Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 எல்லோரும் மூளையை கசக்கி யோசித்தாயிற்று இன்னும் சொல்லவே இல்லை அது என்ன கடி என்று   .அலர்ஜி அல்லது   மனப்பிரமை என்று தான் எண்ணுகிறேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ராசவன்னியன் said:

ஏதாவது ஊக்கு அல்லது கம்மலின் திருகாணி கழண்டு மெத்தை விரிப்பிலோ அல்லது மெத்தையிலோ விழுந்திருக்கும்.  புரண்டு படுக்கும்போது அழுத்தத்தால் உடம்பில் பிராண்டியிருக்கும்..! 🤔

வடிவா சோதிச்சு பாருங்கோ..!

அதெல்லாம் சோதிச்சுப் பாக்காமலா இருப்பம் அண்ணா. கம்மல்கள் எல்லாமே  திருக்காணியோடுதான் இருக்கின்றன. 😀

18 hours ago, நிலாமதி said:

 எல்லோரும் மூளையை கசக்கி யோசித்தாயிற்று இன்னும் சொல்லவே இல்லை அது என்ன கடி என்று   .அலர்ஜி அல்லது   மனப்பிரமை என்று தான் எண்ணுகிறேன். 

இன்று இரவு சொல்லிவிடுகிறேன். 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதன்பின்னர் ஒருநாள் வைத்தியாரிடம் தொலைபேசியில் கதைப்பதற்கான நேரத்தை பதிவு செய்துவிட்டுக் காத்திருக்க அழைப்பு வருக்கிறது. அந்த வைத்தியர் மிக இயல்பாக என்னுடன் கதைப்பார்.

“உமக்கு என்ன பிரச்சனை?

“எனக்கு கொஞ்ச நாட்களாக சரியான கடி”

“சிறீலங்கா அல்லது இந்தியா போய் வந்தீரா? தலையெல்லாம் பேனோ?”

“எனக்கு ஏன் பேன் வருது? அதோடை உந்தக் கோவிட்டுக்குள்ளை நான் ஏன் போகப்போறன் அங்கை எல்லாம்?”

“பேன் இல்லை எண்டால் அப்ப எங்க கடி?”

நான் 2019 கம்போடியா போனபோது ................................................. .......தொடங்கி எல்லாம் சொல்லி முடிச்சன்.

“உமக்கு ஏதும் ஒவ்வாமை இருக்கோ?

“இல்லை”

“இதுக்கு முதல் அதுக்கான டெஸ்ட் செய்தனீரே?”

“எதுக்கும் ஒருக்கா அதையும் செய்து பார்ப்பம்.”

“ஆனால் அவங்கள் வந்து போன பிறகு எனக்கு ஒரு கடியும் இல்லை.”

“அப்ப என்னத்துக்கு எனக்கு அப்பொயின்ற்மென்ட் வச்சநீர்”

“இவ்வளவு நாளும் ஏன் எனக்குக் கடி இருந்தது எண்டு தெரிய வேணுமெல்லோ”

“இது வடிவாத் தெரியுதுதானே உம்மட நினைப்பு என்று. சிலநேரம் தற்காலிகமா ஏதாவது ஒவ்வாமை கூட உமக்கு வந்திருக்கலாம். உந்த சோப், வோசிங் பவுடர் இதுகளுக்கும் கடிக்கும். றால் நண்டு நல்லாச் சாப்பிடுறநீரோ?”

“ஓம் அது நல்லாப் பிடிக்கும்”  

“சிலபேருக்கு அது கனக்கச் சாப்பிட்டாலும் கடிக்கும்.

“இரவில நித்திரை ஒழுங்கா வருதா? வேணுமெண்டா ஒரு கடிதம் தாறன். சைகாட்டிஸ்ற் ஒருவரைப் போய் பாருமன்.”

“என்னைப் பயித்தியம் ஆக்கப் போறியளோ? எனக்கு நல்லா நித்திரை வருது. ஆளை விடுங்கோ”

“நீரா வைத்தியத்துக்கு வந்திட்டு நீரே மருந்தையும் சொல்லுறீர். சரி அப்ப ஒரு மாதம் பாரும். கடிக்காட்டில் சரி. திரும்பவும் கடிக்கிறபோல இருந்தால் வாரும்.”

அதோட எல்லாம் முடிஞ்சுது    

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதோட எல்லாம் முடிஞ்சுது    

அதெல்லாம் தெரியாது.கொத்தார்ரை நிலைப்பாடு என்ன?😎

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அதெல்லாம் தெரியாது.கொத்தார்ரை நிலைப்பாடு என்ன?😎

அந்த மனிசன் படுற பாடு எனக்குதானே தெரியும் ..😀

  • கருத்துக்கள உறவுகள்

அவசரமில்லை ஆறுதலாக எழுதி முடித்திருக்கலாம்..எங்கட ஆய்க்கினை தாங்காது எழுதியது போல் எனக்கு ஒரு பிரமை.✍️😆

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இரவில நித்திரை ஒழுங்கா வருதா? வேணுமெண்டா ஒரு கடிதம் தாறன். சைகாட்டிஸ்ற் ஒருவரைப் போய் பாருமன்.”

Thank you very much Doctor.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

Thank you very much Doctor.

யாரு ஆங்கிலத்தில எழுத சொன்னது..நான் வந்து சாமத்தில போணுக்கு என்னாச்சு என்று தட்டிக் கொண்டிருக்கிறன்..✍️🤭

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு பாரபட்சமே கிடையாது......அத்தானையும் டொக்ட்டரையும் ஒரேமாதிரி வெருட்டுறியள்.........!   😢 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

அந்த மனிசன் படுற பாடு எனக்குதானே தெரியும் ..😀

அந்த மனிசன்தான் சுமேரியரிடம் நசுங்கித் தவிக்கும் மூட்டைப் பூச்சியோ...??🤔😭

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, suvy said:

உங்களுக்கு பாரபட்சமே கிடையாது......அத்தானையும் டொக்ட்டரையும் ஒரேமாதிரி வெருட்டுறியள்.........!   😢 

இவருக்கு கிட்டடியிலை நடு ரோட்டிலை வைச்சு மொங்கு மொங்கு எண்டு மொங்கப்படும்..↓↓↓😁

9 hours ago, பெருமாள் said:

அந்த மனிசன் படுற பாடு எனக்குதானே தெரியும் ..😀

  • கருத்துக்கள உறவுகள்

12.jpg

கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் எலி, பல்லி, , கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம்.

கடைகளில் விற்கும் கண்ட கண்ட பொருட்களையும் பயன்படுத்தி அவைகளை விரட்டுவதற்கு பதிலாக, ஒரு சில இயற்கை பொருட்களைக் கொண்டே அவற்றை எளிதில் விரட்டலாம்.

‪#எலி
எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது.

எனவே புதினாவை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம்.

‪#பல்லி
உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா..?

அப்படியெனில் வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை வையுங்கள்.

இதனால் அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும்.

‪#
சில வீடுகளில் ஈ அதிகம் மொய்க்கும்.

அப்படி உங்கள் வீட்டில் ஈ அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள்.

இல்லாவிட்டால் லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள்.

இதனாலும் ஈக்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.

‪#கொசுக்கள்
கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலை உதவும்.

மேலும் பல கொசு விரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன.

எனவே உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டுங்கள்.

இதனால் அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும்.

‪#கரப்பான்_பூச்சி
கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம்.

அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்.

‪#மூட்டைப்பூச்சி
மூட்டைப்பூச்சி உங்கள் வீட்டின் மெத்தையில் அதிகம் இருந்தால், வெங்காய சாற்றினை தெளித்து விட்டால், மூட்டைப்பூச்சிகள் அதன் வாசனையில் அழிந்து விடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

அதெல்லாம் தெரியாது.கொத்தார்ரை நிலைப்பாடு என்ன?😎

அதெல்லாம் குடும்ப இரகசியம். உப்பிடிப் பப்பிளிக்கில வச்சுக் கேட்கப்படாது😀 

21 hours ago, பெருமாள் said:

அந்த மனிசன் படுற பாடு எனக்குதானே தெரியும் ..😀

உங்களிலும் பாக்கவோ ????😀

21 hours ago, யாயினி said:

அவசரமில்லை ஆறுதலாக எழுதி முடித்திருக்கலாம்..எங்கட ஆய்க்கினை தாங்காது எழுதியது போல் எனக்கு ஒரு பிரமை.✍️😆

நீங்கள் சொல்லுறது உண்மைதான். உந்தச் சனத்தின்ர தொல்லை தாங்க முடியாமல் எழுதி முடிச்சது.

13 hours ago, suvy said:

உங்களுக்கு பாரபட்சமே கிடையாது......அத்தானையும் டொக்ட்டரையும் ஒரேமாதிரி வெருட்டுறியள்.........!   😢 

அந்த டொக்டருக்கு என் கதை நல்லாப் பிடிக்கும். நான் என்ன  செய்ய??

😀😂

11 hours ago, குமாரசாமி said:

இவருக்கு கிட்டடியிலை நடு ரோட்டிலை வைச்சு மொங்கு மொங்கு எண்டு மொங்கப்படும்..↓↓↓😁

நானும் அதைத்தான் யோசிக்க நீங்களே சொல்லியாச்சு 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Paanch said:

12.jpg

கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் எலி, பல்லி, , கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம்.

கடைகளில் விற்கும் கண்ட கண்ட பொருட்களையும் பயன்படுத்தி அவைகளை விரட்டுவதற்கு பதிலாக, ஒரு சில இயற்கை பொருட்களைக் கொண்டே அவற்றை எளிதில் விரட்டலாம்.

‪#எலி
எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது.

எனவே புதினாவை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம்.

‪#பல்லி
உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா..?

அப்படியெனில் வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை வையுங்கள்.

இதனால் அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும்.

‪#
சில வீடுகளில் ஈ அதிகம் மொய்க்கும்.

அப்படி உங்கள் வீட்டில் ஈ அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள்.

இல்லாவிட்டால் லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள்.

இதனாலும் ஈக்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.

‪#கொசுக்கள்
கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலை உதவும்.

மேலும் பல கொசு விரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன.

எனவே உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டுங்கள்.

இதனால் அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும்.

‪#கரப்பான்_பூச்சி
கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம்.

அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்.

‪#மூட்டைப்பூச்சி
மூட்டைப்பூச்சி உங்கள் வீட்டின் மெத்தையில் அதிகம் இருந்தால், வெங்காய சாற்றினை தெளித்து விட்டால், மூட்டைப்பூச்சிகள் அதன் வாசனையில் அழிந்து விடும்.

கூட்டிக் களிச்சுப் பார்த்தால் வீட்டை இலைகுழைகள் போட்டு குப்பையாக்கச் சொல்லுறியள் 😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கூட்டிக் களிச்சுப் பார்த்தால் வீட்டை இலைகுழைகள் போட்டு குப்பையாக்கச் சொல்லுறியள் 😀

ஊரிலை எல்லாம் நுளம்பு ஆக்கினையளுக்கு சட்டியிலை கரி எரிச்சு வேப்பம் இலை புகை அடிக்கிற ஞாபகம் இருக்கோ?😁
மூட்டைப்பூச்சி தொல்லை எண்டால் நல்ல வெய்யில் எறிக்கேக்கை மெத்தையளை வெய்யில்லை காயப்போடுங்கோ. நல்ல நிவாரணம் இருக்கு.....😄

ஓ....உங்கை வெளியிலை ஒண்டையும் வைக்கேலாது என்ன அவ்வளவுக்கு கள்ளர் தொல்லை....இது வேற பெரிய றபிள் :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ஊரிலை எல்லாம் நுளம்பு ஆக்கினையளுக்கு சட்டியிலை கரி எரிச்சு வேப்பம் இலை புகை அடிக்கிற ஞாபகம் இருக்கோ?😁
மூட்டைப்பூச்சி தொல்லை எண்டால் நல்ல வெய்யில் எறிக்கேக்கை மெத்தையளை வெய்யில்லை காயப்போடுங்கோ. நல்ல நிவாரணம் இருக்கு.....😄

ஓ....உங்கை வெளியிலை ஒண்டையும் வைக்கேலாது என்ன அவ்வளவுக்கு கள்ளர் தொல்லை....இது வேற பெரிய றபிள் :cool:

யோவ் குமாரசாமி! மூட்டை இல்லை என்று அப்பவே சொல்லியாச்சு😀 எலி கூட இல்லாத சுத்தமான வீடு 🙃

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யோவ் குமாரசாமி! மூட்டை இல்லை என்று அப்பவே சொல்லியாச்சு😀 எலி கூட இல்லாத சுத்தமான வீடு 🙃

அப்ப  ஒரு எலியை விட்டா போச்சு 😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யோவ் குமாரசாமி! மூட்டை இல்லை என்று அப்பவே சொல்லியாச்சு😀 எலி கூட இல்லாத சுத்தமான வீடு 🙃

சிஸ்டர்! கூல் டவுண்....கூல் டவுண்....😂
நான் வந்து "அறையெங்கும் மூட்டைப்பூச்சிகள்" தலையங்கத்திலையே நிக்கிறன்....🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யோவ் குமாரசாமி! மூட்டை இல்லை என்று அப்பவே சொல்லியாச்சு😀 எலி கூட இல்லாத சுத்தமான வீடு 🙃

சுமேரியரே கவனம். சாமியோடு மோதலாம் சாமி ஒண்டுமே செய்யாது, ஆனால் உந்தச் சாமியார்களோடு மோதினால் அவ்வளவுதான். அவர்களுக்கு பில்லி, சூனியம், செய்வினை எல்லாமே அத்துப்படி.🤫 

  • 3 weeks later...

மனம்தான் (மூளை) சில உபாதைகளுக்குக் காரணம். அதை நம்பவைக்கத்தான் ஊரில் மிளகாய் சுற்றிப் போடுவார்கள்.  

குளிர் நாடுகளில் மூட்டைப் பூச்சி வாழ முடியாது என்று நினைக்கிறேன். இங்கு Acariens என்ற சிறு பூச்சி உண்டு. இதை அழிப்பதற்கு வாரத்தில் ஒரு தடவை 10 நிமிடங்களுக்கு யன்னல்களைத் திறந்து வீட்டுக்குள் குளிர் வரவிடுவோம். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.