Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருந்தூரில் புத்தர் சிலை நிறுவுதல் தடுத்து நிறுத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

வழங்குத் தொடுனர் தரப்பான பொலிஸார் இந்த வழக்குத் தொடர்பாக தங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை நீதிமன்றிலே கூறுவதற்காக, இந்த வழக்கு விசாரணைகளை இந்தமாதம் 23 ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளார்.

என்னத்தை புதுசா சொல்லப்போகினம்? தொல்பொருளியல் ஆராய்ச்சி தலைவர் சொன்னமாதிரி இதொன்றும் தங்களுக்கு தெரியாது என்று கையை பிசைவினம். ஆனால் தமிழர் விவகாரங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பினம். விசாரணை  என்று கைது செய்வினம்.

  • Replies 52
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நாதம்.

மீடியா என்று சொல்லிக்கொண்டு வால் பிடிக்கும் பச்சோந்தியை பார்த்தீர்களா? இங்க நிக்கிறான் தமிழன்! சிங்களத்தின் தமிழருக்கெதிரான ஒவ்வொரு திட்டத்தின் வெற்றியின் பின்னாலும் நிற்பது ஒட்டுண்ணித்தமிழன், அவனே தொலைபேசியை பறிக்கும்படி காவற்துறைக்கு சொல்லிக்கொடுக்கிறானாம். எல்லா போராட்டங்களையும் ஆங்கிலம் தெரிந்தவர்கள் கையாண்டு உடனடியாக வெளிநாடுகள் பார்க்கும்படி செய்ய வேண்டும். அந்தபச்சோந்தி இவர்களோடு தமிழில் மல்லுக்கட்டிவிட்டு காவற்துறைக்கு வேறு ஏதோ சொல்லுது. தமிழர் பிரதேசத்தில், தமிழ் தெரியாத காவற்துறை, எப்படி மக்களுக்கு சேவை செய்வினம்? மகிந்த சிந்தனை அது.

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

24 மணி நேர பொலிஸ் காவலுக்கு மத்தியிலும் நீதிமன்ற கட்டளையை மீறி முற்றுப் பெற்றுள்ள குருந்தூர்மலை பௌத்த கட்டுமானம்!

Published By: VISHNU

23 FEB, 2023 | 04:20 PM
image

கே .குமணன் 

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு அமைந்துள்ள குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி  அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது.  

IMG_2832.jpg

கடந்த வருடம் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இங்கு மேற்கொள்ளப்படும் பௌத்த கட்டுமானங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனவும் 12/06/2022 அன்றைய நாளில் கட்டுமானம் எந்த நிலையில் காணப்பட்டதோ அதே நிலையை தொடர்ந்து பேணுமாறும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளையை ஆகியிருந்தது.

IMG_2835.jpg

இருந்த போதிலும் இந்த கட்டளையை மீறியும் தொடர்ந்து கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அந்த கட்டளையையும் மீறி அங்கு கட்டுமான பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

IMG_2836.jpg

அது தொடர்பில் குருந்தூர்மலை ஆதி ஐயனார் ஆலயத்தினரும் அரசியல் பிரதிநிதிகளும் குருந்தூர் மலை பகுதியில் கடந்த 2022/09/20 அன்று போராட்டம் செய்திருந்தனர். 

IMG_2819.jpg

அதன் தொடர்சியாக 21/09/2022 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு வேறு சில B அறிக்கைகள் தாக்கல் செய்யப்ட்டிருந்ததோடு ஆதி அய்யனார் ஆலயம் சார்பில் சட்டதரணிகளால் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

IMG_2822.jpg

இந்த கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறுவது தொடர்பில் முல்லைத்தீவு பொலீசில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான கட்டளைகாக கடந்த வருடம் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி  மீண்டும் ஒரு கட்டளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் வழங்கியிருந்தது. 

IMG_2817.jpg

அதாவது கடந்த 19.07.22 அன்று ஏற்கனவே வழங்கிய நீதிமன்ற கட்டளையை அவமதித்து யாராவது புதிதாக கட்டங்களை அல்லது மேம்படுத்தல்கள்களை குருந்தூர்மலையில் அமைத்தால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதமுடியும் என்றும் அவ்வாறு சம்பவங்கள் இடம்பெற்றால் அது தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளைகளை வழங்கியுள்ளது. 

IMG_2815.jpg

இந்த கட்டளை வழங்கப்படும்போது பூரணமடையாத நிலையில் காணப்பட்ட குருந்தூர்மலை விகாரை கட்டுமானம் தொடர்சியாக கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு தற்போது பூர்த்தியாக்கப்பட்டுள்ளதை இன்றையதினம் (23) குருந்தூர்மலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவநேசன் ஆகியோர் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர். 

IMG_2813.jpg

இவர்கள் குருந்தூர்மலைக்கு சென்ற வேளை அங்கு தொடர்சியாக பௌத்த கட்டுமானம் வேலைகள் இன்று கூட இடம்பெற்றுள்ளதற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளது, இரவு நேரத்தில் இந்த கட்டுமானங்கள் தொடர்சியாக இடம்பெற்றுள்ளதை அவதானிக்கும் வகையில் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டுள்ள அடையாளங்கள் காணப்பட்டுள்ளது. 

IMG_2793.jpg

இவ்வாறான கடுமானங்கள் இடம்பெறும் நேரத்தில் 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பும் அப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.

IMG_2801.jpg

https://www.virakesari.lk/article/148985

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஏராளன் said:

இந்த திரியை முதலில் இருந்து வாசித்தால் எப்படி தந்திரமாக இந்த விகாரை கட்டுமானத்தை நீதிமன்றை பிஸ்கோத்து ஆக்கிவிட்டு பண்ணியுள்ளார்கள் என்பது புரியும்.

இந்த சிங்களவர்களோடுதான், மேற்கை நம்ப கூடாது, யாரின் மத்தியஸ்தமும் வேண்டாம், சண்டைகாரன் காலில் நேரடியா விழுந்து, அவர்களோடு டீல் போட்டு பேச வேண்டும், கடனில் இருப்பதால் இலங்கை வேறு வழி இன்றி ஒத்து கொள்ளும் இப்படி பலர் யாழிலும் வெளியிலும் பூ சுத்தி கொண்டு இருக்கிறார்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

மோடி இருந்தால் தமிழர் பகுதியில் புத்த சிலை வைக்க முடியாது என்போருக்கு,

சிலை அல்ல விகாரையே வைப்பான்🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவரோடு சேர்ந்து மோடியும் எங்களை அழிப்பார் என்றதுதான் உண்மை.. 

சிங்களவர் அரச ஆதரவோடு குருந்தூர் மலை என்ன  வடக்கு கிழக்கில் புதிது புதிகாக நிலம், காடு மலை என போய் புத்தர் சிலையைக் கட்டி குடியேற்றங்களை செய்வார்கள்.  அவர்கள் இதனை ஒற்றுமையாக செய்கிறார்கள். 

ஆனால் நாங்கள், எங்கட ஆட்கள் கோயில்கள் நிறைந்த ஊரிலேயே இருக்கும் கோயில்களை பாதுகாத்து பாராமரிக்க வழியில்லாத நிலையிலும் சாதிக்கொரு கோயில், வீதிக்கொரு கோயில் கட்டுவதோடு மட்டுமல்லாது புதுப்புது கடவுள்மாரையும் கொண்டு வந்து எல்லாவற்றையும் கெடுத்து வைக்கிறார்கள். 
காணாத கடவுளுக்கு புதிதாக பல கோயில்கள்.. ஏற்கனவே இருக்கும் கோயில்களில் புறாக்கள்தான் கூடு கட்டுகிறது..  

மோடியும் எங்களை வாழவிடார்.. சிங்களவரும் மாறமாட்டார்..எங்கட ஆட்களும் திருந்தப்போவதில்லை. 
புதுப்போட்டை தனுஷ் மாதிரி பேட்டை ரவடிகளாக திரியறது ஒரு பகுதி.. இன்னொரு பகுதி(கொஞ்சம் படிச்ச(?) கூட்டம்) சிங்களவர்களை நம்பி சேர்ந்து வாழலாம் என்று மூளைச்சலவை நடக்குது.. இரண்டிற்கும் இடையில இன்னொரு பகுதி எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார்கள்.. 
இப்படியே போகவேண்டியதுதான்.. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

மேற்கை நம்ப கூடாது

மேற்குலகம் தானாம் சிங்கலவரை பயன்படுத்தி தமிழர்களை அழித்ததாம், இப்போதும் அழிக்கின்றதாம்.மேற்குலகின் தமிழர்களை அழிப்பதற்கான கருவி தானாம்  சிங்களவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, goshan_che said:

மோடி இருந்தால் தமிழர் பகுதியில் புத்த சிலை வைக்க முடியாது என்போருக்கு,

சிலை அல்ல விகாரையே வைப்பான்🤣

ஹிந்திக்கும் சிங்களத்திற்கும் தமிழினம் தான் முட்டுக்கட்டையும் விரோதியும்.
சம்பவங்களில் ஒன்று தமிழ்நாட்டில் நடக்கின்றது. மற்றது இலங்கையில் நடக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  தண்ணிமுறிப்பு  பகுதியில்  அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி  அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைகளுக்கு மாறாக கட்டுமானம் : முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

Published By: VISHNU

02 MAR, 2023 | 07:04 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற கட்டளைகளுக்கு மாறாக நீதிமன்ற அவதானிப்புக்களுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

received_731773115061439.jpeg

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற கட்டளைகளை மீறி இடம்பெற்று வரும் கட்டுமான பணிகள் தொடர்பில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் ஏற்க்கனவே இருந்த AR/673/18 வழக்கானது இன்றையதினம் (02)நகர்த்தல் பத்திரம் இணைத்து நீதிமன்றில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

received_237338735309729.jpeg

இதன்போது நீதிபதி ரி.சரவணராஜாவினால் நீதிமன்ற கட்டளைகளுக்கு மாறாக நீதிமன்ற அவதானிப்புக்களுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளையாக்கி  வழக்கு விசாரணைகளை  30.03.2023 திகதிக்கு தவணையிட்டுள்ளார்.

received_567579018660734.jpeg

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பில் முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சமூக செயற்ப்பாட்டாளர்  ஞா.யூட் பிரசாந் ஆகியோர்  இன்று வழக்கு தொடுனர்கள்  சார்பில் முன்னிலையாகினர்.

இவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான  வி.எஸ்.தனஞ்சயன், சுபா விதுரன், ருஜிக்க  நித்தியானந்தராஜா உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் சட்டத்தரணிகள் ஆறுபேர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

received_211470874791167.jpeg

சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை கேட்ட நீதிபதி இவ்வாறு கட்டளையை  பிறப்பித்தார் குறித்த விடயம் தொடர்பில் வழக்கு தொடுனர்  சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி   வி.எஸ்.தனஞ்சயன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.

IMG-20230223-WA0003.jpg

இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் AR /673/18 என அழைக்கப்படும் குருந்தூர் மலை வழக்கில்  நகர்த்தல் பத்திரம் இணைத்து  கௌரவ நீதிமன்றத்திற்கு சமர்பணம் செய்துள்ளோம்.ஆதிசிவன்  ஐயனார்  ஆலயம் சார்பில் இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

20230223_152958634.jpg

ஏற்கனவே இந்த வழக்கில் கௌரவ நீதிமன்றமானது மூன்று திகதிகளில் கட்டளையினை வழங்கியுள்ளது இறுதியாக 24.11.2022 அன்று கட்டளை வழங்கியது அதில் 12.06.2022 ஆம் ஆண்டு ஆலய சூழல் கட்டுமானங்கள் எவ்வாறு இருந்ததோ அந்த கட்டுமானங்கள் அவ்வாறே இருக்கவேண்டும் என்றும் மேலதிகமாக கட்டுமானங்கள் எவையும் இடம்பெறக்கூடாது என்று கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது.

IMG-20230223-WA0002.jpg

அந்த கட்டளையினை மீறி தொடர்ச்சியாக தொல்பொருள் திணைக்களத்தினாலும், குறித்த ஆலயத்தினை சார்ந்த விகாராதிபதியாலும் பொலிசாரினதும் இராணுவத்தினரதும் ஒத்துளைப்புடன் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக நாங்கள் புகைப்பட சாட்சிகள் ஊடாகவும் ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டளையினை மீறி தற்போது கட்டுமானங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது என்கின்ற அடிப்படையில் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு சட்டத்தரணிகளுடன் சமர்பணம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சமர்பணத்தில் குறிப்பிட்ட கட்டளையினை மீறும் வகையில் தொடர்ச்சியாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற செயற்பாடானது நீதிமன்றத்தில் பொதுமக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையினை பாதிக்கும் செயற்பாடாக இருக்கின்றது என்றும் விசேடமாக சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

இதனை கேட்ட நீதிபதி அவர்கள் இது தொடர்பிலான மேலதிக அறிக்கை சமர்ப்பிக்க முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் தொல்பொருள் திணைக்கள தலைவருக்கும் அறிவித்தல் அனுப்பியுள்ளார்.

மீளவும் இந்த வழக்கு  எதிர்வரும் 30 ஆம் திகதி அழைப்பதற்காக கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது அன்று பொலிஸ் பொறுப்பதிகாரியும் தொல்பொருள் திணைக்களத்தின் தலைவரும் சட்டவிரோதமாக மேலதிகமாக கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதா அங்கு மேம்படுத்தல் வேலைகள் நீதிமன்ற கட்டளையினை மீறி இடம்பெற்றதா  என்பது தொடர்பில் அவர்கள் பதிலை வழங்குவதற்கா குறித்த  திகதிக்கு வழக்கு திகதியிடப்பட்டுள்ளது என்றார். 

https://www.virakesari.lk/article/149571

  • கருத்துக்கள உறவுகள்
On 24/2/2023 at 08:33, விளங்க நினைப்பவன் said:

மேற்குலகம் தானாம் சிங்கலவரை பயன்படுத்தி தமிழர்களை அழித்ததாம், இப்போதும் அழிக்கின்றதாம்.மேற்குலகின் தமிழர்களை அழிப்பதற்கான கருவி தானாம்  சிங்களவர்கள்.

தமிழரை அடிமைகளாக்கி, அவர்களின் உடமைகளை தமதாக்க தமிழரின் விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதமாக்கி சர்வதேசத்தின் உதவியைப்பெற்று அழித்தது சிங்களம், இன்னும் மீண்டெழ விடாமல் தடைகளைப்போட்டு நசுக்கிக்கொண்டு அடம்பிடிக்கிறது. சிங்களத்தின் முட்டாள்தனத்தை தனக்கு சாதகமாக்கி, சிங்களத்தின் வழியிலேயே தமிழரை பயங்கரவாதிகளாக ஏற்றுக்கொண்டு சிங்களத்தை விழித்தெழ விடாமல் புலிகள் கனவில் மாயையில் வைத்துக்கொண்டு அற்ப சலுகைகளை  செய்து கொண்டு இலங்கையை ஆக்கிரமிக்குது அயல்நாடும் மேற்குலகும். உதாரணம் இல்லாத இயக்கத்துக்கு அவ்வப்போது தடை, இயங்குகிறது, மீழெழுகிறது என்கிற திகில் விறுவிறுப்பான கதை வசனம். நீங்கள் மற்றவர் கருத்தில் குறைபிடித்துக்கொண்டு இருங்கள், நடக்கிற நிகழ்விலிருந்து எதையும் சிந்திக்காதீர்கள்.  தமிழரை அழிப்பதில் சிங்களத்துக்கு எவ்வளவு பங்குண்டோ அவ்வளவு பங்கு சர்வதேசத்துக்கும் உண்டு. எதற்காக ஒரு விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதமாக்கி அழித்தார்கள்? இப்போ சிங்களம் தமிழருக்கெதிராக செய்யும் அடாவடிகளை காணாமல் இருக்கிறார்கள் என்பதை சிந்தித்தாலே உண்மை புரியும்.   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, satan said:

தக்க தருண கருத்து. அருமை 👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலையில் பௌத்த வழிபாட்டுக்கு இடையூறு தொடர்பான வழக்கு ; வினோ, கஜேந்திரன் எம் பிகள் மன்றில் ஆஜராக உத்தரவு

Published By: T. Saranya

03 Mar, 2023 | 10:04 AM
image

கே .குமணன் 

குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவித்து பௌத்த தேரர்களால் தொடரப்பட்ட வழக்கில் பாராளுமன்ற  உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம் மற்றும், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் மன்றில் ஆஜராகவேண்டுமென முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற  நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார். 

குறித்த வழக்கானது நேற்று (02)முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே நீதிபதியால் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

அத்தோடு மேலதிக விசாரணைகளுக்காக இவ்வழக்கானது எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.  

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் கடந்த 12.06.2022 அன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான முயற்சியில் பௌத்தபிக்குகள் மற்றும், பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச்சார்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து முன்னெடுத்திருந்தனர். 

இந்நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி மேற்கொள்ள இந்த முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் ஜனநாயகரீதியிலான போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். 

இவ் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், செல்வராஜாகஜேநனதரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன்,கந்தையா சிவநேசன் மற்றும், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். 

அந்தவகையில் மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையை மீறி அன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த நிகழ்வுகள் அனைந்தும் ஏற்பாட்டாளர்களால் கைவிடப்பட்டிருந்தன. 

இந்நிலையில் குருந்துர்மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளை தடுக்கமுற்பட்டதாகத் தெரிவித்து, ஆலய நிர்வாகத்தினரோடும், பொதுமக்களோடும் மக்கள் பிரதிநிதிகளாக இணைந்து ஜனநாயகவழி போராட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோருக்கு எதிராக மணலாறு சப்புமல்தென்ன ஆராண்ய விகாராதிபதி கல்கமுவ சந்தபோதி தேரர் உள்ளிட்ட ஏழு தேரர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தேரர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை விசாரணைக்கு வருமாறு முல்லைத்தீவு பொலிஸார் அழைப்பாணை விடுத்திருந்தனர். 

பொலிஸாரால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைவாக கடந்த 02.09.2022 அன்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் சென்று தமது வாக்குமூலங்களையும் வழங்கியிருந்தனர். 

இவ்வாறு வாக்குமூலங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, பொலிஸார் இந்த விவகாரம் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கொன்றினைத் தாக்கல் செய்தனர். 

அந்தவகையில் பௌத்த துறவிகளுக்கும், அவர்களுடன் வழிபாடுகளுக்காக வந்த குழுவினருக்கும் அச்சுறுத்தல் விடுத்தமை, அவமானம் ஏற்படுத்தும் வகையில் நடந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து B/688/22 என்னும் வழக்கிலக்கத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகள், 10.11.2022அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில், நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளதும், பொலிஸாரினதும் வாதங்களைச் செவிமடுத்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், ஜூட் நிக்சன் ஆகியோரை தலா ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுவித்து உத்தரவிட்டிருந்ததுடன், 02.03.2023ஆம் திகதிக்கு மேலதிக விசாரணைகளுக்காகத் திகதியிட்டிருந்தார். 

அந்தவகையில் குறித்த வழக்குவிசாரணை 02.03.2022 இன்று நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் சந்தேக நபர்களாக பெயர்குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகவேண்டுமென உத்தரவிட்டுள்ளதுடன், குறித்த வழக்கானது எதிர்வரும் 08.06.2023ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/149583

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் கடந்த 12.06.2022 அன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான முயற்சியில் பௌத்தபிக்குகள் மற்றும், பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச்சார்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

18 hours ago, கிருபன் said:

இந்நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி மேற்கொள்ள இந்த முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் ஜனநாயகரீதியிலான போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதற்கு நடவடிக்கை எடுக்க கேள்வி கேட்க வக்கில்லாத நீதிமன்றம், ஜனநாயக ரீதியில் போராடியவர்களுக்கெதிராக உத்தரவு! எங்கே பிழை? சிங்களம் நினைத்ததை சாதிப்பதற்கு அவனும் அவனது சட்டங்களும் நீதி முரண்களும் மட்டும் காரணமல்ல நாங்களுந்தான்!

தமிழர் பிரதேசத்தில், அந்தச்சமயம் சாராதோர் வாழும் இடத்தில விகாரை எழுப்பியது யார்? வழிபாடு செலுத்தியோர் அந்தப்பிரதேசத்தை சார்ந்தவர்களா? புத்தருக்கு வழிபாடு செலுத்த எத்தனையோ இடங்கள் அது சார்ந்த மக்கள்  இருக்க தமிழரின் வழிபாட்டு இடங்களை ஆக்கிரமித்து விகாரை கட்டியவர்களல்லவா கேள்வி கேட்கப்படவேண்டியவர்கள்? ஒருவர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி அவமதித்து செயற்படும்போது, பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் நீதிமன்றத்தை அவமதிக்கக்கூடாது என்று அழைப்பாணை விடுவது எந்த வகையில் நிஞாயம்? மக்கள் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிப்பார்களா? ஏன் இந்த நீதிபதிகள் தங்கள் கடமையை செய்வதில் ஏற்படும் இடர்களை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தக்கூடாது? நாளைக்கு உள்நாட்டுக்குள்ளேயே போர்க்குற்ற விசாரணை என்று அடம்பிடிக்கும் அரசால்  இந்த நீதிபதிகளே இலங்கைபோர்குற்றவாளிகளை இலங்கைக்குள்ளேயே விசாரிக்க நியமிக்கப்படுவார்கள், அப்போ இதே தீர்ப்பைத்தான் இவர்கள் வழங்கப்போகிறார்கள்?          

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்ற உத்தரவை மீறி விகாரை கட்டியது முதற்தவறு. அதில் அவ்விடம் சாராதோர் தென்னிலங்கையில் இருந்து வந்து வழிபாடு என்கிற போர்வையில் பிரதேசவாசிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியது அடுத்த தவறு. அதை சுட்டிக்காட்ட வக்கத்த நீதிமன்றம், பிழையான சமிக்ஞையை மக்கள் மத்தியில்  காட்டுது. நீதிமன்றம் முதலில் அழைத்து கேள்வி கேட்க வேண்டியது தொல்பொருளாராய்ச்சி அமைச்சை, இந்த பிழையான நீதிமன்றக்கொள்கை இன்னும் பலஇடங்களில் விகாரைகளை அமைக்கவும், இடங்களை பிடித்து சமூகங்களுக்கிடையில் வேண்டாத பிரச்சனைகளையே உருவாக்கவுமே உதவும்! 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

விகாரை கட்ட.. நீதி மன்றத்தால் தடை விதிக்கப் பட்ட பின்,
விகாரை…. பல மாதக் கணக்கில், இரவோடு இரவாக… பெரிதாக கட்டி எழுப்பியிருக்கிறார்கள்
அதனை இடித்துத் தள்ளாமல், நீதி மன்றமும் சிங்களவனுக்கு அவகாசத்தை கொடுத்து
போக்கு காட்டிக் கொண்டு, தமிழனுக்கு காதில் பூ சுற்றுகின்றது.
நமது அப்புக்காத்து எம்பிமார்… இதனை ஒரு அணியில் திரண்டு எதிர்க்க வேண்டிய தருணம் அல்லவா.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

இது எப்பவோ செய்திருக்க வேண்டியது சிறியர்! எல்லோருமே தூக்கத்தில் இருந்தனர் நீதிமன்றம் உட்பட.  இனிமேல் அது எவ்வளவு தூரத்துக்கு வேலை செய்யும் என்பது கேள்விக்குறி, விகாரை கட்டும் வேலை முடிவடைந்து பிரதிஷ்டை செய்ய வந்திருக்கிறார்கள். இப்போ ஜனநாயக முறையில் போராடிய நம்மவர்களை நீதிமன்றத்தின் கெடுபிடியில் இருந்து விடுவிக்க வேண்டிய நிலையில் தமிழர் இன்று. சிங்களமும் சர்வதேசமும் நம்ம நீதிபதிகளும் நம்மையே குற்றம் சாட்டுகிறார்கள், தடுக்கிறார்கள். இந்த நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்ற நீதியரசர்களாக பதவியுயர்வு கிடைக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

சாத்தான்… இலங்கைக்கு சுதந்திரம் கொடுக்கும் ஆரம்ப காலத்தில்,
சேர் பொன் அருணாச்சலம், இராமநாதன் போன்றவர்கள் தமிழ்ப் பகுதியை பிரித்து எடுக்க இங்கிலாந்துடன் பேச்சு வார்த்தை நடத்தி இருக்க வேண்டும்.
அவர்கள் விட்ட தவறுகள் இறுதியில்… நம் நிலப்பரப்பே குறுகி
தமிழர்கள் பலரை சிங்களவராகவும் மாற்றி விட்டார்கள்.

அதற்க்குப் பின்பு ஏற்பட்ட ஈழப்போரின் பின்பு கூட….

எமக்கு வாய்த்த அரசியல் தலைமைகள்….  தமது சுயநலத்துக்காக சிங்களவனுக்கு வக்காலத்து வாங்கும்… சுரணை கெட்ட தலைமையாக வாய்த்தது,
ஈழத்தமிழனின் சாபக் கேடு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சிங்களவன் மோடையன், நாங்கள்தான் திறமைசாலிகள் என்று கதைக்க வெளிக்கிட்டு, எங்களை வைத்தே தன்காரியத்தை அன்று தொடங்கி இன்றுவரை  கச்சிதமாக செய்து முடிக்கிறான். யாரை நோவது? இவ்வளவு இழப்புக்களைச் சந்தித்த பின்னும் திருந்தாத இனம் அழிவதைத்தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அவர்கள் விட்ட தவறுகள் இறுதியில்… நம் நிலப்பரப்பே குறுகி
தமிழர்கள் பலரை சிங்களவராகவும் மாற்றி விட்டார்கள்.

சிங்கள தேசியத்தை பலப்படுத்த அவர்கள் தமிழரில் பலரை சிங்களவராக மாற்றியது போல் நாமும் சிங்களவரை தமிழர்களாக மாற்றி எமது தேசியத்தை பலப்படுத்தி இருக்கலாம். தவறிழைத்து விட்டோம். இனியாவது  அப்படி முயற்சிக்க இப்போதே தொடங்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, island said:

சிங்கள தேசியத்தை பலப்படுத்த அவர்கள் தமிழரில் பலரை சிங்களவராக மாற்றியது போல் நாமும் சிங்களவரை தமிழர்களாக மாற்றி எமது தேசியத்தை பலப்படுத்தி இருக்கலாம். தவறிழைத்து விட்டோம். இனியாவது  அப்படி முயற்சிக்க இப்போதே தொடங்கலாம். 

பூனைக்கு யார் மணி கட்டுவது | Who will Bell the Cat in Tamil | Tamil Fairy  Tales - YouTube

🐈 பூனைக்கு, யார் மணி கட்டுவது? 🔔
உங்களது செல்லக் கையாலை... நீங்களே தொடக்கி வையுங்கோ. 🤣
ஒரு பக்கம்  கிழக்கில் தமிழர் முஸ்லீமாக மாற்றிக் கொண்டு இருக்கிறார்களாம். 

பிற் குறிப்பு: நான் ஏற்கெனவே கலியாணம் கட்டி விட்ட படியால்...
சிங்களத்தியை கலியாணம் கட்ட முடியாத இக்கட்டான நிலையில் உள்ளேன். 😜

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

நானும் உங்கள் நிலமை தான். பூனைக்கு மணி கட்ட தேவையில்லை தாலிய கட்டின யாழ் களத்தில்  அதற்கு ஆட்களா இல்லை. 😂😂😂😂

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இலங்கைக்கு சுதந்திரம் கொடுக்கும் ஆரம்ப காலத்தில்,
சேர் பொன் அருணாச்சலம், இராமநாதன் போன்றவர்கள் தமிழ்ப் பகுதியை பிரித்து எடுக்க இங்கிலாந்துடன் பேச்சு வார்த்தை நடத்தி இருக்க வேண்டும்

அதற்கு காரணம் இருக்கின்றது சிறி அண்ணா.
satan சொல்கின்ற மேற்குலகம் தான் சிங்கலவனை கொண்டு தமிழர்களை அழிக்கின்றது என்பதை போன்றே சேர் பொன் அருணாச்சலம், இராமநாதன் போன்றவர்ககளும் முற்காலத்தில் நம்பியிருக்கலாம். அதனால் தமிழர்களை அழிக்க விரும்புகின்ற இங்கிலாந்துடன் பேச்சு வார்த்தை நடத்தாமல் இருந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அதற்கு காரணம் இருக்கின்றது சிறி அண்ணா.
satan சொல்கின்ற மேற்குலகம் தான் சிங்கலவனை கொண்டு தமிழர்களை அழிக்கின்றது என்பதை போன்றே சேர் பொன் அருணாச்சலம், இராமநாதன் போன்றவர்ககளும் முற்காலத்தில் நம்பியிருக்கலாம். அதனால் தமிழர்களை அழிக்க விரும்புகின்ற இங்கிலாந்துடன் பேச்சு வார்த்தை நடத்தாமல் இருந்திருக்கலாம்.

விளங்க நினைப்பவன்.... உலகிலேயே, நம்பிக் கெட்டதும், 
காட்டிக் கொடுப்புகளாலும் அழிந்த  இனம் நம்  தமிழ் இனம். 

அத்துடன்.. எதிரிக்கு  அதிக இரக்க குணம் பார்ப்பதும்... ஆபத்தானது.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.