Jump to content

ஜப்பானின் முன்னாள் பிரதமர்... ஷின்சோ அபே, துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கி சூடு!

ஜப்பானின்.. முன்னாள் பிரதமர், ஷின்சோ அபே மீது... துப்பாக்கி சூடு!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மேல்சபைத் தேர்தலுக்கு முன்னதாக, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில், மேற்கு ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

உரை நிகழ்த்தும் போது, அவர் தரையில் விழுவதற்கு சற்று முன் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாகவும் சுடப்பட்ட பின்னர் மார்பில் இருந்து இரத்தம் கசிந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார், ஒருவரை காவலில் வைத்துள்ளனர்.

துப்பாக்கிதாரி, அவரை பின்னால் இருந்து சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விபரித்துள்ளனர். முன்னாள் பிரதமரின் நிலை என்ன குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

கடந்த 2020ஆம் ஆண்டு இராஜினாமா செய்யும் வரை நாட்டின் நீண்ட காலம் பிரதமராக ஷின்சோ அபே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1290180

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு!

ஜப்பானின் முன்னாள் பிரதமர்... ஷின்சோ அபே, துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்துள்ளதாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடந்த நாராவில் உள்ள மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஷின்சோ அபே உயிரிழந்ததாக என்று லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

67 வயதான, ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்த அபே, பிரச்சார உரையின் போது இன்று (வெள்ளிக்கிழமை) சுட்டுக் கொல்லப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்றது தொடர்பாக, 40 வயதான நாராவைச் சேர்ந்த யமகாமி டெட்சுயாவை பொலிஸார் கைது செய்துள்ளதாக, பொது ஒளிபரப்பு நிறுவனமான என்ஹெச்கே, பொலிஸ்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அவர் சம்பவ இடத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார்.

https://athavannews.com/2022/1290257

Link to comment
Share on other sites

  • தமிழ் சிறி changed the title to ஜப்பானின் முன்னாள் பிரதமர்... ஷின்சோ அபே, துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு!
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people

 

May be an image of 3 people and people standing

 

May be an image of 8 people and people standing

 

May be an image of 3 people, people standing and text

 

May be an image of 7 people and road

 

May be an image of 1 person and standing

 

May be an image of one or more people, street and road

 
ஜப்பானில்... எல்லோராலும் நேசிக்கப்படக் கூடிய, ஒரு மாபெரும் தலைவன் 
(முன்னாள் பிரதமர்) சுடப்படும் நேரடி காட்சி 😪😪
துப்பாக்கி சூடு நடத்தியவனை, போலீசார்  உடனடியாக  பிடித்து விட்டனர். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கும் இரஸ்யாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையே .. 🧐

(இங்கே கனடாவில் மிகப்பெரிய தொலைத் தொடர்புச் சேவைகள் (Rogers) நிறுவனத்தின் நாடுதழுவிய சேவைகள் அனைத்தும் இன்று காலையில் இருந்து  செயலிழந்துவிட்டன. )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of 3 people and people standing

 

May be an image of 8 people and people standing

 

துப்பாக்கியை… ஒரு சதுர பெட்டி மாதிரி,
உரு மறைப்பு செய்து கொண்டு வந்துள்ளதை பாருங்கள்.

Link to comment
Share on other sites

ஜப்பானில் துப்பாகிகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கிதாரி தயாரித்த துப்பாக்கியால் சுட்டதாகவும்  சில செய்திகள் கூறுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை வாசித்தபோது எனக்கு என்னவோ நாயகன் படம் நினைவில் வந்து போகின்றது. 

 

தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொலை: பாதுகாப்பான நாட்டில் குற்றம் நடந்தது எப்படி?

  • ரூபர்ட் விங்ஃபீல்ட் – ஹேய்ஸ்
  • பிபிசி நியூஸ், நாரா
8 ஜூலை 2022, 11:16 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

அபே

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று காலை மர்ம நபர் ஒருவரால் சுடப்பட்டு உயிரிழந்தார்.

இந்த செய்தி வந்ததிலிருந்து, எனது நண்பர்கள் எனக்கு தெரிந்தவர்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியைதான் கேட்கின்றனர். இம்மாதிரியான ஒரு நிகழ்வு ஜப்பானில் எப்படி நடந்தது என்று?

எனக்கும் அதே உணர்வுதான். இங்கு வாழ்பவராக நீங்கள் இருந்தால் மிக மோசமான குற்றங்கள் குறித்து எல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.

ஆனால் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் குறித்த விவரம் வெளியானபோது எனக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது.

ஷின்சோ அபே ஜப்பானின் முன்னாள் பிரதமர்தான், ஆனால் ஜப்பானின் புகழ் பெற்ற அரசியல் தலைவர் அவர். நீண்ட நாட்களுக்கு பிரதமராக இருந்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. கிட்டதட்ட 30 ஆண்டுகள் ஜப்பானின் புகழ்பெற்ற அரசியல் தலைவராக திகழ்ந்தவர் அவர்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

அப்படியிருக்கும்போது அபேவை யார் கொல்ல நினைத்திருப்பார்கள்? அதுவும் ஏன்?

இதேபோன்றதொரு மோசமான அரசியல் வன்முறை குறித்து நினைவுகூர நான் விரும்புகிறேன். உடனே என் நினைவுக்கு வருவது 1986ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து பிரதமர் ஓலஃப் பால்மே சுடப்பட்ட நிகழ்வுதான்.

ஜப்பானில் இருப்பவர்கள், மோசமான வன்முறைகள் குறித்தோ அல்லது குற்றங்கள் குறித்தோ யோசிக்க வேண்டியதில்லை என்று சொன்னது மிகைப்படுத்தல் அல்ல.

ஆம். ஜப்பானில்தான் புகழ்பெற்ற யாசுகா என்ற வன்முறை கும்பல் உள்ளது. ஆனால் அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எந்த தொடர்பும் ஏற்படாது.

ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச் செயலில் ஈடுபடும் யாசுகாவினர் கூட துப்பாக்கியை பயன்படுத்த யோசிப்பர். ஏனென்றால் சட்டவிரோதமாக நீங்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்காக நீங்கள் செலுத்தும் அபராதம் மிகப் பெரியதாக இருக்கும்.

ஜப்பானில் துப்பாக்கி வைத்திருப்பது என்பது மிக கடினம். துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்றால், குற்றவியல் வழக்குகள் ஏதும் இருக்கக் கூடாது, கட்டாய பயிற்சி பெற்றிருக்க வேண்டும், மனநிலை சோதனையில் ஈடுப்படுத்தப்படுவீர்கள், மேலும் காவல்துறையினர் மற்றும் உங்கள் அக்கம்பக்கத்தினரிடம் எல்லாம் மிக தீவிரமான விசாரணைகள் நடைபெறும்.

அதேபோல துப்பாக்கி குற்றங்கள் இங்கு நடைபெறுவதும் இல்லை. ஒரு வருடத்திற்கு 10க்கும் குறைவான துப்பாக்கி தொடர்பான மரணங்களே இங்கு நடைபெறும். 2017ஆம் ஆண்டில் அது வெறும் மூன்றாக இருந்தது.

சரி குற்றத்தில் ஈடுபட்டது யார்? அவருக்கு எங்கிருந்து துப்பாக்கி வந்திருக்கும்?

அபேவை சுட்டதாக கைது செய்யப்பட்ட 41 வயது நபர், நாட்டின் முன்னாள் தற்காப்பு படை வீரர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தற்காப்புப் படை ராணுவத்திற்கு நிகரானது.

 

ஷின்சோ அபேவைவை சுட்டுக்கொன்றவராக கருதப்படும் இந்த நபரை சம்பவ இடத்திலேயே காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

ஷின்சோ அபேவைவை சுட்டுக்கொன்றவராக கருதப்படும் இந்த நபரை சம்பவ இடத்திலேயே காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

சற்று உற்று நோக்கினால் அவர் கடற்படையில் வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே இருந்துள்ளார். அதேபோல அவர் பயன்படுத்திய துப்பாக்கியும் வித்தியாசமாக உள்ளது. துப்பாக்கிச் சுடும் சம்பவம் நடைபெற்ற பின் பகிரப்பட்ட புகைப்படத்தில் துப்பாக்கி கீழே இருப்பதை பார்க்க முடிந்தது. அதில் அது வீட்டில் செய்யப்பட்ட துப்பாக்கியை போல உள்ளது.

அது ஏதோ இணையதளத்தில் பார்த்து செய்யப்பட்ட துப்பாக்கியை போல இருந்தது.

சரி. இது திட்டமிட்ட ஒரு அரசியல் தாக்குதலா? அல்லது புகழ்பெற்ற ஒரு நபரை சுட்டு தானும் பிரபலமாக வேண்டும் என்ற மோசமான ஆசையா? என்ன காரணம் என நமக்கு இதுவரை தெரியாது.

ஜப்பானில் இதற்கு முன்பும் அரசியல் கொலைகள் நடந்துள்ளன.

1960ஆம் ஆண்டில் ஜப்பானின் சோஷியலிஸ்ட் கட்சியை சேர்ந்த இனேஜிரோ ஆசானுமா வலதுசாரி நபர் ஒருவரால் சாமுராய் வாலால் வயிற்றில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். ஜப்பானில் தீவிர வலதுசாரி நபர்கள் இன்றும் உள்ளனர். இருப்பினும் வலதுசாரி தேசியவாதியான அபே ஒரு தாக்குதல் இலக்காக இருக்க வாய்ப்பில்லை.

கடந்த சில வருடங்களாக வேறு சில குற்றங்கள் இங்கு அதிகரித்து வருவதை நம்மால் காண முடிகிறது.

தனிமையில் இருக்கும் ஒரு ஆண் பிறரிடம் வன்மத்தை வளர்த்து அதனால் ஏற்படும் குற்றம்.

2019ஆம் ஆண்டு க்யூடூ என்னும் புகழ்பெற்ற அனிமேஷன் ஸ்டூடியோ அமைந்துள்ள கட்டடம் ஒன்றிற்கு ஒருவர் தீ வைத்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.

தனது வேலைகளை அந்த ஸ்டுடியோ திருடிவிட்டதால் அதன் மீது கோபமாக இருந்ததாகவும் எனவே அந்த குற்றத்தில் ஈடுபட்டதாகவும் அந்த நபர் காவல்துறையிடம் தெரிவித்தார்.

 

இந்த சம்பவம் ஒட்டுமொத்த ஜப்பான் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

இந்த சம்பவம் ஒட்டுமொத்த ஜப்பான் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

இதேபோன்று 2008ஆம் ஆண்டு மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர், டோக்யோவின் அகிஹாபாரா மாவட்டத்தில் உள்ள கடைவீதியில் ட்ரக் ஒன்றை ஓட்டிச் சென்றார். பின் அங்கிருந்து வெளியேறி அங்குள்ளவர்களை கத்தியால் தாக்கினார்.

இதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு முன்பு இணையத்தில், "அகிஹபாராவில் உள்ள மக்களை நான் கொல்லுவேன். எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை, நான் அழகாக இல்லை என்பதால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறேன். நான் குப்பையைக் காட்டிலும் கேவலமாக மதிக்கப்படுகிறேன்" என்ற செய்தியை அந்த இளைஞர் பதிவிட்டிருந்தார்.

அபேவின் கொலை இதில் எந்த காரணத்திற்காக நடைபெற்றது என்று தெரியவில்லை. ஆனால் இந்த சம்பவம் ஜப்பானை நிச்சயம் மாற்றிவிடும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

ஜப்பான் பாதுகாப்பான ஒரு நாடாக இருந்தாலும், இங்கு இறுக்கமான பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை. தேர்தல் பிரசாரங்களின் போது அரசியல் தலைவர்கள் கடை வீதிகளில் உள்ள மக்களிடம் கைக் குலுக்கி சகஜமாக பேசுவார்கள். சாலைகளில் நின்று உரையாற்றுவார்கள்.

இதே காரணத்தால்தான் அபேவை துப்பாக்கிதாரியும் நெருங்கி தாக்க முடிந்தது. எனவே இன்றைய சம்பவத்திற்கு இந்த சூழ்நிலை நிச்சயமாக மாறிவிடும்.

https://www.bbc.com/tamil/global-62095013

3 hours ago, Kapithan said:

இங்கே கனடாவில் மிகப்பெரிய தொலைத் தொடர்புச் சேவைகள் (Rogers) நிறுவனத்தின் நாடுதழுவிய சேவைகள் அனைத்தும் இன்று காலையில் இருந்து  செயலிழந்துவிட்டன.

கனடிய நண்பரின் தொலைபேசி இயங்கவில்லை என குழம்பி இருந்தேன். உங்கள் தகவலால் தெளிவு பெற்றேன். நன்றி கபிதன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஏராளன் said:

கனடிய நண்பரின் தொலைபேசி இயங்கவில்லை என குழம்பி இருந்தேன். உங்கள் தகவலால் தெளிவு பெற்றேன். நன்றி கபிதன்.

நன்றி ஏராளன். 

உலகம் முழுவதும் ஒரே குழப்பமாக இருக்கிறது. ஒவ்வொரு சம்பவங்களுக்கும் இடையே உண்மையாகவே தொடர்புகள் இல்லாவிட்டாலும் அவற்றை இணைத்துப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. 

🥺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பான் மரியாதைக்குரிய அரசியல்வாதியை இழந்துவிட்டது ஜனாதிபதி

 ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு!

 

k.png         

ஜப்பான் மிகவும் மரியாதைக்குரிய அரசியல்வாதியை இழந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்த விடயம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , “ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் துயர மரணம் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஜப்பான் மிகவும் மரியாதைக்குரிய அரசியல்வாதியை இழந்துவிட்டது.

அவரது குடும்பத்தினருக்கும், ஜப்பான் மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்என பதிவிட்டுள்ளார்.

 

சாத்தானின் அனுதாபம். 

சாத்தானுக்கு????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீதான துப்பாக்கி சூட்டின் பின்னணி!

ஜப்பான் முன்னாள் பிரதமர், ஷின்சோ அபே மீதான... துப்பாக்கி சூட்டின் பின்னணி!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீதான துப்பாக்கி சூட்டின் போது, அவருக்கு அதிக அளவிலான இரத்தப் போக்கு ஏற்பட்டதாலேயே அவர் உயிரிழந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

சிகிச்சையின் போது இரத்தப் போக்கினை நிறுத்த முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை என அவர் மேலும் கூறினார்.

உடலில் பாய்ந்த இரண்டு துப்பாக்கி குண்டுகளில் ஒன்று அவரது கழுத்து மற்றும் இரண்டாவது தோள்பட்டை எலும்புப் பகுதிகளில் துளைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், அவர் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதே, மாரடைப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர். அபேவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்ட போதும், அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நாரா என்ற நகரில் வசித்து வந்த டெட்சுயா யாமாகாமி என்ற 41 வயது நபரை ஜப்பான் பொலிஸார் கைது செய்தனர். அவரது வீட்டை சோதனை செய்ததில், வெடிபொருள்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவைக்கு எதிர்வரும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மேற்கு ஜப்பான் நகரமான நாராவில், அந்நாட்டு நேரப்படி, நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணியளவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1290365

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஷின்சோ அபேவை சந்தேக நபர் துப்பாக்கியால் சுட என்ன காரணம்?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஷின்சோ அபே

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் உடல் டோக்யோவில் உள்ள அவரது இல்லத்துக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. டோக்யோவின் ஆடம்பர குடியிருப்புப் பகுதியில் அவரது வடு உள்ளது. ஷின்சோ அபேயின் இறுதி நிகழ்வு, ஜூலை 12ஆம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை காலையில், ஜப்பான் தெற்கில் அமைந்துள்ள நாரா நகரில், அந்நாட்டின் மேலவைக்கு போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தபோது அடையாளம் தெரியாத நபரால் ஷின்சோ அபே சுடப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.

அவருடைய கொலை குறித்து விசாரணை நடத்தும் போலீசார், அதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர், "குறிப்பிட்ட அமைப்புக்கு" எதிரான வெறுப்புணர்வுடன் இருந்ததாக கூறுகின்றனர்.

அந்த அமைப்பில் ஷின்சோ அபே அங்கம் வகித்ததால், குற்றம்சாட்டப்பட்டுள்ள 41 வயதான டெட்சுயா யமாகாமி, அவரை சுட்டதாக நம்புவதாக போலீசார் தெரிவித்தனர்.

ஷின்சோ அபேயை சந்தேக நபர் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அஞ்சலிக்காக திரண்ட மக்கள்

 

ஷின்சோ அபே கொலை

 

படக்குறிப்பு,

கோப்புப்படம்

ஷின்சோ அபேயின் உடலை தாங்கிய வாகனம் டோக்யோவில் உள்ள அவரது இல்லத்தை வந்தடைந்த நிலையில், ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் கறுப்பு உடையணிந்து வரிசையில் நின்று மரியாதை செலுத்தினர்.

ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) நடைபெறும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் நீண்ட காலமாக பிரதமர் பதவி வகித்தவர் ஷின்சோ அபே. 67 வயதான அவர் கொல்லப்பட்டுள்ளது, துப்பாக்கி சார்ந்த குற்றங்கள் மிகவும் அரிதாக உள்ள ஜப்பான் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேலவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் கொல்லப்பட்டார்.

ஜப்பானின் தற்போதைய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் சுதந்திர ஜனநாயக கட்சியை சேர்ந்தவராவார். ஷின்சோ அபே கொலை குறித்து பேசிய அவர், தான் "வார்த்தைகள் அற்று இருப்பதாகவும்", ஜப்பானின் ஜனநாயகம் "வன்முறைக்கு எப்போதும் அடிபணியாது" என்றும் உறுதியளித்தார்.

சுட்டுவிட்டு தப்பியோடவில்லை

ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டது ஏன் என்பது குறித்தும் அவரை கொலை செய்தவர் தனிநபரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாரா நகரில் உள்ள சாலையின் சந்திப்பு ஒன்றில் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து அபே பேசிக்கொண்டிருந்த சமயத்தில்தான் அவர் பின்புறத்தில் இருந்து சுடப்பட்டார்.

அவரை சுட்டதாக சந்தேகிக்கப்படும் நபர், இச்சம்பவம் நிகழ்வதற்கு முன்பு, ஷின்சோ அபேவுக்கு நெருக்கமாக நின்றுகொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பெரிய துப்பாக்கியுடன் நின்றிருந்த அந்நபர் அபேவை சில மீட்டருக்கு நெருங்கி அவரை நோக்கி இருமுறை சுட்டதாக இக்கொலையை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். ஷின்சோ அபே உடனேயே கீழே விழுந்த நிலையில், இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அலறினர்.

ஷின்சோ அபேயை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோட முயற்சிக்காத அந்நபரை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்தனர்.

அபேவை சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி உலோகம் மற்றும் மரக்கட்டையால் ஆனது என்றும் அது டேப் மூலம் சுற்றப்பட்டிருந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிடிபட்ட நபரின் வீட்டிலிருந்து இதேபோன்ற இன்னும் சில நாட்டுத்துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பின்னர் பறிமுதல் செய்யப்பட்டன.

அபேயின் கழுத்தில் இரண்டு துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டிருந்தது, மேலும் இந்த தாக்குதலால் அவருடைய இதய செயல்பாடும் பாதிக்கப்பட்டது.

தாக்குதலுக்குப்பின் சில நிமிடங்கள் அவர் சுயநினைவுடன் இருந்ததாகவும், பதிலளிக்கக்கூடியவராகவும் இருந்ததாக கூறப்படும் நிலையில், ஆனால், சிகிச்சைக்கு மாற்றப்பட்ட நேரத்தில் அதுபோன்று எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவருடைய உயிரை காப்பாற்ற சில மணிநேரங்கள் மருத்துவர்கள் முயற்சித்த நிலையில், உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் அவருடைய மரணம் அறிவிக்கப்பட்டது.

 

ஷின்சோ அபே

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

சுட பயன்படுத்தப்பட்ட ஆயுதம்

ஜப்பானிய சமூக ஊடகங்களில் வெள்ளிக்கிழமை முழுவதும் "We want democracy, not violence" ("எங்களுக்கு ஜனநாயகம் வேண்டும், வன்முறை அல்ல') என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. அதில் பலரும் இச்சம்பவத்திற்கு அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜப்பானில் துப்பாக்கி வன்முறைகள் மிகவும் அரிதானது. ஜப்பானில் நாட்டுத் துப்பாக்கிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது, மேலும் அரசியல் வன்முறைகள் இதுவரை பெரும்பாலும் கேள்விப்படாத ஒன்றாகவே உள்ளது.

ஜப்பானில் கடந்த 2014ஆம் ஆண்டில் துப்பாக்கி சார்ந்த கொலைகள் ஆறு என்றளவிலேயே இருந்தது, இதே காலக்கட்டத்தில் அமெரிக்காவில் துப்பாக்கி சார்ந்த கொலைகள் 33,599 ஆக இருந்தது. ஜப்பானில் ஒருவர் துப்பாக்கியை வாங்குவதற்கு கடுமையான தேர்வுகள் மற்றும் மனநல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதும், சிறிய ரக துப்பாக்கிகள் மற்றும் ஏர் ரைபில்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

 

ஷின்சோ அபே

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

சந்தேகத்துகிடமான நபர் க்ஷின்சோ அபேவுக்கு நெருக்கமாக நின்றுகொண்டிருக்கும் புகைப்படம்

ஜப்பான் பிரதமராக முதன்முதலில் 2006 ஆம் ஆண்டில் பதவியேற்றார் ஷின்சோ அபே. பின் 2012 முதல் 2020 ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்த அவர், பின்னர் உடல்நிலை காரணமாக அப்பதவியிலிருந்து விலகினார்.

பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்களில் தன் கடுமையான நிலைப்பாடுகளுக்காகவும் போருக்கு பிந்தைய ஜப்பானிய அரசியலமைப்பை திருத்த முயன்றதற்காகவும் இவர் அறியப்படுகிறார்.

அபே பிரதமராக இருந்த முதல் முறை அவரின் பொருளாதார கொள்கைகள் வளர்ச்சி பாதைக்கு நாட்டை அழைத்து சென்றன. அது 'அபேனோமிக்ஸ்' என்றும் அழைக்கப்பட்டது.

அவருக்குப் பின் கட்சியில் அபேவுக்கு நெருக்கமான யோஷிடே சுகா பிரதமராக பதவியேற்றார், அவருக்குப் பின் ஃபுமியோ கிஷிடா பதவியேற்றார்.

 

ஷின்சோ அபே கொலை

பட மூலாதாரம்,ASAHI SHIMBUN/REUTERS

'வெறுக்கத்தக்க தாக்குதல்'

உலகளவில் அறியப்பட்ட தலைவர்கள் பலரும் ஷின்சோ அபே கொலை செய்யப்பட்டதற்கு கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இதனை "வெறுக்கத்தக்க தாக்குதல்" என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமரை தொடர்புகொண்டு வருத்தத்தைப் பகிருந்துகொண்டார். மேலும், "இச்சம்பவம் ஜப்பானுக்கும் அபேயை அறிந்தவருக்கும் சோகமானது" என தெரிவித்துள்ளார்

அமெரிக்காவில் இவ்வார இறுதிநாட்களில் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட வேண்டும் என்றும் பைடன் உத்தரவிட்டுள்ளார்.

பிரேசிலில் மூன்று தினங்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று அதிபர் ஜேயர் போல்சனேரோ அறிவித்துள்ளார். மேலும் ஜப்பான் மக்களுக்கு தன் இரங்கலையும் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி, "ஷின்சோ அபே ஒரு உலகளாவிய அரசியல்வாதி" என தெரிவித்துள்ளார்.

தென் கொரிய அதிபர் யூன் சுக்-இயோல் இத்தாக்குதலை "ஏற்றுக்கொள்ள முடியாத குற்றம்" என தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங், ஜப்பான் பிரதமர் கிஷிடாவுக்கு இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், சீனா மற்றும் தென் கொரிய சமூக ஊடகங்களில் இத்தாக்குதல் குறித்த மகிழ்ச்சியான கருத்துகளும் ஆதிக்கம் செலுத்தின.

சீனாவும் தென் கொரியாவும் வரலாற்று ரீதியாக ஜப்பானுடன் சிக்கலான உறவுகளைக் கொண்டுள்ளன. ராணுவப் புத்திசாலித்தனத்திற்கு பெயர் பெற்ற அபே, தனது பதவிக் காலத்தில் இரு நாட்டு குடிமக்களாலும் வெறுக்கப்பட்டவராக இருந்தார்.

https://www.bbc.com/tamil/global-62104279

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.