Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையில் அடைக்கலம் வழங்குமாறு நித்தியானந்தா கடிதம் ஊடாக கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையில் அடைக்கலம் வழங்குமாறு நித்தியானந்தா கடிதம் ஊடாக கோரிக்கை

http://www.samakalam.com/wp-content/uploads/2022/09/34-e1662191877178.png
 
தனது உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருப்பதாகவும் உதவிசெய்யும் பட்சத்தில் எங்கள் நன்றியின் வெளிப்படாக லட்சக்கணக்கான டொலர் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை உங்கள் நாட்டுக்கே, மக்களின் நலனுக்காகவே தந்து விடுகிறோம் என இந்தியாவின் பிரபல சாமியார் நித்தியானந்தா இலங்கையில் அடைக்கலம் கோரி, அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள நித்தியானந்தா, கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அதில் சொர்க்கத்தில் வாழ்வது போல் வாழ்ந்து வருவதாக அறிவித்திருந்தார்.இவ்வாறான நிலைமையில் இலங்கையில் மருத்துவ சிகிச்சைக்காக அடைக்கலம் கோரியுள்ளார். அத்துடன் சிகிச்சைக்கான முழு செலவையும் தனது சொர்க்கபூமியான கைலாசா ஏற்றுக்கொள்ளும் எனவும் நித்தியானந்த தனது கடிதத்தில் கூறியுள்ளார்

.http://www.samakalam.com/wp-content/uploads/2022/09/2-e1662191916764.png

நித்தியானந்தாவுக்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்கள், மருத்துவ சாதனங்களை கைலாசா அரசு கொள்முதல் செய்யும்.எங்கள் நன்றியின் வெளிப்படாக லட்சக்கணக்கான டொலர் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை உங்கள் நாட்டுக்கே, மக்களின் நலனுக்காகவே தந்து விடுகிறோம். நித்தியானந்தாவுக்கு அரசியல் புகலிடம் வழங்கிவிட்டால், இலங்கையில் தேவையான முதலீட்டையும் நித்தியானந்தா வழங்குவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)

http://www.samakalam.com/மருத்துவ-சிகிச்சைக்காக-இ/

  • கருத்துக்கள உறவுகள்

Swami Nithiyananda's next action announcement: Controversy over social  media | சுவாமி நித்தியானந்தா அடுத்த அதிரடி அறிவிப்பு: சமூக வலைதளங்களை  கலக்கும் சர்ச்சை..!

கோத்தாவுக்கே... அடைக்கலம் வழங்குகின்ற நாடு,
கைலாச நாட்டு அதிபர், சுவாமி  நித்தியானந்தாவுக்கு... அடைக்கலம் வழங்குவதில் தப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஓசில தரேன்னு சொல்றான்..

IMG-20220903-143255.jpg

தூக்கிட்டு வாடா அந்த செல்லத்த..  ☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்

கடதாசில, கைலாசா நாட்டு முத்திரை ஒட்டியிருக்குதே? 🤔😜

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

கடதாசில, கைலாசா நாட்டு முத்திரை ஒட்டியிருக்குதே? 🤔😜

1 hour ago, கிருபன் said:

உதவி செய்யும் பட்சத்தில் எங்கள் நன்றியின் வெளிப்படாக லட்சக் கணக்கான டொலர் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை உங்கள் நாட்டுக்கே, மக்களின் நலனுக்காகவே தந்து விடுகிறோம்.

Swami Nithyananda bans Indians from entering 'Kailasa' over Covid surge -  The Australia Today

லட்சக் கணக்கான... டொலர் மதிப்புள்ள, மருத்துவ உபகரணங்களை... 
சுவாமி.. சும்மா தரும் போது, முத்திரை ஒட்டாமல்.. யாரும், கடிதம் போடுவார்களா? 😁

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

Swami Nithyananda bans Indians from entering 'Kailasa' over Covid surge -  The Australia Today

லட்சக் கணக்கான... டொலர் மதிப்புள்ள, மருத்துவ உபகரணங்களை... 
சுவாமி.. சும்மா தரும் போது, முத்திரை ஒட்டாமல்.. யாரும், கடிதம் போடுவார்களா? 😁

இவருக்கு மட்டுமா அல்லது இவரோட இருந்த பெட்டயளுக்குமோ அடைக்கலம் வேணும் எண்டு, உடான்சு சுவாமியாருக்கு தனிக்கடதாசி போட்டு விசாரிச்சு சொல்லுங்க... 😅

  • கருத்துக்கள உறவுகள்

அரசனை நம்பி

(இந்தியா) புருசனை கைவிடுவாரா நரி?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

இவருக்கு மட்டுமா அல்லது இவரோட இருந்த பெட்டயளுக்குமோ அடைக்கலம் வேணும் எண்டு, உடான்சு சுவாமியாருக்கு தனிக்கடதாசி போட்டு விசாரிச்சு சொல்லுங்க... 😅

உடான்ஸ் சாமியாரை… லண்டனில் கண்டால், இங்காலை வரச் சொல்லுங்க. 😁

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

அரசனை நம்பி

(இந்தியா) புருசனை கைவிடுவாரா நரி?

சீனா புருசன், இந்தியா அரசன்.

அது தான் முன்னைய சிங்கள நிலைப்பாடு.

அந்தப்பக்கமா தமிழ் இயங்களை வளர்த்து, ஆயுதம் கொடுத்து மோத விடுவீர்கள்.

பிறகு, அவர்களை ஒடுக்க, இந்தப்பக்கமா நிக்கிறது போல, பம்மாத்து காட்டுவீர்கள்.

யார் பக்கம் தான் நிக்குது இந்தியா?

அதனால் தான் சொல்கிறேன், இலங்கை தீவில், இந்தியாவை நம்ப யாருமே இல்லாமல் போனது, இந்தியாவின் வரலாற்றுத் தவறு. 😭

அதனை சீனா அறுவடை செய்வதால், இ்ந்தியாவின் கையறு நிலையால், மேற்கு உள்ளே வருகிறது.

ஆக, சீனாவா, (அமெரிக்க தலைமை) மேற்கா, புருசன்?

இந்த கேள்வியின் பதிலில், இந்தியாவே இல்லையே?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் மேயர் (இராணுவ) தோளை உயர்த்துவதையும் கேட்டால், என்னமா ராயதந்திரம் செய்கிறது இந்தியா.
 
  • கருத்துக்கள உறவுகள்+
On 3/9/2022 at 19:35, nochchi said:

முன்னாள் மேயர் (இராணுவ) தோளை உயர்த்துவதையும் கேட்டால், என்னமா ராயதந்திரம் செய்கிறது இந்தியா.
 
மன்னிக்க வேணும்... இரண்டுமே அரக்கன் தான்... அதிலும் இந்தியா கொடூரமானது.

என்ன இந்தியன் ஒரு இனத்தையே(தமிழன்) அழித்துவிட்டான். சீனன் தளமமைக்க மட்டுமே வருகிறான்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நன்னிச் சோழன் said:

மன்னிக்க வேணும்... இரண்டுமே அரக்கன் தான்... அதிலும் இந்தியா கொடூரமானது.

என்ன இந்தியன் ஒரு இனத்தையே(தமிழன்) அழித்துவிட்டான். சீனன் தளமமைக்க மட்டுமே வருகிறான்.

யாழில் சீனத்தூதுவருக்கான கண்டணம் என்ற திரியிலே  வசியவர்கள் எழுதிய கருத்தோடு உடன்பட்டு நோக்குதல் எமது இனம் சார்ந்து சிந்திப்போரிடம் ஏற்பட வேண்டும். அழிப்பவனைவிடக் கொடுத்து எடுப்பவன் பரவாயில்லை. சீனா வந்தால் என்ன? அமெரிக்கா வந்தால் என்ன? எமது இனத்தின் பூர்வீகவாழிடத்தை அங்கீகரிக்கும் யாரிடமும் கைகோர்ப்பதில் தப்பில்லை. இந்த மாலைதீவே இந்தியாவோடு இசைவுகாட்டி இப்போது சீனாவோடு கூட்டு. என்ன இந்தியா     ****யாவிட்டது.  இந்தியாவைக் காக்க ஈழத் தமிழர்கள் அழியவேண்டுமென்றில்லையல்லவா? இந்த மேயரைப்பார்த்தீர்களா, எப்படிப் பேசுகிறார் என்று. இவரது பார்வையில் ஒருமைப்பாட்டிற்காக யாரையும் அழிக்கலாம் என்பதுதான் இவரது பல்வேறு காணொளிகளில் தெறிக்கும் சாராம்சம்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/9/2022 at 17:10, Nathamuni said:

இவருக்கு மட்டுமா அல்லது இவரோட இருந்த பெட்டயளுக்குமோ அடைக்கலம் வேணும் எண்டு, உடான்சு சுவாமியாருக்கு தனிக்கடதாசி போட்டு விசாரிச்சு சொல்லுங்க... 😅

காரியத்தில கண்ணாயிருக்கிறனுகள்....😁

Kailasa New York on Twitter: "@anuj_jn @nithyananditha @Payal_Rohatgi @ANI  @timesofindia @tv9gujarati @OpIndia_com they will not know more of the  story of the #Nithyananda camp which #MSM will not tell you  #JusticeForHinduMonkGirls https://t.co ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தாவை கொல்ல முயற்சி? விஷம் கொடுத்ததாக அதிர்ச்சி தகவல்!

19-5.jpg

சர்ச்சைக்குரிய பிரபல சாமியார் நித்தியானந்தாவை, விஷம் கொடுத்து ரகசியமாக கொல்ல முயற்சி நடந்துள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருவில் ஆசிரமம் அமைத்து, ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்த நித்தியானந்தா, நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ வெளியானதால் சர்ச்சையில் சிக்கினார். பாரம்பரிய மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக, அவர் நியமிக்கப்பட்டதும், பெரும் சர்ச்சையானது.

நித்தியானந்தா மீது புகார்கள் குவிய, நாட்டில் இருந்தே வெளியேறினார். அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில், கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி, அங்கு வசிப்பதாக தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார். ஆனால், கடந்த ஓராண்டாக அவரது செயல்பாடுகள் குறைந்தன. பல மாதங்களாக, அவரது நேரடி வீடியோக்கள் எதுவும் வரவில்லை. உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வந்தன.

இந்நிலையில், சிகிச்சைக்காக இலங்கை அரசிடம் அனுமதி கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆரோக்கியமாக இருந்த நித்தியானந்தாவுக்கு, திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டதற்கு, மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதே காரணம் என்ற, தகவல் வெளியாகி உள்ளது. இது, அவரது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு இந்தியாவிலும், பல நாடுகளிலும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அவற்றின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இவற்றை கைப்பற்ற, அவருடன் இருப்பவர்களே, ரகசியமாக விஷம் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

https://akkinikkunchu.com/?p=224889

  • கருத்துக்கள உறவுகள்+
On 7/9/2022 at 09:31, nochchi said:

யாழில் சீனத்தூதுவருக்கான கண்டணம் என்ற திரியிலே  வசியவர்கள் எழுதிய கருத்தோடு உடன்பட்டு நோக்குதல் எமது இனம் சார்ந்து சிந்திப்போரிடம் ஏற்பட வேண்டும். அழிப்பவனைவிடக் கொடுத்து எடுப்பவன் பரவாயில்லை. சீனா வந்தால் என்ன? அமெரிக்கா வந்தால் என்ன? எமது இனத்தின் பூர்வீகவாழிடத்தை அங்கீகரிக்கும் யாரிடமும் கைகோர்ப்பதில் தப்பில்லை. இந்த மாலைதீவே இந்தியாவோடு இசைவுகாட்டி இப்போது சீனாவோடு கூட்டு. என்ன இந்தியா     ****யாவிட்டது.  இந்தியாவைக் காக்க ஈழத் தமிழர்கள் அழியவேண்டுமென்றில்லையல்லவா? இந்த மேயரைப்பார்த்தீர்களா, எப்படிப் பேசுகிறார் என்று. இவரது பார்வையில் ஒருமைப்பாட்டிற்காக யாரையும் அழிக்கலாம் என்பதுதான் இவரது பல்வேறு காணொளிகளில் தெறிக்கும் சாராம்சம்.  

ஐயனே, மன்னிக்க வேணும்...
இப்ப நான் எழுதினது சரியென்டிறியளோ இல்லை பிழை என்டிறியளோ?

Edited by நன்னிச் சோழன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.