Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா: குளிர்கால சூறாவளியால் இருளில் மூழ்கிய 15 லட்சம் வீடுகள்; 20 கோடி பேருக்கு எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா: குளிர்கால சூறாவளியால் இருளில் மூழ்கிய 15 லட்சம் வீடுகள்; 20 கோடி பேருக்கு எச்சரிக்கை

549445cc69bedd8803e024dd.webp

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வந்த சூழலில், கடும் குளிர் அதற்கு எதிராக திரும்பியுள்ளது. திடீரென உருவான வெடிகுண்டு சூறாவளி எனப்படும் குளிர்கால புயலால் நேற்று 15 லட்சம் பேருக்குமின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி கிடந்தனர். இந்த வெடிகுண்டு சூறாவளி என்பது கனமழை அல்லது கடும் பனியை தோற்றுவிக்க கூடியது. கடற்கரை பகுதிகளில் வெள்ளம் ஏற்படுத்துவதுடன், சூறாவளி காற்றையும் வீச செய்யும். சில நீர்நிலைகளில் இதனால், பல அடி உயரத்திற்கு அலைகளும் எழுந்து காணப்பட்டன.

குளிர்கால சூறாவளியால் நாடு முழுவதும் பனிபடர்ந்து சாலைகள் மூடப்பட்டு உள்ளன. விமான சேவை பாதிக்கப்பட்டது. டெக்சாஸ், சிகாகோ, நியூயார்க், ஓஹியோ பகுதிகளில் கடும் குளிரால் மக்கள் அவதியடைந்தனர். இதனால், அமெரிக்காவில் 20 கோடி பேருக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. வெப்பநிலை மைனஸ் 48 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கீழ் சென்றுள்ளது. குளிர்காற்றும் வீசி வருகிறது.

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு தயாரான மக்கள் பலர் விடுமுறை கொண்டாட்டங்களை ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கனடாவின் டொராண்டோ நகரிலும் கடும் குளிரால் விடுமுறைக்கான ஷாப்பிங் செல்வது குறைந்து விட்டது. அமெரிக்காவின் நியூயார்க், சிகாகோ மற்றும் சியாட்டில் சர்வதேச விமான நிலையங்கள் உள்பட விமான சேவை பாதிக்கப்பட்டு 5 ஆயிரம் அமெரிக்க விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டும், 7,600 விமானங்கள் காலதாமத்துடன் இயக்கப்பட்டும் உள்ளன.

சாலைகள் பனிச்சறுக்கு போட்டியில் செல்வது போன்று பனி படர்ந்து காணப்படுகின்றன. இதனால், வாகன போக்குவரத்தும் பாதிப்படைந்து உள்ளது. இதனையொட்டி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் காணப்படுகிறது. அமெரிக்காவில் குளிர்கால புயலால் 15 லட்சம் பேருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, விடுமுறை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மொத்தத்தில் கொரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் இந்த ஆண்டும் களைகட்டாமல் போயுள்ளன என மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
 

 

https://akkinikkunchu.com/?p=233341

  • கருத்துக்கள உறவுகள்

வட அமெரிக்க பனிப்புயலால் பரிதவிக்கும் 25 கோடி பேர்: 40 ஆண்டுகளில் மோசமான கிறிஸ்துமஸ் கால குளிர்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஜூட் ஷீரின் & மேக்ஸ் மாட்ஸா
  • பதவி,பிபிசி செய்திகளுக்காக
  • இருந்துவாஷிங்டன் மாகாணம் சியாட்டிலில் இருந்து
  • 9 நிமிடங்களுக்கு முன்னர்
அமெரிக்காவில் பனிப்புயல்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

தெற்கு டகோடாவில் ஸ்டர்ஜிஸ் நகரம்

வட அமெரிக்காவில் வீசும் பனிப் புயலால் அமெரிக்கா மற்றும் கனடாவில் சுமார் 25 கோடி பேர் பனிப்பொழிவின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, இதனால் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

கடந்த 40 ஆண்டுகளில் இதுதான் மிகவும் மோசமான கிறிஸ்துமஸ் குளிர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட வேறு ஊர்களுக்கு சாலை மற்றும் வான் வழியாக பயணிக்கும் கோடிக் கணக்கானவர்களின் பயணம் தடைபட்டுள்ளது.

சுமார் 20 கோடி மக்களுக்கும் மேல் வாழும், பாதிக்கும் மேலான அமெரிக்க மாகாணங்களுக்கு தீவிர வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை மட்டும் ஆயிரக் கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெக்சாஸ் முதல் க்விபெக் வரையில் சுமார் 3,200 கி.மீ. வரையிலும் பனிப்புயல் வீசுகிறது. வளிமண்டல அழுத்தம் திடீரென குறைந்ததால் எழுந்த பனிப்புயல், அமெரிக்கா - கனடா எல்லையில் உள்ள ஏரிகளை உறையச் செய்துள்ளது.

 

கனடாவில் ஆண்டேரியோ மற்றும் க்விபெக் மாகாணங்களில் ஆர்க்டிக் பனிப்பொழிவின் விளைவாக லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பிரிட்டிஷ் கொலம்பியா முதல் நியூ ஃபவுண்ட்லேண்ட் வரையிலான கனடாவின் பெரும்பாலான பகுதிகள் கடுங்குளிர் மற்றும் பனிப்புயல் எச்சரிக்கையின் கீழ் இருந்தன. வெள்ளிக்கிழமை வானிலை வரைபடம் "மிக மோசமான குளிர்கால வானிலை எச்சரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களை சித்தரிக்கிறது" என்று அமெரிக்க தேசிய வானிலை சேவை (NWS) அமைப்பு கூறியுள்ளது. மொன்டானாவின் எல்க் பூங்காவில் வெப்பநிலை -50F (-45C) ஆகக் குறைந்துள்ளது, மிச்சிகனில் உள்ள ஹெல் நகரம் உறைந்துவிட்டது. வெப்பநிலை 1F (-17C) ஆக உறைந்து, பனி மூடியிருந்த வெள்ளிக்கிழமை இரவில் பிபிசியிடம் பேசிய ஸ்மிட்டியின் ஹெல் சலூனில் பார்டெண்டராக பணிபுரியும் எமிலி, "இங்கே மிகவும் குளிராக இருக்கிறது, அது நரக அனுபவத்தைத் தருகிறது" என்றார்.

அமெரிக்காவில் பனிப்புயல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நியூயார்க் மாகாணம் பஃபல்லோ நகரம்

தெற்கு டுகோட்டாவில் வசிக்கும் அமெரிக்க பழங்குடியினர் எரிபொருள் தீர்ந்த பிறகு, வெப்பமூட்டுவதற்காக ஆடைகளை எரித்ததாக பழங்குடி அதிகாரிகள் தெரிவித்தனர். பென்சில்வேனியா, மிஷிகன் மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள பஃபல்லோ பகுதியில், குறைந்தபட்சம் 89 செ.மீ. அளவுக்கு பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 80 லட்சத்திற்கும் அதிகமானோர் பனிப்புயல் எச்சரிக்கையின் கீழ் இருப்பதாக அமெரிக்க தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது. நியூ இங்கிலாந்து, நியூயார்க், நியூ ஜெர்சி பிராந்தியங்களின் கடலோரங்களில் கடுமையான வெள்ளம் காணப்படுகிறது. பசிஃபிக் வடமேற்கில், சியாட்டில், போர்ட்லேண்ட் பகுதிகளில் உறைந்த தெருக்களில் சிலர் பனிச்சறுக்கு விளையாடினர். வழக்கமாக அதிகமான பனிப்பொழிவை எதிர்கொள்ளாத லூசியானா, அலபாமா, ஃபுளோரிடா, ஜோர்ஜா ஆகிய தென் மாகாணங்களுக்கும் கடுமையான உறைபனி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சாலை விபத்துகள் உள்பட பனிப்புயல் தொடர்பில் பல உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. ஒஹாயோவில் அடுத்தடுத்து 50 வாகனங்கள் மோதிக் கொண்டதில் 2 பேர் உயிரிழந்தனர். பனிக்கட்டிகளை விலக்கும் இயந்திரங்களை கையாளும் நபர்கள் பற்றாக்குறையால் போக்குவரத்துப் பிரச்னைகள் அதிகரித்துள்ளன. குறைந்த ஊதியம் வழங்கப்படுவதே இந்நிலைக்கு காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது. வெள்ளிக்கிழமை மட்டும் 5,600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான சேவைகளைப் பின்தொடரும் ஃப்ளைட்அவேர் இணையதளம் கூறுகிறது. இதனால், கிறிஸ்துமசைக் கொண்டாட மக்கள் வீடுகளுக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

அமெரிக்காவில் பனிப்புயல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சிகாகோவில் உள்ள ஒஹெ சர்வதேச விமான நிலையம்

அமெரிக்கா முழுவதும் அன்றைய தினம் 10 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக PowerOutage.us தளம் குறிப்பிட்டுள்ளது. டென்னசி பள்ளத்தாக்கு முழுவதும் மின்சாரத்தை சேமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வரலாற்றில் இதுவரையிலான, நூற்றுக்கும் மேற்பட்ட குறைந்தபட்ச குளிர்கால வெப்பநிலைப் பதிவுகள் அடுத்த சில நாட்களில் சமன் செய்யப்படலாம் அல்லது அதற்கும் குறைவான வெப்பநிலை பதிவாகலாம் என்று அமெரிக்க தேசிய வானிலை சேவை அமைப்பு கூறுகிறது. பல இடங்களில் நீண்ட காலமாக இருந்துவந்த குறைந்தபட்ச வெப்பநிலையை நடப்பு குளிர்காலத்தில் ஏற்கனவே எட்டியாகிவிட்டது. கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வரில் வியாழக்கிழமையன்று வெப்பநிலை -24F என்ற அளவுக்கு குறைந்துவிட்டது. 1990க்குப் பிறகு அங்கு பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை இது ஆகும். ஸ்காட்லாந்தில் இருந்து டென்வருக்கு குடிபெயர்ந்துவிட்ட 34 வயதான கிரெய்க் மெக்பிரீட்டி, "என் அனுபவத்தில் இதுவே மிகவும் குளிர்ச்சியானது," என்று பிபிசியிடம் கூறினார்.

  • கான்சாஸ் மாகாணம் விச்சிட்டாவில் 2000-க்குப் பிறகு மிகவும் குறைந்தபட்சமாக -32F ஆக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
  • டென்னசி மாகாணம் நாஷ்வில்லேவில் கடந்த 26 ஆண்டுகளில் முதன் முறையாக வெப்பநிலை பூஜ்யத்திற்கு கீழே குறைந்துள்ளது.
  • வயோமிங் மாகாணம் காஸ்பரில் இதுவரை இல்லாத குறைந்தபட்ச அளவாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று வெப்பநிலை -42Fஆக பதிவாகியுள்ளது.
காணொளிக் குறிப்பு,

அமெரிக்காவில் பனிப் புயல்

https://www.bbc.com/tamil/articles/crgnd11e1ldo

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் உயிர் பலி வாங்கும் பனி: அதிகரிக்கும் மரணங்கள்

US snow storm

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்கா மற்றும் கனடாவில் ஆர்க்டிக் உறைபனியின் தாக்கத்தால் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும் 34 பேர் பனிப்புயலுக்கு உயிரைப் பறிகொடுத்துள்ளனர். நியூயார்க் மாகாணத்தில் பஃபல்லோ நகரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள மெரிட் நகரில் பனிபடர்ந்த சாலையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.

பனிப்புயலின் தாக்கம் இதுவரை இல்லாத வகையில் கனடாவில் இருந்து வட அமெரிக்க கண்டத்தின் தென்கோடியில் உள்ள ரியோ கிராண்டே வரையிலும் காணப்படுகிறது.

 

அடுத்த சில நாட்களில் பனிப்புயலின் தாக்கம் குறையும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனினும், அத்தியாவசியம் அல்லாத பயணங்களை தவிர்க்குமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பனிப்புயலின் தாக்கம் சில நாட்கள் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பல இடங்களிலும் மின்சார விநியோகம் சீரமைக்கப்பட்டுவிட்டது.

அசோசியேட்டர் பிரஸ் அளித்துள்ள தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, 2 லட்சத்திற்கும் குறைவான வீடுகளில் மட்டுமே மின்சாரம் இல்லை. இது ஒரு கட்டத்தில் 17 லட்சம் என்கிற அளவில் உச்சத்தில் இருந்தது.

ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் லட்சக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாமல் தவித்துப் போயினர்.

அமெரிக்காவில் 5.5 கோடி பேருக்கும் அதிகமானோர் வசிக்கும் பகுதிகள் இன்னும் கடுங்குளிர் எச்சரிக்கையின் கீழ் உள்ளன. வளிமண்டல அழுத்தம் திடீரென குறைந்ததால் ஏற்பட்ட பனிப்புயல் எதிரொலியாக நிலவும் கடும் பனி, பலத்த காற்று காரணமாக அமெரிக்கா முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பனிப்புயல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நியூயார்க் மாகாணம் ஹம்பர்க்கில் பனி மூடிக் கிடக்கும் வீடு மற்றும் கார்

பஃபல்லோ நகரை பூர்விகமாகக் கொண்ட நியூயார்க் மாகாண ஆளுநர் கேத் ஹோச்சுல், "பஃபல்லோ நகரின் மிக மோசமான பனிப்புயலாக இது வரலாற்றில் பதிவாகும்", என்று கூறுகிறார்.

"சாலையின் இருபுறமும் கார்கள் முடங்கிக் கிடப்பதை பார்க்கும் போது ஏதோ போர்க்களத்திற்குச் செல்வது போல இருக்கிறது" என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

உயிருக்கே ஆபத்தான மிக மோசமான காலநிலை நிலவுவதால் மக்கள் தொடர்ந்து வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் பனிப்புயல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நியூயார்க் மாகாணம் ஹம்பர்க்கில் ஈரி ஏரிக்கரை

ஈரி கவுண்டியில் மட்டும் 12 உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. அவர்களில் சிலர் கார்களில் இருந்தபடியே மரணத்தைத் தழுவியுள்ளனர்.

வெர்மாண்ட், ஒஹாயோ, மிசோரி, விஸ்கான்சின், கான்சாஸ், கொலராடோ ஆகிய மாகாணங்களிலும் பனிப்புயல் தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன. தெற்கு ஃபுளோரிடாவில் பல்லி இனங்களில் ஒன்றான இகுவானாக்கள் உறைந்து, மரங்களில் இருந்து கீழே விழும் அளவுக்கு வெப்பநிலை மிகவும் குறைந்துவிட்டது.

அமெரிக்காவின் மேற்கு மாகாணமான மொன்டனா குளிரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வெப்பநிலை -50F (-45C) என்னும் அளவுக்கு சரிந்துள்ளது.

கனடாவில் ஓன்டோரியோ, கியூபெக் ஆகிய மாகாணங்களில் பனிப்புயலில் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. கியூபெக் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 1.2 லட்சம் வீடுகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சில வீடுகளுக்கு மின் இணைப்பை மீண்டும் கொடுக்க இன்னும் சில நாட்கள் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/cy7x4rn1nx4o

  • கருத்துக்கள உறவுகள்

நியூயோர்க் மாநிலத்தில் இதுவரை 37 பேர் பலி.இன்னும் கூடலாம் என்கிறார்கள்.

CNN — 

As a massive winter storm continues to blast much of the US with brutal winter weather – leading to at least 37 deaths nationwide – parts of western New York have been buried by up to 43 inches of snow, leaving vehicles stuck and power out for thousands during the Christmas weekend.

New York Gov. Kathy Hochul told CNN the storm is the “most devastating storm in Buffalo’s long storied history.” The heavy snowfall and blizzard conditions made roads impassable with zero visibility, froze power substations and left at least 17 people across the state dead as of Sunday night.

Western New York is drowning in thick “lake effect” snow – which forms when cold air moves over the warm waters of the Great Lakes – just one month after the region was slammed with a historic snowstorm.

https://www.cnn.com/2022/12/26/weather/arctic-winter-storm-new-york-blizzard-monday/index.html

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் பனிப்புயல்: காருக்குள்ளேயே உறைந்து உயிர் விட்ட பரிதாபம்

அமெரிக்காவில் பனிப்புயல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நியூயார்க் மாகாணம் பஃபல்லோ நகரில் பனி மூடிய வீடு

26 டிசம்பர் 2022
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்காவில் நீடிக்கும் பனிப்புயலால் நியூயார்க் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அங்குள்ள பஃபல்லோ நகரம் முழுமையாக பனியால் மூடப்பட்டுள்ளது.

கனடா முதல் மெக்சிகோ எல்லை வரையிலும் நீடிக்கும் பனிப்புயலுக்கு பனிப்புயலுக்கு இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 28 பேர் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

குறிப்பாக, பஃபல்லோ நகரை பனி மூடியதால் கடுங்குளிரில் உறைந்து இறந்து போனவர்கள் அதிகம். சிலர் கார்களில் இருந்தபடியே மரணத்தைத் தழுவியுள்ளனர்.

பஃபல்லோ நகரில் பனிப்பொழிவு இடைவிடாமல் தொடர்வதால் ஏராளமான வீடுகள் பனி மூடிக் காணப்படுகின்றன. சாலைகள் பனி மூடிக் கிடப்பதால் மீட்புப் பணியை முழு வீச்சில் தொடர முடியவில்லை.

 

தொலைதூர இடங்களை மீட்பு வாகனங்களோ, மருத்துவ அவசரப் பணியில் உள்ள வாகனங்களோ நெருங்கவே முடியவில்லை.

உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்த கடந்த ஞாயிறன்று, அமெரிக்காவில் பனிப்பொழிவால் பயணத்தை தொடர முடியாமல் சாலையோரம் ஆங்காங்கே பலரும் குடும்பத்துடன் காருக்குள்ளேயே முடங்கிக் கிடந்துள்ளனர்.

அவ்வாறு, பனிமழையில் சிக்கித் தவித்த, 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளைக் கொண்ட குடும்பம் ஒன்று அவசர உதவி கேட்டு 11 மணி நேரத்திற்கும் மேலாக காத்துக் கிடக்க நேரிட்டுள்ளது. தடைகள் பல கடந்து அங்கு சென்ற மீட்புக் குழு அந்த குடும்பத்தை பத்திரமாக மீட்டு வந்துள்ளது.

அமெரிக்காவில் பனிப்புயல், காருக்குள் உறைந்த மக்கள்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

பஃபல்லோ நகரில் பனி மூடிய கார்கள் சாலையோரம் நிற்கும் காட்சி

சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அந்த குழந்தைகளின் தந்தை ஸிலா சான்டியாகோ, "நம்பிக்கையே இல்லாதவனாக இருந்தேன்" என்று கூறினார். கடுங்குளிரின் தாக்கத்தை தவிர்க்க, கார் என்ஜினை தொடர்ந்து இயக்கத்திலேயே வைத்திருந்ததாகவும், மன உளைச்சல் வராமல் இருக்க குழந்தைகளுடன் விளையாடி பொழுதைக் கழித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் மேலும் பல குடும்பங்களும் பனிப்பொழிவில் சிக்கி சாலையில் ஆங்காங்கே தவிக்கலாம் என்று கருதப்படுகிறது. அமெரிக்க தேசிய வானிலை மையம் கணிப்புப் படி, அடுத்து வரும் நாட்களில் பனிப்பொழிவு குறைந்தால் மட்டுமே நிலைமையில் மாற்றம் வரும்.

அவ்வாறான வேளையில், பனி சற்று விலகும் என்பதால் மீட்புக் குழுவினர் தடையின்றி பணியைத் தொடர்வார்கள். அந்த குழுவினர் தொலைதூர இடங்களுக்கும், சாலை நெடுகிலும் ஆய்வு செய்யும் போது மேலும் பலர் மீட்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் பனிப்புயல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நியூயார்க் மாகாணம் ஹம்பர்க்கில் ஈரி ஏரிக்கரை

பஃபல்லோ நகரை பூர்விகமாகக் கொண்ட நியூயார்க் மாகாண ஆளுநர் கேத் ஹோச்சுல், "பஃபல்லோ நகரின் மிக மோசமான பனிப்புயலாக இது வரலாற்றில் பதிவாகும்", என்று கூறுகிறார்.

"சாலையின் இருபுறமும் கார்கள் முடங்கிக் கிடப்பதை பார்க்கும் போது ஏதோ போர்க்களத்திற்குச் செல்வது போல இருக்கிறது" என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

உயிருக்கே ஆபத்தான மிக மோசமான காலநிலை நிலவுவதால் மக்கள் தொடர்ந்து வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் பனிப்புயல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நியூயார்க் மாகாணம் ஹம்பர்க்கில் பனி மூடிக் கிடக்கும் வீடு மற்றும் கார்

வெர்மாண்ட், ஒஹாயோ, மிசோரி, விஸ்கான்சின், கான்சாஸ், கொலராடோ ஆகிய மாகாணங்களிலும் பனிப்புயல் தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன. தெற்கு ஃபுளோரிடாவில் பல்லி இனங்களில் ஒன்றான இகுவானாக்கள் உறைந்து, மரங்களில் இருந்து கீழே விழும் அளவுக்கு வெப்பநிலை மிகவும் குறைந்துவிட்டது.

அமெரிக்காவின் மேற்கு மாகாணமான மொன்டனா குளிரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வெப்பநிலை -50F (-45C) என்னும் அளவுக்கு சரிந்துள்ளது.

அசோசியேட்டர் பிரஸ் அளித்துள்ள தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, 2 லட்சத்திற்கும் குறைவான வீடுகளில் மட்டுமே மின்சாரம் இல்லை. இது ஒரு கட்டத்தில் 17 லட்சம் என்கிற அளவில் உச்சத்தில் இருந்தது.

https://www.bbc.com/tamil/articles/cy7x4rn1nx4o

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை புரட்டிப் போடும் 'வெடிகுண்டு சூறாவளி' என்றால் என்ன?

அமெரிக்க உறைப்பனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 மணி நேரங்களுக்கு முன்னர்

கடுமையான பனிப்புயல் ஒன்று அமெரிக்காவையும் கனடாவையும் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது.

இதனால் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அங்குள்ள பஃபல்லோ நகரம் முழுமையாக பனியால் மூடப்பட்டுள்ளது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த பகுதியே பனியால் நிரம்பியுள்ளது. 

கனடா முதல் மெக்சிகோ எல்லை வரையிலும் நீடிக்கும் பனிப்புயலுக்கு இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 28 பேர் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள மெரிட் நகரில் பனிபடர்ந்த சாலையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.

பஃபல்லோ நகரை பனி மூடியதால் கடுங்குளிரில் உறைந்து இறந்து போனவர்கள் அதிகம். சிலர் கார்களில் இருந்தபடியே உயிரிழந்துள்ளனர்.

 

 தற்போது ஏற்பட்டுள்ள இந்த பனிப்புயலை பாம்ப் சைக்லோன் அதாவது வெடிகுண்டு சூறாவளி என நிபுணர்கள் அழைக்கின்றனர். இந்த வெடிகுண்டு சூறாவளி என்றால் என்ன அதன் பெயர் காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

பாம்ப் சைக்லோன்  அல்லது ‘வெடிகுண்டு சூறாவளி’ என்றால் என்ன?

காற்றழுத்தத்தின் மையப் பகுதி, 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 24 மில்லிபார்களாகக் குறைந்து வேகமாகத் தீவிரம் அடைவதாகத் தோன்றினால் அதை வானிலை ஆய்வாளர்கள் 'வெடிகுண்டு சூறாவளி' என அழைக்கிறார்கள்.

இந்த சூறாவளியின் வெடிக்கும் சக்தி காற்றழுத்தத்தின் வேகமான வீழ்ச்சியால் ஏற்படுவதால் இதை வெடிகுண்டு என அவர்கள் அழைக்கிறார்கள்.

புயல், பனிப்புயல் முதல் கடுமையான இடியுடன் கூடிய கன மழையையும் இந்த சூறவாளி  ஏற்படுத்தக் கூடியது.

இந்த புயல் காற்று ஒரு மரத்தை சாய்க்கும் அளவிற்கு வலுவானதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும் ஆற்றலையும் கொண்டதாக இருக்கும்.

இந்த வகை சூறாவளிகள், அமெரிக்கா மற்றும் கனடாவின் கிழக்கு கடலோர பகுதிகளில் மிகவும் பொதுவானவை. அங்குள்ள குளுமையான நீரோட்டமும் வளைகுடா வெப்ப நீரோட்டமும் வெடிகுண்டு சூறாவளி உருவாவதற்கான உகந்த சூழலை வழங்குகின்றன.

அமெரிக்க உறைப்பனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

குளிர் நமது உடலிற்கு என்ன செய்யும்?

நமது உடல் குளிர்ச்சியாக உணர்ந்தால் என்ன செய்யும் தெரியுமா? இயல்பாக நமது உடலில் பல எதிர்ப்பு அம்சங்கள் உள்ளன. எனவே உடல் குளிரை உணர்ந்தவுடன், நமது உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நமது தசைகள் நடுங்க தொடங்கும். பற்கள் கிடுகிடுக்கும். நமது உடலில் உள்ள முடி எழும்பி நிற்கும். அதாவது நமது முன்னோர்கள் காலத்தில் நமது உடலில் அதிக முடி இருந்த சமயத்தில் இது ஒரு எதிர்ப்பு நிலையாக இருந்தது. அதுவே இப்போது வரை தொடர்கிறது.

நமது மூளையில் 'ஹைப்போதாலமஸ்' என்ற சுரப்பி ஒரு தெர்மோஸ்டாட்டை போல செயல்படுகிறது. அதாவது தேவையான சமயத்தில் வெப்பத்தை அதிகரிக்கவும், குறைக்கவும் செய்கிறது. குளிருக்கு ஏற்றாற்போல ஒரு இடம் கிடைக்கும் வரை உங்கள் முக்கிய உடல் உறுப்புகள் வெப்பமாக உணர இந்த மாதிரியான எதிர்வினைகளை தூண்டும் ஒரு சுரப்பியாக அது செயல்படுகிறது.

இது பொதுவாக நமது உடல் குளிர்ச்சியாக உணரும்போது ஏற்படும் நிலையாகும்.

ஆனால் தற்போது வீசிவரும் சக்தி வாய்ந்த புயல் காற்று வீடுகள், சாலைகளை சேதமடைய செய்வதுடன் ஃப்ரோஸ்ட்பைட் (frostbite) என்று சொல்லக்கூடிய அதீத குளிரால் உடல் உறைந்து போகும் நிலையையும் ஏற்படுத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

america snow

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை பாதித்த உறைபனி

இந்த பனிப்புயலால் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இது கிறித்துமஸ் நேரம் என்பதால் பலர் தங்கள் குடும்பங்களுடன் கொண்டாட்டத்தை மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்த பனிப்புயலால் அது பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடாவில் வருடத்தின் இந்த காலப்பகுதியில் விடுமுறை காலப் பயணங்களை மக்கள் அதிகமாக மேற்கொள்வர்.

அதுமட்டுமல்லாமல் சாலைகளிலும் ஆங்காங்கே பனி படர்ந்துள்ளதால் சிறு பயணங்களையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை விபத்துக்களும் ஏற்பட்டும் வருகின்றன. அமெரிக்காவில் மாகாணங்களை இணைக்கும் சாலைகள் பல மூடப்பட்டுள்ளன.

அடுத்த சில தினங்களில் குளிர் சற்று குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் சில பகுதிகளில் -45 டிகிரி செல்சியஸ் அல்லது -50 டிகிரி செல்சியஸ் வரை குளிரின் அளவு பதிவாகும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/cv21w5nw697o

  • கருத்துக்கள உறவுகள்

நியூயோர்க்கில் சக்திவாய்ந்த குளிர்கால புயலால் இதுவரை 34பேர் உயிரிழப்பு!

நியூயோர்க்கில் சக்திவாய்ந்த குளிர்கால புயலால் இதுவரை 34பேர் உயிரிழப்பு!

வட அமெரிக்காவை தாக்கிய ஒரு சக்திவாய்ந்த குளிர்கால புயல் அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் அதிகமான உயிர்களைக் கொன்றதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பஃபலோ நகரத்தை உள்ளடக்கிய எரி கவுண்டியில் குறைந்தது 34 பேர் இறந்துள்ளனர் என்று கவுண்டி நிர்வாகி மார்க் பொலன்கார்ஸ் நேற்று (புதன்கிழமை) தெரிவித்தார்.

உயிரிழந்வர்களில் 3 பேரை அடையாளம் காணும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

விடுமுறை வார இறுதியில் அமெரிக்கா முழுவதும் வீசிய புயல், எட்டு மாநிலங்களில் குறைந்தது 60 பேரைக் கொன்றது.

1977இன் பிரபலமற்ற பனிப்புயலின் போது ஏற்பட்ட உயிரிழப்புகளை விட, கடந்த சில நாட்களில் எரி கவுண்டியில் இப்போது அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்த புயலில் இருபத்தி ஒன்பது பேர் இறந்ததாக தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1317797

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உக்ரேனோட சேர்ந்து அமெரிக்காவும் குளிர் அவலத்தில் பங்கு கொள்ளுது.😊
விதி வலியது.🤣
தன்வினை தன்னைச்சுடும். ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.😂

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் உறைபனி ஏரியில் விழுந்து இந்தியாவை சேர்ந்த மூவர் உயிரிழப்பு

By RAJEEBAN

29 DEC, 2022 | 12:34 PM
image

அமெரிக்காவின் உறைபனி ஏரியில் விழுந்து இந்தியாவை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தற்போது கடும் குளிர் ஏற்பட்டுள்ளது. அதிலும் அமெரிக்காவில் ‘பாம்ப்’ புயலால் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். இதுவரை 32க்கும் மேற்பட்டோர் இறந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிலர் காரிலேயே உறைந்து உயிரை விட்டுள்ளனர். டெக்சாஸ், சிகாகோ, நியூயார்க், ஓஹியோ ஆகிய மாகாணங்களில் விமான போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பாலபர்ரகு பகுதியை சேர்ந்த நாராயணா (40), ஹரிதா (36) தம்பதியினர் தங்களது 2 மகள்களுடன் அங்குள்ள அரிசோனா மாகாணத்தில் கடந்த 7 ஆண்டுகளாக வசித்து வந்தனர். தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், கடந்த திங்கட்கிழமை நாராயணா தனது மனைவிமற்றும் பூஜிதா (12), ஹர்ஷிதா (10) ஆகிய இரு மகள்களுடன் கோகோனினோ பகுதியில் உறைந்த நிலையில் இருக்கும் உட்ஸ் கேன்யன் ஏரியை பார்வையிட காரில் சென்றனர். அவர்களுடன் கோகுல்(47) என்பவரும் உடன் சென்றிருந்தார். ஏரியின் உறைபனியில் ஏறி நின்று அவர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அதன்பின் நாராயணா, கோகல் மற்றும் ஹரிதா ஆகிய மூன்று பேரும் உறைந்த ஏரியில் நடந்து சென்றனர். பூஜிதா, ஹர்ஷிதா ஆகியோர் காரில் இருந்தனர்.

உறைந்த ஏரியில் ஐஸ்கட்டி திடீரென உடைந்ததால், 3 பேரும் ஏரியில் மூழ்கினர். காரில் இருந்த மகள்களின் கண் முன் இவர்கள் ஏரியில் மூழ்கினர். இச்சம்பவத்தை கேள்விபட்டதும் உட்ஸ் கேன்யன் ஏரிக்கு மீட்பு குழுவினர் சென்று ஹரிதாவை மட்டும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.நீரில் மூழ்கிய நாராயணா மற்றும் கோகுலை மீட்பு குழுவினர் சடலங்களாக நேற்று முன்தினம் மீட்டனர்.

குண்டூரில் உள்ள நாராயணாவின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் தகவலறிந்து கதறி அழுதனர். இது குறித்து நாராயணாவின் தந்தை வெங்கடசுப்பாராவ் கூறியதாவது:

921484.jpg

சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த நாராயணா, எம்எஸ் படித்து முதலில் மலேசியாவில் வேலை செய்தார். அதன் பின்னர் அமெரிக்காவில் வேலை கிடைத்தது. கடந்த ஜூன் மாதம் மூத்த மகள் பூஜிதா தொடர்புடைய ஒரு விழா இங்கு தான் நடந்தது. அதற்கு அனைவரும் வந்திருந்தனர். அதுவே கடைசி. சில நாட்களுக்கு முன் என்னுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அமெரிக்காவில் உறைபனி குறித்தும் பேசினார். எங்கள் பகுதியில் அதிகம் பாதிப்பு இல்லை பயப்பட வேண்டாம் என்றார். ஆனால், இப்படி ஆகி விட்டது என கூறி அழுதார்.

https://www.virakesari.lk/article/144431

  • கருத்துக்கள உறவுகள்


 

Homes on Lake Erie were encased in ice as blizzard whipped frigid waves onshore

By Angela Fritz, CNN
Updated 11:05 AM EST, Thu December 29, 2022
 
 

Homes are covered in ice Wednesday in the waterfront community of Crystal Beach in Fort Erie, Ontario.

Homes are covered in ice Wednesday in the waterfront community of Crystal Beach in Fort Erie, Ontario.

Cole Burston/AFP/Getty Images

CNN — 

Lakefront homes in Ontario were encased in a thick, spiky coat of ice after last weekend’s blizzard whipped frigid waves on shore. 

Residents of the Fort Erie community, coincidentally named Crystal Beach, said the waves were crashing over their Lake Erie break wall during the storm.

 

 

https://www.cnn.com/2022/12/29/us/homes-ice-blizzard-lake-erie-climate/index.html

  • கருத்துக்கள உறவுகள்

 

பல்வேறுபட்ட மாநிலங்களிலிருந்தும் பனிக்குள் மக்களை காப்பாற்ற அதற்கேற்ற வாகனங்களுடன் மீட்புப் பணி நடந்து கொண்டிருக்கிறது.

அனேகமான இடங்களில் மின்சாரம் இல்லாமையினால் பெரிதும் அவலப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் பிடிக்கும்,பனி பிடிக்கும் என்று சொன்னவர்கள் எல்லாம் சுகமாய் இருக்கினமோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

குளிர் பிடிக்கும்,பனி பிடிக்கும் என்று சொன்னவர்கள் எல்லாம் சுகமாய் இருக்கினமோ?

நீங்க மிகவும் தாமதம். இன்று 55 F, பனிப்புகார் - அரைக் காற்சட்டை ரி சேர்ட் காலநிலை!😂

  • கருத்துக்கள உறவுகள்
On 29/12/2022 at 20:49, ஈழப்பிரியன் said:

 

பல்வேறுபட்ட மாநிலங்களிலிருந்தும் பனிக்குள் மக்களை காப்பாற்ற அதற்கேற்ற வாகனங்களுடன் மீட்புப் பணி நடந்து கொண்டிருக்கிறது.

அனேகமான இடங்களில் மின்சாரம் இல்லாமையினால் பெரிதும் அவலப்படுகிறார்கள்.

க‌வ‌ன‌மாய் இருங்கோ............உண‌வுக‌ள் வேண்ட‌ கூடிய‌தா இருக்கா.........யூடுப்பில் காணொளிக‌ளை பார்க்க‌ ம‌க்க‌ள் வீட்டை விட்டு வெளியில் போக‌ முடியாது போல் இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

குளிர் பிடிக்கும்,பனி பிடிக்கும் என்று சொன்னவர்கள் எல்லாம் சுகமாய் இருக்கினமோ?

 

15 minutes ago, பையன்26 said:

க‌வ‌ன‌மாய் இருங்கோ............உண‌வுக‌ள் வேண்ட‌ கூடிய‌தா இருக்கா.........யூடுப்பில் காணொளிக‌ளை பார்க்க‌ ம‌க்க‌ள் வீட்டை விட்டு வெளியில் போக‌ முடியாது போல் இருக்கு 

பிரச்சனை எல்லாம் கனடா எல்லையை அண்டிய பவலோ என்னும் பகுதி.

நாங்க ஜாலியா இருக்கிறம்.

1 hour ago, Justin said:

நீங்க மிகவும் தாமதம். இன்று 55 F, பனிப்புகார் - அரைக் காற்சட்டை ரி சேர்ட் காலநிலை!😂

ஐயாவுக்கு ரொம்பவும் கொழுப்பு பிடித்திருக்கு.

55F இல் அரைக் காற்சட்டை ரிசேட்டுடன் சுத்துறார்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

 

பிரச்சனை எல்லாம் கனடா எல்லையை அண்டிய பவலோ என்னும் பகுதி.

நாங்க ஜாலியா இருக்கிறம்.

ஐயாவுக்கு ரொம்பவும் கொழுப்பு பிடித்திருக்கு.

55F இல் அரைக் காற்சட்டை ரிசேட்டுடன் சுத்துறார்.

அப்ப‌டியா 
அன்மையில் இல‌ங்கையில் இருந்து க‌ன‌டா போன‌ ம‌க்க‌ள் குளிரை எதிர் கொள்வ‌து க‌ஸ்ர‌ம்
என்ன‌ செய்ய‌ ஊரில் ஏதும் விஸ்னேஸ் செய்து வாழுங்கோ என்று சொன்னால் கேட்க்க‌வா போகுதுக‌ள்.............சொன்னால் பொறாமையில் சொல்லு என்று நினைக்குங்க‌ள் ப‌ட்டு திருந்த‌ட்டும் லொல் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

குளிர் பிடிக்கும்,பனி பிடிக்கும் என்று சொன்னவர்கள் எல்லாம் சுகமாய் இருக்கினமோ?

நீங்கள் வெக்கை பிடிக்கும் எண்டதுக்காய் சகாரா பாலைவனத்தில் சன்பார்த் எடுப்பதில்லைதானே🤣. அப்படித்தான் இதுவும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.