Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரதமருக்கு ஆர்ப்பாட்டக்காரர்களின் பதில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமருக்கு ஆர்ப்பாட்டக்காரர்களின் பதில்

மக்கள் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகள்.
278471157_3523724971188051_8418767019508

01. ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும்.
02. ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் நாடாளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது.
03. அத்தியாவசிய சேவைகள்நெருக்கடியில் உள்ள விசேட பகுதிகள் (சுகாதாரக் கல்வி போன்றவை…) மறுசீரமைப்பதற்காக 19வது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்தி 06 மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குதல். 
04. அனைத்து திருடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள ஊழல் அரசியல்வாதிகள் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட ராஜபக்ச குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிராக இடைக்கால அரசாங்கம் அமைக்கவும் செயல்படுத்தவும் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
05. 06 மாதங்களுக்குள் பாராளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுத்தல்.
இந்த கோரிக்கைகள் வெற்றி பெறும் வரை போராட்டத்தை கைவிட அவர்கள் தயாராக இல்லை.

https://thinakkural.lk/article/173971

  • கருத்துக்கள உறவுகள்

# பிரதர்ஸ்குள்ள தூங்கிட்டு இருக்குற மிருகத்த தட்டி எழுப்பிடாதியள் ..தாங்க மாட்டியள்.. 😢

IMG-20220413-134243.jpg

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கிருபன் said:

அனைத்து திருடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள ஊழல் அரசியல்வாதிகள் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட ராஜபக்ச குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிராக இடைக்கால அரசாங்கம் அமைக்கவும் செயல்படுத்தவும் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நல்லாட்சி என்று சொல்லப்பட்டவர்கள் இவர்களின் ஊழல்களுக்கு எதிராக  நீதிமன்ற  நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது, இந்த மக்களை கொண்டு ஆர்ப்பாட்டங்களை செய்து தப்பித்துக்கொண்டார்கள். இப்போ அந்த மக்களே இவர்களுக்கெதிராக நீதி கோரி, ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். வெகு விரைவில் போர் வெற்றியும் பிசுபிசுத்து போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவார்கள். காலம் அவர்களை தள்ளும்!

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

"அன்பார்ந்த சிங்களமக்களே....உங்களுக்காக தமிழர்களை அழிக்க எவ்வளவு கஷ்டங்களை நானும் என்னுடைய குடும்பமும் பட்டோம் என்பதை அறியாமல் எங்கள் மீது பெரும் அவதூறுகளை பரப்பி நாட்டை விட்டு விரட்டியடிக்க எத்தனிக்கிறீர்கள். உண்மையை சொல்லுங்கள் நீங்கள்தானே எங்களை இனவாதிகளாக்கி கொண்டாடினீர்கள் இப்போது நீங்கள் நல்லவர்களாகவும் நாங்கள் கெட்டவர்கள் போலவும் நாடகம் ஆடுகிறீர்களே.. "

அடுத்த கட்ட மகிந்த உரை இப்படி அமைந்தாலும் ஆச்சரியம் ஏதுமில்லை 🙄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

01. ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும்.
02. ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் நாடாளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது.
03. அத்தியாவசிய சேவைகள்நெருக்கடியில் உள்ள விசேட பகுதிகள் (சுகாதாரக் கல்வி போன்றவை…) மறுசீரமைப்பதற்காக 19வது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்தி 06 மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குதல். 
04. அனைத்து திருடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள ஊழல் அரசியல்வாதிகள் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட ராஜபக்ச குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிராக இடைக்கால அரசாங்கம் அமைக்கவும் செயல்படுத்தவும் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
05. 06 மாதங்களுக்குள் பாராளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுத்தல்.
இந்த கோரிக்கைகள் வெற்றி பெறும் வரை போராட்டத்தை கைவிட அவர்கள் தயாராக இல்லை.

1950களிற்கு பின் சிறிலங்கா இனவாதம்   இயற்கை அனர்த்தங்களையும், தமிழர்களின் உரிமை போராட்டத்தை பயங்கரவாதமாக்கி அதன் மூலம் வரும் உதவிகளையும் வைத்தே  சோறு போட்டது. சிங்கள மக்களை சர்வதேசங்கள் மூலம் வரும் அபிவிருத்தி நிதி , மானியங்களை வைத்து ஒரு மறைமுக போலி  இலவச வாழ்கையை வழங்கி வந்தது. பல நாள் கள்ளன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல் அது இன்று நடந்து கொண்டிருக்கின்றது.

சர்வதேசத்தின் உதவிகளும் இல்லை. நிதிகளும் இல்லை.அபிவிருத்தி உதவிகளும் இல்லை. மூன்றாம் உலக நாடுகளுக்கான மானியங்களும் இல்லை.வெறும் தனி இனவாத பொட்டுக்கேடு இன்று சகல மக்களுக்கும் தெரிய வந்துவிட்டது.

சிங்கள இனவாதம் செய்த தவறு தமிழர்களை ஒடுக்க நினைத்தது. இலங்கை வருவாயின் முதுகெலும்பாக தேயிலை தொழிலாளர் கூட தமிழர்களே. அவர்களுக்கு கூட தொழிலிற்கேற்ற ஊதியம் இல்லை. 

ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வல்வை சகாறா said:

"அன்பார்ந்த சிங்களமக்களே....உங்களுக்காக தமிழர்களை அழிக்க எவ்வளவு கஷ்டங்களை நானும் என்னுடைய குடும்பமும் பட்டோம் என்பதை அறியாமல் எங்கள் மீது பெரும் அவதூறுகளை பரப்பி நாட்டை விட்டு விரட்டியடிக்க எத்தனிக்கிறீர்கள். உண்மையை சொல்லுங்கள் நீங்கள்தானே எங்களை இனவாதிகளாக்கி கொண்டாடினீர்கள் இப்போது நீங்கள் நல்லவர்களாகவும் நாங்கள் கெட்டவர்கள் போலவும் நாடகம் ஆடுகிறீர்களே.. "

அடுத்த கட்ட மகிந்த உரை இப்படி அமைந்தாலும் ஆச்சரியம் ஏதுமில்லை 🙄

இவ்வளவு போராட்டங்கள் நடந்தும்  கொத்தா ,மகிந்தா ராஜினாமா செய்யவில்லை..
அவர்களிடம் ஒர் நிகழ்ச்சி நிரல் உள்ளது போல தெரிகிறது...
ஏனைய ராஜபக்சாக்கள் ராஜினமா செய்துள்ளனர்.

இன்னும் இரண்டு வருடங்கள் ஆட்சியை கையில் வைத்திருப்பார்கள் ...எடுத்த பணத்தை காப்பாற்றவும் ,கைது செய்வதை தடுப்பதற்கும்...

இரட்டை குடியுரிமை இவர்கள் வைத்திருப்பதன் காரணமே அது தான் ....
கோத்தா அமெரிக்கா சென்று விடுவார் ,மகிந்தா ஜனாதிபதியாக வரும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றனவா என ஆராய்வார்கள் அல்லது பிரதமர் அதிகாரம் கொண்டவராக அரசியலை மாற்றுவார்கள்...

போராட்டம் இன்னும் கிராம மக்களிடம் போய் சேரவில்லை ....கொழும்பு கொள்ளோ,கெள்ளொ தான் போராடுகின்றனர்...

ஜனாதிபதி இன்னும் தனது அதிகாரத்தை (பொலிஸ் இராணுவ படைகளை  பாவிக்காமைக்கு காரணம் .....அகிம்சை வழியில் தமிழ் இளைஞர்கள் போராடியிருந்தால் இனவழிப்பு நடந்திருக்காது என காட்டுவதற்கு ....

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, putthan said:

இலங்கை அடிப்படையில் வங்குரோத்தாகிவிட்டது ( கடனை மீள செலுத்த முடியாதநிலை ஏற்பட்ட பின்பு உருவாவது, ஆனால் இலங்கை கடனை செலுத்துவதை பிற்போட்டுள்ளதாக தானாகவே அறிவித்ததன் மூலம் ஏற்பட்டுள்ளது), இலங்கை கடனை வெளிநாட்டிலும், உள்நாட்டில், வங்கிகளிலும் பெற்றுள்ளது.

இலங்கை வங்கிகள் தமது இருப்பாக 5% (Reserve) வைத்திருத்தல் வேண்டும் என நினைக்கிறேன் ( சில வேளை 5% விட கூடவாகவிருக்கலாம்) மிகுதி 95% முதலீடு செய்திருக்கும், பொதுவாக அரச கடன் முறிகள் பாதுகாப்பு அதிகம் என்பதால் இலங்கை வங்கிகள் அரச கடன் முறிகளில் அதிகம் முதலிட்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.

இலங்கையரசு கடன் மற்றும் வட்டிகளை செலுத்தாவிட்டால் முதலீட்டாளர்களின் காசு இழக்கப்படும், மக்கள் நட்டத்தினை தவிர்க்க தமது இருப்புகளை எடுக்கும் போது வங்கிகள் முறிவடையும் நிலை ஏற்படலாம், நான் இலங்கையிலுள்ள தெரிந்தவர்களிடம் இது பற்றி கேட்டேன் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை.

இதனால் அதிகம் தொழில்துறைதான் பாதிக்கப்படும், இன்னும் 4 வருடங்களில் இலங்கையின் கடன் தற்போதுள்ள நிலையினை வைத்து பார்த்தால் இரண்டு மடங்கிற்கு மேலாகிவிடும் எனப்படுகிறது, எனது கருத்து தவறாக இருக்கலாம், எனக்கு துறைசார் கல்வியறிவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, vasee said:

இதனால் அதிகம் தொழில்துறைதான் பாதிக்கப்படும், இன்னும் 4 வருடங்களில் இலங்கையின் கடன் தற்போதுள்ள நிலையினை வைத்து பார்த்தால் இரண்டு மடங்கிற்கு மேலாகிவிடும் எனப்படுகிறது, எனது கருத்து தவறாக இருக்கலாம், எனக்கு துறைசார் கல்வியறிவில்லை.

ஆட்சியில் இருந்த சகல அரசுகளும் கொள்ளை அடித்துள்ளார்கள் .....
ஆனால் பெரும் தொகையை இவர்கள்  கொள்ளையடித்துள்ளனர் ...
குடும்ப ஆட்சி செய்தமை அடுத்த தவறு..

இடதுசாரிகளுடன் சேர்ந்து கற்பனை சோசலிசம் செய்ய வெளிக்கிட்டது அடுத்த தவறு..

அரச பணத்தில் இனவாத/மதவாத சிந்தனையை தூண்டுவதற்கா குடியேற்றங்கள்,விகாரைகள் ,தொல்பொருள் திணைக்களம் போன்வற்றுக்கு செலவளித்தமை 

முக்கியமாக இலங்கையில் உற்பத்தி யாகும் நெல்,சீனி,தென்னை  போன்றவற்றை  அபிவிருத்தி செய்ய தவறியமை .....எல்லாவற்றுக்கும் இனவாதம் பேசி பேசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.