Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணிலின் ஆட்டம் ஆரம்பம்; கோட்டாகோகம மீது தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் ஆட்டம் ஆரம்பம்; கோட்டாகோகம மீது தாக்குதல் 


கோட்டாகோகம போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதலை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/ரணலன-ஆடடம-ஆரமபம-கடடககம-மத-தககதல/175-300899

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி உண்மை என்றால்.. ரணில் தப்புத்தாளம் போடுறார். மாணவர்களின் பலத்தை இராணுவத்தைக் கொண்டு அடக்க முற்பட்டு.. தோற்றவர்கள் பலர். இது பிலிப்பைன்ஸ் மார்க்கோஸின் நிகழ்வுகளுக்கு ஒத்து எல்லாம் நடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரர்,  ரணிலுக்கு…. பதவி விலக இரண்டு வாரம் கால அவகாசம் கொடுத்தவர்கள்.
ரணில்… அவர்கள் மீது, தாக்குதலை தொடுத்ததன் மூலம்,
நாளையே…. பெரிய போராட்டம் வெடிக்கும்.
ஆனால் அதை அடக்க… துப்பாக்கி சூடுகள் கூட நடத்தப் படலாம்.

நாளைக்கு… அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவும் இருக்கின்றது.
ஏதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பதை நாளை அறியலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ரணிலின் ஆட்டம் ஆரம்பம்; கோட்டாகோகம மீது தாக்குதல் 

அல் ஜஸீரா மற்றும் பீ.பீ.சீ போன்ற செய்திகளில் 'கோட்டா கோ கோம்' போராட்டக் கொட்டைகள் பிடுங்கி எறியப்படும் காட்சிகள் 00:30 மணிக்கு ஒளிபரப்பாகியது. நள்ளிரவு 01:00மணிக்கு முகமூடிகள் அணிந்து படையினர் உள்ளடங்கலாக நடவடிக்கையில் ஈடுபட்டதைக் காண முடிந்தது. நாளை சுடுகலனும் பாவிக்கப்படலாம். அமெரிக்க, இந்திய ஆசீர்வாதத்தோடு மீண்டும் அப்பாவிகள் காவுகொள்ளப்பட உள்ளனர். அதேவேளை முன்னணிப் போராட்டக்காரர் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். உறவுகள் முன்பே சுட்டியதுபோல் நரியினது வேலை ஆரம்பித்தவிட்டது. ரணிலின் தொடக்கமும் முடிவும் உறுதியாகிறதாகவே தென்படுகிறது.
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் அதிபராக வேறு ஒருவர் வந்து இருப்பினும் இதே நடவடிக்கையே. அப்புறப்படுத்தல் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட விடயம் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரர்கள் ரணிலுக்கு சந்தர்ப்பம் கொடுத்து வெள்ளியுடன் தாம் தமது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்போவதாகக் கூறியபின்னரும், வியாழன் இரவே ரணில் தனது அதிகாரத்தைக் காட்டத் தொடங்கியிருப்பது, போராட்டக்காரர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லவே என்று கூறப்படுகிறது. 

பழைய ஆட்சியாளர்களை, ஊழல்ப் பெருச்சாளிகளை அப்புறப்படுத்தவென்று வந்த போராட்டம் இன்று அதே பெருச்சாளிகளால் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. 

இனிமேல் என்ன செய்யவேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும். 

ராஜபக்ஷேக்கள் பெளத்தத்திற்கு அதிமுக்கியத்துவம் கொடுப்பவர்கள், தமது வாக்கு வங்கியை அதிகரிக்க. 

ரணில் பிக்குகளை தூரத்தில் வைத்திருப்பவர் என்று அறியப்பட்டவர். ஆனால், தான் அதிகாரத்திற்கு வந்தவுடன் அவரும் சென்றிருப்பது கங்காராமயவின் ஆசீர்பெற. அதுமட்டுமல்லாமல், ராணுவத்தின்மீதான பூரண அதிகாரம் தனக்கிருப்பதாகக் காட்ட ராணுவத் தலைமையகத்திற்கும் உடனே சென்று முப்படைப் பிரதானிகள், பொலீஸ் உயர் அத்தியட்சகர் மற்றும் பாதுகாப்புப் பிரிவின் பெருந்தலைகளோடு ஆலோசனைக் கூட்டமும் நடத்தியிருக்கிறார்.

இந்த நரி தற்போது சிங்கத்தின் தோல்போர்த்தி வந்திருக்கிறது. நண்மைக்கல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரர்களை இலக்குவைத்து இழுத்துச் செல்லும் அதிரடிப்படை. காலில் விழாத குறையாகக் கெஞ்சும் இளைஞனும் அவனது துணையும். "மச்சான், நான் உங்களைப் பார்த்து அப்படிக் கூறவில்லை, என்பாட்டில் வீட்டிற்குத்தான் செல்கிறேன், தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்" என்று அவன் கெஞ்சியும், தனது துப்பாக்கியை இன்னொரு வீரனிடம் கொடுத்துவிட்டு அவனை எப்படியாவது இழுத்துச்செல்ல அந்த அதிரடிப்படைவீரன் முயல்கிறான். 

https://twitter.com/dhothaka/status/1550237788133814272?s=20&t=lWqFI---E20UjdcuSMgjFA

https://twitter.com/dhothaka/status/1550237788133814272?s=20&t=lWqFI---E20UjdcuSMgjFA

எந்த ராணுவம் உங்களின் யுத்த கதாநாயகர்கள் என்று இதுவரை கூவினீர்களோ, அதே ராணுவம் இப்போது உங்கள் முன்னால் வந்து நிற்கிறது. எங்கே, இப்போது கூறுங்கள் பார்க்கலாம் நீங்கள் எங்களின் உண்மையான் கதாநாயகர்கள் என்று ?

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்

கோடடா   அரசால் ஊட்டி வளர்க்க படட படையினரின் போக்கு இப்பொது விளங்கும்....   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

போராட்டக்காரர்கள் ரணிலுக்கு சந்தர்ப்பம் கொடுத்து வெள்ளியுடன் தாம் தமது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்போவதாகக் கூறியபின்னரும், வியாழன் இரவே ரணில் தனது அதிகாரத்தைக் காட்டத் தொடங்கியிருப்பது, போராட்டக்காரர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லவே என்று கூறப்படுகிறது. 

அன்று ஏதிலிகளாக நின்ற எம்மை, எப்படி ஓட ஓட விரட்டி கொன்று குவித்தார்களோ அந்த சூழலை இவர்களும் கண்டு, அனுபவித்து அதன் வலியை உணரவேண்டாமோ? காலம் முழு மூச்சோடு இறங்கியிருக்குது, ஏறினாலும் விடாது, இறங்கினாலும் விடாது தான் நினைத்ததை நடத்தி முடிக்கும் வரை. தோல்வியோடு வீட்டுக்கு போய் ஓய்வெடுக்காமல்  வலிந்து வந்து நிக்கிறவர்களோடு தன் பழைய கணக்கை தீர்க்க.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, satan said:

அன்று ஏதிலிகளாக நின்ற எம்மை, எப்படி ஓட ஓட விரட்டி கொன்று குவித்தார்களோ அந்த சூழலை இவர்களும் கண்டு, அனுபவித்து அதன் வலியை உணரவேண்டாமோ? காலம் முழு மூச்சோடு இறங்கியிருக்குது, ஏறினாலும் விடாது, இறங்கினாலும் விடாது தான் நினைத்ததை நடத்தி முடிக்கும் வரை. தோல்வியோடு வீட்டுக்கு போய் ஓய்வெடுக்காமல்  வலிந்து வந்து நிக்கிறவர்களோடு தன் பழைய கணக்கை தீர்க்க.

இல்லை சாத்.

எமக்கு நடந்தவற்றுடன் இவற்றை ஒப்பிடவே முடியாது. இன்றுவரை சுடப்பட்டுக் கொல்லப்பட்ட சிங்களவர் ஒருவர் தான். நேற்றிரவு கூட ஆயுதங்கள் பாவிக்காமலேயே மக்களை விரட்டியிருக்கிறார்கள். இப்போராட்டங்களில் ஒரு சிங்களவனும் உயிரிழக்கக் கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் மிகக் கவனமாக இருக்கிறார்கள். தமது ராணுவத்தின்மீதும், பொலீஸ் மீதும் மக்கள் வெறுப்படையாமல் பார்த்துக்கொள்வதில் மிகக் கவனமாக ஆட்சியாளர்கள் செயலாற்றுகிறார்கள். தமிழர்மீது தாம் நடத்திய அக்கிரமங்களை சிங்களவர் ஒருபோதுமே உணர அவர்கள் விடப்போவதில்லை. மக்கள் தமது "யுத்தக் கதாநாயகர்கள்" எனும் விம்பம் நொருங்காமல் எப்போதும் மனதில் இருக்க சகலதையும் இந்த ஆட்சியாளர்கள் செய்வார்கள். 

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

இல்லை சாத்.

எமக்கு நடந்தவற்றுடன் இவற்றை ஒப்பிடவே முடியாது. இன்றுவரை சுடப்பட்டுக் கொல்லப்பட்ட சிங்களவர் ஒருவர் தான். நேற்றிரவு கூட ஆயுதங்கள் பாவிக்காமலேயே மக்களை விரட்டியிருக்கிறார்கள். இப்போராட்டங்களில் ஒரு சிங்களவனும் உயிரிழக்கக் கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் மிகக் கவனமாக இருக்கிறார்கள். தமது ராணுவத்தின்மீதும், பொலீஸ் மீதும் மக்கள் வெறுப்படையாமல் பார்த்துக்கொள்வதில் மிகக் கவனமாக ஆட்சியாளர்கள் செயலாற்றுகிறார்கள். தமிழர்மீது தாம் நடத்திய அக்கிரமங்களை சிங்களவர் ஒருபோதுமே உணர அவர்கள் விடப்போவதில்லை. மக்கள் தமது "யுத்தக் கதாநாயகர்கள்" எனும் விம்பம் நொருங்காமல் எப்போதும் மனதில் இருக்க சகலதையும் இந்த ஆட்சியாளர்கள் செய்வார்கள். 

உண்மை. பார்வைக்கு வன்நடவடிக்கைபோன்ற தோற்றப்பாட்டினையும் இழப்புகளற்ற மென் நடவடிக்கையூடாக போராட்டக்காரரை அப்புறப்படுத்தவே முயல்வார்கள். கதாநாயகவிம்பம் பாதுகாக்கப்படுதல்தான் அவர்களது முதலீடு. அதனை இழக்கவிரும்பமாட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“கோட்டா கோ கம” படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுள் வந்தது! – ஊடகவியலாளர்கள் உட்பட பலர் மீது தாக்குதல் – பலர் காயம்!

July 22, 2022
spacer.png

 

கோட்டாகோகம போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினரால் நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை கலைக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது 8 பேர் காயமடைந்துள்ளதுடன், ஊடகவியலாளர்கள்மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோட்டாகோகமவில் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் – இரண்டு ஊடகவியலாளர்கள் கைது!

கோட்டாகோகமவில் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன். இரண்டு ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளரான சதுரங்க பிரதீப் குமார, கசுன் குமாரகே ஆகியோர் கிராஸ்கட் எனும் பகுதியில் இடைமறிக்கப்பட்டு விமானப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் எந்தவொரு காவல் நிலையத்திலும் ஒப்படைக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கோட்டாகோகம போராட்டக்களத்தில் ஊடகவியலாளர் றசிக குணவர்தன மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது தலையில் இரும்பு கம்பியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர்மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோட்டா கோ கம போராட்டக்களம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுள் வந்தது!

கோட்டா கோ கம போராட்டக்களம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது போராட்டக்களத்திலிருந்த சட்டத்தரணி ஒருவர் உட்பட 10 போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், காலிமுகத்திடல் பகுதிக்கு சிவில் உடையணிந்த இராணுவத்தினர் நூற்றுக்கணக்கானோர் மற்றும் விமானப்படையை சேர்ந்தவர்கள் வருகை தந்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினருடன் மோத வேண்டாம், இல்லையெனில் அவசரச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.

இருப்பினும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் போது பாதுகாப்பு படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறாத வண்ணம் கோட்டா கோ கம பகுதியை சுற்றியுள்ள அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோட்டா கோ கம பகுதியில் கூடாரங்கள் மற்றும் தடயங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 

https://globaltamilnews.net/2022/178696

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

காலி முகத்திடல் போராட்டக்களம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது – ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்!

காலி முகத்திடல் போராட்டக்களம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது – ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டா கோ கம போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்களான ரந்திமல் கமகே, லஹிரு, அனுரங்க உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட எட்டிற்கும் மேற்பட்டவர்கள் மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், இரண்டு ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த பகுதியில் இருந்த சில வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ள இளைஞர்களை போராட்டக்கள பகுதியிலிருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம போராட்டக்களம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, காலிமுகத்திடல் பகுதிக்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளதுடன், காலிமுகத்திடல் பிரதேசத்திற்குச் செல்லக்கூடிய அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு முற்றாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

காலி வீதியில் கொள்ளுப்பிட்டி சந்தியின் சுற்றுவட்டத்தில் இருந்து பாதை மூடப்பட்டுள்ளதுடன், ஷங்கிரிலா ஹோட்டல் அருகில் பாலதக்ஷ மாவத்தையும் குறுக்காக மறிக்கப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் சைத்திய வீதி, லோட்டஸ் வீதி என்பனவும் குறுக்காக மறிக்கப்பட்டு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலி முகத்திடல் பிரதேசத்தை நோக்கிச் செல்ல எந்தவொரு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுத்துள்ளதுடன்,செல்ல முற்படும் சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

https://athavannews.com/2022/1291940

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் - ஏற்றுக்கொள்ள முடியாதவிடயம் - சர்வதேச மன்னிப்புச்சபை

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கடுமையாக கண்டித்துள் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு  இது ஏற்றுக்கொள்ள முடியாதது  அதிகாரிகள் உடனடியாக பதவி விலகவேண்டும்  என வேண்டுகோள் விடுத்துள்ளது.

army_atta.jpg

டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமை பாதுகாக்கப்படவேண்டும்,இலங்கை அதிகாரிகள் உடனடியாக இந்த வன்முறை நடவடிக்கைகளை கைவிடவேண்டும்,சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கவேண்டும் பத்திரிகையாளர்கள் கோட்டா கோ கமவிற்குள் நுழைவதை தடுக்ககூடாது,பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையை செய்வதை தடுப்பது பத்திரிகை சுதந்திரத்தை நேரடியாக மீறும் செயல் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்;துள்ளது.

126007286_mediaitem126007485.jpg

FYObD6tacAEIEfi.jpg

FYObJYYakAA4kaW.jpg

FYOa--HaQAAWxKY.jpg

FYObCw5aMAELjD7.jpg

FYOTYTuaAAEO4yC.jpg

FYOTaiyaUAAaovx.jpg

FYOTVzAaMAA4Wk7.jpg

FYOTXZdaQAAsTuS.jpg
 

https://www.virakesari.lk/article/131991

 

 

ஆர்ப்பாட்ட முகாம்கள்மீது படையினர் தாக்குதல் - தலைவர்கள் கைது அல்ஜசீரா

ஆர்ப்பாட்டக்காரர்கள்  மீது ஈவிரக்கமற்ற தாக்குலை மேற்கொண்ட பின்னர் இலங்கை இராணுவத்தினர் தலைநகர் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தை கைப்பற்றியுள்ளனர்.

அருகில் உள்ள கோட்டா கோ கம  ஆர்ப்பாட்ட கூடாரங்களை அழித்த படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களின் தலைவர்கள் பலரை கைதுசெய்துள்ளதுடன் அந்த பகுதியை சுற்றிவளைத்துள்ளனர்.

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையிலிருந்து ஆர்;ப்பாட்டக்காரர்கள் வெளியேறி சில மணிநேரங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

22ம் திகதி ஜனாதிபதி செயலக பகுதியிலிருந்து வெளியேறும் தங்கள் நோக்கத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

protests_atta1.jpg

நள்ளிரவளவில் பெருமளவு படையினர் கோட்டாகோகம பகுதியை நோக்கி செல்வதாக நாங்கள் கேள்விப்பட்டோம்,தீடிரென அவர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி ஓடுவதை பார்த்தோம் என இளம் ஆர்ப்பாட்டக்காரரான நிபுன் சாரக ஜெயசேகர அல்ஜசீராவிற்கு  தெரிவித்தார்.

அதன் பின்னர் அவர்கள் அந்த பகுதியை சுற்றிவளைத்து ஈவிரக்கமின்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என அவர் குறிப்பிட்டார். இராணுவத்தினரின் தாக்குதலில் இருந்து தப்பமுயன்றவேளை அவர் சிறிய காயங்களிற்கு உட்பட்டுள்ளார்.

இhhணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டவேளை அதனை நேரடியாக ஒளிபரப்பு செய்த ஜெயசேகர எனினும் நிலவிய குழப்பநிலை காரணமாக தனது கையடக்கதொலைபேசியை தொலைத்துள்ளார்.

தாக்குதல் காரணமாக பத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மோசமாக காயமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆறு தடவை பிரதமராக பதவி வகித்த ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையிலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் மீதான ராஜபக்சக்காளின் நீண்ட கால செல்வாக்கு குறித்து அதிகரித்துவரும் கடும் சீற்றத்தை காணப்பட்ட  தொடர் ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து  முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பியோடினார்.

தாக்குதல் கைதுகள் குறித்து அறிந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் அனைவரினதும் பாதுகாப்பையும் உறுதி செய்யவேண்டும் கைதுசெய்யப்பட்டவர்கள் எங்கே உள்ளனர் என்பதை தெரிவிக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

நான் பொலிஸ்மா அதிபரையும் இராணுவதளபதியையும் தொடர்புகொள்ள முயன்றுள்ளேன்,தேவையற்ற படைபலபிரயோகம்  நாட்டிற்கும் அதன் சர்வதேச கௌரவத்திற்கும் உதவாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டவேளை நிலவிய குழப்பம் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான அஞ்சன பண்டாரவத்தை அல்ஜசீராவிற்கு இவ்வாறு தெரிவித்தார்.

எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை,தீடிர் என அவர்கள் வந்து சத்தமிட்டவாறு ஆபாசவார்த்தைகளில் ஏசியவாறு  தாக்குதல் மேற்கொண்டு எங்களை அங்கிருந்து துரத்தினார்கள் என அவர் குறிப்பிட்டார்.

அங்கு 200 படையினர் காணப்பட்டனர் ஆனால் அந்த பகுதி இராணுவத்தினரின் கடல்போல காணப்பட்டது என்றார் அவர்.

சமூக ஊடகங்கள் மூலம் தாக்குதலை ஒளிபரப்பிக்கொண்டிருந்தவேளை விமானப்படையை சேர்ந்த ஒருவர் தலையில் தாக்கினார் என இளம் செயற்பாட்டாளர் சபீர் முகமட் தெரிவித்தார்.

அவர் பின்னால் இருந்து வந்து தலையில் தாக்கினார் எனது கையடக்க தொலைபேசியை பறித்து எறிந்தார்,நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்த பலர் தாக்கப்பட்டனர் என அவர் அல்ஜசீராவிற்கு தெரிவித்தார்.

அவர்கள் கோட்டா கோ கமவை மூடிவிட்டனர் எந்த பத்திரிகையாளரும் உள்ளே செல்ல முடியாது என அவர் குறிப்பிட்டார்.

பலர் தாக்குதல்களை சமூக ஊடகங்கள் மூலம் நேரலை செய்தனர் எனினும் அதிகாரிகளின் தலையீட்டால் அது அடிக்கடி பாதிக்கப்பட்டது.

படையினர் எவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்களின் பகுதிக்கு வந்தனர்  மீடியா மீடியா என சத்தமிட்ட நபரை எப்படி திருப்பியனுப்பினர் என்பதை வீடியோக்கள் காண்பித்துள்ளன.

அதன் பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்களை சோதனையிட்டனர்.

FYPDKgxUsAQtNS1.jpg

ஆர்ப்பாட்ட இயக்க தலைவர்களில் ஒருவரான மெலானி குணதிலக கோட்டா கோ கம பகுதிக்கு செல்ல முயன்றவேளை படையினரால் தடுக்கப்பட்டார், அவர் படங்களை எடுக்கமுயன்றவேளை இராணுவவீரர் ஒருவர் கையடக்க தொலைபேசி பறித்து அவற்றில் உள்ளவற்றை அழித்தார் என அவர் அல்ஜசீராவிற்கு தெரிவித்தார்.

எனது நண்பர் கேள்விகேட்க முயன்றவேளை படையினர் அவரையும் கைதுசெய்தனர் என அவர் தெரிவித்தார்.

22ம் திகதி 2 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளிக்கவுள்ளனர் என்ற அறிவிப்பின் பின்னர் 22 ம் திகதி அதிகாலையி;ல் 1 மணிக்கு மிகப்பெருமளவு இராணுவத்தினர்  கோட்டா கோ கமவை சுற்றிவளைத்து  அனைத்து திசைகளில் இருந்தும் ஆயுதமற்ற ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்க தொடங்கினார்கள் என ஆர்ப்பாட்ட தலைவர்கள் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.

தகவல்தொழில் நிலையம்,அங்கவீனமுற்ற படையினர் கூடாரம் 

நாளாந்தம் பெருமளவானவர்களிற்கு உணவளித்த சமூக சமையலறை உட்பட பல கூடாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என ஆர்ப்பாட்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டத்தரணி நுவான் போபகே செயற்பாட்டாளர்கள் லகிருசில்வா,அனுரங்க, அங்கவீனமுற்ற படை வீரர் ஒருவர் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விக்கிரமசிங்க இன்று புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பதவியேற்ற பின்னர் பின்னர் ரணில் விக்கிரமிங்க நான் அரச கட்டிடங்களை ஆக்கிரமித்தல் அரசாங்கத்தை பதவி கவிழ்க்க முயலுதல் போன்றவற்றை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்திருந்தார்.

நாளை நாளை நாங்கள் இங்கிருந்து செல்வோம் என பகிரங்கமாக அறிவித்திருந்தோம்,நாங்கள் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்க தீர்மானித்தோம்,தங்கள் அதிகாரத்தை காண்பிப்பதை தவிர இதனை செய்வதற்கான நோக்கம் வேறு எதுவும் இருக்க முடியாது ஆர்ப்பாட்ட இயக்கத்தை மிரட்டி ஒடுக்குவதே அவர்களின் நோக்கம் என ஜெயசேகர குறிப்பிட்டார்.
 

 

https://www.virakesari.lk/article/131994

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ராணுவம் நள்ளிரவில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: பிபிசி தமிழ் செய்தியாளரும் தாக்கப்பட்டார்

22 ஜூலை 2022, 02:24 GMT
புதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர்
YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

இலங்கையில் பாதுகாப்புப் படையினர் தலைநகர் கொழும்புவில் உள்ள முக்கிய அரசாங்க எதிர்ப்புப் போராட்ட முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி கூடாரங்களை அகற்றத் தொடங்கியுள்ளனர்.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு வெளியே இருந்த போராட்டக்காரர்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவதற்குச் சில மணிநேரத்திற்கு முன்னதாக, நூற்றுக்கணக்கான துருப்புகள் மற்றும் போலீஸ் கமாண்டோக்கள் போராட்டக்காரர்களை நோக்கி திடீரென தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.

பிபிசி செய்தியாளர்கள் மணிகண்டன், அன்பரசன் எத்திராஜன், ஜெரின் சாமுவேல் ஆகியோர் பிபிசி நேரலையில் செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தபோது, வீடியோ செய்தியாளர் ஜெரின் ராணுவத்தால் தாக்கப்பட்டார். அதோடு, ராணுவ வீரர் ஒருவர் அவருடைய கைபேசியைப் பறித்து, அதிலிருந்து வீடியோக்களை அழித்தார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட பிறகு இது நிகழ்ந்துள்ளது.

 

இலங்கை ராணுவம் போராட்டக்காரர்கள் மீது திடீர் தாக்குதல்

 

படக்குறிப்பு,

இலங்கை ராணுவம் போராட்டக்காரர்கள் மீது திடீர் தாக்குதல்

இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம் 13ஆம் தேதியன்று நாட்டை விட்டு வெளியேறினார். அதன்பின்னர், சிங்கப்பூரிலிருந்து தனது ராஜினாமாவை கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதியன்று ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு, 20ஆம் தேதியன்று நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னாள் பிரதமரான ரணில் விக்ரமசிங்க, பொதுமக்களிடம் செல்வாக்கு இல்லாதவராகக் காணப்படுகிறார். மேலும், போராட்டக்காரர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

 

இலங்கை ராணுவம் போராட்டக்காரர்கள் மீது திடீர் தாக்குதல்

நாட்டின் நிதியைத் தவறாகக் கையாண்டமைக்காக ராஜபக்ஷ நிராகத்தின் மீது பலர் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும், ரணில் விக்ரமசிங்கவை பிரச்னையின் ஒரு பகுதியாகப் பார்க்கிறார்கள். ஆனால், அவர் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற மறுநாளே தெருக்களில் சில ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

விக்ரமசிங்க பதவியேற்ற உடனேயே, அரசாங்கத்தைக் கவிழ்க்க அல்லது அரசாங்க கட்டடங்களை ஆக்கிரமிப்பதற்கான எந்தவொரு முயற்சியும் ஜனநாயகம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியதோடு, அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டத்தின்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

ராணுவத்தால் கலைக்கப்பட்ட போராட்டக்காரர்கள்

எதிர்ப்பு இயக்கத்தை விரைவில் அரசாங்கம் படிப்படியாக ஒடுக்கக்கூடும் என்று போராட்டக்காரர்கள் மத்தியில் கவலைகள் இருந்தன. ஜனாதிபதி செயலகத்தின் வளாகம் மாத்திரம் போராட்டக்காரர்களின் வசமிருந்த நிலையில், அதை இன்று மதியம் அரசாங்கத்திடம் கையளிக்க போராட்டக்காரர்கள் தீர்மானித்திருந்தனர்.

இருப்பினும், இலங்கையில் ஜனாதிபதி செயலகத்தை கடந்த 104 நாட்களாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்த போராட்டகாரர்கள், இன்று (22-07-2022) அதிகாலை ராணுவத்தால் கலைக்கப்பட்டுள்ளனர். ராணுவம் உள்ளிட்ட படை வீரர்களை ஈடுபடுத்தி, அரசாங்கம் ஜனாதிபதி செயலகம் மற்றும் அதை அண்மித்த வளாகத்தைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென ஆயிரக்கணக்கான ஆயுதம் ஏந்திய ராணுவம் மற்றும் போலீஸார் வரழைக்கப்பட்டனர்.

இதையடுத்து, ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து வீதிகளையும் ராணுவத்தினர், தடுப்பு வேலிகளை அமைத்து மூடியிருந்தனர்.

அதன்பின்னர், திடீரென ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு வருகை தந்த ராணுவம், அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர்.

ராணுவத்தின் தடியடி தாக்குதலை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகள், ஜனாதிபதி செயலக வளாகத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.

பிபிசி செய்தியாளர் மீது தாக்குதல்

ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியிலிருந்து இளைஞர், யுவதிகள் வெளியேற்றப்பட்டதை அடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை பாதுகாப்புப் படையினர் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்நிலையில், போராட்டக்காரர்களை கலைப்பதற்காக ராணுவம் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், பிபிசி தமிழ் பேஸ்புக் பக்கத்தின் ஊடாக நேரடி ஒளிபரப்பை வழங்கிக் கொண்டிருந்தோம்.

இதன்போது, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினர், பிபிசி தமிழ் செய்தியாளர் மணிகண்டன் மற்றும் வீடியோ செய்தியாளார் ஜெரினின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்திருந்தனர்.

 

இலங்கை ராணுவம் போராட்டக்காரர்கள் மீது திடீர் தாக்குதல்

அதைத் தொடர்ந்து, நாம் பிபிசி செய்தியாளர்கள் என்று எமது செய்தியாளர்கள் கூறி பாதுகாப்புப் பிரிவிற்கு தெளிவூட்டல்களை வழங்க முயன்ற சந்தர்ப்பத்தில், ஊடக கடமைகளுக்கு மீண்டும் மீண்டும் இடையூறு விளைவித்தனர்.

அதன் பின்னர், பிபிசி தமிழ் வீடியோ செய்தியாளர் ஜெரின் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதுடன், ஜெரினுடைய வயிற்றின் மீது ராணுவ அதிகாரியொருவர் தனது பாதணி அணிந்த பாதங்களினால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதையடுத்து, ஏனைய பிபிசி செய்தியாளர்களின் உதவியுடன், தாக்குதலுக்கு இலக்கான செய்தியாளர் அருகிலுள்ள நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

குறித்த பகுதியைச் சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டமையினால், வாகனங்கள் உள்ளே பிரவேசிப்பதற்கும் வெளியேறுவதற்கும் முடியாத நிலைமை காணப்பட்டது.

அதன்பின்னர், 1990 என்ற இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பை மேற்கொண்டு, தாக்குதலுக்கு இலக்கான எமது செய்தியாளரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆம்புலன்ஸ் குறித்த பகுதிக்கு வருகை தந்து, பிபிசி செய்தியாளரை கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க உதவியது.

இந்நிலையில், குறித்த ஊடகவியலாளருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

காவல்துறை செய்தித்தொடர்பாளர் எஸ்.எஸ்.பி.நிஹல் தல்டுவா பிபிசி செய்தியாளர் தாக்கப்பட்டது குறித்து தனக்குத் தெரியவில்லை என்றும் அதுகுறித்து விசாரிப்பதாகவும் கூறியுள்ளார்

இதேவேளை, கொழும்பின் பிரதான பகுதிகளில் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

https://www.bbc.com/tamil/sri-lanka-62261266

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் : அமெரிக்க தூதுவர் கவலை

U.S.-ambassador_-galle-face-protest_-attகொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நள்ளிரவில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை  குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அதிகாரிகள் நிதானத்தை கடைப்பிடிக்கவேண்டும் என வலியுறுத்துகின்றோம் என தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைகளை பெறுவதற்கான உடனடி அனுமதியை வழங்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

https://www.virakesari.lk/article/131995

காலிமுகத்திடல் போராட்டம் மீது அடக்குமுறை : கனடா, பிரித்தானியா கண்டனம்

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நள்ளிரவில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை  குறித்து பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஆழ்ந்த கவலையும் கண்டனமும் வெளியிட்டுள்ளன.

galle-face-protests_-Canada_-Britain_.jp

குறித்த சம்பவம் தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹுல்டன் தெரிவிக்கையில்,

uk.JPG

காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இருந்து வரும் செய்திகள் குறித்து மிகவும் கவலையடைகிறேன்.  அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகின்றோம் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹுல்டன் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கனேடிய உயர்ஸ்தானிகர் தெரிவிக்கையில்,

canada.JPG

காலி முகத்திடல் போராட்டக் களத்தில் ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை.  அதிகாரிகள் நிதானத்துடன் செயல்படுவதும் வன்முறையைத் தவிர்ப்பதும் முக்கியம் என கனேடிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
 

https://www.virakesari.lk/article/131996

காலிமுகத்திடல் போராட்டம் மீது அடக்குமுறை : சுவிற்சர்லாந்து கண்டனம்

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நள்ளிரவில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக எடுக்கப்பட்ட  நடவடிக்கை குறித்து சுவிஸ்லாந்து உயர்ஸ்தானிகர் டொமினிக் ஃபர்க்லர் ஆழ்ந்த கவலையும் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில்  சுவிற்சர்லாந்து உயர்ஸ்தானிகர் டொமினிக் ஃபர்க்லர்தெரிவிக்கையில்,

காலி முகத்திடல் போராட்டக்களத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைகிறேன்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குமான உரிமை முக்கியமானது.

காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைகளை பெறுவதற்கான உடனடி அனுமதியை வழங்கவேண்டும். இலங்கைக்கு பரஸ்பர மரியாதையும் ஒத்துழைப்பும் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

swiss.JPG
 

https://www.virakesari.lk/article/131998

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் – அமெரிக்கா

காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியை வழங்குங்கள் – அமெரிக்கா வலியுறுத்து!

நள்ளிரவில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கவலையடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இலங்கை அதிகாரிகள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியை வழங்குமாறும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://athavannews.com/2022/1291964

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது - ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது என  ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று அதிகாலை முப்படையினர் அங்கிருந்து அகற்றினர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கவலை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு ஆர்ப்பாட்டங்களைக் கண்காணிக்க உரிமை உண்டு. எனவே அவர்களின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தப்படக் கூடாது என ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

29.jpg
 

 

https://www.virakesari.lk/article/132004

  • கருத்துக்கள உறவுகள்

பாவம், தூதுவர்களால் கவலைப்படுவதைத் தவிர வேறென்னதான் செய்ய முடியும். பரவாயில்லை, கவலைப்படவாவது செய்தார்கள். தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டபோதும் கவலைப்பட்டார்களா? யாருக்காவது நினைவிருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது - ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது என  ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று அதிகாலை முப்படையினர் அங்கிருந்து அகற்றினர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கவலை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு ஆர்ப்பாட்டங்களைக் கண்காணிக்க உரிமை உண்டு. எனவே அவர்களின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தப்படக் கூடாது என ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

29.jpg
 

 

https://www.virakesari.lk/article/132004

நீங்கள்நல்லா கவலைப்படுங்கோ, இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படும் போது ஒன்றும் செய்யாமல் கைகட்டி இருந்து விட்டு இப்ப ஒரு சின்ன தாக்குதலுக்கே இப்பிடி 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க தூதுவர், பிரித்தானிய தூதுவர், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதி நாடகமாடுகிறார்களா
பிள்ளையையும் நுள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுதல் தானே இது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அமெரிக்க தூதுவர், பிரித்தானிய தூதுவர், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதி நாடகமாடுகிறார்களா
பிள்ளையையும் நுள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுதல் தானே இது

 

இவர்கள் அவசரமாக  அனுதாபப்படுகிறார்கள்  என்றால்.....???

  • கருத்துக்கள உறவுகள்

நிலைமை தங்கள் கையை மீறிவிடுமோ என்று கவலைப்படுகிறார்கள். ரணிலோடு தொடர்ந்து செயலாற்ற விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்திருந்ததே? நல்லாட்சி காலத்தில் ராஜபக்ஸ் குடும்பத்தை ஐ. நாவில் காப்பாற்றியவர் இன்று அதே கோட்டில். பாப்போம் எப்படி முடியுதென்று? கடைசியாய் ஆப்கானிஸ்தானில நடந்ததுபோல் அமெரிக்க இராணுவம் இதுதான் சந்தர்ப்பம் என்று வந்து இறங்கினாலும் ஆச்சரியமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

அமெரிக்க தூதுவர், பிரித்தானிய தூதுவர், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதி நாடகமாடுகிறார்களா
பிள்ளையையும் நுள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுதல் தானே இது

மேற்கு நாடுகள் எல்லாம் கவலை தெரிவித்து விட்ட நிலையில்….

பக்கத்து நாடான இந்தியா… இன்னும் கவலை தெரிவிக்கவில்லை என்று,
எனக்கு கவலையாக இருக்கு. 😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.