Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைனில் இருந்து... ரஷ்யா வரும் மக்களுக்கு,  நிதியுதவி: புடின் அறிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, விசுகு said:

ஆபிரிக்கர்களுடன் அதிகம் பழக கிடைத்ததன் அனுபவப்படி 

மிகக் கறுப்பான தோல் குறித்து அவர்கள் எப்போதும் தாழ்வுமனத்துடன் பேசியதே கிடையாது அண்ணா.  நம்மவர்???

இன பேத,மத பேத,நிற பேத பிரச்சனைகள் நாடுகளுக்கேற்ப வேறுபடும். ரஷ்யாவில் நிறங்கள் அதிசயம். பழக்கமில்லை. பழகவும் இல்லை.
இங்கிலாந்தும் பிரான்ஸ்ம் பல நாடுகளை கொலனியாக வைத்திருந்தவர்கள். பல நாட்டு மக்களுடன் பழகியவர்கள்.

இருந்தாலும் பிரான்ஸ்ம்  ஆங்கிலேயர்களும் ஆரம்பகாலங்களில் இனவாதம் நிறவாதம் பிடித்தவர்கள் தான்.
 
  • Replies 58
  • Views 2.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இறுதி போர் காலத்தில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறலகள், போர் குற்றங்களை விசாரிக்க ஒரு சுயாதீனமானதும், காத்திரமனாதும், சர்வதேச நாடுகள், ஐநாவின் அங்கீகாரம் பெற்றதுமான விசாரணை பொறிமுறை அவசியம் என ரஸ்யா பெடரேசன் வலியுறுத்துகிறது.

அத்தோடு, இலங்கை இனைப்பிரச்சனைக்கு, அதிகாரபரவலாக்க அடிப்படையில், அனைத்து இன மக்களும் சமமாக நடத்தபடும் தீர்வொன்றை எட்ட வேண்டிய அவசியத்யையும் ரஸ்யா பெடரேசன் வலியுறுத்துகிறது.

11 minutes ago, குமாரசாமி said:

வெற்று அறிக்கை என்றால் என்ன சார்?

வெற்று அறிக்கை என்றால் செயல் அதிகம் இல்லாமல் வெறும் வார்த்தகைளால் சொல்லுவது.

2009 இல் இருந்து மேற்கு நாடுகள் நம் விடயத்தில் செய்வது.

மேலே அதே போல் ரஸ்யாவுக்கும் ஒரு அறிக்கை தயாரித்து தந்துள்ளேன்.

எப்போ வெளியீடு? புட்டினிடம் கேட்டு சொல்லவும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, goshan_che said:

இலங்கையில் இறுதி போர் காலத்தில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறலகள், போர் குற்றங்களை விசாரிக்க ஒரு சுயாதீனமானதும், காத்திரமனாதும், சர்வதேச நாடுகள், ஐநாவின் அங்கீகாரம் பெற்றதுமான விசாரணை பொறிமுறை அவசியம் என ரஸ்யா பெடரேசன் வலியுறுத்துகிறது.

அத்தோடு, இலங்கை இனைப்பிரச்சனைக்கு, அதிகாரபரவலாக்க அடிப்படையில், அனைத்து இன மக்களும் சமமாக நடத்தபடும் தீர்வொன்றை எட்ட வேண்டிய அவசியத்யையும் ரஸ்யா பெடரேசன் வலியுறுத்துகிறது.

வெற்று அறிக்கை என்றால் செயல் அதிகம் இல்லாமல் வெறும் வார்த்தகைளால் சொல்லுவது.

2009 இல் இருந்து மேற்கு நாடுகள் நம் விடயத்தில் செய்வது.

மேலே அதே போல் ரஸ்யாவுக்கும் ஒரு அறிக்கை தயாரித்து தந்துள்ளேன்.

எப்போ வெளியீடு? புட்டினிடம் கேட்டு சொல்லவும்.

இலங்கத்தமிழர் விடயத்தில் இந்தியாவை மீறி எதுவுமே நடந்துவிடப்போவதில்லை என சிறு குழந்தைக்கும் தெரியும். இந்தியா சொன்னால் புட்டினும் கேட்பார்.

முதல்ல உங்கள் மேற்குலகை தமிழர் இலங்கை விடயத்தில்  தலையிட்டு முடிக்கச்சொல்லுங்கள்.புட்டின் தடை போட மாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

இலங்கத்தமிழர் விடயத்தில் இந்தியாவை மீறி எதுவுமே நடந்துவிடப்போவதில்லை என சிறு குழந்தைக்கும் தெரியும். இந்தியா சொன்னால் புட்டினும் கேட்பார்.

இந்தியா சொன்ன பின்னும்தான் ஏனைய மேற்கு நாடுகள், இதையொத்த அறிக்கைகள் விடுகிறன?

ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வருகிறன?

ஆகவே இந்தியா சொல்லி புட்டின் கேட்கிறார் என்பது சின்ன பிள்ளைக்கு சொல்லும் சாட்டு அண்ணை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

இந்தியா சொன்ன பின்னும்தான் ஏனைய மேற்கு நாடுகள், இதையொத்த அறிக்கைகள் விடுகிறன?

ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வருகிறன?

ஆகவே இந்தியா சொல்லி புட்டின் கேட்கிறார் என்பது சின்ன பிள்ளைக்கு சொல்லும் சாட்டு அண்ணை.

வெற்று அறிக்கை...

10 வருசமாய் இலங்கைத்தமிழர் விசயத்திலை மேற்குலகு அடைகாக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

வெற்று அறிக்கை...

வெற்று அறிக்கை கூட வெளியிடாமல் இலங்கையில் எது நடந்தாலும் அதை “உள்நாட்டு விவகாரம் அதில் ரஸ்யா கருத்து கூறாது” என சொல்லும் அளவுக்கு புட்டின் பெளத்த-சிங்கள இலங்கையின் உற்ற தோழன்.

மேற்கு வெற்று அறிக்கை விடுகிறது

இந்தியா வாயளவில் ஆவது 13 ஐ வலியுறுத்தி அறிக்கை விடுகிறது

சீனா பருத்திதுறைக்கு வருகிறது, நல்லூரை பார்கிறது. எம்மேல் அவதானம் உண்டு என்பதையாவது சொல்கிறது.

ரஸ்யா - இலங்கையை பற்றி எது கேட்டாலும் - நோ கொமெண்ட்ஸ் - அது உள்நாட்டு விவகாரம்.

இலங்கைக்கு உலகில் பலரும் நண்பர்கள்தான்.

ஆனால் கேள்வியே கேட்காமல், 100% நம்பிக்கையோடு, கண்மூடித்தனமாக உலக அரங்கில் பெளத்த-சிங்கள இனவாத இலங்கையை ஆதரிக்கும் நாடு என்றால் - அது ரஸ்யாதான்.

ஆகவேதான் அறிக்கையும் தட்டச்சு செய்து தந்துள்ளேன். கேட்டுச்சொல்லவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@goshan_che

சீனா,இந்தியா பிராந்திய நாடுகள். மேற்குலகு உலகை தங்கள் காலடியில் வைத்திருக்க விரும்பும் நாடுகள்.அமெரிக்கா உலகை குழப்பத்தில் வைத்திருந்து குளிர்காயும் நாடு.

ரஷ்யா  இது எல்லாவற்றிலும் மாறுபட்ட நாடு. சீனா இந்தியாவைப்போல்  ரஷ்யா இலங்கைக்கு தோழமை நாடல்ல.

11 minutes ago, goshan_che said:

ரஸ்யா - இலங்கையை பற்றி எது கேட்டாலும் - நோ கொமெண்ட்ஸ் - அது உள்நாட்டு விவகாரம்.

இதை சுமந்தி  சொன்ன போது என்ன செய்தீர்கள்?

அது உள்நாட்டு விவகாரம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

@goshan_che

சீனா,இந்தியா பிராந்திய நாடுகள். மேற்குலகு உலகை தங்கள் காலடியில் வைத்திருக்க விரும்பும் நாடுகள்.அமெரிக்கா உலகை குழப்பத்தில் வைத்திருந்து குளிர்காயும் நாடு.

ரஷ்யா  இது எல்லாவற்றிலும் மாறுபட்ட நாடு. சீனா இந்தியாவைப்போல்  ரஷ்யா இலங்கைக்கு தோழமை நாடல்ல.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு வெளிவிவகார கொள்கை இருக்கும்.

அதேபோல

இலங்கை விவகாரத்தில் ஒவ்வொரு நாடும் ஒரு நிலைப்பாடு எடுக்க பிராந்திய, உலக ஆதிக்க நோக்கங்கள் உண்டு.

ஆனால் எந்த பிராந்திய நலனும், உலக ஆதிக்க நோக்கமும் தெற்காசியாவில் ரஸ்யாவுக்கு இல்லை - அப்படி இருக்க தொடர்ந்தும் இலங்கையை இம்மி பிசகாமல் ரஸ்யா ஆதரிக்க என்ன காரணம்?

ரஸ்யா மட்டும் அல்ல, கியூபா, பாலஸ்தீனம், ஈரான் இப்படி ஒரு சம்பந்தமும், உள் நோக்கமும் இல்லாமல் நட்பின் அடிப்படையில் மட்டும் இலங்கையை ஆதரிக்கும் நாடுகள் உண்டு.

இதுதான் உண்மை. ரஸ்யா இலங்கயின் பரம்பரை நண்பன். இலங்கையில் அதற்கு பிராந்திய, உலக ஆளுமை நோக்கம் ஏதும் இல்லை. நட்பு மட்டுமே.

இதை ஏற்காமல் இருக்க உங்களுக்கு நீங்களே பொய் சொல்ல ஆயிரம் காரணத்தை தேடலாம்.

ஆனால் உண்மை இதுதான்.

1 hour ago, குமாரசாமி said:

இதை சுமந்தி  சொன்ன போது என்ன செய்தீர்கள்?

அது உள்நாட்டு விவகாரம்.

சுமந்திரன் உள்நாட்டில் வெளிநாட்டு மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என்றார்.

உள் நாட்டு விவகாரம் என ரஸ்யா போல் அடிச்சு மூடவில்லை.

ஆனால் அதுவும் பிழை என்றுதான் எழுதியுள்ளேன்.

அப்போ,

ஈழத்தமிழருக்கு சுமந்திரனும், ரஸ்யாவும் ஒரே மாதிரியான நஞ்சு என்பதை ஏற்கிறீகள்?

எப்படி ஒரு நஞ்சை கடுமையாக எதிர்த்த படி,

அதே போன்ற இன்னொரு நஞ்சை கண்ணை மூடி கொண்டு பக்தி மேலிட ஆதரிகிறீர்கள்?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளுக்காக எழுதி மாயும் வித்துவான் ஏன் புலிகளை பயங்கரவாதிகள் ஆக்கியவர்களை ஆதரிக்கிறீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களே கொல்வார்களாம் அவர்களே பிரே பரிசோதனையும் செய்வினமாம். 

எல்லோரும் பிரேத பரிசோதனை செய்து அறிக்கை கொடுக்கப் போகினமாம். அதை நாங்கள் நம்ப வேண்டுமாம்.

🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kalyani said:

அதுக்கு முதலில் எம்மவர்களே இதை மேற்கு நாடுகளில் விதைத்தார்கள். இன்றும் புலிகளை இவ்வாறு சொல்வோர் தாயகத்திலும் இருக்கிறார்கள் 😭 

அங்கிருந்து தான் இதற்கான களை எடுத்தலை தொடங்கணும்?

46 minutes ago, Kapithan said:

அவர்களே கொல்வார்களாம் அவர்களே பிரே பரிசோதனையும் செய்வினமாம். 

எல்லோரும் பிரேத பரிசோதனை செய்து அறிக்கை கொடுக்கப் போகினமாம். அதை நாங்கள் நம்ப வேண்டுமாம்.

🤣

நம்புகிறோமோ இல்லையோ இது மட்டுமே இன்றிருக்கும் ஒரேயொரு துரும்பு 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஆனால் கேள்வியே கேட்காமல், 100% நம்பிக்கையோடு, கண்மூடித்தனமாக உலக அரங்கில் பெளத்த-சிங்கள இனவாத இலங்கையை ஆதரிக்கும் நாடு என்றால் - அது ரஸ்யாதான்.

அதன் காரணமாகவே சிங்களவர்கள் ரஷ்யா  உக்ரைனை ஆக்கிரமித்து போர் செய்தாலும் ரஷ்யாவை தீவிரமாக ஆதரித்து நிற்கின்றனர். ஆனால் மேற்குலக நாடுகளில் வாழ்கின்ற இலங்கை தமிழர்கள் தன்னையும் ரஷ்யாவையும் ஆதரிக்கின்றார்கள் என்று புரினுக்கு தெரியவந்தால் விழுந்து விழுந்து சிரிப்பார். எவ்வளவு அடிச்சாலும் இவர்கள் நன்றாக  தாங்குவார்கள் என்றும் நினைப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kalyani said:

மேற்கு நாடுகளுக்காக எழுதி மாயும் வித்துவான் ஏன் புலிகளை பயங்கரவாதிகள் ஆக்கியவர்களை ஆதரிக்கிறீர்கள்??

புலிகளை பயங்கரவாதிகள் மட்டும் ஆக்கவில்லை.

எமது மக்களை ஒரு குறு நிலப்பரப்பில் அநாதரவாக சூட்டுக்கு இலக்குகளா விட்டு விட்டு, லாவகமாக “நடவடிக்கைகளை நிறுத்தி” வெளியேறியவர்கள்தான் இவர்கள்.

என்ன நடக்கிறது என எடுத்து சொல்லி நாம் அவர்கள் அலுவலக வாசல்களில் நின்று கதறிய போதும், கைகளை பிசைந்தபடி தம்மால் எதுவும் முடியாதது போல நாடகமாடியவர்கள்தான் இவர்கள்.

இவர்கள் செய்த எதுவும் நெஞ்சை விட்டகலவில்லை. அவற்றை மறப்பதற்கும் இல்லை, மன்னிப்பதற்கும் இல்லை.

ஆகவேதான் இங்கே யாரும் மாண்புமிகு பைடன். கருணை தெய்வம் பொரிஸ் எண்டு எழுதுதுவதில்லை.

ஆனால் இவர்கள், 2009 ற்கு பின் நாம் பயன்படுத்த தக்க வகையில் (தம் சுய நலத்தில்) சிலதை செய்கிறார்கள்.

ஆனால் ரஸ்யா? இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் இலங்கையின் நண்பன் மட்டுமே.

இன்னும் விளக்கமான சூத்திரம் கீழே

1. ரஸ்யா புலிகளை பயங்கரவாதிகள் என்றுதான் எப்போதும் கருதியது

2. மேற்கு 1998 க்கு பின் புலிகளை பயங்கரவாதிகள் என்று கருதியது

3. ஈழத்தமிழர், விசாரணை, அதிகாரபகிர்வு, தீர்வு சம்பந்தமாக புலிகள் இருந்த போதும், இல்லாத போதும் ரஸ்யாவின் நிலைப்பாடு - அது இலங்கையின் உள் வீட்டு விவகாரம் நாம் கருத்து சொல்லவே முடியாது.

4. ஈழத்தமிழர், விசாரணை, அதிகாரபகிர்வு, தீர்வு சம்பந்தமாக புலிகள் இருந்த போதும், இல்லாத போதும் மேற்கின் நிலைப்பாட்டுக்கு இடையே கணிசமான வேறுபாடு உண்டு.

தற்போதைய மேற்கின் நிலைப்பாடு ரஸ்யாவின் நிலைப்பாட்டை விட எமக்கு பல மடங்கு அனுகூலமானது (அதை நயம்பட பாவிக்கும் தலைமை, ஊரிலும், வெளிநாட்டிலும் எமக்கு இல்லை என்பது எமது பிழை). 

ஆகவேதான் முன்னர் ஒரு முறை எழுதினேன் ஹிரோசிமா, நாகசாக்கிக்கு பின் ஜப்பான் கொண்ட அமெரிக்க அணுகுமுறையே நமக்கு ஏற்றது.

அதனால்தான் சொல்கிறேன் நான் மேலே கொடுத்துள்ள (மேற்கை போல) draft இன் அடிப்படையில் ரஸ்யாவை ஒரு அறிக்கை விட வையுங்கள். மிகுதியை பின்பு பார்க்கலாம்.

சும்மா வன்மத்திற்காக, எமது எதிரியை ஒரு போதும் கைவிடாத ஒரு நாட்டுக்கு ஆலவட்டம் பிடிப்பது சுத்த பைத்தியகாரத்தனம்.

நடந்தவற்றுக்கு வன்மம் தீர்ப்பதை விட, இனி நடப்பவற்றில் நமக்கு பயன்பட கூடியவர் யார் என கண்டு நடவுங்கள்.

சும்மா பைத்தியகாரதனமாக எம்மை தூதரக வளவுக்குள் கூட எடுக்காதோருக்கெல்லாம் ஆலவட்டம் பிடியாமல்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

ஒரு துரும்பு தெரியும் நிலை 

எதுவுமே தெரியாத இருண்ட நிலை

பாழுங்கிணற்றுக்குள் கிடப்பவனுக்கு...?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

ஒரு துரும்பு தெரியும் நிலை 

எதுவுமே தெரியாத இருண்ட நிலை

பாழுங்கிணற்றுக்குள் கிடப்பவனுக்கு...?

அதே. 

ஒவ்வொரு முறையும் ஜெனிவா போய் வரும் உங்கள் போன்றோருக்கு எது வளைய கூடிய கம்பி, எது ஒரு போதும், இம்மியளவும் அசையாத பாறாங்கல் என நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இது ஏன் கு.சா அண்ணை, சிறி அண்ணைக்கு விளங்கவில்லை என்பதுதான் எனக்கு விளங்கவில்லை. சும்மா கோவத்தில் அல்லது பகிடிக்காக எழுதுகிறார்களோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

சும்மா கோவத்தில் அல்லது பகிடிக்காக எழுதுகிறார்களோ தெரியவில்லை.

ஆரம்பத்திலேயே நான் இது பற்றி எழுதிவிட்டேன்

அவர்களை நாம் அறிந்தது இவ்வளவு தானா என்று?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

இது ஏன் கு.சா அண்ணை, சிறி அண்ணைக்கு விளங்கவில்லை என்பதுதான் எனக்கு விளங்கவில்லை. சும்மா கோவத்தில் அல்லது பகிடிக்காக எழுதுகிறார்களோ தெரியவில்லை.

8 hours ago, விசுகு said:

ஆரம்பத்திலேயே நான் இது பற்றி எழுதிவிட்டேன்

அவர்களை நாம் அறிந்தது இவ்வளவு தானா என்று?

என்னைப்  பொறுத்தவரையில்... நீங்கள் ஆயிரம் சொன்னாலும்,
உக்ரேன் பெண் விமானிகள்... செஞ்சோலையில் குண்டு போட்டு..
எமது மணவச் செல்வங்களை... கொலை செய்ததை, 
எந்தக் காலத்திலும் மன்னிக்கவோ, மறக்கவோ முடியாது.  😧

@goshan_che@விசுகு...  உங்களுக்கு அந்த உணர்வு இல்லாமல், 
உக்ரேனுக்கு வக்காலத்து வாங்குவதைத்தான்.. என்னால், புரிந்து கொள்ள முடியவில்லை.
 😮

   @குமாரசாமி அண்ணைக்கும் இதே காரணம் தான், இருக்கும் என நினைக்கின்றேன்.
அவருக்கு  வேறு காரணம் இருந்தால்,  நிச்சயம் சொல்வார் என நம்புகின்றேன். 😎

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

அதில் எந்த மாற்றமும் இல்லை சிறி 

அதையும் தாண்டி இந்தியா சீனா ரசியா என்ற நாடுகள் இருக்கவே கூடாது என்பது பட்டபாடங்கள் தரும் பாடம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

உங்கள் உணர்வும் கோபமும் நியாயமானதே. எமக்கும் அது உண்டு. ஆனால்,

1. அதில் ஈடுபட்டது கூலி படையினர். உதாரணமாக “புளொட் எம்மை அடித்தபடியால் எல்லா ஈழதமிழரும் என் விரோதிகள்” என ஒரு மாலை தீவு ஆள் சொன்னால் அது எப்படியோ அதை போலதான் இந்த கூலி விமானிகளுக்காக உக்ரேனை வெறுப்பதும்.

2. இந்த கூலி விமானிகள் போவதை உக்ரேன் அரசு தடுக்கவில்லை என்ற கோபமும் நியாயமானதே. ஆனால் அப்போ அங்கே இருந்தது ரஸ்ய சார்பு அரசு. இலங்கையில் உக்ரேன் கூலி விமானிகள் செய்தவை எல்லாம் ரஸ்யாவின் அனுசரணையுடனே நடந்தது.

ஆகவே உங்கள் கோபம் இப்போ இருக்கும் புதிய உக்ரேன் அரசு மீதல்லாமல் - அன்று இருந்த உக்ரேன் அரசுடன் சேர்ந்து எம்மை வஞ்சித்த - அன்றும், இன்றும் இருக்கும் ரஸ்ய அரசு மீதுதான் இருக்க வேண்டும்.

உங்கள் கோபம் நியாயமானது ஆனால், நீங்கள் எய்தவன் இருக்க அம்பை நொந்தால் கூட பரவாயில்லை, அம்பு செய்த மரத்தை, அந்த மரம் இருந்த காட்டை நோவுகிறீர்கள். எய்தவனை புகழ்ந்து பாடவும் செய்கிறீர்கள்.

பிகு

இதை நீங்களோ, கு சா அண்ணையோ மனமார ஏற்றாலும் இனி யாழில் பின் வாங்க மாட்டீர்கள் என்பதும் தெரியும். 

புட்டின் உக்ரேனில் இறங்கியது போல, அமெரிக்கா வியட்னாமில் இறங்கியது போல் - இப்போ உங்களுக்கு நீங்கள் இந்த போரில் பிழையான பக்கத்தை ஆதரித்து விட்டீர்கள் என்பது விளங்கினாலும், இனி பின்வாங்க முடியாது என நினைக்கிறேன்.

என் கருத்து தப்பாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அதில் எந்த மாற்றமும் இல்லை சிறி 

அதையும் தாண்டி இந்தியா சீனா ரசியா என்ற நாடுகள் இருக்கவே கூடாது என்பது பட்டபாடங்கள் தரும் பாடம் 

இந்தியா சர, சீனாவும், ரஸ்யாவும் ஏன் இருக்கப்படாது ? 

போதிய விளக்கம் தருக ?

(15 புள்ளிகள்)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இந்தியா சரி, சீனாவும், ரஸ்யாவும் ஏன் இருக்கப்படாது ? 

போதிய விளக்கம் தருக ?

(15 புள்ளிகள்)

அதே. இவர்களைவிட கேவலமாக நடந்து கொண்டவர்கள் அமெரிக்காவும், மேற்கும், இஸ்ரேலும்!! அவர்களை ஒன்றும் சொல்லவில்லையே?? விசுவாசமாக்கும்???  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இந்தியா சர, சீனாவும், ரஸ்யாவும் ஏன் இருக்கப்படாது ? 

போதிய விளக்கம் தருக ?

(15 புள்ளிகள்)

மனித குலத்திற்கு எதிரானவர்கள்

ஐனநாயக பண்புகள் எதுவும் அற்றவர்கள்

(இது எனது நிலைப்பாடு மட்டுமே)

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

மனித குலத்திற்கு எதிரானவர்கள்

ஐனநாயக பண்புகள் எதுவும் அற்றவர்கள்

(இது எனது நிலைப்பாடு மட்டுமே)

விசுகர் அறிய....

எங்களது தமிழ் மக்கள் தொகை 25 இலட்சம் இலங்கையில் இருக்கும் 10 இலட்சத்துக்கும் மேல் வெளிநாட்டில் அதிலும் கிட்டத்தட்ட 75%இளம் சந்ததிக்கு தமிழ் பற்றியும் தமிழ் ஈழம் பற்றியும் துளியும் அக்கறையில்லை    இலங்கையில் இருக்கும் தமிழரில்  25 க்கு மேற்பட்ட பிரிவுகள் உண்டு    இப்படிப்பட்ட நிலையில் நீங்கள் எண்ணுவது போல் உலகில் அரை பங்கு மக்கள் தொகையை கொண்ட இந்தியா சீனா ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளையும்  இல்லாமல் செய்ய முடியாது ..இவர்கள் ஒருபோதும் இணைய மாட்டார்கள் இணையவர்களாயின்.  உலகமே இவர்கள் விருப்பம் போல் தான் நடக்க வேண்டி வரும்   மேலும் உங்களுக்கு தமிழ் ஈழம் வேண்டுமாயின் இந்த மூன்று நாடுகளையும்  நண்பர்கள் ஆக்க முயலுங்கள்   அவர்கள் நண்பர்கள் ஆவார்கள் ஆயின். தமிழ் ஈழம் இலகுவாக கிடைக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kandiah57 said:

இது எனது கனவு அண்ணா

இந்த 3 துலைவாரும் துலைந்தால் எமது கனவு நனவாக நாம் கனவு காண முடியும்

அல்லது கனவு கூட கடினமே.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

என்னைப்  பொறுத்தவரையில்... நீங்கள் ஆயிரம் சொன்னாலும்,
உக்ரேன் பெண் விமானிகள்... செஞ்சோலையில் குண்டு போட்டு..
எமது மணவச் செல்வங்களை... கொலை செய்ததை, 
எந்தக் காலத்திலும் மன்னிக்கவோ, மறக்கவோ முடியாது.  😧

@goshan_che@விசுகு...  உங்களுக்கு அந்த உணர்வு இல்லாமல், 
உக்ரேனுக்கு வக்காலத்து வாங்குவதைத்தான்.. என்னால், புரிந்து கொள்ள முடியவில்லை.
 😮

   @குமாரசாமி அண்ணைக்கும் இதே காரணம் தான், இருக்கும் என நினைக்கின்றேன்.
அவருக்கு  வேறு காரணம் இருந்தால்,  நிச்சயம் சொல்வார் என நம்புகின்றேன். 😎

உங்களுக்கு   எந்த    நாட்டையும்   ஆதரிக்கும்  உரிமை உண்டு” எங்கள் தலையில் குண்டு போட்டமையால். ரஷ்யா செய்யும் பிழைகள் சரியாகி விடாது   அதேபோல சரியான செயல்கள பிழையாகி விடாது   நான் ரஷ்யாவையோ. உக்ரேனையோ. ஆதரிக்க இல்லை  சரி பிழை மட்டுமே சொல்கிறேன்   வரும் காலத்தில் ரஷ்யா பெண் விமானிகள்  குண்டு போட்டால் உக்ரேனை ஆதரிப்பீர்கள?  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.