Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்திற்கு... விளையாட சென்ற, இரண்டு இலங்கையர்கள் மாயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

இங்கிலாந்திற்கு... விளையாட சென்ற, இரண்டு இலங்கையர்கள் மாயம்!

22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்திற்கு சென்ற இரண்டு இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அணியின் ஜூடோ வீராங்கனை ஒருவரும் ஜூடோ அணியின் முகாமையாளர் ஒருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பர்மிங்ஹாம் மெடோபொலிடன் பொலிஸார் மற்றும் இலங்கை ஒலிம்பிக் குழு இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக இலங்கை அணியின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

https://athavannews.com/2022/1293382

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

வந்தது 101 பேர். நேற்று முன்தினம் 2 பேரை காணவில்லை.

மேனேஜர் உடனடியாக பாஸ்போர்டுகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரி வாங்கி வைத்துக்கொண்டார்.

இன்று மேலும் ஒராளை காணவில்லை.

அகதி தஞ்சம் கேட்க்கிற ஆட்களுக்கு, எதுக்கு, சிலோன் பாஸ்போர்ட் எண்டு கிளம்புகினம்.

இந்த கூத்து இப்படி என்றால், சும்மா கிடந்த கப்பலை, வேணுமெண்டா எடுத்துக்கொண்டு போங்கோ எண்டு, அமெரிக்கன் கடற்படை, சிலோன் கடற்படைக்கு சொல்ல, ஒரு நூத்திச்சொச்சம் பேர் கிளம்பிப்போயிருக்கினம்.

அவயலிலும் கொஞ்சப்பேர் காணம். 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

ஆக்கள்... காணாமல் போகின்றதை பார்க்க,
வெள்ளை வானில், யாரோ... கடத்துகிறார்களோ. 😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

May be a meme of 3 people and text that says 'Commonwealth Gamas 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்றச் சென்ற இலங்கை வீராங்கனை தலைமறைவு News dtseaி S # வீராங்கனை இம்பட்டு நாளும் நீ பயிற்சி எடுத்தது மைதானத்தில ஓட இல்ல இலங்கைய விட்டு ஓட அப்படித்தானே'

இவ்வளவு...  நாளும், ஊரிலை பயிற்சி எடுத்தது..
இந்த ஓட்டத்துக்குத் தானா.... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

இலங்கை அணியின் ஜூடோ வீராங்கனை ஒருவரும் ஜூடோ அணியின் முகாமையாளர் ஒருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதாலயே இலங்கை அணி தோற்க போவுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இதாலயே இலங்கை அணி தோற்க போவுது.

ஓகோ…. ஒடின ஆக்கள் எல்லாரும், தங்கப் பதக்கம் எடுக்கிற ஆக்களோ… 😂
நாங்கள் நம்பீட்டம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

ஆக்கள்... காணாமல் போகின்றதை பார்க்க,
வெள்ளை வானில், யாரோ... கடத்துகிறார்களோ. 😜

அப்படித்தான் நானும் நினைச்சேன். வெள்ளைவான் ஆளும் வெளிநாட்டில் இருக்கிறபடியால் வாய்ப்பிருக்கு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

இங்கிலாந்திற்கு சென்ற... மற்றுமொரு, இலங்கை வீரரும் மாயம்!

இங்கிலாந்தில் நடைபெறும் 22வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க சென்றுள்ள மற்றுமொரு இலங்கையரும் மாயமாகியுள்ளார்.

இலங்கையின் மல்யுத்த அணியைச் சேர்ந்த வீரர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன தடகள வீரர் எதிர்வரும் 6ஆம் திகதி மல்யுத்த போட்டியின் முதல் சுற்று போட்டியில் பங்கேற்கவிருந்தார்.

முன்னதாக இலங்கை ஜூடோ வீரர் ஒருவரும் ஜூடோ அணியின் அதிகாரி ஒருவரும் காணாமல் போயிருந்தனர்.

காணாமல் போன மல்யுத்த வீரர் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் பொதுநலவாய விளையாட்டு மருத்துவ மையத்திற்கு மாற்றப்பட்டார் பின்னர் அவர் இரண்டாவது சீரற்ற சோதனையில் தேர்ச்சி பெற்ற பிறகு விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும் இலங்கை அணி நிர்வாகம் அவரை மையத்திலிருந்து அழைத்துச் செல்ல வந்தபோதுதடகள வீரர் காணால் போயிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொதுநலவாய விளையாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் காணாமல் போன இலங்கை தடகள வீரர் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

https://athavannews.com/2022/1293519

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

இங்கிலாந்திற்கு சென்ற... மற்றுமொரு, இலங்கை வீரரும் மாயம்!

காணி,வீடு,பண பலம் உள்ளவர்களே நாட்டில் வாழ முடியாது என சொல்கிறார்கள்.இனிவரும் காலங்கள் இன்னும் மோசமான நிலைக்கு வரும் எனவும் பயப்பிடுகின்றார்கள்.

சிங்கள இனவாதிகள் நல்ல வசதிகளுடன் இருந்த நாட்டை பாலைவனம் போல் ஆக்கிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அத்தனை மக்களும்  இனம்  மொழி பாராது வெளியேறத்துதுடிக்கும்  நாட்டில்  வேறு எதை  எதிர்பார்க்கமுடியும்??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'BIRMINGHAM 2022 XO.COMMONWEALTHGAMES காமன்வெல்த் போட்டிக்கு இங்கிலாந்து சென்ற மற்றுமொரு இலங்கை வீரரும் எஸ்கேப் News mt டாலர் பிரச்சனைய தீர்க்கத்துக்கு இதுவும் அரசின் திட்டமா இருக்குமோ'

பதக்கம் எடுக்காவிட்டலும் பரவாயில்லை, போன அணி பாதியவது ஊர் வந்து சேருமா ?

  • கருத்துக்கள உறவுகள்

https://uk.news.yahoo.com/police-probe-disappearance-three-sri-151231486.html

Police probe disappearance of three Sri Lankan athletes at Commonwealth Games

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.