Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லலிதாவின் கதை!

Featured Replies

:lol:<_<:lol::lol:<_<
  • Replies 71
  • Views 13.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மலம் அள்ளும் தொழில் செய்வோரையும், மாடுகளை வெட்டித் தோலுற்பத்திகளில் ஈடுபடுவோரையும், கள்ளு இறக்குவோரையும், மீன்களை அளைந்து முடை நாற்றம் வீசுவோரையும் (சிணி மணக்கும் என்பார்கள்) கோவிலினுள் விட்டால் கோவிலின் புனிதம் என்னாவது, குளித்து சந்தண மணத்துடன் வரும் பக்தகோடிகளின் தியானம் என்னாவது? இதையெல்லாம் சிந்தித்துத்தானே முன்னோர்கள் கோவிலுக்குள் ஆண்கள் மேலாடையின்றி வரவேண்டும், முடைநாற்றம் வீசும் சாதியர் உள்ளே வரக்கூடாது என்று எழுதாத சட்டங்களை வகுத்தார்கள்.

எல்லோருக்கும் சந்தண சோப் இலவசமாகக் கொடுத்து நன்றாகத் தேய்த்துத் குளித்து வரச் சொன்னால் தீண்டாமை இலகுவில் ஒழியும். இதையெல்லாம் தெரியாமல் பெரியாரும் அவருடைய பேராண்டிகளும் இந்து சமயத்தை குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுகன் சார்.. நீங்க ஒரு குறுகிய வட்டத்துக்குள்ள நின்று தீண்டாமை தீண்டாமை என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

தீண்டாமை என்பதற்கு உங்கள் வாதப்படி இந்து மதமே காரணம் எங்கிறீர்கள்..!

அப்போ ஏன் கிறிஸ்தவ மதத்தில் பிறந்தும்.. வெவ்வேறு தொழில் செய்பவர்களுக்கிடையே பிரிவினைகள் நிலவுகின்றன.

இந்து கிறிஸ்தவன் முஸ்லீம் என்றும் தீண்டாமைகள் இருக்கின்றன..!

ஏழை பணக்காரன் என்ற நிலையில் பிரிவுகள்.. தீண்டாமைகள் இருக்கின்றன.

படித்தவன் படிக்காதவன் என்று தீண்டாமைகள் இருக்கின்றன.

நோயால் பாதிக்கப்பட்டவன்.. உடல் ஊனமானவன் என்று தீண்டாமைகள் இருக்கின்றன...!

எதற்கெடுத்தாலும் மனுதர்மம்.. வருணாச்சிரம கோட்பாடுகளை தூக்கிட்டு வந்து சாதியடிப்படையில் அமைந்த தீண்டாமைகள் பற்றித்தான் நீங்கள் கதைக்கிறீங்க.

அது ஈழத்தைப் பொறுத்தவரை வர்க்க ரீதியான தீண்டாமை என்பது இன்று மிக அருகிவிட்டது.

இந்தியாவிலும் மக்களின் பொருளாதார நிலை உயர்வால்.. கல்வி அறிவூட்டலால் இந்த நிலை மாறி வருகின்றது.

ஆனால் இதர தீண்டாமைகள் உலகமெங்கும் இன்னும் பல்கிப் பெருகி.. மக்கள் பிரிவினைகளை மனதில் தாங்கிக் கொண்டு வாழ்கிறார்கள். நிறத் தீண்டாமை இன்றும் உலகில் பயங்கரமான நிலையிலேயே இருக்கிறது.

இந்து மத அடிப்படைகள் போதிப்பவை வேறு.. ஆனால் மக்களுக்கு சொல்லப்படுபவை வேறு. அதனடிப்படையில் எழுந்த வேறுபாடுகளை கருத்துப் பிறழ்வுகளை அகற்ற.. மக்களை அறிவுறுத்துவதன் வாயிலாக அல்லது சட்டமியற்றல் வாயிலாக அல்லது மக்கள் ஒருவரை ஒருவர் மதிப்பளிக்க பழக்குவதன் மூலமாகத்தான் அடைய முடியும். அதைவிடுத்து தீண்டாமைக்கு இவர்கள் தான் காரணம் என்று வர்க்க பேதங்களை கட்டிக்காப்பதும்.. பகைமை உணர்வுகளை வளர்ப்பதும்.. தனிநபர்களின் சொந்தப் பிரச்சனைக்கும்.. பார்பர்னிய சாயம் பூசி.. நோக்குவதும் பிராமண சமூகத்தை குறிவைத்து மட்டும் தாக்குவதும்.. தவறு. அது வர்க்க ரீதியான தீண்டாமையை ஒழிக்காது.. மறைக்கவே செய்யும்.

ஈழத்தில் வர்க்க ரீதியான தீண்டாமைகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதற்கு மக்கள் இவை தொடர்பில் அறிவூட்டப்பட்டமையும் கடும் சட்ட அமுலாக்கமும் தான் காரணமே அன்றி.. மதச் சீர்திருத்தம் என்று கொண்டு நிற்கேல்ல. காரணம்.. மதம் சொல்லும் அடிப்படை வேறாக இருக்க மக்களுக்கு மதத்தின் பெயரால் வழங்கப்படும் செய்திகள் வேறாக அமைகின்றன. அதற்கு மதம் சீர்திருத்தப்படனும் என்பதிலும் மக்களுக்கு மதம் தொடர்பான செய்திகளை தகவல்களை வழங்குபவர்கள் சிந்திக்கனும் சரியான தகவல்களை வழங்கனும் என்பதுதான் முக்கியம். <_<

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கண்ணா நீங்க என்ன முதல்ல ஏதோ விஞ்ஞானத்தின்ர பிதிநிதி மாதிரி விஞ்ஞானம் மெஞ்ஞானத்த மிதிக்கல மதிக்குது எண்டீங்க......

இப்ப அடுத்த கட்டமா போய் நீங்கதான் இந்து மதத்தின்ர பிரதிநிதி மாதிரி மதம் இதச் சொல்லல அதச் சொல்லல எண்டுறீங்க. சின்னப்பிள்ளத்தனமாவெல்லோ இருக்கு.......

மற்றவையெல்லாம் குறுகின வட்டத்துக்குள்ள நிக்கினம்.... நீங்க மட்டும் அகண்டு விரிஞ்ச வட்டத்துக்குள்ள நிக்கிறீங்க.... <_<

மதம் இதத்தான் சொன்னது இதச் சொல்லல எண்டு சொல்றதுக்கு நீங்க யாருங்யோ அண்ணா??? சரி இத இத மதம் சொல்லல எண்டுறதுக்கு ஆதாரம் என்னங்கோ அண்ணா? மதத்தில என்னென்னெல்லாம் சொல்லியிருக்கு சொல்லல எண்டத நீங்க எங்க படிச்சனீங்க? அத எங்களுக்கும் காட்டினா நாங்களும் படிச்சு எங்கட பாவங்களப் பேபாக்கிக்கொள்ளுறம்.

மதம் சீர்ப்படுத்தப்பட தேவையில்லையாம். ஏனெண்டா அது புனிதமானது.... அதில எல்லாம் நல்லத மட்டுந்தான் சொல்லப்பட்டிருக்கு.... அதில அறிவியல் இருக்கு..... மனுசர்தான் மதத்த ஒழுங்கா புரிஞ்சுகொள்ளல....... நெடுக்கண்ணா மட்டும் நல்லா புரிஞ்சு கடவுளின்ர மதத்தின்ர பிரதிநிதியாகிட்டார். :P

***

............ எடுத்தொடனயே எல்லாரும் மதத்தயும் கடவுளையும் எதிர்க்க வெளிக்கிட்டவ எண்டா நினைக்கிறீங்க..... மதத்த சீர்திருத்தலாம் எண்ட நம்பிக்கைல அவையும் முயற்சி செய்து பார்த்து தங்கட அனுபவத்தில இதுகள ஒட்டத் தறிச்சாத்தான் மனுச சமூகம் உருப்படும் எண்டு தெளிவடைஞ்சு தான் எதிர்க்க வெளிக்கிட்டாங்க. மதத்த சீர்ப்படுத்த இவையள் விடமாட்டினம். ஏனெண்டா மதம் நல்லத மட்டுந்தான் சொல்லியிருக்கு.... அது புனிதமானது எண்டு அடுத்தவன நம்பவைக்கிறவயள் இருக்கிற மட்டும் உங்களால மதத்த சீர்ப்படுத்த முடியாது........ <_<:lol:

*** நீக்கப்பட்டுள்ளது - இணையவன்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

***

நிச்சயமா உங்களை விட பரந்து தான் இருக்கு எங்கட பார்வை. காரணம்.. நாங்க தீண்டாமையை பல வடிவங்களில சொல்லி இருக்கிறம்.

நீங்க சுற்றிச் சுற்று சுப்பற்ற கொல்லைக்காதான் அதுதாங்க.. இந்து மதத்துக்க நிற்கிறீங்க. வருணாச்சிர தர்மம் என்றதை எங்க அரைகுறையாப் படிச்சீங்களோவும் தெரியல்ல.. இல்ல உங்கினை சொல்லுறதை எடுத்து வைச்சிட்டு.. அதுவும் வக்கிரமான விளக்கங்களூட எவனாவது மதக் கோட்பாடுகள் அறியாமல் உளறினதை வைச்சி.. உங்கட கருத்தை வைக்கிற உங்கட நிலை மோசமான சிறுமைத்தனமா எல்லோ இருக்கு.

இங்கு ஆறுமுகநாவலர் என்ற கள உறவு இதற்காகத்தான் இந்து மதம் சொல்லும் விடயங்களை தெளிவாக கொணர்ந்தவர். அதை மதப்பிரச்சாரம் என்று எடுத்திட்டினம். ஆனால் மதக் கோட்பாடுகளின் அடியும் தெரியாம நுனியும் தெரியாம வக்கிரமா திரிச்ச செருகிய கதைகளோட காலம் காலமா யாழ் களத்தில சொல்லுறதைச் சொல்லுற மீண்டும் மீண்டும் அனுமதிக்கினம்.

***

தீண்டாமைகள் பல வகைகள் என்றதைச் சுட்டிக்காட்டியும் அவற்றுக்கு பதிலிறுக்காம.. மதத்தைப் பற்றி அரைகுறையா விளங்கிட்டு.. வந்து.. வம்புக்கு கருத்தெழுதிறது.. என்ற முடிவோட நிற்கவைக்கு.. விளக்கம் எழுதிப் பிரயோசனம் இல்ல. உப்படி வக்கிரத்தோட பல கதைகள் இருக்கு.. அதுகளைப் படியுங்க தேடி. உதவும் பூனைக்குட்டி..! <_<<_<

*** நீக்கப்பட்டுள்ளது - இணையவன்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்திலேயே இந்த வர்க்க தீண்டாமை ஒழிஞ்சிட்டுது. ஆனால் உங்களுக்க மட்டும் இன்னும் ஒழியல்ல. காரணம்.. உங்களுக்கு இந்து மதத்தைத்தான் திட்டிட்டிட்டு இருக்க முடியும். ஏன்னா அதுதான் சுதந்திரமான மதம். கிறிஸ்தவத்தில் எத்தனை பிரிவுகள்.. எத்தனை தீண்டாமைகள்.. இஸ்லாத்தில் எத்தனை பிரிவுகள் எத்தனை தீண்டாமைகள்.. அதெல்லாம் வருணாச்சிர தர்மத்தின் விளைவுகளா..??!

***

*** நீக்கப்பட்டுள்ளது - இணையவன்

Edited by இணையவன்

தனிநபர் தாக்குதல்களை தவிர்த்து, தலைப்போடு தொடர்புடைய கருத்தை முன்வையுங்கள். கருத்தாடற் பண்பை மீறாது கருத்துக்கள விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மக்கள், மக்களின் வாழ்க்கை, மக்கள் நலன் என்பதின் அடிப்படையில் கருத்துக்களை முன்வைக்கும்போது அதை பொறுப்புணர்வுடன் முன்வையுங்கள். மக்களின் நம்பிக்கை தொடர்பாக கருத்துக்களை எழுதும்போது - அது ஒரு சமூகம் சார்ந்த விடயமாக இருக்கும்போது - "அடிடா, பிடிடா" என்ற நிலையில் கருத்துக்களை எழுதாது - ஆரோக்கியமான முறையில் கருத்துக்களை முன்வைப்பதே நலம். அது மதமாக இருந்தாலும் சரி, மக்கள் போற்றும் தலைவர்களாக இருந்தாலும் சரி - உயர் பண்பைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். புரிந்துணர்வோடு ஒத்துழைத்து விவாதங்களைத் தொடர்க. நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராமாயணம் 10 பக்கத்த மிஞ்சி வெற்றிநடைபோடுது, வர்க்கவெறி மொழிவெறியர்களுக்கு சாடமாடயா சாதிவெறிக்கும் தீனி குடுத்தாச்சு.

அடுத்த தலைப்பா அரிச்சந்திரா எடுத்தால் முழுக்க முழுக்க சாதிவெறியை கொட்டி தீர்க்கலாம்.

B)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

லலிதாவின் கதை (பாகம் 2)

டென்மார்க்கில் தன்னை அம்மன் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்ற அபிராமி எனப்படும் லலிதா என்கின்ற பெண்மணியை கடவுள் என்று உண்மையிலேயே நம்புகின்ற பலர் ஐரோப்பாவில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவரை வாழும் தெய்வம், நடமாடும் தெய்வம் என்றெல்லாம் போற்றிப் புகழ்கிறார்கள்.

இப்படி இவர்கள் லலிதாவை நம்புவதற்கு என்ன காரணம்? ஆயிரக் கணக்காண தமிழர்களை முட்டாள்கள் ஆக்கி தன்னை நம்ப வைக்க லலிதாவால் எப்படி முடிந்தது? இந்தக் கேள்விகளுக்கான பதில் ஒன்றும் கடினமில்லை. தன்னை கடவுள் என்று சொல்கின்ற அனைத்து மோசடிப் பேர்வழிகளும் கையாளுகின்ற அதே வழியைத்தான் லலிதாவும் கையாளுகிறார்.

தன்னிடம் வருபவர்களை பயமுறுத்துவது, வாயிலே இருந்து லிங்கம், மாணிக்கம் போன்ற வாய்க்குள் ஒளித்து வைக்கக்கூடிய மிகச் சிறிய பொருட்களை வாயிலிருந்து வரவழைத்து மாயாஜாலம் புரிவது, பெரும்பாலும் பலிப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளவைகளையே சொல்வது, பலிக்காது விட்டால் விதி என்று சொல்வது. இவைகள்தான் லலிதா மக்களை ஏமாற்றுவதற்கு பயன்படுத்துகின்ற வழிமுறைகள்.

லலிதா பலருடைய நோயைக் குணப்படுத்தி உள்ளதாக அவருடைய பக்தர்கள் புகழ்கின்றனர். அவ்வாறான கதைகளை பரப்புகின்றனர். இவைகள் உண்மையா என்று அறிவதற்கு பல இடங்களில் விசாரித்தோம். கிடைத்த தகவல்களுள் சுவாரஸ்யமான தகவல்களோடு அதிர்ச்சிகரமான தகவல்களும் இருந்தன.

டென்மார்க்கிலே லலிதாவின் கோயிலுக்கு சென்று வருகின்ற ஒருவர் இருந்தார். அவர் நாட்டின் மீது பற்றுக்கொண்டு நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் தன்னால் இயன்ற பணிகளையும் செய்து கொண்டிருந்தார். திடீரென்று ஒருநாள் அவரை புற்றுநோய் தாக்கியது. மருத்துவர்கள் அவர் பிழைப்பதற்கு சாத்தியங்கள் மிகக் குறைவு என்று சொல்லிவிட்டனர்.

அவர் இடிந்து போனார். ஓடிப் போய் லலிதா முன் நின்றார். லலிதாவே சரணம் என்றார். லலிதாவும் "கவலைப்படாதே, உன்னுடைய நோய் குணமாகும்" என்று அருள்வாக்குச் சொன்னார். அவரும் அதை முழுவதும் நம்பி லலிதாவே கதியென்று கிடந்தார். மருத்துவர் தந்த மருந்துகளை கவனிக்காது விட்டார். மருத்துவர் தந்த மருந்துகளை விட லலிதாவே தன்னைக் காப்பார் என்று நம்பினார். ஓரிரு மாதங்களில் அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இதே போன்று ஜேர்மனியில் இன்னும் ஒருவர். அவருக்கும் புற்றுநோய் தாக்கியிருந்தது. லலிதாவைப் பற்றி கேள்விப்பட்டு லலிதாவிடம் நம்பிக்கையோடு போனார். லலிதாவைக் கண்டதும் அவருக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. அத்தனை நாளும் அவருக்கு இருந்த வலி குறைவது போல் இருந்தது. லலிதா மீது முழு நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. அவரிடமும் லிலிதா புற்றுநோய் நீங்கும் என்றுதான் அருள்பாலித்தார். லலிதா அவருக்கு ஒரு தேசிக்காயும் சந்தணமும் கொடுத்து அனுப்பினார்.

மிக உற்சாகத்துடன் வீடு திரும்பிய அவர் மருத்துவர் தந்த மருந்துகளை புறம் தள்ளினார். லிலதா தந்த தேசிக்காயை முகர்ந்து பார்ப்பதும், சந்தணத்தை பூசுவதுமே அவர் தனக்கு செய்த வைத்தியமாக இருந்தது. அவர் ஒரு வாரத்திலேயே இறந்து போனார்.

நாகரீகம் கருதி இறந்து போனவர்கள் பெயர் விபரங்களை தவிர்த்திருக்கிறோமே தவிர இவைகள் நூறு வீதம் உண்மையான சம்பவங்கள். தேவையேற்படின் இவைகள் உண்மையென்று நிரூபிப்பதற்கு தயாராகவே இருக்கிறோம். உண்மையில் இறந்து போன இருவரும் மருத்துவர்களின் ஆலோசனைகளை முற்றுமுழுதாக கடைப்பிடித்திருந்தால் மேலும் சில காலம் உயிர் வாழந்திருக்க முடியும். சில வேளைகளில் நோய் குணமாகி இருக்கவும் கூடும். ஆனால் லலிதாவின் பேச்சை நம்பி இறந்து போய்விட்டார்கள். இவர்களின் இறப்புக்கு லலிதாவும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.

இதே வேளை லலிதாவின் பக்தையாக இருந்து புற்றுநோய் குணமான ஒரு பெண்ணும் ஜேர்மனியில் இருக்கிறார்.

லலிதாவின் பக்தையான அவருக்கும் புற்றுநோய் வந்தது. மருத்துவர்கள் குணமடைவதற்கு சாத்தியங்கள் குறைவு என்றனர். லலிதாவோ வழமை போன்று நோய் குணமடையும் என்று சொன்னார். அந்தப் பெண் தினமும் வீட்டில் லலிதாவின் அம்மன் "மேக்கப்" போட்ட புகைப்படங்களை வைத்து வழிபட்டு வந்தார். அதே வேளை மருத்துவர் தந்த மருந்துகளை வேளாவேளைக்கு உட்கொண்டார். ஆனால் அவருக்கு நோய் குணமடையவில்லை. மேலும் தீவிரம் அடைந்தது.

அப்பொழுது ஒருநாள் அவருடைய "அலேலூயா" நண்பர்கள் சிலர் அவரை வற்புறுத்தி பிரார்த்தனைக் கூட்டத்திற்கு அழைத்துக் கொண்டு போனார்கள். அதன் பிறகு அவருடைய நோய் குணமடையத் தொடங்கிவிட்டது. இன்றைக்கு அவர் தன்னுடைய வீட்டில் இருந்த லலிதாவின் படங்களை களற்றி எறிந்துவிட்டார். இன்றைக்கு அவருடைய வீட்டில் "இயேசு ஜீவிக்கிறார்" என்ற வார்த்தைகளே தொங்குகின்றன. அவருடைய குடும்பமே "அலேலூயா" என்று கத்துகிறது.

உண்மையில் அவருடைய நோய் மாறியதற்கு யேசு காரணம் இல்லை. மருத்துவர் தந்த மருந்துகளும், அவர் தொடர்ந்து செய்த வைத்தியங்களுமே காரணம். ஆனால் அவர் யேசுதான் காரணம் என்று அப்பாவித்தனமாக நம்புகிறார். அவர் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு போகாது விட்டிருந்தாலும் அவருடைய நோய் குணமாகி இருக்கும். அப்பொழுது அவர் லலிதாதான் தன்னுடைய நோயைக் குணப்படுத்தியதாக நம்பியிருப்பார்.

இன்னும் ஒரு இளைஞனின் கதை இருக்கிறது. நோய் கண்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவனிடம் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக கூறினார்கள். புற்றுநோய்க்கான வைத்தியசாலைக்கும் அவன் மாற்றப்பட்டான். அவனுடைய இரத்தம் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டது.

அவனுடைய தாயும் லலிதாவின் ஒரு பக்தைதான். தாய் லலிதாவிடம் போய் நின்று கதறினார். லலிதா மீண்டும் வழமையாகச் சொல்வது போன்று மகனுடைய நோய் குணமாகும் என்று சொன்னார். சில நாட்கள் கழித்து மருத்துவ பரிசோதனைக் கூடத்தில் இருந்து அறிக்கை வந்தது. மகனுக்கு வந்திருப்பது புற்றுநோயே அல்ல என்று அந்த அறிக்கை சொன்னது.

இப்பொழுது அந்தத் தாய் பரவசத்தின் உச்சிக்கே போய் விட்டார். தகவல் லலிதாவிற்கும் போனது. இந்த அற்புதத்தை எல்லோரிடமும் சொல்லும்படி லலிதா கட்டளை இட்டார். இப்பொழுது அந்தப் அப்பாவித் தாய் லலிதா தன்னுடைய மகனின் புற்றுநோயை இல்லாமல் செய்த "அற்புதத்தை" காண்போரிடம் எல்லாம் சொல்லிவருகிறார்.

இங்கே உண்மையில் அந்த இளைஞனுக்கு புற்றுநோயே வரவில்லை. மருத்துவர்கள் புற்றுநோயாக இருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்டார்கள். அவ்வளவுதான். அந்த இளைஞனின் தாய் லலிதாவிடம் செல்லாதுவிட்டிருந்தாலும், அதே மருத்துவ அறிக்கைதான் வந்திருக்கும். செல்லவில்லை என்பதற்காக இல்லாத புற்றுநோய் இருப்பதாக அறிக்கை மாறியிருக்காது. ஆனால் இந்த சிறிய விடயத்தைக் கூட புரியாத அளவிற்கு அந்தத் தாய் அப்பாவியாக இருக்கிறார்.

இந்த அப்பாவித்தனமும், முட்டாள்தனமுமே லலிதா போன்றவர்களை கடவுளாக மாற்றி இருக்கிறது.

இந்த இடத்தில் ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். பொதுவாக தம்மை கடவுள் என்று சொல்பவர்களிடம் கொடிய நோய்கள் வருகின்ற போதுதான் பலர் போவார்கள். புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் வருகின்ற போது மருத்துவர்களும் குணப்படுவதற்கு சாத்தியங்கள் உண்டு என்று உறுதியாகச் சொல்லமாட்டார்கள். அப்படிச் சொல்லி குணமாகாது விட்டால் மருத்துவர்கள் பின்பு பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியும் வரும்.

இதைத்தான் இந்த சாமியாடிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தம்மை நம்பி வருபவர்களிடம் நோய் குணமாகிவிடும் என்று சொல்லிவிடுவார்கள். சிலவேளைகளில் குணமடைந்தால், தம்மால்தான் குணமானது என்று நம்பவைத்தம் விடுவார்கள். மருத்துவர்கள் கைவிட்ட எம்மை லலிதா காப்பாற்றிவிட்டார் என்று பக்தர்களும் நம்பி விடுவார்கள்.

இப்படித்தான் இவர்களின் பிழைப்பு நடக்கிறது. இவர்கள் தங்கள் பிழைப்புக்காக மக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்களின் பணத்தை பிடுங்குகிறார்கள். சிலவேளைகள் அவர்களுடைய சாவுக்கும் காரணமாகி விடுகிறார்கள். ஆனால் எமது மக்கள் விழிப்புறும் வரை எதுவுமே மாறப்போவது இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு அறிவாழியால தான் மற்ற ஆக்களை முட்டாள் ஆக்க முடியும்.

என்ன கொடுமை சார் இது.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை பக்கத்து ஊர்க்காரன்(என்ரை சிநேகிதன்) ஒருத்தனும் குடும்பசமேதரமாய் போய் அர்ச்சனை செய்துட்டு வந்திருக்கிறான் பாப்பம் என்ன நடக்குதெண்டு ;) எங்கடை மாப்புவும் டென்மார்க் வந்ததாய் கேள்விப்பட்டன் :)

Edited by குமாரசாமி

ஒரு பழைய சினிமாப் பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. அதை மெதுவாக கீழே எழுதி விடுகிறேன்.

பூமியைப் படைத்தது சாமியா?

இல்லை சாமியைப் படைத்தது பூமியா?

தினம் பாலுக்கும் கூழுக்கும் ஏழைகள் அலைகையில்

ஆயிரம் கோயில்கள் தேவையா?

பூமாலையும் பூஜையும் தேவையா?

பிறப்பும் இறப்பும் அவன் பொறுப்பு

சிரிப்பும் அழுகையும் யார் பொறுப்பு

இரவு இங்கே வெளிச்சம் அங்கே

என்ன வேலை இறைவனுக்கு?

இவன் வேர்வையின் துளிகள் அவன் சூடிடும் மணிகள்

இந்த ஏழையின் உழைப்பு அந்த மாளிகை மதிப்பு

பருந்து அங்கே கிளிகள் இங்கே

இரண்டின் நடுவே இறைவன் எங்கே?

அது ஆலயமணியா என் ஆசையின் ஒலியா?

அவன் பூஜையின் குரலா என் கேள்விக்கு பதிலா?

வயிறு இங்கே உணவு அங்கே

இரண்டின் நடுவே இறைவன் எங்கே?

ஒரு பாதையில் போனால் மறு பாதையில் வரலாம்

இது சாலைக்கு நியாயம் எது ஏழைக்கு நியாயம்?

பாதை அங்கே பயணம் இங்கே

இரண்டின் நடுவே இறைவன் எங்கே?

  • கருத்துக்கள உறவுகள்

இதன் மூன்றாவது பகுதியும் தொடருமா சபேசன்

  • தொடங்கியவர்

லலிதாவைப் பற்றி மூன்றாவது, நான்காவது பாகம் என்று எழுதிக் கொண்டு போகலாம். ஆனால் தற்பொழுது உடனடியாக எழுதுவதாக இல்லை. சிறிது காலம் கழித்து மீண்டும் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

லலிதா இப்படி தன்னை அம்மன் என்று சொல்லியபடி ஒரு கோயிலை நடத்துவதும் அதில் பூசை செய்வதும் மற்றைய இந்து ஆலயங்களின் பூசாரிகள் பலருக்கு பிடிக்கவில்லை. லலிதாவைப் பற்றி அவர்களிடம் கேட்டால், லலிதா செய்வது தவறு என்றுதான் அவர்களும் சொல்கிறார்கள்.

எல்லோருமே மொத்தத்தில் மக்களை ஏமாற்றுபவர்கள். அப்படியிருந்தும் இவர்கள் லலிதாவை வெறுக்க காரணம் என்ன?

இதற்கு என்னிடம் ஒரு விளக்கம் இருக்கிறது. என்னுடைய விளக்கத்தை சொல்வதற்கு முன் உங்களுடைய பதிலை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

யாராவது தங்களுடைய கருத்தை சொல்லுங்கள்!

அபிராமி அம்மன் கடவுளிற்கு "நடமாடும், பேசும், அபிநயங்கள் காட்டும், அதிசயங்கள் செய்யும்" வடிவம் கொடுப்பது highly interactive ஆக entertaining ஆக இருக்கிறது. இதனால் feel good factor அதிகமாக தேடுபவர்கள் மத்தியில் திருப்த்தி கிடைப்பதற்கான சந்தரப்பம் அதிகம்.

கல்லாலும் உலோகத்தாலும் உருவான சிலைகளை வைத்து குறைந்தபட்ச interaction ஓடு feel good factor அய் ஏத்த முயல்வதோடு ஒப்பிடும் போது அபிராமி அம்மன் வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பம் இயந்திர வாழ்வில் சிக்குண்ட புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் அதிகம்.

எனவே போட்டி வியாபாரத்தை கெடுத்துப் போடுமோ என்று கோயில்காறர் பயப்படுகினமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லலிதாவைப் பற்றி மூன்றாவது, நான்காவது பாகம் என்று எழுதிக் கொண்டு போகலாம். ஆனால் தற்பொழுது உடனடியாக எழுதுவதாக இல்லை. சிறிது காலம் கழித்து மீண்டும் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

லலிதா இப்படி தன்னை அம்மன் என்று சொல்லியபடி ஒரு கோயிலை நடத்துவதும் அதில் பூசை செய்வதும் மற்றைய இந்து ஆலயங்களின் பூசாரிகள் பலருக்கு பிடிக்கவில்லை. லலிதாவைப் பற்றி அவர்களிடம் கேட்டால், லலிதா செய்வது தவறு என்றுதான் அவர்களும் சொல்கிறார்கள்.

எல்லோருமே மொத்தத்தில் மக்களை ஏமாற்றுபவர்கள். அப்படியிருந்தும் இவர்கள் லலிதாவை வெறுக்க காரணம் என்ன?

இதற்கு என்னிடம் ஒரு விளக்கம் இருக்கிறது. என்னுடைய விளக்கத்தை சொல்வதற்கு முன் உங்களுடைய பதிலை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

யாராவது தங்களுடைய கருத்தை சொல்லுங்கள்!

வாற வருமானம் குறைஞ்சு போகுதோ??? :icon_mrgreen:

  • தொடங்கியவர்

தங்களுடைய கோயில் வருமானம் குறைகிறது என்பது ஒரு முக்கிய காரணம்.

லலிதாவின் கோயில் மற்றைய கோயில்கள் நடத்துகின்ற விழாக்களை ஸ்பொன்சர் செய்கிற அளவிற்கு வளர்ந்துள்ளது.

அண்மையில் ஜேர்மனியில் உள்ள முல்கைம் முத்துகுமாரசாமி கோயிலின் விழா ஒன்று நடந்தது. அந்த விழாவின் பல செலவுகளை லலிதாதான் ஏற்றாராம்.

இப்படி சாதாரண கோயில்களை விட லலிதாவின் கோயிலின் வருமானம் அதிகம்.

மற்றைய பூசாரிகள் லலிதாவை வெறுப்பதற்கு இது ஒரு காரணம். ஆனால் இது வியாபாரப் போட்டி சார்ந்து அனைத்து இடங்களிலும் வரக்கூடிய ஒன்றுதான்.

இதை விட பூசாரிகள் லலிதாவை எதிர்ப்பதற்கு இன்னும் ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் அவர்கள் அதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள்.

லலிதா ஒரு பெண். அதுவும் அவர் பார்ப்பன சாதியை சேராத பெண். அப்படியான பார்ப்பனர் அல்லாத ஒரு பெண் கருவறைக்குள் நுழைவதும், கருவறையிலும், தேரிலும் அம்மனாக இருப்பதும் இவர்களுக்கு பொறுக்காது.

லலிதாவைப் பற்றி தவறாக பேசுகின்ற பூசாரிகளை எனக்குத் தெரியும். அவர்கள் லலிதா அம்மன் வேசம் போடுவதை குறையாக சொல்வார்கள். மக்களை ஏமாற்றுகிறார் என்பது போன்று பேசுவார்கள். ஆனால் அவர்களும் மக்களை ஏமாற்றுபவர்கள்தான்.

அவர்களின் லலிதா மீதான வெறுப்பிற்கு இந்த பார்ப்பன சிந்தனைதான் காரணம். ஆழமாக சிந்தித்தால் இது புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளுக்கு எல்லாம் நம்மாள பதில் சொல்ல முடியாது அந்த ஒரிஜினல் அம்மன் தான் பதில் சொல வேண்டும்,இதற்கு எல்லாம் விஞ்ஞான விளக்கம் கொடுகிற தகுதி எமக்கு இல்லை.

எங்கன்ட சனம் சாமி என்றா எங்கையும் யாருக்கும் பின்னாலையும் போகும் என்றேன் அப்போது நண்பர் சொன்னார் வெள்ளைகாரன் கூட கும்பிடுகிறான் உமக்கு என்ன விசரோ என்று,பிறகு எனக்கே சந்தேகம் வந்துட்டுது எனக்கு விசரோ என்று. :P

பந்தத்துடன் 'சாமியாடிய' பெண்

தீப்பிடித்து பரிதாப சாவு!

வியாழக்கிழமை, செப்டம்பர் 6, 2007

பர்கூர் (கிருஷ்ணகிரி)

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தீப் பந்தத்தை கையில் பிடித்தபடி சாமியாடிய பெண், அந்தத் தீப்பந்தம் மேலே விழுந்து தீப்பிடித்ததில் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார்.

பர்கூர் அருகே உள்ளது கல்லத்துப்பட்டி கிராமம். இங்கு பேய் விரட்டும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா நேற்று இரவு நடந்தது.

விழாவில் பங்கேற்ற பலர் சாமி வந்து ஆடினர். அப்போது சிவகாமி, அஜீதா (37), அம்சவேணி ஆகியோர் கையில் தீப்பந்தத்தைப் பிடித்தபடி ஆடியுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக, தீப்பந்தத்தில் இருந்த தீ இவர்கள் மீது பட்டது. இதில் மூன்று பேரின் சேலைகளும் பற்றி எரிந்தன. மூன்று பேரும் தீயில் கருகி கீழே விழுந்தனர்.

இதைப் பார்த்து அதிர்ந்த கூட்டத்தினர் மூன்று பேரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அஜீதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்ற இரு பெண்கள் மற்றும் இவர்களைக் காப்பாற்ற முயன்று காயமடைந்த அஜீதாவின் கணவர் மணி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

thatstamil

:rolleyes::lol::):lol:

  • தொடங்கியவர்

தமிழ்நாட்டில் சில மாதங்களிற்கு முன்பு இன்னும் ஒரு சம்பவம் நடந்தது.

ஒருவருடைய வீட்டின் முன்னால் ஒரு வினோதமான பொருள் ஒன்று இருந்தது. அதைப் பார்த்து பயந்து போன அவர், யாராவது செய்வினை செய்திருப்பார்களா என்று அச்சத்தில் ஒரு மந்திரவாதியை கூட்டி வந்திருக்கிறார்.

மந்திரவாதியும் பார்த்துவிட்டு, இது செய்வினைதான் என்று சொல்லிவிட்டு மந்திரங்களை சொல்லி சாமியாடத் தொடங்கினார். எல்லாம் முடிந்தபிறகு அந்தப் பொருளை கையால் தொடக்கூடாது என்று சொல்லி, தன்னுடைய வாயால் கவ்விக் கொண்டு குளக்கரைக்கு மந்திரவாதி சென்றார்.

குளக்கரையில் வைத்து அந்தப் பொருளை மந்திரவாதி கடித்தார். பெரும் சத்தத்தொடு அந்தப் பொருள் வெடித்தது. படுகாயமுற்ற மந்திரவாதி பின் மரணமானார்.

வெடித்தபிறகுதான் தெரிந்தது. அது செய்வினைப் பொருள் அல்ல. வெடிகுண்டு

அவர்களுடைய மனம் சீதையை போல சுத்தமா இருந்திருந்தா தீ அப்பிடி பத்தி எரிஞ்சிருக்காது உடனே அணைந்திருக்கும்.

ஆனா அந்த மெஞ்ஞான விளக்கமில்லாது விஞ்ஞானத்தை தூக்கிப்பிடிச்சுக் கொண்டு பெரியாரிஸ்ற்கள் இந்துமதத்தைதான் பழிபோட போயினம் மூடநம்பிக்கை எண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.