Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏஐன்சிக்காரன் ஏமாத்திட்டான் Song to listen...!

Featured Replies

இது எங்கள் தாயகத்தைவிட்டு வெளிநாடு செல்ல ஏஐன்சிக்காரரிடம் காத்திருந்து, பின் ஏமாந்து போனவர்களுக்காகவும், இன்னும் வெளிநாடு வரமுடியாது. இலங்கை முழுவதும் அலைந்து, மனம் உடைந்து திரியும் உறவுகளுக்காக... என்ன? யாழ்கள உறவுகளே உங்களில்கூட எத்தனை பேர் இப்படிக் கஸ்டப்பட்டு வெளிநாடு வந்திருப்பீர்கள். அந்தக் காலத்தை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள் கண்களில் கண்ணீர் வழியலாம்.. உங்கள் மனதை தலாட்ட இப்பாடல்

காதல் மொழி இறுவட்டில் இருந்து வரும் ஐந்தாவது பாடல்...கேட்டு மகிழுங்கள்.

http://vaseeharan.blogspot.com/ -please click here to listen...

கருத்தைச் சொல்லுங்கள்.:lol:

பல்லவி

ஏஐன்சிக்காரன் ஏமாத்திட்டான்- என்

கதிர்காம முருகன் காப்பாத்திட்டான்

அப்பாவின் காசு காற்றோடு போச்சு

அம்மாவின் தாலி அடகுக்கு போச்சு

வெளிநாடு போக ஆசைப்பட்டேன்

அதனால தானே அவதிப்பட்டேன்

சரணம் 1

வேர்வை சிந்தி வேலை செய்து சீட்டுக்கட்டி

சேர்த்து வைத்த காசு - எங்களோட காசு...

லண்டன் யேர்மன் சுவிஸ் பிரான்சில் பனிக்குளிரில்

வேலை செய்த காசு - அண்ணனோட காசு

சுத்திப் போட்டான் ஐயோ சுத்திப் போட்டான்

நடுத் தெருவில நிக்கறேனே முருகா

அதிகாரமா ஒய்யாரமா..

வெளிநாட்டு கார்ல போறான் முருகா

கனடாவில் குடியேற ஆசைப்பட்டேன்

கதிர்காமம் வந்துப்புட்டேன்

ஒடபெல்லாம் நகைபோட ஆசைப்பட்டேன்

ஒட்டாண்டி ஆகிப்புட்டேன்

சரணம் 2

கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு கம்பீரமா

உலா வர்ரான் பாரு - கொடுமைய பாரு

கந்தல் துணி கட்டி நிற்கும் என் நிலைய

கேக்கிறது யாரு கந்தா கூறு

புத்தி கெட்டு சக்தி கெட்டு

நித்தமும் நான் வாடுறேனே குமரா...

உன் பார்வை பட்டு தட்டு கெட்ட

என் பித்தம் என்று தெளியுமோ குமரா...

பழனி ஏறி மொட்டை போட

ஆசைப்பட்டேன் ஏறாம போட்டுக்கிட்டேன்

தங்கவேல் உனக்கு வைக்க நேந்துகிட்டேன்

நொந்து நூலகிப்புட்டேன்.

பாடல்: வசீகரன்

குரல்: வி.எஸ்.உதயா

இசை: வி.எஸ்.உதயா

எண்: 05

ஏட்டில்:

இசைத்தொகுப்பு: காதல் மொழி

பாட்டு அந்தமாதிரி இருக்கு... எழும்பி ஆடவேணும் போல இருக்கு... அதால இந்தப்படத்த இணைச்சு இருக்கிறன். படத்தில் ஆடுவது நானல்ல :lol: இணையத்தில் சுட்டது. இத கேட்க தெனாலியில் கமலகாசன் படிப்பது போல் இருக்கு. :P

nakeddance.gif

எத்தனையே இளைஞர்கள் பாவம் ஏமாந்து இன்று செய்வதறியாமல் தவிக்கின்றார்கள். எனது நண்பர் ஒருவரும் அவனுடைய கடவுச்சீட்டை இழந்து தற்போது மலேசிய சிறையில் வாடுகின்றார். யார்மீது குறை சொல்வது எம் மீது ஏஜென்சி மீது கடவுள் மீதா ?

ம் அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

சூப்பராக இருக்குது பாட்டு...........இப்படி எத்தனை பேர் ஏஜென்சியில ஏமாந்திருக்கீனம் அவர்களின் ஏக்கங்களை பிரதிபலிக்கும் வரிகள் சூப்பராக இருக்கு வாழ்த்துகள்.............. :lol:

  • தொடங்கியவர்

கலைஞன், பரணீ, ஐமுனா அனைவருக்கும் எனது நன்றிகள். உங்கள் ஒவ்வொருவருடைய கருத்துக்களும் வித்தியாசமாக இருக்கின்றது. பரணீ உங்கள் நண்பனுக்கு நிகழ்ந்ததை எண்ணும் போது மனம் வேதனை அடைகிறது.

ஒவ்வெர்ரு பாடலுக்கும் உற்சாகமூட்டி கருத்துக் களை வழங்கும் ஐமுனாவிற்கு விசேட நன்றிகள்:o

கலைஞன் நீங்கள் இப்படி அழகாக ஆடும் போது இணையத்தில் சுட்டது என்று பொய் சொல்லத் தேவையில்லை.:huh:

என்றும் அன்புடன்

தமிழ்வானம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல் வரிகள் உள்ளத்தை வருடுகின்றது.எத்தனை உறவுகள் தாய்மாரின் தாலியை அடகுவைத்தோ அல்லது விற்று அதன் மூலம் வந்த பணத்தைவைத்து தரகர்களிடம் ஏமாந்த கதை ஏராளம்.ஆதியும் நீயே அந்தமும் நீயே என்பதுபோல் ஏமாற்றுபவனும் தமிழன் ஏமாறுபவனும் தமிழனே :o

ஏமாற்றுவதில் கில்லாடிகள் இந்த ஏஐன்சிக்கார்கள்தான்

சமுகக்கண்ணாடியாக இந்தக்கவிதை

  • தொடங்கியவர்

குமாரசாமி, இலக்கியன் உங்கள் இருவரினதும் ஆழமான கருத்துக்களுக்கு எனது நன்றிகள். இதுவரை தொடர்ந்து 260 பேருக்கு மேல் பாட்டு கேட்டிருக்கிறார்கள். ஆனால் பாருங்கள் ஐந்து களஉறவுகள் மட்டும் தான் தங்கள் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். என்ன கொடுமை ஐயா இது...?:huh:

அன்புடன்

தமிழ்வானம்

இதற்கான ஒரு காரணம் ஒருவர் பலதடவைகள் கேட்டிருக்கலாம்.

உதாரணமாக, நான் இதுவரை சுமார் எட்டு தடவைகள் இந்த பாடலை கேட்டுள்ளேன். ஆனால் ஒரு தடவை, இதோ இத்துடன் இருதடவைகள் மட்டுமே கருத்துக்கள் எழுதியுள்ளேன். வேண்டுமானால், இன்னும் ஆறு தடவைகள் கருத்துக்களை இங்கு எழுதிவிடவா? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

ஏஜன்சிகாரன் ஏமாற்றுறான் அரசாங்கமும் ஏமாற்றுகிறது உங்கள் படைப்பு அருமை,உங்கள் படைப்புகள் தொடரட்டும்.

அடடடா பிந்திட்டேனே

ஹீஹீ சூப்பர் பாட்டு.

இசையமைப்பாளர் வீ எஸ் உதயாவின் குரலில் நல்லா இருக்கு. நன்றி தமிழ்வானம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டு நல்லாருக்கு.

மேலும் பாடல்களை இணையுங்க .

கேட்கிறதுக்கு நாம இருக்கிறோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி, இலக்கியன் உங்கள் இருவரினதும் ஆழமான கருத்துக்களுக்கு எனது நன்றிகள். இதுவரை தொடர்ந்து 260 பேருக்கு மேல் பாட்டு கேட்டிருக்கிறார்கள். ஆனால் பாருங்கள் ஐந்து களஉறவுகள் மட்டும் தான் தங்கள் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். என்ன கொடுமை ஐயா இது...?:lol:

அன்புடன்

தமிழ்வானம்

என்ன தமிழ்வானம் உலம் தெரியாமல் இருக்கின்றீர்கள்.திரிஷா நிர்வாவணமாக ஓட்டம் எனும் தலைப்பில் ஒர் பக்கத்தை திறந்து விடுங்கள்.அதன்பின் பாருங்கள் எத்தனை கருத்துக்கவிஞர்கள் வருவார்கள். :lol:

நல்ல பாடல் நான் பல தடவை கேட்டு விட்டேன் பனங்காய் பணியாரமே பாடல் அருமையிலும் அருமை அந்த இறுவட்டை அவுஸில் எங்கு வாங்கலாம் என சொல்வீர்களா அந்த பாட்டு வந்த இறுவட்டு படமா?

தமிழ் வாணம் நீங்களோ கவிஞர் வசீகரன்

பனங்காய் பணியாரமே

Edited by ஈழவன்85

  • தொடங்கியவர்

கலைஞன், புத்தன்,வெண்ணிலா, கறுப்பி, குமராசாமி மற்றும் ஈழவன்

உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

குமாரசாமி நான் அப்படி எழுதின பின் எத்தனை பேர்கள் கருத்துக்கள் எழுதியிருக்கிறார்கள்...?

பாருங்கள்...இது புரியாமல் நீங்கள்..சிங்கிளா வாற சிங்கங்கள தூண்டிவிடுற வித்தை தெரியாமலா நீங்கள் இருக்கிறீங்கள்.:lol: :lol:

புத்தன் வெண்ணிலா ஒவ்வொருடைய கருத்துக்களையும் அன்போடு ஏற்றுக்கொள்கிறேன்.

:lol:

கறுப்பியக்கா நன்றி பாருங்கோ...நீங்கள் இருக்கும் போது எனக்கென்ன கவலை என்ன..?:o

ஈழவன் என்னோடு தொடர்புகொள்ளுங்கள உங்களுக்கு என்னுடைய இரு இறுவட்டுக்களையும் அனுப்பி வைக்கின்றேன். யாழ் இணையத்தில் உள்ள களஉறவுகளில் யாரவது விநியோகஸ்த்தர்களாக விரும்பினால் உங்கள் நாடுகளில் என்னுடைய இரு இறுவட்டுகளையும் அனுப்பி வைக்கமுடியும். காதல் கடிதம் இறுவட்டு ஒஸ்லோவில் வெளிவந்து இன்றோடு நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது. உங்கள் அனைவருக்குமே இன்று மகிழ்ச்சியான செய்தியும் காத்திருக்கிறது.:D

பின்வரும் நாடுகளில் நீங்கள் தற்சமயம் வாங்கிக் கேட்கலாம்..

http://www.vnmusicdreams.com/page.html?lang=eng&catid=8

என்றும் அன்புடன்

தமிழ்வானம் :)

வானம் பொழியும்:)

வாழ்த்துக்கள் வசீகரன்.

4 ஆண்டுகள் பெரிதல்ல அது 4 கோடி மக்களின் மனதை கவர்ந்திருக்கின்றது என்று நினைக்கும்போது பெருமைதான். நான் ஊரில் இருக்கும்போது யாழ்தேவியில் காதல் செய்தால் இறுவட்டு பாடல் கேட்டு மிகமிக சந்தோசமடைந்திருக்கின்றேன். வயது முதிர்ந்தவர்களும் நல்லதொரு பாடல் என சொல்ல கேட்டிருக்கின்றேன். சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வேறுபாடின்றி கவர்வதே பெருமைதானே

  • தொடங்கியவர்

பரணீ உங்கள் உள்ளத்தில் இருந்து பூத்த உணர்வுபூர்வமான கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்.:lol: மேலும் உங்கள் ஆக்கங்களை ஆவணப்படுத்தி கொஞ்சம் சீர்செய்தால் அழகான புத்தகமாக கொண்டு வரலாம்.

அந்த வகையில் இங்கு நிறைய யாழ்கள உறவுகள் அருமையான கவிதைகளை எழுதிக் குவித்த வண்ணமிருக்கிறார்கள். அந்தக் குவியல்களை மீள்பார்வை செய்து சிந்தனையில் சிக்கவைத்தால் எத்தனையோ சிறந்த புத்தகங்கள் பூக்கும் என்பது என் எண்ணம்! என்ன நண்பர்களே நீங்கள் என்ன சொல்கிறீர்கள்..? :lol:

அன்புடன்

தமிழ்வானம்:lol:

நன்றி நண்பரே

புத்தகமாக வெளியிட ஆசைதான் சில பிரச்சினைகள் இருப்பதால் அவற்றை வெளியிட தற்போது நேரம் இல்லை. ஒரு ஆசை ஈழம் மலரும்போது அதில் என் ஆக்கங்களும் நூலாக மலரவேண்டும் என்று காத்திருப்பேன் கனியும் நாள் தொலைவில் இல்லை

  • தொடங்கியவர்

பரணீ உங்கள் கனவு இனியநூலாக மிகவிரைவில் மலரட்டும்.

வருகிற திங்கட்கிழமை உங்களுக்காக சுனாமிப் பாடல் இணையத்தில் மலரஇருக்கிறது.

காத்திருங்கள் காற்றில் வரும் என் கீதமே...

அன்புடன்

தமிழ்வானம்.

நல்ல பாடல்

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் தமிழ்வானம் யாழில் உங்கள் பேட்டி படித்த பின்னர்தான் நீங்கள் தான் அந்த காதல் கடிதம் கொடுத்த வசீகரன் என்று தெரிந்து கொண்டேன் உங்கள் பாடகள் ஏற்கனவே கேட்டிருக்கிறேன் நிங்களும் யாழில் சக உறுப்பினர் என்பதில் மகிழ்ச்சி உங்கள் சேவை தொடர வாழத்துக்களும் எங்களால் ஆன உதவியும் என்றும் இருக்கும்.

பாராட்டுக்கள் தமிழ்வானம் யாழில் உங்கள் பேட்டி படித்த பின்னர்தான் நீங்கள் தான் அந்த காதல் கடிதம் கொடுத்த வசீகரன் என்று தெரிந்து கொண்டேன் உங்கள் பாடகள் ஏற்கனவே கேட்டிருக்கிறேன் நிங்களும் யாழில் சக உறுப்பினர் என்பதில் மகிழ்ச்சி உங்கள் சேவை தொடர வாழத்துக்களும் எங்களால் ஆன உதவியும் என்றும் இருக்கும்.

அட அட அட நம்ம வானொலி ஜம்முபேபி எடுத்த பேட்டியினால் வசீயண்ணாவை சாத்ரிமாமாவுக்கு தெரிஞ்சு போச்சுதா? தாங்க் கோட் & ஜம்மு.

உங்களால் முடிந்தஉதவிகளை செய்யலாமே சாத்ரி மாமா அவர்களது படைப்புகளுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்! உங்களது ஏனைய பாடல்கள் எல்லாமே மிக மிக நன்றாகவுள்ளன. :lol::lol:

பாடலும்

மெட்டும்

கருத்தும்

இசையும்

அனைத்துமே யதார்த்தாமாக

கேட்டு ரசிக்கும்படி வந்திருக்கிறது.

"பழனி ஏறி மொட்டை போட

ஆசைப்பட்டேன் ஏறாம போட்டுக்கிட்டேன்"

வரிகளை கேட்டு சிரிப்பு வந்தாலும்

அதுவே உண்மை

குறுகிய காலத்துக்குள்

ஒரு பாடல் மூலம்

முழுமையை தந்து கேட்க வைத்திருப்தே

இப் பாடலின் வெற்றி

அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  • தொடங்கியவர்

தூயா, சாத்திரி அண்ணா, சுவி, அஐPவன் அண்ணா,

உங்கள் அனைவருக்கும் எனது இனிய நன்றிகள். வணக்கம் சாத்திரியண்ணா, வணக்கம் அஐPவன் அண்ணா உங்கள் இருவரையும் யாழ்களம் ஊடாக சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்கள் இருவரின் அருமையான கருத்துக்களுக்கும் என் சார்பாகவும், வி.எஸ்.உதயா அண்ணா சார்பாகவும் நன்றிகள்.

என்றும்

அன்புடன்

தமிழ்வானம்:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.