Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார் சிறீதரன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார் சிறீதரன்!

நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார் சிறீதரன்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

சிறீதரன் தமிழகத்துக்கு விஜயம் செய்திருந்த நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது இலங்கைத் தமிழ் மக்களின் பூர்வீக நில ஆக்கிரமிப்பு, மாகாணங்களுக்குரிய அரசியல் அதிகாரம், மொழி அடிப்படையில் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினை என்பன பற்றி பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

IMG-20221017-WA0024-600x400.jpg

https://athavannews.com/2022/1305437

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து கவலை தெரிவித்து இருப்பார் ☹️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

தனக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து கவலை தெரிவித்து இருப்பார் ☹️

animiertes-lachen-bild-0014.gif அதை... சிறீதரனிடம் சொல்லி என்ன பயன்.  😂

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

animiertes-lachen-bild-0014.gif அதை... சிறீதரனிடம் சொல்லி என்ன பயன்.  😂

பெற்றவரிடம் தானே அவரைவிட அதிகமான தகுதி உள்ளவர்  சொல்லி அழ வேண்டும்??😀

Edited by விசுகு
ஒரு வரி சேர்க்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார் சிறீதரன்!

அடுத்த big boss நம்ம சிறீதரன்.   🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார் சிறீதரன்!

அடுத்த big boss நம்ம சிறீதரன்.   🤣

இதெல்லாம் நம்மாளுக்கு சுசுப்பி 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமானை சந்தித்த சிறீதரன்! | Sreedharan Who Met Seeman

சீமானை சந்தித்த சிறீதரன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழகத்தில் நாம் தலைவர் கட்சியின் தலைவர் சீமானை அவரது இல்லத்தில் நேற்று (17) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

https://jvpnews.com/article/sreedharan-who-met-seeman-1666072862

May be an image of 5 people, people standing and text that says 'PUMA'

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரியான தமிழ் அரசியல்வியாதிகள்தான் மிகவும் ஆபத்தானவர்கள், டக்கி, கருணா, சித்தார்த்தன் போன்றவர்களை மக்கள் அறிவார்கள், ஆனால் இந்த வியாதிகளை மக்கள் அறிந்து கொள்வது கடினம்.

மக்களுக்கான அரசியல்வாதிகளை இலகுவில் அறிந்து கொள்ளலாம் அவர்கள் சிங்கள அரசினால் கொல்லப்பட்டிருப்பார்கள்.

இந்த வியாதிகள் இந்திய, இலங்கை அரசுகளின் சம்பளப்பட்டியலிலுள்ள அரசியல்வியாதிகள்.

டக்கி, கருணா போன்ற அரசியல்வியாதிகளுக்கும் இந்த மாதிரியான அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?

இவர்களை அறிந்து கொள்வது கடினம்.

இவர்கள் டக்கி, சித்தார்த்தன், கருணா போன்றவர்களை விட அதிகம் உழைப்பார்கள் ஏனென்றால் இவர்களுக்கு பல துறைகளிலிருந்து கையூட்டு கிடைக்கும் (கருத்து தவறாக இருக்கலாம்).

இந்த அரசியல்வியாதிதான் பரந்தன் இரசாயன ஆலை விடயத்தில் அவுஸ்ரேலிய முதலீட்டாளரிடம் கையூட்டு கேட்டதாக கருத்துகள் நிலவுகிறது.

இதுவரைகாலமும் சம்பந்தப்பட்டவர்களை குறிப்பிடுவதை தவிர்த்திருந்தேன் அதற்கு காரணம் ஆதாரமில்லாத கருத்துகளாக இருக்கலாம், அல்லது ஒருவருக்கெதிராக வேண்டுமென்றே திட்டமிட்டு கருத்து பரப்பட்டிருக்கலாம் என்றதன் அடிப்படையில்.

ஒரு காலத்தில் அரசியல்வியாதிகளை அரசியலில் இருந்து ஓரங்கட்ட போராளிக்குழுக்கள் எடுத்த முயற்சி, மக்கள் கருத்துக்கு விரோதமான, ஜன்நாயகத்தின் குரல்வளையினை நெரித்த செயற்பாடாக  நினைத்திருந்த  எனக்கு; இப்போது அவர்கள் செய்தது சரியாக தெரிகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, vasee said:

சிறீதரன்  சில வருடங்களுக்கு முன்.... 
கிளிநொச்சியில்  மதுபானக்கடை ஒன்று  வேண்டும் என்று  
இலங்கை பாராளுமன்றத்தில், பேசியவர்.

அதன் மூலம் அந்த உரிமத்தை... தனக்கு அல்லது தன்னை சார்ந்தவர்களுக்கு  
எடுத்து கொள்ள முயற்சித்து இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி மக்களுக்கு வாழ்த்துக்கள் இதுகள நம்பி மக்கள்

மக்கள் நீதி மய்யவாடியில் கிடக்கிறது, இதற்குள் நம்ம பிரச்சிகளை இவங்க கிட்ட சொல்லி என்ன ஆகப்போகிறது 

எதுக்கும் ஊர் வரும் போது ஒரு டோச் லைட்டும் ஆமையும் பரிசாக கொடுக்க வேண்டும் சிறியருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

சிறீதரன்  சில வருடங்களுக்கு முன்.... 
கிளிநொச்சியில்  மதுபானக்கடை ஒன்று  வேண்டும் என்று  
இலங்கை பாராளுமன்றத்தில், பேசியவர்.

அதன் மூலம் அந்த உரிமத்தை... தனக்கு அல்லது தன்னை சார்ந்தவர்களுக்கு  
எடுத்து கொள்ள முயற்சித்து இருக்கலாம்.

பரந்தன் இரசாயன் தொழிற்சாலை விவகாரத்திலும் கிட்ட தட்ட அது போலவே நிகழ்ந்ததாகக்கூறப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

குறைந்தது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட காலத்தில் போராடும் தரப்பின் பக்கமுள்ள தார்மீக நியாயத்தை ஏற்று நின்றவர்கள் இப்படியான சந்திப்புக்களை செய்வதும்.. எமது போராட்டத்தின் தேவை.. அதன் பின்னணி.. இன்றும் நீடித்துச் செல்லும் போராட்டத்துக்கு தூண்டிய காரணிகள் அப்படியே உள்ளமை.. தமிழ் மக்களின் அரசியல் சமூக பொருண்மிய விருப்பு.. தமிழகத்துடனான நெருங்கிய உறவு.. தமிழகத்தில் கட்சி பேதமின்றி கோரப்படும்.. ஈழத்தமிழர் மீதான ஆதரவும் அரவணைப்பும் அக்கறையும்.. என்பன பேசப்படுவதும்.. ஒட்டுமொத்த உலகத் தமிழினம்.. அல்லது அதன் பெரும்பான்மை.. ஒத்து கருத்துடன் இணைவதும் ஒருங்கிணைவதும் அவசியமானதாக உள்ளமை உட்பட பல விடயங்கள் அறிவுறுத்தப்படவும் கடைப்பிடிக்கப்படவும் கோருவது சாலச் சிறந்தது.

மேலும் தமிழீழத்தில் நிலவும் நேரடி.. மறைமுக ஆக்கிரமிப்புக்கள்.. பிராந்திய.. சர்வதேச செல்வாக்குகளும் நகர்வுகளும்.. அதனிடை எப்படி தமிழீழ மக்களினதும்.. தமிழக மக்களினதும் பொது நலனைக் காப்பது.. உரிமைகளை வெல்வது.. பொருண்மியத்தைப் பலப்படுத்துவது.. வரலாறு.. பூர்வீகம்.. பண்பாடு.. கலை.. கல்வியைப் பகிர்வதும் பலப்படுத்துவம்.. அதற்கான வேலைத்திட்டங்கள் என்று பேசுவது செயற்படுவது சிறப்பு. 

மாறாக.. சொந்த வியாபாரம்.. சினிமா... பொழுதுபோக்கு.. மரியாதை நிமித்தம்.. இப்படியான சந்திப்புக்களால் எந்தப் பயனும் தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

பல ஊழல்கள் புரிந்த (மேலே கூறிய படி)  சிறிதரன் வடக்கு மக்களால் ஒவ்வொரு தேர்தலிலும் தெரிவு செய்யப்படுவது எப்படி?
 
தமிழ் நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தொடக்கம் அனைத்து மட்ட தலைவர்களையும் சந்திப்பதில் என்ன தவறு உள்ளது.?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, nedukkalapoovan said:

3 hours ago, nunavilan said:

பல ஊழல்கள் புரிந்த (மேலே கூறிய படி)  சிறிதரன் வடக்கு மக்களால் ஒவ்வொரு தேர்தலிலும் தெரிவு செய்யப்படுவது எப்படி?
 
தமிழ் நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தொடக்கம் அனைத்து மட்ட தலைவர்களையும் சந்திப்பதில் என்ன தவறு உள்ளது.?

சரியான கருத்துக்கள். எதற்கெடுத்தாலும் நொள்ளு நொட்டை பிடித்து நோண்டிக்கொண்டிருந்தால் ஆகப்போவது எதுவுமில்லை. அவர்களின் மாற்று முயற்சிகளின் முடிவுகளை பொறுத்து விமர்சனங்களை வைக்கலாம்.

உலகில் நூறு வீதம்  சரியானவர்கள் யாருமேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வசியின் கருத்தும் உண்மை.அதே போல் கு சாவின் கருத்தும் உண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொல்.திருமாவளவனுடன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்திப்பு! விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், எழுச்சித் தமிழன் தொல்.திருமாவளவனை, நேற்றைய தினம் அவரது சென்னை அலுவலகத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்

சோழர்களின் ஆட்சியில் தான் தமிழர்களுக்கான தனித்துவ அடையாளங்கள் நிறுவப்பட்டன – சிறீதரன்

By VISHNU

19 OCT, 2022 | 03:39 PM
image

சோழர்களின் ஆட்சிக்காலம் என்பது தமிழக வரலாற்றின் பொற்காலம் என்றே போற்றப்படுகிறது, அதிலும் குறிப்பாக இராஜராஜ சோழன் காலத்தே தமிழும், சைவமும் செழிப்புற்றிருந்ததை வரலாறு சொல்கிறது. 

தமிழர்களுக்கான மாபெரும் அடையாளமான தஞ்சைப் பெருங்கோயில் உள்ளிட்ட பல அடையாளங்களை நிறுவிய சிறப்பு மிக்க சோழர்களின் ஆட்சிமுறையும், வீரமும், விவேகமும் தமிழர்கள் மார்தட்டிப் பெருமிதம் கொள்ளத்தக்க வரலாறுடையவர்கள் என்பதை எண்பிக்கும் சாட்சியங்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ருத்ரக்ஷா அறக்கட்டளையின் (Ruthdraksha Foundation) ஏற்பாட்டில் நேற்று, சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் அமைந்துள்ள இராணி சீதை திரையரங்கில் நடைபெற்ற இராஜராஜசோழன் விருது வழங்கும் விழாவில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, கர்நாடகா, இலங்கை, மலேசியா என்று நாடுகடந்த ரீதியில் மொழிக்கும், கலைக்கும், இனத்துக்குமாக தத்தம் துறைசார்ந்து அளப்பெரும் பணியாற்றிய பல ஆளுமைகள் இந்நிகழ்வில் இராஜராஜசோழன் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/138002

  • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2022 at 08:17, குமாரசாமி said:

சரியான கருத்துக்கள். எதற்கெடுத்தாலும் நொள்ளு நொட்டை பிடித்து நோண்டிக்கொண்டிருந்தால் ஆகப்போவது எதுவுமில்லை. அவர்களின் மாற்று முயற்சிகளின் முடிவுகளை பொறுத்து விமர்சனங்களை வைக்கலாம்.

உலகில் நூறு வீதம்  சரியானவர்கள் யாருமேயில்லை.

தயவுசெய்து உங்கள் கருத்தினை தவறான கருத்தாக கூறுவதாக எடுத்து கொள்ளவேண்டாம், நீங்கள் எனது கருத்தினை சரியாக புரிந்து கொள்ளவில்லையோ எனும் எண்ணத்தில்தான் இந்த பதில் கருத்தினை பதிகிறேன்.

இலஞ்சம் பெறுவது தவறல்ல என்பது உங்கள் கருத்து அல்ல, ஆனால் அரசியல்வியாதிகள் என்றால் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம் என்பது தவறில்லை என நினைப்பது புரிகிறது.

Ethical code of conduct (மனசாட்சியுடன் வேலை செய்தல் என கூறலாம்) என்பது அனைத்து வேலைகளிலும் உள்ளது. 

1970 களில் Ford நிறுவனத்தினது பெயரினால் கவரப்பட்ட மக்கள் பெருமளவு வாகனங்களை கொள்வனவு செய்தனர், மக்களின் தேவைக்கு ஏற்ப உற்பத்தியினை ஈடுகட்ட முடியாத நிலையில் சில குறுக்கு வழிகளில் உற்பத்தியினை அதிகரித்தது, பல பாதுகாப்பு விதிமுறைகளை மீறியது அதன் பலனாக பலர் அந்த வாகனங்களினால் உயிரிழப்பு ஏற்படும் நிலை உருவாகியது.

வர்த்தகத்திற்கு இலாபம்தான் முக்கியம் அப்படிபட்ட நிலையில் அந்த நிறுவனம் தனது முதல் இலட்சியமான வருமானத்தினை கவனத்தில் கொண்டதால் நீண்ட கால அடிப்படையில் அதன் பெயர் கெட்டு போகும் நிலை உருவானது.

அதனால் வருமானம் இழப்பு ஏற்பட்டு முதலுக்கே மோசம் எனும் நிலை உருவானது.

அரசியல்வாதிகளுக்குரிய அடிப்படை தகமையே இலஞ்சம் பெறுவதன் மூலம் இழக்கலாம், வர்த்தகர் கூட குறுக்கு வழியில் வருமானம் தேடினால் நீண்டகாலத்தில் காணாமல் போய்விடுவார்கள்.

ஆனால் அரசியல்வியாதிகளை மட்டும் மக்கள் ஏன் அனுசரித்து அவர்களது தவறுகளூகு ஆதரவு வழங்க வேண்டும்.

முன்பு மிக பிரபலமான ஒரு தமிழ அரசியல் பிரமுகர ஒருவர் இருந்தார், அவர் ஒரு தடவை பிரித்தானியா பயணமானார் பத்திரிகையாளர்களிடம் தமிழ் மக்கள் இனப்ப்பிரச்சினை தொடர்பாக பேசுவதற்காக பிரித்தானியா செல்வதாகக்கூறினார், ஆனால் அவரது மனைவியார் அவர்களது மகன் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிணக்கை தீர்ப்பதற்காகவே பிரித்தானியா செல்வதாக உண்மையினை உளறிவிட்டார்.

இந்த செய்தியில் எனது கருத்தினை பதிய தூண்டியது மேலே குறிப்பிட்ட காலமான பிரபலமான அரசியல் பிரபலம் பிரபலமாகுவதற்கு தமது சொந்த பயணங்களை கூட பயன்படுத்தி மக்களை எமாற்றிய நிகழ்வின் தாக்கத்திலே இக்கருத்தினை பதிந்தேன் என்பதினை ஏற்று கொள்கிறேன்.

இந்த செய்தி நான் கேள்விப்பட்ட செய்தி உண்மை தெரியாது அதனால்தான் அந்த காலமான அரசியல் பிரமுகரின் பெயரினை குறிப்பிடவில்லை, இதனைதான் ethical என குறிப்பிடுவார்கள், சாதாரணமாக  சமூக ஊடகத்தில் கருத்து எழுதும் யாழ்கள வாசகர்கள் கூட தமக்கான கடமையினை பின்பற்றுகிறார்கள்.

ஒரு கதை சொல்வார்கள், ஒரு மன்னன் இரவு நேரத்தில் மாறுவேசத்தில் நாட்டினை பார்க்க புறப்பட்டார் அப்போது ஒரு திருடன் அரண்மனையில் நுழைவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தான்.

அரசன் அத்திருடனிடம் உரையாடியபோது திருடன் கூறினான் தான் அரண்மனையில் திருடப்போகிறேன் எனகூறி அரசனை தனது திருட்டில் பங்கு சேர்த்து அரண்மனையில் இருந்து வைரங்களை திருடினான்.

அரசனிடம் திருடன் கூறினான் அரண்மனையில் 3 விலைஉயர்ந்த வைரங்கள் இருந்தன, பங்கு பிரிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் இரண்டை மட்டும் திருடினேன் என கூறி ஒரு வைரத்தினை மன்னனிடம் கொடுத்து விட்டு திருடன் ஒரு வைரத்தினை எடுத்து கொண்டு போய்விட்டான்.

திருடன் போனபின் உள்ளே சென்ற மன்னன் 3 வது வைரத்தினை திருடன் விட்டு சென்றதினை பார்த்து விட்டு அமைச்சரினை அழைத்து அரண்மனையிலிருந்த வைரங்களை திருடர்கள் திருடிவிட்டார்களாம் போய் பார்த்து வருமாறு கூறினார், அமைச்சர் மீதமிருந்த 1 வைரத்தினை தான் எடுத்து கொண்டு அரசனிடம் கூறினாராம் மன்னா ஆம் மன்னா திருடர்கள் 3 வைரத்தினையும் திருடிவிட்டார்கள் என கூறினானாம், இந்த கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்பதால் அதனை தொடரவில்லை.

நேர்மையான திருடனை அமைச்சர் ஆக்கிய மன்னனை பற்றி சிறு வயதில் நினைத்தேன் ஒரு திருடனை எடுத்து விட்டு இன்னொரு திருடனை அமைச்சராக்கியுள்ளார் மன்னன் என, இந்த கதை உண்மையினை பேசுவதினை வலியுறுத்துவதற்கான கதையாக கூறப்பட்டிருந்தது, ஆனால் இதில் ethic வழங்கப்படுகின்ற முக்கியத்துவம் புரிகிறது.

1988 காலப்பகுதியில் இந்திய இராணுவம் யாழ்பாணத்தில் ஒரு ஊரில் 70 இற்கும் அதிகமான மக்களை கொன்று பல உடமைகளை சேதம் விளைவித்திருந்தது, அந்த நிகழ்வில் ஒரு குடும்பத்தினை சேர்ந்த 2 பிள்ளைகளை இந்திய இராணுவம் கொன்றுவிட்டது அவர்களது உடல் கிடைக்கவில்லை.

பெற்றோருக்கு கண்முன்னே உயிருடன் இழுத்து செல்லப்பட பிள்ளைகள் உயிருடன் இருப்பார்கள் என்ற  நம்பிக்கையில் இந்திய இராணுவம் இலங்கையினை விட்டு சென்று பலவருடங்களின் பின்னரும் வருடக்கணக்கில் தேடிக்கொண்டிருந்தார்கள்.

7 வருடம் கழித்து ஒருவரிடம் அந்த தாய் தந்தையர் பேசும் போது அந்த தந்தை சொன்னார், தாயினை காட்டி சொன்னார், இவள்தான் உண்மை விளங்காமல் இருக்கிறாள் என கூறிவிட்டு அந்த நபரை பார்த்தாரம் அவர் கூட, இல்லை உங்கள் குழந்தைகள் உயிருடந்தான் உள்ளார்கள் எனும் ஆறுதல் வார்த்தைகள் கேட்பதற்கு விருப்பப்பட்டவர் போலிருந்தாராம்.

அந்த பெற்றோர் உயிருடன் இருந்தால் உயிருடன் இருந்தால் இப்போதும் தமது குழந்தைகளை தேடிக்கொண்டிருப்பார்கள் என கருதுகிறேன்.

எந்த மனிதர்களால் இப்படி பட்டவர்களிடம் முதலில் காசு பறிக்க மனம் வரும், பின்னர் எப்படி அவர்கள் மனதினை உடைக்கமுடியும்?

இந்த சம்பவம் காணாமல் போனோரின் குடும்பத்தினரது மனநிலையினை குறிப்பிடுவதற்காக உதாரணத்திற்காக குறிப்பிடப்பட்டது மட்டுமே யாரையும் நேரடியாக குற்றம் சாட்டவில்லை, எனது கருத்து கேள்விப்பட்டதின் அடிப்படியிலேயே உள்ளது தவறாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

தொடர்ந்து எழுதுங்கள்  ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சந்திப்புகளால்.  எந்த பிரயோஜனமுமில்லை.   ...ஒரு தேவையற்ற நம்பிக்கையை வளர்க்கவும்   காலத்தை வீணடிக்கவும்.  தான் உதவும் மேலும் சீமான்  திருமாவளவன்......போன்றோர்  மேடைகளில். .....கூட்டத்தில்...பேச நல்ல தகவல்கள் கிடைத்திருக்கும்.   கடந்த காலத்தில் இவை பற்றி நாங்கள் நன்கு கற்றுக்கொண்டோம்.    இந்தியா பாராளுமன்றத்தில் எந்தவித அனுமதியின்றி இலங்கைக்கு ஆயுதம் வழங்க சோனியாகாந்தியால்  முடிந்திருக்கிறது.  இது பற்றி இன்றைய இந்தியா அரசு ஏதாவது நடவடிக்கைகள் எடுத்தா? இல்லையே?.  ஏன்?.   சரி என்பது இன்றைய அரசின் நிலைப்பாடு   பொதுவாக இலங்கை தமிழருக்கு எதிராக எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும்.  இந்தியாவில் மத்தியில் ஆளும் எந்தவொரு அரசும் ஆதரிக்கும்   இதுவரை காலத்தில் மத்தியரசுக்கு பயப்படமால். எவரும் தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்ததில்லை. ..தமிழ்நாட்டில் எவரையும் சந்திக்கலாம் ஆனால் ஒரு சதத்துக்கு. பிரயோஜனம் இல்லை     எங்கள் கை தான் எங்களுக்கு உதவி        எங்களை நாங்கள் நம்ப வேண்டும்   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.