Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனக்கொலையாளிகள் ராஜபக்ஷேக்களுடன் சேர்ந்து சொந்த இனத்திற்கெதிராக துரோகம் புரிந்த தமிழர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனக்கொலையாளிகள் ராஜபக்ஷேக்களுடன் சேர்ந்து சொந்த இனத்திற்கெதிராக துரோகம் புரிந்த தமிழர்கள்

Mahinda-Rajapaksa-and-Narasimhan-Ram-300x274.jpg

அண்மையில் இலங்கை தமிழ்ச் சங்கம் எனும் இணையத்தில் சச்சி சிறிகாந்தா அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த தொகுப்பினைப் படிக்க முடிந்தது. என்னைப்போலவே இதுதொடர்பான ஆர்வமுள்ளவர்கள் இதனைப் படித்துப் பார்க்கலாம் என்பதற்காக இத்தொகுப்பினை தமிழில் மொழிபெயர்த்து எழுதுகிறேன். இது என்னுடைய சொந்த ஆக்கம் இல்லை. ஆகவே படித்துவிட்டு என்னுடன் சினங்கொள்ள வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தற்போது இனக்கொலையாளிகள் ராஜபக்ஷேக்களின் நட்சத்திரங்கள் பிரகாசமிழந்து எரிந்து கீழே வீழ்ந்துகொண்டிருக்கும் தறுவாயில் இவர்களிடமிருந்து தமக்கான ஆதாயங்களை ஆசையுடன் எதிர்பார்த்து, புலிகளையும், தமிழ் மக்களுக்காக அவர்கள் தியாகத்துடன் முன்னெடுத்த விடுதலைப் போராட்டத்தையும் வசைபாடிக் கேவலப்படுத்திய சில தமிழர்கள் பற்றி நாம் பேசுவது அவசியமாகிறது. அந்தவகையில் என்னால் தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய பட்டியலினை உங்களிடம் முன்வைக்கிறேன். அந்தப் பட்டியல் இதுதான்.

1. சுப்ரமணிய சுவாமி
2. நரசிம்மன் ராம்
3.  டக்கிளஸ் தேவாநந்தா
4.  ஆனந்தசங்கரி
5.  விநாயகமூர்த்தி முரளீதரன் ( கருணா)
6. சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)
7. கே டி ராஜசிங்கம் (ஏசியன் ட்ரிபியூன்)
8. எஸ் சி சந்திரஹாசன் (தந்தை செல்வாவின் மகன்)
9. பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் (முறிந்த பனை, மனிதவுரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம்) 
10. வேலாயுதம் தயாநிதி (தயா மாஸ்ட்டர்)
11. நோயல் நடேசன்
12. குமரன் பதமநாதன் (கே பீ)
13. அங்கஜன் ராமநாதன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பட்டியல் மிக மிகச் சிறியது என்பது எனக்குத் தெரியாதது அல்ல. ஆனால், இங்குள்ளவர்களின் செயற்பாடுகளுக்கிடையே நான் கண்ட ஒற்றுமையின் காரணமாக இவர்களைப் பட்டியலிட்டிருக்கிறேன். மிகவும் கீழ்த்தரமான சந்தர்ப்பவாத, தாம் சொல்வதற்கும் செய்வதற்கும் இடையே வேறுபாட்டினைக் கொண்ட, ஆதாயத்திற்காக கட்சி தாவுகின்ற, தம்மை தலைவர்கள் என்று போலியாக அடையாளப்படுத்துகின்ற, மக்களுடன் இருந்து மிகுந்த தொலைவில் சங்கரிக்கின்ற, நீதியின்பால் நிற்கத் திராணியற்ற குணாதிசயங்களை இவர்கள் அனைவரும் கொண்டிருப்பதால் இப்படியலில் இவர்களைச் சேர்த்துக்கொள்வதென்பது எனக்குக் கடிணமாக இருக்கவில்லை.  இவர்களுக்கு இதைவிடவும் இன்னும் சில ஆசைகள் இருக்கின்றன. இனக்கொலையாளிகளுடன் சேர்ந்து நின்று புகைப்படங்களில் சிரித்து மகிழ்வது, இனக்கொலையாளி ராணுவத்தின் பீரங்கி வாகனங்களில் வலம்வருவது, இலவசமான உலங்குவானூர்திச் சவாரிகளில் களிப்புறுவது என்பவற்றில் ஆரம்பித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இல்லங்களுக்கு விருந்தாளிகளாக அழைக்கப்பட்டு வாழ்வின் உன்னதமான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது வரை இவர்களது ஆசைகளும் ஏக்கங்களும் வளர்ந்து வந்திருக்கின்றன.


சுப்ரமணிய சுவாமி

Subramanian Swamy

இவன் ஒரு கோமாளி. அரசியலில் எதைப் பேசுவதென்கிற இங்கிதம் இல்லாத ஒரு இந்திய அரசியல்வாதி. இந்தியாவின் அதியுயர் விருதான பாரத ரத்ணாவை மகிந்த எனும் இனக்கொலையாளிக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று கேட்குமளவிற்கு அசாத்திய துணிச்சலும், அகம்பாவமும் கொண்டவன். அதே துணிச்சலில்த்தான் ராஜபக்ஷேக்கள் நாட்டைவிட்டு ஓட எத்தனித்துக்கொண்டிருக்கும்போது, இந்திய அரசு தனது ராணுவத்தை அனுப்பி அவர்களைப் பாதுகாப்பாக மீட்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தவன். 
ராஜபக்ஷேக்களுக்காக சுவாமி பரிந்துபேசிய சில தருணங்களை உங்களுக்காக இங்கே இணைத்து விடுகிறேன்.

"என்னைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. 2008 இல் இலங்கையின் ராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தமிழ்நாட்டுத் தலைவர்களைக் கோமாளிகள் என்று அழைத்ததற்காக அவரைப் பாராட்டுகிறேன். அவர் கூறியதில் எதுவித தவறும் இல்லையென்பதே எனது எண்ணம். ஏனென்றால், தமிழகத் தலைவர்கள் கோமாளிகள் என்பது உண்மையே!". 

"ஒரு இந்தியனாகவும், தமிழனாகவும் நான் இதனைக் கூறுகிறேன். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தத் தமிழர்களும் பிரபாகரனையும், புலிகள் இயக்கத்தையும் முற்றாக வெறுக்கிறார்கள் என்பதனை என்னால் உறுதியாகக் கூறமுடியும்".

"இனவழிப்பு என்று ஒன்று நடந்தால் அன்றி சர்வதேச மத்தியஸ்த்தம் என்பது ஒரு நாட்டில் சாத்தியமில்லை. ஐ நா வே இலங்கையில் இனக்கொலை நடைபெற்றதாக கூறாதபோது, போதை மயக்கத்தில் உருளும் தமிழ்நாட்டுத் தலைவர்களும், இங்கிலாந்தில் இருக்கும் சில மதியீனர்களும் இனக்கொலை நடந்ததாக உளறுகிறார்கள். ஒரு குழந்தை இறந்துவிட்டதாக நாடகம் ஒன்றைப் போட்டுவிட்டு, பணத்தினைக் கொடுத்து ஒன்றோ இரண்டோ தொலைக்காட்சி சேவைகளில் நீங்கள் பிரச்சாரப்படுத்திவிடுவதனால் மட்டும் நடக்காத இனக்கொலையினை நடந்ததாக உங்களால் புனைய முடியாது. உண்மையில் சொல்லப்போனால், எந்த தகுதிவாய்ந்த, நம்பகத்தரமான சர்வதேச அமைப்புமே இலங்கையில் இனக்கொலை நடந்ததாக இதுவரை கூறவில்லை என்பதை நாம் அவதானிக்க வேண்டும். இலங்கையில் கொல்லப்பட்ட பெருமளவு தமிழர்களை புலிகள் இயக்கமே கொன்றது என்பது நாம் தெரியாதது அல்லவே? எமது முன்னாள்ப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றதுகூட புலிகள் தான் என்பது எமக்குத் தெரிந்ததே, நாம் ஒருபோதுமே அதனை மறக்க மாட்டோம். அப்படியிருக்க, எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு சர்வதேச அமைப்புக்கள் போரினை நிறுத்தவேண்டும் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? இலங்கையில் ஏதாவது மனிதவுரிமை மீறள்கள் நடந்திருந்தால், அங்கே இருக்கும் ஜனநாயக விதிமுறைகள் ஊடாக அவற்றை அம்மக்கள் விசாரணை செய்யுமாறு கேட்கலாம். இந்தியாவில் இருப்பது போன்று, அங்கும் மிகவும் மேன்மையான ஜனநாயக சட்டங்கள் இருக்கின்றனவே? என்னைப்பொறுத்தவரை சர்வதேசத் தலையீடு என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் தேவையற்றது, ஏனென்றால் அங்கு இனக்கொலையென்பது நடைபெறவேயில்லை".

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ரஞ்சித் said:

 

1. சுப்ரமணிய சுவாமி
2. நரசிம்மன் ராம்
3.  டக்கிளஸ் தேவாநந்தா
4.  ஆனந்தசங்கரி
5.  விநாயகமூர்த்தி முரளீதரன் ( கருணா)
6. சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)
7. கே டி ராஜசிங்கம் (ஏசியன் ட்ரிபியூன்)
8. எஸ் சி சந்திரஹாசன் (தந்தை செல்வாவின் மகன்)
9. பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் (முறிந்த பனை, மனிதவுரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம்) 
10. வேலாயுதம் தயாநிதி (தயா மாஸ்ட்டர்)
11. நோயல் நடேசன்
12. குமரன் பதமநாதன் (கே பீ)
13. அங்கஜன் ராமநாதன்

இந்தப் பட்டியலில்... தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலரையும் சேர்க்க வேண்டும்.
நீங்கள் குறிப்பிட்டவர்கள் முகத்துக்கு நேரே துரோகம் செய்தார்கள்.
கூட்டமைப்பில் உள்ள சிலரோ... எப்பவும், ஆளும்  அரசுகளுடன் 
பின்கதவால் தொடர்புகளை பேணி...
தமிழர்களுக்கு முதுகில் குத்திக் கொண்டே இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ரஞ்சித்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நரசிம்மன் ராம்

Mahinda Rajapaksa, Leader of Opposition, Sri Lanka; N. Ram ...

இவன் பற்றி தமிழ் சங்கம் இணையத்தில் பலதடவை எழுதியாயிற்று. இவனது செயற்பாடுகள் பற்றிய சில தகவல்களைக் கீழே பகிர்கிறேன்.

மார்கழி 2005 இல் அகம்பாவமும் மதியீனமும் கொண்ட ராம் கூறும் சில கருத்துக்கள்.....

ராமை தலைமை ஆசிரியராகக் கொண்ட இந்து பத்திரிக்கையில் 2005 ஆம் ஆண்டு குறைந்தது 22 தடவைகளாவது புலிகள் பற்றியும், தமிழர்களின் போராட்டம் பற்றியும் மிகவும் மோசமான ஆசிரியர் தலையங்கங்களை இவனும் இவனது பரிவாரங்களும் வரைந்திருக்கின்றன. புலிகளை பயங்கரவாதிகளாக மீண்டும் மீண்டும் சித்தரிப்பதன் மூலம், ராஜபக்ஷேக்களை ஆதரித்தும், தமிழர்களை விடுதலைப் போராட்டத்தையும் அதன் தலைமையினையும் நிராகரிக்க வேண்டும் என்றும் ராம் தொடர்ச்சியாக இக்காலத்தில் எழுதிவந்தான். அவனது ஆசிரியர் தலையங்கங்கள் பின்வருமாறு,

1. சிறிலங்காவும் சுனாமியும் - தை 5
2. நிவாரணங்கள் - தை 10
3. பிரபாகரன் எங்கே? தை 11
4.  சுநாமியின் பிள்ளைகள் - தை 14
5. போர்ச்சூழலும் சுநாமி அழிவுகளும் - தை 25
6. தர்மசங்கடமான மூன்றாம் வருட நிறைவு - மாசி 24
7. புலிப்பயங்கரவாதிகளும் சிறுவர் போராளிகளும் - பங்குனி 4
8. அயர்லாந்து விடுதலை ராணுவத்தின் இருப்பும், புலிகளின் இருப்பும் - பங்குனி 23
9. சுநாமியும் புலிகளின் இருப்புப் பற்றிய சந்தேகமும் - ஆனி 17
10. இலங்கையும் சுநாமிக்குப் பின்னரான கட்டுமானமும் - ஆனி 25
11. இலங்கையில் பலச்சமநிலையினைப் பேணும் நகர்வு - ஆடி 19
12. ஒரு பிரதான ராதந்திரியின் மறைவு - ஆவணி 15
13. தேர்தல்களும், ஸ்த்திரமற்ற தன்மையும் - ஆவணி 29
14. பயங்கரவாதம் குறித்து எவரும் அனுதாபம் காட்டத்தேவையில்லை - ஆவணி 31
15. கலங்கிய குட்டையில் இலங்கை - புரட்டாதி 13
16. ஐரோப்பிய ஒன்றியமும், புலிகள் இயக்கமும் - புரட்டாதி 29
17. விரும்பத்தகாத தெரிவினை நோக்கிச் செல்லும் இலங்கை - ஐப்பசி 17
18. புலிகளின் தந்திர விளையாட்டுக்கள் - கார்த்திகை 11
19. மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷெ - கார்த்திகை 19
20. புலிகளின் "இறுதி எச்சரிக்கை" எனும் அபத்தத்தினைப் புரிந்துகொள்ளுதல் - கார்த்திகை 30
21. தமது சக்திக்கு அப்பாற்பட்ட வெளிகளில் அலைக்கழிக்கப்படும் புலிகள் - மார்கழி 8
22.  புலிகளின் பலம்பற்றிய யதார்த்தத்தினை அவர்களே உணர்ந்துகொள்ளுதல் - மார்கழி 26


புலிகளையும், போராட்டத்தையும் கீழ்த்தரமாக வசைபாடி எழுதப்பட்ட இந்த தலையங்கங்கள் எவற்றிலுமே சுநாமியால் கொல்லப்பட்ட மக்களுக்கான அஞ்சலியோ அல்லது அவற்றிற்கான நிவாரணம் பற்றியோ ராம் பேச விரும்பவில்லை. கருணா பிரிந்துசென்றதால் புலிகள் பலவீனமாக்கப்பட்டுள்ளார்கள், சுநாமியின்போது தலைவரும் ஆயிரக்கணக்கான போராளிகளும் கொல்லப்பட்டுள்ளார்கள், கிழக்கில் புலிகள் அழிந்துவிட்டார்கள், இலங்கையரசு பலம்பெற்று வருகிறது, மகிந்த மேன்மையானவர் எனும் தமிழர் விரோத செய்திகளைக் காவிவந்ததைத்தவிர ராம் தமிழர்களுக்காகச் செய்தது என்று எதுவுமில்லை. 1989 இல் தலைவர் கொல்லப்பட்டுவிட்டார் என்று கூவிய அதே ஆர்ப்பரிப்புடன் 2005 இலும் தலைவர் கொல்லப்பட்டுவிட்டார் என்று ராம் எனும் குருட்டு ஆடு அலறிக்கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நமது சமூகத்தில் மறதிக் குணம் அதிகம் என்ற படியால்…
இவை யாவும், புத்தக வடிவில் கொண்டு வரப்பட வேண்டும்.
உங்கள், கடின உழைப்பிற்கு நன்றி ரஞ்சித். 👍🏽

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளையும், தலைமையினையும் மிகக் கீழ்த்தரமாக விழித்து ராம் எழுதிய ஒரு கட்டுரையின் பகுதி கீழே.....

இலங்கை : இனிமேல் செய்யப்படவேண்டியது என்ன?

சர்வதேசத்திலும், தமிழ்நாட்டிலும் புலிகள் இன்றிருக்கும் மிகவும் இக்கட்டான நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருவது போலத் தெரிகிறது. புலிகள் எனப்படும் அரசியல் மிருகத்தின் இயல்பு எத்தகையது? பதில் மிகவும் இலகுவானது, உலகில் இருக்கும் மிகவும் கொடூரமான, மிலேச்சத்தனமான பயங்கரவாத இயக்கங்களில் புலிகள் இயக்கம் முதன்மையானது. தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாமே என்று கூறிக்கொண்டு விடாப்பிடியாக அது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதனது இன்றைய நிலை என்ன? உலகில் போராடிவரும் இன்னும் பல பயங்கரவாத அமைப்புகளுக்கு புலிகளின் வளர்ச்சியும், கட்டுமாணங்களும் உதாரணமாகத் தெரிந்தாலும், அவை எல்லாமே இன்று படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. புலிகள் அமைப்பு இன்று கண்டிருக்கும் அழிவென்பது அதன் சரித்திரத்திலேயே இதுவரை அது கண்டிராதது. நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்களின்படி அதனது போரிடும் வலு வெகுவாக அழிக்கப்பட்டிருக்கிறது. அதன் படைக் கட்டுமானங்கள் அடித்து  நொறுக்கப்பட்டிருக்கின்றன. போர்வலுவும், மனோநிலையும் மிகவும் அடிமட்டத்திற்கு இழுத்து வீழ்த்தப்பட்டிருக்கின்றன. சிறிது சிறிதாக அழிக்கப்பட்டுவரும் அவ்வியக்கத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி நகர்களுக்கிடையே அதன் பலம் சுருங்கி விட்டது. 

பிரபாகரன் வளர்த்துவந்த இந்தப் பயங்கரவாத இயக்கத்தின் மிலேச்சத்தனமும், அட்டூழியங்களும் எனது பத்திரிக்கையில் பலதடவை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கை எனும் நாட்டில் ஒருமைப்பாட்டினுள் தமிழர்களுக்குக் கிடைக்கவிருந்த அனைத்துத் தீர்வுகளையும் இப்பயங்கரவாத இயக்கம் முன்னின்று அழித்துப் போட்டிருக்கிறது. 1991 இல் இந்திய மண்ணில் எமது தலைவர் ராஜீவைக் கொன்றதன் பின்னர், உலகில் இப்பயங்கரவாத இயக்கத்தை முதன் முதலில் தடைசெய்த நாடு இந்தியா. அத்துடன், இக்கொலையின் பிரதான சூத்திரதாரி பிரபாகரனே என்றும் எமது நாடு அறிவித்து விட்டது. இந்தியாவைப் பின்பற்றி மேலும் 30 நாடுகள் இப்பயங்கரவாத இயக்கத்தை சரியான முறையில் தடைசெய்திருக்கின்றன.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, ரஞ்சித் said:

ராமை தலைமை ஆசிரியராகக் கொண்ட இந்து பத்திரிக்கையில் 2005 ஆம் ஆண்டு குறைந்தது 22 தடவைகளாவது புலிகள் பற்றியும், தமிழர்களின் போராட்டம் பற்றியும் மிகவும் மோசமான ஆசிரியர் தலையங்கங்களை இவனும் இவனது பரிவாரங்களும் வரைந்திருக்கின்றன. புலிகளை பயங்கரவாதிகளாக மீண்டும் மீண்டும் சித்தரிப்பதன் மூலம், ராஜபக்ஷேக்களை ஆதரித்தும், தமிழர்களை விடுதலைப் போராட்டத்தையும் அதன் தலைமையினையும் நிராகரிக்க வேண்டும் என்றும் ராம் தொடர்ச்சியாக இக்காலத்தில் எழுதிவந்தான். அவனது ஆசிரியர் தலையங்கங்கள் பின்வருமாறு,

1. சிறிலங்காவும் சுனாமியும் - தை 5
2. நிவாரணங்கள் - தை 10
3. பிரபாகரன் எங்கே? தை 11
4.  சுநாமியின் பிள்ளைகள் - தை 14
5. போர்ச்சூழலும் சுநாமி அழிவுகளும் - தை 25
6. தர்மசங்கடமான மூன்றாம் வருட நிறைவு - மாசி 24
7. புலிப்பயங்கரவாதிகளும் சிறுவர் போராளிகளும் - பங்குனி 4
8. அயர்லாந்து விடுதலை ராணுவத்தின் இருப்பும், புலிகளின் இருப்பும் - பங்குனி 23
9. சுநாமியும் புலிகளின் இருப்புப் பற்றிய சந்தேகமும் - ஆனி 17
10. இலங்கையும் சுநாமிக்குப் பின்னரான கட்டுமானமும் - ஆனி 25
11. இலங்கையில் பலச்சமநிலையினைப் பேணும் நகர்வு - ஆடி 19
12. ஒரு பிரதான ராதந்திரியின் மறைவு - ஆவணி 15
13. தேர்தல்களும், ஸ்த்திரமற்ற தன்மையும் - ஆவணி 29
14. பயங்கரவாதம் குறித்து எவரும் அனுதாபம் காட்டத்தேவையில்லை - ஆவணி 31
15. கலங்கிய குட்டையில் இலங்கை - புரட்டாதி 13
16. ஐரோப்பிய ஒன்றியமும், புலிகள் இயக்கமும் - புரட்டாதி 29
17. விரும்பத்தகாத தெரிவினை நோக்கிச் செல்லும் இலங்கை - ஐப்பசி 17
18. புலிகளின் தந்திர விளையாட்டுக்கள் - கார்த்திகை 11
19. மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷெ - கார்த்திகை 19
20. புலிகளின் "இறுதி எச்சரிக்கை" எனும் அபத்தத்தினைப் புரிந்துகொள்ளுதல் - கார்த்திகை 30
21. தமது சக்திக்கு அப்பாற்பட்ட வெளிகளில் அலைக்கழிக்கப்படும் புலிகள் - மார்கழி 8
22.  புலிகளின் பலம்பற்றிய யதார்த்தத்தினை அவர்களே உணர்ந்துகொள்ளுதல் - மார்கழி 26

 

இவன் இனத்தை அழிப்பதையே தொழிலாக கொண்டுள்ளான்.
உங்கள் எழுத்துக்களுக்கு நன்றி. தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

இனக்கொலையாளிகள் ராஜபக்ஷேக்களுடன் சேர்ந்து சொந்த இனத்திற்கெதிராக துரோகம் புரிந்த தமிழர்கள்


ரஞ்சித் அவர்களே,  சிறந்ததொரு பதிவைச் செய்கின்றீர்கள். இவைகள் யாவும் ஒரு புத்தகவடிவில் வரவேண்டும். உங்கள் தேடலுக்கும் நேரத்துக்கும் நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்

முதலிருவரும், தமிழ் தெரிந்த பார்ப்பனர்கள். ஆகவே.... ஆச்சரியப்பட முடியவில்லை.

இவர்களுடன் சேர்ந்திருக்க வேண்டிய இன்னும் ஒருபார்ப்பனர், சோ ராமசாமி (துக்ளக்) 🙄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
58 minutes ago, Nathamuni said:

முதலிருவரும், தமிழ் தெரிந்த பார்ப்பனர்கள். ஆகவே.... ஆச்சரியப்பட முடியவில்லை.

இவர்களுடன் சேர்ந்திருக்க வேண்டிய இன்னும் ஒருபார்ப்பனர், சோ ராமசாமி (துக்ளக்) 🙄

எல்லாம் இந்த சின்ன இடைவெளிக்கால வந்தவங்களால வந்த பிரச்சனை என்கிறீங்க? 😂

Bild

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

இனக்கொலையாளிகள் ராஜபக்ஷேக்களுடன் சேர்ந்து சொந்த இனத்திற்கெதிராக துரோகம் புரிந்த தமிழர்கள்

Mahinda-Rajapaksa-and-Narasimhan-Ram-300x274.jpg

அண்மையில் இலங்கை தமிழ்ச் சங்கம் எனும் இணையத்தில் சச்சி சிறிகாந்தா அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த தொகுப்பினைப் படிக்க முடிந்தது. என்னைப்போலவே இதுதொடர்பான ஆர்வமுள்ளவர்கள் இதனைப் படித்துப் பார்க்கலாம் என்பதற்காக இத்தொகுப்பினை தமிழில் மொழிபெயர்த்து எழுதுகிறேன். இது என்னுடைய சொந்த ஆக்கம் இல்லை. ஆகவே படித்துவிட்டு என்னுடன் சினங்கொள்ள வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தற்போது இனக்கொலையாளிகள் ராஜபக்ஷேக்களின் நட்சத்திரங்கள் பிரகாசமிழந்து எரிந்து கீழே வீழ்ந்துகொண்டிருக்கும் தறுவாயில் இவர்களிடமிருந்து தமக்கான ஆதாயங்களை ஆசையுடன் எதிர்பார்த்து, புலிகளையும், தமிழ் மக்களுக்காக அவர்கள் தியாகத்துடன் முன்னெடுத்த விடுதலைப் போராட்டத்தையும் வசைபாடிக் கேவலப்படுத்திய சில தமிழர்கள் பற்றி நாம் பேசுவது அவசியமாகிறது. அந்தவகையில் என்னால் தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய பட்டியலினை உங்களிடம் முன்வைக்கிறேன். அந்தப் பட்டியல் இதுதான்.

1. சுப்ரமணிய சுவாமி
2. நரசிம்மன் ராம்
3.  டக்கிளஸ் தேவாநந்தா
4.  ஆனந்தசங்கரி
5.  விநாயகமூர்த்தி முரளீதரன் ( கருணா)
6. சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)
7. கே டி ராஜசிங்கம் (ஏசியன் ட்ரிபியூன்)
8. எஸ் சி சந்திரஹாசன் (தந்தை செல்வாவின் மகன்)
9. பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் (முறிந்த பனை, மனிதவுரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம்) 
10. வேலாயுதம் தயாநிதி (தயா மாஸ்ட்டர்)
11. நோயல் நடேசன்
12. குமரன் பதமநாதன் (கே பீ)
13. அங்கஜன் ராமநாதன்

நல்ல வேலை ரஞ்சித்.

பதிவுகள் தரவு அடிப்படையில் மட்டும் இருப்பதாக பார்த்து கொள்ளுங்கள்.

முறிந்த பனை எழுதியது ராஹன் ஹூலா? ஜீவன் ஹூலா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

நல்ல வேலை ரஞ்சித்.

பதிவுகள் தரவு அடிப்படையில் மட்டும் இருப்பதாக பார்த்து கொள்ளுங்கள்.

முறிந்த பனை எழுதியது ராஹன் ஹூலா? ஜீவன் ஹூலா?

ராஜன் ஹூல் - முறிந்தபனை

ஜீவன் ஹூல் - சகோதரர்

தவறுதான்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

ராஜன் ஹூல் - முறிந்தபனை

ஜீவன் ஹூல் - சகோதரர்

தவறுதான்

ராஜன் ஹூல் இராஜபக்சேக்களுடன் இணைந்து செயல்பட்சதாக நான் அறியவில்லை. 

ஆனால் ஜீவன் துணைவேந்தர் பதவி வரும் என பலவாறு உழைத்தார். பின்னர் முறுகினார்.

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித்  உங்கள் நேரத்துக்கு நன்றி. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

....."கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டில் சில சிறிய அரசியல் கட்சிகளும், குழுக்களும் இனவாதத்தைக் கக்குவதன் மூலம் புலிகளுக்கு தமிழ்நாட்டில் மீண்டும் புத்துயிர் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தாலும் கூட அவை யாவுமே இதுவரை தோல்வியில்த்தான் முடிந்திருக்கின்றன. அத்துடன் சுமார் 95 வீதத்திற்கும் அதிகமான தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் மிகவும் அமைதியான தமது மாநிலத்தில் மிலேச்சத்தனமான புலிப்பயங்கரவாதிகள் மீண்டும் புத்துயிர் பெறுவதை விரும்பவில்லை என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. அத்துடன் பல முன்னணி அரசியல்க் கட்சிகள் கூட தமது முன்னைய புலிச் சார்புக் கொள்கையிலிருந்து விலகி, புலிகளுக்கெதிரான தீர்க்கமான கொள்கையினை வகுத்துக்கொண்டிருப்பதுபோலத் தெரிகிறது.

அண்மையில் தமிழ்நாட்டில் முதல்வர் கருனாநிதி தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் குழு நிறைவேற்றியுள்ள ஆறு அம்சத் தீர்மானத்தில் இனக்கொலை பற்றிப் பேசியுள்ளதுடன், போரில் அகப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கவேண்டும் என்றும் காலக்கெடு விதித்திருந்தனர். அத்துடன் போர் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்றும், இரு வாரகாலத்தினுள் யுத்த நிறுத்தம் ஒன்று அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அப்படி இந்தியா செய்யாதவிடத்து, மத்திய அரசுக்கான தமது ஆதரவினை விலக்கிக்கொள்ள நேரிடும் என்றும் அச்சுருத்தல் விடுத்திருக்கின்றனர். 

ஆனால், இந்தியா இவர்களின் நெருக்குதல்கள் குறித்து தீர்க்கமான முடிவொன்றினை எடுத்திருப்பதாகவே தெரிகிறது. இந்திய அரசு, தமிழ்நாட்டு இனவாதிகளின் உளவியல் ரீதியான அச்சுருத்தல்களுக்கு அடிபணிந்த்து போகாது, மிலேச்சத்தனமான புலிப்பயங்கரவாதிகளுக்கெதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கையினையும், இலங்கையில் தமிழ்மக்களுக்கு இருக்கும் அரசியல் ரீதியிலான பிரச்சினைகளையும் தெளிவாக வேறுபடுத்திப் பார்ப்பது அவசியம்.

தமிழ்நாட்டு அரசியல்க் கட்சிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் தற்போது செய்யவேண்டியது வன்னியில் யுத்தத்தால் அல்லற்படும் சுமார் 230,000 தமிழர்களுக்கான நிவாரணங்களை ஒழுங்குபடுத்துவதாகத்தான் இருக்க முடியும். அத்துடன் இலங்கை தொடர்பான இந்தியாவின் நீண்டகால வெளியுறவுக் கொள்கையுடன் ஒத்துப்போகக்கூடிய சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றிற்கு ஆதரவு தருவதும் அவர்கள் செய்யக்கூடிய இன்னொரு சாதகமான நடவடிக்கையாகும். 

வன்னியில் இடம்பெற்றுவரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் 230,000 தமிழர்களுக்கான நிவாரணங்களையும் உணவுப் பொருட்களையும் தொடர்ச்சியாக வழங்குவதென்பது மிகவும் சவாலான விடயமாகும். வன்னியில் அல்லற்படும் மக்களுக்கான அத்தியாவசிய உணவு மற்றும் எரிபொருள் மருந்துப்பொருட்களை எப்படி விநியோகிக்கிறீர்கள் என்று இந்து உடபட  சர்வதேச ஊடகவியலாளர்கள் கேட்டபோது, அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி மகிந்த "புலிகளினால் மனிதக் கேடயங்களாகப் பிடிக்கப்பட்டு, சொல்லொணாத் துயரத்தினை அனுபவித்துவரும் வடக்கினைச் சேர்ந்த எனது சகோதர சகோதரிகளை விரைவில் நான் மீட்டெடுப்பேன், அவர்களுக்கான அனைத்தையும் நான் வழங்குவேன்" என்று இந்துவுடனான நேர்காணலில் அவர் உறுதியளித்திருந்தார். 

புரட்டாதி முதலாம் திகதியன்று, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அகப்பட்டிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான மனிதாபிமான வழியொன்றினை இலங்கை அரசாங்கம் பிரேரித்திருந்தது. போரினால் ஏற்படுத்தப்பட்ட மிகக் கடுமையான மனிதாபிமான அவலத்தினை எதிர்கொள்ளும் வகையில் பல சர்வதேச தொண்டு நிறுவனங்களும் ஐநா அமைப்பும் உள்ளே அகப்பட்டிருக்கும் மக்களுக்கான சுமார் 750 மெற்றிக் தொன் ப்ரொட்களை அனுப்பிவைக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்த வேளை, கடுமையான யுத்த நிலை காரணமாக அம்முயற்சியும் கைவிடப்பட்டது. ஆனால், போரிடும் இரு தரப்புக்களிடமிருந்தும் தமது உணவு வண்டி ஊர்திகள் தாக்கப்படாது என்கிற உத்தரவாதத்தினைப் பெற்றுக்கொண்டு, மீளவும் தமது முயற்சியினை இந்த அமைக்கள் எடுக்கக் காத்திருக்கின்றன. 

இவ்வாறான சூழ்நிலைகளைல் இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான சிறந்த விநியோக முறைகளை நாம் இங்கும் பாவிக்க முடியும். 2004 சுநாமிப் பேரிடர் காலத்தில் இலங்கையில் இந்தியாவின் இந்த செயல்முறை பெருமளவில் உதவியிருந்தது என்பது மறுக்கமுடியாதது.

ஆகவே தமிழ்நாட்டு மக்களின் உதவிகளும் இந்த இடர்காலத்தில் யுத்தத்தில் அகப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு உதவியாக இருக்கும். அதேவேளை தமிழ்நாட்டிலிருந்து வரும் எந்த உதவியும் இலங்கை அரசாங்கத்திற்கூடாகவே செய்யப்படவேண்டும் என்பதனையும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் புரிந்துகொள்ளுதல் அவசியமானது".

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனக்கொலையாளி மகிந்தவுடன் தனக்கிருக்கும் நெருக்கத்தினை வெளிப்படையாக கூறுவதற்கு ராம் போன்றவர்கள் எபோதுமே பின்னின்றதில்லை. ராமுக்கும் மகிந்தவுக்கும் இடையிலான நெருக்கம், ராம் வருடம் தோறும் இலங்கைக்கு வருவதிலிருந்து மகிந்தவை இந்து பத்திரிகைக் குழுமம் சார்பாக இந்தியாவுக்கு அழைப்பித்து சிறப்பிப்பதுவரை வளர்ந்திருக்கிறது.

அந்தவகையில் 2006 இல் கொழும்பில் மகிந்தவைச் சந்தித்த ராம், மகிந்தவின் இனக்கொலையினை வெள்ளையடிக்க முயன்ற சந்தர்ப்பம் ஒன்றினைப் பற்றிப் பார்க்கலாம்.

மகிந்தவுக்கென்று ராமினால் மிகவும் சாதுரியமாக வடிவமைக்கப்பட்ட 23 வினாக்களை இங்கே பட்டியலிடுகிறேன்.

1. கணம் ஜனாதிபதி அவர்களே, வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் உள்ளக இடம்பெயர் மக்களுக்கான முகாம்களின் நிலைமை பற்றி நீங்கள் திருப்தி அடைகிறீர்கள் தானே? 

2. இந்த முகாம்களில் வசிக்கும் மக்களைத் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தி, பாதுகாப்பிற்கு அச்சுருத்தல் இல்லாதவர்கள் என்று முடிவாகுமிடத்து, அவர்களை மீளவும் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைப்பதுபற்றி முடிவெடுத்திருக்கிறீர்களா? இவர்களுள் சுமார் பத்தாயிரம் பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களைப் பாதுகாப்பாக பராமரிக்கக்கூடிய பகுதிகளான யாழ்ப்பாணத்திற்கோ, மட்டக்களப்பிற்கோ அல்லது மலையகத்திற்கோ அனுப்பிவைப்பதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

3. அடுத்ததாக வன்னியில் பணிபுரிந்த மூன்று வைத்தியர்கள் பற்றியது. இவர்களுள் ஒருவர் புலி உறுப்பினர் என்று உறுதியாகியுள்ள நிலையில், மற்றைய இரு அரச வைத்தியர்களை விடுவிப்பதாக உத்தேசித்திருக்கிறீர்களா? 

4. பிரபாகரனுக்குப் பின்னரான அரசியல் சூழல் எப்படி உருவாகி வருகிறதென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

5. இது தொடர்பாக உங்களது வைகாசி 19 பேச்சிலும் குறிப்பிட்டிருந்தீர்களே?

6. 1950 களில் பிரபலமான வாக்கியமொன்றினைத் தமிழ்த் தலைவர்கள் பேசிவந்தார்கள். இரு மொழிகள் என்றால் ஒரு தேசம் என்றும், ஒரு மொழியென்றால் இரு தேசம் என்றும் அவர்கள் கூறி வந்தார்கள். இதுபற்றிய உங்களின் கருத்தென்ன?

7. 13 ஆம் திருத்தச் சட்டம் குறித்து அண்மையில் பேசியிருந்தீர்கள். அரசியல் தீர்வொன்று குறித்து எவ்வகையான நிலைப்பாட்டில் நீங்கள் இருக்கிறீர்கள்?

8. 13 இற்கும் அதிகப்படியான தீர்வுபற்றியும் நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

9. நீங்கள் 2005 இல் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட போது இனப்பிரச்சினை தொடர்பாக எவ்வகையான எதிர்பார்ப்பினைக் கொண்டிருந்தீர்கள்? 2005 தேர்தல் விஞ்ஞாபனத்தில்
மகிந்த சிந்தனையினை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் வெளியிட்ட கருத்தினை இங்கே பகிர்கிறேன், " இந்த நாட்டின் விடுதலை என்பது எல்லாவற்றிலும் விட மேலானது. நான் பிரிவினைவாதத்திற்கு ஒருபோதுமே இடமளிக்கப்போவதில்லை. அத்துடன் எனது நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க எவருக்குமே இடமளிக்கப்போவதில்லை. அனைத்து இன மத கலாசாரங்களையும் மதிக்கும் அதேவேளை ஒரு இனக் குழுவோ மதமோ மற்றைய இன மதக் குழுக்களை அச்சுருத்துவதை நான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. தனிநபருக்கும், மொத்த சமூகத்திற்குமான முற்றான விடுதலையினையும் சுதந்திரத்தினையும் நான் ஏற்படுத்திக் கொடுப்பேன்" என்று குறிப்பிட்டிருந்தீர்கள். மேலும், பிரிக்கப்படாத நாட்டில், கெளரவமான சமாதானத்துடனான வாழ்வு, மக்களுக்களுக்கிடையிலான புரிந்துணர்வு பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படியானால், நீங்கள் பதவியேற்றபோது, உண்மையாகவே என்ன எதிர்பார்ப்புடன் இருந்தீர்கள்? போர் மூலமான தீர்வு என்பது நிச்சயமாக உங்களின் கொள்கையில் இருக்கவில்லையென்பதனையும், அது உங்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றென்பதையும் என்னால் பார்க்க முடிகிறது.

10. உங்களின் கெளரவமான சமாதானம் எனும் நிலைப்பாடு உங்களின் பலவீனமாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறீர்களா? 

11. அதன் பிறகு மாவிலாறு பிணக்கு ஆரம்பித்தது.

12. ஆனால், நீங்கள் அப்போது எதற்கும் தயாராகவே இருந்தீர்கள் என்பது எங்களுக்கு வெளிப்படையாகவே தெரிந்தது.

13. புலிகள் மிகவும் பலவீனப்பட்டிருக்கிறார்கள், அவர்களின் வலு பலவிடங்களில் மிகவும் உருக்குலைந்து, ஓட்டை விழுந்து காணப்பட்டது, அந்த இடங்களை இலக்குவைத்துப் பலமாகத் தாக்குவதன் மூலம் அவர்களை இலகுவாக அழிக்க முடியும் என்று எப்போது தெரிந்து கொண்டீர்கள்? 

14. புலிகள் என்பது உலகில் மிகவும் கொடூரமான , மிலேச்சத்தனமான பயங்கரவாத இயக்கம் என்பது உங்களின் அசைக்கமுடியாத நிலைப்பாடு, அப்படித்தானே? 

15. புலிகளின் இறுதி  திட்டம் என்னவாக இருந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? பிரபாகரனும், அவரது மூத்த தளபதிகளும், அவர்களது குடும்பங்களும் ஒரு சிறிய நிலப்பரப்பிற்குள் அகப்பட்டுப் போனபோது முழு உலகமும் அதிர்ச்சிக்குள்ளாகியது. ஆனால், அவர்கள் எதனை எதிர்பார்த்து அப்படித் தம்மை அந்த சிறிய நிலப்பகுதிக்குள் ஒடுக்கிக் கொண்டார்கள்? எமது பத்திரிக்கையில் அடிக்கடி எழுதும் டி பி எஸ் ஜெயராஜின் கூற்றுப்படி அவர்கள் இறுதியாக கடுமையான எதிர்த்தாக்குதல் ஒன்றிற்காக அங்கு நிலைகொண்டிருக்கலாம் என்று தெரிகிறது.

16. போரின் மூலம் நிலைநாட்டப்பட்டிருக்கும் வெற்றியினை தெற்கில் மக்கள் கொண்டாடுவதுபற்றி இலங்கைக்கு வெளியே இருந்துவரும் அதிருப்திகள் குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா? போர்மூலமான வெற்றியினை கொண்டாடுவதுபற்றி நாம் கவனமாக இருப்பது அவசியம் இல்லையா? 

17. இலங்கையின் ஜனாதிபதிப் பதவியென்பது மிகவும் பலம்பெற்றுவருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறதே? அப்படியானால், ஜனநாயகத்திற்கான பாதுகாப்பினை எப்படி நிலைநாட்டுவீர்கள்? இதுகுறித்த விமர்சனங்களுக்கான உங்களின் பதில் என்ன?

18. நீங்கள் பாராளுமன்ற ஜனநாயகத்தை விரும்புவர், அப்படித்தானே?

19. நீங்கள் நட்பினைப் பெரிதும் போற்றி வளர்ப்பவர் என்று பரவலாகச் சொல்கிறார்கள். இந்தியாவிலும் பெருமளவு நண்பர்களை நீங்கள் சேர்த்துவைத்திருக்கிறீர்கள் என்பது நாம் அறியாதது அல்ல.

20. இலங்கையில் இடம்பெற்ற போர், அதற்குப் பின்னரான அரசியல் செயற்பாடுகளில் இந்தியா வழங்கிவரும் உதவிகள் குறித்து நீங்கள் மிகவும் மகிழ்ந்திருப்பதாகக் கேள்விப்பட்டோம், அது உண்மைதானே? 

21. இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்துச் செல்வதாக சர்வதேசத்தில் பேசப்பட்டு வருகிறது. இப்படியான பல ஊடகவியலாளர்களில் ஒருவரான லசந்த விக்கிரமதுங்க உங்களுக்கு நெருங்கிய நண்பர். ஆனால், அவர்கூட 2009 தை மாதத்தில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல ஆனி மாதத்தில் தமிழ்ப் பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொழும்பில் கடத்தப்பட்டு சில மணிநேரத்திற்குப் பின்னர் கண்டியில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். 

22. லசந்த இறக்கும் முதல் இறுதியாக உங்களுடன் தொலைபேசியில் பேசியதாகத் தெரியவருகிறது. 

23. புலிகளின் கட்டாய ராணுவப் பயிற்சிக்கு போவதிலிருந்து தப்புவதற்காக 19 வயது இளம் பெண்ணொருவர் தொடர்ச்சியாக 7 குழந்தைகளைப் பெற்றெடுத்துக்  கொண்டிருந்தாள் என்றும், அதற்கு அவளது பெற்றோரும் ஆதரவாக இருந்தார்கள் என்றும் கூறுகிறார்கள். ஆகவே, இதன்மூலம் புலிகள் தமிழ் சிறுவர்களைக் கட்டாயப்படுத்தி ராணுவப் பயிற்சிக்கு இழுத்துச் சென்றார்கள் என்பது உறுதியாகின்றது அல்லவா? 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பட்டியலில் இலங்கை அரசுடன் சேர்ந்து பணிபுரிந்த தமிழ் தலைகள்/அமைச்சர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதா?

கதிர்காமர். (இவர் தமிழர்தானா..?) 🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ராசவன்னியன் said:

இந்த பட்டியலில் இலங்கை அரசுடன் சேர்ந்து பணிபுரிந்த தமிழ் தலைகள்/அமைச்சர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதா?

கதிர்காமர். (இவர் தமிழர்தானா..?) 🤔

மகிந்தவுடன் சேர்ந்து நின்றவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ராசவன்னியன் said:

இந்த பட்டியலில் இலங்கை அரசுடன் சேர்ந்து பணிபுரிந்த தமிழ் தலைகள்/அமைச்சர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதா?

கதிர்காமர். (இவர் தமிழர்தானா..?) 🤔

ஆனந்தசங்கரி அரசுடன் சேர்ந்து புலிகளை காட்டிக்கொடுத்தவர். இப்போ நல்லவராக நடிக்கிறார்.
கதிர்காமர் பெயரளவில் தமிழர். செயலில் சிங்கள இனவாதி. சந்திரிக்கா இவரை கறிவேப்பிலையாக பாவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரஞ்சித் said:

மகிந்தவுடன் சேர்ந்து நின்றவர்கள்

ஓ.. அப்போ சரி, நான் 'மொத்த கூட்டமும்' என நினைத்து எழுதிவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

ஆனந்தசங்கரி அரசுடன் சேர்ந்து புலிகளை காட்டிக்கொடுத்தவர். இப்போ நல்லவராக நடிக்கிறார்.
கதிர்காமர் பெயரளவில் தமிழர். செயலில் சிங்கள இனவாதி. சந்திரிக்கா இவரை கறிவேப்பிலையாக பாவித்தார்.

 

2 hours ago, ராசவன்னியன் said:

ஓ.. அப்போ சரி, நான் 'மொத்த கூட்டமும்' என நினைத்து எழுதிவிட்டேன்.

கதிர்காமர், பிரதமர் பதவி கிடைக்கும் என்று, வாலை ஆட்டிக்கொண்டு, வெளியே நாக்கினை நுரை தள்ள விட்டபடியே வேலை செய்தார்.

பிரதமராக விரும்பிய மகிந்த, ஆள் வைத்து இவரை போட்டுத் தள்ளி விட்டார். பிரதமராயும் ஆனார். வழக்கம் போல, புலிகள் மீது பழி போடப்பட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் தேவானந்தா

Rajapaksa Ally Calls For Independent Probe Into Latest Channel 4 Footage -  Colombo Telegraph

நான் இவன்பற்றி அதிகம் எழுதுவதில்லை. 1984 இல் அலன் தம்பதிகளை இவன் கடத்தியதுபற்றி எழுதியதுடன் இவன்பற்றி நான் அதிகம் நேரத்தைச் செலவழிப்பதில்லை. கொள்கைகள் அற்ற, நம்பத்தகாத வன்முறையினை விரும்பும் ஆயுததாரியாக வலம்வந்து பின்னர் ரணசிங்க பிரேமதாச, சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் இனக்கொலையாளிகள் ராஜபக்ஷேக்களுடன் தொடர்ச்சியாக கூட்டுச் சேர்ந்து சந்தர்ப்பவாத அரசியல்வாதியாக தன்னை உருமாற்றிக் கொண்டவன். இவன்பற்றி ஊடக வியாபாரம் செய்யும் டி பி எஸ் ஜெயராஜ் 2019 ஜனாதிபதி தேர்தல்காலத்தில் எழுதிய குறிப்பொன்றினை இங்கே பகிர்கிறேன்.

"டக்ளஸினால் தமக்கு எதுவித நண்மைகளும் கிடைக்கப்போவதில்லை என்று தெரிந்தும் கூட ராஜபக்ஷேக்கள் அவனைக் கருவேப்பிலை போன்று பார்க்க விரும்பவில்லை. அவனது எஜமான விசுவாசம் குறித்து நன்கு அறிந்திருந்த ராஜபக்ஷ குடும்பம், அவனது குணாதிசயங்களின் பெறுமதி குறித்தும் நன்கே புரிந்துவைத்திருந்தது. 2005 இலிருந்து ராஜபக்ஷேக்களுடன் மிக நெருங்கிய தொடர்பினை டக்ளஸ் பேணிவந்தான். 2015 இல் ராஜபக்ஷேக்கள் மக்களால் துரத்தியடிக்கப்பட்டபோது அவனும் அவர்கள் கூடவே சென்றான். இந்த விசுவாசத்திற்கு பரிசாகவே தாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு கபினெட் அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியொன்றை அவர்கள் கொடுத்தார்கள். தமிழ் மக்களின் வாக்குகளை அவனால் தமக்குப் பெற்றுக்கொடுக்க முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தும், அவன் தங்கள் மீது கொண்டிருந்த விசுவாசத்திற்காக இதனைச் செய்தார்கள்"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கே டி ராஜசிங்கம்

Mischief By Asian Tribune: The Northern Province Chief Minister Candidature  - Colombo Telegraph

வடமாகாணத் தமிழர்களுக்கு 70களில் மகிந்த ராஜபக்ஷ எனும் இளைய அரசியல்வாதியை அறிமுகப்படுத்திய தமிழன் தானே என்று இவன் பெருமைப்பட்டுக்கொள்வதுண்டு. தை 2022 இல் இவனது கீச்சகப் பதிவு இப்படிச் சொல்கிறது,

"இலங்கையில் அரசியல் எரிமலை ஒன்று விரைவில் வெடிக்கவிருக்கிறது. தனது பிரதமர் பதவியிலிருந்து தான் ஒருபோதும் விலகப்போவதில்லை என்று கணம் மகிந்த ராஜபக்ஷே அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அதேவேளை, பசில் ராஜபக்ஷே அவர்களும் இந்தப் பிரதமர் பதவியில் கண் வைத்திருப்பதுப்பொல்த் தெரிகிறஹு"

சரி, முதல் 5 மாதத்திற்குள் இவன் சொல்வதௌ சரியாக இருக்கலாம். கூறியதுபோலவே அரசியல் எரிமலையும் வெடித்தது. ஆனால், இதில் வேடிக்க என்னவென்றால், தனது இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள கோத்தாபய ராஜபக்ஷே, தனது சகோதரர்களான மகிந்தவையும், பசிலையும் கீழே தள்ளிவிட்டதுதான். 
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"இந்தப் பழம் புளிக்கும்" புகழ் ஆனந்தசங்கரி

தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறினால் எங்களிடம் வாருங்கள்.”- தமிழர்  விடுதலைக் கூட்டணி – தேசம்

ஒரு ஆண்டுக்கு முன்னர்வரைக்கும், மிகவும் முட்டாள்த்தனமாகவும், அசாத்திய துணிச்சலோடும் இவன் ராஜபக்ஷே குடும்பத்தினைப் புகழ்ந்து பண்ணிசைத்து மகிழ்ந்ததை நாம் எப்படி அவ்வளவு இலகுவில் மறக்கமுடியும்? 

"இப்போதிருக்கும் ராஜபக்ஷே அரசுதான் முன்னெப்போதைக் காட்டிலும்  தமிழர் பிரச்சினையினைத் தீர்க்கும் சந்தர்ப்பத்தைக் கொண்டிருக்கிறது" என்று இவன் அக்குடும்பத்தை வானளவாகப் புகழ்ந்ததை எப்படி மறப்பது? 

https://island.lk/current-rajapaksa-govt-best-suited-to-settle-tamil-issue-asangaree/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.