Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணிலின் அழைப்பை ஈ.பி.டி.பி வரவேற்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் அழைப்பை ஈ.பி.டி.பி வரவேற்றது

எம்.றொசாந்த் 

இலங்கை மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சவாலான சூழலிருந்து மீள்வதற்கு கட்சிகள் அனைத்தும் தமக்கிடையேயான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கடந்து ஓரணியாகச் செயலாற்ற முன்வர வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சக தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அவர் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாடு எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள சர்வ கட்சி அரசொன்றை அமைத்து முன்னோக்கி செல்வதன் ஊடாகவே சிறந்த பெறுபேற்றை பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அதற்கான அழைப்பையும் சர்வ கட்சிகளுக்கும் எழுத்து மூலம் கடிதமாக அனுப்பி வைத்துள்ளார்.
 
ஜனாதிபதியின் அந்த அழைப்பை ஈ.பி.டி.பி வரவேற்பது மாத்திரமல்லாது அந்த நோக்கம் செயல்வடிவம் பெறுவதற்கான பங்களிப்பையும் செய்துவருகின்றது.

இந்த நிலையில் சர்வ கட்சியில் பங்கெடுப்பதும், சர்வ கட்சி அரசொன்றின் எதிர்கால வேலைத்திட்டத்தில்,  மூன்று தசாப்பத்திற்கும் மேலாக கொடிய யுத்த வன்முறைக்கு முகம் கொடுத்து பல வழிகளிலும் இழப்புக்களைச் சந்தித்துள்ள தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வேலைத்திட்டங்களையும் வகுத்துக்கொண்டு ஒரு தேசிய இனமாக நாமும் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

எனவே தமிழ் அரசியல் கட்சிகள் இலங்கையின் தற்போதைய அரசியல் செல் நெறியை சரியாக கணித்து நாம் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
 
சர்வ கட்சி அரசை வரவேற்கும் அதேவேளை அதற்கு முரண்பாடான நிபந்தனைகளை விடுப்பதும், குழப்பத்தில் அரசியல் லாபம் தேடும் உள்நோக்கத்தோடும் தீர்மானங்களை எடுப்பார்களேயானால் அது மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களை அரசியல் ரீதியாக தோற்கடிக்கச் செய்ததாகவே அமையும்.

எனவே ஏனைய தமிழ்க்கட்சிகள் தமது வழமையான எதிர்ப்பு அரசியல் எனும் சமகாலத்திற்கு பொருத்தமற்ற அரசியல் போக்கை கைவிட்டு, ஈ.பி.டி.பியாகிய நாம் தொடர்ந்தும் கூறிவரும் நடைமுறைச் சாத்தியமான அரசியல் வழிமுறைக்கு வருவது காலத்தின் அவசியமாகும் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். (R)

https://www.tamilmirror.lk/வன்னி/ரணிலின்-அழைப்பை-ஈ-பி-டி-பி-வரவேற்றது/72-301460

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பனின் வீட்டில் நாய் ஒன்று இருந்தது.. அதன் பெயர் லசி Lasy. எண்பதுகளில் இலங்கையில் ரூபவாகினியில் இதே பெயருடன் சிறுவர்களுக்கான தொடர் நாடகம்  இடம்பெற்று வந்தது. . எனது நண்பனின் பெயர் ரவி. 

ஒவ்வொரு தடைவையும் அவனது தாயார் தங்கள் நாயை லசி என்று கூப்பிடும்போதும் நண்பன் ரவிதான் ஓம் அம்மா என்று பதிலளிப்பான். இதனை தொடர்ச்சியாக அவதானித்து வந்திருந்தேன்.

ஒருமுறை அவனது வீட்டு வாசலிஅவனுடன் கதைத்துக்கொண்டு நிற்கும்போது அவனது தாயார்  லசியை அழைத்தார். இவனும் வளக்கம்போல ஓம் அம்மா  என்று பதிலளித்தான். 

தாளா முடியாமல் இவனிடம், "ஏனடா, ஒவ்வொரு முறையும் அம்மா நாயை அழைக்கும்போதும் நீயேன் ஓம் என்கிறாய்" எனக் கேட்டேன். அதற்கு அவன் " அம்மா குசினிக்குள் நின்று சாப்பாடு ஏதாவதை நாய்க்கு  வைக்குபோதுதான் லசியைக் கூப்பிடுவா. நான் இஞ்ச நிக்கிறதை அம்மாவுக்கு நினைவுபடுத்தவே ஓம் எண்டு சொல்லுறனான்" என்றான். 

சிங்கள அரசுகளின் ஒவ்வொரு அறிவிப்பிற்கும் EPDP பதிலளிக்கும்போதும் எனக்கு ஏனோ இந்தச் சம்பவம்தான் தவிர்க்க முடியாமல்  நினைவிற்கு வந்து போகும். 

😀

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kapithan said:

இதைவிட நல்ல  உதாரணம் இருக்கமுடியாது  இந்த  நா............?🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, Kapithan said:

எனது நண்பனின் வீட்டில் நாய் ஒன்று இருந்தது.. அதன் பெயர் லசி Lasy. எண்பதுகளில் இலங்கையில் ரூபவாகினியில் இதே பெயருடன் சிறுவர்களுக்கான தொடர் நாடகம்  இடம்பெற்று வந்தது. . எனது நண்பனின் பெயர் ரவி. 

ஒவ்வொரு தடைவையும் அவனது தாயார் தங்கள் நாயை லசி என்று கூப்பிடும்போதும் நண்பன் ரவிதான் ஓம் அம்மா என்று பதிலளிப்பான். இதனை தொடர்ச்சியாக அவதானித்து வந்திருந்தேன்.

ஒருமுறை அவனது வீட்டு வாசலிஅவனுடன் கதைத்துக்கொண்டு நிற்கும்போது அவனது தாயார்  லசியை அழைத்தார். இவனும் வளக்கம்போல ஓம் அம்மா  என்று பதிலளித்தான். 

தாளா முடியாமல் இவனிடம், "ஏனடா, ஒவ்வொரு முறையும் அம்மா நாயை அழைக்கும்போதும் நீயேன் ஓம் என்கிறாய்" எனக் கேட்டேன். அதற்கு அவன் " அம்மா குசினிக்குள் நின்று சாப்பாடு ஏதாவதை நாய்க்கு  வைக்குபோதுதான் லசியைக் கூப்பிடுவா. நான் இஞ்ச நிக்கிறதை அம்மாவுக்கு நினைவுபடுத்தவே ஓம் எண்டு சொல்லுறனான்" என்றான். 

சிங்கள அரசுகளின் ஒவ்வொரு அறிவிப்பிற்கும் EPDP பதிலளிக்கும்போதும் எனக்கு ஏனோ இந்தச் சம்பவம்தான் தவிர்க்க முடியாமல்  நினைவிற்கு வந்து போகும். 

😀

  சந்தர்ப்பத்துக்கு ஏற்றமாதிரி இப்பிடி கதை சொல்லுறதுக்கும் ஒரு திறமை வேணும்.....😁

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kapithan said:

எனது நண்பனின் வீட்டில் நாய் ஒன்று இருந்தது.. அதன் பெயர் லசி Lasy. எண்பதுகளில் இலங்கையில் ரூபவாகினியில் இதே பெயருடன் சிறுவர்களுக்கான தொடர் நாடகம்  இடம்பெற்று வந்தது. . எனது நண்பனின் பெயர் ரவி. 

ஒவ்வொரு தடைவையும் அவனது தாயார் தங்கள் நாயை லசி என்று கூப்பிடும்போதும் நண்பன் ரவிதான் ஓம் அம்மா என்று பதிலளிப்பான். இதனை தொடர்ச்சியாக அவதானித்து வந்திருந்தேன்.

ஒருமுறை அவனது வீட்டு வாசலிஅவனுடன் கதைத்துக்கொண்டு நிற்கும்போது அவனது தாயார்  லசியை அழைத்தார். இவனும் வளக்கம்போல ஓம் அம்மா  என்று பதிலளித்தான். 

தாளா முடியாமல் இவனிடம், "ஏனடா, ஒவ்வொரு முறையும் அம்மா நாயை அழைக்கும்போதும் நீயேன் ஓம் என்கிறாய்" எனக் கேட்டேன். அதற்கு அவன் " அம்மா குசினிக்குள் நின்று சாப்பாடு ஏதாவதை நாய்க்கு  வைக்குபோதுதான் லசியைக் கூப்பிடுவா. நான் இஞ்ச நிக்கிறதை அம்மாவுக்கு நினைவுபடுத்தவே ஓம் எண்டு சொல்லுறனான்" என்றான். 

சிங்கள அரசுகளின் ஒவ்வொரு அறிவிப்பிற்கும் EPDP பதிலளிக்கும்போதும் எனக்கு ஏனோ இந்தச் சம்பவம்தான் தவிர்க்க முடியாமல்  நினைவிற்கு வந்து போகும். 

😀

இனிமேல் epdp பதில் அளிக்கும்போது எங்களுக்கும் இந்தக் கதைதான் ஞாபகத்துக்கு வரும்.....!  😂

நன்றி kapithan ......! 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

எனது நண்பனின் வீட்டில் நாய் ஒன்று இருந்தது.. அதன் பெயர் லசி Lasy. எண்பதுகளில் இலங்கையில் ரூபவாகினியில் இதே பெயருடன் சிறுவர்களுக்கான தொடர் நாடகம்  இடம்பெற்று வந்தது. . எனது நண்பனின் பெயர் ரவி. 

ஒவ்வொரு தடைவையும் அவனது தாயார் தங்கள் நாயை லசி என்று கூப்பிடும்போதும் நண்பன் ரவிதான் ஓம் அம்மா என்று பதிலளிப்பான். இதனை தொடர்ச்சியாக அவதானித்து வந்திருந்தேன்.

ஒருமுறை அவனது வீட்டு வாசலிஅவனுடன் கதைத்துக்கொண்டு நிற்கும்போது அவனது தாயார்  லசியை அழைத்தார். இவனும் வளக்கம்போல ஓம் அம்மா  என்று பதிலளித்தான். 

தாளா முடியாமல் இவனிடம், "ஏனடா, ஒவ்வொரு முறையும் அம்மா நாயை அழைக்கும்போதும் நீயேன் ஓம் என்கிறாய்" எனக் கேட்டேன். அதற்கு அவன் " அம்மா குசினிக்குள் நின்று சாப்பாடு ஏதாவதை நாய்க்கு  வைக்குபோதுதான் லசியைக் கூப்பிடுவா. நான் இஞ்ச நிக்கிறதை அம்மாவுக்கு நினைவுபடுத்தவே ஓம் எண்டு சொல்லுறனான்" என்றான். 

சிங்கள அரசுகளின் ஒவ்வொரு அறிவிப்பிற்கும் EPDP பதிலளிக்கும்போதும் எனக்கு ஏனோ இந்தச் சம்பவம்தான் தவிர்க்க முடியாமல்  நினைவிற்கு வந்து போகும். 

😀

நல்ல உண்மைக் கதை. 👍 😁

2 hours ago, Kapithan said:

அப்ப நீங்கள் லசி (Lasy) யின் நல்ல நன்பனென்று சொல்லுங்கோ

escape

கதை சொல்லி கதை சொல்லி காட்டிக்கொடுப்பவர்களின் எண்ணிக்கையை கூட்டுங்கோ

Edited by Knowthyself

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Knowthyself said:

1) அப்ப நீங்கள் லசி (Lasy) யின் நல்ல நன்பனென்று சொல்லுங்கோ

escape

2) கதை சொல்லி கதை சொல்லி காட்டிக்கொடுப்பவர்களின் எண்ணிக்கையை கூட்டுங்கோ

1) எனக்கு நாய் பூனையைக் கண்ணிலும் காட்ட ஏலாது. 🤣

2) புரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

எனது நண்பனின் வீட்டில் நாய் ஒன்று இருந்தது.. அதன் பெயர் லசி Lasy. எண்பதுகளில் இலங்கையில் ரூபவாகினியில் இதே பெயருடன் சிறுவர்களுக்கான தொடர் நாடகம்  இடம்பெற்று வந்தது. . எனது நண்பனின் பெயர் ரவி. 

ஒவ்வொரு தடைவையும் அவனது தாயார் தங்கள் நாயை லசி என்று கூப்பிடும்போதும் நண்பன் ரவிதான் ஓம் அம்மா என்று பதிலளிப்பான். இதனை தொடர்ச்சியாக அவதானித்து வந்திருந்தேன்.

ஒருமுறை அவனது வீட்டு வாசலிஅவனுடன் கதைத்துக்கொண்டு நிற்கும்போது அவனது தாயார்  லசியை அழைத்தார். இவனும் வளக்கம்போல ஓம் அம்மா  என்று பதிலளித்தான். 

தாளா முடியாமல் இவனிடம், "ஏனடா, ஒவ்வொரு முறையும் அம்மா நாயை அழைக்கும்போதும் நீயேன் ஓம் என்கிறாய்" எனக் கேட்டேன். அதற்கு அவன் " அம்மா குசினிக்குள் நின்று சாப்பாடு ஏதாவதை நாய்க்கு  வைக்குபோதுதான் லசியைக் கூப்பிடுவா. நான் இஞ்ச நிக்கிறதை அம்மாவுக்கு நினைவுபடுத்தவே ஓம் எண்டு சொல்லுறனான்" என்றான். 

சிங்கள அரசுகளின் ஒவ்வொரு அறிவிப்பிற்கும் EPDP பதிலளிக்கும்போதும் எனக்கு ஏனோ இந்தச் சம்பவம்தான் தவிர்க்க முடியாமல்  நினைவிற்கு வந்து போகும். 

😀

உங்க வீட்டு நாயாவது கூப்பிட்டால் தான்...

இதுகள் கூப்பிடாமலே... எஜமான் காலடியே தஞ்சமென்று கிடக்கிற தெருநாய்கள். அதை எல்லாம் இதுகளோட கதைக்குக் கூட சேர்க்கக் கூடாது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

உங்க வீட்டு நாயாவது கூப்பிட்டால் தான்...

இதுகள் கூப்பிடாமலே... எஜமான் காலடியே தஞ்சமென்று கிடக்கிற தெருநாய்கள். அதை எல்லாம் இதுகளோட கதைக்குக் கூட சேர்க்கக் கூடாது. 

          குரைத்து தனது விசுவாசத்தை காட்டுவது, அல்லது சம்பந்தப்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் காவலா இருப்போம் என உறுதியளித்து, தமது கடந்தகால சேவையை  நினைவு படுத்துவது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 அம்சக் கோரிக்கைகள்

ஆகஸ்ட் 2, 2022
spacer.png
 
‘தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும்
சர்வ கட்சி பொது வேலைத்திட்டத்தில் தீர்வு வேண்டும்’

ஜனாதிபதியின் அழைப்புக்கு அமைச்சர் டக்ளஸ் பதில்

மிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உட்பட காணிப் பிணக்குகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பிரதான பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் சர்வ கட்சி அரசொன்றிற்கான பொது வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வகட்சி அரசொன்றை அமைப்பதற்கான பொது சேலைத்திட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (E.P.D.P) பங்களிப்பை கோரிக்கையாக விடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்திற்கு பதிலளித்து தமிழ் மக்களின் சார்பில் பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து எழுதிய பதில் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது,

நாட்டில் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கும், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்கவுமான சவாலான பணியை முன்னெடுக்க அனைத்து அரசியல் கட்சிகள், நிபுணர்கள், சிவில் சமூகங்கள் போன்றவற்றின் பங்கேற்புடன் ஒரு பொது வேலைத்திட்டத்தை செயல்படுத்தும் தங்களின் கடுமையான முயற்சியை பாராட்டுகிறேன்,

எனது கட்சியான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாம், 19ஆவது திருத்தம் மற்றும் பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவை மீள அறிமுகப்படுத்துவதற்கும் மேலதிகமாக ஒரு பரந்த உரையாடலுக்காக முயற்சிப்பதையிட்டு எமது பாராட்டுக்களை தெரிவிப்பதுடன் பின்வரும் 10 அம்சக் கோரிக்கைகளையும் உங்கள் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொள்ளுமாறு முன்மொழிகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் முன்மொழியப்பட்டுள்ள பத்து அம்சக் கோரிக்கைகள்.

  1. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான சட்டமியற்றுதல்.
  2. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் அரசியலமைப்பு விதிகளை முழுமையாக அமுல்படுத்துவதை மேற்பார்வையிடும் ஒரு குழுவை அமைப்பது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதை உறுதி செய்வதற்குத் தேவையான நிர்வாக மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளை இந்தக் குழு பரிந்துரைக்க வேண்டும்.
  3. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்லது குற்றம் சாட்டப்பட்டு நீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்.
  4. வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவித்தல்.
  5. வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புகள், சாகுபடி செய்யக்கூடிய, மீன்வளர்ப்பு விவசாயத்திற்குப் பயன்படுத்தக்கூடிய மற்றும் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் நிலங்களை வன காப்பகங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக நாடளாவிய ரீதியில் பல புகார்கள் உள்ளன. இது வடக்கில் பயிர்ச்செய்கையையும், நன்னீர் மீன்வளர்ப்பையும் தடுத்து சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே இவ்விவகாரங்கள் தொடர்பாக 2012 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வர்த்தமானிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
  6. தொல்லியல் திணைக்களம், தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி, தொல்பொருள் நினைவுச் சின்னங்களாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாமல், வடக்கு மற்றும் கிழக்கில் தொல்லியல் பெறுமதிமிக்க இடங்களாக ஒதுக்கியுள்ளதாக பல முறைப்பாடுகள் உள்ளன. தொல்பொருள் இடங்களாக முறையாக அறிவிக்கப்படாத போதிலும், அந்த இடங்களுக்குள் மக்கள் நுழைவதை திணைக்களம் தடுக்கிறது. தொல்லியல் மற்றும் தொல்பொருள் இடங்களின் நினைவுச்சின்னங்களை அடையாளம் காணும் திணைக்கள அதிகாரிகளின் எந்தவொரு முயற்சியிலும் வடக்கு மற்றும் கிழக்கில் தொல்பொருள் மதிப்புமிக்க இடங்களாக வர்த்தமானியில் வெளியிடுவதற்கு முன்னர், அப்பகுதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதிகாரிகள் இடம்பெறுவதுடன், குறிப்பாக தொடர்புடைய இனக்குழுக்களின் ஆலோசனையையும் பெற வேண்டும்.
  1. பாதுகாப்புப் படைகள் மற்றும் பொலிஸ் சேவை ஆகியவற்றில் நாட்டின் இன விகிதாசாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை உறுதி செய்வதற்கான திட்டத்தை உருவாக்குதல்.
  2. அரச விழாக்களில் இரு மொழிகளிலும் (சிங்களம் மற்றும் தமிழ்) தேசிய கீதத்தைப் பாடுவது.
  3. தனிநபர்கள், புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் மீதான தடையை நீக்குதல்.
  4. 18 வயதை அடைந்த பின்னர் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் வசிப்பவர்கள் மற்றும் வேலைக்காக வெளிநாட்டில் இருப்பவர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருதல்.

போன்ற கோரிக்கைகளை முன்மொழிந்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதானது உங்களது பொது வேலைத்திட்ட முயற்சிக்கு மேலும் வலுச் சேர்ப்பதாகவும் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://chakkaram.com/2022/08/02/ஈழ-மக்கள்-ஜனநாயகக்-கட்சி/

  • கருத்துக்கள உறவுகள்

யார் இதை தயார்படுத்தி கொடுத்திருப்பா? இல்லை இவ்வளவு காலமும் வைக்காத கோரிக்கை, இவர்களின் ஆதரவோடுதான் இதெல்லாம் நடந்தது, இப்போ தேர்தலை முன்னிறுத்தி காய் நகர்த்துகிறார். மக்களின் ஆதரவு மட்டும் கிடைக்கட்டும்! இன்னும் அமோகமாக நடக்கும் சிங்களத்துக்கு வக்காலத்து. தான்தான் தமிழ் மக்களின் ஏக தலைவனென்று தலைகால் தெரியாமல் ஆடுவார்.

யார் அழைத்தாலும் முன்னுக்கு போய் குந்திவிடுவார். அவருக்கு வேண்டியது கதிரை!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து திடீரென முழித்து ஏதாவது எழுதத் தொடங்கினால் இப்படி அரையும் குறையுமாகத்தான் வரும். 

EPDP யின் ஒரே இலக்கு மாகாண சபைத் தேர்தல் மட்டும்தான். 

அப்பன் பிஞ்ச கோவணத்துடன் திரியேக்க, மகனுக்கு பட்டுக் கோவணம் கேக்குதாம். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் சிம்மாசன உரையை தமிழ் தரப்புக்கள் காத்திரமாக முன்னகர்த்த வேண்டும் – டக்ளஸ்

ஜனாதிபதியின்... சிம்மாசன உரையை, தமிழ் தரப்புக்கள் காத்திரமாக முன்னகர்த்த வேண்டும் – டக்ளஸ்

ஜனாதிபதியின் சிம்மாசன உரையை காத்திரமாக முன்னெடுத்துச் சென்று, பொருளாதார சவால்களை தீர்க்கின்ற முயற்சிகளுக்குச் சமாந்தரமாக, தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்புக்களுக்கான தீர்வுகளையும் முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்புக்களை தமிழ் தரப்புக்கள் ஜனாதிபதிக்கு வழங்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் இன்று ஆற்றிய சிம்மாசன உரை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் ஜனாதிபதியின் சிம்மாசன உரையில் பிரதிபலித்திருக்கின்றமையை வரவேற்பதாகவும், குறித்த விடயங்கள் படிப்படியாக முன்னுரைிமை அடிப்படையில் நிறைவேற்றப்படுவதற்கு, பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும்.

குறித்த உரையில், ஈ.பி.டி.பி. கட்சியினால் அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் முன்வைக்கப்பட்டிருந்த, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வு மற்றும் காணிப் பிரச்சினைகள், யுத்தப் பாதிப்புகளை நிவர்த்தி செய்தல் உட்பட்ட விடயங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஜனாதிபதியினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனை எமது தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்கும் அரசியல் அணுகுமுறைகளுக்குமான வெற்றியாகவே கருதுகின்றோம்.

இவ்வாறான சூழல்களை ஏனைய தமிழ் தரப்புக்களும் எமது மக்களின் அபிலாசைகளை முன்னகர்த்துவதற்கான சந்தர்ப்பங்களாக பயன்படுத்த வேண்டும்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினையும் அதற்கு பின்னர் கிடைத்த சந்தர்ப்பங்களையும் தமிழ் தலைமைகள் பயன்படுத்திக் கொள்ள தவறியமையினால் எமது மக்கள் பேரவலங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், தற்போது கிடைத்துள்ள வாய்ப்பினை தமிழ் தலைமைகள் காத்திரமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக ஜனாதிபதியினால் உருவாக்க முயற்சிக்கப்படுகின்ற அனைத்துக் கட்சி அரசாங்கத்தினை தமிழ் மக்களின் அபிலாசைகளை முன்னகர்த்துவதற்கான ஆரோக்கியமான தளமாக அனைத்து தமிழ் தரப்புக்களும் பயன்படுத்த வேண்டும்.” எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.-

https://athavannews.com/2022/1293446

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.