Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில், வாழ்க்கைச் செலவுகள்... அதிகரிப்பு: கடைகளில், விற்பனை குறைந்துள்ளது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு: கடைகளில் விற்பனை குறைந்துள்ளது!

பிரித்தானியாவில், வாழ்க்கைச் செலவுகள்... அதிகரிப்பு: கடைகளில், விற்பனை குறைந்துள்ளது!

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவின் அழுத்தத்தின் கீழ் வீட்டு வரவு செலவுத் திட்டங்கள் வருவதால் கடைகளில் விற்பனை குறைந்துள்ளது என்று பிரித்தானிய சில்லறை வணிகக் கூட்டமைப்பு (பிஆர்சி) தெரிவித்துள்ளது.

புதிய புள்ளிவிபரங்கள் மார்ச் மாதத்திற்கான விற்பனை வளர்ச்சி இந்த ஆண்டு இதுவரை அதன் மெதுவான வீதத்தில் உயர்ந்துள்ளது.
பிரித்தானிய சில்லறை விற்பனை 12 மாதங்களுக்கு முந்தையதை விட 0.4 சதவீதம் குறைந்துள்ளது.

மில்லியன் கணக்கானவர்கள் அதிக எரிசக்தி கட்டணங்கள் மற்றும் வரிகளை சமாளிக்க வேண்டியிருக்கும் நிலையில் இந்த தகவல் வந்துள்ளது.

மக்களின் நிதி மீதான அழுத்தம் மற்றும் உக்ரைன் போர் ஆகியவை நுகர்வோர் நம்பிக்கையை சீர் குலைத்துவிட்டது என்று பிரித்தானிய சில்லறை வணிகக் கூட்டமைப்பு கூறியுள்ளது.

https://athavannews.com/2022/1276340

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளும் பொருட்களின் விலைகள் கூடிக் கொண்டு போகுது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரதி said:

ஒவ்வொரு நாளும் பொருட்களின் விலைகள் கூடிக் கொண்டு போகுது 

இங்கும் அப்படித்தான். 99 சதம்விற்ற சூரிய காந்தி எண்ணை. இப்ப 5 €
வடை சுடவும், வழி இல்லாமல் இருக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இங்கும் அப்படித்தான். 99 சதம்விற்ற சூரிய காந்தி எண்ணை. இப்ப 5 €
வடை சுடவும், வழி இல்லாமல் இருக்கு. 🤣

சிறியர் இதையும் பாருங்கோ...என்னுடைய நிலைமையும் இதுதான்

இலங்கைச்..சாப்பாடுதான் வேணுமாம்..

பல்லாயிரம்  மைல் கடந்து

பரதேசத்தில்  கனடாவில் வாழும்நான்

படும் கஸ்டம் என்னென்று தெரியுமோ..மூ

பத்து ஆண்டு கடந்தும்முசுப்

பாத்திக்கு தன்னும்  நோ கனடியன் பூட்..

பக்கத்திலை

பத்துத் தமிழ்க் கடை

பலகாரம் முதல்

பத்தியச் சாப்பாடுவரை

பகலிராவாக் கிடைக்கும்

பகிடி என்ன தெரியுமோ..

வடை மூன்று  ஒரு டொலர் அப்ப..

வடை  இரண்டு ஒன்றரை டொலர் இப்ப….

இலங்கையில் விலைவாசி ஏற்றமாம்..

இடியப்பம் இருபத்தைந்து  மூன்று டொலர் அப்ப

இப்ப இந்தப்பெட்டிஆறு டொலர்..

இதுக்கும் அதையே   சொல்லுகினம்

கொத்து ரொட்டியிலும்

கொல்லுகினம்   விலையை..

கொடுவாமீன் சாப்பாட்டுக்கும் அதுதான்

கொள்ளளவில் மாற்றமும்

கொண்டுவந்துவிட்டு

கொள்ளையை கூடவும் அடித்துவிட்டு

கெத்தாகச் சொல்லுகினம்

இலங்கையில் விலைவாசி ஏற்றம்

இங்கையும் கூட்டத்தானே வேணும்

உண்ணாணை கேட்கின்றேன்..

இலங்கைக்கும்

இவைக்கும் என்ன தொடர்பு..

சித்தாலேபவையும்

சிறு குடிநீர் பைகளையும்

இறக்கிவிட்டு

இவையின்ரை கதைகளைக் கேட்டும்

இப்பவும்

இந்தக் கடை வரிசையிதான் நிற்கின்றேன்..

இருக்கின்ற இந்த வயிறு

இலங்கைச் சாப்பாடுதான்  வேணுமாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, alvayan said:

நகைச்சுவையாக சொன்ன… நல்ல கவிதை, அல்வாயன். 👍🏽 😂

இதனை… யாழ். களத்தின், சுய ஆக்கம் பகுதியில் பதிந்து விடுங்கள். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் அதே கதைதான்  அல்வாயன்.......நல்லதொரு புலம்பல் கவிதை......!   😂

1 hour ago, alvayan said:

தமிழ் உணவுக் கடைகளில் உள்ள விலையேற்றம் ஓரளவுக்கு நியாயமானதே. 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் Costco வில் $15 இற்கு விற்ற 16 லீட்டர் கனோலா எண்ணெய் , இன்று மூன்று மடங்கை விட அதிகரித்து $48 இல் வந்து நிற்கின்றது. கண்டெயினர்களின் விலையேற்றத்தினால், இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகை மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ளது (சீனர்களின் கடைகளைத் தவிர). உக்ரைன் மீதான யுத்தத்தின் பின் கோதுமை மாவின் விலை அதிகரித்தது மட்டுமல்லாமல், தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதே போன்றே அனைத்து மரக்கறிகளின் விலைகளும் Walmart போன்ற இடங்களில் கூட அதிகரித்து உள்ளன. எல்லாவற்றையும் எண்ணையில் பொரித்து சாப்பிடும் எமக்கு அதன் விலை அதிகரிப்பு பாதிக்கத் தான் செய்யும்.

தமிழ் உணவுக் கடைகளில் ஒவ்வொரு உணவுப் பொருளை விற்கும் போது கிடைக்கும் லாபம் மிகச் சிறியது. அதிக எண்ணிக்கையில் விற்கும் போது மாத்திரமே லாபம் காண முடியும்.  இந்த சிறிய லாபத்தின் மூலம் தான் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் இருந்து வாடகை வரைக்கும் கொடுக்க வேண்டும். லாபம் கிடைத்து தொடர்ந்து நடாத்துவது சவாலான விடயம். இதனால் தான் பல தமிழ் உணவுக் கடைகள் வந்த வேகத்தில் மறைந்து விடுகின்றன. ஒரு தமிழ் உணவுக் கடை என்பது ஒரு குறிப்பிட்ட உணவை மட்டுமே விற்கும் கடையாக இல்லாமல் வடையில் இருந்து புரியாணி, வாழையிலையில் சைவ சாப்பாடு மற்றும் மாலுபாண் வரை விற்கும் பல் உணவுச் சாலை என்பதால் றிஸ்கும் அதிகம்.

எம்மவர் Mc Donald's, Tim Hortons, Pizza hut போன்றவற்றில் ஏற்படும் விலையுயர்வை பற்றி கேள்வி கேட்பது இல்லை. ஆனால் தமிழ் கடையில் வடையின் விலையை ஏற்றினால் உடனே Google reviews இல் வந்து தாறுமாறாக எழுதுகின்றனர். 
 
Edited by நிழலி
எழுத்துப் பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, alvayan said:

சிறியர் இதையும் பாருங்கோ...என்னுடைய நிலைமையும் இதுதான்

இலங்கைச்..சாப்பாடுதான் வேணுமாம்..

பல்லாயிரம்  மைல் கடந்து

பரதேசத்தில்  கனடாவில் வாழும்நான்

படும் கஸ்டம் என்னென்று தெரியுமோ..மூ

பத்து ஆண்டு கடந்தும்முசுப்

பாத்திக்கு தன்னும்  நோ கனடியன் பூட்..

பக்கத்திலை

பத்துத் தமிழ்க் கடை

பலகாரம் முதல்

பத்தியச் சாப்பாடுவரை

பகலிராவாக் கிடைக்கும்

பகிடி என்ன தெரியுமோ..

வடை மூன்று  ஒரு டொலர் அப்ப..

வடை  இரண்டு ஒன்றரை டொலர் இப்ப….

இலங்கையில் விலைவாசி ஏற்றமாம்..

இடியப்பம் இருபத்தைந்து  மூன்று டொலர் அப்ப

இப்ப இந்தப்பெட்டிஆறு டொலர்..

இதுக்கும் அதையே   சொல்லுகினம்

கொத்து ரொட்டியிலும்

கொல்லுகினம்   விலையை..

கொடுவாமீன் சாப்பாட்டுக்கும் அதுதான்

கொள்ளளவில் மாற்றமும்

கொண்டுவந்துவிட்டு

கொள்ளையை கூடவும் அடித்துவிட்டு

கெத்தாகச் சொல்லுகினம்

இலங்கையில் விலைவாசி ஏற்றம்

இங்கையும் கூட்டத்தானே வேணும்

உண்ணாணை கேட்கின்றேன்..

இலங்கைக்கும்

இவைக்கும் என்ன தொடர்பு..

சித்தாலேபவையும்

சிறு குடிநீர் பைகளையும்

இறக்கிவிட்டு

இவையின்ரை கதைகளைக் கேட்டும்

இப்பவும்

இந்தக் கடை வரிசையிதான் நிற்கின்றேன்..

இருக்கின்ற இந்த வயிறு

இலங்கைச் சாப்பாடுதான்  வேணுமாம்

எல்லாரது நிலைமையும் இதே தானே..✍😊

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

நகைச்சுவையாக சொன்ன… நல்ல கவிதை, அல்வாயன். 👍🏽 😂

இதனை… யாழ். களத்தின், சுய ஆக்கம் பகுதியில் பதிந்து விடுங்கள். 🙂

பதிவிடத்தெரியவில்லை..உதவி கிடைக்குமா..

எம்மவர் Mc Donald's, Tim Hortons, Pizza hut போன்றவற்றில் ஏற்படும் விலையுயர்வை பற்றி கேள்வி கேட்பது இல்லை. ஆனால் தமிழ் கடையில் வடையின் விலையை ஏற்றினால் உடனே இல் வந்து தாறுமாறாக எழுதுகின்றனர். 

ஏனையா இந்த கொலைவெறி...விரும்பிச் சாப்பிடும் சாப்பாட்டின் விலை கூட்டினால் கண்டபடி எழுதத்தானே தோன்றும்... மார்க் /ஸ் டீல் சந்திக் கடைகளில் நீங்கள்  வாடிக்கையாளர்தானே...அங்கு நிச்சயம் இதை அனுபவித்திருப்பீர்கள்....அளவு முதல் விலை  விலைவரை....பகல் கொள்ளை..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தமிழ் சிறி said:

நகைச்சுவையாக சொன்ன… நல்ல கவிதை, அல்வாயன். 👍🏽 😂

இதனை… யாழ். களத்தின், சுய ஆக்கம் பகுதியில் பதிந்து விடுங்கள். 🙂

4 minutes ago, alvayan said:

பதிவிடத்தெரியவில்லை..உதவி கிடைக்குமா..

22 minutes ago, நிழலி said:

தமிழ் உணவுக் கடைகளில் உள்ள விலையேற்றம் ஓரளவுக்கு நியாயமானதே.  

நிழலி…. மேலே, அல்வாயன் எழுதிய கவிதையை…
யாழ். கள சுய ஆக்கம் பகுதிக்கு, மாற்றி விடட்டாம். 
நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

இங்கும் அப்படித்தான். 99 சதம்விற்ற சூரிய காந்தி எண்ணை. இப்ப 5 €
வடை சுடவும், வழி இல்லாமல் இருக்கு. 🤣

எண்ணை இல்லாமல் நல்ல சுவையாய் சமைக்கலாம் சிறித்தம்பி.....😎
எண்ணைச்சாப்பாடு உடம்புக்கு கூடாது🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

எண்ணை இல்லாமல் நல்ல சுவையாய் சமைக்கலாம் சிறித்தம்பி.....😎
எண்ணைச்சாப்பாடு உடம்புக்கு கூடாது🤣

குமாரசாமி அண்ணை…. எண்ணை சாப்பாடு, கூடாது தான்…
ஆனால்…. நாக்கு, சொல்வழி கேட்குதில்லையே…. 😂

43 minutes ago, alvayan said:

பதிவிடத்தெரியவில்லை..உதவி கிடைக்குமா..

எம்மவர் Mc Donald's, Tim Hortons, Pizza hut போன்றவற்றில் ஏற்படும் விலையுயர்வை பற்றி கேள்வி கேட்பது இல்லை. ஆனால் தமிழ் கடையில் வடையின் விலையை ஏற்றினால் உடனே இல் வந்து தாறுமாறாக எழுதுகின்றனர். 

Google review இல் என்று வந்திருக்க வேண்டும், தமிழில் எழுதி கொப்பி பேஸ்ட் செய்யும் போது விடுபட்டு விட்டது

45 minutes ago, alvayan said:

ஏனையா இந்த கொலைவெறி...விரும்பிச் சாப்பிடும் சாப்பாட்டின் விலை கூட்டினால் கண்டபடி எழுதத்தானே தோன்றும்... மார்க் /ஸ் டீல் சந்திக் கடைகளில் நீங்கள்  வாடிக்கையாளர்தானே...அங்கு நிச்சயம் இதை அனுபவித்திருப்பீர்கள்....அளவு முதல் விலை  விலைவரை....பகல் கொள்ளை..

முன்னர் பூரணி விலாசில் வந்து வாங்குவதுண்டு. ஆனால் அக் கடையில் முதலாளி ஊழியர்களை எனக்கு முன்பாக திட்டியது குறித்து நான் கேள்வி கேட்டு பிரச்சினைபட்ட பின் அங்கு வாங்குவது இல்லை.

இப்ப கொத்து கடைக்கு மட்டுமே வருவதுண்டு. அங்கு விற்கும் ஆட்டுக்குடல் கறிக்காகவும், லம்ப் ரைசுக்காகவும் வருவதுண்டு. இரால் வடை பொரியலும் நன்றாக இருக்கும்.

நான் விற்பியில் வசிப்பதால் ஸ்கார்பரோ வந்து வாங்குவது நேர விரயமாக தோன்றும். 

41 minutes ago, தமிழ் சிறி said:

நிழலி…. மேலே, அல்வாயன் எழுதிய கவிதையை…
யாழ். கள சுய ஆக்கம் பகுதிக்கு, மாற்றி விடட்டாம். 
நன்றி.

அவரே அங்கு போட்டால் நல்லது. திரியின் இடையில் உள்ளதை பிரித்து எடிட் பண்ணித்தான் என்னால் போட வேண்டி வரும்

 சுய ஆக்கத்தில் என் பெயர் அடியில் தெரியும் அல்லது எடிட் பண்ணியதில் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, alvayan said:

பதிவிடத்தெரியவில்லை..உதவி கிடைக்குமா..

எம்மவர் Mc Donald's, Tim Hortons, Pizza hut போன்றவற்றில் ஏற்படும் விலையுயர்வை பற்றி கேள்வி கேட்பது இல்லை. ஆனால் தமிழ் கடையில் வடையின் விலையை ஏற்றினால் உடனே இல் வந்து தாறுமாறாக எழுதுகின்றனர். 

ஏனையா இந்த கொலைவெறி...விரும்பிச் சாப்பிடும் சாப்பாட்டின் விலை கூட்டினால் கண்டபடி எழுதத்தானே தோன்றும்... மார்க் /ஸ் டீல் சந்திக் கடைகளில் நீங்கள்  வாடிக்கையாளர்தானே...அங்கு நிச்சயம் இதை அனுபவித்திருப்பீர்கள்....அளவு முதல் விலை  விலைவரை....பகல் கொள்ளை..

நான் பதில் எழுதுவது தவறு..இருந்தாலும் எழுதுகிறேன்.கடைக்காரர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளும் அதிகமாகத் தானே இருக்கும்..வாடகை தொடக்கம் பணியாளார்களின் சம்பளம் பொருட்களின் கொள்வனவு செலவு..நிறையவே..இதே ரிம்கொட்டனில் ஏதாவது கேட்டால் வேணும் என்றால் நம்மவர்களே எவ்வளவு கதைப்பினம்....👋

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

அவரே அங்கு போட்டால் நல்லது. திரியின் இடையில் உள்ளதை பிரித்து எடிட் பண்ணித்தான் என்னால் போட வேண்டி வரும்

 சுய ஆக்கத்தில் என் பெயர் அடியில் தெரியும் அல்லது எடிட் பண்ணியதில் தெரியும்.

நன்றி நிழலி.
 
58 minutes ago, alvayan said:

பதிவிடத்தெரியவில்லை..உதவி கிடைக்குமா..

அல்வாயன்….
நீங்களே… சுய ஆக்கம் பகுதியில், மேலே உள்ள கவிதையை கொப்பி எடுத்து,
புதிய தலைப்பில் பதிந்து விடுங்களேன். 

“இலங்கை… சாப்பாடுதான், வேணுமாம்.”
என்ற தலைப்பே… நன்றாக உள்ளது. 🙂

  • கருத்துக்கள உறவுகள்

அல்வாயன் வாய் இலங்கை சாப்பாடுதான் வேணும் என்று அடம்பிடித்தால் கைகளுக்கு சமைக்கப்பழக்கி விடுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வல்வை சகாறா said:

அல்வாயன் வாய் இலங்கை சாப்பாடுதான் வேணும் என்று அடம்பிடித்தால் கைகளுக்கு சமைக்கப்பழக்கி விடுங்கள்.

காப்புக் கையாலை…. சமைத்தது தான், அல்வாயனுக்கு வேணுமாம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

காப்புக் கையாலை…. சமைத்தது தான், அல்வாயனுக்கு வேணுமாம். 😂

காப்புக்கையால் உணவு கிடைக்க ஏகப்பட்ட புண்ணியத்தை போன ஜென்மத்தில் செய்திருக்க வேணும் இலையான் கில்லர் உங்களைப் போல எல்லாருக்கும் கிடைக்குமோ?

பாவம் அல்வாயன் வாயிற்கு வாழ்க்கைப்பட்ட மனுசன்போல... இடியப்பத்திற்கும் வடைக்கும் வரிசையில் நின்று வாங்குவதில் இன்னும் வாழ்க்கை வெறுக்காமல் இருப்பது பெரியவிடயம் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

எம்மவர் Mc Donald's, Tim Hortons, Pizza hut போன்றவற்றில் ஏற்படும் விலையுயர்வை பற்றி கேள்வி கேட்பது இல்லை. ஆனால் தமிழ் கடையில் வடையின் விலையை ஏற்றினால் உடனே Google reviews இல் வந்து தாறுமாறாக எழுதுகின்றனர். 

நீங்கள்  சொல்லிய அனைத்து கடைகளும் நடுசாமத்தில் போய்  வேண்டினாலும் சுவை மாறாது ஆனால் நம்ம தமிழ்க்கடைகள் அப்படியா ? 

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் வடை  என்பதா?
சுவையும்  போங்கிவிட்டதா?
மனமே அழுது விட்டதா அல்லது  சிந்திவிட்டதா?
சொல் மனமே....

 ஒரு நாளைக்கு உப்பு ஒருநாளைக்கு உப்பே இல்லாமல்  உறைப்பு அடுத்தநாள் உறைப்பே  இல்லாமல் லண்டன் வெதர்  போல் சுவை .

  • கருத்துக்கள உறவுகள்

நிறையவே எழுதி வைத்திருக்கின்றேன்..தலைப்பு ஒன்றை  கண்டதும் ..2 கிறுக்கல்களை 2 இடத்தில் போட்டேன்...இப்ப  ஒன்று .. அடிவாங்கிறமாதிரி இருக்கு.. எல்லோருக்கும் நன்றி...

சிறியர்..உங்கள்  உதவிக்கு நன்றி

சகாரா ...வாய்க்கட்டுபாடற்ற  எனக்கு  வாய்த்ததும்..நல்ல சமையல் காப்புக் கைதான் ..நன்றி உங்களுக்கு..

இந்த இடத்தி ல் 25 வருடமாய் இருக்கின்றேன்...சாப்பாடு வாங்காவிட்டாலும்...பார்த்த அனுபவகங்களையே பகிடியாய் கிறுக்கினேன்..

நிழலி...25 வருடமாய் இந்த இடம்....அப்ப இந்தக் கடைகள்..பிறந்து ..தவழ்ந்து நடந்தது வரை தெரியும்...இதை நான் கிறுக்கியது...பகிடிக்காக மட்டுமே...கடைகாரன் அதிலாபம் அடைந்தாலும் ,நான் நட்டமடைந்தாலும் போற இடம் ஒக்டன்தான்.. இரண்டு பேருக்குமே ஒரு இடம்தான் வித்தியாசமில்லை...இருக்கும்வரை சிரித்துவிட்டுப் போவோம்...மீண்டும் அனைவருக்கும் நன்றிகள்..

Edited by alvayan

2 hours ago, பெருமாள் said:

நீங்கள்  சொல்லிய அனைத்து கடைகளும் நடுசாமத்தில் போய்  வேண்டினாலும் சுவை மாறாது ஆனால் நம்ம தமிழ்க்கடைகள் அப்படியா ? 

விலையும் அப்படித்தானே பெருமாள்.

நாலு பேர் இருக்கும் ஒரு குடும்பம் Mc இற்கு போய் வயிறாற சாப்பிட குறைந்தது $35 ஆவது தேவைப்படும். ஆனால் தமிழ் கடையில் $20 இற்கும் குறைவான விலையில் 20 இட்டலி + சம்பல் + சாம்பார் எல்லாம் சேர்த்து வாங்கி ஒரு வேளை உணவை பூர்த்தி செய்யலாம். இதுவே இடியப்பம் என்றால் $13 இற்கு 25 இடியப்பம் + சொதி வாங்கி medium size இல் கோழியோ அல்லது மீன் கறியும் வாங்கி 4 பேர் சாப்பிடலாம்.

அனேக தமிழ் கடைகளில் கொத்து ரொட்டி $9 ஆக்கி விட்டார்கள். ஆனால் 3 வாங்கினால் 4 பேர் இரவும் சாப்பிட்டு அடுத்த நாள் 2 பேர் சாப்பிட முடியும்.

Mc, Tim போன்ற கடைகளில் burger போடுவதற்குரிய bun இல் இருந்து fries இற்குரிய உருளைக்கிழங்கு சிப்ஸ் வரை அவர்களது பிரதான பிரிவில் இருந்து தான் franchise களுக்கு அனுப்பி வைப்பர். பீசா என்றால் மாவை (Daugh), cheese போன்றவற்றை அனுப்பி வைப்பர். அவை கடும் தரக்கட்டுப்பாடுடன் இருக்கும். இதனை தமிழ், இந்திய, சீன கடைகளில் எதிர்பார்க்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

எனது தமிழ் சாப்பாட்டுக்கடை கொள்வனவு சரியான குறைவு.  சாப்பாடு (சோறு புட்டு இட்லி பிரியாணி) என்று ஒரு நாளும் வாங்கியது இல்லை (ஓரிரு தடவை வேறு வீடுகளுக்கு அவசரமாக கொடுக்க வேண்டிய தேவைகளைத் தவிர).  

நான் வாங்குவது அப்பப்போ கொத்து ரொட்டி, ரோல்ஸ், சமோசா/பற்றிஸ், மோதகம் மற்றும் ரோஸ்ற் பாண்.  
வெறும் உருளைக்கிழங்குகை (10  இறத்தல் 3 டாலர்)  அவிச்சு அதை மட்டன் gravy  ஓட கலந்து மாவிலை உருட்டி பழைய எண்னிக்கை போட்டு குடுக்கிற ரோல்லஸிற்கு  ஏன் 1.50  என்று இன்னும் விளங்கவில்லை.  அதே போல சமோசா பற்றிஸ் எண்ட பேர்ல வெறும் மாவை எண்னிக்கை போட்டு விற்கிறார்கள் விக்கிரங்கள் 2/$.  10-20% கூட்டுறது பரவாய் இல்லை.  50-100% கூட்டுறது கொஞ்சம் கூட.

நீங்கள் நினைப்பது போல சாப்பாட்டுக்கடை வருமானமில்லாமல் இல்லை.  100% லாபம் எடுக்கும் ஒரே வியாபாரம்.  பலர் பூட்டியதுக்கு காரணம் 1. ஏற்கனவே 4 சாப்பிட்டு கடை இருக்கிற இடத்தில  திறக்கிறது.  2.  வாடிக்கையாளர்களிடம் சரியான அணுகுமுறை இல்லை.  எதோ நாங்கள் வில்லங்கத்துக்கு போற போல நினைப்பு.  3.  தரம். 

Edited by Sabesh

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Sabesh said:

எனது தமிழ் சாப்பாட்டுக்கடை கொள்வனவு சரியான குறைவு.  சாப்பாடு (சோறு புட்டு இட்லி பிரியாணி) என்று ஒரு நாளும் வாங்கியது இல்லை (ஓரிரு தடவை வேறு வீடுகளுக்கு அவசரமாக கொடுக்க வேண்டிய தேவைகளைத் தவிர).  

நான் வாங்குவது அப்பப்போ கொத்து ரொட்டி, ரோல்ஸ், சமோசா/பற்றிஸ், மோதகம் மற்றும் ரோஸ்ற் பாண்.  
வெறும் உருளைக்கிழங்குகை (10  இறத்தல் 3 டாலர்)  அவிச்சு அதை மட்டன் gravy  ஓட கலந்து மாவிலை உருட்டி பழைய எண்னிக்கை போட்டு குடுக்கிற ரோல்லஸிற்கு  ஏன் 1.50  என்று இன்னும் விளங்கவில்லை.  அதே போல சமோசா பற்றிஸ் எண்ட பேர்ல வெறும் மாவை எண்னிக்கை போட்டு விக்கிரங்கள் 2/$.  10-20% கூட்டுறது பரவாய் இல்லை.  50-100% கூட்டுறது கொஞ்சம் கூட.

நீங்கள் நினைப்பது போல சாப்பாட்டுக்கடை வருமானமில்லாமல் இல்லை.  100% லாபம் எடுக்கும் ஒரே வியாபாரம்.  பலர் பூட்டியதுக்கு காரணம் 1. ஏற்கனவே 4 சாப்பிட்டு கடை இருக்கிற இடத்தில  திறக்கிறது.  2.  வாடிக்கையாளர்களிடம் சரியான அணுகுமுறை இல்லை.  எதோ நாங்கள் வில்லங்கத்துக்கு போற போல நினைப்பு.  3.  தரம். 

இதுதான் உண்மை.....நாங்களும் கஸ்டப்பட்டு உழைக்கிறது...அவர்களும் அவ்வாறுதான்....ஆனால் ஒரு மனச்சாட்சி வேண்டும்....

2 hours ago, Sabesh said:

எனது தமிழ் சாப்பாட்டுக்கடை கொள்வனவு சரியான குறைவு.  சாப்பாடு (சோறு புட்டு இட்லி பிரியாணி) என்று ஒரு நாளும் வாங்கியது இல்லை (ஓரிரு தடவை வேறு வீடுகளுக்கு அவசரமாக கொடுக்க வேண்டிய தேவைகளைத் தவிர).  

நான் வாங்குவது அப்பப்போ கொத்து ரொட்டி, ரோல்ஸ், சமோசா/பற்றிஸ், மோதகம் மற்றும் ரோஸ்ற் பாண்.  
வெறும் உருளைக்கிழங்குகை (10  இறத்தல் 3 டாலர்)  அவிச்சு அதை மட்டன் gravy  ஓட கலந்து மாவிலை உருட்டி பழைய எண்னிக்கை போட்டு குடுக்கிற ரோல்லஸிற்கு  ஏன் 1.50  என்று இன்னும் விளங்கவில்லை.  அதே போல சமோசா பற்றிஸ் எண்ட பேர்ல வெறும் மாவை எண்னிக்கை போட்டு விற்கிறார்கள் விக்கிரங்கள் 2/$.  10-20% கூட்டுறது பரவாய் இல்லை.  50-100% கூட்டுறது கொஞ்சம் கூட.

நீங்கள் நினைப்பது போல சாப்பாட்டுக்கடை வருமானமில்லாமல் இல்லை.  100% லாபம் எடுக்கும் ஒரே வியாபாரம்.  பலர் பூட்டியதுக்கு காரணம் 1. ஏற்கனவே 4 சாப்பிட்டு கடை இருக்கிற இடத்தில  திறக்கிறது.  2.  வாடிக்கையாளர்களிடம் சரியான அணுகுமுறை இல்லை.  எதோ நாங்கள் வில்லங்கத்துக்கு போற போல நினைப்பு.  3.  தரம். 

சபேஷ்,

நிறைய நிறைய இறைச்சி போட்டு, இலங்கை தக்காளி சோஸ் (MD) போட்டு ஒரு தமிழ் கடையில் விற்கின்றார்கல். 3 றோல்ஸ் 7.50. கொள்ளுப்பிட்டியில் உள்ள இல் upscale breakfast restaurant இல் சாப்பிட்ட மாதிரி இருக்கும். விற்பியில் தான் உள்ளது. பெயர்: Cuisine Xpress. அங்குள்ள எல்லா உணவும் நல்ல தரமானது. ஆனால் விலை...கடும் விலை. (ஒரு கொத்து $13 இல் இருந்து $15 வரை).

நல்ல தரமாக, ஆனால் விலை அதிகமாக விற்கும் சில தமிழ் / இலங்கை உணவுக் கடைகள் அண்மையில் திறக்கத் தொடங்கியுள்ளனர். இது ஸ்பைஸ் லாண்ட், பூரணி போன்ற தரத்தை போன்றவை அல்ல (Example: Bhai biriyani)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.