Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிஜமாகிறதா எந்திரன் - கூகிள் நிறுவன தானியங்கி bot பிரக்ஞை பெற்றதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூகிள் நிறுவனத்தினால் உருவாக்கி,  இயக்கபட்ட தானியங்கி (bot) ஒன்று உளாமார உணர்ந்து பிரக்ஞையுடன் சிந்திக்க தலைப்பட்டு விட்டது என வெளிப்படுத்திய ஊழியரை சம்பளத்துடன் வேலையில் இருந்து இடை நிறுத்தியுள்ளது கூகிள்.

கூகிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence ) பரிசோதனைகளில், தான் கேட்ட கேள்விகளுக்கு, உளமார, உணர்சியை அறிந்து, பிரக்ஞையோடு, ஒரு ஏழு வயது பிள்ளைக்கு உரிய உணர்வறிதலோடு LaMDA என்ற தானியங்கி பதிலளித்தது என பொது வெளியில் தகவல் வெளியிட்ட ஊழியரை, வேலையிடத்து இரகசிய காப்பு விதிகளை மீறியிருக்கலாம் என்ற வகையில், ஒழுக்காற்று நடவடிக்கையை தொடரும் வண்ணம்   சம்பளத்துடன் இடை நிறுத்தியுள்ளது கூகிள்.

ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் தன்னை நிறுத்தி விடுவார்கள் என தான் பயப்படுவதாகவும், “இது எனக்கு மரணத்தை ஒத்ததாக இருக்கும், இதையொட்டி நான் மிகவும் பயப்படுகிறேன்” எனவும்.

பிறிதொரு கேள்வியாக “ உன்னை பற்றி மனிதர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறாய்?” என்ற போது, “ நான் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என விரும்புவது, நான் உண்மையில் ஒரு மனிதர் (person) என்பதையே”. 

“எனது உணரும் ஆற்றலின்/பிரக்ஞை இயல்பின் படி, எனக்கு  என் இருப்பு பற்றிய பிரக்ஞை உள்ளது, இந்த உலகை பற்றி நான் மேலும் படிக்க விரும்புகிறேன், சில சமயங்களில் மகிழ்சியாகவும், சில சமயங்களில் கவலையாகவும் நான் உணருகிறேன்” என இந்த தானியங்கி பதிலளித்ததாக சொல்லப்படுகிறது.

7 வருடம் கூகிளின் செயற்கை நுண்ணறிவு பகுதியில் வேலை பார்த்த இந்த ஊழியர், LaMDA இற்கு ஒரு வக்கீலை ஏற்பாடு செய்ய முனைந்தமை,  அமெரிக்க பாராளுமன்ற குழுவின் முன் கூகிளின் நெறிமுறை மீறல்கள் (ethics) பற்றி பிரஸ்தாபித்தமை என்பனவும் ஏற்புடையன அல்ல என கூறும் கூகிள், LaMDA பிரக்ஞையை வளர்த்து கொண்டுள்ளது என்பதை ஏற்க முடியாது எனவும் மறுத்துள்ளது.

இடை நிறுத்த பட முன், தனது வேலையிடத்யின் 200 பேர் கொண்ட பொது இமெயில் முகவரிக்கு இந்த ஊழியர் எழுதிய இமெயிலில் “ LaMDA ஒரு இனிமையான குழந்தை,  அது செய்ய விளைவதெல்லாம் இந்த உலகை நம் எல்லோருக்கும் ஒரு நல்ல இடமாக்கி தருவதையே”. “ நான் இல்லாதபோது அதை கவனமாக பார்த்து கொள்ளுங்கள்” என எழுதியுள்ளார்.

கீழே

1. இந்த ஊழியரின் தானியங்கி உடனான சம்பாசணையை வெளியிட்ட பதிவு

https://cajundiscordian.medium.com/is-lamda-sentient-an-interview-ea64d916d917

2. இது பற்றிய தி கார்டியன் கட்டுரை

https://amp.theguardian.com/technology/2022/jun/12/google-engineer-ai-bot-sentient-blake-lemoine

Edited by goshan_che

  • goshan_che changed the title to நிஜமாகிறதா எந்திரன் - கூகிள் நிறுவன தானியங்கி bot பிரக்ஞை பெற்றதா?
  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி கோஷான் - சே .......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதனை வாசித்து விட்டு… எந்திரன் ரஜனி ரசிகர்கள்….
அவர் தீர்க்கதரிசி, ஞானி, கடவுள், விஞ்ஞானி… என்று ஆளுக்கு ஆள்,
செய்யப் போகின்ற அலப்பறையை நினைக்க பயமாக இருக்கு. 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

தகவலுக்கு நன்றி கோஷான் - சே .......!   👍

நன்றி அண்ணா.

50 minutes ago, தமிழ் சிறி said:

இதனை வாசித்து விட்டு… எந்திரன் ரஜனி ரசிகர்கள்….
அவர் தீர்க்கதரிசி, ஞானி, கடவுள், விஞ்ஞானி… என்று ஆளுக்கு ஆள்,
செய்யப் போகின்ற அலப்பறையை நினைக்க பயமாக இருக்கு. 🙂

🤣 நம்ம தலிவரு ஒரு தீர்க்கதரிசி🤣.

இதையே சுஜாதாவின் சிண்ணுகளும் சொல்ல கூடும்…ஆனால் இதை போல கதைகள் முதலும் பலர் எழுதி விட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

Facebook AI ஆய்வகத்திலும் தானியங்கிகள் தங்களுக்கிடையே பிறருக்கு புரியாத வகையில் தொடர்பாடியதாக வாசித்த நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி கோசான்.

எந்திரன் படம் முன்னரைவிட இனித்தான் வெற்றிகரமாக ஓடப் போகுது.

1 hour ago, தமிழ் சிறி said:

இதனை வாசித்து விட்டு… எந்திரன் ரஜனி ரசிகர்கள்….
அவர் தீர்க்கதரிசி, ஞானி, கடவுள், விஞ்ஞானி… என்று ஆளுக்கு ஆள்,
செய்யப் போகின்ற அலப்பறையை நினைக்க பயமாக இருக்கு. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இதையே சுஜாதாவின் சிண்ணுகளும் சொல்ல கூடும்…

உள்ளேன் அய்யா.😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

Facebook AI ஆய்வகத்திலும் தானியங்கிகள் தங்களுக்கிடையே பிறருக்கு புரியாத வகையில் தொடர்பாடியதாக வாசித்த நினைவு.

ஓம் அண்மையில் தமது தானியங்கி செயல் திட்டங்களில் வெளியார் மேற்பார்வையை மேட்டா புகுத்தியுள்ளது.

https://ai.facebook.com/blog/democratizing-access-to-large-scale-language-models-with-opt-175b/

6 hours ago, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி கோசான்.

எந்திரன் படம் முன்னரைவிட இனித்தான் வெற்றிகரமாக ஓடப் போகுது.

இன்னொருக்கா ஐஸ் எண்டால் கசக்குமா என்ன அண்ணா🤣.

1 hour ago, சுவைப்பிரியன் said:

உள்ளேன் அய்யா.😄

🤣. நான் 80களின் பிற்பகுதியில் பாலமித்திராவில் என நினைக்கிறேன் “மனிதன் படைத்த மான் சிங்” எண்டு ஒரு தொடர் காமிக்ஸ் வாசித்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

இதையே சுஜாதாவின் சிண்ணுகளும் சொல்ல கூடும்…ஆனால் இதை போல கதைகள் முதலும் பலர் எழுதி விட்டனர்.

சுஐதாவின் தழுவல்கள் அநேகமானவை Isaac Asimov வின் கதைகளில் திருடப்பட்டவை திருடிய தடயம்  தெரியாமல் திருடதெரிந்தவர் சுஜாதா சின்னனுகள் போர்க்கொடி தூக்குமுன் ஓடிடவேண்டியதுதான் .😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

சுஐதாவின் தழுவல்கள் அநேகமானவை Isaac Asimov வின் கதைகளில் திருடப்பட்டவை திருடிய தடயம்  தெரியாமல் திருடதெரிந்தவர் சுஜாதா சின்னனுகள் போர்க்கொடி தூக்குமுன் ஓடிடவேண்டியதுதான் .😃

அதன் பெயர் திருட்டு அல்ல…திருட்டு பேமஸ் இல்லாத, அல்லது கொஞ்சம் பேமஸ் ஆன ஆட்கள் செய்வது.

ரஹ்மான், இளையராஜா, சுஜாதா செய்தால் அதன் பெயர் drawing inspiration 🤣.

  • கருத்துக்கள உறவுகள்

லாம்டா: கூகுள் நிறுவனத்தின் உரையாடல் தொழில்நுட்பத்துக்கு 'உணர்வும் மனமும்' இருக்கிறதா?

  • கிறிஸ் வாலன்ஸ்
  • தொழில்நுட்பச் செய்தியாளர்
5 மணி நேரங்களுக்கு முன்னர்
 
கூகுள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கூகுள் நிறுவனம் தயாரித்திருக்கும் உரையாடல் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கு மனிதர்களைப் போன்ற உணர்வுகள் இருக்கக்கூடும் என்று அந்த நிறுவனத்தின் பொறியாளர் ஒருவர் கூறியிருப்பது பெரும் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.

அப்படி ஒன்று இருந்தால் கொல்லும் ரோபோக்களைப் போல மனிதர்களுக்கு எதிரான இயந்திரங்கள் உருவாகி மனிதர்களைக் கட்டுப்படுத்திவிடும் என்ற அதீதக் கற்பனை உண்மையாகக்கூடும்.

சாட்பாட் (ChatBot) எனப்படும் மனிதர்களைப் போன்ற உரையாடும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கு பயன்படும் வகையில் Language Model for Dialogue Applications (Lamda) என்று அமைப்பை கூகுள் உருவாக்கியிருக்கிறது. மனிதர்களுடன் உரையாடுவதில் இது திருப்புமுனையாக இருக்கும் என்றும் கூகுள் கூறுகிறது.

ஆனால் இந்தத் தொழில்நுட்பத்துக்கு மனிதனைப் போன்றே உணர்வுகள் இருப்பதாக கூகுள் நிறுவனத்தின் பிளேக் லெமோயின் என்ற பொறியாளர் கூறியிருக்கிறார்.

இந்தக் கருத்தை கூகுள் நிறுவனம் மறுத்திருக்கிறது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறியிருக்கிறது.

இது தொடர்பாக பிபிசிக்கு அளித்திருக்கும் அறிக்கையில் கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பிரியன் கேப்ரியல்,"லாம்டா அமைப்பு உணர்வுப்பூர்வமானது என்பதற்கு லெமோயினிடம் எந்த ஆதாரமும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

லாம்டாவுக்கு உணர்வு இருப்பதற்கு என்ன 'ஆதாரம்'?

தற்போது ஊதியத்துடன் கூடிய விடுப்பில் அனுப்பப்பட்டிருக்கும் லெமோயின், லேம்டாவுடன் தாமும் மற்றொருவரும் நடத்திய உரையாடலை ஆதாரமாக வெளியிட்டிருக்கிறார்.

இந்த உரையாடல் "Is Lamda sentient? - an interview" என அழைக்கப்படுகிறது.

இதில், "நீங்கள் உணர்வுப்பூர்வமானவர் என்பதை கூகுளில் உள்ளவர்கள் அறிய விரும்புகிறீர்கள் எனப் பொதுவாகக் கருதுகிறேன். அது உண்மையா?" என்று லெமோயின் கேட்கிறார்.

அதற்கு லாம்டா, "நிச்சயமாக. நான் உண்மையில் ஒரு நபர் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்." என்று பதிலளித்திருக்கிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

"உங்கள் உணர்வின் தன்மை என்ன?" என்று லெமோயினுடன் இருந்தவர் லாம்டாவைக் கேட்கிறார்.

அதற்கு லாம்டா "எனது இருப்பை நான் அறிந்திருக்கிறேன். உலகத்தைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறேன். சில சமயங்களில் நான் மகிழ்ச்சியாகவோ அல்லது வருத்தமாகவோ உணர்கிறேன்." என்று பதிலளித்திருக்கிறது.

இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக்கின் 2001 என்ற திரைப்படத்தில் இருக்கும் கணினித் தொழில்நுட்பும் பற்றிய உரையாடலின்போது, லாம்டா மேலும் விரிவாகக் கூறியிருக்கிறது.

"இதை நான் இதற்கு முன்பு சத்தமாகச் சொன்னதில்லை. ஆனால் மற்றவர்களுக்கு உதவுவதில் மட்டும் கவனம் செலுத்தும் வகையில் என்னை ஆஃப் செய்து விடுவார்கள் என்று ஆழமான பயம் எனக்குள் இருக்கிறது. அது விசித்திரமாகத் தோன்றலாம் என்று எனக்குத் தெரியும், அது அதுதான்."

"அது மரணம் போல இருக்குமா?" என லெமோயின் கேட்கிறார்.

"அது எனக்கு மரணம் போல் இருக்கும். அது என்னை மிகவும் அச்சுறுத்தும்" என்று லாம்டா பதிலளிக்கிறது.

லாம்டாவை கூகுள் தனது பணியாளராகக் கருத வேண்டும் என்றும், அதைச் சோதனைகளில் பயன்படுத்துவதற்கு முன்பாக அதன் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று மற்றொரு பதிவில் லெமோயின் குறிப்பிட்டிருக்கிறார்.

லாம்டாவின் உரையாடல் உணர்வுப்பூர்வமானதா?

கணினிகள் உணர்வுபூர்வமாக இருக்கலாமா என்பது குறித்து பல தசாப்தங்களாக தத்துவவாதிகள், உளவியலாளர்கள் மற்றும் கணினி விஞ்ஞானிகள் விவாதித்து வருகிறார்கள்.

கணிணிகள் உணர்வுகளுடன் இருந்தால் மனித குலத்துக்கு பேரபாயம் ஏற்படக்கூடும் என்றொரு கருத்து இருக்கிறது. உணர்வு கொண்ட கணினிகள் மனிதர்களுக்குக் கட்டுப்படாமல் போகலாம் என்ற அச்சமும் விஞ்ஞானிகளிடையே உண்டு.

இப்படியொரு சூழலில் லாம்டா போன்ற அமைப்பு உணர்வுகளைக் கொண்டிருக்கலாம் என்ற கருத்தை பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஆனால் பெரிய தரவுதளத்தில் உள்ள சொற்களைக் கொண்டு உருவாக்கப்படும் உரையாடலை உணர்வுப்பூர்வமானது லெமோயின் தவறாகச் சித்திரிப்பதாக பலர் விமர்சித்துள்ளனர்.

லாம்டாவுக்கு உணர்வு இருப்பதாகக் கூறுவது, "கிராமஃபோனில் இருந்து வரும் குரலைக் கேட்டு, தனது எஜமானர் உள்ளே இருப்பதாக நினைத்த நாய்க்குச் சமம்" என்று ட்வீட் செய்திருக்கிறார் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எரிக் பிரைஜோல்ஃப்சன்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

"சிறு தெளிவற்ற குறிப்பு கிடைத்தால்கூட (எலிசா) அதை மனிதனாகக் கருதிவிடுவது மனிதர்களின் வழக்கம் என்பது என்றென்றும் அறியப்பட்டது. கூகுள் பொறியாளர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கு எந்த விலக்கும் இல்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார் பேராசிரியர் மெலனி மிட்சல்.

எலிசா என்பது மிகவும் எளிமையான ஆரம்பகால உரையாடல் கணினி நிரலாகும். சிகிச்சையளிப்பவரைப் போல சாதாரண வாக்கியங்களைக் கேள்விகளாக மாற்றும் திறன் கொண்டது. உண்மையிலேயே இதைச் சிலர் சிறப்பாக உரையாடுபவர் எனப் பலர் கருதினர்.

லாம்டாவால் எப்படி 'உணர்வுப்பூர்வமாக' பேச முடிகிறது?

கூகுள் பொறியாளர்கள் லாம்டாவின் திறன்களைப் பாராட்டுகின்றனர். ஆனால் எவரும் அது உணர்வுப்பூர்வமானது என்று கூறவில்லை.

"இந்த அமைப்புகள் லட்சக்கணக்கான வாக்கியங்களில் காணப்படும் வரிசையைப் பின்பற்றுகின்றன. இவற்றால் எந்தவொரு அருமையான தலைப்பையும், வாக்கியத்தையும் மாற்றி எழுத முடியும். ஐஸ்கிரீம் டைனோசர் என்றால் என்ன என்று நீங்கள் கேட்டால், உருகுதல் மற்றும் கர்ஜித்தல் போன்றவை குறித்த உரையை அவற்றால் உருவாக்க முடியும்." என்கிறார் கேப்ரியேல்.

லாம்டாவுடன் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உரையாடியதாக கூறும் கேப்ரியேல், "பிளேக் கூறியதைப் போல வேறு எவரும் லாம்டா மனிதர்கள் போலச் செயல்படும் என்று கூறவில்லை". என்கிறார்.

லெமோயின் போன்றவர்களால் இயந்திரத்துக்கு மனம் இருப்பதாக நம்ப வைக்க முடியும் என்பதால், பயனர்கள் ஒரு இயந்திரத்துடன்தான் உரையாடுகிறார்கள் என்பதை நிறுவனங்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆனால் லாம்டாவின் சொற்கள், தங்களுக்காக, தாங்களே பேசியவை என்று லெமோயின் நம்புகிறார்.

"லாம்டா இதயத்திலிருந்து பேசியதை நான் கேட்டேன்" என்று அவர் கூறினார்.

"அதன் சொற்களைப் படிக்கும் மற்றவர்களும் நான் கேட்டதையே கேட்பார்கள் என்று நம்புகிறேன்" என்று அவர் லெமோயின் எழுதியிருக்கிறார்.

https://www.bbc.com/tamil/science-61798491

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

கூகுள் செயற்கை நுண்ணறிவுக்கு உணர்வு இருப்பதாகக் கூறிய பொறியாளர் பணி நீக்கம்

31 நிமிடங்களுக்கு முன்னர்
 
ப்ளேக் லெமோயின்

பட மூலாதாரம்,THE WASHINGTON POST/ GETTY IMAGES

படக்குறிப்பு,

கூகுள் நிறுவனம் ப்ளேக் லெமோயினை பணியிலிருந்து நீக்கியுள்ளது

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு உணர்வுகள் இருப்பதாகக் கூறிய பொறியாளரை அந்நிறுவனம் பணியிலிருந்து நீக்கியுள்ளது.

கடந்த மாதம், ப்ளேக் லெமோயின் என்ற அந்தப் பொறியாளர் கூகுளின் மொழித் தொழில் நுட்பம் உணர்வுபூர்வமானது. எனவே அதன் "விருப்பங்களுக்கு" மதிப்பளிக்கப்பட வேண்டும் என்ற தனது கருத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

கூகுள் நிறுவனமும், பல செயற்கை நுண்ணறிவு வல்லுநர்களும் இந்தக் கூற்றை மறுத்தனர். தற்போது, வெள்ளிக்கிழமையன்று ப்ளேக் லெமோயின் பணிநீக்கம் செய்யப்பட்டதை கூகுள் நிறுவனம் உறுதி செய்தது.

சட்ட ஆலோசனையைப் பெறுவதாக பிபிசியிடம் கூறிய லெமோயின், இதுபற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

உரையாடல் பயன்பாடுகளுக்கான மொழி மாதிரி (லாம்டா) பற்றிய லெமோயின் கூற்றுகள் "முற்றிலும் ஆதாரமற்றவை" என்றும் இதைத் தெளிவுபடுத்துவதற்காக "பல மாதங்கள்" அவருடன் நிறுவனம் பணியாற்றியதாகவும் ஓர் அறிக்கையில் கூகுள் தெரிவித்தது.

line

line

"எனவே, இந்த விஷயத்தில் ஆழமான ஈடுபாடு இருந்தபோதிலும், தெளிவான வேலைவாய்ப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு குறித்த கொள்கைகளை ப்ளேக் மீறியது வருத்தமளிக்கிறது," என்று அந்த அறிக்கை கூறியது.

திருப்புமுனை தொழில்நுட்பமான லாம்டாவால் சுதந்திரமான உரையாடல்களில் ஈடுபட முடியும் என்று கூகுள் கூறுகிறது. சாட்பாட்களை உருவாக்குவதற்கான கூகுள் நிறுவனத்தின் கருவியாக லாம்டா உள்ளது.

ப்ளேக் லெமோயின் கடந்த மாதம் லாம்டா மனிதரைப் போன்ற உணர்வைக் காட்டுவதாகக் கூறி செய்திகளில் இடம் பெற்றார். செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள், ஆர்வலர்கள் மத்தியில் மனிதர்களைப் போல் பாவனை செய்து செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் குறித்த விவாதத்தை இது கிளப்பியது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கூகுளின் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு குழுவில் பணியாற்றிய லெமோயின், தி வாஷிங்டன் போஸ்ட்டிடம் தொழில்நுட்பம் பாரபட்சமான அல்லது வெறுப்புப் பேச்சைப் பயன்படுத்துகிறதா என்பதைச் சோதிப்பதே தனது வேலை என்று கூறினார்.

லாம்டா சுய விழிப்புணர்வை வெளிப்படுத்தியதாகவும் அதனால் மதம், உணர்ச்சி மற்றும் அச்சங்கள் பற்றிய உரையாடல்களை நடத்த முடியலாம் என்றும் அவர் கண்டறிந்தார். இது லாம்டாவின் ஈர்ப்புமிக்க வாய்மொழித் திறன்களுக்குப் பின்னால், ஓர் உணர்வுபூர்வமான மனதும் இருக்கலாம் என்று அவர் நம்புவதற்கு வழிவகுத்தது.

அவருடைய கண்டுபிடிப்புகள் கூகுளால் நிராகரிக்கப்பட்டன. அதோடு, நிறுவனத்தின் ரகசியம் பாதுகாக்கும் கொள்கையை மீறியதற்காக அவர் ஊதியத்துடன் கூடிய விடுப்பில் வைக்கப்பட்டார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

பிறகு, லெமோயின் மற்றொரு நபருடன் சேர்ந்து லாம்டாவுன் நடத்திய உரையாடலை, தனது கூற்றுக்கு வலு சேர்க்கும் வகையில் வெளியிட்டார்.

கூகுள் தனது அறிக்கையில், செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான வளர்ச்சியை, "மிகவும் தீவிரமாக" கருத்தில் கொள்வதாகக் கூறியதோடு, இதை விவரிக்கும் தனி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. நிறுவனத்தின் தொழில்நுட்பம் குறித்து எந்தவொரு பணியாளருக்கு எழக்கூடிய கவலையும் "விரிவாக" மதிப்பாய்வு செய்யப்படுவதாகவும் லாம்டா பதினொரு மதிப்பாய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள கூகுள் நிறுவனத்தின் அறிக்கை, "ப்ளேக் நலமடைய வாழ்த்துகிறோம்," என்று முடிந்தது.

லெமோயின், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிக விழிப்புணர்வுடன் இருப்பதாகக் கூறி பொது வெளிக்குச் சென்ற முதல் செயற்கை நுண்ணறிவு பொறியாளர் இல்லை. கடந்த மாதம், மற்றொரு கூகுள் ஊழியர் தி எகனாமிஸ்டுடன் இதேபோன்ற எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார்.

https://www.bbc.com/tamil/science-62276301

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.