Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறைவேற்று, அதிகார ஜனாதிபதி முறைமையை... விரைவில் அகற்றப்படும் – சஜித்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை விரைவில் அகற்றப்படும் – சஜித்

நிறைவேற்று, அதிகார ஜனாதிபதி முறைமையை... விரைவில் அகற்றப்படும் – சஜித்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு, பொருட்கள் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்நிலைமையை உருவாக்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் தலவாக்கலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , ” வங்குரோத்தடைந்த சில அரசியல்வாதிகள், தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக மீண்டும் இனவாதத்தையும், மதவாதத்தையும் கையில் எடுத்துள்ளனர்.  இனம் மதம், அரசியல் பேதங்களை மறந்துதான் மக்கள் இன்று வீதிக்கு இறங்கியுள்ளனர். எனினும், மக்களின் போராட்டத்துக்கு முத்திரை குத்தப்படுகின்றது. எனவே, இனவாதத்தையும், மதவாதத்தையும் தோற்றுவிப்பவர்களை, தோற்கடிப்பதற்காக நாம் அறவழியில் எழுந்து நிற்போம்.

இது எமது நாடு, நாட்டு வளங்களை, சொத்துகளை காக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. எனவே, தேசிய சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காத வகையிலேயே போராட்டங்கள் இடம்பெற வேண்டும். ஒழுக்கம் உள்ள மக்கள் என்ற வகையில் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் அதனை பின்பற்றுகின்றனர் என உறுதியாக நம்புகின்றேன்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள். பயிரிடப்படாத நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படும். சிறு தேயிலை தோட்டங்கள் அதிகரிக்கும் பட்சத்தில், ஏற்றுமதி அதிகரிக்கும், ஏற்றுமதி அவ்வாறு அதிகரித்தால் வருமானம் கூடும். அந்த வழிமுறையை நாம் கையாள்வோம்.  அதேபோல லயன் யுகத்துக்கும் முடிவு கட்டப்படும். மலையக மக்களின் எழுச்சிக்காக தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற யோசனையை நாம் முன்வைத்துள்ளோம். தனி நபரிடம் அதிகாரம் இருக்ககூடாது. சர்வாதிகார ஆட்சியும் வேண்டாம். எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை இல்லாதொழிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ” – என்றார்.

https://athavannews.com/2022/1275672

  • கருத்துக்கள உறவுகள்

பதவிக்கு வரும் மட்டும் எதையும் அள்ளி  விடலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

நிறைவேற்று, அதிகார ஜனாதிபதி முறைமையை... விரைவில் அகற்றப்படும் – சஜித்

அப்பன் சஜித்! உப்பிடித்தான் சந்திரிக்காவும் சொன்னவ .......நல்லாட்சி நாயகன் மைத்திரியும் சொன்னவர்.
அந்த கதிரையிலை இருந்தவுடனை குணமெல்லாம் மாறீடும் 😎

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நிறைவேற்று, அதிகார ஜனாதிபதி முறைமையை... விரைவில் அகற்றப்படும் – சஜித்

20 வருடத்துக்கு முன்பே எங்கேயோ கேட்ட மாதிரி இல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

நிறைவேற்று அதிகார அதிபர் முறையை நீக்குவதால்.. இன்றைய பொருண்மிய நெருக்கடிக்கு எப்படி தீர்வு காண்பது...??!

இன்றைய பொருண்மிய நெருக்கடி.. இலங்கையை கடன் வாங்கியாவது கட்டி எழுப்பலாம்.. தமிழர்களைப் போர் செய்து அழிக்கலாம்.. என்ற நிலைப்பாட்டில் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஜே ஆர் தொடங்கி கோத்தா வரை இருந்ததன் விளைவு தான்.

இதற்கு நிறைவேற்று அதிகார சனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சஜித்தும் ஒரு கூறு தான். பொன்சேக்காவும் ஒரு கூறுதான். 

இப்ப என்ன புதிசா.. புண்ணுக்கு மருந்து கட்டச் சொன்னால்.. கண்ணுக்கு கட்டுறன் என்றார்.

நிறைவேற்று அதிகார அதிபரை நீக்குவேன் என்று வந்த சந்திரிக்கா முதல் பலரும் விட்ட தவறுகள் தான் இன்றைய நிலை. இவர்கள் எவருமே எனி பதவிக்கு வராமல் பார்த்துக் கொள்வது தான் சிங்கள மக்களுக்கும் இலங்கைக்கும் தேவையான அவசியமான விடயமாகும். தவறுகள் தொடராமல் இருக்க. 

இலங்கை எல்லா மக்களின் உரிமைகளையும் சமனாக மதித்து பகிர்ந்து.. அதிகாரங்களைப் பரவலாக்கி..  உற்பத்தி பொருளாதார நாடாகாது.. கடன்.. போர்.. மித மிஞ்சிய இராணுவம்.. பெளத்த பேரினவாதத் திமிர்.. ஆக்கிரமிப்பு.. இன அழிப்பு என்று இருக்குமானால்.. அதனை எவராலும் பொருண்மிய வீழ்ச்சியில் இருந்து காக்க முடியாது. 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நிறைவேற்று அதிகாரமுள்ள அரச தலைவர் முறைமையை மாற்றியமைக்கும் நடவடிக்கையென்பது அவ்வளவு சுலபமானது அல்ல. அரச தலைவரை முதலில் தெரிவு செய்துவிட்டால் அவர் இவ்வாறான மாற்றத்தை அவரது ஆட்சிக் காலத்தில் கொண்டுவர  ஒத்துழைப்பு வழங்குவார் என்றும் நம்பமுடியாது.

அனைத்துக்கும் மேலாக தேர்தல் நடந்து ஆட்சி அமைத்தபின்னர் இந்த மாற்றத்தை கொண்டுவரத்  தேவையான பெரும்பான்மை வாக்குப்பலம் நாடாளுமன்றத்தில் தேவை. அடுத்த தேர்தலில் இதில் அனைத்தும் சேர்ந்து வருவது இனிமேல் சாத்தியமாகுமா என்பதும் நிச்சயம் இல்லை.

ஜனாதிபதியுயோ  அரசாங்கமோ இந்த மாற்றத்தை கொண்டுவருவதற்கு எந்தவித தலையீடும் செய்யமுடியாதபடி மக்கள் விருப்பறியும்  நாடளாவிய வாக்கெடுப்பு(referendum) ஒன்றை நடத்தி அதன் முடிவை அறிந்தபின்னர் அதற்கிணங்க புதிய ஜனாதிபதிக்கான தேர்தலை நடத்தவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு இப்பவே சனாதிபதி என்ற நினைப்பு...இவருதான் தமிழர் பகுதி காணி பிடிப்பின் சூத்திரதாரி...நல்லாட்சி என்ற கெட்டாட்சியில்...அதுக்கான மினிஸ்டரு..1000 புத்தசிலைக்கு அடிகோலிட்டவர்..

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/djjana.vj/videos/1153923335381690/?d=w
 

எமது தலைவன் தீர்க்கதரிசனமாக சொன்ன வார்த்தைகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, alvayan said:

இவருக்கு இப்பவே சனாதிபதி என்ற நினைப்பு...இவருதான் தமிழர் பகுதி காணி பிடிப்பின் சூத்திரதாரி...நல்லாட்சி என்ற கெட்டாட்சியில்...அதுக்கான மினிஸ்டரு..1000 புத்தசிலைக்கு அடிகோலிட்டவர்..

இவர் இரண்டாவது காமினி திஸநாயக்க.காமினி தமிழர் பிரதேசங்களில் மிகுந்த அபிமானியாவார். ஆனால் இவர் தமிழருக்கு எதிராக செய்த சூத்திரங்கள் அனைவரும் அறிந்ததே.
அது போல் சஜித்தும் ஒரு சிங்கள அரசியல்வாதியாவார்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

https://www.facebook.com/djjana.vj/videos/1153923335381690/?d=w
 

எமது தலைவன் தீர்க்கதரிசனமாக சொன்ன வார்த்தைகள்.

அன்றே அதை நிறைவேற்றியிருந்தால்; இன்று இந்த நிலை வந்திருக்குமா? தமக்கு தமிழர் அடிமை என நினைத்து விதைத்தது, சர்வதேசத்துக்கு அடிமையாக்கி, காய்ந்த வயிற்றுடன் காரணமானவர்களை விரட்டியடிக்கும் நிலைமை இன்று வந்திருக்குமா? கெடுகுடி சொற்கேளாது!

10 hours ago, தமிழ் சிறி said:

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற யோசனையை நாம் முன்வைத்துள்ளோம். தனி நபரிடம் அதிகாரம் இருக்ககூடாது. சர்வாதிகார ஆட்சியும் வேண்டாம். எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை இல்லாதொழிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ”

மாத்தையா இன்னும் அந்தகதிரையில் இருக்கவில்லை, அதன் சுகத்தை அனுபவிக்கவில்லை, தற்போதைய சூழலை தனக்கு சாதகமாக்கி கோல் போட முயற்சிக்கிறார். கதிரையில் இருந்துவிட்டார் என்று வைச்சுக்கொள்ளுங்க, அதை இறுக்கப்பிடிக்க எத்தனை சட்டங்களை அகற்றுவார், இயற்றுவார், திரிப்பார் யாரறிவார்? ஆகவே கதிரையை பிடிக்க முதல் அந்த பொறியை அகற்றுங்கள், பின் கதிரை ஏறுங்கள். இருந்தாலும்: பின் அதை மாற்ற மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்? பழைய பழக்கங்களை மாற்றுவது ரொம்ப .... ரொம்ப கடினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, satan said:

அன்றே அதை நிறைவேற்றியிருந்தால்; இன்று இந்த நிலை வந்திருக்குமா? தமக்கு தமிழர் அடிமை என நினைத்து விதைத்தது, சர்வதேசத்துக்கு அடிமையாக்கி, காய்ந்த வயிற்றுடன் காரணமானவர்களை விரட்டியடிக்கும் நிலைமை இன்று வந்திருக்குமா? கெடுகுடி சொற்கேளாது!

77களிலையே ஈழத்தமிழர்களுக்கு சார்பாக ஆயிரம் சந்தர்ப்பங்கள் வந்தது.வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சி மேடையில் அமர்ந்திருந்தும் சுய லாபத்திற்க்காக சந்தர்ப்பங்களை கோட்டை விட்டவர்கள். மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல் அதே குழுவில் இருந்த அரசியல் மூத்தவர்கள் இன்றும் ஈழத்தவர் பிரச்சனையில் பேசு பொருளாக இருப்பது தமிழினத்திற்கு கிடைத்த துர்ப்பாக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களையும் சேர்த்து கூட்டிப்பெருக்கி சுத்தமாக்கினாற்தான் நாடு முன்னேறும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, satan said:

இவர்களையும் சேர்த்து கூட்டிப்பெருக்கி சுத்தமாக்கினாற்தான் நாடு முன்னேறும்.

கூட்டி பெருக்க ஆரம்பித்ததினால் தானே சகோதர படுகொலை என சொல்லி தங்கள் வியாபாரத்தை செய்தார்கள்.

அந்த வியாபாரிகள் இன்று வரைக்கும் ஏதாவது செய்தார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அந்த வியாபாரிகள் இன்று வரைக்கும் ஏதாவது செய்தார்களா?

வெறும்வாயை மென்றுகொண்டு கனவு காண்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆடான ஆடெல்லாம் தவிடு புண்ணாக்குக்கு அலைய, சொத்தி ஆடு ........அலைஞ்ச கதைதான்.😏

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒரு எட்டாம் கிளாசு கேசுதான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, satan said:

வெறும்வாயை மென்றுகொண்டு கனவு காண்கிறார்கள்.

இண்டைக்கொரு பேப்பர் கட்டிங் பாத்தன்.....சம்பந்தம் சொன்னது உண்மையாய் இருக்குமோ?

Bild

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.