Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிஸ் தமிழ்நாடு” அழகி போட்டியில் மகுடம் சூடிய கூலித் தொழிலாளி மகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“மிஸ் தமிழ்நாடு” அழகி போட்டியில் மகுடம் சூடிய கூலித் தொழிலாளி மகள்!

 

 

 

07-3-300x200.jpgstatic-image-cdn-2-7-300x200.jpg static-image-cdn-3-7-300x200.jpg

தமிழகத்தின் சென்னையை அடுத்த செங்கல்பட்டை சேர்ந்த கட்டடத் தொழிலாளியின் மகள் 20 வயதான ரட்சயா மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

பொதுவாக மாடலிங் என்பதே பொருளாதரத்தில் முன்னேற்றம் அடைந்தவர்கள், நடிகைகளால் மட்டுமே செய்ய முடியும் என்ற ஒரு மாய பிம்பம் உள்ளது. இவற்றை எல்லாம் மாற்றி மாடலிங் என்பது ஒரு பொதுவான துறை அதில் யார் வேண்டுமானாலும் சாதித்து காட்டலாம் என நிரூபித்துள்ளார் 20 வயதான ரட்சயா.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளி மனோகர். இவரது மகள் 20 வயதான ரட்சயா. VISCOM படித்து வரும் ரட்சயாவுக்கு, சிறுவயது முதலே மாடலிங்கில் ஆர்வம் இருந்துள்ளது.

எப்படியேனும் இந்த துறையில் சாதித்தே ஆக வேண்டும் என்பதற்கான அதற்காக உழைத்திருக்கிறார். தினக்கூலி வருமானம் தந்தையின் தினக்கூலி வருமானத்தை வைத்து மட்டும் தனது இலக்கை அடைய முடியாது என தெரிந்து கொண்டவர், கல்லூரி நேரம் போக மீதி நேரத்தில் பகுதி நேர வேலைகளையும் செய்து வருமானம் ஈட்டி வந்துள்ளார்.

அதனைக் கொண்டு தனது நடை, உடை போன்றவற்றில் கவனம் செலுத்தி திறமையை வளர்ந்துக் கொண்டுள்ளார். STAR INDIA AWARDS நடத்திய மாவட்ட அளவிலான அழகிப் போட்டியில் தேர்வாகி, பின்னர் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டார்.

இதில் சுமார் ஆயிரக்கணக்கான அழகிகள் கலந்து கொண்டனர். மிஸ் தமிழ்நாடு: இந்தப் போட்டியில் கலந்து கொண்ட ரட்சயா, ”மிஸ் தமிழ்நாடு” என்ற பட்டத்தை வென்று அசத்தினார்.

அதேசமயம் இதன் மூலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள மிஸ் இந்தியா அழகி போட்டியில் ரட்சயா கலந்து கொள்ளவுள்ளார்.

அதேவேளை இதற்கு முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ”மோனோ ஆக்டிங்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, அரசு சார்பில் மலேசியா அழைத்து செல்லப்பட்டு கௌரவிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://thinakkural.lk/article/211781

  • கருத்துக்கள உறவுகள்

07-3-300x200.jpg

பாராட்டுக்கள். 👏 👍
அடிக்கிற 😘 "கிஸ்" தான்...  நமக்கு என்னவோ செய்யுது. 😜 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டின் Taste இவ்வளவுதான்!👀

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்👏 👍, இந்திய அழகி போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

16 minutes ago, வாலி said:

தமிழ்நாட்டின் Taste இவ்வளவுதான்!👀

Taste என்று எதை சொல்கின்றீர்கள்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெற்றி பெற வாழ்த்துகள். 

  • கருத்துக்கள உறவுகள்

  இல்லை தெரியாமல் கேட்க்கிறேன். அழகிப்போட்டிக்கும் தந்தையின் தொழிலுக்கும் என்ன சம்பந்தம். அழகி ,திறமை ,முயற்சிக்கு பாராட்டலாமே. 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிலாமதி said:

  இல்லை தெரியாமல் கேட்க்கிறேன். அழகிப்போட்டிக்கும் தந்தையின் தொழிலுக்கும் என்ன சம்பந்தம். அழகி ,திறமை ,முயற்சிக்கு பாராட்டலாமே. 

இந்திய பிராமண பத்திரிகைகள்… விஷத்தை கக்கித்தான் எழுதும்.

தமிழக மீனவர்கள் பிடிபட்டால், தமிழக மீனவர்கள் என்றும்…
குஜராத் மீனவர்கள் பிடி பட்டால்…. இந்திய மீனவர்கள் என்று எழுதி,
தமிழனை… இரண்டாம் நிலையிலேயே வைத்திருப்பார்கள்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

தமிழகத்தின் சென்னையை அடுத்த செங்கல்பட்டை சேர்ந்த கட்டடத் தொழிலாளியின் மகள் 20 வயதான ரட்சயா மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

பொதுவாக மாடலிங் என்பதே பொருளாதரத்தில் முன்னேற்றம் அடைந்தவர்கள், நடிகைகளால் மட்டுமே செய்ய முடியும் என்ற ஒரு மாய பிம்பம் உள்ளது. இவற்றை எல்லாம் மாற்றி மாடலிங் என்பது ஒரு பொதுவான துறை அதில் யார் வேண்டுமானாலும் சாதித்து காட்டலாம் என நிரூபித்துள்ளார் 20 வயதான ரட்சயா.

 

1 hour ago, நிலாமதி said:

  இல்லை தெரியாமல் கேட்க்கிறேன். அழகிப்போட்டிக்கும் தந்தையின் தொழிலுக்கும் என்ன சம்பந்தம். அழகி ,திறமை ,முயற்சிக்கு பாராட்டலாமே. 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிலாமதி said:

அழகிப்போட்டிக்கும் தந்தையின் தொழிலுக்கும் என்ன சம்பந்தம். அழகி ,திறமை ,முயற்சிக்கு பாராட்டலாமே. 

நல்ல கேள்விகள்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

07-3-300x200.jpg

பாராட்டுக்கள். 👏 👍
அடிக்கிற 😘 "கிஸ்" தான்...  நமக்கு என்னவோ செய்யுது. 😜 🤣

உங்களுக்கு என்ன செய்யுது என்பதை உங்கள் வீட்டில் சொல்லுங்கள்..இரசம்.   அல்லது மல்லி தண்ணீர் ....தருவார்கள் அதாவது நாட்டு வைத்தியம் செய்வார்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

உங்களுக்கு என்ன செய்யுது என்பதை உங்கள் வீட்டில் சொல்லுங்கள்..இரசம்.   அல்லது மல்லி தண்ணீர் ....தருவார்கள் அதாவது நாட்டு வைத்தியம் செய்வார்கள் 🤣

Rudes on a Roll - A man wakes up in a hospital, bandaged from head to foot.  The doctor comes in and says, "Ah, I see you've regained consciousness.  Now, you probably mujeres | il blog

இந்த வியாதிக்கு... வீட்டு வைத்தியம் ஆபத்தானது. உயிருக்கு உலை வைத்து விடும்.
நீங்கள் எனது... சனி, ஞாயிறு, திங்கள் தொடராக வருகின்ற  நீண்ட வார விடுமுறையை...
ஆஸ்பத்திரியில் கழிக்க... அடுக்கு பண்ணுகிறீர்கள். 😁

  • கருத்துக்கள உறவுகள்
On 30/9/2022 at 17:19, நிலாமதி said:

  இல்லை தெரியாமல் கேட்க்கிறேன். அழகிப்போட்டிக்கும் தந்தையின் தொழிலுக்கும் என்ன சம்பந்தம். அழகி ,திறமை ,முயற்சிக்கு பாராட்டலாமே. 

அக்கா அவரது திறமை பாராட்டு உள்ளது  கவனமாக படித்து பாருங்கள்   ஜேர்மனி அறிஞர் கார்ள்ஸ்  மார்க்   எழுதிய புத்தகங்கள்  உலக நாடுகளில் பல்கலைக்கழகங்களில் பாடப்புத்தகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது    அவர் சொல்லுகிறார்  முதலாளி =தொழிலாளி என்று   அத்துடன் முதலாளி இன்றி தொழிலாளி இல்லை....தொழிலாளி இன்றி முதலாளி இல்லை என்றும் சொல்லுகிறார் நானும் ஒரு தொழிலாளி   அப்படி சொல்வதில் பெருமை படுகிறேன். காரணம் இந்த உலகில்…………… 75% மேற்பட்டவர்கள் தொழிலாளர்கள் தான்   உலகம் இயங்குவது கூலித்தொழிலாளர் தான்    அவர்கள் இயங்க இல்லையென்றால் அந்த வேலையை பொறியியலாளர் வைத்தியர்.......போன்றோர் தான் செய்ய வேண்டும். அண்மையில் எனது வேலத்தலத்தில்  நான்கு பேர் சுகவீன லீவு எடுத்து விட்டார்கள்    இரண்டு முதலாளிமார். எங்களுடன் வந்து அந்த வேலையை செய்தார்கள்.  எனது ஊரில் கந்தையா என்றால் எந்த கந்தையா என்று கேட்ப்பார்கள்......பத்து மேற்பட்ட கந்தையா உண்டு    அதற்கு இரண்டுக்கு மேற்பட்ட அடையாளம் சொல்ல வேண்டும்   இந்தியாவில் தமிழ் நாட்டில் நிறையவே மனேகர் இருக்கலாம்    எனவே… கூலி கட்டடத் தொழிலாளி என்பதில் எந்தக் குறையுமில்லை. கூலி தொழிலாளி தரம் குறைந்தவர்கள் என்று  எமது யாழ்ப்பாணம் தமிழர்கள் நினைப்பது வழமையானது   அது மாற்றப்படவேண்டும். பொறியியலாளர் கூட கூலியை தான் பெறுகிறார்கள் கூலிக்கும்.  மார்க்ஸ் வரைவிலக்கணம்.  சொல்லி உள்ளார் நான் மறந்து விட்டேன் ஜேர்மனியில் கூலிதொழிலாளரை தரம் குறைந்தவர்கள் என்று கருதுகிறது இல்லை 😃🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.