Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டிசெம்பர் 12 முதல் மீண்டும் பலாலி-சென்னை விமான சேவை?

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

நெடுந்தீவுக்கு வெள்ளைக்காரன் வைத்த பெயர் Delft என நினைக்கின்றேன்.

டச்சுகாரன்.

இப்போதும் பெல்ஜியம்-ஜெர்மனி போகும் வீதியில் நெதர்லாந்து வழியாக போனால் ஒரிஜினல் Delft ஐ பார்க்கலாம்.

  • Replies 52
  • Views 2.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

நெடுந்தீவுக்கு வெள்ளைக்காரன்வைத்த பெயர் Delft என நினைக்கின்றேன்.

போர்த்துகேயன் முதலில் பிடித்த போது வைத்த பெயர்: Ilha das Vacas ("Island of the Cows")
டச்சுக்காரன் வச்ச பெயர்தான் Delft 

Kayts, Leiden (வேலணை), Delft மூன்றுமே நெதர்லாந்தில் உள்ள நகரங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

டச்சுகாரன்.
இப்போதும் பெல்ஜியம்-ஜெர்மனி போகும் வீதியில் நெதர்லாந்து வழியாக போனால் ஒரிஜினல் Delft ஐ பார்க்கலாம்.

ஆரோ…. ஒரு டச்சுக்காரன், Delft‘ல் இருந்து…. நெடுந்தீவுக்கு வந்து,
தன்னுடைய ஊர்ப் பெயரை வைத்து விட்டு போயுள்ளான்.
கொழும்பு, லண்டன், கனடாவில்… குட்டி யாழ்ப்பாணம் இருப்பது மாதிரி..
இதுகும்… ஒரு ஊர்ப்பாசம் தான். 😁

6 minutes ago, Nathamuni said:

போர்த்துகேயன் முதலில் பிடித்த போது வைத்த பெயர்: Ilha das Vacas ("Island of the Cows")
டச்சுக்காரன் வச்ச பெயர்தான் Delft 

Kayts, Leiden (வேலணை), Delft மூன்றுமே நெதர்லாந்தில் உள்ள நகரங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தீவுப்பகுதியில், வெள்ளைக்கடற்கரை என்று பகுதியை Chaddy என்று அழைப்பார்கள்.

இந்த பெயர் யார் வைத்தது என்று தெரியவில்லை. ஆனால் இஸ்லாமிய வர்த்தகர்கள் இங்கே தங்கி இருந்திருக்கிறார்கள், அவர்கள் பள்ளி ஒன்றும் உள்ளது.

அல்லைப்பிட்டி பகுதியில், தாம் 11ம் நூறாண்டில் வந்து தங்கி வியாபாரம் செய்ததாக, 2017ல் சீனாக்காரர் வந்து கிண்டினார்கள்.

https://www.google.co.uk/maps/place/Mankumban,+Sri+Lanka/@9.6563704,79.8952611,13.25z/data=!4m5!3m4!1s0x3afe51bf4c52569d:0xc2d3c3b1464ff391!8m2!3d9.6343901!4d79.9444526?hl=en&authuser=0

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

பின்னாளில் வந்த ஒரு கொள்ளைகாரன்- இனப்பாசம் மேலீட்டதால் - சென்னை என்று வைத்தார் என்று சொல்வார்கள். 

🤣🤣

கொள்ளைகாரன் 😎😁

தயவு செய்து நிழலியை ஓய்வாக இருக்க விடுங்கோ... மனிசன் கத்தியோட ஓடி வர வையாதையுங்கோ.... 😁

ஆ... அட.. கொள்கைக்காரன்.... நான் தான் அவசரத்திலை மாறி வாசிச்சு போட்டன்..  🤦‍♀️🤭🤑

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Nathamuni said:

தீவுப்பகுதியில், வெள்ளைக்கடற்கரை என்று பகுதியை Chaddy என்று அழைப்பார்கள்.

இந்த பெயர் யார் வைத்தது என்று தெரியவில்லை. ஆனால் இஸ்லாமிய வர்த்தகர்கள் இங்கே தங்கி இருந்திருக்கிறார்கள், அவர்கள் பள்ளி ஒன்றும் உள்ளது.

அல்லைப்பிட்டி பகுதியில், தாம் 11ம் நூறாண்டில் வந்து தங்கி வியாபாரம் செய்ததாக, 2017ல் சீனாக்காரர் வந்து கிண்டினார்கள்.

https://www.google.co.uk/maps/place/Mankumban,+Sri+Lanka/@9.6563704,79.8952611,13.25z/data=!4m5!3m4!1s0x3afe51bf4c52569d:0xc2d3c3b1464ff391!8m2!3d9.6343901!4d79.9444526?hl=en&authuser=0

நாதம், 

அது சாட்டி. வேலணையில் இருக்கு. உங்கட டில்கோ ஒரு விடுதியும் வச்சிருக்கார்.

Cha - aa -tt - ee . தமிழ் பெயர் என்றுதான் நினைக்கிறேன்.

முஸ்லிம் சாவுகட்டு (தர்ஹா?) இருப்பது உண்மை. 1990 க்கு முன் முஸ்லிம்கள் சிறிய அளவில் வசித்தார்கள் என நினைக்கிறேன்.

30 minutes ago, Nathamuni said:

🤣🤣

கொள்ளைகாரன் 😎😁

தயவு செய்து நிழலியை ஓய்வாக இருக்க விடுங்கோ... மனிசன் கத்தியோட ஓடி வர வையாதையுங்கோ.... 😁

ஆ... அட.. கொள்கைக்காரன்.... நான் தான் அவசரத்திலை மாறி வாசிச்சு போட்டன்..  🤦‍♀️🤭🤑

சும்மா இரும் ஐயா. நானே கருத்தோட கருத்தா அதை கலந்து விட்டேன் என்று இருந்தேன், இப்படியா பப்பரபாம் அடிப்பீர்கள்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

நாதம், 

அது சாட்டி. வேலணையில் இருக்கு. உங்கட டில்கோ ஒரு விடுதியும் வச்சிருக்கார்.

Cha - aa -tt - ee . தமிழ் பெயர் என்றுதான் நினைக்கிறேன்.

முஸ்லிம் சாவுகட்டு (தர்ஹா?) இருப்பது உண்மை. 1990 க்கு முன் முஸ்லிம்கள் சிறிய அளவில் வசித்தார்கள் என நினைக்கிறேன்.

முஸ்லீம்கள் அங்கே இருந்தார்கள் என்பது, பல நூறாண்டுகளுக்கு முன்னர். வர்த்தக நோக்கத்தில் வந்தவர்கள். சாட்டி என்பது, இப்படி வந்த முஸ்லீம்கள் வர்த்தகர்கள், அல்லது போர்த்துக்கேயர், டச்சுக்காரர் வைத்த பெயராக இருக்கலாம் என்ற ஒரு கருத்து உண்டு.
 
விசாரித்துக் கொண்டிருக்கிறேன். தகவல் தெரிந்தால் பகிர்கிறேன்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

முஸ்லீம்கள் அங்கே இருந்தார்கள் என்பது, பல நூறாண்டுகளுக்கு முன்னர் வர்த்தக நோக்கத்தில் வந்தவர்கள். சாட்டி என்பது, இப்படி வந்த முஸ்லீம்கள் வர்த்தகர்கள், அல்லது போர்த்துக்கேயர், டச்சுக்காரர் வைத்த பெயராக இருக்கலாம் என்ற ஒரு கருத்து உண்டு.
 
விசாரித்துக் கொண்டிரருக்கிறேன். தகவல் தெரிந்தால் பகிர்கிறேன்.

மெல்லமாக கதையுங்கள்.
காத்தான்குடிகாரருக்கு… இது கேட்டுதோ….
நாளைக்கே அல்லைப் பிட்டிக்கு வந்து, குந்தி இருந்திடுவானுங்கள் கபோதிகள். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

முஸ்லீம்கள் அங்கே இருந்தார்கள் என்பது, பல நூறாண்டுகளுக்கு முன்னர் வர்த்தக நோக்கத்தில் வந்தவர்கள். சாட்டி என்பது, இப்படி வந்த முஸ்லீம்கள் வர்த்தகர்கள், அல்லது போர்த்துக்கேயர், டச்சுக்காரர் வைத்த பெயராக இருக்கலாம் என்ற ஒரு கருத்து உண்டு.
 
விசாரித்துக் கொண்டிருக்கிறேன். தகவல் தெரிந்தால் பகிர்கிறேன்.

இருக்கலாம்.

இலங்கையில் எம்மை போலவே, சிங்களவரை போலவே முஸ்லிம்களும் வந்தேறி+பூர்வ குடியின் வாரிசுகளாகவே இருக்க முடியும்.

இலங்கையில் யாரும் 100% பூர்வகுடியும் இல்லை, 100% வந்தேறியும் இல்லை, வேடர்களை தவிர என்பது என் கருத்து.

ஆகவே சாட்டியில் பலகாலமாகவே -90 வரை இவர்கள் வாழ்ந்திருக்கலாம்.

அரபு வர்தகர்கள் இலங்கையை செரெண்டிப் என அழைத்துள்ளார்கள். அப்படியே இங்கே குடும்பங்களை உருவாக்கி அவர்களை இஸ்லாமியராக வளர்தெடுத்திருக்கிறார்கள்.

இப்படிதான் காத்தான்குடியும், பேருவளையும் முஸ்லிம் ஊரகளாகி இருக்க வேண்டும். அதே போல் யாழ்பாணத்தில் ஒரு ஊரும் உருவாகியது என்பது தர்க்க நியாயம் உள்ளதுதான்.

தகவல்கள் வந்தால் சொல்லவும்.

22 minutes ago, தமிழ் சிறி said:

மெல்லமாக கதையுங்கள்.
காத்தான்குடிகாரருக்கு… இது கேட்டுதோ….
நாளைக்கே அல்லைப் பிட்டிக்கு வந்து, குந்தி இருந்திடுவானுங்கள் கபோதிகள். 🤣

AfD யை இறக்க வேண்டியதுதான். தமிழர் பிரிவு செயலாளர் உங்கட அண்ணைதானே🤣.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

மெல்லமாக கதையுங்கள்.
காத்தான்குடிகாரருக்கு… இது கேட்டுதோ….
நாளைக்கே அல்லைப் பிட்டிக்கு வந்து, குந்தி இருந்திடுவானுங்கள் கபோதிகள். 🤣

சாட்டி முதல், மன்னார், புத்தளம், மேற்கு கடற்கரைப்பகுதியில் பாணந்துறை, பேருவளை, காலி, கிழக்கே காத்தான்குடி வரை, ஜரோப்பியர் காலத்தில் காயல்பட்டனம், அதிராம் பட்டணம்.....என்று தென் தமிழகத்தில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் வந்த குடியேறிகள். 😁

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

சாட்டி முதல், மன்னார், புத்தளம், மேற்கு கடற்கரைப்பகுதியில் பாணந்துறை, பேருவளை, காலி, கிழக்கே காத்தான்குடி வரை, ஜரோப்பியர் காலத்தில் காயல்பட்டனம், அதிராம் பட்டணம்.....என்று தென் தமிழகத்தில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் வந்த குடியேறிகள். 😁

ஒன்றை கவனித்தீர்களா பாக்கு நீரிணையின் இரு பகுதியில் எங்கு வசித்தாலும் இந்த மக்களின் வீட்டு மொழி தமிழ் அல்லது ஆதியில் தமிழாய் இருந்த மலையாளம்தான்.

இவர்கள் எப்படி முஸ்லிம் ஆனார்கள்? வட இந்தியா போல் படை எடுப்பால் அல்ல. மிக பிந்திய நாட்கள் வரை தென்னிந்தியா, இலங்கை இஸ்லாமிய படை எடுப்புக்கு ஆளாகவில்லை.

ஆகவே,

அரபு வர்த்தகர்+உள்ளூர் வாசிகள் என்பதே சரியாகபடுகிறது. அதன் பின் உள்ளூர்வாசிகளும் சாதி கொடுமையில் இருந்து தப்ப கூட்டம் கூட்டமாக மதம் மாறி இருக்கலாம்.

சேரமான் பெருமாள் மஸ்ஜிஸ் இந்தியாவிலேயே பழமையான மசூதி.

இதை பற்றி தேடிப்பார்த்தால் - உண்மையில் நமது இன்றைய வேறுபாடுகள் எவ்வளவு மேலோட்டமானவை என புரியும்.

ஆனால் இப்போ டூ லேட்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிகு

சேரமான் பெருமாள் பற்றி எனக்கு அறிமுகம் செய்தவர் @வாலி

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

AfD யை இறக்க வேண்டியதுதான். தமிழர் பிரிவு செயலாளர் உங்கட அண்ணைதானே🤣.

இண்டைக்கு அண்ணையை, இந்தப் பக்கம் காணவில்லை.
திடீரென்று… சொல்லாமல் கொள்ளாமல் லீவு எடுத்து விட்டார். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

ஒன்றை கவனித்தீர்களா பாக்கு நீரிணையின் இரு பகுதியில் எங்கு வசித்தாலும் இந்த மக்களின் வீட்டு மொழி தமிழ் அல்லது ஆதியில் தமிழாய் இருந்த மலையாளம்தான்.

இவர்கள் எப்படி முஸ்லிம் ஆனார்கள்? வட இந்தியா போல் படை எடுப்பால் அல்ல. மிக பிந்திய நாட்கள் வரை தென்னிந்தியா, இலங்கை இஸ்லாமிய படை எடுப்புக்கு ஆளாகவில்லை.

ஆகவே,

அரபு வர்த்தகர்+உள்ளூர் வாசிகள் என்பதே சரியாகபடுகிறது. அதன் பின் உள்ளூர்வாசிகளும் சாதி கொடுமையில் இருந்து தப்ப கூட்டம் கூட்டமாக மதம் மாறி இருக்கலாம்.

இதன் பின்னனி, மிளகு வர்த்தகத்தில் தொடங்குகிறது. சிலுவை யுத்தம் காரணமாக ஜரோப்பியர், மத்திய தரைகடல் பயன்படுத்த முடியாது போக, அரபிகள் ஏகபோக வர்த்தகம் செய்தனர். பெரும் பணம் பார்த்தார்கள்.

பணம், செல்வாக்கு காரணமாக.... மாலைதீவு முதல், மலேசியா, இந்தோனேசியா வரை ஆட்சியாளர்களை மடக்கி இஸ்லாமியர் ஆக்கினர்.

அதே பணமே, தமிழக கடலோரப் பகுதியில் இருந்த பலரையும் மாத்தியது.

போர்த்துக்கேயர் முதலில் வந்து போது திரத்தியடிப்பதில் மும்மரமாக இருந்தது இஸ்லாமியர். திரத்திய பின்னர், அவர்களை வழி சொல்லி வரவைத்தார்கள் என கேரளத்தில் இருந்த யூதர்களை தாக்கினார்கள்.

ஆறுமாதத்தில் திரும்பி வந்த போர்த்துக்கேயரிடம் அடைக்கலம் பெற்றனர் எஞ்சியிரு்தோர். ஜரோப்பியர் வருகையுடன் இஸ்லாமிய வர்த்தக ஆளுமை முடிவுக்கு வந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

ஓம் நாம் கிறிஸ்தவ, இஸ்லாமிய வருகையை ஏதோ 300 ஆண்டு சமாச்சாரம் என நினைக்கிறோம்.

ஆனால் கிபி 52 இலேயே புனித தோமையர் முசிறிக்கு வந்து சிரிய கிறிஸ்தவத்தை தாபித்து உள்ளார். 

பிகு

நயந்தாரா சிரியன் கிறிஸ்தவ மரபாம் - இதுவும் @வாலிஅருளியதுதான்🤣

13 minutes ago, தமிழ் சிறி said:

இண்டைக்கு அண்ணையை, இந்தப் பக்கம் காணவில்லை.
திடீரென்று… சொல்லாமல் கொள்ளாமல் லீவு எடுத்து விட்டார். 🙂

ஜேர்மன் அரசை கவிழ்க்கும் சதி புரட்சியில்… @குமாரசாமி ..🤣.

ஆள் இப்ப வருவார் பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஓம் நாம் கிறிஸ்தவ, இஸ்லாமிய வருகையை ஏதோ 300 ஆண்டு சமாச்சாரம் என நினைக்கிறோம்.

ஆனால் கிபி 52 இலேயே புனித தோமையர் முசிறிக்கு வந்து சிரிய கிறிஸ்தவத்தை தாபித்து உள்ளார். 

பிகு

நயந்தாரா சிரியன் கிறிஸ்தவ மரபாம் - இதுவும் @வாலிஅருளியதுதான்🤣

நயன்தாரா மட்டுமே, நம்ம DMK ஜெகதரட்சகனுக்கு கயிறு கொடுத்து, இலங்கையில் முதலிட அனுப்பிய ஆயிரம் கோடிக்கு அல்வா கொடுத்த ரவூப் கக்கீம்... சிரிய வம்சாவழி தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

நயன்தாரா மட்டுமே, நம்ம DMK ஜெகதரட்சகனுக்கு கயிறு கொடுத்து, இலங்கையில் முதலிட அனுப்பிய ஆயிரம் கோடிக்கு அல்வா கொடுத்த ரவூப் கக்கீம்... சிரிய வம்சாவழி தான்.

அப்படியா? ஹக்கீமின் தமிழ் பள்ளிநாட்களில், சட்ட கல்லூரி நாட்களில் இருந்தே அருமையாக இருக்கும்(மாம்).

பலாலில தொடங்கி சிரியாவில வந்து நிக்கிறம்🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப யாழுக்கு விமானம் ஓடுமா?ஓடாதா?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இப்ப யாழுக்கு விமானம் ஓடுமா?ஓடாதா?

இந்த வருட ஆரம்பத்தில் மாசிமாதம் சிவராத்திரிக்கு திருக்கேதீஸ்வரம் செல்ல…. 
சென்னையில் இருந்து பயணிகள் வருவதாக, பயணச் சீட்டும் விற்றார்கள்.
அதே நேரம்…. யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலும் பயணச்சீட்டு முகவர் அலுவலகம் இருந்தது.
விமானம் புறப்பட இருந்த தினத்தில் இரண்டு நாட்களுக்கு முன், 
ஓரு முன்னறிவித்தலும் இல்லாமல்…. எல்லாம் நிறுத்தப் பட்டு விட்டது.

“கோத்தா கோ ஹோம்” போராட்டமும் அந்த நேரம்தான் ஆரம்பித்தது என நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப யாழுக்கு விமானம் ஓடுமா?ஓடாதா?

🤣 சென்னை - கொச்சின்-டமாஸ்கஸ்-பலாலி எண்டுதான் போகுமாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்

பலாலியில் இருந்து சென்னைக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

இரண்டு வருட இடைவெளியின் பின்னர், யாழ்ப்பாணம் – பலாலியில் இருந்து சென்னைக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன் முதற்கட்டமாக சென்னைக்கும் பலாலிக்கும் இடையே வாரமொன்றில் நான்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. எதிர்வரும் 12 ஆம் திகதி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான விமான போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை விமான போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட்ட நிலையில், கொவிட் தொற்று காரணமாக விமான போக்குவரத்து கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1314715

  • கருத்துக்கள உறவுகள்

அதிதீவிர "மாண்டஸ்" புயலுக்கு மிக அருகில்.. நாகபட்டினம் அருகே நடுவானில் பறந்த இலங்கை விமானம்.!

IMG-20221209-112501.jpg

நாகப்பட்டினம்: அதிதீவிர மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்தான் புயலுக்கு அருகே விமானம் ஒன்று பறந்து சென்றுள்ளது.

அதிதீவிர மாண்டஸ் புயல் இன்று கரையை கடக்க உள்ளது. இந்த அதிதீவிர மாண்டஸ் புயல் இன்று 3 மணி நேரத்தில் சாதாரண புயலாக வலிமை இழக்கும்.

புயல் வலிமை இழந்த பின் அது கரையை கடக்கும். சென்னை மாமல்லபுரம் - மரக்காணம் இடையே புயல் கரையை கடக்க உள்ளது. இதனால் சென்னை கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் தற்போது 12 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது.

நேரம் செல்ல செல்ல புயல் இன்னும் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது 85 கி.மீ. வேகத்தில் மிக பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புயல் எங்கே இருக்கிறது

மாண்டஸ் தமிழ்நாட்டை நோக்கி வேகமாக வந்து கொண்டு இருக்கிறது. சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் உள்ளது. இன்று இரவு சென்னைக்கு அருகே கடல் பகுதியை இந்த புயல் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரைக்காலுக்கு தென்கிழக்கில் 200 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் உள்ளது. அதேபோல் நாகப்பட்டினம் அருகில் இருப்பதாலும் புயல் காரணமாக காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பலத்த காற்று வீசிக்கொண்டு இருக்கிறது.

புயல்

இந்த புயல் இன்று காலை நாகப்பட்டினம் அருகே 300 கிமீ தொலைவில் இருந்தது. இதனால் நாகப்பட்டினம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. நாகப்பட்டினத்தில் கடல் சீற்றமாக காணப்பட்டது. புயல் நாகப்பட்டினம் கடலோர பகுதிகள் வழியாகவே மரக்காணம் நோக்கி வரப்போகிறது. இதனால் நாகப்பட்டினத்தில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. அங்கு மிக பலத்த காற்றும் வீசிக்கொண்டு இருக்கிறது. டெல்டா மாவட்டங்களிலும் இதனால் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை விமானம்

இந்த நிலையில்தான் நாகப்பட்டினம் அருகே ஏறக்குறைய 300 கிலோ மீட்டர் தொலைவில் புயல் இருக்கும் போது, புயலுக்கு மேலே விமானம் ஒன்று பறந்து சென்றுள்ளது. புயலின் கண்ணுக்கு அருகே இந்த விமானம் பறந்து சென்றுள்ளது. இது டெல்லியில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் இலங்கையை சேர்ந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஆகும். ஏர்பஸ் விமானமான இது புயலுக்கு மேலே 38000 அடி உயரத்தில் பறந்து உள்ளது. புயலுக்கு மேலே 38000 அடி உயரத்தில் பறந்ததால் இது புயலால் பாதிக்கவில்லை. ஆனால் விமானத்தில் இருந்தவர்கள் புயல் எப்படி இருக்கிறது என்று பார்க்க முடியும்.

மழை

இந்த புயல் காரணமாக இன்று தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் மிகவும் பலத்த மழை பெய்யலாம் என வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுச்சேரியில் இன்று பலத்த மழை கொட்டி தீர்க்கலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

https://tamil.oneindia.com/news/nagapattinam/a-plane-just-crossed-past-over-the-mandous-cyclone-ahead-of-its-landfall-near-chennai-488871.html

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இது தான்…  12’ம் திகதி பலாலிக்கு பறக்க இருக்கும் விமானம் போலுள்ளது.
“றூட் கிளியராக” இருக்குதா என்று மேலே பறந்து வெள்ளோட்டம் விட்டு பார்த்திருக்கிறார்கள். 🤪

நாசமறுவார்… அதுக்காக… புயலுக்கு பக்கத்திலயா போவாங்க. ? -ஊர்க்கிழவி. -

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சைனாகாரர் உருவாக்கிய முதல் பயணிகள் விமானம் 164 பயணிகளுடன் இன்று வெள்ளோட்டம்.

அமேசனில் ஓடர் பண்ணேலுமோ எண்டு தேடிப்பாருங்க....😁

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

அப்படியே மிளகா பஜ்ஜியும் தந்தா தூக்கலா இருக்கும்

உள்ள சண் பிளவர் ஒயிலில் தானே செய்வாங்க😃

21 hours ago, Nathamuni said:

ஜன்னலை திறந்து வெற்றிலை எச்சிலை துப்ப வசதி செய்திருக்கினமாம்.

ஒரு தடவ ஏறிப்பார்க்கணும் நாதா  இத்தனை வசதிகள் எந்த பிளைட்டுலும் இல்ல🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.