிகளை ரோட்டில் படுக்க வைத்து செயின் பிளாக்கால் ஏற்றி நசுக்கிய) அந்த பிரம்படி லேனில் நிகழ்த்தப்பட்டது. 
    
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பிரபா said:

நீங்கள் ரஸ்ஸியாவிலிருந்தால் அவர்களை ஆதரியுங்கள், மேற்கிலிருந்தால் மேற்கை ஆதரியுங்கள்.

குடியிருக்கும் நாட்டுக்கு விசுவாசமாக இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.

ரஷ்யர்களில் இடதுசாரி சிந்தனையுள்ளவர்களும், மனிதநேயவாதிகளும் சர்வாதிகாரி பூட்டினின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள். சிறைக்குப் போகின்றார்கள். 

மேற்கில் இருப்பதால் மேற்கின், முக்கியமாக அமெரிக்காவின், யுத்தங்களை ஆதரிக்கவேண்டியதில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, Sasi_varnam said:

நடந்தது அண்ணா. 😥

தேசிய தலைவரை குறிவைத்து யாழ் பல்கலைகழக கட்டிட தொகுதியில் தரை இறக்கப்பட்ட IPKF பாரா படைஅணி பெரும் இழப்பை சந்தித்தது (ஆபரேஷன் பவன்). அவர்களில் எஞ்சிய ஓரிருவரை காப்பாற்றுவதற்கு மேல்கொள்ளப்பட்ட ஒரு சிறப்பு படை நகர்வு ரயில் பாதையை மையமாக வைத்து முன்னேறியது. 
அந்த நேரத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்புகளை முகம் கொடுக்க திரணியில்லாமல் 
அவர்கள் மேற்கொண்ட காட்டு மிராண்டித்தனமான மக்கள் மீதான படுகொலைகளே (கண்ணில் அகப்பட்ட அப்பாவிகளை ரோட்டில் படுக்க வைத்து செயின் பிளாக்கால் ஏற்றி நசுக்கிய) அந்த பிரம்படி லேனில் நிகழ்த்தப்பட்டது. 
    
 சசி வர்ணம்! தகவலுக்கு மிக்க நன்றி 🙏

இவற்றையெல்லாம் நாம் அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டேயிருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
45 minutes ago, கிருபன் said:

மற்றும்படி ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகும் உக்கிரேனிய மக்களுக்கு தார்மீக ஆதரவு கொடுக்கமுடியாத, சக ஒடுக்குமுறைக்கு ஆளான இனம் என்று சொல்லும், தமிழர்களின் தனித்துவமான பண்புதான் நாம் ஒருபோதும் விடுதலை அடையத் தகுதியற்ற இனம் என்பதையும் சொல்லியுள்ளது. 

வேறு எதுவும் இனி இந்தத் திரியில் சொல்வதற்கு இல்லை.

70 வருட காலமாக சகல வழிகளிலும் போராடி அழியும் இனம்..........இனியும் மற்றவனுக்கு தார்மீக ஆதரவு வாழ வேண்டும் என ஒரு சிலர் நினைத்தால் அது ஏதோ ஒருவித கோளாறு ஆகவே இருக்க முடியும்.சரி செய்து கொள்ளவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.