Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அதுவொரு பதில் கடிதம். 

நீங்கள் ஒருவருக்கு பதில்கடிதம் எழுதுவதென்றால் எப்படி எழுதுவீர்கள்?

மனதில் வன்மத்தை வளர விட்டால் ஆசிரியரிடம் கற்றது கூட ஆட்டைய போட்டது மாதிரித்தான் தெரியும்.

சரியாக சொன்னீர்கள்.. இதைத்தான் நான் மனதில் நினைத்தேன்..

யாழில் பலதிரிகளில் பலவருடங்களாக இப்படித்தான் உரையாடுகிறார்கள் உரையாடுவோம்.. யாழின் அழகே அதுதான்.. மனதில் வன்மத்துடன் பார்த்ததால் அவருக்கு அவை எல்லாம் கண்ணை மறைத்துவிட்டன..

  • Replies 57
  • Views 6.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    புட்டினும் புதுமாத்தளனும் II காலம்: புத்தாண்டு தினம் 2027 இடம்: பதுங்கு குழியாக மாறிய பாரிசின் சிறுநீர் நாற்றம் எடுக்கும் ஒரு நிலக்கீழ் இரயில் நிலையம்.   மச்சான் அமுதன், உன் க

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    உக்ரைனிலை ஒருத்தன்... ரஷ்யாவிடம் இருந்து உக்ரைனை காக்க,  தன்னை வெல்ல வைக்கச் சொல்லி...  வாக்கு வாங்கி, வென்று... சும்மா இருக்க ஏலாமல்... வாயை குடுத்து,  உக்ரைனை... சல்லி, சல்லியாக நொருக்க  வைத்த

  • Sasi_varnam
    Sasi_varnam

    ஓணாண்டியார்... உங்களோடு எனக்கென்னய்யா வன்மம்... 🙏 "வெள்ளைத்தோல் அடிமை மோகம்" என்ற தடித்த எழுத்துக்கள் வரும் பொழுது இப்படியான பதில்கள் வாஸ்தவம் தானே.  உங்களுக்கு மேற்குலக (அமெரிக்க) வெளிவிகார கொ

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பிரான்ஸ் அதிபர் மக்ரோனின் அணுகுமுறை… சரியான நகர்வாகவே தெரிகின்றது.
ஐரோப்பா…  அமெரிக்காவின் பின்னால் போவதை, நிறுத்தி…
சுய பாதையை தீர்மானிக்க வேண்டும்.
அதில்… ரஷ்யாவையும் இணைப்பதில் தவறே இல்லை.

அமெரிக்கன் வேணுமெண்டு ஜரோப்பாவில் வந்து நிண்டுகொண்டு புடினை பற்றி கெட்டவார்த்தைகள் பேசுவது சூழ்ச்சிகள் நிறைந்த திட்டமிட்ட செயல்.. இதை அவர்கள் தவறுதலாக செய்யவில்லை திட்டமிட்டுத்தான் செய்திருக்கிறார்கள்.. ஜரோப்பாவையும் ரஷ்யாவையும் கோத்துவிட அமெரிக்கா படாத பாடுபடுகிறது.. உக்கிரேனை வச்சு றைபண்ணி இப்ப ஜரோப்பாவையும் கோத்துவிடுகிறார்கள்.. கெட்டசாமான் ஒண்டு அமெரிக்கா.. உடம்பு பூரா விசம்கொண்ட கொடிய விசப்பாம்பு.. ஜரோப்பா இப்பொழுது அமெரிக்காவின் கெட்ட எண்ணம்களை புரிந்து கொள்ளதொடங்கிவிட்டதன் அறிகுறிதான் மக்ரோனின் கோபமான உரை.. அமெரிக்காவுக்கு வெள்ளை அடிக்கும் யாழ்கள உறுப்பினர்களுக்குத்தான் வெக்கமே இல்லை..

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சரியாக சொன்னீர்கள்.. இதைத்தான் நான் மனதில் நினைத்தேன்..

யாழில் பலதிரிகளில் பலவருடங்களாக இப்படித்தான் உரையாடுகிறார்கள் உரையாடுவோம்.. யாழின் அழகே அதுதான்.. மனதில் வன்மத்துடன் பார்த்ததால் அவருக்கு அவை எல்லாம் கண்ணை மறைத்துவிட்டன..

ஓணாண்டியார்... உங்களோடு எனக்கென்னய்யா வன்மம்... 🙏
"வெள்ளைத்தோல் அடிமை மோகம்" என்ற தடித்த எழுத்துக்கள் வரும் பொழுது இப்படியான பதில்கள் வாஸ்தவம் தானே. 

உங்களுக்கு மேற்குலக (அமெரிக்க) வெளிவிகார கொள்கையில்  சரி பிழை நியாயங்கள் கதைக்க வேண்டும் என்றால் தனி திறந்து அலசினால் உங்களோடு சேர்ந்து நாங்களும் கும்மி அடிக்கலாம். 
பொதுவாக இந்த யுத்தம், இதனால் ஏற்படும் மக்கள், உடைமைகள், உளவியல் அழிவுகள் பற்றி கரிசனை படும் ஒரு சராசரி மனிதனின் கருத்து.
இந்த கரிசனை ஈராக்கிலும், லிபியாவிலும், இதர நாடுகளிலும் நடக்கும் போதும் எமக்கு இருந்தது. 
அப்போதும்  நாங்கள் ஒருவரும் அமெரிக்கனுக்கு வாழ் பிடிக்க வில்லையே. இதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sasi_varnam said:

 ஓம் மச்சான்... புட்டின் ஆபிரிக்கா காட்டுக்குள்ள பிறந்த கருப்பு சொக்கத்தங்கம். என்டபடியால  நாங்கள் புலம்பெயர்ஸ் எல்லாம் அவருக்கு பின்னால அணிவகுக்கிறம். மற்றது நாங்கள் அசைலம் அடிக்கேக்க...அடிக்கும் முதல்ல...  ஓடோடி வந்து கேஸ் அக்செப்ட் பண்ணி எங்களை ஆப்பிரிக்காவில அந்த மாதிரி வாழ வச்ச மனிசன். நான் செய்யிற தொழில், அடிக்கிற கோட்டம் எல்லாம் கருவல்ஸ் புட்டின்  தந்த வரம்.  

வெள்ளைக்கு விசுவாசமாக இருப்பீர்கள் என்பதை உறுதிப்படுத்தியதற்கு மிக்க ந்ன்றி

👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, Kapithan said:

வெள்ளைக்கு விசுவாசமாக இருப்பீர்கள் என்பதை உறுதிப்படுத்தியதற்கு மிக்க ந்ன்றி

👍

உக்ரேன்காரருக்கும் வெள்ளைத்தோல் தான் பிடிக்கும். ரயில்ல இருந்து இந்தியர்களை இறக்கி விட்டது தெரியும் தானே? அதோட உக்ரேன் நாசி நாடெண்டு ஜேர்மன்காரரே சொல்ல வெளிக்கிட்டினம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இந்தியர் மட்டும்தானா ? கறுப்பர்களுக்கு  அங்கே என்ன நடக்கிறதாம் ? 

இன்று இரண்டு வீடியோக்கள் பார்த்தேன், மனம் கல்லாகிப்போனது. அவற்றை இங்கே இணைத்தால் யாழில் என்னைத் தடை செய்வார்கள். 😔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Kapithan said:

இந்தியர் மட்டும்தானா ? கறுப்பர்களுக்கு  அங்கே என்ன நடக்கிறதாம் ? 

இன்று இரண்டு வீடியோக்கள் பார்த்தேன், மனம் கல்லாகிப்போனது. அவற்றை இங்கே இணைத்தால் யாழில் என்னைத் தடை செய்வார்கள். 😔

இங்கு ஜேர்மனியில் உள்ள உள்ளூர்களில் இப்போது உக்ரேனில் இருந்து வரும் அகதிகள் விருந்தினர்கள் சிறந்தவர்களா அல்லது சிரியா மற்றும் நாடுகளில்  இருந்து வரும் அகதிகள் சிறந்தவர்களா என்றொரு விவாதம் புகைய ஆரம்பிக்கின்றது.

உண்மை முகங்கள் மெல்ல மெல்ல வெளியே வரும் காலம் அதிகமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இங்கு ஜேர்மனியில் உள்ள உள்ளூர்களில் இப்போது உக்ரேனில் இருந்து வரும் அகதிகள் விருந்தினர்கள் சிறந்தவர்களா அல்லது சிரியா மற்றும் நாடுகளில்  இருந்து வரும் அகதிகள் சிறந்தவர்களா என்றொரு விவாதம் புகைய ஆரம்பிக்கின்றது.

உண்மை முகங்கள் மெல்ல மெல்ல வெளியே வரும் காலம் அதிகமில்லை.

Hitter ஐ ரஸ்யா வென்ற கோபம்/இழிவு ஜேர்மனியர்கள் பலருக்கு இருப்பதாகக் கருதுகிறேன். எனது யூகம் சரியானதா குசாமியாரே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Kapithan said:

Hitter ஐ ரஸ்யா வென்ற கோபம்/இழிவு ஜேர்மனியர்கள் பலருக்கு இருப்பதாகக் கருதுகிறேன். எனது யூகம் சரியானதா குசாமியாரே?

நீங்கள் சொல்வது சரிதான்.இருந்தாலும் நூறு வீதமான மக்கள் அப்படியில்லை. சில நேரங்களில் அவர்களுக்கு ஒரு மனத்தாக்கம் வரும் போது சிரித்துக்கொண்டே சாதிப்பார்கள். இது பெரிய நகரங்களில் எடுபடாது.
ஜெர்மனியர்களின் சரியான நாசி குணங்களை அறிய கிழக்கு ஜேர்மனியின் குக்கிராம பக்கங்கள் போனால் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

இது பெரிய நகரங்களில் எடுபடாது.
ஜெர்மனியர்களின் சரியான நாசி குணங்களை அறிய கிழக்கு ஜேர்மனியின் குக்கிராம பக்கங்கள் போனால் பார்க்கலாம்.

நான் எப்போதும்  அந்தப்பக்கம் செல்வதாக இருந்தால்
வில்லுக்கத்தியும் பொல்லும் காரில் இருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, வாத்தியார் said:

நான் எப்போதும்  அந்தப்பக்கம் செல்வதாக இருந்தால்
வில்லுக்கத்தியும் பொல்லும் காரில் இருக்கும்

மேற்கு ஜேர்மனியர்களே பெரிதாக அந்தப்பக்கம் போக விரும்புவதில்லை.நான் பல முறை போயிருக்கின்றேன். சில நேரம் உலக அதிசயத்தை பார்ப்பது போல் பார்ப்பார்கள். இரவு நேரத்தில் அப்படியான இடங்களுக்கு போவதை தவிர்ப்பது நல்லது.
நான் இருக்கும் இடத்திலிருந்து  கிழக்கு ஜேர்மனி எல்லை அதிக தூரமில்லை. 

புட்டின் இராணுவ அதிகாரியாக வேலை செய்த இடமும் அதிக தூரமில்லை. ஒருமுறை சென்று அந்த இடத்தை பார்த்திருக்கின்றேன்.😁

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che

உங்களுடைய நகைச்சுவையில் இருக்கும் கருத்து அருமை!!

மீண்டும் கண்டது சந்தோஷம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 27/3/2022 at 21:52, வாத்தியார் said:

புட்டினை அமுக்கினால்  சண்டை நிக்குமாம்
அடுத்த மாதம் ரஸ்யாவில் புதிய ஜனாதிபதி உருவாக்கப்படுவாராம். இதைப்பற்றி உடான்ஸ் சாமியாரின் கருத்து என்னவாம் 🤣👍

வணக்கம் அண்ணா. கண்டது சந்தோசம். சாமியார் உருட்டிய உருட்டின் (ஜோசிய சோலிகளை சொல்கிறேன்) படி இதுக்கு இப்போதைக்கு வாய்பில்லை. ஆனால் என்றோ ஒருநாள் இந்த கதை இப்படித்தான் முடிய வாய்ப்பு அதிகம்.

On 30/3/2022 at 11:40, பிரபா சிதம்பரநாதன் said:

@goshan_che

உங்களுடைய நகைச்சுவையில் இருக்கும் கருத்து அருமை!!

மீண்டும் கண்டது சந்தோஷம்!

கண்டது சந்தோசம் பிரபா. ஊர் பயணம், கட்டுரை அசத்தல் ரகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் ஒரு சிறு விளக்கம்

(மட்டுப்பட்டளவிலேனும்) பன்முக கருத்துக்களை உள்வாங்கும், பிரசுரிக்கும் ஒரு களமாக யாழ் இப்போது இல்லை என்ற என் நிலைப்பாட்டினால் நான் யாழில் கருத்தாடாமல் இருப்பது தெரிந்ததே. 

அதில் மாற்றமில்லை. ஆகவே நான் இந்த திரியில் முன்னர் போல் கருத்தாடவில்லை.

இது சில யுடியூப் பதிவாளர்கள் நான் வீடியோ மட்டும் போடுவேன் என்ற நிலைப்பாடு அல்ல.

அதே போல் எந்த கள உறவையும் உதாசீனம் செய்யும் நோக்கமும் இல்லை. குசலம் விசாரித்த அனைவருக்கும் பதில் போட்டுள்ளேன். தவற விட்டிருந்தால் மன்னிக்கவும்.

கோஷான் கருத்து பரிமாறமல் இருந்தாலும் இடைக்கிடை உடான்ஸ் சாமியார் அவதரித்து கோமாளித்தனம் பண்ணுவார். 

அதற்கு நீங்கள் கருத்தெழுதி ஆதரிக்க வேண்டும் என்பது கூட இல்லை (எழுதினால் சந்தோசம்) வாசித்து, சிரித்து, சிந்தித்தாலே போதுமானது.

🙏🏾

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புட்டினும் புதுமாத்தளனும் II

காலம்: புத்தாண்டு தினம் 2027

இடம்: பதுங்கு குழியாக மாறிய பாரிசின் சிறுநீர் நாற்றம் எடுக்கும் ஒரு நிலக்கீழ் இரயில் நிலையம்.

மச்சான் அமுதன்,

உன் கடிதமும் நீ அனுப்பிய 50000 இலங்கை ரூபாயும் கிடைத்தது. அதை இங்கே மாற்றி 4999 யூரோவாகஎடுத்து கொண்டேன். உனது காலம் கருதிய உதவிக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேனோ? எப்போசெய்ய முடியுமோ? தெரியவில்லை மச்சான். 

எங்கட வெசாயில்ஸ் பக்கம் எல்லாம் சண்டைல அழிஞ்சு போச்சு மச்சான். இப்ப இஞ்ச பரிசுக்கு, எங்கடஆக்கள் இருக்கிற லாச்சப்பலுக்கு வந்திருக்கிறன். இஞ்ச ஒவ்வொரு ரோட்டிலும் 90% போல தமிழ் ஆக்கள்கடையள்தான். இப்ப பாதி எரிஞ்சும், ஏரியாமலும் இருக்கிறத பாக்க வயிறு எரியுது மச்சான்.

மச்சான் உண்ட கடிதத்தோட எங்கட பழைய பள்ளிக்கூட முன் வாங்கு நண்பன் படான்ஸ் எழுதினகடிதத்தையும் ஒரு போட்டோ கொப்பி எடுத்து வச்சிருந்தாய் மச்சான்.  இந்த மரண அவஸ்தையிலும் அதைவாசிச்சு வாய் விட்டு சிரிச்சன் மச்சான்.

அதுவும் படான்ஸ் இன்னும் மாறவே இல்லை எண்ட உன்ர கொமெண்டை வாசித்து விழுந்து விழுந்து சிரிச்சன் மச்சான். 

அவன்ர கதையள் எப்பவும் படான் கதையள் தானே மச்சான். அதானே ஆளுக்கு படான்ஸ் எண்டு பெயர்வச்சனாங்கள்.

ஆனால் அவன் நல்லவன்ரா. சும்மாவே படுத்திருந்து விட்டத்தை பார்த்து விதம் விதமா வாழ்க்கை தத்துவம்பேசுவான், இப்ப ஆரோ ஒரு பின் லாடன் அவனை பிடிச்சு நல்லா உரு ஏத்தி இருப்பான் போல கிடக்கு. வாயதிறந்தா டெத் டு அமெரிக்கா எண்டு கொண்டு திரியிறான். பாவம்.  கெதில காரை கொண்டுபோய் வெள்ளையள்மேல ஏத்துற அளவுக்கு மாறிடுவானோ எண்டும் பயமாகிடக்கு.

சரி படான்ஸ் சொன்ன விசயங்கள் பற்றி பிறகு விளக்கிறன், அதுக்கு முதல் நீ உக்ரேன் பற்றி அரைகுறைவிளக்கத்தோட சிலதை கேட்டிருந்தாய் அதை ஒருக்காய் பாப்பம்.

மச்சான் - உக்ரேனில் பெண் படையணி இருக்கெண்டு கேட்டிருந்தாய். உண்மைதான். நான் இல்லை எண்டுசொன்னானே? ஆனால் ஆண்களை போல பெருவாரியாக பெண்கள் சண்டைக்கு போகேல்ல மச்சான். கணிசமான பெண்கள் சண்டைக்கு போக பெரும்பாலன பெண்கள், குழந்தைகள் தப்பித்தான் வந்ததுகள். கனஇடங்கள்ள உக்ரேனிய ஆம்பிளையள் சண்டை எண்டதும் போடர் வரை வந்து பிள்ளை குட்டியை விட்டுட்டுதிரும்பிபோனது உண்மை மச்சான். அதே போலதான் உக்ரேன் டிரைவர் மார் உட்பட பல உக்ரேன் புலம்பெயர்ந்தவர்கள் சண்டை பிடிக்க ஊருக்கு போனதும்.

பிறகு அங்க எல்லா ஆண்களுக்கும் கட்டாய சேவை அதுதான் வர முடியாது எண்டும் சொல்லி இருந்தாய். ஓம்இதையும் நான் இல்லை எண்டு சொல்லேல்ல மச்சான். 

ஆனால் தலைவரும்தான் கட்டாயம் ஒராளாவது வீட்டுக்கு வர வேண்டும் எண்டு எங்களிட்ட கேட்டவர்தானே?

நாங்கள் நிண்டனாங்களே? நாளைக்கு சாகப்போற கிழடுகளை பாஸ்-பிணை வச்சிட்டு உச்சி எல்லேஓடியந்தனாங்கள்.

அப்படி உக்ரேன் ஆம்பிளையள் அதிகம் ஓடி வந்திருந்தால் ரஸ்யாவை தடுத்து அடிச்சிருக்க முடியாதுதானேமச்சான். அததான் சொல்லுறண்டா. இனியாவது மேலோட்டமா வாசியாமல் கொஞ்சம் ஊண்டி படி சரியே.

நான் உக்ரேனியனிட்ட எதையோ வாங்கி குடிக்க சொன்னதும் உனக்கு ரோசம் வந்திட்டு போல. ஆனால் நான்சொன்னதுதான் உண்மை மச்சான்.  உந்த ரோசம் எல்லாம் நாங்கள் ஊரில நிண்டு சிறிலங்காவிட்ட காட்டிஇருக்க வேண்டும்.

சரி இனி படான்ஸ் சொன்னதுக்கு வாறன்.

மச்சான் எமக்கு அடிச்சது எல்லாரும் சேர்ந்துதான் மச்சான். 

நேட்டோவிண்ட சட்டிலைட் படத்த பார்த்து, ரஸ்யன் விமானத்தில, உக்ரேன் விமானிகள்,  இந்தியா சீனாகொடுத்த குண்டை போட்டவங்கள்.

ஆக எமக்கு அடிக்காதவன், அடிச்சவன் எண்டு இதில் நாம் யார் பக்கமும் எடுக்க முடியாது மச்சான். 

ஆனால் 2ம் உலக யுத்தத்தில் தன்னை அழித்த அமெரிக்காவையே ஆசியாவில் தனது 1ம் நண்பன் என நம்பும்நிலைக்கு கொண்டு வந்த ஜப்பான் மாரி நாங்கள் இவங்களோட டீல் பண்ணி இருக்க வேண்டும் மச்சான்.

இப்படி உலக வெடிப்புகள் வரும் போது அதை சாதுரியமாக தமக்கு சார்பா திருப்பிற இனம்தான் வெல்லும்மச்சான்.

நாங்கள் ஊரில இருந்து ஓடி வந்து கூட்டம் கூட்டமா ரஸ்யாவிலும் பெலரோசிலும் வாழவில்லைதானே மச்சான்?

கிழக்கு ஜேர்மனி போன ஆக்கள் கூட மேற்கு ஜேர்மனிக்கு ஓடி வந்ததை அவை மறக்கலாம், நான் மறக்கேல்லமச்சான்.

ஆகவே ரஸ்யா போல ஊரில் எமது இனத்தின் அழிப்பில் மேற்க்குக்கும் பங்கு இருக்கிறது எண்டாலும், ரஸ்யாவை போல அன்றி புலம் பெயர் தேசம் எங்கும் எமது இனம் தழைக்க, நாம் வாழ்க்கையை கட்டி எழுப்ப, எமது பலத்தை ஒருங்கிணைக்க, உதவியது இந்த நாடுகளும் அவற்றின் ஜனநாயக, பல்லின, சகிப்புத்தன்மைபண்பும்தான் மச்சான். 

இதற்க்கான பிரதியுபகாரம்தான் மச்சான் நான் சொன்ன விசுவாசம். ஆனால் இது நிபந்தனை அற்ற விசுவாசமாக இருக்க தேவையில்லை மச்சான். எம் இன நலன் சார்ந்து இருக்க வேண்டும். 

இரெண்டு தரப்பும் எமக்கு கெடுதல் செய்தாலும் ஒரு தரப்பு கெடுதல் மட்டுமே செய்ய மறுதரப்புஇரெண்டையும் கலந்து செய்துள்ளது மச்சான்.

தவிரவும் உனக்கு ஒண்டு வடிவா விளங்க வேணும் மச்சான். இந்த உலகில் தார்மீகமான வெளியுறவு கொள்கை(ethical foreign policy) எண்டு ஒண்டு இல்லை மச்சான். 

மேற்கோ, ரஸ்யாவோ, சீனாவோ, இந்தியாவோ, ஈரானோ, ஏன் சின்னம் சிறு கிரிபாட்டி தீவோ, எல்லா நாடும்தன்னலமான வெளிநாட்டு கொள்கையைதான் (self interest based foreign policy) கைக்கொள்ளுது மச்சான். 

இதில் நல்லவன் கெட்டவன் யாருமில்லை மச்சான். மேற்க்கு மீது வைக்கும் எல்லா குற்றத்தையும், ரஸ்யா மீதும்வைக்கலாம். ரஸ்யா மீதுவைக்க்கும் எல்லா குற்றத்தையும் மேற்க்கு மீதும் வைக்கலாம்.

ஆகவே சும்மா விழலுக்கு நியாயம் பிளக்காமல் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்துக்கும், ஒட்டு மொத்த உலக தமிழ்இனத்திற்கும் நீண்ட, மத்திய, குறுகிய கால அடிப்படையில் யார் பக்கம் நிற்பதால் இலாபம் என மட்டும்தான்மச்சான் நாங்கள் பார்க்க வேண்டும், பார்க்க முடியும்.

இலங்கை புலம் பெயர் அழுத்தத்துக்கு பயப்படுகிறது எண்டால் அது ரஸ்யாவில இருக்கிற தமிழ் ஆக்களாலயோமச்சான்? இல்லைத்தானே?  

இப்ப இந்த உலக யுத்தத்தில ரஸ்யா வெண்டால் - நாங்கள் இனி மொஸ்கோ, விளாடிவொஸ்டொக், சென்பீட்டர்ஸ்பேக் எண்டு போய் (போகவிட்டால்) பழையபடி முதல்ல இருந்து ஆரம்பிச்சு, அங்க பரவி, பெற்றோல்செட் வாங்கி,  அங்க லோக்கல் எம்பிமார் எங்கட குரலுக்கு மதிப்பு கொடுக்கும் அளவுக்கு வளந்து வர எத்தனைபத்தாண்டுகள் பிடிக்கும் மச்சான்? அதுகுள்ள இலங்கையில பிக்குமார் எங்களுக்கு சுண்ணாம்பு தடவிமுடிச்செல்லே இருப்பாங்கள்.

2009 க்கு பிறகு புலம் பெயர் தமிழர் இந்த இனத்தின் பெரிய பலம் எண்டால் - அந்த பலம் தங்கி இருப்பதுஉலகில் நேட்டோ/ மேற்கு மேலாண்மை செய்யும் வரைக்கும்தான் மச்சான்.

இதை விளங்கி கொண்டால் நாம் எந்த பக்கம் நிண்டிருக்க வேண்டும் என்பதை கண்ணை மூடி கொண்டுசொல்லி இருக்கலாம்.

அடுத்து மனிதாபிமானம் பற்றி. மச்சான் உண்மையை சொல்லுறன். ஒரு ஏதிலி தமிழனா நான் செய்ய கூடியதுஇன்னொரு ஏதிலிக்கு அனுதாபப்படுவது மட்டும்தான் மச்சான்.

அது உக்ரேனிய ஏதிலியா இருந்தாலும், டொன்பாசில் இருக்கு ரஸ்ய வம்சாவழி ஏதிலியா இருந்தாலும், ரெயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட இந்திய, கறுப்பின ஏதிலியா இருந்தாலும் அத்தனை பேருக்கும்இரக்கப்படுவதில்,  தப்பு ஒண்டும் இல்லைத்தானே மச்சான்.

ஏதோ எங்களில ரஸ்ய, உக்ரேனிய ரத்தம் ஓடுமாப்போல சில தமிழ் ஆக்கள் ஏன் குத்தி முறியினமோ தெரியாதுமச்சான்.

அரசியலுக்கு சம்பந்தமில்லாத மனிதர்கள் எங்கே துன்பப்பட்டாலும் அதை வெளிகொணரும், அனுதாபப்படும்குறைந்த பட்ச மனிததன்மை கூட எம்மில் சிலருக்கு இல்லை மச்சான். அதை விசிலடிச்சு ஸ்கோர் கேட்டுகொண்டாடியது எல்லாம் வேற லெவல் மச்சான்.

வடிவா கவனிச்சு பார் மச்சான், இப்படி கொண்டாடிய தமிழர்கள் பலர் அநேகம் இலங்கை ஆமி கொக்கு சுடுறதுவக்கோட திரிஞ்ச 85 காலத்துக்கு முதல் ஊரை விட்டு கிளம்பின ஆக்கள்தான். 

அவையள பொறுத்த மட்டில் இது Sony PS 5 இல் அவையளின் பேரப்பிள்ளையள் விளையாடும் Mortal Kombat போல இன்னொரு கேம்.

பதுங்கு குழிக்குள் படுத்திருந்த, மிக் வீசிய குண்டில் உயிரோடு மணலுக்குள் புதைந்து போன நண்பனைவெறும் கையால் கிளறி எடுக்க முனைந்த, நவாலி தேவாலய, செஞ்சோலை சதைகளை கைகளால் கூட்டிஅள்ளிய எந்த தமிழனுக்கும் அதே கொடுமை இன்னொருவனுக்கு நடக்கும் போது ரசித்து விசிலடிக்க மனம்வராது மச்சான். அது ரஸ்யனோ, உக்ரேனியனோ.

கடசியா இவன் படான்ஸ் சொன்ன வெள்ளைகாரனுக்கு சூ (சப்பாத்து) துடைக்கிற விசயம் பற்றி.  

மச்சான் ஊரில சொந்த துவக்கை துடைச்சு ஆம்பிளையா, வீரமா, கெத்தா வாழ விருப்பம் இல்லாமல்வெள்ளைகாரன்ர சூ துடைச்சாவது உயிரோட வாழ்ந்தால் போதும் எண்டு ஓடி வந்த ஆள்கள்தானே உடான்சும், படான்சும்? இப்ப திடீரெண்டு அது கசக்குதோ?

நாங்கள் படிக்க, உழைக்க, கார் வாங்க, வீடு வாங்க, பிள்ளை பெற, நோய் வாய்பட்டால் மருந்து தர, இலவசமாக உலகில் முதலாவாதாக வக்சீன் தர, வாங்கிய வீட்டை வாடகைக்கு விட்டுட்டு ஊரில் போய் கும்மிஅடிக்க - இதெல்லாம் செய்யயுறதுக்காக வெள்ளைகாரனின் சூ துடைக்கும் போது எமக்கு உறைக்கவேஇல்லை மச்சான்.

ஆனால் சண்டை எண்டோனதான் மச்சான் நாங்கள் இதுவரை துடைத்து கொண்டிருந்தது வெள்ளைகாரன் சூஎன்று நியாபகம் வருகுது எங்களுக்கு.

அப்ப கூட இன்னொரு வெள்ளைகாரனுக்கு சூ துடைப்பதில்தான் எமக்கு ஆர்வம் மச்சான். 

இதுதான் மச்சான் எங்கட புலம் பெயர் தமிழ் இனம்.

தங்களுக்கு ஒரு நியாயம் மற்றவைக்கு ஒரு நியாயம். வாய்க்கு வசதியா புரட்டி புரட்டி கதமட்டும் நல்லா வரும்.

இப்ப சொல்லு உக்ரேனியனியனிடம் இளனி வாங்கி குடியுங்கோ எண்டு நான் சொன்னது சரிதானே மச்சான்.

சரி மச்சான். நாளை மறுநாள் பிரான்ஸ் அகதியளை ஏத்தி கொண்டு ஒரு கப்பல் மார்சேயில் இருந்துசோமாலியா போகுதாம். பாப்பம் இடம் கிடைத்தால் சோமாலியாவில் இருந்து கடிதம் போடுறன்.

நட்புடன்,

அன்பு நண்பன் உடான்ஸ் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
59 minutes ago, goshan_che said:

அனைவருக்கும் ஒரு சிறு விளக்கம்

(மட்டுப்பட்டளவிலேனும்) பன்முக கருத்துக்களை உள்வாங்கும், பிரசுரிக்கும் ஒரு களமாக யாழ் இப்போது இல்லை என்ற என் நிலைப்பாட்டினால் நான் யாழில் கருத்தாடாமல் இருப்பது தெரிந்ததே. 

 இந்த உலகு ஒரு பூமிபந்து. அதில் பல நில புலங்கள் நாடுகள். பல இனங்கள்.பல  நிறங்கள்.பல மொழிகள்.பல சமயங்கள்.பல கால நிலைகள்.
அங்கே...
ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டிற்கேற்ற சட்ட திட்டங்கள்..
ஒவ்வொரு மனித இனத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள்...
ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு தொனிகள்......
ஒவ்வொரு சமயங்களுக்கும் ஒவ்வொரு தனித்துவங்கள்
ஒவ்வொரு காலநிலைக்கும் ஏற்ற வீடுகள் உடைகள் என இப்படியே தொடரும்.....

இது யாழ்களம்.😁

நிற்க....
முன்னர் யாழ்களம் எப்படியிருந்தது? 🤣
அன்றிருந்த உறவுகள் இன்று எங்கே?😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

வணக்கம் அண்ணை. கண்டது சந்தோசம்.

(நோயும் சொல்லி மருந்தும் சொல்வது போல் பத்தோடுபதின்னொன்றாக இதற்கும் பதிலை சொல்லி விடுங்கோ🤣🙏🏾). 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

இப்ப சொல்லு உக்ரேனியனியனிடம் இளனி வாங்கி குடியுங்கோ எண்டு நான் சொன்னது சரிதானே மச்சான்.

அன்புள்ள  மச்சான், நீ....  
உக்கிரேன் காரன்ரை... 🍹 இளநியை வாங்கி  குடிச்சாய் எண்டால்,
கோம்பை... சூப்ப  விட்டுடுவாங்கள். 😂

புட்டின்ரை.. இளநியை, வாங்கிக் குடி. 👍
தன்னுடைய நாட்டை  காக்கும், 💪 வீரமாவது.. வரும்  மச்சான். 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

வணக்கம் அண்ணை. கண்டது சந்தோசம்.

(நோயும் சொல்லி மருந்தும் சொல்வது போல் பத்தோடுபதின்னொன்றாக இதற்கும் பதிலை சொல்லி விடுங்கோ🤣🙏🏾). 

நல்லாய்த்தான் சுட்டுப்போட்டுது போல....😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அன்புள்ள  மச்சான், நீ....  
உக்கிரேன் காரன்ரை... 🍹 இளநியை வாங்கி  குடிச்சாய் எண்டால்,
கோம்பை... சூப்ப  விட்டுடுவாங்கள். 😂

புட்டின்ரை.. இளநியை, வாங்கிக் குடி. 👍
தன்னுடைய நாட்டை  காக்கும், 💪 வீரமாவது.. வரும்  மச்சான். 🤣

 🤣 ஆசை மச்சான், உடான்ஸ் சாமியாரின் அதி நவீன, கண்டம் விட்டு கண்டம் பாயும் மல்டி பரல் அணு ஏவுகணை உள்ள கேந்திர முக்கியதுவம் வாய்ந்த பகுதிக்கு கண்ணிவெடி வைப்பதாக மிரட்டியதை உடான்ஸ் சாமியார் அவரின் பக்தை கமலா ஹரிசிடம் போட்டு கொடுத்து விட்டார் மச்சான். இனி உங்களுக்கு சூப்பின கோம்பையும் சந்தேகம்தான்🤣

2 hours ago, குமாரசாமி said:

நல்லாய்த்தான் சுட்டுப்போட்டுது போல....😂

🤣 ப்ரோ, பவள்ளோ ஹாஸ் நோ சூடு நோ சொரணை ப்ரோ 🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

புட்டினும் புதுமாத்தளனும் II

காலம்: புத்தாண்டு தினம் 2027

இடம்: பதுங்கு குழியாக மாறிய பாரிசின் சிறுநீர் நாற்றம் எடுக்கும் ஒரு நிலக்கீழ் இரயில் நிலையம்.

மச்சான் அமுதன்,

உன் கடிதமும் நீ அனுப்பிய 50000 இலங்கை ரூபாயும் கிடைத்தது. அதை இங்கே மாற்றி 4999 யூரோவாகஎடுத்து கொண்டேன். உனது காலம் கருதிய உதவிக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேனோ? எப்போசெய்ய முடியுமோ? தெரியவில்லை மச்சான். 

எங்கட வெசாயில்ஸ் பக்கம் எல்லாம் சண்டைல அழிஞ்சு போச்சு மச்சான். இப்ப இஞ்ச பரிசுக்கு, எங்கடஆக்கள் இருக்கிற லாச்சப்பலுக்கு வந்திருக்கிறன். இஞ்ச ஒவ்வொரு ரோட்டிலும் 90% போல தமிழ் ஆக்கள்கடையள்தான். இப்ப பாதி எரிஞ்சும், ஏரியாமலும் இருக்கிறத பாக்க வயிறு எரியுது மச்சான்.

மச்சான் உண்ட கடிதத்தோட எங்கட பழைய பள்ளிக்கூட முன் வாங்கு நண்பன் படான்ஸ் எழுதினகடிதத்தையும் ஒரு போட்டோ கொப்பி எடுத்து வச்சிருந்தாய் மச்சான்.  இந்த மரண அவஸ்தையிலும் அதைவாசிச்சு வாய் விட்டு சிரிச்சன் மச்சான்.

அதுவும் படான்ஸ் இன்னும் மாறவே இல்லை எண்ட உன்ர கொமெண்டை வாசித்து விழுந்து விழுந்து சிரிச்சன் மச்சான். 

அவன்ர கதையள் எப்பவும் படான் கதையள் தானே மச்சான். அதானே ஆளுக்கு படான்ஸ் எண்டு பெயர்வச்சனாங்கள்.

ஆனால் அவன் நல்லவன்ரா. சும்மாவே படுத்திருந்து விட்டத்தை பார்த்து விதம் விதமா வாழ்க்கை தத்துவம்பேசுவான், இப்ப ஆரோ ஒரு பின் லாடன் அவனை பிடிச்சு நல்லா உரு ஏத்தி இருப்பான் போல கிடக்கு. வாயதிறந்தா டெத் டு அமெரிக்கா எண்டு கொண்டு திரியிறான். பாவம்.  கெதில காரை கொண்டுபோய் வெள்ளையள்மேல ஏத்துற அளவுக்கு மாறிடுவானோ எண்டும் பயமாகிடக்கு.

சரி படான்ஸ் சொன்ன விசயங்கள் பற்றி பிறகு விளக்கிறன், அதுக்கு முதல் நீ உக்ரேன் பற்றி அரைகுறைவிளக்கத்தோட சிலதை கேட்டிருந்தாய் அதை ஒருக்காய் பாப்பம்.

மச்சான் - உக்ரேனில் பெண் படையணி இருக்கெண்டு கேட்டிருந்தாய். உண்மைதான். நான் இல்லை எண்டுசொன்னானே? ஆனால் ஆண்களை போல பெருவாரியாக பெண்கள் சண்டைக்கு போகேல்ல மச்சான். கணிசமான பெண்கள் சண்டைக்கு போக பெரும்பாலன பெண்கள், குழந்தைகள் தப்பித்தான் வந்ததுகள். கனஇடங்கள்ள உக்ரேனிய ஆம்பிளையள் சண்டை எண்டதும் போடர் வரை வந்து பிள்ளை குட்டியை விட்டுட்டுதிரும்பிபோனது உண்மை மச்சான். அதே போலதான் உக்ரேன் டிரைவர் மார் உட்பட பல உக்ரேன் புலம்பெயர்ந்தவர்கள் சண்டை பிடிக்க ஊருக்கு போனதும்.

பிறகு அங்க எல்லா ஆண்களுக்கும் கட்டாய சேவை அதுதான் வர முடியாது எண்டும் சொல்லி இருந்தாய். ஓம்இதையும் நான் இல்லை எண்டு சொல்லேல்ல மச்சான். 

ஆனால் தலைவரும்தான் கட்டாயம் ஒராளாவது வீட்டுக்கு வர வேண்டும் எண்டு எங்களிட்ட கேட்டவர்தானே?

நாங்கள் நிண்டனாங்களே? நாளைக்கு சாகப்போற கிழடுகளை பாஸ்-பிணை வச்சிட்டு உச்சி எல்லேஓடியந்தனாங்கள்.

அப்படி உக்ரேன் ஆம்பிளையள் அதிகம் ஓடி வந்திருந்தால் ரஸ்யாவை தடுத்து அடிச்சிருக்க முடியாதுதானேமச்சான். அததான் சொல்லுறண்டா. இனியாவது மேலோட்டமா வாசியாமல் கொஞ்சம் ஊண்டி படி சரியே.

நான் உக்ரேனியனிட்ட எதையோ வாங்கி குடிக்க சொன்னதும் உனக்கு ரோசம் வந்திட்டு போல. ஆனால் நான்சொன்னதுதான் உண்மை மச்சான்.  உந்த ரோசம் எல்லாம் நாங்கள் ஊரில நிண்டு சிறிலங்காவிட்ட காட்டிஇருக்க வேண்டும்.

சரி இனி படான்ஸ் சொன்னதுக்கு வாறன்.

மச்சான் எமக்கு அடிச்சது எல்லாரும் சேர்ந்துதான் மச்சான். 

நேட்டோவிண்ட சட்டிலைட் படத்த பார்த்து, ரஸ்யன் விமானத்தில, உக்ரேன் விமானிகள்,  இந்தியா சீனாகொடுத்த குண்டை போட்டவங்கள்.

ஆக எமக்கு அடிக்காதவன், அடிச்சவன் எண்டு இதில் நாம் யார் பக்கமும் எடுக்க முடியாது மச்சான். 

ஆனால் 2ம் உலக யுத்தத்தில் தன்னை அழித்த அமெரிக்காவையே ஆசியாவில் தனது 1ம் நண்பன் என நம்பும்நிலைக்கு கொண்டு வந்த ஜப்பான் மாரி நாங்கள் இவங்களோட டீல் பண்ணி இருக்க வேண்டும் மச்சான்.

இப்படி உலக வெடிப்புகள் வரும் போது அதை சாதுரியமாக தமக்கு சார்பா திருப்பிற இனம்தான் வெல்லும்மச்சான்.

நாங்கள் ஊரில இருந்து ஓடி வந்து கூட்டம் கூட்டமா ரஸ்யாவிலும் பெலரோசிலும் வாழவில்லைதானே மச்சான்?

கிழக்கு ஜேர்மனி போன ஆக்கள் கூட மேற்கு ஜேர்மனிக்கு ஓடி வந்ததை அவை மறக்கலாம், நான் மறக்கேல்லமச்சான்.

ஆகவே ரஸ்யா போல ஊரில் எமது இனத்தின் அழிப்பில் மேற்க்குக்கும் பங்கு இருக்கிறது எண்டாலும், ரஸ்யாவை போல அன்றி புலம் பெயர் தேசம் எங்கும் எமது இனம் தழைக்க, நாம் வாழ்க்கையை கட்டி எழுப்ப, எமது பலத்தை ஒருங்கிணைக்க, உதவியது இந்த நாடுகளும் அவற்றின் ஜனநாயக, பல்லின, சகிப்புத்தன்மைபண்பும்தான் மச்சான். 

இதற்க்கான பிரதியுபகாரம்தான் மச்சான் நான் சொன்ன விசுவாசம். ஆனால் இது நிபந்தனை அற்ற விசுவாசமாக இருக்க தேவையில்லை மச்சான். எம் இன நலன் சார்ந்து இருக்க வேண்டும். 

இரெண்டு தரப்பும் எமக்கு கெடுதல் செய்தாலும் ஒரு தரப்பு கெடுதல் மட்டுமே செய்ய மறுதரப்புஇரெண்டையும் கலந்து செய்துள்ளது மச்சான்.

தவிரவும் உனக்கு ஒண்டு வடிவா விளங்க வேணும் மச்சான். இந்த உலகில் தார்மீகமான வெளியுறவு கொள்கை(ethical foreign policy) எண்டு ஒண்டு இல்லை மச்சான். 

மேற்கோ, ரஸ்யாவோ, சீனாவோ, இந்தியாவோ, ஈரானோ, ஏன் சின்னம் சிறு கிரிபாட்டி தீவோ, எல்லா நாடும்தன்னலமான வெளிநாட்டு கொள்கையைதான் (self interest based foreign policy) கைக்கொள்ளுது மச்சான். 

இதில் நல்லவன் கெட்டவன் யாருமில்லை மச்சான். மேற்க்கு மீது வைக்கும் எல்லா குற்றத்தையும், ரஸ்யா மீதும்வைக்கலாம். ரஸ்யா மீதுவைக்க்கும் எல்லா குற்றத்தையும் மேற்க்கு மீதும் வைக்கலாம்.

ஆகவே சும்மா விழலுக்கு நியாயம் பிளக்காமல் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்துக்கும், ஒட்டு மொத்த உலக தமிழ்இனத்திற்கும் நீண்ட, மத்திய, குறுகிய கால அடிப்படையில் யார் பக்கம் நிற்பதால் இலாபம் என மட்டும்தான்மச்சான் நாங்கள் பார்க்க வேண்டும், பார்க்க முடியும்.

இலங்கை புலம் பெயர் அழுத்தத்துக்கு பயப்படுகிறது எண்டால் அது ரஸ்யாவில இருக்கிற தமிழ் ஆக்களாலயோமச்சான்? இல்லைத்தானே?  

இப்ப இந்த உலக யுத்தத்தில ரஸ்யா வெண்டால் - நாங்கள் இனி மொஸ்கோ, விளாடிவொஸ்டொக், சென்பீட்டர்ஸ்பேக் எண்டு போய் (போகவிட்டால்) பழையபடி முதல்ல இருந்து ஆரம்பிச்சு, அங்க பரவி, பெற்றோல்செட் வாங்கி,  அங்க லோக்கல் எம்பிமார் எங்கட குரலுக்கு மதிப்பு கொடுக்கும் அளவுக்கு வளந்து வர எத்தனைபத்தாண்டுகள் பிடிக்கும் மச்சான்? அதுகுள்ள இலங்கையில பிக்குமார் எங்களுக்கு சுண்ணாம்பு தடவிமுடிச்செல்லே இருப்பாங்கள்.

2009 க்கு பிறகு புலம் பெயர் தமிழர் இந்த இனத்தின் பெரிய பலம் எண்டால் - அந்த பலம் தங்கி இருப்பதுஉலகில் நேட்டோ/ மேற்கு மேலாண்மை செய்யும் வரைக்கும்தான் மச்சான்.

இதை விளங்கி கொண்டால் நாம் எந்த பக்கம் நிண்டிருக்க வேண்டும் என்பதை கண்ணை மூடி கொண்டுசொல்லி இருக்கலாம்.

அடுத்து மனிதாபிமானம் பற்றி. மச்சான் உண்மையை சொல்லுறன். ஒரு ஏதிலி தமிழனா நான் செய்ய கூடியதுஇன்னொரு ஏதிலிக்கு அனுதாபப்படுவது மட்டும்தான் மச்சான்.

அது உக்ரேனிய ஏதிலியா இருந்தாலும், டொன்பாசில் இருக்கு ரஸ்ய வம்சாவழி ஏதிலியா இருந்தாலும், ரெயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட இந்திய, கறுப்பின ஏதிலியா இருந்தாலும் அத்தனை பேருக்கும்இரக்கப்படுவதில்,  தப்பு ஒண்டும் இல்லைத்தானே மச்சான்.

ஏதோ எங்களில ரஸ்ய, உக்ரேனிய ரத்தம் ஓடுமாப்போல சில தமிழ் ஆக்கள் ஏன் குத்தி முறியினமோ தெரியாதுமச்சான்.

அரசியலுக்கு சம்பந்தமில்லாத மனிதர்கள் எங்கே துன்பப்பட்டாலும் அதை வெளிகொணரும், அனுதாபப்படும்குறைந்த பட்ச மனிததன்மை கூட எம்மில் சிலருக்கு இல்லை மச்சான். அதை விசிலடிச்சு ஸ்கோர் கேட்டுகொண்டாடியது எல்லாம் வேற லெவல் மச்சான்.

வடிவா கவனிச்சு பார் மச்சான், இப்படி கொண்டாடிய தமிழர்கள் பலர் அநேகம் இலங்கை ஆமி கொக்கு சுடுறதுவக்கோட திரிஞ்ச 85 காலத்துக்கு முதல் ஊரை விட்டு கிளம்பின ஆக்கள்தான். 

அவையள பொறுத்த மட்டில் இது Sony PS 5 இல் அவையளின் பேரப்பிள்ளையள் விளையாடும் Mortal Kombat போல இன்னொரு கேம்.

பதுங்கு குழிக்குள் படுத்திருந்த, மிக் வீசிய குண்டில் உயிரோடு மணலுக்குள் புதைந்து போன நண்பனைவெறும் கையால் கிளறி எடுக்க முனைந்த, நவாலி தேவாலய, செஞ்சோலை சதைகளை கைகளால் கூட்டிஅள்ளிய எந்த தமிழனுக்கும் அதே கொடுமை இன்னொருவனுக்கு நடக்கும் போது ரசித்து விசிலடிக்க மனம்வராது மச்சான். அது ரஸ்யனோ, உக்ரேனியனோ.

கடசியா இவன் படான்ஸ் சொன்ன வெள்ளைகாரனுக்கு சூ (சப்பாத்து) துடைக்கிற விசயம் பற்றி.  

மச்சான் ஊரில சொந்த துவக்கை துடைச்சு ஆம்பிளையா, வீரமா, கெத்தா வாழ விருப்பம் இல்லாமல்வெள்ளைகாரன்ர சூ துடைச்சாவது உயிரோட வாழ்ந்தால் போதும் எண்டு ஓடி வந்த ஆள்கள்தானே உடான்சும், படான்சும்? இப்ப திடீரெண்டு அது கசக்குதோ?

நாங்கள் படிக்க, உழைக்க, கார் வாங்க, வீடு வாங்க, பிள்ளை பெற, நோய் வாய்பட்டால் மருந்து தர, இலவசமாக உலகில் முதலாவாதாக வக்சீன் தர, வாங்கிய வீட்டை வாடகைக்கு விட்டுட்டு ஊரில் போய் கும்மிஅடிக்க - இதெல்லாம் செய்யயுறதுக்காக வெள்ளைகாரனின் சூ துடைக்கும் போது எமக்கு உறைக்கவேஇல்லை மச்சான்.

ஆனால் சண்டை எண்டோனதான் மச்சான் நாங்கள் இதுவரை துடைத்து கொண்டிருந்தது வெள்ளைகாரன் சூஎன்று நியாபகம் வருகுது எங்களுக்கு.

அப்ப கூட இன்னொரு வெள்ளைகாரனுக்கு சூ துடைப்பதில்தான் எமக்கு ஆர்வம் மச்சான். 

இதுதான் மச்சான் எங்கட புலம் பெயர் தமிழ் இனம்.

தங்களுக்கு ஒரு நியாயம் மற்றவைக்கு ஒரு நியாயம். வாய்க்கு வசதியா புரட்டி புரட்டி கதமட்டும் நல்லா வரும்.

இப்ப சொல்லு உக்ரேனியனியனிடம் இளனி வாங்கி குடியுங்கோ எண்டு நான் சொன்னது சரிதானே மச்சான்.

சரி மச்சான். நாளை மறுநாள் பிரான்ஸ் அகதியளை ஏத்தி கொண்டு ஒரு கப்பல் மார்சேயில் இருந்துசோமாலியா போகுதாம். பாப்பம் இடம் கிடைத்தால் சோமாலியாவில் இருந்து கடிதம் போடுறன்.

நட்புடன்,

அன்பு நண்பன் உடான்ஸ் 

உடான்ஸ்  ஜீ ... நகைச்சுவையாக கூட யதார்த்தங்கள், உண்மைகளை நெத்தியடியாக உறைக்கச்சொல்லலாம் என்ற வித்தை உங்களிடம் இருந்து கற்கவேண்டும்.
இங்கே கொஞ்ச கருத்துக்கள் சொல்லப்போய் நானும் இப்போ தமிழர் விரோத,  வெள்ளைத்தோல் மோக,  சூ நக்கி, போன்ற "இன்ஸ்டன்ட் முத்திரைகளோடு" உலா வருகிறேன். 
மீண்டும் உங்களை காண்பதில் மகிழ்ச்சி. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sasi_varnam said:

உடான்ஸ்  ஜீ ... நகைச்சுவையாக கூட யதார்த்தங்கள், உண்மைகளை நெத்தியடியாக உறைக்கச்சொல்லலாம் என்ற வித்தை உங்களிடம் இருந்து கற்கவேண்டும்.
இங்கே கொஞ்ச கருத்துக்கள் சொல்லப்போய் நானும் இப்போ தமிழர் விரோத,  வெள்ளைத்தோல் மோக,  சூ நக்கி, போன்ற "இன்ஸ்டன்ட் முத்திரைகளோடு" உலா வருகிறேன். 
மீண்டும் உங்களை காண்பதில் மகிழ்ச்சி. 

சசி வர்ணம்,
நாலு பெயர் ஏற்கனவே வந்துவிட்டது, ஆகவே பயப்பிடாமல் தொடர்ந்து கருத்து சொல்லவும். இன்னும் மூன்று நான்கு புதுப்பெயர் கிடைக்கலாம், பின்னால் படித்த பட்டம் மாதிரி பெருமையாக போட்டுக்கொள்ளலாம். ஒரு படத்தில் ரமேஷ் கண்ணா "அந்த கஞ்சா கேஸையும் இவன் தலையில் போடுங்கடா" என்று சொன்ன மாதிரி பெயர் சூட்டு விழா நடைபெறுகிறது.  வெள்ளைகளுக்கு சூ துடைக்கும் வேலை எப்பிடி போகிறது? நான் பழகிக்கொண்டு இருக்கிறேன்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, goshan_che said:

🤣 ப்ரோ, பவள்ளோ ஹாஸ் நோ சூடு நோ சொரணை ப்ரோ 🤣

உதே பிரச்சனைதான் எனக்கும்...😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Sasi_varnam said:

உடான்ஸ்  ஜீ ... நகைச்சுவையாக கூட யதார்த்தங்கள், உண்மைகளை நெத்தியடியாக உறைக்கச்சொல்லலாம் என்ற வித்தை உங்களிடம் இருந்து கற்கவேண்டும்.
இங்கே கொஞ்ச கருத்துக்கள் சொல்லப்போய் நானும் இப்போ தமிழர் விரோத,  வெள்ளைத்தோல் மோக,  சூ நக்கி, போன்ற "இன்ஸ்டன்ட் முத்திரைகளோடு" உலா வருகிறேன். 
மீண்டும் உங்களை காண்பதில் மகிழ்ச்சி. 

உங்களை காண்பதும் சந்தோசம் சசி.

தாமும் இதர பக்தர்களும் சோதனைக்கு ஆளானதை கண்டுதான் மகனே உடான்ஸ் சாமியார் இப்பூவுலகில் மீள அவதரிக்கும் முடிவை எடுக்கும் படி ஆகிற்று. 

இப்போதெல்லாம் home student, international student fee எண்டு ஒரு சின்ன நாட்டை வாங்கும் விலையில் பட்டங்கள் விலை போகையில் யாழில் அண்ணைமார் மனமுவந்து இலவசமாக தரும் பட்டங்களை மறுத்தல் ஆகாது மகனே🤣.

2 hours ago, நீர்வேலியான் said:

சசி வர்ணம்,
நாலு பெயர் ஏற்கனவே வந்துவிட்டது, ஆகவே பயப்பிடாமல் தொடர்ந்து கருத்து சொல்லவும். இன்னும் மூன்று நான்கு புதுப்பெயர் கிடைக்கலாம், பின்னால் படித்த பட்டம் மாதிரி பெருமையாக போட்டுக்கொள்ளலாம். ஒரு படத்தில் ரமேஷ் கண்ணா "அந்த கஞ்சா கேஸையும் இவன் தலையில் போடுங்கடா" என்று சொன்ன மாதிரி பெயர் சூட்டு விழா நடைபெறுகிறது.  வெள்ளைகளுக்கு சூ துடைக்கும் வேலை எப்பிடி போகிறது? நான் பழகிக்கொண்டு இருக்கிறேன்.  

இன்னொரு படத்தில் கருணால் சொல்லுவார் “****துறையில் உள்பாவாடை காணாமல் போனாலும் என்னை பிடிச்சு உள்ள போடுறார் இந்த ஏட்டையா” என்று. சேம் ஸ்டோரி🤣.

வேறு ஒண்டும் இல்லை, முன்னர் எண்டா ஜஸ்டீனோட, துல்பென்னோட, கோசானோட தனகலாம். அவையள் இல்லை எண்டால் வாய் நம நமக்கும் தானே, அப்ப அடுத்த வட்டத்தில் இருக்கும் அப்பாவியள பிடிச்சு கடிச்சு துப்புறது🤣.

நீங்களும் போனால் - சமையல் குறிப்பு எழுதுறவை கதி அதோ கதிதான்🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உதே பிரச்சனைதான் எனக்கும்...😁

🤣 சேம் பிளட்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.