Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று  ஆண்டுகளுக்கு பின்னர்... நல்லூர் திருவிழாவை, சிறப்பாக நடத்த ஏற்பாடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாண்டுகளுக்கு பின்னர் நல்லூர் திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு!

மூன்று  ஆண்டுகளுக்கு பின்னர்... நல்லூர் திருவிழாவை, சிறப்பாக நடத்த ஏற்பாடு!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (புதன்கிழமை) யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெற்ற நல்லூர் மஹோற்சவம் வழமைபோன்று அதாவது 2018 ஆம் ஆண்டுக்கு முன்பு எவ்வாறு உற்சவம் நடந்ததோ அதேபோல இம்முறை இடம்பெறுமென யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

கலந்துரையாடலுக்கு பின்னர் நல்லூர் ஆலயப் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மாநகர முதல்வர் மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், ”ஆகஸ்ட் 1ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஆகஸ்ட் 29 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும்.

ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது.

அதேபோல வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்தவிதமான வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்ய முடியாது. காலணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது.

ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். ஆனால் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும்.

இம்முறை திருவிழாவின் போது ஒவ்வொரு தனி மனிதனும் தங்களது சுகாதாரத்தில் கவனம் எடுத்து செயல்பட வேண்டும் இவை தவிர எதிர்வரும் காலங்களில் தேவைப்படும்போது கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவோம் என்றார்.

இந்தக் கலந்துரையாடலில் யாழ் மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர், மாநகர பிரதிமுதல்வர், நல்லூர் ஆலய பரிபாலகரின் பிரதிநிதிகள், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

https://athavannews.com/2022/1289053

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பக்தர்கள் பிற ஊர்களில் இருந்து  கால்நடையாகத்தான் வரவேண்டி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பக்தர்கள் கால்நடையாக செல்வது புதிய விடயம் இல்லையே. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

பக்தர்கள் கால்நடையாக செல்வது புதிய விடயம் இல்லையே. 

ஆனால் இந்தமுறை எல்லோரும் எல்லா  இடங்களிலிருந்தும் கால்நடையாகவல்லோ வருவினம். 

கதிர்காமத்திற்கும் பருத்தித்துறையிலிருந்தும் தெய்வேந்திர முனையிலிருந்தும் கால்நடையாக யாத்திரை செல்வவார்கள்.அதற்காக கதிர்காமம் செல்வோரெல்லாம் கால்நடையாக செல்வார்கள் என்று கொள்வதில்லையே. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

பக்தர்கள் பிற ஊர்களில் இருந்து  கால்நடையாகத்தான் வரவேண்டி இருக்கும்.

நாங்கள் எப்போதும் நடந்தே போய் வந்தோம்.அந்த காலங்களில் தண்ணீர் பந்தல்கள் இருந்தன.நிறைய வெள்ளை மணலும் பரவியிருப்பார்கள்.தண்ணீர் பந்தல்களில் விதவிதமாக ஊற்றுவார்கள்.

இப்போது போல வாகன நெரிச்சல்களும் இல்லை.

இந்த முறையும் வாகன நெரிசல்கள் குறைவாக இருக்கும் என எண்ணுகிறேன்.

வழமையில் வெளிநாட்டிலிருந்து படையெடுப்பார்கள்.இம்முறையும் படையெடுப்பார்கள்.

பெற்றோல் இல்லாவிட்டாலும் திருவிழா பிரகாசமாக இருக்கும்.

3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பக்தர்கள் கால்நடையாக செல்வது புதிய விடயம் இல்லையே. 

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும்

மேற்கு வீதிக்கும் எல்லை போடப்படுமா....?? பாவம் இளசுகள் கடலை போடமுடியாமல் கலங்கி நிற்பார்களே. 😩

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நாங்கள் எப்போதும் நடந்தே போய் வந்தோம்.அந்த காலங்களில் தண்ணீர் பந்தல்கள் இருந்தன.நிறைய வெள்ளை மணலும் பரவியிருப்பார்கள்.தண்ணீர் பந்தல்களில் விதவிதமாக ஊற்றுவார்கள்.

இப்போது போல வாகன நெரிச்சல்களும் இல்லை.

இந்த முறையும் வாகன நெரிசல்கள் குறைவாக இருக்கும் என எண்ணுகிறேன்.

வழமையில் வெளிநாட்டிலிருந்து படையெடுப்பார்கள்.இம்முறையும் படையெடுப்பார்கள்.

பெற்றோல் இல்லாவிட்டாலும் திருவிழா பிரகாசமாக இருக்கும்.

 

எமது நாட்களிலும் நடைதான்.

ஆனால் என்ன, மோர்ப் பந்தல் தண்ணீர்ப் பந்தலாக மாறி, துவிச்சக்கர வண்டி நிறுத்துமிடம் சேவை என்கிற நிலையில் இருந்து வியாபாரம்  என்கின்றன நிலைக்கு வந்துவிட்டன. 

இம்முறை, இந்த நடை மிகவும் அதிகமாகவும், நீண்டதாகவும் இருக்கும், நீண்ட காலத்தின் பின்னர். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

இம்முறை, இந்த நடை மிகவும் அதிகமாகவும், நீண்டதாகவும் இருக்கும், நீண்ட காலத்தின் பின்னர். 

உடம்புக்கும் நல்லது தானே.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

உடம்புக்கும் நல்லது தானே.

மிகவும் நல்ல விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்கால் முடிந்த கையோடு ஜாம் ஜாம் என திருவிழா கண்ட அலங்கார கந்தனுக்கு,

பெற்றோல் தட்டுப்பாடு எல்லாம் ஜுஜுபி🤣.

லண்டனில் இருந்து டிக்கெட் £1300க்கும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, தமிழ் சிறி said:

மூன்று  ஆண்டுகளுக்கு பின்னர்... நல்லூர் திருவிழாவை, சிறப்பாக நடத்த ஏற்பாடு!

 இந்த முறை பொறின் சனம் நல்லூருக்கு அள்ளுப்பட்டு வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

முள்ளிவாய்கால் முடிந்த கையோடு ஜாம் ஜாம் என திருவிழா கண்ட அலங்கார கந்தனுக்கு,

பெற்றோல் தட்டுப்பாடு எல்லாம் ஜுஜுபி🤣.

லண்டனில் இருந்து டிக்கெட் £1300க்கும் இல்லை.

இஞ்ச கனடாவில $3000.00

சனம் வருசையில நிக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்

 நல்லூரின் முதல் தாபகராகிய பெயர் அறியா சோழ (ஆரிய சக்கரவர்த்தி பெயரில்) சக்கரவர்த்தி தொடக்கம், செகராசசேகரம், சங்கிலி குமாரன் வரையும், அதன் பின்,    மறுமலர்ச்சி செய்த, முருகனடி எய்திய  மாப்பாண முதலியார்களையும் நினைவில் கொண்டு 

 

1. 1ஆம் இரகுநாத மாப்பாண முதலியார் - சிற்றாலய ஸ்தாபனம் - (பொ.பி 1734- 1750)

2. 2ஆம் இரகுநாத மாப்பாண முதலியார்- செங்கற் கோயிலமைப்பு - (பொ.பி 1750- 1800)

3. 1ஆம் ஆறுமுக மாப்பாண முதலியார் - விநாயகர், பைரவர் சந்நதி அமைப்பு - (1800- 1839)

4. 3ஆம் இரகுநாத மாப்பாண முதலியார் - மஹோத்ஸவம் ஆரம்பமாதல்- (1839- 1860)

5. கந்தையா மாப்பாண முதலியார் - (1860- 1890)

6. சங்கரப்பிள்ளை மாப்பாண முதலியார் - (1890- 1915)

7. 2ஆம் ஆறுமுக மாப்பாண முதலியார்- ஷண்முகர் திருவுருவம் ஸ்தாபிக்கப்பட்டமை, உள்பிரகார திருப்பணி (1915- 1921)

8. 4ஆம் இரகுநாத மாப்பாண முதலியார் -
முத்துக்குமார ஸ்வாமி திருவுருவ ஸ்தாபனம், ஷண்முக புஷ்கரணி திருக்குளம் அமைத்தல், (1921- 1945)

9. ஷண்முகதாஸ மாப்பாண முதலியார்- இராஜ கோபுரத்திருப்பணி, தற்போதைய தேர் அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் (1946- 1964)

10. குமார தாஸ மாப்பாண முதலியார் -
வடக்கு, தெற்கு ராஜ கோபுரங்கள் நிர்மாணம், தங்க விமானம் அமைக்கப்பெறல், தங்க வாகனங்கள் உருவாக்கப்பெறல் ( 1965 - 09.10.2021)

திருவிழா சிறக்க முருகன் அருள்பாலிக்கட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kadancha said:

வடக்கு, தெற்கு ராஜ கோபுரங்கள் நிர்மாணம், தங்க விமானம் அமைக்கப்பெறல், தங்க வாகனங்கள் உருவாக்கப்பெறல் ( 1965 - 09.10.2021)

தெற்கு இராச கோபுரம் இன்றைய நாடாழுமன்ற உறுப்பினர் கயேந்திரகுமார் அவர்களுடைய தாத்தாவின் உபயம் என்று சொல்லக் கேள்விப்பட்டேன் அது உண்மையா.?? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

தெற்கு இராச கோபுரம் இன்றைய நாடாழுமன்ற உறுப்பினர் கயேந்திரகுமார் அவர்களுடைய தாத்தாவின் உபயம் என்று சொல்லக் கேள்விப்பட்டேன் அது உண்மையா.?? 

தெரியவில்லை. இருக்கலாம்.

அனால், டட்லி சேனநாயகவும் (அப்போதைய பிரதமர்), ஜி.ஜி. பொன்னம்பலமும் ஒன்றாக வந்தபோதும், மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்றப்பே அளிக்கப்பட்டது.
 

  • கருத்துக்கள உறவுகள்

முருகர் இப்பவும் அர்ச்சனைக்கு 1 ரூபா ரிக்கெட் தான் வாங்கிறார். 

என்ன இம்முறை பக்தர்கள் பழைய காலம் போல கூடார வண்டி கட்டி (மாட்டு வண்டி) வந்தால் சிறப்பு. 

தமிழ்நாட்டில் மறந்து போன மாட்டு வண்டி? இனிமேல் காட்சிபொருளாகத்தான்  காணவேண்டுமோ?சுவாரஷ்யமான தகவல்கள்?முழுவிவரம் - விண்மீன்நியூஸ் - Winmeen News

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nedukkalapoovan said:

முருகர் இப்பவும் அர்ச்சனைக்கு 1 ரூபா ரிக்கெட் தான் வாங்கிறார். 

என்ன இம்முறை பக்தர்கள் பழைய காலம் போல கூடார வண்டி கட்டி (மாட்டு வண்டி) வந்தால் சிறப்பு. 

தமிழ்நாட்டில் மறந்து போன மாட்டு வண்டி? இனிமேல் காட்சிபொருளாகத்தான்  காணவேண்டுமோ?சுவாரஷ்யமான தகவல்கள்?முழுவிவரம் - விண்மீன்நியூஸ் - Winmeen News

 

Münze 1 Rupee Sri Lanka Messing/Stahl 2005 Preis

One Rupee" Bilder – Durchsuchen 372 Archivfotos, Vektorgrafiken und Videos  | Adobe Stock

இப்பவும்... சிலோன் ஒரு ரூபாய் தான்.
விரைவில்... இந்திய ஒரு ரூபாய் ஆகலாம். 😜

  • கருத்துக்கள உறவுகள்

 

மீண்டும் அமலா காலத்துக்கு போறது தானே. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள்... சரோஜாதேவி காலத்துக்குதான் போவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.