Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

 

அட பாவிகளா…. கை கால் எல்லாம் உதறுது.
கடைசியாய் என்னை மாட்டி விட்டுவிட்டீர்களே.
எனக்கு சன்மானம் வேண்டாம். 🤣

அண்ணை டினேசை நினைத்து பயப்பட வேண்டாம். அவர் ரொம்ப சாப்ட் டைப். கழுத்தை தானே நெரிக்கும் அளவு அப்பாவி.

  • Replies 124
  • Views 10.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    தமிழன் என்றால்.... எவ்வளவு இளக்கமாக நினைத்து கொலையை கூட  கண்டு பிடிக்க திணறுவது மாதிரி நடிக்கின்றார்கள். 😒 இறந்தவர்... பல கோடிகளை கையாளும் ஒரு தொழிலதிபர். இதற்குள்... புலம் பெயர் தமிழர்களை...

  • அட... சிறியர் ஒரு துணிஞ்ச கட்டை என்றல்லவா இவ்வளவுநாளும் நான் நினைத்திருந்தேன்!

  • அந்த செய்தியை பரப்பியவருக்கு மட்டுமா விசாரணை அல்லது நம்பிய @satan க்கும் சேர்த்தா?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

 

அட பாவிகளா…. கை கால் எல்லாம் உதறுது.
கடைசியாய் என்னை மாட்டி விட்டுவிட்டீர்களே.
எனக்கு சன்மானம் வேண்டாம். 🤣

அட... சிறியர் ஒரு துணிஞ்ச கட்டை என்றல்லவா இவ்வளவுநாளும் நான் நினைத்திருந்தேன்!

  • கருத்துக்கள உறவுகள்

தினேஷ் ஷாப்டரின் காரிலிருந்து கண்டுபிக்கப்பட்ட 11 கைவிரல் ரேகைகளின் பதிவுகள் ! விசாரணையின் நிலை என்ன ?

By DIGITAL DESK 2

27 DEC, 2022 | 08:50 PM
image

 (எம்.எப்.எம்.பஸீர்)

படுகொலை செய்யப்பட்டதாக  கூறப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் விவகாரத்தில்,  அவர் சடலமாக கிடந்த காரிலிருந்து கண்டுபிக்கப்பட்ட 11 கைவிரல் ரேகைகள் பதிவு செய்துள்ளதுடன், அது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஷாப்டர் குற்றுயிராய் மீட்கப்பட்ட அவரது டப்ளியூ. பி. - கே.யூ. 8732 என்ற காரை பூரணமாக பரிசோதித்துள்ள கைவிரல் ரேகை நிபுணர்கள் 11 அல்லது அதனை அண்மித்த எண்ணிக்கையிலான கை விரல் ரேகைகளின் பதிவுகளை கண்டறிந்துள்ளனர். 

இது குறித்த பகுப்பாய்வு அறிக்கையினை, குற்றப் பதிவுப் பிரிவூடாக கைவிரல் ரேகை நிபுணர்கள் விசாரணையாளர்களுக்கு கையளித்துள்ளனர்.

அதில் ஷாப்டரை வைத்தியசாலையில் அனுமதித்த பொரளை  பொது மயானத்தின் ஊழியரினதும், அவரது உதவியாளரின்  கைரேகைகள் காணப்படுவதாக  சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.

இந் நிலையில் குறித்த அறிக்கைக்கு மேலதிகமாக, தொலைபேசி  அழைப்பு பட்டியல் மற்றும் கோபுரத் தகவல்களை மையப்படுத்திய பகுப்பாய்வுகள், சி.சி.ரி.வி. பகுப்பாய்வுகள், வங்கிக் கணக்கு பகுப்பாய்வு நடவடிக்கைகள் தொடர்வதாக  விசாரணையாளர்கள் குறிப்பிட்டனர்.

குறிப்பாக சி.சி.ரி.வி. பகுப்பாய்வுகளின் போது,  பெருப்பிக்கப்பட்ட சமீப புகைப்படங்கள் ஊடாக காருக்குள் சந்தேகத்துக்கிடமான சில விடயங்கள் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை உறுதியாகவும் தெளிவாகவும் தெரிந்துகொள்ள விசாரணையாளர்கள் அறிவியல் தடயவியல் பிரிவின் ஒத்துழைப்பை நாடியுள்ளனர்.

அதன்படி உரிய தரப்பினரின்,  உரிய தொழில் நுட்பத்தை இதற்காக பெற்றுக்கொள்ள சி.ஐ.டி.யினர் நடவடிக்கை டுத்துள்ளனர்.

சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின்  மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த  சம்பவம் குறித்த சிறப்பு விசாரணைகள்  இடம்பெறும் நிலையில்  இதுவரை சந்தேக நபர்  எவரும் உறுதியான சாட்சியங்களின் பிரகாரம் அடையாளம் காணப்படவில்லை. அதன்படி இது குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.

கடந்த சனிக்கிழமை  24 ஆம் திகதி,  சி.ஐ.டி.யினரின் கோரிக்கை பிரகாரம் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று,  இலக்கம் 39, பிளவர் வீதி கொழும்பு - 7 எனும் முகவரியில் அமைந்துள்ள தினேஷ் ஷாப்டரின் வீட்டுக்கு சென்று பகுப்பாய்வு செய்திருந்தது.

இதன்போது, தினேஷ் ஷாப்டரின் கழுத்தை இறுக்க பயன்படுத்தப்பட்டிருந்த வயரினை ஒத்த, அவ்வயரின் மற்றைய பகுதியாக இருக்கலாம் என சந்தேக்க முடியுமான அன்டனா வயர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

ஷாப்டரின் தாயாரின் வீட்டின் தொலைக்காட்சி அன்டனா வயரே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதனைவிட கைகளைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும்  ஒருவகை பிளாஸ்டிக்  பட்டிகளை ஒத்த 8 பட்டிகள் ஷாப்டரின் அறையின் இலாச்சி ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதனைவிட, ஷாப்டர் தனது மனைவியின்  தாயாருக்கு,  மனைவியின் குண நலன்களை வர்ணித்து நன்றி கூறி எழுதிய கடிதம் ஒன்றும்,   அதனை ஒத்த குறுஞ்செய்தி ஒன்று தொடர்பிலும் விசாரணை அதிகாரிகள் தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

பல நிறுவனங்களின் உரிமையாளரான தினேஷ் ஷாப்டர், பல கோடி ரூபாவை பல்வேறு வர்த்தக  நடவடிக்கைகளில் முதலீடு செய்துள்ளமையும்  அவற்றினால் எதிர்பார்த்தபடி இலாபமீட்ட  முடியாமல் நாளுக்கு நாள் அவரது வியாபாரம் நஷ்டமடைந்து வருவதும் நெருங்கிய சிலரின் வாக்கு மூலங்கள் ஊடாக தெரியவந்துள்ளது.

மேலும், ஷாப்டர் வசித்த கறுவாத்தோட்டம், பிளவர் வீதியில் உள்ள வீட்டை விற்பனை செய்வதாக நாளிதழ் ஒன்றில் விளம்பரம் செய்திருந்தமை தொடர்பிலும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

இவற்றை மையப்படுத்தியும் ஷாப்டரின் குடும்பத்தாரின் வாக்கு மூலங்கள் பலவற்றை மையப்படுத்தியும் ஷாப்டரின் மரணம் தற்கொலையா என்ற கேள்வி ஊடகங்கள் வாயிலாக எழுப்பட்டுள்ளன.

எனினும் இது தொடர்பில் விசாரணைகள் தீர்க்கமான கட்டத்தில் இருக்கும் நிலையில், கொலையா, தற்கொலையா என முடிவுக்கு இதுவரை விசாரணையாளர்கள் வரவில்லை எனவும் அவ்வாறு தீர்மானிக்க போதுமான தடயங்கள் இல்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இந் நிலையில், ஷாப்டரின் மர்ம மரணத்தை தற்கொலையாக சித்திரிக்க  ஒருவர் அல்லது ஒரு குழு முயறுள்ளதா? தற்போது எவரேனும் அவ்வாறு முயற்சிக்கின்றனரா என்பது குறித்தும் விசாரணையாளர்களின் அவதானம் திரும்பியுள்ளது.

https://www.virakesari.lk/article/144264

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஏராளன் said:

இதன்போது, தினேஷ் ஷாப்டரின் கழுத்தை இறுக்க பயன்படுத்தப்பட்டிருந்த வயரினை ஒத்த, அவ்வயரின் மற்றைய பகுதியாக இருக்கலாம் என சந்தேக்க முடியுமான அன்டனா வயர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

 

மனைவி கொலையாளி

19 minutes ago, ஏராளன் said:

ஷாப்டரின் தாயாரின் வீட்டின் தொலைக்காட்சி அன்டனா வயரே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இல்லை தாயார்தான் கொலையாளி

19 minutes ago, ஏராளன் said:

இதனைவிட கைகளைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும்  ஒருவகை பிளாஸ்டிக்  பட்டிகளை ஒத்த 8 பட்டிகள் ஷாப்டரின் அறையின் இலாச்சி ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

ஷாப்டர் தன் கைகளை தானே கட்டி கொண்டபின், தன் கையாலே கழுத்தை நெரித்து தற்கொலை செய்துள்ளார்.

இன்று இது சம்பந்தமாக ஊகம்களை வெளியிட வேண்டாம் என பொலிஸ் ஒரு அறிக்கை மூலம் ஊடகங்களை கேட்டிருந்தது.

ஆனால் சகல ஊகங்களையும் பொலிஸ்தான் வெளியிட்டிருக்கிறது.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ஏராளன் said:

 ஷாப்டரை வைத்தியசாலையில் அனுமதித்த பொரளை  பொது மயானத்தின் ஊழியரினதும், அவரது உதவியாளரின்  கைரேகைகள் காணப்படுவதாக  சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.

***********
கொலையா, தற்கொலையா என முடிவுக்கு இதுவரை விசாரணையாளர்கள் வரவில்லை எனவும் அவ்வாறு தீர்மானிக்க போதுமான தடயங்கள் இல்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

 

43 minutes ago, goshan_che said:

மனைவி கொலையாளி

இல்லை தாயார்தான் கொலையாளி

ஷாப்டர் தன் கைகளை தானே கட்டி கொண்டபின், தன் கையாலே கழுத்தை நெரித்து தற்கொலை செய்துள்ளார்.

இன்று இது சம்பந்தமாக ஊகம்களை வெளியிட வேண்டாம் என பொலிஸ் ஒரு அறிக்கை மூலம் ஊடகங்களை கேட்டிருந்தது.

ஆனால் சகல ஊகங்களையும் பொலிஸ்தான் வெளியிட்டிருக்கிறது.

மயான ஊழியர்கள் இருவரது கைரேகையும் அதில் இருக்கின்றதாம்.
தினேஷ்…. கைகள் கட்டப் பட்டு,  கழுத்து நெரித்து கொல்லப் பட்ட நிலையில்…
பொலிஸ்… கொலையா, தற்கொலையா என்று ஆரயுதாம். 🤔

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

மயான ஊழியர்கள் இருவரது கைரேகையும்

ஷாப்டரின் உதவியாளர் போய் மயான ஊழியர்களை அழைத்து அவர்கள் உதவியுடந்தான் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்களாம். ஆகவே இவர்கள் இருவரும் கிளியர் என நினைக்கிறேன்.

ஆதரவு இல்லை என்பதால் - பணத்துக்காக இவர்கள் செய்தார்கள் எண்டும் கேசை முடிக்க கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, satan said:

அட... சிறியர் ஒரு துணிஞ்ச கட்டை என்றல்லவா இவ்வளவுநாளும் நான் நினைத்திருந்தேன்!

ஏற்கனவே சிறியருக்கு இந்திய இராணுவம் சிறீலங்காவிற்கு வந்த செய்தி April 1st தொடர்பாகவும் விசாரனை இருக்கும்…..

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

ஏற்கனவே சிறியருக்கு இந்திய இராணுவம் சிறீலங்காவிற்கு வந்த செய்தி April 1st தொடர்பாகவும் விசாரனை இருக்கும்…..

அந்த செய்தியை பரப்பியவருக்கு மட்டுமா விசாரணை அல்லது நம்பிய @satan க்கும் சேர்த்தா?

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, goshan_che said:

அந்த செய்தியை பரப்பியவருக்கு மட்டுமா விசாரணை அல்லது நம்பிய @satan க்கும் சேர்த்தா?

போற இடமெல்லாம் சாத்தானையும் கட்டியிழுக்கிறதென்று நீங்கள் முடிவெடுத்துவிட்டால், நான் என்ன செய்யிறது? இழுபடவேண்டியான். ஒருவரின் கருத்து  மேல் நம்பிக்கை வைத்து பதில் கருத்து எழுதியது தப்பா மை லோர்ட்? அவரின் பிற்குறிப்பை பாக்கத் தவறியது என் தப்புத்தான். அவ்வளவு அந்தக் கருத்து தந்த உணர்ச்சி எனது அறிவை மறைத்து விட்டது. அந்தச் செய்தி என் வாழ்வை புரட்டிபோட்ட நாட்டைகுறித்தது.

3 hours ago, goshan_che said:

இது சம்பந்தமாக ஊகம்களை வெளியிட வேண்டாம் என பொலிஸ் ஒரு அறிக்கை மூலம் ஊடகங்களை கேட்டிருந்தது.

ஆனால் சகல ஊகங்களையும் பொலிஸ்தான் வெளியிட்டிருக்கிறது.

எனக்கு இது பற்றி நிறைய ஊகங்கள் எழுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தச் செய்தியை பாத்ததும் பொத்திக்கொண்டு விட்டேன். ஆனாலும் ஒரு கேள்வி, ஏன் கோஸான்?, இந்த தினேஷ் தற்கொலை செய்வது என்று முடிவெடுத்திருந்தால்; அதை இந்தச் சாவுக்கு யாரும் காரணமில்லை எனது கடன், அல்லது பிரையன் தோமஸ் அல்லது நான்தான் காரணம் என்று எழுதிப்போட்டு வீட்டில் அமைதியான ஒரு சாவைத் தெரித்தெடுத்திருக்கலாமே, எதுக்கு ..... இப்பிடி ....? தினேஷ் அங்காலை போனபின்தான் பிரையன் தோமஷின் நினைவு வந்திருக்கும் அவருக்கு, பின் செய்தியை அனுப்பியிருப்பார். தினேஷ் தன்ர கையை கட்டிப்போட்டு கழுத்தை இறுக்கியிருப்பாரா? அல்லது கழுத்தை இறுக்கிப்போட்டு கையை கட்டியிருப்பாரா? எது முதலில் நடந்திருக்கும்? ஒருவேளை .....  இப்பிடியிருக்குமோ ....? சீச்.....சீ அப்பிடியிருக்காது.

 தினேஷின் சாவு ஈடு செய்ய முடியாதது, தடுத்திருக்க கூடியது. அதைவைத்து கருத்து எழுதுவது எனது நோக்கமல்ல, ஆனால் இந்த போலீசார் விடுகிற நகைச்சுவை தாங்க முடியவில்லை. ஏதோ தாங்கள் ஜேம்ஸ் பாண்ட் என்கிற நினைப்பில் கருத்துக்களை வெளியிடுவதும் பிறகு மறுப்பதும் எரிச்சலை கிளப்புது. சாத்தியமான வழிகளில் விசாரிக்கிறார்களா?  நமக்கெதுக்கு வம்பு தினெஸே கடைசியாக  இப்படியொரு நல்ல மகளை பெற்றுத்தந்ததற்கு நன்றியென சிறப்புச்சான்றிதழ் கொடுத்துச் சென்ற பிறகு? இல்லை ...! இந்த சான்றிதழையாவது சாவதற்கு முன் கொடுத்தாரா? என்கிற எனது இறுதிகேள்வியோடு முடிப்போம். உங்களுக்கும் இப்பிடி இடக்கு முடக்காய் ஏதாவது கேள்வி எழுந்தால் தயங்காமல் எழுதுங்கள் கோஷான். எனக்கும் பேச்சுத்துணைக்கு ..... இரண்டுபேரும் சேர்ந்து துலக்கிடுவோம். சிறியர் ரொம்பப் பயப்படுறார், அவரை விட்டுவிடுவோம். பாவம் அவர்!       

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, satan said:

போற இடமெல்லாம் சாத்தானையும் கட்டியிழுக்கிறதென்று நீங்கள் முடிவெடுத்துவிட்டால், நான் என்ன செய்யிறது? இழுபடவேண்டியான். ஒருவரின் கருத்து  மேல் நம்பிக்கை வைத்து பதில் கருத்து எழுதியது தப்பா மை லோர்ட்? அவரின் பிற்குறிப்பை பாக்கத் தவறியது என் தப்புத்தான். அவ்வளவு அந்தக் கருத்து தந்த உணர்ச்சி எனது அறிவை மறைத்து விட்டது. அந்தச் செய்தி என் வாழ்வை புரட்டிபோட்ட நாட்டைகுறித்தது.

எனக்கு இது பற்றி நிறைய ஊகங்கள் எழுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தச் செய்தியை பாத்ததும் பொத்திக்கொண்டு விட்டேன். ஆனாலும் ஒரு கேள்வி, ஏன் கோஸான்?, இந்த தினேஷ் தற்கொலை செய்வது என்று முடிவெடுத்திருந்தால்; அதை இந்தச் சாவுக்கு யாரும் காரணமில்லை எனது கடன், அல்லது பிரையன் தோமஸ் அல்லது நான்தான் காரணம் என்று எழுதிப்போட்டு வீட்டில் அமைதியான ஒரு சாவைத் தெரித்தெடுத்திருக்கலாமே, எதுக்கு ..... இப்பிடி ....? தினேஷ் அங்காலை போனபின்தான் பிரையன் தோமஷின் நினைவு வந்திருக்கும் அவருக்கு, பின் செய்தியை அனுப்பியிருப்பார். தினேஷ் தன்ர கையை கட்டிப்போட்டு கழுத்தை இறுக்கியிருப்பாரா? அல்லது கழுத்தை இறுக்கிப்போட்டு கையை கட்டியிருப்பாரா? எது முதலில் நடந்திருக்கும்? ஒருவேளை .....  இப்பிடியிருக்குமோ ....? சீச்.....சீ அப்பிடியிருக்காது.

 தினேஷின் சாவு ஈடு செய்ய முடியாதது, தடுத்திருக்க கூடியது. அதைவைத்து கருத்து எழுதுவது எனது நோக்கமல்ல, ஆனால் இந்த போலீசார் விடுகிற நகைச்சுவை தாங்க முடியவில்லை. ஏதோ தாங்கள் ஜேம்ஸ் பாண்ட் என்கிற நினைப்பில் கருத்துக்களை வெளியிடுவதும் பிறகு மறுப்பதும் எரிச்சலை கிளப்புது. சாத்தியமான வழிகளில் விசாரிக்கிறார்களா?  நமக்கெதுக்கு வம்பு தினெஸே கடைசியாக  இப்படியொரு நல்ல மகளை பெற்றுத்தந்ததற்கு நன்றியென சிறப்புச்சான்றிதழ் கொடுத்துச் சென்ற பிறகு? இல்லை ...! இந்த சான்றிதழையாவது சாவதற்கு முன் கொடுத்தாரா? என்கிற எனது இறுதிகேள்வியோடு முடிப்போம். உங்களுக்கும் இப்பிடி இடக்கு முடக்காய் ஏதாவது கேள்வி எழுந்தால் தயங்காமல் எழுதுங்கள் கோஷான். எனக்கும் பேச்சுத்துணைக்கு ..... இரண்டுபேரும் சேர்ந்து துலக்கிடுவோம். சிறியர் ரொம்பப் பயப்படுறார், அவரை விட்டுவிடுவோம். பாவம் அவர்!       

சிறி அண்ணாவை விட பாவம் பயந்தாங்கொள்ளி நான்🤣.

பொலிஸ் வேணும் என்று ஒவ்வொரு திசையில் திருப்பி, கடைசியில் லெப்ட் சிக்னல் போட்டு, ரைட் டேர்ன் அடித்து இவர்தான் குற்றவாளி என ஒருவரை காட்டுவார்கள் என நான் நினைக்கிறேன்.

அவர் என் கணிப்பில் குற்றவாளியாக இருக்க் சந்தப்பம் குறைவு.

 

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் இப்போது ஒருவரை இவர்தான் கொலைகாரர் எனத்  தெரிவு செய்திருப்பார்கள், சுட்டிக்காட்டுவதற்கு அவர்வரை விசாரணை வரும்வரை புலுடா விட்டு சோடிக்கிறார்கள். அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது இவர்கள் சொல்கிற  கோணத்தைப்பாத்தா!

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, satan said:

அவர்கள் இப்போது ஒருவரை இவர்தான் கொலைகாரர் எனத்  தெரிவு செய்திருப்பார்கள், சுட்டிக்காட்டுவதற்கு அவர்வரை விசாரணை வரும்வரை புலுடா விட்டு சோடிக்கிறார்கள். அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது இவர்கள் சொல்கிற  கோணத்தைப்பாத்தா!

நிச்சயமாக.

  • கருத்துக்கள உறவுகள்

கொலையாளிகளை போலீசார் நெருங்கி விட்டார்கள் .

விசாரணையில் திடீ ர்  திருப்பம் .

புதிய கோணத்தில் விசாரணை .

ஆஸ்பத்திரி வரும் போது தினேஷ் சாப்டர் உயிருடனே  இருந்தார் ஆனால் மூளை சாவடைந்த நிலையில் .

வெளியில் போகும்முன் அவருக்கு பிடித்த உணவு சாப்பிட்டு இருந்தார் .

மேலே சொன்னது போல் ஊடகங்கள் இனி வரும் காலம் தினம் ஒரு செய்தி போடுவினம் ஆனால் கொலையாளியை கண்டுபிடிக்க மாட்டினம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, MEERA said:

ஏற்கனவே சிறியருக்கு இந்திய இராணுவம் சிறீலங்காவிற்கு வந்த செய்தி April 1st தொடர்பாகவும் விசாரனை இருக்கும்…..

 

14 hours ago, goshan_che said:

அந்த செய்தியை பரப்பியவருக்கு மட்டுமா விசாரணை அல்லது நம்பிய @satan க்கும் சேர்த்தா?

4´ம் மாடிக்கு அனுப்புறதெண்டே  முடிவு எடுத்து விட்டீர்களா. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஷாப்டரின் கொலை குறித்த மர்ம முடிச்சுக்கள் தொடர்கின்றன ! மாமியாரிடம் சிறப்பு விசாரணை

By T. SARANYA

28 DEC, 2022 | 08:09 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

 

படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் விவகாரத்தில், விசாரணைகளை முன்னெடுக்கும் 8 சிறப்புக் குழுவின் விசாரணையாளர்களையும் புதன்கிழமை ( டிச 28) பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன  கலந்துரையாடலொன்றுக்கு அழைத்துள்ளார்.

சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்  மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின்  மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் இடம்பெறும் நிலையில், விசாரணைகளுக்கான ஒத்தாசைகளை வழங்கி வரும் சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வுப் பிரிவையும் உள்ளடக்கிய 8 குழுக்களையும் பொலிஸ் மா அதிபர் அழைத்துள்ளார்.

இதன்போது,  விசாரணையின் முன்னேற்றம் தொடர்பில் ஆரயப்பட்டு, தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதனிடையே, தினேஷ் ஷாப்டரின் படுகொலை தொடர்பில் இதுவரை 84 பேரின் வாக்கு மூலங்களை  விசாரணையாளர்கள் பதிவு செய்துள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.

இதில் தினேஷ் ஷாப்டரின் மாமியார், மனைவி ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். செவ்வாய்க்கிழமை (டிச 27) தினேஷ் ஷாப்டரின் மாமியாரிடம் சி.ஐ.டி.யினர் சிறப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஷாப்டர் தனது மனைவியின் தாயாருக்கு, மனைவியின் குண நலன்களை வர்ணித்து நன்றி கூறி எழுதிய கடிதம் ஒன்றும்,  அதனை ஒத்த குறுஞ்செய்தி ஒன்று தொடர்பிலும் , கடந்த 24 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளில் விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருந்த நிலையில் அதனை மையப்படுத்தி குறித்த விசாரணைகள் மிக நீண்ட நேரம் நடாத்தப்பட்டதாக அறிய முடிகின்றது.

இதனைவிட மனைவி டானி ஷனின் ஷாப்டரிடம் சி.ஐ.டி. குழுவினர், அவர்களது வாழ்க்கை மற்றும் கருத்து வேறுபாடுகள், எதிரிகள் உள்ளிட்ட விடயங்களையும் வர்த்தக நடவடிக்கை மற்றும் முதலீடு குறித்த விடயங்களையும் மையப்படுத்தி 3 முறை விசாரணை நடாத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், சிஐடி வசம் உள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில், தினேஷ் ஷாப்டர்  மூச்சு திணறல் காரணமாகவே உயிரிழந்ததாக  சட்ட வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அப்பிரேத பரிசோதனை அறிக்கையின் விரிவான அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

எவ்வாறாயினும் கடந்த 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர்  வீட்டை விட்டு வெளியேறிய 30 முதல் 40 நிமிடங்களுக்குள் கோமா நிலையை அடைந்தார் என சந்தேகிக்கப்படுகின்றது.

தனது கணவர் பிற்பகல் 1.55 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியதாக தினேஷ் ஷாப்டரின் மனைவி பொரளை பொலிஸில் தெரிவித்துள்ள நிலையில் சி.சி.ரி.வி. காணொளிகள் பிரகாரம் பிற்பகல் 2.06 மணிக்கு தினேஷ் ஷாப்டரின் கார் பிளவர் வீதி வீட்டிலிருந்து பிரதான பாதைக்குள் நுழைவது  துல்லியமாக கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி , தினேஷ் ஷாப்டர் பிற்பகல் 2.35  மணி முதல் 2.40 மணிக்குள்  குற்றமொன்றுக்கு உள்ளாகி கோமா நிலையை அடைந்திருக்கலாம் , என விசாரணையாளர்கள்   அனுமானிக்கின்றனர். 

அவர்  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கபப்டும் போதும், கோமா நிலையில் இருந்தமை தொடர்பிலும், அவரது இருதயத்தை செயற்படுத்த பல மணி நேரம் வைத்தியர்கள் போராடியமை உள்ளிட்ட தகவல்களையும் மையப்படுத்தி இந்த அனுமானம் பெறப்பட்டுள்ளது.

இருப்பினும், முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸ், தனக்கு அன்றைய தினம் பிற்பகல்  2.42 மற்றும் 2.43 க்கு இடையில் தினேஷ் ஷாப்டரிடமிருந்து வாட்ஸ்அப் செய்தி வந்ததாகவும் அது ஷாப்டரின் மொழிப் பிரயோகத்தை ஒத்திருக்கவில்லை எனவும் வாக்கு மூலமளித்துள்ளார். இதனால்  தினேஷ் ஷாப்டர் கொலை செய்யப்பட்டதாக எழும் சந்தேகம் வலுத்துள்ளது.

 எவ்வாறாயினும் இதுவரையிலான விசாரணைகளில், ஷாப்டரின் மரணம் குறித்த மர்ம முடிச்சுக்களை  சி.ஐ.டி.யினரால் அவிழ்க்க முடியவில்லை. 

அதன்படி இந்த சம்பவத்தை படுகொலையாக கருதி சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்த்துவ குறிப்பிட்டார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் மிக ஆழமான விசாரணைகள் நடாத்தப்பட்டு வரும் நிலையில், ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளிவருவதாகவும் உறுதி செய்யப்படாத மூலங்கள் ஊடாக வெளியிடப்படும் செய்திகள்  விசாரணைகளை பாதிப்பதாக அமைவதாகவும் பொலிஸ் பேச்சாளர்  அறிக்கையொன்றினை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையில் முக்கிய திருப்பங்களை பொலிஸ் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் எனவும் உறுதிசெய்யப்படாத தகவல்களை வெளியிட்டு விசாரணைகளுக்கு பங்கம் ஏற்படுத்த வேண்டாம் எனவும் அது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் எனவும்  அவர் குறித்த அறிக்கை ஊடாக  ஊடகங்களிடம் விடயங்களை முன் வைத்துள்ளார். 

https://www.virakesari.lk/article/144377

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

 

4´ம் மாடிக்கு அனுப்புறதெண்டே  முடிவு எடுத்து விட்டீர்களா. 🤣

நெடுநாள் பகையாய் இருக்கும்போல!

6 hours ago, ஏராளன் said:

தனது கணவர் பிற்பகல் 1.55 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியதாக தினேஷ் ஷாப்டரின் மனைவி பொரளை பொலிஸில் தெரிவித்துள்ள நிலையில்

ஆரம்ப செய்திகளில் மூன்று மணி என்று வாசித்ததுபோல் உள்ளதே

  • கருத்துக்கள உறவுகள்

தினேஸ் சாப்டரின் அதிகம் அறியப்படாத கிரிக்கெட் பின்னணி

By RAJEEBAN

29 DEC, 2022 | 03:34 PM
image

 

Rex Clementine

 

கண்டியின் தலைசிறந்த சட்டத்தரணி சேமா தனது பிள்ளைகளிற்கு மிகச்சிறந்த விடயங்களை தெரிவு செய்தார்,பாடசாலை டிரினிட்டி, கிரிக்கெட்டிற்கு பேர்ட்டி விஜயசின்ஹ  ரக்பிக்கு குயென்டின் இஸ்ரேல் . இதன் காரணமாக குமார்சங்ககார மிகச்சிறந்த டெஸ்ட் வீரரானது ஆச்சரியமளிக்கவில்லை

 அவரை போல சந்திர ஸ்காப்டரும் தனது பிள்ளைக்கு மிகச்சிறந்த விடயங்களை தெரிவு செய்தார் கல்விக்கு மெட்ராசின் செர்வூட் ஹோல் கிரிக்கெட்டிற்கு பேர்ட்டி விஜயசிங்க.

dinesh-shafter_main.jpg

இலங்கையில் இன்னமும் உயிர்வாழும் மூத்த கிரிக்கெட் வீரர் சந்திரா.இரண்டு வாரங்களிற்கு முன்னர் ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்ட அவரது மகன்தினேஸ் பிரிட்டனில் பின்ஞ்லி கிரிக்கெட் கழகத்திற்காக Finchly Cricket Club in the Middlesex Leagueகிரிக்கெட் விளையாடியுள்ளார்.

அவர் இலங்கைக்கு திரும்பி வந்த வேளை தமிழ்யூனியன் கழகத்தில் முத்தையா முரளீதரன் ரங்கனஹேரத் நிரோசன் பண்டாரதிலக உபுல் சந்தன போன்ற வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இதன் காரணமாக அவர் மூர்ஸ் கிரிக்கெட் கழகத்திற்காக Moors Sports Club,கிரிக்கெட் விளையாடினார்.

தினேஸ் சிறந்த பந்துவீச்சாளர்- அவர் ஒருமுறை எஸ்எஸ்சிக்கு எதிராக  ஆறு விக்கெட்களை வீழ்த்தினார். மார்வன் அத்தபத்துவின் விக்கெட்டை  வீழ்த்தினார்.

தினேஸ் சாப்டரின் துடுப்பாட்டம் குறித்து எதனையும் சிறப்பாக குறிப்பிட முடியாது என்ற போதிலும் அவர் ஒரு முறை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார்- 11 வது வீரராகவும் களமிறங்கியுள்ளார்.

அவர் பதினொராவது வீரராகவும் களமிறங்கியுள்ளார்.

தினேசை கௌசல் சில்வாவுடன் ஒப்பிடலாம்,அவர் இலகுவில் தனது விக்கெட்டை விட்டுக்கொடுக்க மாட்டார் இறுதிவரை களத்தில் நிற்பார்.

ஒருமுறை என்சிசிக்கு எதிராக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்றார்

கல்வியிலும் தினேஸ்சாப்டர் மிகச்சிறந்தவராக விளங்கினார்.அவர் தனது 18 வயதில்  கற்கைநெறியை பூர்த்தி செய்தார்- இலங்கையில் மிக இளவயதில் அந்த கற்கையை பூர்த்திசெய்தவர்களில் இவரும் ஒருவர்.

மரணம் நிகழ்ந்தவேளை அவர் கழகத்தின்Moors Sports Club,  குழு உறுப்பினராக காணப்பட்டார்.

https://www.virakesari.lk/article/144457

  • கருத்துக்கள உறவுகள்

தினேஷ் ஷாப்டர் படுகொலை : மெலிந்த, உயரமான தோற்றம் கொண்ட அந்த நபர் யார் ?

By VISHNU

30 DEC, 2022 | 05:10 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் விவகாரத்தில், நபர் ஒருவரை அடையாளம் காண சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்  மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின்  மேற்பார்வையில், கிருளப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் இடம்பெறும் நிலையில், வாக்கு மூலம் ஒன்றை அடிப்படையில் இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஷாப்டர், பொரளை  பொது மயானத்தில் அவரது காருக்குள் குற்றுயிராய் கிடந்த போது, அந்த கார் அருகே இருந்து சந்தேகத்துக்கு உரிய ஒருவர் சென்றதாக, மயானத்தின் ஊழியர் ஒருவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

அவரது வாக்கு மூலத்தின் பிரகாரம் மெல்லிய, உயரமான தோற்றத்தை உடைய ஒருவர் இவ்வாறு சென்றதாக கூறப்படும் நிலையில், குறித்த நபரை அடையாளம் காண தற்போது சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதனிடையே, தினேஷ் ஷாப்டரின் படுகொலை தொடர்பில் இதுவரை 90 பேரின் வாக்கு மூலங்களை  விசாரணையாளர்கள் பதிவு செய்துள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.

அதன்படி தற்போது வரையான விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களை மையப்படுத்தி முக்கிய 4 கோணங்களில் விசாரணைகள் தொடர்வதாக அறிய முடிகின்றது.

இதற்காக சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் 8 சி.ஐ.டி. சிறப்புக் குழுக்கள் 24 மணி நேரமும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.

இதனைவிட பொலிஸ் மற்றும் தேசிய உளவுச் சேவையின் அறிக்கைகளையும் விசாரணையாளர்கள் பெற்று, சந்தேகிக்கத்தக்க அனைத்து விடயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது.

https://www.virakesari.lk/article/144571

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஏராளன் said:

தினேஷ் ஷாப்டர் படுகொலை : மெலிந்த, உயரமான தோற்றம் கொண்ட அந்த நபர் யார் ?

 @goshan_che அல்லது @satan இரண்டு பேரும், இங்கைதான் பதுங்கி இருக்கினம் சார். 🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

 @goshan_che அல்லது @satan இரண்டு பேரும், இங்கைதான் பதுங்கி இருக்கினம் சார். 🤣

 

பார்க்க இந்தி நடிகர் மாரி இருந்தா அது சாத்ஸ்தான்🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

 @goshan_che அல்லது @satan இரண்டு பேரும், இங்கைதான் பதுங்கி இருக்கினம் சார். 🤣

 

எதுக்கு இந்தக்கொலை வெறி? தடுமாறினவர்களுக்கு துப்புக்கொடுத்தது தவறாய் போச்சுது. நாங்கள் துப்புக்கொடுத்த படியாற்தானே விசாரணை சரியான  ஒருவழிக்கு திரும்பியிருக்கு. இலங்கையில் எத்தனை மெலிந்த உயரமான மனிதர்கள் இருக்கிறார்கள்? அதுவும் தற்போதைய பொருளாதார நிலையில் பெரும்பாலானோர் அந்த நிலைக்கு வந்துவிட்டார்கள், யாரை என்று கண்டுபிடிப்பார்கள்?

4 hours ago, goshan_che said:

பார்க்க இந்தி நடிகர் மாரி இருந்தா அது சாத்ஸ்தான்🤣

ஆமா! சன்மானம் வாங்க கூட்டுத்தேவை, காட்டிக்கொடுக்கிறதென்றா சாத்தான் தான். நல்ல கூட்டாளிகள்! உங்களது உயரம் எல்லாம் நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் எழுத்துமூலம் கொடுத்துவிட்டு, இப்போ சாத்தானை மாட்டிவிடுகிற வேலையெல்லாம் வேலைக்காகாது. நீங்கள் பதிந்த உயரத்தை கையில வைச்சுக்கொண்டுதானாம் சந்தேக நபரை தேடுகிறார்களாம். இலங்கை எம்பசி பக்கம் போய்விடாதீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கணிப்பு அவரது இரண்டாவது மனைவி தான்... ஆளை விட்டு கொலை செய்து உள்ளார்...என்ன நடக்குது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்  
 

  • கருத்துக்கள உறவுகள்

சரி பைல மூடுங்கப்பா 🤣

  • கருத்துக்கள உறவுகள்

தினேஷ் நடத்திய கணக்காய்வு நிறுவனம் பதிவு செய்யப்பட்டதா? அவர் வைத்திருந்த பணத்திற்கு வருமானவரி செலுத்தியிருக்கிறாரா என்று விசாரணை நடக்குதாம். அவரைகொலைசெய்யப்பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கேபிள் அவர்கள் வீட்டில் கண்டு பிடிக்கப்படவில்லையாம். ஒருவேளை வருமானவரித்துறை இந்த கொலையை செய்திருக்குமோ? அப்பாடா! இனி கொஞ்சம் நிம்மதியாய் உலாவலாம் மனுஷர். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.