Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மது விருந்தில் டான்ஸ்: சர்ச்சையில் பின்லாந்து பிரதமர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kapithan said:

1) ஓடும் பாம்பை மிதிப்பவரல்ல தலைவர்,  எட்ட நின்று, நீண்ட தடியால், தலையில், ஓங்கி அடிப்பவர்தான் தலைவருக்குத் தகுதியானவராக இருக்கலாம்.

2) இல்லை, பொறுப்பின்மையை சுட்டிக்காட்டுவது பரம்பரை இடைவெளி அல்ல. 

3) அந்த வசந்தி யை கூப்பிட்டது புடினோ அல்லது RT யோ அல்ல. 😉

4) எதிர்க் கட்சியினர் பின்லாந்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்கிறீர்களா? ஓகே, அவர்களை முன்லாந்துக்காறர்Frontland-ians என அழைப்போம். இப்போது ஓகேயா? 

5) பின்லாந்தைப்பற்றி எழுதியது கிடுகுவேலித்தனம் என்று நான் கூறவில்லை. பின்லாந்து பிரதமர் அப்படியும் கூத்தடிக்கலாம் என்று கூறுபவர்கள் தங்கள் குமருகளை பொத்திப் பொத்தி வளர்க்கும் முரண்நகையாளர்களான கிடுகுவேலிக்காறர்கள் என்றுதான் கூறுகிறேன். 

1) தமிழர் போராட்ட வரலாற்றை அறியாதவர் வாயில மண்ணு 🤣

2) இந்த சிந்தனை முறைகளும் இந்த நாகரீகங்களும்தான் சிறந்தவை , மற்றவை எல்லாம் கீழானவை என சிந்திக்கும் இந்த சிந்தனைமுறை இரத்தத்தில் இருந்து வருவதில்லை. சுயநலத்தின்பாற்பட்டு வருபவை

1. நகைச்சுவையாக சொன்னது

2. இது பொறுபின்மை இல்லை. just having a break from a stressful job. ஒவ்வொரு நாளும் வேலையை உதாசீனம் செய்துவிட்டு கும்மி அடித்தால் - அது பொறுப்பின்மை.

இதை பொறுப்பின்மை என நினைப்பதுதான் பரம்பரை இடவெளி.

3. இல்லை - வசந்தி வாயர்கள் புட்ஸ்சுக்கு மண்சுமக்கும், பினிஷ், தமிழ் இதர மக்கள்🤣

4. பின்லாந்தின் ஒரு சரார். மற்றும் பின்லாந்தில் காலம் காலமாகவே கொஞ்சம் அதிகமாக இருக்கும் ரஸ்ய அனுதாபிகள், மற்றும் புட்ஸ் கவர்சியால் பீடிக்கப்பட்டவர்கள்.

5. நான் எந்த குமரையும் வளக்கவில்லை. ஏனையோரின் குமரையும் பொத்தி வளவுங்கோ எண்டு சொலவதில்லை. அதே போல் பினிஷ் பிரதமர் 36 வயது மனுசி. குமர் அல்ல 🤣. அவர் குமராய் இருந்த போது கூட அவர் எப்படி வளர்ந்தார் என்பது அவருரதும் குடும்பத்துனதும் விடயம்.

நான் தண்ணியடிப்பதில்லை. என் மகனுக்கும் தண்ணியடிக்காதே எண்டுதான் சொல்லி உள்ளேன். அதற்காக தண்ணியடிப்பவன், பார்ட்டியில் டான்ஸ் ஆடுபவன் பிரதமர் பதவியை தரம் குறைத்து விட்டார் என சொல்லமாட்டேன்.

என் தனிப்பட்ட ஒழுக்க விழுமியங்கள் வேறு. நாம் வாழும் ஐரோப்பிய நாட்டின் பொதுப்பட்ட ஒழுக்க விழுமியங்கள்  வேறு.

45 minutes ago, Kapithan said:

1) தமிழர் போராட்ட வரலாற்றை அறியாதவர் வாயில மண்ணு 🤣

2) இந்த சிந்தனை முறைகளும் இந்த நாகரீகங்களும்தான் சிறந்தவை , மற்றவை எல்லாம் கீழானவை என சிந்திக்கும் இந்த சிந்தனைமுறை இரத்தத்தில் இருந்து வருவதில்லை. சுயநலத்தின்பாற்பட்டு வருபவை

விளங்கநினைபவனுக்கான பதில் எனிலும் - என் கருத்தை சொல்லி விடுகிறேன் (free தான்🤣).

1. 1980 களில் வந்த மண் சுமந்த மேனியர் நாடகம் - சைவப் புராணத்தில் கிழவிக்கு சிவன் பிட்டுக்கு மண் சுமந்த கதையில் - உருவகம்.

2. ஒரு தனி மனிதன், ஏலவே இருக்க்கும் சட்டத்தை பேராசையால் மாற்றி - சாகும் வரை தலைவராக தன்னை நிலை நிறுத்துவது எந்த கலாசாரத்தில் நடந்தாலும் அது இழி செயலே.

  • Replies 76
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

நான் தண்ணியடிப்பதில்லை. என் மகனுக்கும் தண்ணியடிக்காதே எண்டுதான் சொல்லி உள்ளேன். அதற்காக தண்ணியடிப்பவன், பார்ட்டியில் டான்ஸ் ஆடுபவன் பிரதமர் பதவியை தரம் குறைத்து விட்டார் என சொல்லமாட்டேன்.

என் தனிப்பட்ட ஒழுக்க விழுமியங்கள் வேறு. நாம் வாழும் ஐரோப்பிய நாட்டின் பொதுப்பட்ட ஒழுக்க விழுமியங்கள்  வேறு.

தண்ணி அடிக்காமல் இருப்பது ஒழுக்கம் சார்ந்த விடயங்களில் ஒன்று என்பது ஆதி காலம்

இன்று அது ஒரு வித பொய் வாழ்வாக, நாடகமாக, இயற்கைக்கு மாறான விடயமாக பார்க்கப்படுகின்றது 

நான் அதிலிருந்து விடுபட்டுள்ளேன் (எனது மகளின் திருமணத்திற்கு பின்)

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

தண்ணி அடிக்காமல் இருப்பது ஒழுக்கம் சார்ந்த விடயங்களில் ஒன்று என்பது ஆதி காலம்

இன்று அது ஒரு வித பொய் வாழ்வாக, நாடகமாக, இயற்கைக்கு மாறான விடயமாக பார்க்கப்படுகின்றது 

நான் அதிலிருந்து விடுபட்டுள்ளேன் (எனது மகளின் திருமணத்திற்கு பின்)

நானும் ஒன்றும் கொள்கைக்காக அல்ல - ஒரு வாக்குறுதியை, போகும் வரை மீள, மீள நினைவுபடுத்தி கொண்டே இருந்த ஒருவருக்காக மட்டுமே. எப்படி இருக்கும் என்று தெரியாததால் - அதிகம் இழந்த உணர்வும் இல்லை.

மகனுக்கு வயது குறைவு என்பதால் இப்போதைக்கு குடிப்பது நிலை தவற வைக்கும் என்பதை சொல்லி - குடியாதே என சொல்லி வைத்துள்ளேன்.

குடிக்க போவதாகின் சொல்லி விட்டு குடிக்கும் அளவில்தான் எம் உறவு இருப்பதாக நம்புகிறேன். மிச்சம் அல்லா விட்ட வழி🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எனது தகப்பனார் கோபுரத்தில் இருந்து குடியால் குடிசைக்கு வந்தவர். அந்த ஒரு பாடத்தை தவிர குடிக்கக்கூடாது என்று பெற்றோர் உடன் பிறந்தோர் உட்பட எவரும் என்னிடம் சொன்னதில்லை

ஆனால் 55 வயதுவரை நான் குடி புகை தொட்டதில்லை

ஆனால் கிட்டத்தட்ட 4 தலைமுறை என்னைக் கண்டால் தமது ஆசைகளை தியாகம் செய்வதை தொடர்வது என் மனச்சாட்சிக்கு சரியாக படவில்லை. என் பேரனின் (பெறாமகனின் பிள்ளை) திருமணத்தின் போது என்னை கொஞ்ச தயங்கி ஒழித்தான். நீயே தாத்தாவுக்கு ஊத்தி தா என்று ஆரம்பித்தேன். இப்பவும் பார்ட்டி குடி மட்டுமே. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

2. ""இது பொறுபின்மை இல்லை. just having a break from a stressful job. ஒவ்வொரு நாளும் வேலையை உதாசீனம் செய்துவிட்டு கும்மி அடித்தால் - அது பொறுப்பின்மை

இதை பொறுப்பின்மை என நினைப்பதுதான் பரம்பரை இடவெளி""

கோசான் video ஒன்றுமே பார்க்கவில்லை போல. பார்க்காமலே, வாசிக்காமலே கருத்துக்கூறுவதும் பொறுப்பின்மையே 🤣

""இல்லை - வசந்தி வாயர்கள் புட்ஸ்சுக்கு மண்சுமக்கும், பினிஷ், தமிழ் இதர மக்கள்🤣

4. பின்லாந்தின் ஒரு சரார். மற்றும் பின்லாந்தில் காலம் காலமாகவே கொஞ்சம் அதிகமாக இருக்கும் ரஸ்ய அனுதாபிகள், மற்றும் புட்ஸ் கவர்சியால் பீடிக்கப்பட்டவர்கள்.""

அடடே, அப்பிடியென்றால் பின்லாந்திலும் ரஸ்ய வழித்தோன்றல்கள் இருக்கின்றனரா ?  சொல்லவேயில்ல...🤣

ஆக பின்லாந்திலும் இரஸ்யா செல்வாக்குச் செலுத்த நியாயமான காரணங்கள் உண்டே என்கிறீர்கள் 👍🏽

(அதுசரி, பின்லாந்திலுள்ள இரஸ்ய வழித்தோன்றல்களு நீங்கள் கூறும் சனநாயக உரிமை இருக்கிறதா? அப்படி இருந்தால், அவர்கள் தங்கள் பிரதமரை விமர்சனம் செய்வதை நீங்கள் ஏன் சாடுகிறீர்கள்? அவர்கள் தங்கள் பிரதமர் எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் என்ன  தவறு? 

5. ""நான் எந்த குமரையும் வளக்கவில்லை. ஏனையோரின் குமரையும் பொத்தி வளவுங்கோ எண்டு சொலவதில்லை. அதே போல் பினிஷ் பிரதமர் 36 வயது மனுசி. குமர் அல்ல 🤣. அவர் குமராய் இருந்த போது கூட அவர் எப்படி வளர்ந்தார் என்பது அவருரதும் குடும்பத்துனதும் விடயம். ""

அப்படின்னா என்னாத்துக்கு பொரிஸ் ஜோண்சனை மட்டும் அடக்கம் செய்த நாளில் தண்ணி அடித்தவர், கொரோனா பாட்டியில் தண்ணி அடிச்சவர் எண்டு சொல்லி வீட்ட அனுபினீக.? அது அவரது தனிப்பட்ட விடயம் இல்லீங்களா ? சாதாரண திருமணங்களுக்கே மணமக்கள் பொறுப்புள்ளவர்களா எனப் பார்க்கும்போது, ஒரு நாட்டின் பிரதமர் எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு இருப்பது எப்படிப் பிழையாகும்? 

"நான் தண்ணியடிப்பதில்லை. என் மகனுக்கும் தண்ணியடிக்காதே எண்டுதான் சொல்லி உள்ளேன். அதற்காக தண்ணியடிப்பவன், பார்ட்டியில் டான்ஸ் ஆடுபவன் பிரதமர் பதவியை தரம் குறைத்து விட்டார் என சொல்லமாட்டேன். "

கோசான், முதலில் கூறியதுதான், அந்த வீடியோக்களை திரும்பவும்  பாருங்கள். அவர் எப்படி filtering செய்கிறார் என்று பாருங்கள். புரியும்.  

என் தனிப்பட்ட ஒழுக்க விழுமியங்கள் வேறு. நாம் வாழும் ஐரோப்பிய நாட்டின் பொதுப்பட்ட ஒழுக்க விழுமியங்கள்  வேறு. 

இதற்கு பினிஸ் மக்கள் பதில் சொல்வார்கள். 

விளங்கநினைபவனுக்கான பதில் எனிலும் - என் கருத்தை சொல்லி விடுகிறேன் (free தான்🤣).

1. "1980 களில் வந்த மண் சுமந்த மேனியர் நாடகம் - சைவப் புராணத்தில் கிழவிக்கு சிவன் பிட்டுக்கு மண் சுமந்த கதையில் - உருவகம்."

பாஸ், அது எனக்கு ஏலவே தெரிந்த விடயம்தான். Jaffna Stanley College ல் பார்த்துவிட்டு புரூடி லேனுக்குள்ளால அழுதுகொண்டு வந்த அந்த நாட்கள் இன்னும் வேதனை தருபவை. 

2. ஒரு தனி மனிதன், ஏலவே இருக்க்கும் சட்டத்தை பேராசையால் மாற்றி - சாகும் வரை தலைவராக தன்னை நிலை நிறுத்துவது எந்த கலாசாரத்தில் நடந்தாலும் அது இழி செயலே.

அது ""நாம் வாழும் ஐரோப்பிய நாட்டின் பொதுப்பட்ட ஒழுக்க விழுமியங்கள்  வேறு. "" என்று ஏற்கனவே மேலே நீங்கள் கூறியதுதான் எனது பதிலும்.  

விரும்பினால் வைத்திருப்பினம், இல்லையென்றால் வீட்டை அனுப்புவினம். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Das Problem an diesem Foto: Es wurde im Amtssitz der finnischen Regierungschefin aufgenommen

ஆளுக்கு தண்ணியிலை கண்டம் இல்லை. கன விசயங்களிலை கண்டம் போல கிடக்கு.....😂
இனி நேட்டோவாலையும் காப்பாத்தேலாது கண்டியளோ......😎 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

Das Problem an diesem Foto: Es wurde im Amtssitz der finnischen Regierungschefin aufgenommen

ஆளுக்கு தண்ணியிலை கண்டம் இல்லை. கன விசயங்களிலை கண்டம் போல கிடக்கு.....😂
இனி நேட்டோவாலையும் காப்பாத்தேலாது கண்டியளோ......😎 

கு.சா, 

உவர் பிரதமர் இந்தப் பாட்டியில் பாடகர் ஒருவருடன் அடிக்கும் கூத்தையும் உங்க போட்டுவிடுங்க.. பார்க்காதவர்கள் பார்க்கட்டும். 

அதன் பின்னர், தலைமைக்கு முதிர்ச்சி தேவையா இல்லையா என்பது பற்றிப் பேசலாம். 😉

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

இந்த செய்தி இனி பழம் செய்தி என்பதால் - மேலே நீங்கள் சொன்ன பல விடயங்கள் பின்லாந்து-ரஸ்யா இடையான நீண்ட நெடிய உறவு (பின்லாந்து பக்கம் இருந்து போன வைக்கிங் கிழக்கில் தாம் கண்ட தேசத்துக்கு கொடுத்த பெயர்தான் “ரஸ்”) - உங்களுக்கு புரியவில்லை என்பதை சொல்வதாலும்,

எல்லாவற்றையும் விட உங்களுக்கு இன்னொரு திரியில் வேலைப்பளு அதிகமாகி விட்டதாலும் 🤣

இத் திரியில் இருந்து விடை பெறுகிறேன்.

அடுத்து அதிக குறட்டை விட்டு நாட்டுக்கு அபகீர்த்தியை உருவாக்கிய சுவீடிஷ் பிரதாமர் என்ற திரியில் சந்திப்போம்🤣. RT யும் கையுமாக.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

எதற்கும் நானும் ஒரு Sun வேண்டி வாசிக்கிறேன். நன்றி. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

எதற்கும் நானும் ஒரு Sun வேண்டி வாசிக்கிறேன். நன்றி. 

🤣

🤣 RT யின் அபிமான வாசகருக்கு Sun க்கு மாறுவது - கொக்காகோலாவில் இருந்து பெப்சிக்கு மாறுவதை போலத்தான். ஜாமயுங்கள்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

அனுபவசாலி கூறும்போது அப்பரசன்டிஸ் கேட்டுத்தானே ஆக வேண்டும். 🤣

53 minutes ago, goshan_che said:

🤣 RT யின் அபிமான வாசகருக்கு Sun க்கு மாறுவது - கொக்காகோலாவில் இருந்து பெப்சிக்கு மாறுவதை போலத்தான். ஜாமயுங்கள்🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Kapithan said:

கு.சா, 

உவர் பிரதமர் இந்தப் பாட்டியில் பாடகர் ஒருவருடன் அடிக்கும் கூத்தையும் உங்க போட்டுவிடுங்க.. பார்க்காதவர்கள் பார்க்கட்டும். 

அதன் பின்னர், தலைமைக்கு முதிர்ச்சி தேவையா இல்லையா என்பது பற்றிப் பேசலாம். 😉

ஐயோ கடவுளே அது மட்டும் என்னாலை ஏலாது.எனக்கு ஏற்கனவே இஞ்சை செம்புள்ளி கரும்புள்ளி. நிலமை அப்பிடியிருக்க அந்த கண்கொள்ளா காட்சியையும் கொண்டுவந்து ஒட்டினன் எண்டால் என்ரபாடு கோவிந்தா தான்.

யாழ்களவிதி அனுமதிக்காது, மன்னிக்கவும்.😎

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

Das Problem an diesem Foto: Es wurde im Amtssitz der finnischen Regierungschefin aufgenommen

ஆளுக்கு தண்ணியிலை கண்டம் இல்லை. கன விசயங்களிலை கண்டம் போல கிடக்கு.....😂
இனி நேட்டோவாலையும் காப்பாத்தேலாது கண்டியளோ......😎 

4 hours ago, goshan_che said:

இத் திரியில் இருந்து விடை பெறுகிறேன்.

அடுத்து அதிக குறட்டை விட்டு நாட்டுக்கு அபகீர்த்தியை உருவாக்கிய சுவீடிஷ் பிரதாமர் என்ற திரியில் சந்திப்போம்🤣. RT யும் கையுமாக.

எனக்கென்னவோ…. @குமாரசாமி அண்ணை இணைத்த காணொளியை பார்த்த பின்பு,
பின்லாந்து பிரதமருக்கு… இதுக்கு மேலை, வெள்ளை அடிக்க ஏலாது என்று…
@goshan_che நழுவுகிறார் போலை கிடக்கு. ஆளை இழுத்துப் பிடியுங்க. 😁 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, தமிழ் சிறி said:

எனக்கென்னவோ…. குமாரசாமி அண்ணை இணைத்த காணொளியை பார்த்த பின்பு,
பின்லாந்து பிரதமருக்கு… இதுக்கு மேலை, வெள்ளை அடிக்க ஏலாது என்று…
@goshan_che நழுவுகிறார் போலை கிடக்கு. ஆளை இழுத்துப் பிடியுங்க. 😁 😂 🤣

நான், அவர் எழுதினவுடனை   பாத்திட்டு  கொடுப்புக்கை சிரிச்சுப்போட்டு பியர் வாங்க போட்டன்.
அவர் எழுதினதுக்கு பதில் எழுதி மனதை நோகடிக்க நான் என்ன இரக்கமிலாதவனே? 😂

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயத்தில் இருந்து

“இவர் ஏன் இப்போ போகிறார்?”

என்று ஏனையோர் கேட்கும் போது விலகி விட வேண்டும்.

“இவர் ஏன் இன்னமும் போகவில்லை”

என கேட்கும் வரை தாமதிக்க கூடாது🤣.

இந்த திரியில் செய்தி ஓய்ந்து விட்டது. பின்லாந்து கூட அடுத்த செய்திக்கு தாவி விட்டது.

இனி இங்கே ஏட்டிக்கு போட்டியான நக்கலும் சீண்டலுமே நீளும்.

அது எல்லாருக்கும் அசெளகரியம் ( அப்படி தொடராதது இருவருக்கு ஏமாற்றம் 🤣).

1 hour ago, தமிழ் சிறி said:

எனக்கென்னவோ…. @குமாரசாமி அண்ணை இணைத்த காணொளியை பார்த்த பின்பு,
பின்லாந்து பிரதமருக்கு… இதுக்கு மேலை, வெள்ளை அடிக்க ஏலாது என்று…
@goshan_che நழுவுகிறார் போலை கிடக்கு. ஆளை இழுத்துப் பிடியுங்க. 😁 😂 🤣

56 minutes ago, குமாரசாமி said:

நான், அவர் எழுதினவுடனை   பாத்திட்டு  கொடுப்புக்கை சிரிச்சுப்போட்டு பியர் வாங்க போட்டன்.
அவர் எழுதினதுக்கு பதில் எழுதி மனதை நோகடிக்க நான் என்ன இரக்கமிலாதவனே? 😂

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

ஒரு விடயத்தில் இருந்து

“இவர் ஏன் இப்போ போகிறார்?”

என்று ஏனையோர் கேட்கும் போது விலகி விட வேண்டும்.

“இவர் ஏன் இன்னமும் போகவில்லை”

என கேட்கும் வரை தாமதிக்க கூடாது🤣.

இந்த திரியில் செய்தி ஓய்ந்து விட்டது. பின்லாந்து கூட அடுத்த செய்திக்கு தாவி விட்டது.

இனி இங்கே ஏட்டிக்கு போட்டியான நக்கலும் சீண்டலுமே நீளும்.

அது எல்லாருக்கும் அசெளகரியம் ( அப்படி தொடராதது இருவருக்கு ஏமாற்றம் 🤣).

பின்லாந்து இன்னும் அடுத்த செய்திக்கு தாவவில்லை. இன்னும் முதன்மை செய்தியாகவே இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

பின்லாந்து பிரதமர் உக்கிரேன் தேசிய தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் உக்ரைன் மற்றும் வீர உக்ரேனியர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் துணிச்சலானவர் கட்டுக்கடங்காதவர். நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். நாங்கள் விலகி போக மாட்டோம். உக்ரைனையும் அதன் மக்களையும் நாங்கள் மறக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பின்லாந்து பிரதமர் உக்கிரேன் தேசிய தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் உக்ரைன் மற்றும் வீர உக்ரேனியர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் துணிச்சலானவர் கட்டுக்கடங்காதவர். நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். நாங்கள் விலகி போக மாட்டோம். உக்ரைனையும் அதன் மக்களையும் நாங்கள் மறக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

உளமார வாழ்த்துதல் எப்போதும் மேன்மையான விடயமே. 

ஆனால் இந்த வாழ்த்து, வேள்விக்கு வளர்த்த ஆட்டை ஐயனாரிடம் கொண்டுபோகும் வழியில், உண்ணுவதற்கு வேப்பிலையும் கொடுத்து Hi யும் சொல்வது போலாகும்.

அதுசரி, வேள்வி ஆட்டின் .........கு யாருக்கு ? USக்கா, UK க்கா அல்லது Finland க்கா ?

😏

  • கருத்துக்கள உறவுகள்

மதுபோதை சர்ச்சை அடங்குவதற்குள் ஆபாச புகைப்பட சர்ச்சையில் சிக்கிய ஃபின்லாந்து பிரதமர் சன்னா மரின்..!!

ஃபின்லாந்து: ஃபின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது வீட்டில் தோழிகளுடன் மதுபோதையில் ஆட்டம் போட்ட சர்ச்சை அடங்குவதற்குள் அவர் ஆபாச புகைப்பட சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார்.

34 வயதில் ஃபின்லாந்தின் பிரதமராக பதவியேற்று உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த பிரதமர் சன்னா மரின், அண்மையில் தனது வீட்டில் தோழிகளுடன் மதுவிருந்தில் பங்கேற்று  ஆட்டம் போட்டார். அவர் போதை பொருட்களையும் பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் சன்னா மரின் பதவி விலக வேண்டும் என ஃபின்லாந்து எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின.

sanna.jpg

சன்னாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது உறுதியானது. இந்த நிலையில் அவரது வீட்டில் சன்னாவின் தோழிகள் இரண்டு பேர் மேலாடைகளை கழற்றி எறிந்த நிலையில், முத்தம் கொடுத்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. அந்த புகைப்படத்தில் சன்னா மரின் இல்லை என்றாலும் அதற்கு சன்னா மரின் மன்னிப்பு கோரியுள்ளார்.

பொதுவாழ்க்கையில் உள்ள உயர்ந்த பதவியில் இருக்கும் சன்னா மரின், கண்ணியம், பொதுவெளி நாகரீகம் பற்றி அறியாதவர் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஏற்கனவே சன்னா வெளியிட்ட தனது கவர்ச்சி புகைப்படங்களையும் பலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

https://thinakkural.lk/article/203078

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nunavilan said:

பட/வீடியோ ஆதாரம் இன்றி இப்படி அபாண்டமாக ஒரு பெண்ணை குற்றம் சொல்லக்கூடாது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
58 minutes ago, nunavilan said:

முத்தம் கொடுத்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. அந்த புகைப்படத்தில் சன்னா மரின் இல்லை என்றாலும் அதற்கு சன்னா மரின் மன்னிப்பு கோரியுள்ளார்.

சன்னா மரின் அந்த படத்தில் தான் இல்லையென்றால் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?

சான்னாவின் முழி அப்ப தொடக்கமே சரியில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்லாந்து பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

https://www.bild.de/politik/ausland/politik-ausland/schluss-mit-lustig-kuss-foto-koennte-sanna-marin-die-wahl-kosten-81115246.bild.html

A new video of the Prime Minister of Finland was leaked in the middle of a  big party - Zyri

  • கருத்துக்கள உறவுகள்
On 23/8/2022 at 23:57, பிரபா சிதம்பரநாதன் said:

உங்களுக்கு தெரிந்திருக்கும் எங்களுடைய முன்னாள் PM Bob Hawkeம் அதிக குடிப்பழக்கமும் ஒரு womaniser என்றும் ஆனாலும் அவருடைய அரசாங்கமே அவுஸ்ரேலிய பொருளாதாரத்தை நவீனமயக்கியதில் அதிக பங்கு வகித்தது என்றும் பல சீரத்திருத்தங்களை கொண்டு வந்தது கூட Bob Hawkeதான் என்று. 

நன்றி சகோதரி, எனக்கு இந்த பிரதமர் பற்றி அறிந்திருக்கவில்லை, அவுஸ்ரேலியா புதிய பொருளாதார சவால்களுக்கு முகம்கொடுக்கக்கூடிய வகையில் இன்னமும் தனது கட்டுமானங்களை ஏற்படுத்தவில்லை என கருதுகிறேன்.

Digital echo system புதிய பொருளாதாரத்திற்கு அடிப்படையாகவுள்ளது, கடந்த காலங்களில் பெருமளவில் இதற்காக அரசு செலவு செய்யவில்லை, அதற்கு அடிப்படைவாத சித்தாந்தம் கொண்ட அரசியல் சிந்தனை கொண்டவர்களினது தொடர்ச்சியான எதிர்ப்புகள் காரணம் என கருதுகிறேன்.

வேகமான இணையவசதியினை உருவாக்க ஒரு கட்சி முயன்ற போது ஏற்பட்ட எதிர்ப்புகளை குறிப்பாக சொல்லலாம்.

அரச பாதீட்டில் கிட்டத்தட்ட 1 பில்லியன் அளவிலேயே Digital echo system ஆக செலவு செய்யப்படுகிறது.

அதுவும் கோவிட் உருவாக்கிய நிலை.

On 23/8/2022 at 23:57, பிரபா சிதம்பரநாதன் said:

இங்கே இவர் இளவயதினராகவும் பெண்ணாகவும் இருப்பதால்தான் சாதரான பிரஜையும் பிரதமரும் ஒன்றா எனத் தொடங்கி பெரிதுபடுத்துகிறார்கள்

இது ஒரு சிக்கலான விடயம் என நினைக்கிறேன்.

ஒவ்வொருவரின் நம்பிக்கைகளுக்கும் பின்னால் இருப்பது Perception.

இதில் பெருமளவு தாக்கத்தினை தீர்மானிப்பது எம்மை சூழ உள்ள சமூகம்தான், நாங்கள் வாழ்ந்த சமூகத்திற்கும் இப்போது வாழுகின்ற சமூகத்திற்கும் இடைவெளியுள்ளது ஆனாலும் இவ்வாறு நினைப்பதை தவறு என்று சொல்லவில்லை. இதனை பார்க்கும் கோணத்திலே வேணுமென்றால் சரி தவறு என இருக்கலாம் என கருதுகிறேன்.

ஒரு நடிகர் தனது வார இறுதி ஓய்வினை தனது மலை உச்சியில் உள்ள தனது விடுமுறை வீட்டில் கழிப்பார், ஒரு வார இறுதியில் குறுகலான அந்த மலைப்பாதையினூடாக தனது விடுமுறை வீட்டிற்கு வேகமாகப்பயணம் செய்துகொண்டிருந்தார்.

ஆளரவமில்லாத வீதியாக இருந்தமையால் அவரால் வேகமாகப்பயணிக்க முடிந்தது.

எதிர்பாராத விதமாக அவர் செல்லும் திசைக்கு எதிர் திசையில் ஒரு கார் வேகமாக அதே நேரம் நடிகரது கார் செல்லும் வீதிக்குள்ளாக வந்தது (தவறான பாதையில்).

தனது வண்டியினை நடிகர் உடனடியாக நிறுத்தினார், அதே நேரம் எதிர்திசையில் வந்த காரும் நிறுத்தப்பட்டமையால் இறுதிநேரத்தில் விபத்து தடுக்கப்பட்டது.

எதிர்காரில் இருந்த பெண்மணி நடிகரைப்பார்த்து "பன்றி" எனக்கத்தினார், நடிகருக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை, எதிரில் இருந்த கார் அவரது காரைக்கடக்கும் போதுதான் உணர்ந்தார் தவறான பாதையில் வந்துவிட்டு தன்னை பன்றி எனக்கூறுகிறாள் என உணர்ந்தவர், பதிலுக்கு கத்தினார் " தெரியுது  யார் பன்றி என".

கோபமாக காரை வேகமாக எடுத்துக்கொண்டு சென்றபோது பாதை வளைவில் நின்ற ஒரு பன்றியின் மேல் மோதி கார் விபத்துக்குள்ளானானது.

சாதாரணமாக ஆங்கிலம் பேசுபவர்களிடையே வித்தியாசமான பழக்க வழக்கம் அதனால உருவான வேறுபட்ட Perception இருக்கும்.

நான் அவுஸ்ரேலியா வராமல் இருந்திருந்தால்  இந்த நகைச்சுவையினை புரிந்து கொண்டிருக்கமுடியாது.

அந்த பெண்மணி ஒஸ்ரியாவினை சேர்ந்தவர், இவர் தவறாக அவுஸ்ரேலியர் என கருதிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/8/2022 at 03:41, Kapithan said:

அப்படின்னா என்னாத்துக்கு பொரிஸ் ஜோண்சனை மட்டும் அடக்கம் செய்த நாளில் தண்ணி அடித்தவர், கொரோனா பாட்டியில் தண்ணி அடிச்சவர் எண்டு சொல்லி வீட்ட அனுபினீக.? அது அவரது தனிப்பட்ட விடயம் இல்லீங்களா ? சாதாரண திருமணங்களுக்கே மணமக்கள் பொறுப்புள்ளவர்களா எனப் பார்க்கும்போது, ஒரு நாட்டின் பிரதமர் எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு இருப்பது எப்படிப் பிழையாகும்? 

கற்பஸ் இந்த செய்தி பழையது என்று அன்று கடந்து போனாலும் - இன்று வசியின் பதிலை வாசித்த பின் உங்கள் பதிவையும் திரும்பி வாசித்தேன்.

அதில் ஒரு விடயத்தை விளங்கபடுத்தி விடுவது நல்லம் என நினைக்கிறேன்.

ஜோன்சன் செய்தது கொவிட் லாக் டவுன் சட்டத்தை மீறியது. அவருக்கு பொலிஸ் fine அடிச்ச பின் தான் அவர் நீக்கப்பட்டார். பிரதமர் தான் கொண்டு வந்த சட்டத்தை தானே மீறினால் நீக்காமல் கொஞ்சுவார்களா?

ஆனால் இங்கே பினிஷ் பிரதமர் எந்த சட்டத்தையும் மீறவில்லை. சாதரணமான ஒரு வார இறுதியில் நண்பர்களோடு தண்ணி அடித்து நடனமாடினார்.

இந்த வித்தியாசத்தை கூடவா உங்களால் விளங்கி கொள்ள முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

நீங்கள் 

உங்கள் தலீவர் தண்ணியடிக்கலாம், கூத்தடிக்கலாம், கஞ்சா அடிக்கலாம்  எண்டு சொன்னால் அதற்கு நான் ஒன்று செய்ய முடியாது. 

🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.