Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் போலியானது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கடிதம் போலியானது என ஜனாதிபதி அலுவலகம் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.  

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர். 

இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கடந்த 9ம் திகதி ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை என்பன போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

பதவி விலகல் கடிதம் போலியானது - ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு | Fake Resignation Letter President S Office

இதனையடுத்து நாட்டில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி மாலைதீவில் தஞ்சமடைந்தார். அத்துடன், ஜூலை 13ம் திகதி பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். எனினும், அவர் குறிப்பிட்டதை போன்று நேற்றைய தினம் பதவி விலகியிருக்கவில்லை.

இந்நிலையில், இன்றைய தினம் மாலைதீவில்  இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூருக்கு சென்றிருந்தார்.

https://tamilwin.com/article/fake-resignation-letter-president-s-office-1657819918

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது நடைபெறும் சம்பவங்கள் அனைத்துமே நம்பகத்தன்மை அற்று காணப்படுகின்றது.
சபாநாயகர் ஒரு முறை அல்ல பல முறை… முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார்.
ஜனாதிபதி அலுவலகம் அடிக்கடி மறுப்பறிக்கை விடுகிறது.
பசில்… உள்ளேயா, வெளியேயா.. என்று கண்ணா மூச்சி விளையாடுறார்.
தினம் ஒரு புதுப் பெயர்… ஜனாதிபதி பதவிக்கு சொல்கிறார்கள்.
பிரதமர் பதவி போட்டியில்… 11 பேர் உள்ளார்களாம்.
ராஜபக்ச குடும்பம்…  போர் வெற்றி நாயகர்கள் என்று,
69 லட்சம் வாக்குகளை பெற்று,   நாட்டை குட்டிச் சுவராக்கி விட்டுள்ளார்கள்.

நாட்டில், என்ன நடக்கிறது என்று… உன்னிப்பாய் அவதானிப்போம்.  😎

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

1. ஜனாதிபதி சபாநாயகருக்கு அனுப்பிய கடிதம் போலியா?

அல்லது

2. சமூகவலை பரப்பில் இந்த கடிதம் என பகிரப்படும் கடிதம் போலியா?

3. அல்லது இரெண்டுமே போலியா?

4 minutes ago, தமிழ் சிறி said:

பிரதமர் பதவி போட்டியில்… 11 பேர் உள்ளார்களாம்.

சிங்களவருக்கு யாரோ சூனியன் செய்து போட்டாங்கள்😆.

வழமையா இனம்+மதம் என்ற அடிப்படையில் ஒன்றாகி நல்ல முடிவுகளை எடுக்கும் இனம், இப்ப தமிழரை போல நடக்கிறார்கள்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

சிங்களவருக்கு யாரோ சூனியன் செய்து போட்டாங்கள்😆.

வழமையா இனம்+மதம் என்ற அடிப்படையில் ஒன்றாகி நல்ல முடிவுகளை எடுக்கும் இனம், இப்ப தமிழரை போல நடக்கிறார்கள்🤣.

சிங்களவரின் ஒற்றுமையை…. தமிழ்ச் சனங்கள், நாவூறு படுத்திப் போட்டுதுகள். 🤣
🌶️மிளகாய் சுத்தி போடவேணும். 😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

சிங்களவரின் ஒற்றுமையை…. தமிழ்ச் சனங்கள், நாவூறு படுத்திப் போட்டுதுகள். 🤣
🌶️மிளகாய் சுத்தி போடவேணும். 😜

இப்ப அதுக்கும் பணமில்லை.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லையாம்.

இருக்கிற பணத்தையும் மிளகாய் பூசணிக்காய் தேசிக்காயென்று நாவூறுக்கு செலவு செய்வதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதி அலுவலகம் அடிக்கடி மறுப்பறிக்கை விடுகிறது.

அலுவலகம் இயங்க தொடங்கிவிட்டதா?

@goshan_che ?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

அலுவலகம் இயங்க தொடங்கிவிட்டதா?

@goshan_che ?

ஜனாதிபதி அலுவலக  முன் வாசலில் உள்ள ஒரு சிறிய பகுதி வரைதான்….
போராட்டக் காரர்கள் போனவர்கள்.
மிகுதிப் பகுதி அந்த அலுவலகத்தின் முக்கியத்துவம் கருதி  பூட்டிய படி உள்ளது.
போராட்டக் காரர்களும்… சம்பிரதாயத்துக்கு அது வரை போனதே காணும் என நினைத்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதி அலுவலக  முன் வாசலில் உள்ள ஒரு சிறிய பகுதி வரைதான்….
போராட்டக் காரர்கள் போனவர்கள்.
மிகுதிப் பகுதி அந்த அலுவலகத்தின் முக்கியத்துவம் கருதி  பூட்டிய படி உள்ளது.
போராட்டக் காரர்களும்… சம்பிரதாயத்துக்கு அது வரை போனதே காணும் என நினைத்திருக்கலாம்.

இப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன். படங்களிலும் பழைய பாலிமெர்ண்டின் well of the house உட்பட்ட இடங்கள் காட்டப்படவில்லை @ஈழப்பிரியன் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

இருக்கிற பணத்தையும் மிளகாய் பூசணிக்காய் தேசிக்காயென்று நாவூறுக்கு செலவு செய்வதா?

மிளகாய், பூசணிக்காய், தேசிக்காய் எல்லாம்… காசு குடுத்து வாங்கிறதில்லை.
ஜனாதிபதி மாளிகையில் உள்ள குசினியில்…. எல்லாம் ரெடியாய் இருக்கு. 🤣
 
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

மிளகாய், பூசணிக்காய், தேசிக்காய் எல்லாம்… காசு குடுத்து வாங்கிறதில்லை.
ஜனாதிபதி மாளிகையில் உள்ள குசினியில்…. எல்லாம் ரெடியாய் இருக்கு. 🤣
 
எல்லா சங்கங்கங்களின் தேரோக்களையும் கூப்பிட்டு ஓதி நூலைக்கட்டினாப் போச்சு. 

  • கருத்துக்கள உறவுகள்

https://www.newswire.lk/2022/07/14/maldives-speaker-says-president-gr-has-resigned/

கோட்ட பதவி விலகியது உண்மை. உயிராபத்து இருந்ததால் இலங்கையை விட்டு வெளியேறினார் என்கிறார் மாலதீவு சபாநாயகர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

https://www.newswire.lk/2022/07/14/maldives-speaker-says-president-gr-has-resigned/

கோட்ட பதவி விலகியது உண்மை. உயிராபத்து இருந்ததால் இலங்கையை விட்டு வெளியேறினார் என்கிறார் மாலதீவு சபாநாயகர்.

எந்த சபாநாயகர் சொல்வதை நம்புவது?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஜட்டி இல்லாமல்… எப்படி போறது. 😂
ஏன்ரை… ஜட்டியை தாங்கோ, நான் போறன். -கோத்தா- 🤣

Gotabaya-Rajapaksa-PTI-file-photo.jpg

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரர்களின் முக்கிய அறிவிப்பு வெளியானது

  • கருத்துக்கள உறவுகள்

Gazette இல் வந்த பின் தான் எல்லாமே உத்தியோகபூர்வம்.

மின்னஞ்சல் உண்மையாயினும், செல்லுபடி அற்றது.

பதவி விலகலை பொறுத்தவரை, கையெழுத்து மூலப் பிரதி தேவை, இது இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. ஆங்கிலத்தில் உள்ள யாப்பு சாராது இதை தான் சொல்கிறது 

38. (1) The office of President shall become vacant –
(a) upon his death;
(b) if he resigns his office by a writing under his
hand addressed to the Speaker;

(c) if he ceases to be a citizen of Sri Lanka;
(d) if the person elected as President willfully
fails to assume office within 31[two weeks] from
the date of commencement of his term of office;
(e) if he is removed from office as provided in the
next succeeding paragraph; or
(f) if the Supreme Court in the exercise of its
powers under Article 130(a) determines that his
election as President was void and does not
determine that any other person was duly elected
as President

மற்றது, பதவி விலகுபவர், அதாவது (b)  சனாதிபதி அவரின் கையெழுத்து மூலப் பிரதி  கையால் வேண்டும் கொடுக்க நேரடியாக சபாநாயகரிடம்.

சிங்கள மொழியில்  உள்ள யாப்பு சரத்துகளே எதையும் சட்ட வலு உள்ளதாக்கும், இறுதியில் தீர்மானிக்கும்.

சிங்கள மொழி யாப்பில் என்ன இருக்கிறது, யாராவது தெரிந்தால் வாசித்து சொல்லுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

Gotabaya-Rajapaksa-PTI-file-photo.jpg

அட… ஜொக்கா மக்கா…. 73 வயசிலை, அதை கட்டாயம் போட வேணுமப்பா…. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

https://www.parliament.lk/files/pdf/constitution.pdf

வாசித்தல் தெரிகிறது, பதவி விலகும் போது, சனாதிபதி, பிரதமர் இலங்கைத் தீவில் இருக்க வேண்டும் (இது சட்டத்தில் implied என்று சொல்லப்படும்).

பதவி விலகும் போது இலங்கைத்  தீவில் இருப்பது, Speaker, Deputy Speaker and Deputy Chairman of Committees க்கும் இருக்கும் கடப்பாடு. வேறு முக்கிய பதவிக்கும் இருக்கிறதோ தெரியவில்லை.

இது என்ன விளையாட்டா? ஓர் இறைமை உள்ள அரசின் தலைமை பாதுகாவலர் (சனாதிபதி), வேற்று இறைமை உள்ள அரசின் நிலப்பரப்பில் இருந்து பதவி விலகுவது.

அரச இறமைக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும், அப்படி செய்ய முடியும்  என்றால்.

எப்படி இருந்தாலும், சிங்கள சரத்துகக்களே இறுதியில் நடைமுறைப்படுத்தப்படும். 

முன்பு இதை வாசித்த நினைவு இருக்கிறது.

சிங்கள சரத்துக்கள்  இதில் இருந்து சிறிதளவேனும் மாரி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

நடைமுறை பிரச்னை, வேறு அரசின் இறைமையின் கீழ் (நிலப் பரப்பு) பதவி விலகுவது செய்யலாம் என்றால்,  சதிப் புரட்சி, ஆட்சி கவுப்புக்கு மிகுந்த சட்ட வசதியை உருவாக்கி விடும். 

உம். இப்போஇதைய நிலையில், கோத்தாவை விரத முனைபவர்கள், cia போன்றவை மிரட்டி செய்யமுடியும் அல்லவா?  

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kadancha said:

ஒரு நாட்டின் தூதுவராலயம் இன்னொரு நாட்டின் நிலப்பரப்பில் இருந்தாலும், அது அந்தத் தூதுவராலயத்தின் நாட்டின் நிலப்பரப்பாகவே கருதப்படும் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் அசைலம் அடிச்ச பிறகுதான் பதவி விலகல் கடிதம் கொடுக்கும் போல.  உகண்டாவில் சொத்துக்கள் உள்ளதாய் சொன்னார்கள். அங்கு அசைலம் அடிக்க ஏலாதோ 😝

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புங்கையூரன் said:

ஒரு நாட்டின் தூதுவராலயம் இன்னொரு நாட்டின் நிலப்பரப்பில் இருந்தாலும், அது அந்தத் தூதுவராலயத்தின் நாட்டின் நிலப்பரப்பாகவே கருதப்படும் என்று நினைக்கிறேன்.

ஆம் அது சரி.

ஆனால், அதில் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது, நேரடியாக கையால் சபாநாயகருக்கு முகவரிப்படுத்தப்பட (இது பாராளுமன்ற சொற்பிரயோகம்)  வேண்டும் என்று. 

இந்த சொற்பிரயோகத்தை நன்றாக அறிவேன்.

எனது மிகவும் கிட்டிய உறவு பாராளுமன்ற Hansard Reporter ஆக இருந்தவர்,  தமிழ் மொழிபெயர்ப்பு பொறுப்புடன்.

அவர் சொல்லியதில் இருந்து இந்த முகவரிப்படுத்துதல் என்பது, நேரடியாக சைகையால்  சுட்டுதல் அல்லது கொடுத்தல், வாங்குதல்.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல மறந்து விட்டேன்,  முகவரிப்படுத்தப்பட என்பது அரச கரும சொற்பிரயோகமும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்

Twitter update:

Speaker's office getting ready to make the final announcement...

FXrXqMYVsAIwGlQ?format=jpg&name=small

FXrZQTUUsAAXC5c?format=jpg&name=small

ஜனாதிபதி கோட்டாபாயவின் இராஜினாமாவை உத்தியோகபூர்வமாக அறிவிக்க சபாநாயகர் தயார். பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பார். அனைத்து கட்சித்தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் சஜித் பிரதமராகும் சாத்தியம்.

-வீரகேசரி

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

இந்தாள் அசைலம் அடிச்ச பிறகுதான் பதவி விலகல் கடிதம் கொடுக்கும் போல.  உகண்டாவில் சொத்துக்கள் உள்ளதாய் சொன்னார்கள். அங்கு அசைலம் அடிக்க ஏலாதோ 😝

கோட்டா பதவி விலகினால் புதிதாக வரும் அரசு இராஜபக்ஸ குடும்பத்தின் மீது ஊழல் விசாரணை மேற்கொள்ளாதா? கோட்டா புலி வாலைப்பிடித்த கதைதான், இலங்கையிலிருந்து கொண்டு ஆட்சியிலிருந்து விலகினால் சிக்கலாக இருக்காதா?

கோத்தாவும் ஆட்சியில் தொடர்ந்திருந்தால்  மக்கள் தொடர்ந்து கலவரங்களில் ஈடுபட்டால் இராணுவத்தின் உதவியினூடு இராணுவ ஆட்சியினை ஏற்படுத்தினால் கோத்தா தொடர்ந்து அதிகாரத்திலிருக்கலாம் எந்த விசாரணைகளும் வராது.

சிங்களமக்களுக்கும் தமது இராணுவத்தினினரினை புரிந்து கொள்ள ஒரு சந்தர்பம் கிடைக்கலாம்.

கோத்தாவும், இரணிலும் பதவி விலகமாலிருந்தால் நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ராசவன்னியன் said:

Twitter update:

Speaker's office getting ready to make the final announcement...

FXrXqMYVsAIwGlQ?format=jpg&name=small

FXrZQTUUsAAXC5c?format=jpg&name=small

ஜனாதிபதி கோட்டாபாயவின் இராஜினாமாவை உத்தியோகபூர்வமாக அறிவிக்க சபாநாயகர் தயார். பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பார். அனைத்து கட்சித்தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் சஜித் பிரதமராகும் சாத்தியம்.

-வீரகேசரி

May be an image of chess and text that says '١١١١١٠ ١١١١ ٢ X O O + + ዜ Angntha vantha Artignla DailyMirror 50 5/07/202 07 07| 2022 GO HOME'

ஒரே  நேரத்தில்... எல்லா இடமும், காய் நகர்த்தும் ரணில். 😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.