Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் கோர விபத்து : மூவர் பலி, 16 பேர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் கோர விபத்து :  மூவர் பலி, 16 பேர் காயம்

05 NOV, 2022 | 06:50 AM
image

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.

இன்று சனிக்கிழமை (05) அதிகாலை 12.15 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, 

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நொச்சிமோட்டை பாலத்தில் மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதன்போது பஸ் சாரதியான ரூபன் மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதுடன், குறித்த பஸ்ஸில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அதில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்து ஏற்பட்ட சமயம் அதே திசையில் பயணித்துக்கொண்ட மற்றுமொரு சொகுசு பஸ்  சாரதி தனது பஸ்ஸை விபத்து ஏற்பட்டுவதை தவிர்க்கும் முகமாக வீதியின் ஒரமாக செலுத்தி மற்றுமொரு விபத்தை தவிர்த்திருந்தார்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG-20221105-WA0028.jpg

IMG-20221105-WA0024.jpg

IMG-20221105-WA0025.jpg

IMG-20221105-WA0005.jpg

IMG-20221105-WA0027.jpg

IMG-20221105-WA0002.jpg

https://www.virakesari.lk/article/139160

  • கருத்துக்கள உறவுகள்

 

 

வவுனியாவில் பேரூந்து விபத்து – மூவர் உயிரிழப்பு 16 பேர் காயம்

வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) அதிகாலை 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு கவிழ்ந்துள்ளது.

இதன்போது பேரூந்து சாரதியும் மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், குறித்த பேரூந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து ஏற்பட்ட சமயம் அதே திசையில் பயணித்துக்கொண்ட மற்றுமொரு சொகுசு பேரூந்து சாரதி தனது பேரூந்தை விபத்து ஏற்பட்டதை தவிர்க்கும் முகமாக வீதியின் ஒரமாக செலுத்தி மற்றுமொரு பேரூந்து விபத்தை தவிர்த்திருந்தார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2022/1308992

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவங்கட வேகமான வாகன ஓட்டும் முறை தான் கட்டுப்பாட்டை இழக்க முக்கிய காரணமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா பஸ் விபத்தில் பலியானவர்கள் குறித்து வௌியான தகவல்!

வவுனியா பஸ் விபத்தில் பலியானவர்கள் குறித்து வௌியான தகவல்!

 

வவுனியா விபத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவி உட்பட உயிரிழந்த மூவரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு பேரூந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வவுனியா, நொச்சிமோட்டை பாலத்தில் மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மூவர் மரணமடைந்ததுடன், 16 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விபத்தில் யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவியான நாவலம்பிட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் அஜாகரி (வயது 23), சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (வயது 32), தம்பசிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 24) ஆகியோரே மரணமடைந்தவர்களாவர்.

சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.


 

-வவுனியா தீபன்-

https://tamil.adaderana.lk/news.php?nid=167387

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இருந்தான.. அல்லது யாழ் நோக்கிய நீண்ட தூர பேரூந்துகள்.. தொடரூந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருவதோடு.. பயணங்கள் அச்சம் நிறைந்தவையாக அமைகின்றன.

விபத்துக்களுக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு தங்க பாதுகாப்பு முன்னேற்பாடுகள்.. செய்யப்படாமை மற்றும் பயணிகளின் சாரதிகளின் நலனை முன்னிறுத்தாத வருவாய் நோக்கமான சேவைகளே இந்த நிலை தொடரக்காரணமாகும். 

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடந்த கால பாடங்களில் இருந்து உள்வாங்கப்படும்.. தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி... இப்படியான போக்குவரத்துக்களை செய்ய தடை அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பதே இந்த அச்ச நிலை தொடராமல் இருக்க வழி வகுக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள தேசங்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் அமைத்துள்ளார்கள்.அனேகமானவை வெறிச்சோடியே காணப்பட்டன.

வடக்கிற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வீதியாக இருந்தும் இன்னமும் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவில்லை.

இதன் உள்நோக்கங்கள் இன்னமும் புரியவில்லை.

போர் முடிந்தவுடன் தமிழர் தாயகங்களுக்காக கொடுக்கப்பட்ட நிதிகளிலிருந்து சிங்கள பிரதேசங்களை அபிவிருத்தி செய்துள்ளார்கள்.

வடக்கிற்கு என்றெரு நெடுஞ்சாலை இருந்தால் இப்படி சிறிய வீதிகளில் வாகனங்களை நிற்பாட்டி கைத்திருப்பது போல நெடுஞ்சாலைகளில் நிற்பாட்டி வைக்க மாட்டார்கள்.

கனரக வாகனங்கள் சாதாரண வீதியிலேயே பயணிக்கலாம்.

தூர தேசங்கள் போகிற வாகனங்களும் சிறிய வீதியில் அடித்து பிடித்து ஓட தேவையில்லை.

 

பொலிசாருக்கு ஒரேஒரு பிரச்சனை.

இப்போது வடக்கு வீதிகளில் போய்வரும் வாகனங்களை மறித்து தண்டம் என்ற பெயரில் கப்பம் அறவிட முடியாது.

On 5/11/2022 at 02:37, தமிழ் சிறி said:

விபத்து ஏற்பட்ட சமயம் அதே திசையில் பயணித்துக்கொண்ட மற்றுமொரு சொகுசு பேரூந்து சாரதி தனது பேரூந்தை விபத்து ஏற்பட்டதை தவிர்க்கும் முகமாக வீதியின் ஒரமாக செலுத்தி மற்றுமொரு பேரூந்து விபத்தை தவிர்த்திருந்தார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

 

 

 

10 நிமிட ஓய்வென்பது யாரால் தீர்மானிக்கப்பட்டது. 10 நிமிட ஓய்வு காணாது. மேலும் இரவு நீண்ட தூரப் பயணங்களில் ஒரே சாரதியை பயன்படுத்தக் கூடாது. எப்போதும் துணைச் சாரதி வைக்கப்பட வேண்டும். 20 நிமிட ஓய்வும்... சாரதிகள் மாற்றி மாற்றி சேவை ஆற்றுவதும் அவசியம். 

ஆளுநர் தகுந்த ஆலோசனைகள் இன்றி சகட்டு மேனிக்கு தீர்மானங்கள் எடுப்பது பிரச்சனைகளுக்கு தீர்வாகாது.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பகுதியை உலுக்கிய கோர விபத்து - உயிர் தப்பியோர் வழங்கிய பதறவைக்கும் வாக்குமூலம்

வவுனியா, நொச்சிமோட்டை பாலத்துக்கு அருகில் விபத்து இடம்பெறுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னரே உணவுக்காக கடையொன்றில் அதிசொகுசு பேருந்து நிறுத்தப்பட்டது. இதனால் பேருந்தில் பெரும்பாலானவர்கள் நித்திரை கொள்ளவில்லை.

விபத்து இடம்பெற்றபோது விழித்திருந்தமையால் பேருந்தின் கம்பிகளைப் பிடித்து அதிகளவானோர் உயிர்ச் சேதங்கள் இன்றி தப்பித்தனர் என விபத்துக்குள்ளான குறித்த அதிசொகுசு பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட அதி சொகுசு பேருந்து வவுனியா, நொச்சிமோட்டை பாலத்துக்கு அருகில் அதிகாலை 12.20 மணியளவில், வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதகுடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

3 பேர் உயிரிழப்பு 23 பேர் காயம்

 

 

தமிழர் பகுதியை உலுக்கிய கோர விபத்து - உயிர் தப்பியோர் வழங்கிய பதறவைக்கும் வாக்குமூலம் | Vavuniya Bus Accent Details

இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் அநுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களில் 4 பேர் நேற்று மாலை வீடு திரும்பினர்.

யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவபீட மாணவியான நாவலப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த இராமகிருஷ்ணன் சயாகரி (வயது - 23),

சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (வயது 32),

இன்பர்சிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 25) ஆகியோரே உயிரிழந்தனர்.

உயிரிழந்த முதலாம் வருட மாணவியான சயாகரி, வீடு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்தில் உயிரிழந்தார்.

இதேவேளை, நிதர்சன் வெளிநாடு செல்லும் பயண ஏற்பாட்டுக்காகக் கொழும்புக்குச் சென்றுகொண்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

 

வடமராட்சியைச் சேர்ந்தவர் தெரிவித்ததாவது:-

 

தமிழர் பகுதியை உலுக்கிய கோர விபத்து - உயிர் தப்பியோர் வழங்கிய பதறவைக்கும் வாக்குமூலம் | Vavuniya Bus Accent Details

"இரவு 11.45 மணியளவில் கனகராயன்குளத்தில் உணவுக்காக பேருந்து நிறுத்தப்பட்டது.

சுமார் 10 அல்லது 15 நிமிடங்களில் அங்கிருந்து பேருந்து புறப்பட்டது. தேநீர் அருந்தி, உணவு உண்டமையால் பேருந்தில் பெரும்பாலானவர்கள் விழிப்பாகவே இருந்தார்கள்.

சுமார் 20 நிமிடத்தில் பேருந்து வளைவு ஒன்றில் திரும்பியது. இதன்போது பேருந்து கொஞ்சம் தளம்பியதை உணர முடிந்தது.

அந்த வளைவைத் தொடர்ந்து வந்த மற்றொரு வளைவில் மதகுடன் இதேபோன்று திரும்பும் போதே மோதியது.

அந்த மதகுடன் அமைந்திருந்த நடைபாதை போன்ற ஒற்றையடி பாதையில் பேருந்தின் ஒரு சில்லும், மதகின் மற்றைய பக்கத்துடன்பேருந்தின் பின்முனையும் மோதி சாரதியின் இருக்கைப் பக்கமாக பேருந்து சரிந்து விழுந்தது.

தூக்கி வீசப்பட்ட மாணவி, சாரதி

 

 

தமிழர் பகுதியை உலுக்கிய கோர விபத்து - உயிர் தப்பியோர் வழங்கிய பதறவைக்கும் வாக்குமூலம் | Vavuniya Bus Accent Details

பெரும்பாலானவர்கள் விழித்திருந்தமையால் பேருந்து சரியும் போதே கம்பிகளைப் பிடித்து தப்பினர்.

சாரதியும், பல்கலைக்கழக மாணவியும் தூக்கி வீசப்பட்டு கல்லுடன் மோதுண்டிருந்தார்கள்.

மற்றையவர், கண்ணாடி உடைந்து வெளியே விழுந்துள்ளார். அவர் மீதே பேருந்து சரிந்து வீழ்ந்தது.

பின்னால் இன்னொரு அதிசொகுசு பேருந்தும் வந்தது. அதுவும் தளம்பியவாறே வந்தாலும், சாரதியின் சாதுரியத்தால் விபத்திலிருந்து தப்பித்தது.

வீதியை விட்டு விலகினாலும் விபத்து ஏற்படவில்லை.

அங்கிருந்து ஓடிய நடத்துநர்

 

தமிழர் பகுதியை உலுக்கிய கோர விபத்து - உயிர் தப்பியோர் வழங்கிய பதறவைக்கும் வாக்குமூலம் | Vavuniya Bus Accent Details

அந்த பேருந்தில் வந்தவர்களும் உடனடியாக உதவிகளைச் செய்து எமது பேருந்தில் பயணித்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்.

பேருந்தின் நடத்துநர் இளைஞர் ஒருவரே. அவர் முதல் தடவையாக இந்த பேருந்தில் பணியாற்றினார்.

அவரும் எங்களுடன் கம்பியைப் பிடித்தே உயிர் தப்பினார்.

சாரதி உயிரிழந்ததைப் பார்த்ததும் பயத்தால் அவர் அங்கிருந்து ஓடி விட்டார்" - என்றார்.

3 அதிசொகுசுப் பேருந்து விபத்துக்கள்

 

 

தமிழர் பகுதியை உலுக்கிய கோர விபத்து - உயிர் தப்பியோர் வழங்கிய பதறவைக்கும் வாக்குமூலம் | Vavuniya Bus Accent Details

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் இந்த விபத்து உள்ளடங்கலாக நேற்று மாத்திரம் 3 அதிசொகுசுப் பேருந்து விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த விபத்தில் மாத்திரமே பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.

வவுனியா, நொச்சிமோட்டைப் பாலதுக்கு அருகில் விபத்துக்குளான அதிசொகுசு பேருந்தை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்ட போது ஏ - 9 வீதிப் போக்குவரத்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாகப் பாதிக்கப்பட்டது.

https://ibctamil.com/article/vavuniya-bus-accent-details-1667796785

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

இரவு 11.45 மணியளவில் கனகராயன்குளத்தில் உணவுக்காக பேருந்து நிறுத்தப்பட்டது.

சுமார் 10 அல்லது 15 நிமிடங்களில் அங்கிருந்து பேருந்து புறப்பட்டது. தேநீர் அருந்தி, உணவு உண்டமையால் பேருந்தில் பெரும்பாலானவர்கள் விழிப்பாகவே இருந்தார்கள்.

நீண்ட காலமாகவே பேரூந்துகள் நிறுத்தப்படும் இடங்களில் சாரதி நடத்துனர்களுக்கென தனியான இடம் ஒதுக்கி அவர்களுக்கு வியாபாரத்தை வழங்கியதற்காக இலவச சாப்பாடு குடிவகை என கொடுக்கப்படுவதுண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

நீண்ட காலமாகவே பேரூந்துகள் நிறுத்தப்படும் இடங்களில் சாரதி நடத்துனர்களுக்கென தனியான இடம் ஒதுக்கி அவர்களுக்கு வியாபாரத்தை வழங்கியதற்காக இலவச சாப்பாடு குடிவகை என கொடுக்கப்படுவதுண்டு.

எழுஞாயிறு அவர்களின் கருத்து இங்கு பொருத்தமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

எழுஞாயிறு அவர்களின் கருத்து இங்கு பொருத்தமாக இருக்கும்.

நானும் பார்த்தேன்.

சிலதுகள் நடைமுறைக்கு அப்பால்பட்டவை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாழும் நாட்டில் 

நான் ஒரு தொழில்முறைப் பொதுப்போக்குவரத்து பேருர்ந்து ஓட்டுனர் தவிர அது தொடர்பான பகுதிநேர தொழில்நுட்பப் பரிசோதகர். இங்கு என்ன விடையங்கள் கடைப்பிடிக்கப்படுகிறதோ அவற்றில் சிலவற்றையே இங்கு நான் பரிந்துரைத்திருக்கிறேன்.

  அனைத்து ஓட்டுனர்களுக்கான மதுப் பரிசோதனை அதிகரிப்பு, இருக்கைகளுக்கான பாதுகாப்புப் பட்டி, பேரூர்ந்து ஓட்டுனருக்கான சிறப்புப் பயிற்சி இவைகள் இலங்கைத்தீவில் சாத்தியமே.

அண்மையில் நான் யாழிலிருந்து கொழும்பு சென்றபோது  வெள்ளவத்தைச் சந்தைக்கருகில் அதிகாலை மூன்றுமணிக்கு இறக்கிவிட்டுட்டார்கள் என்னைச் சுத்தி ஐந்து ஆறு அட்டோகாரர்கள் மொய்த்துவுவிட்டார்கள் நல்லகாலம் உறவினர் ஒருவர் வந்து காப்பாற்றிவிட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்

2019 இல் நானும் மனைவியும் ஊருக்கு சென்றபோது யாழில் இருந்து கொழும்பை நோக்கி செல்ல பகல் நேர சொகுசு பஸ்வண்டி முன்பதிவு செய்திருந்தேன். பயண நாளில் வீதியோரம் காத்து நின்றபோது நாங்கள் எதிர்பார்த்திருந்த புதிய சொகுசு வண்டியொன்றுக்கு பதிலாக பழைய பஸ் வண்டியொன்று வந்து எங்களை ஏற்றிகொண்டது. அது எங்களுக்கு கிடைத்த முதலாவது அதிர்ச்சி.

அடுத்தது வழி நெடுகிலும் சாரதி வேகத்தை அனுசரித்து வண்டியை ஓட்டாதது எமக்கு மிக்க பயத்தை உண்டாக்கியது. பயணம் முழுவதும் அவ்வளவு பயங்கரமானதாக உணர்ந்தோம். எனது மனைவி வழி நெடுக  இதுபற்றி கவலையுடன் சொல்லிக்கொண்டே வந்தாள். சொல்லிவைத்தாற்போல் வவுனியாவில் ஒரிடத்தில் இடைவேளைக்காகவும் உணவுக்காகவும் வண்டி 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டபின் கிளம்பினோம். இப்போது எங்களை பயம் இன்னும் கெளவிக்கொண்டது. காரணம் பஸ்வண்டி முன்புபோல் அதிவேகமாக சென்றது மட்டுமல்ல ஓடு பாதையில் பல இடங்களில் அங்கும் இங்கும் என்று குடைசாய்வதுபோல்  நிலைகுலைந்து சென்றது.

சிலாபத்தை அண்மிக்கும்போது இஸ்கூட்டர் ஒன்றில் வந்த ஒருவரை பஸ் மோதியது (உயிருக்கு ஆபத்தில்லை) அத்துடன் எங்கள் பயணம் தடைப்பட்டு பல மணி நேரம் அங்கு வீதிஒரம் காத்து நிற்கவேண்டிய அவலம். போலீசார் வந்து பஸ்சுடன் சாரதி நடத்துனர் அனைத்தையும் போலிஸ் நிலயத்துக்கு ஓட்டிசென்றுவிட்டார்கள்.

என்னிடம் கைத்தொலைபேசியில் "PickMe" செயலி இருந்ததால் அதன்மூலம் அந்த வழியே தற்செயலாக சென்ற ஒரு வாடகை காரை அழைத்து அதில் எமது பயணத்தை கொழும்பு நோக்கி தொடர்ந்தோம்.(PickMe செயலி பொதுவாக சிலாபம் பிரதேசத்தில் இயங்காது என்பதை நாங்கள் பயணித்த வாடகை காரின் சாரதி மூலம் அறிந்துகொண்டோம்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் - கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களும் முகமாலையில் பரிசோதனை

By DIGITAL DESK 5

09 NOV, 2022 | 09:55 PM
image

யாழ் கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி,சாரதி அனிமதிபத்திரங்களும் வெள்ளிக்கிழமை (11) முதல் முகமாலையில் பரிசோதிக்கப்பட உள்ளதாக  வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உறுப்பினரும் வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான சி.சிவபரன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் (08)வடமாகாண உள்ளுராட்சி அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் கொழும்பு- யாழ்ப்பாண இரவு சேவையில் ஈடுபடும் பஸ்கள் அனைத்தினதும்  வழித்தட அனுமதி பத்திரங்கள்,சாரதி அனுமதிபத்திரம்  முகமாலையில் பரிசோதிக்கப்படுவது எனவும் அதேபோல புளியங்குளப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் அனைத்து பஸ்களும் 20 நிமிடங்கள் நிறுத்தி மீண்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கைதடியில்  உள்ளூராட்சி அமைச்சில்  உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் எனவே நாளை மறுதினத்தில் இருந்து யாழ்ப்பாண கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பஸ் உரிமையாளர்கள் தங்களுடைய வழித்தட அனுமதிப்பத்திரம் மற்றும் விசேட சாரதி அனுமதிப்பத்திரம்  என்பவற்றை தங்களுடன் உடமையில் வைத்திருப்பது மிகவும் அவசியமெனவும் அது தவறும் பட்சத்தில் பொலிஸார் மற்றும் வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகளால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு பயணித்த பஸ் வவுனியாவில் வேக  கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி மூவர் உயிரிழந்தவை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/139557

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஏராளன் said:

யாழ் - கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களும் முகமாலையில் பரிசோதனை

பரிசோதனை என்ற பெயரில் கொஞ்ச பேர் நல்லா பணம் பண்ண போறாங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்ன முகமாலையில....? ஆனையிறவு என்னாச்சு?

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

அதென்ன முகமாலையில....? ஆனையிறவு என்னாச்சு?

ஆள் நடமாட்டமில்லாத இடமா பார்க்கிறாங்கள்.

இனிமேல் ரிக்கட் விலை உயரும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அதென்ன முகமாலையில....? ஆனையிறவு என்னாச்சு?

இப்ப புழுக்கைக்கெல்லாம் புலியென்ட நினைப்பு, அது தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

பரிசோதனை என்ற பெயரில் கொஞ்ச பேர் நல்லா பணம் பண்ண போறாங்க.

இரண்டு அல்லது மூன்று இடங்களில் சோதனை செய்தால் தான் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

உணவுக்காக பஸ் நிறுத்தப்படும் இடங்களில் கடை உரிமையாளர்களால் சாரதிகள் விசேடமாக கவனிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு மதுபானமும் வேறு போதைப்பொருள்களும் அங்கு வளங்கப்படுகிறது. இப்படி பஸ்வண்டி தரிக்கும் இடங்களில் சாரதியும் நடத்துனரும் பயணிகளுடன் இருந்து உணவருந்துவதில்லை. அவர்கள் தனியான இடத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு பஸ்புறப்படும் சமயத்தில் அவ்விடத்துக்கு வருவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.