Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசியாவின் சிறந்த 3 சுற்றுலா ஓய்வு விடுதிகளில் “ கேப் வெலிகம”

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kandiah57 said:

ஆமாம் முன்பு ஒருபோதும் மூதலீடு செய்யப்பட்டதில்லை  இனிமேல் மூதலீடு செய்ய முடியாது இப்போது தான் மூதலீட முடியும்   .....வாருங்கள்… உங்கள் பணத்தை கடலில் கொட்டி...சீ. .....சீ......இல்லை இலங்கையில் கொட்டி மூதலீடுங்கள  🤣 உங்களுக்கு லாபம் வரவில்லை என்றாலும் [வராது” என்று எனக்கு நன்றாகவே தெரியும் ] எனக்கு நிறையவே லாபம் உண்டு”  விடுவேனா  ? இந்த சந்தர்ப்பததை  நாசமாகி போவது நீங்கள் தானே.?. ..நான் இல்லயே? நானே மூதலீட்டேன். நான் நாசமாகி போக   ....😂 எனக்கு என்ன பைத்தியாமா?1983 மூதலீட்டுக்களுக்கு என்ன நடந்தது என்பதை நேரில் பார்த்தவன்.  எனவே… எந்த நாட்டில் மூதலீட்டாலும். இலங்கையில் நான் மூதலீடமாட்டேன்.........இந்த புலம்பெயர் தமிழர்கள்  வருடவருடம்.   நல்லுர் திருவிழாவில் போய் கழியட்டாம் போடுவது மட்டுமல்ல முகப்பக்கத்திலும். படங்களை பதிவு செய்கிறார்கள்   இன்னும் பத்து ஆண்டுகளில் இதை நிறுத்தி காட்டுகிறேன்  😂🤣😂இதற்க்கு ஒரே வழி மூதலீடச்சொல்லி அழுந்தம் கொடுப்பது மட்டுமே 🙏👍🥰😁

உங்கள் மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுங்கள். 

முதலீடு தொடர்பாக உங்களுக்கு அடிப்படை அறிவுகூட இல்லை என்பது நன்றாகப் புரிகிறது. அனேகமாக மாத்தளைப் பக்கங்களில் கோடா போட்ட சுருட்டு விற்றிருப்பீர்கள் என நினைக்கிறேன். சுருட்டுக்கடை போடுவதெல்லாம் முதலீட்டிற்குள் வராது கந்தையா. 

முதலீடு என்பது மூளையோடும் பண பலத்துடனும் தொடர்புபட்டத. இது இரண்டும் உங்களிடம் இல்லை. பிறகேன் துள்ளிக்குதிக்கிறீர்கள். 

(அதுசரி, நல்லூர் திருவிழாவுக்குப் போவதற்கு மட்டும்தான்  தமிழீழம் கேட்கிறீர்களோ ? )

  • Replies 88
  • Views 5.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kapithan said:

முதலீடு என்பது மூளையோடும் பண பலத்துடனும் தொடர்புபட்டத. இது இரண்டும் உங்களிடம் இல்லை. பிறகேன் துள்ளிக்குதிக்கிறீர்கள். 

இரண்டும் உங்களுக்குத்தான் நிறைய இருக்கு என்று அடித்து விட்டபடியே இருக்கிறீர்கள். நீங்களே முதலில் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்துவிட்டு சொல்லுங்கள் நாங்கள் பின்னாலேயே வருகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

உங்கள் மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுங்கள். 

முதலீடு தொடர்பாக உங்களுக்கு அடிப்படை அறிவுகூட இல்லை என்பது நன்றாகப் புரிகிறது. அனேகமாக மாத்தளைப் பக்கங்களில் கோடா போட்ட சுருட்டு விற்றிருப்பீர்கள் என நினைக்கிறேன். சுருட்டுக்கடை போடுவதெல்லாம் முதலீட்டிற்குள் வராது கந்தையா. 

முதலீடு என்பது மூளையோடும் பண பலத்துடனும் தொடர்புபட்டத. இது இரண்டும் உங்களிடம் இல்லை. பிறகேன் துள்ளிக்குதிக்கிறீர்கள். 

(அதுசரி, நல்லூர் திருவிழாவுக்குப் போவதற்கு மட்டும்தான்  தமிழீழம் கேட்கிறீர்களோ ? )

கபிதன் இப்படி எழுதுவது தவறு. எந்தக் கடையும் முதலீடு இன்றி ஆரம்பிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

100% வீதம் தமிழர்களால் நடத்தப்படும் எந்தவொரு நிறுவனமும் சிறீலங்காவின் பங்குப் பரிவர்த்தனையில் இல்லை இருக்கவும் முடியாது.

இங்கிருந்து கொண்டு ஓர் முதலீட்டை தொடங்குவதற்கு சிறீலங்காவில் இருக்கும் ஒருவரின் அல்லது பலரின் ஒத்துழைப்பு, உடல் உழைப்பு தேவை. ஆனால் அங்கிருப்பவர்களோ எம்மிடமிருந்து இனாமாகவே எதிர்பார்க்கிறார்கள். மேலும் எம்மைப் போல் இரண்டு வேலை செய்ய அவர்கள் தயாராக இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, MEERA said:

கபிதன் இப்படி எழுதுவது தவறு. எந்தக் கடையும் முதலீடு இன்றி ஆரம்பிக்க முடியாது.

மன்னிக்கவும் மீரா. காயப்படுத்தும் நோக்கம் இல்லை. கிண்டலடிக்கும் நோக்கம்  மட்டுமே. ஆனாலும் அதுவும் தவறுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

1) இரண்டும் உங்களுக்குத்தான் நிறைய இருக்கு என்று அடித்து விட்டபடியே இருக்கிறீர்கள்.

2) நீங்களே முதலில் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்துவிட்டு சொல்லுங்கள் நாங்கள் பின்னாலேயே வருகிறோம்.

1) உந்த தாயக்கட்டை உருட்டும் விளையாட்டுக்கு நான் வரவில்லை. அது எனக்க்குச் சரிப்பட்டு வராது. வேறு யாரையும் பாருங்கள். 😀

2) (நாங்கள் ஏற்கனவே பிள்ளையார் சுழியை வடக்கில் போட்டுவிட்டோம். பின்னால் வருவதும் வராததும் உங்கள் விருப்பம் 😉)

24 minutes ago, MEERA said:

100% வீதம் தமிழர்களால் நடத்தப்படும் எந்தவொரு நிறுவனமும் சிறீலங்காவின் பங்குப் பரிவர்த்தனையில் இல்லை இருக்கவும் முடியாது.

இங்கிருந்து கொண்டு ஓர் முதலீட்டை தொடங்குவதற்கு சிறீலங்காவில் இருக்கும் ஒருவரின் அல்லது பலரின் ஒத்துழைப்பு, உடல் உழைப்பு தேவை. ஆனால் அங்கிருப்பவர்களோ எம்மிடமிருந்து இனாமாகவே எதிர்பார்க்கிறார்கள். மேலும் எம்மைப் போல் இரண்டு வேலை செய்ய அவர்கள் தயாராக இல்லை.

எல்லாம் மாறும் மீரா. மாற்ற வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, MEERA said:

100% வீதம் தமிழர்களால் நடத்தப்படும் எந்தவொரு நிறுவனமும் சிறீலங்காவின் பங்குப் பரிவர்த்தனையில் இல்லை இருக்கவும் முடியாது.

இங்கிருந்து கொண்டு ஓர் முதலீட்டை தொடங்குவதற்கு சிறீலங்காவில் இருக்கும் ஒருவரின் அல்லது பலரின் ஒத்துழைப்பு, உடல் உழைப்பு தேவை. ஆனால் அங்கிருப்பவர்களோ எம்மிடமிருந்து இனாமாகவே எதிர்பார்க்கிறார்கள். மேலும் எம்மைப் போல் இரண்டு வேலை செய்ய அவர்கள் தயாராக இல்லை.

பலர் அரச தொழில் மட்டும் வேண்டும் என்ற படியால்  இரண்டு தொழில் செய்ய நேரம் இல்லாமலும் இருக்கிறார்கள் 

சிலர் கெளரவ குறைச்சல் காரணமாக வேலை செய்யவதில்லை ஆனால் முஸ்லிம்கள் அப்படியல்ல

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

உங்கள் மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுங்கள். 

மூளையால் தான் நான் இயங்கப்படுகறேன்.   மூளைக்கு எப்படி நான் வேலை கொடுக்க முடியும்?   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

மூளையால் தான் நான் இயங்கப்படுகறேன்.   மூளைக்கு எப்படி நான் வேலை கொடுக்க முடியும்?   

ஓய்வெடுங்கள் கந்தையர். வெள்ளிக்கிழமை வேறு. உங்களுக்கு பரீட்சயமேயில்லாத விடயங்களில் மண்டையைப் போட்டு உடைத்துக்கொள்ளாதீர்கள். 

ஆரோக்கியம் முக்கியம் கந்தையர் 😀

Have good weekend, enjoy 👍

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

மதகில் குந்தியிருந்து போவோர் வருவோருக்கு பட்டப்பெயரும் வைத்து, கூ..கூ என்று கூவடிப்பதால் எந்தப் பிரயோசனமும் இல்லை சாத்தான். 

😏

On 13/10/2022 at 21:46, Kapithan said:

ஊரில் தெருவில், மதிலில், மதகில் குந்தியிருந்து வருவேர் போவோருக்கெல்லாம் பட்டப்பெயர் வைக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளின் பழக்கத்தை நிறுத்துங்கள். 

பாத்துப்பேசுங்கோ! இப்ப கொஞ்சபேர் சண்டைக்கு வரப்போகினம்.

மிகவும் கீழ்த்தரமான எழுத்து. வன்மமும் கோபமும் கொண்ட முட்டாள்களால் மட்டும்தான்  விடயங்களைப் பிரித்தறியாமல் உளற முடியும்.

உங்களை நீங்களே எடைபோட்டுக்கொள்ளுங்கள் நீங்கள் எழுதிய கருத்திலிருந்து,  பதிலுக்கு உங்களை காயப்படுத்துவது எனது நோக்கமுமல்ல, பதில் உங்களுக்கானதுமல்ல, எனக்குத் தெரியும் நாட்டில் நாம் பட்ட துன்பங்களில் பட்டறிவோ, பகுத்தறியும் உணர்வோ உங்களுக்கு இல்லையென்பது, உயிரை பாதுகாக்க திக்குத் தெரியாமல் ஏதிலிகளாய் ஓடி, பழக்கப்படாத சூழலில் சவால்களை எதிர்கொண்டு, நிமிர்ந்து  ஒரு நிலையான நாட்டை கட்டியெழுப்புவதற்காக சர்வதேசத்தை தட்டிக்கொண்டு இருக்கும் முகங்காட்டாமல், பெயர் சொல்லாமல், விளம்பரந்தேடாமல் உழைக்கும் நம்மவரை முதலீடு என்னும் வலையில் வீழாமல் தடுப்பதற்கே. அவர்கள் என்சொல்லை, உங்கள் சொல்லை நம்பி விழுவதற்கோ, முதலிடுவதற்கோ ஒன்றும் முட்டாள்களுமில்லை முள் முருக்குகளுமில்லை  வலிகளில் இருந்து மீண்ட வைரங்கள்!
11 hours ago, Kapithan said:

நான் ஒருபோதும்  உங்களை இந்தியாவின் முகவரென்றோ அல்லது RSSன் இந்துத்துவாவின் முகவரென்றோ ஒருபோதும் கூறவில்லை  

நீங்கள் என்னை எது வேண்டுமானாலும் கூறுங்கள் எனக்கு அதுபற்றி கவலையில்லை. நான் பட்ட காயங்கள் இறப்புவரை ஆறாதவை, அந்தகாயங்கள் தரும் வலிகளில் எழும் அனுபவங்களையே நான் எழுதுகிறேன். அன்று நாம் அதிகாரத்தால் அழிக்கப்பட்டதற்கும், இன்று அழைக்கப்படுவதற்கும் காரணம் நமது பொருளாதாரமே. நம்மிடம் இருந்த எல்லாவற்றையும் பிடுங்கினான் மிஞ்சியதை எரித்து மகிழ்ந்தான், முன்னேறினானா? இல்லையே பிச்சைப்பாத்திரத்தோடல்லவா அலையிறான். சோம்பேறிக்கூட்டம் பிடுங்கி வாழ்வதே அவர்கள் பிழைப்பு. அவர்கள் நம்மை அடக்கி வைத்திருக்கவே விரும்புவார்கள் தலைவன் ஓடிய பின்னும் அடங்குகிறார்களா?   
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சிலர் கெளரவ குறைச்சல் காரணமாக வேலை செய்யவதில்லை ஆனால் முஸ்லிம்கள் அப்படியல்ல

ஈழத்தமிழனுக்கு கௌரவ குறைச்சல் எண்டது பெரிய பிரச்சனை. அது புலம்பெயர்ந்த மேட்டுக்குடி தமிழனுக்கும் இருக்கின்றது......🤣

ஊரிலை நான் இருந்த இருப்புக்கு.......எண்டு தொடங்கிச்சினமெண்டால் நான் பிறக்கேக்கையே கோட்டு சூட்டோட பிறந்த மாதிரி கதை விடுவினம்...😁

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2022 at 13:35, தனிக்காட்டு ராஜா said:

சும்மா இருங்களன் ஒரு நாலு பக்கத்தை தாண்டி செல்லட்டும்

தாண்டும் என்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஈழத்தமிழனுக்கு கௌரவ குறைச்சல் எண்டது பெரிய பிரச்சனை. அது புலம்பெயர்ந்த மேட்டுக்குடி தமிழனுக்கும் இருக்கின்றது......🤣

ஊரிலை நான் இருந்த இருப்புக்கு.......எண்டு தொடங்கிச்சினமெண்டால் நான் பிறக்கேக்கையே கோட்டு சூட்டோட பிறந்த மாதிரி கதை விடுவினம்...😁

மேட்டுக்குடி என்பது ஒருவித மனநோய். 

நேற்றுவரை ஊரில் தனது தகுதிக்கு ஏற்ப வேலை வேண்டும் என்பவர்கள, வெளிநாடு வந்து இறங்கியவுடன் cleaning செய்யவும், double அடுக்கவும் ஆரம்பிப்பது எதற்குள் வரும் எனப் புரியவில்லை. 

🤨

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகின் சிறந்த ஹோட்டல்களில் 3 இலங்கை ஹோட்டல்கள்

17 OCT, 2022 | 04:50 PM
image

உலகின் சிறந்த ஹோட்டல்களில் இலங்கையின் மூன்று ஹோட்டல்களை உள்வாங்கப்பட்டள்ளன.

இதனை  சிட்னி மோர்னிங் ஹெரால்ட் மற்றும் மெல்போர்ன் ஏஜ் ஆகிய சுற்றுலா துறை தொடர்பிலான தகவல்களை வௌியிடும் இதழ்கள் வௌியிட்டுள்ளது.

அதன்படி, சிலோன் டீ ட்ரைல்ஸ்  (Ceylon Tea Trails),  வைல்ட் கோஸ்ட் டென்ட் லொட்ஜ் (Wild Coast Tented Lodge) மற்றும் கேப் வெலிகம (Cape Weligama) ஆகியவை பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

கேப் வெலிகமவிலுள்ள நீச்சல் குளம் உலகின் மிகவும் ஒளிச்சேர்க்கை உள்ள   நீச்சல் குளமாக இது இருக்கலாம் என்ற கருத்துடன் உலகின் சிறந்த நீச்சல் குளத்திற்கான  விருதைப் பெற்றது.

அத்தோடு, கேப் வெலிகம ஹோட்டல் புகைப்படம் டிரவலர் இணையத்தளத்தில் அட்டைப் படமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

அவுஸ்திரேலியா இலங்கை சுற்றுலாவிற்கு முக்கியமான சந்தையாகும்.  சிட்னி மற்றும் மெல்போர்னுக்கு இலங்கை விமானச்சேவை தடையில்லா விமானங்களை இயக்குகிறது.

கான்டே நாஸ்ட் டிராவலர் இதழின் 2022 ஆம் ஆண்டில் ஆசியாவின் மூன்று சிறந்த சுற்றுலா ஓய்வு விடுதிகளின் பட்டியலிலும்  கேப் வெலிகம  இடம்பிடித்துள்ளது.

http://fe.virakesari.lk/article/137850

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.