Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Picture1.png

இவ்வருட 'துபை எக்ஸ்போ 2020-இளையராஜா கலந்துகொண்டு இசைக் கச்சேரி செய்யவிருக்கிறார்' என சென்ற வாரம் அறிந்தவுடன் எனக்கு இருப்பு கொள்ளவில்லை.😉

சுமார் 12 வருடங்களுக்கு முன் ஏ.ஆர்.ரகுமான் இசைக் கச்சேரியை துபையில் பார்த்த இனிய அனுபவத்தால், இம்முறை இசைஞானி கச்சேரி என்பதால் '80களில் வந்த இனிய பாடல்களை நேரில் கேட்கலாம்' என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.😎

சென்ற வாரமே 'எக்ஸ்போ-2020' தளத்திற்கு சென்று கச்சேரி நடக்கப்போகும் இடத்தை பார்வையிட்டு வந்துவிட்டேன்.

மிக அருமையான எற்பாடுகள்..!

 

e2.jpg

ஜூப்ளி பார்க்

 

இன்று அலுவலக திட்டப்பணிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு பிற்பகல் 2 மணிக்கே சென்றுவிட்டேன்..

பல நாடுகளின் காட்சிதளங்களை(Pavilions) பார்வையிட்டுவிட்டு மாலை 5 மணிக்கு இளையராஜா கச்சேரி நடைபெறப்போகும் ஜூப்ளி பார்க்கிற்கு வந்து பார்த்தால் அப்பொழுதே பலர் கூடிவிட்டனர்.

இரவு 9 மணிக்கு நடைபெறப்போகும் நிகழ்ச்சிக்கு மாலை 5 மணிக்கே ரசிகர்கள் கூட்டமா..? வேறு வழியின்றி அங்கே, அப்பொழுதே அமர்ந்துவிட்டேன்..

4 மணிநேர காத்திருப்பிற்கு பின், இளையராஜா மேடையில் கலைஞர்களுடன் தோன்றினார்..!

அரங்கமே இசை ஒலியாலும், கரகோசத்தாலும், திரையில் ஒளி வெள்ளத்தாலும் அதிர்ந்தது..

சும்மா சொல்லக்கூடாது.. மேடையின் இசை அமைப்பு, ஒலி சாதனங்களின் துல்லியம் மிக அற்புதம்..ஒவ்வொரு 'ட்ரம் பீட்'களும் நம் நெஞ்சை தாக்கி அதிர வைத்தன.

  • இளமை இதோ இதோ..
  • ராக்கம்மா கையைத் தட்டு..
  • மடை திறந்து..
  • தண்ணித் தொட்டி தேடி வந்த..
  • ஆத்தா ஆத்தோரமா..
  • பொதுவாக எம்மனசு தங்கம்..

மேலே குறிப்பிட்ட பாடல்களுக்கு ரசிகர்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.

இளையராஜா குழுவினர் மிக அற்புதமாக பாடினர்..ஒலியால் இசையால் அக்களமே நனைந்தது.. பலநாட்டு ரசிகர்களும் ஆரவாரித்து ரசித்தனர்..

முடிவில் மேடையின் ஒலி, ஒளியமைப்பை பலரும் பாராட்டினர்..

சில பிறமொழி பாடல்களை தவிர அனைத்துமே அருமை. 3 மணிநேரம் போனதே தெரியவில்லை.

இனிய இரவாக அமைந்து, இசையில் நனைந்து, அதிகாலை வீடு வந்து சேர்ந்தேன்..!

 

e4.jpg

e5.jpg

e3.jpg

 

e6.jpg

e7.jpg

e1.jpg

 

படங்கள் உதவி: என்னுடைய ஐபோன் 13. 😍

  • Like 14
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராஜாவின் நிகழ்ச்சியை பார்ப்பதும் கேட்பதும் இன்பம் அதிலும் தரையில் அமர்ந்து புற்களை கிளறிக் கொண்டே கேட்பது பேரின்பம் .......நீங்கள் அதிஸ்டக்காரர்.......!   👍

  • Like 1
  • Thanks 1
Posted

நிகழ்ச்சியின் உத்தியோகபூர்வ live stream மினூடாக நிகழ்ச்சியின் இறுதி இரண்டு மணித்தியால நிகழ்வுகளை பார்க்க முடிந்தது. அலைபேசியின் திரையை அகண்ட தொலைக்காட்சி திரைக்கு mirror பண்ணி பார்த்தமையால் அருமையான அனுபவம் கிடைத்தது.

ஆனாலும் நேரில் பார்த்த அனுபவம் இதை விட பல மடங்கு அற்புதமாக இருந்திருக்கும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிகழ்ச்சியின் ஒரு பகுதியை… நாங்கள் நேரலையில் பார்த்தாலும்,
அந்த பிரமாண்ட மண்டபத்தையும், பார்வையாளர் பகுதியையும்…
பகல் வெளிச்சத்தில் அழகாக படம் பிடித்து காட்டி உள்ளீர்கள். 👍🏼 🙂

ராஜவன்னியன்…. அந்த நிகழ்ச்சிக்கு, ஒரு 5000 மக்கள் வந்திருப்பார்களா?
அல்லது அதற்கு மேலேயா…. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, தமிழ் சிறி said:

நிகழ்ச்சியின் ஒரு பகுதியை… நாங்கள் நேரலையில் பார்த்தாலும்,
அந்த பிரமாண்ட மண்டபத்தையும், பார்வையாளர் பகுதியையும்…
பகல் வெளிச்சத்தில் அழகாக படம் பிடித்து காட்டி உள்ளீர்கள். 👍🏼 🙂

ராஜவன்னியன்…. அந்த நிகழ்ச்சிக்கு, ஒரு 5000 மக்கள் வந்திருப்பார்களா?
அல்லது அதற்கு மேலேயா…. 

நிச்சயம் 5000க்கு மேலேயே மிக அதிகமாக இருக்கும்..!

ஜூப்ளி பார்கை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் ரசிக மக்கள் வெள்ளம் அதிகமாக இருந்தது. இதில் சிறந்த விசயம் என்னவென்றால், குறிப்பிட்ட கொள்ளளவு மக்களால் பூங்கா நிரம்பியவுடன், அரங்க பாதுகாவலர்கள் எல்லா 'கேட்'களையும் மூடிவிட்டனர். அதனால் உள்ளே ரசிர்கர்களின் நெரிசல் அதிகம் இல்லை.

கச்சேரியை ஆரம்பிக்கும் முன், மேடையில் அரபிய பெண் தொடக்கத்தில், "இவ்வளவு ரசிகர் கூட்டத்தை இந்த அரங்கம் இதுவரை சந்திக்கவே இல்லை..!" என பாராட்டினார்.

 

jubilee-park_fIcdG.jpg

"ஜூப்ளி பார்க்" எக்ஸ்போ திருவிழா ஆரம்பிக்கும் முன்..

jubilee-park_ystRi.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் இந்த நிகழ்ச்சியை பார்த்தேன்.அருமையாக இருந்தது. நீங்கள் கூறியது போல் ஒலியமைப்பு பிரமாதமாக இருந்தது. ஒளியமைப்பும் நன்றாகவே இருந்தது.

படங்களுடன் கூடிய விளக்கங்களுக்கு நன்றி ராசவன்னியர்👍

இப்படியான நிகழ்சிகளை ஒழுங்கு செய்பவர்கள் யார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்றிரவு துபை எக்ஸ்போ 2020யில் நடைபெற்ற இளையராஜா இசைக் கச்சேரியை கீழேயுள்ள இணைப்பில் HD தரத்தில் பார்த்து ரசிக்கலாம். 👌

 

https://virtualexpodubai.com/listen-watch/events/raaja#video

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, குமாரசாமி said:

நானும் இந்த நிகழ்ச்சியை பார்த்தேன்.அருமையாக இருந்தது. நீங்கள் கூறியது போல் ஒலியமைப்பு பிரமாதமாக இருந்தது. ஒளியமைப்பும் நன்றாகவே இருந்தது.

படங்களுடன் கூடிய விளக்கங்களுக்கு நன்றி ராசவன்னியர்👍

இப்படியான நிகழ்சிகளை ஒழுங்கு செய்பவர்கள் யார்?

இசைக் கச்சேரி எடுத்தவுடனேயே சூடு பிடித்து ஆட்டம், கரகோசத்துடன் செல்லும்போது திருஷ்டியாக சில இந்தி, தெலுங்கு, மல்லு பாடல்களை பாடி தொய்வை ஏற்படுத்தி கடுப்பேத்திவிட்டார். என்ன செய்வது..?விதியே என கேட்க வேண்டியதாயிற்று.

இம்முறை, துபை கச்சேரியில் பாடல்களின் தெரிவில் அவ்வளவு நேர்த்தியில்லை.

75 வருட சிங்கப்பூர் கொண்டாட்டத்தில் இளையராஜாவின் பாடல்களின் தெரிவு மிக நன்றாக, அற்புதமாக இருந்தது.

இந்நிகழச்சி துபையிலுள்ள பிரபல தமிழ் நிறுவனத்தின் சிபாரிசுடன் எக்ஸ்போ2020 நிர்வாகத்தால் ஏற்கப்பட்டு நடைபெற்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேலேயுள்ள பாடல்கள் சில வருடங்களுக்கு முன் சிங்கப்பூரில் பாடியது.. எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என ஒவ்வொன்றையும் கேட்டால் புரியும்..!

அதிகமான இசைக்கலைஞர்கள், இசைக்கருவிகள் போன்றவையுடன் சிறப்பான பாடல்கள் தெரிவும், ரசிகர்களை இருக்கையின் நுனியில் துடிப்புடன் இருக்க வைத்து, மிக சிறப்பாக மகிழ்வித்ததையும் பார்க்கலாம். 😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

நேற்று மேடையில் கச்சேரி நிறைவில், இளையராஜா மறுபடியும் துபைக்கு இசை நிகழ்ச்சி நடத்த வரும் அக்டோபரில் வருவதாகவும், அப்பொழுது அதிக நேரம் ரசிகர்களை மகிழ்விக்க முடியுமென தெரிவித்தார்.

பார்க்கலாமே..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ராசவன்னியன் said:

 

நேற்று மேடையில் கச்சேரி நிறைவில், இளையராஜா மறுபடியும் துபைக்கு இசை நிகழ்ச்சி நடத்த வரும் அக்டோபரில் வருவதாகவும், அப்பொழுது அதிக நேரம் ரசிகர்களை மகிழ்விக்க முடியுமென தெரிவித்தார்.

பார்க்கலாமே..!

 நம்ம ஊர் மாதிரி கடதாசி துண்டிலை நேயர் விருப்பத்தை எழுதி குடுக்க முடியுமா சார்? 😷
அப்பிடி ஏலுமெண்டால் குமாரசாமி சார்பிலை      "ஆத்தாடி பாவாடை காத்தாட"....:cool:

அக்டோபர் குளிருக்கு ஜாலியா இருக்கும் 😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, குமாரசாமி said:

 நம்ம ஊர் மாதிரி கடதாசி துண்டிலை நேயர் விருப்பத்தை எழுதி குடுக்க முடியுமா சார்? 😷
அப்பிடி ஏலுமெண்டால் குமாரசாமி சார்பிலை      "ஆத்தாடி பாவாடை காத்தாட"....:cool:

அக்டோபர் குளிருக்கு ஜாலியா இருக்கும் 😍

ன் சார் அவ்வளவு நாள் காத்திருக்கோணும்..?

வரும் மார்ச் 18ன் திகதி (18-03-2022), சென்னை தீவுத்திடலில் "ராக் வித் ராஜா" என்ற தலைப்பில் இளையராஜா எல்லோரையும்  "ஆடுவோம்.. பாடுவோம்" என அழைக்கிறாரே..?

நுழைவு சீட்டு, ரூ. 1000 முதல்..!

இதன் முக்கிய அனுசரணையாளர்கள், Noice & Grains  (சிங்கப்பூர் கச்சேரியை கொடுத்தவர்கள் என நினைக்கிறேன்..)

போகலாமா? 😎

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, தமிழ் சிறி said:

..ராஜவன்னியன்…. அந்த நிகழ்ச்சிக்கு, ஒரு 5000 மக்கள் வந்திருப்பார்களா?
அல்லது அதற்கு மேலேயா…. 

வெள்ளை கோடிட்ட செவ்வகத்துக்குள், நான் நிற்கிறேன்..! 😎

Untitled.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ராசவன்னியன் said:

வெள்ளை கோடிட்ட செவ்வகத்துக்குள், நான் நிற்கிறேன்..! 😎

Untitled.jpg

முதுகு பக்கத்தை காட்டினால்… நாங்கள் எப்படி கண்டு பிடிக்கிறதாம்.
என்ன நிற சட்டையுடன்…. நிற்கிறீர்கள். 🙂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ராசவன்னியன் said:

நேற்றிரவு துபை எக்ஸ்போ 2020யில் நடைபெற்ற இளையராஜா இசைக் கச்சேரியை கீழேயுள்ள இணைப்பில் HD தரத்தில் பார்த்து ரசிக்கலாம். 👌

 

https://virtualexpodubai.com/listen-watch/events/raaja#video

நன்றி ராசவன்னியன் ஐயா. பிடித்த பல பாடல்களைக் இசைஞானியின் இசையில் மீண்டும் கேட்கமுடிந்தது. 

முன்னுக்கு இருந்தவர்கள் பின்னால் இருந்தவர்கள்/நின்றவர்கள் மீது கொஞ்சம் கரிசனை காட்டியிருக்கலாம்☺️

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மண்ணிற சட்டை என்பது…. எனது ஊகம்.  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, தமிழ் சிறி said:

மண்ணிற சட்டை என்பது…. எனது ஊகம்.  😁

ஒங்க ஊர்க்காரர் சொல்லியிருப்பார் போலுள்ளதே..? 😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ராசவன்னியன் said:

ஒங்க ஊர்க்காரர் சொல்லியிருப்பார் போலுள்ளதே..? 😉

சத்தியமாக இல்லை. உங்கள் உயரத்தை வைத்து கண்டு பிடித்தேன். 😁

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, ராசவன்னியன் said:

வெள்ளை கோடிட்ட செவ்வகத்துக்குள், நான் நிற்கிறேன்..! 😎

Untitled.jpg

நானும்தான் துருவித் துளாவிப் பார்த்தேன் எல்லோருமே தலை நிறைய முடியோடு உள்ளார்களே.!🤔 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, தமிழ் சிறி said:

மண்ணிற சட்டை என்பது…. எனது ஊகம்.  😁

பின்னுக்கு கை கட்டிக்கொண்டு நிக்கிறவரோ?? 😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
15 minutes ago, குமாரசாமி said:

பின்னுக்கு கை கட்டிக்கொண்டு நிக்கிறவரோ?? 😄

சரியாக கண்டு பிடிக்கிறவர்களுக்கு….  ✈️  உக்ரேனுக்கு, 🛩️ விமான ரிக்கற் பரிசாக வழங்கப்படும். 🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, தமிழ் சிறி said:

சரியாக கண்டு பிடிக்கிறவர்களுக்கு….  ✈️  உக்ரேனுக்கு, 🛩️ விமான ரிக்கற் பரிசாக வழங்கப்படும். 🤣

 நான் போட்டியிலிருந்து வாபஸ் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, குமாரசாமி said:

 நான் போட்டியிலிருந்து வாபஸ் 🤣

சரி, சென்னை செல்ல விருப்பமா..? 🤗

  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, ராசவன்னியன் said:

சரி, சென்னை செல்ல விருப்பமா..? 🤗

எனது குடும்பத்தினர் சகிதம்  தமிழ்நாடு சென்று ஒரு மாதம் தங்கியிருந்து புராதன இடங்களை பார்க்க  திட்டமிட்டிருந்தோம். ஒன்றின் ஒன்றாக சிறிய தடைகள் வர எல்லாமே பிற்போடப்பட்டு வருகின்றது..

பார்ப்போம் நேரகாலம் சரி வர எல்லாம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் மார்ச் மாதம் நூறுவீதம் சந்தப்பமேயில்லை. 😁



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.