Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெற்றி பெற்றார் ரணில் விக்கிரமசிங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற்றார் ரணில் விக்கிரமசிங்க

Digital News Team 2022-07-20T12:41:23 

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமாவையடுத்து கடந்த 14ஆம் திகதி முதல் வெற்றிடமாகிய ஜனாதிபதி பதவிக்காக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர்.

1981ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் கட்டளைச் சட்டத்திற்கு அமைய, பாராளுமன்றத்தில் இன்று இதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது .
இதில் 223 எம் .பிக்கள் வாக்களித்தனர். 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சமூகமளிக்கவில்லை. இதேவேளை செலுத்தப்பட்ட 223 வாக்குகளில் 4 வாக்குகள் செல்லுபடியற்றது என அறிவிக்கபட்டது.
இதில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளை பெற்று வெற்றியீட்டியுள்ளார் . ஏனைய வேட்பாளர்களான டளஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும் அனுரகுமார திசாநாயக்க 3 வாக்குகளையும் பெற்றுள்ளனர்

102-2-300x146.jpg
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மூலம் தெரிவுசெய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.Thinakkural.lk

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nochchi said:

இதேவேளை செலுத்தப்பட்ட 223 வாக்குகளில் 4 வாக்குகள் செல்லுபடியற்றது என அறிவிக்கபட்டது.

இதை கூட சரியாக போடத்  தெரியாதவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

இதை கூட சரியாக போடத்  தெரியாதவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்?

சம்பந்த்ன் எங்கேயிருந்து வாக்களித்திருப்பார் ? 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

இதை கூட சரியாக போடத்  தெரியாதவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்?

உண்மை. இந்த செய்தியை வாசிக்கும்போது யோசித்தேன். அதாவது நாடாளுமன்ற உறுப்பனர்களுக்கே வாக்களிக்கத் தெரியவில்லை என்பதும் சனாதிபதித் தெரிவில் வரலாற்றுப் பதிவாகியிருக்கிறது. இதைவிட வெட்கக்கேடு இருக்கமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் சனாதிபதி ஆகிவிட்டார்... சரி

அடுத்து என்ன ? 

கோட்டா கோ கமவிற்கு ஆதரவளித்த முஸ்லிம் வியாபாரிகள் கைது நடைபெறுமா ? 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kapithan said:

ரணில் சனாதிபதி ஆகிவிட்டார்... சரி

அடுத்து என்ன ? 

கோத்தபையனை எப்படி உள்ளே கொண்டு வருவது?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

கோத்தபையனை எப்படி உள்ளே கொண்டு வருவது?

கோ கம வுக்கு நிதி ஆதரவு அளித்த முசிலிம்கள் அனேகமாக உள்ளே போவினம் என்கிறேன் நான. நீங்கள் எப்படி? 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

கோ கம வுக்கு நிதி ஆதரவு அளித்த முசிலிம்கள் அனேகமாக உள்ளே போவினம் என்கிறேன் நான. நீங்கள் எப்படி? 

ரணிலே கொஞ்சம் நிதி கொடுத்து ஓரமா நடத்துங்கோ என்பார்.

நீங்க எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஈழப்பிரியன் said:

ரணிலே கொஞ்சம் நிதி கொடுத்து ஓரமா நடத்துங்கோ என்பார்.

நீங்க எப்படி?

இருந்து பார்ப்போம். 😉

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nochchi said:

102-2-300x146.jpg

May be an image of 1 person and text that says 'எங்கள் எல்லாருக்கும் இப்பிடி ஒரு friend இருப்பான்/ ள்... FB. JAFFNESE COM ழ்ப்பாணீஸ் Exam க்கு படிக்கேல்ல படிக்கேல எண்டு சொல்லி சோகமா இருப்பான்.. ஆனா result வரேக்க தான் தெரியும் அவனுக்கு தான் highest எண்டு..'

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kapithan said:

இருந்து பார்ப்போம். 😉

எத்தனையோ வருட கனவு எளிதில் கெட்டுப்போக விடமாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

பெருன்பான்மை பெளத்த சிங்களவர் அரசை தெரிவு செய்கின்றார்கள்.

எந்தவொரு சிங்கள அதிபரும் தமிழ் மக்களில் கரிசனை கொள்ளப்போவது இல்லை.

போய் உங்க உங்க வேலையை பாருங்கோ 😒

  • கருத்துக்கள உறவுகள்

சமூக வலைத்தள பதிவொன்று....
 

என்னை மந்திரியா பாத்திருப்பீங்க பிரதமராக பாத்திருப்பீங்க!

தோத்துப்போன சிறகு உடைஞ்ச பறவையா கூட பாத்திருப்பீங்க…. !!

இப்படி ஜனாதிபதியாக கெத்தா பாத்திருப்பீங்களா !!!

😂

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nochchi said:

வெற்றி பெற்றார் ரணில் விக்கிரமசிங்க

Digital News Team 2022-07-20T12:41:23 

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமாவையடுத்து கடந்த 14ஆம் திகதி முதல் வெற்றிடமாகிய ஜனாதிபதி பதவிக்காக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர்.

1981ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் கட்டளைச் சட்டத்திற்கு அமைய, பாராளுமன்றத்தில் இன்று இதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது .
இதில் 223 எம் .பிக்கள் வாக்களித்தனர். 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சமூகமளிக்கவில்லை. இதேவேளை செலுத்தப்பட்ட 223 வாக்குகளில் 4 வாக்குகள் செல்லுபடியற்றது என அறிவிக்கபட்டது.
இதில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளை பெற்று வெற்றியீட்டியுள்ளார் . ஏனைய வேட்பாளர்களான டளஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும் அனுரகுமார திசாநாயக்க 3 வாக்குகளையும் பெற்றுள்ளனர்

102-2-300x146.jpg
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மூலம் தெரிவுசெய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.Thinakkural.lk

செய்திகளை விபரம் தெரியாமல் பதிகிறார்கள்.

இது இரண்டாவது தடவை.

முதலாவது தடவை, பிரேமதாச மரணிக்க, அவரது பிரதமர் உக்குபண்டா விஜயதுங்க, பாராளுமன்றால் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆயினும் போட்டியாளர் இல்லாததால், வாக்கெடுப்பில்லாமல், ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தேர்வு: டளஸ் அழகபெரும, அனுர குமார இருவரையும் வீழ்த்தினார்

20 ஜூலை 2022, 07:11 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ரணில் விக்ரமசிங்க

இலங்கையின் 8வது புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற பொதுச் செயலாளரும், தெரிவத்தாட்சி அதிகாரியுமான தம்மிக்க தஸநாயக்க சபையில் அறிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு 134 வாக்குகளும், டளஸ் அழகபெருமவிற்கு 82 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்கவிற்கு 3 வாக்குகளும் கிடைத்துள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

இதையடுத்து, சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த 14ம் தேதி தனது விலகல் கடிதத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், அரசமைப்புச் சட்டப்படி, பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க, கடந்த 15ம் தேதி, பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்திய பிரமானம் செய்துக்கொண்டார்.

இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகபெரும மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்தப் போட்டியில் வென்று, புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சில உறுப்பினர்கள் என முக்கிய கட்சிகள் டளஸ் அழகபெருமவிற்கு ஆதரவை வழங்கியிருந்தன.

ஆனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட சில தமிழ் கட்சிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர், நாடாளுமன்ற வாக்கெடுப்பின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பதவியில் இருந்த ஜனாதிபதி ஒருவர் நாட்டை விட்டு வெளியேறி, பதவி விலகியதும் தற்போது நடந்ததுதான் முதல் முறை.

ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் உள்ள ஒரே எம்.பி. அவர் மட்டுமே. ஒரே எம்.பி.யாக உள்ளவர் தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்று தற்போது ஜனாதிபதி ஆகியிருக்கிறார்.

ரணில் கடந்து வந்த அரசியல் பாதை

1994 - 2022 (ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்)

1977 - முதல் முறை நாடாளுமன்றம் பிரவேசம்

1978 - இளையோர் விவகார அமைச்சராக பதவியேற்பு (இலங்கையின் மிக இளைய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்.)

6 தடவைகள் பிரதமர் பதவியை வகித்தார்.

எதிர்கட்சித் தலைவர் பதவியை வகித்தார்.

2020 - ஐ.தே.கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, நாடாளுமன்றத்திற்கு தேர்வு.

2022 - பதில் ஜனாதிபதி - ஜனாதிபதி

நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்

ரணில் விக்ரமசிங்க பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை கட்டியெழுப்புவதற்கு தமக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு, ரணில் விக்ரசிங்க, ஜனாதிபதியாக தெரிவானதை அடுத்து, சபையிலுள்ள அனைவரிடமும் கோரிக்கை விடுத்தார்.தமிழ் கட்சிகளையும் தம்முடன் கைக்கோர்த்து, நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். அத்துடன், தனது பதவி பிரமான நிகழ்வை, நாடாளுமன்றத்தில் நடத்துவதற்கு தனக்கு அனுமதியை வழங்குமாறு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார்.

காலியான ரணில் எம்.பி. பதவி

ரணில் ஜனாதிபதியானமையை அடுத்து வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, அவரின் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-62234577

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஏராளன் said:

காலியான ரணில் எம்.பி. பதவி

ரணில் ஜனாதிபதியானமையை அடுத்து வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, அவரின் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளார்.

வேற யார்? ருவன் விஜயவர்தனாதான். 

மாமா ஜனாதிபதி எண்டால் மருமோன் எம்பி யாவதுதானே முறை

அன்றும், இன்றும், என்றும்…

Uncle Nephew Party UNP😆  

  • கருத்துக்கள உறவுகள்

https://fb.watch/enLByeR7Fh/
 

வெடி கொழுத்தி கொண்டாடும் மக்கள்.

பிரதமர் யார்?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

https://fb.watch/enLByeR7Fh/
 

வெடி கொழுத்தி கொண்டாடும் மக்கள்.

பிரதமர் யார்?

தீவிர விசுவாசிகள் போல இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

பிரதமர் யார்?

வகுப்புத் தோழன் - டினேஷ் குணவர்தன?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

வகுப்புத் தோழன் - டினேஷ் குணவர்தன?

ஓ பழசுகள் தானா.

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா காக்காவிடம் இருந்து வடையை நரி கவ்விக் கொண்டது. அதன் பலநாள் கனவு பலித்தது.

எனி சொறீலங்காவின் தலைவிதியை அந்த மக்கள் தான் தீர்மானிக்கனும் இல்லை தலையில் அடிச்சுக்க வேண்டியான். 

காக்காவும் நரியும் எனி வடையை பங்கு போட்டுக் கொண்டாலும் ஆச்சரியமில்லை. இது சொறீலங்கா.. காக்கா.. நரிக் கதை என்பதால்.. எந்த வகையிலும் எதுவும் நடக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

.தமிழ் கட்சிகளையும் தம்முடன் கைக்கோர்த்து, நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தமிழர்களது உணர்வுகளையும், உரிமைகளையும் மதித்து, சரிசமமாக நாட்டை கட்டியெழுப்புவோம் என்று சொல்லவில்லை. சிங்கள, பவுத்தம் இடித்தழித்த நாட்டை கட்டியெழுப்ப தமிழர் கை கோர்க்கவேண்டும், கட்டி எழும்பியதும் கட்டிய கையை வெட்டி எறியவேண்டும். என்ன நாட்டில நடக்காததே நடக்கபோகுது? இந்த நாட்டின் சரித்திரமது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nochchi said:

உண்மை. இந்த செய்தியை வாசிக்கும்போது யோசித்தேன். அதாவது நாடாளுமன்ற உறுப்பனர்களுக்கே வாக்களிக்கத் தெரியவில்லை என்பதும் சனாதிபதித் தெரிவில் வரலாற்றுப் பதிவாகியிருக்கிறது. இதைவிட வெட்கக்கேடு இருக்கமுடியுமா?

எனக்குள்ள சந்தேகமென்னவென்றால்; இவர்களுக்கு வாக்கு போடும்  மக்கள் மட்டும் எப்படி சரியாக, இவர்களை மீண்டும் மீண்டும் சந்தேகமில்லாமல்,  குழப்பமில்லாமல் தெரிவு செய்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்பி அனுப்புகிறார்கள்? தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாமைக்குரிய காரணத்தை இப்போ மக்கள் உணர்ந்திருப்பார்கள். எப்படிப்பட்ட அறிவு குறைந்தவர்களை நாங்கள் அனுப்பி விட்டு காத்திருந்து ஏமாந்தோம் என்பதை. 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, satan said:

இதை கூட சரியாக போடத்  தெரியாதவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்?

நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட நான்கு வாக்குகள் தொடர்பான முக்கிய தகவல் வெளியானது!

நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட நான்கு வாக்குகள் தொடர்பான உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிராகரிக்கப்பட்ட 4 வாக்குகளில் இரண்டு வாக்குகள் ரணிலுக்கு அளிக்கப்பட்டவை என கூறப்படுகின்றது.

அத்துடன், அதில் ஒன்று அநுரவுக்கு வழங்கப்பட்டதெனவும், மற்றைய வாக்குசீட்டு வெறுமனே காணப்பட்டதாக தெரியவருகின்றது.

https://athavannews.com/2022/1291812

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழைய மொந்தையில் புதிய பழைய கள்ளு......40வருட அதே இனவாத முகம்.......எல்லாமே தொடர்கதை....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.