Jump to content

ரஷ்யா - யுக்ரேன் போர்: 2023-ல் நடக்க வாய்ப்புள்ள 5 சாத்தியங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா - யுக்ரேன் போர்: 2023-ல் நடக்க வாய்ப்புள்ள 5 சாத்தியங்கள்

ரஷ்யா-யுக்ரேன் போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கி பத்து மாதங்கள் கடந்துவிட்டன. போரில் ஈடுபட்டுள்ள இந்த இரண்டு நாடுகளிலும் 2023இல் களநிகழ்வுகள் எவ்வாறு அமையும் என்பதை ராணுவ ஆய்வாளர்கள் சிலரிடம் கேட்டோம். வரும் ஆண்டிலாவது இந்த போர் நிறைவடையுமா? அப்படி நடந்தால் அம்முடிவு போர்க்களத்தில் அமையுமா அல்லது பேச்சுவார்த்தை மேசையில் அமையுமா? இல்லையென்றால் 2024ஆம் ஆண்டும் இப்போர் தொடருமா?

"முக்கியத்துவம் பெறும் வசந்தகாலம்"

மைக்கேல் கிளார்க், பிரிட்டன், எக்ஸிடெர்

உத்தியியல் ஆய்வுகள் நிறுவனத்தின் இணை இயக்குநர் பரந்துவிரிந்த யூரேசியா பகுதிகளில் உள்ள நிலப்பரப்பை ஆக்கிரமிக்க முற்படும் நாடுகள் பெரும்பாலும் குளிர்காலங்களில் தடுமாறும். நெப்போலியன், ஹிட்லர் மற்றும் ஸ்டாலின் அனைவரும் தங்கள் படைகளை கடும் குளிர்காலத்தில் இப்பகுதிகளில் வழிநடத்த வேண்டியிருந்தது. ஆனால், தற்போது புதினின் படைகள் பின்னோக்கிச் செல்கின்றன. வசந்த காலத்தில் ஒரு புதிய தாக்குதலை மேற்கொள்வதற்காக புதின் தனது படைகளை தயார்படுத்துவதற்கான முயற்சி இது. இரு தரப்பினருக்கும் ஓய்வு தேவை. ஆனால் யுக்ரேனியர்கள் சிறப்பான தளவாடங்களோடு தொடர்ந்து செல்வதற்கான உந்துதலையும் கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் டான்பாஸ் பகுதியிலாவது ரஷ்யா மீது அழுத்தத்தைச் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

கிரெமின்னா மற்றும் ஸ்வடோவ் பகுதிகளில் உள்ள ரஷ்யப் படைகளை 40 மைல் தொலைவிற்கு பின்வாங்கச் செய்து தங்களது அடுத்த இயற்கை அரணை நோக்கித் தள்ளுவதற்கான முயற்சியில் வெற்றிக்கு அருகில் இருக்கின்றனர் யுக்ரேன் படையினர். இது பிப்ரவரியில் ரஷ்யா போரைத் தொடங்கிய எல்லைப்பகுதி அருகே இருக்கும். உடனடியாக ஒரு வெற்றி கிடைக்கலாம் என்பதால் யுக்ரேன் தற்போதைக்கு தனது முயற்சியை நிறுத்தாது. அதேபோல, கெர்சன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து தென்மேற்கில் யுக்ரேன் தாக்குதல்கள் சற்று இடைநிறுத்தப்படலாம். கிரைமியாவிற்குள் நுழைவதற்கான ரஷ்யாவின் சாலை மற்றும் ரயில் இணைப்புகளைக் கைப்பற்றும் வகையில் டினிப்ரோ ஆற்றின் கிழக்குப் பகுதியை யுக்ரேன் கடப்பது கடினமான காரியமாக இருக்கலாம். ஆனால், யுக்ரேன் ஓர் எதிர்பாரா தாக்குதலைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஒருபோதும் நிராகரிக்க முடியாது. வசந்தகாலத்தில் யுக்ரேனின் தாக்குதல் எப்படி அமைகிறது என்பது 2023இல் ரஷ்யாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும். புதிதாக அணிதிரட்டப்பட்ட துருப்புகளில் சுமார் 50,000 பேர் ஏற்கனவே களத்தில் இருப்பதாக புதின் ஒப்புக்கொண்டுள்ளார். இப்போது புதிதாக அணிதிரட்டப்பட்டவர்களில் மேலும் 250,000 பேர் பயிற்சியில் உள்ளனர். அந்த புதிய ரஷ்யப் படைகளின் செயல்பாடுகள் போர்க்களத்தில் கணிக்கப்படும் வரை மேலும் போரைத் தவிர வேறு எதற்கும் வாய்ப்பில்லை. ஒரு குறுகிய மற்றும் நிலையற்ற போர்நிறுத்தம் மட்டுமே இப்போது இருக்கும் வாய்ப்பு. போரை நிறுத்தப்போவதில்லை என புதின் தெரிவித்துள்ளார். மேலும், தங்களின் நாட்டிற்காக போராட்டத்தைத் தொடர்ந்து வருவதாக யுக்ரேனும் தெளிவுபடுத்தியுள்ளது.

 
ரஷ்யா-யுக்ரேன் போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இழந்ததை மீட்கும் யுக்ரேன்"

ஆண்ட்ரி பியோன்ட்கோவ்ஸ்கி, வாஷிங்டன் டி.சி-யில் உள்ள ஆய்வாளர் யுக்ரேன் 2023 வசந்த காலத்தில் அதன் இழந்த நிலப்பரப்பை மீட்டு வெற்றி பெறும். இரண்டு காரணிகள் இந்த முடிவை வடிவமைக்கின்றன. ஒன்று யுக்ரேனிய ராணுவம் மற்றும் ஒட்டுமொத்த யுக்ரேனிய தேசத்தின் உந்துதல், உறுதிப்பாடு மற்றும் தைரியம், இது நவீன போர் வரலாறு இதுவரை கண்டிராதது. மற்றொன்று, புதினின் பல ஆண்டுகால சமாதானங்களை நம்பிய பிறகு, மேற்கத்திய நாடுகள் தாங்கள் எதிர்கொண்டுள்ள வரலாற்றுச் சவாலினை எதிர்கொள்ளும் அளவிற்கு வளர்ந்துள்ளன. நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கின் சமீபத்திய அறிக்கையில் இது சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. "நாம் செலுத்தும் விலை பணத்தில் உள்ளது. ஆனால், யுக்ரேனியர்கள் செலுத்தும் விலை ரத்தமாக உள்ளது. தங்களது படைகள் வெற்றிபெறுவதை சர்வாதிகார ஆட்சியாளர்கள் கண்டால் நாம் அனைவரும் இன்னும் அதிக விலை கொடுக்க வேண்டிவரும். மேலும் உலகம் நம் அனைவருக்கும் மிகவும் ஆபத்தான இடமாக மாறும். " யுக்ரேனின் உறுதியான வெற்றி என்பது நேட்டோ எவ்வளவு விரைவாக ராணுவத் தாக்குதல் ஆயுதங்களின் தொகுப்பை அவர்களுக்கு வழங்குகிறது என்பதைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும். வரும் மாதங்களில் (ஒருவேளை வாரங்களில்) மெலிடோபோல் முக்கிய போர்க்களமாக மாறும் என எதிர்பார்க்கிறேன். மெலிடோபோலைக் கைப்பற்றிய பின்னர், யுக்ரேனியர்கள் எளிதாக அசோவ் கடற்பகுதியை நோக்கிச் செல்வதோடு, கிரைமியாவிற்கான ரஷ்யாவின் தகவல் தொடர்பு இணைப்புகளையும் திறம்படத் துண்டித்து விடுவார்கள். போர்க்களத்தில் யுக்ரேனின் முன்னேற்றங்களுக்குப் பிறகு ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் ரஷ்ய சரணடைதல் முறைப்படி ஒப்புக்கொள்ளப்படும். யுக்ரேன், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய வெற்றிகரமான சக்திகள் ஒரு புதிய சர்வதேச பாதுகாப்பு கட்டமைப்பை உருவாகும்.

"உடனடி முடிவு தென்படவில்லை"

பார்பரா சான்செட்டா, போர் ஆய்வுகள் துறை,

கிங்ஸ் கல்லூரி, லண்டன் யுக்ரேனின் மிகவும் சக்திவாய்ந்த அண்டை நாடுகளின் செயல்களை புதின் தவறாகக் கணித்தார். இந்த மோசமான கணக்கீடு ஒரு நீண்ட மோதலுக்கு வழிவகுத்தது. பார்வைக்கு எட்டிய தூரம்வரை இதற்கு முடிவு இல்லை. இந்த குளிர்காலம் கடினமாக இருக்கும். ஏனெனில் யுக்ரேனிய உள்கட்டமைப்பு மீதான ரஷ்யத் தாக்குதல்கள் ஏற்கனவே சிதைந்துபோன மக்களின் மன உறுதியையும் சகிப்புத்தன்மையையும் மேலும் உடைக்க முயற்சிக்கும். ஆனால், யுக்ரேனியர்களின் விடாமுயற்சி கவனிக்க வேண்டியது. அவர்கள் இனியும் உறுதியாக நிற்பார்கள். போர் நீண்டு கொண்டே போகும். பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் குறைவே. ஒரு வெற்றிகரமான சமாதான ஒப்பந்தத்திற்கு குறைந்தபட்சம் ஒரு தரப்பின் முக்கிய கோரிக்கைகள் மாற வேண்டும். ஆனால், இதற்கான எந்த சாத்தியக்கூறும் தெரியவில்லை. பிறகு எப்படித்தான் இந்த போர் முடிவுக்கு வரும்? பொருள் மற்றும் மனிதவள செலவுகள் ரஷ்ய அரசியல் உயரடுக்கின் திட்டங்களை உடைக்கக்கூடும். போர் முடிவிற்கான சாவி ரஷ்யாவிற்குள்ளேயே இருக்கும். தவறான கணக்கீடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் வியட்நாம் போரும் சோவியத் யூனியனின் ஆப்கானிஸ்தான் மீதான போரும் இவ்வாறே முடிவடைந்தன. தவறாகத் திட்டமிட்ட நாட்டில் அரசியல் நிலைமைகள் மாறி, அந்நாடு போரிலிருந்து வெளியேறுவது மட்டுமே ஒரே சாத்தியமான வழி. எவ்வாறாயினும், போரின் விளைவால் ஏற்பட்டுள்ள உள்நாட்டு அழுத்தங்களை எதிர்கொண்டு மேற்குலக நாடுகள் யுக்ரேனுக்கான ஆதரவில் உறுதியாக நின்றால் மட்டுமே இது நிகழலாம். துரதிர்ஷ்டவசமாக, இது நீண்டகால அரசியல், பொருளாதார மற்றும் இராணுவத் தீர்வுக்கான போராகத் தொடரும். 2023ஆம் ஆண்டின் முடிவிலும் இந்த போர் தொடரலாம்.

ரஷ்யா-யுக்ரேன் போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ரஷ்யத் தோல்வியைத் தவிர வேறு முடிவு இல்லை"

பென் ஹோட்ஜஸ், முன்னாள் காமாண்டிங் ஜெனரல்,

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆர்மி ஐரோப்பா கியவ்வில் வெற்றி அணிவகுப்பைத் திட்டமிடுவதற்கு இப்போது வாய்ப்பில்லை. ஆனால், சூழல் தற்போது யுக்ரேனுக்கு சாதகமாக உளது. இந்த போரில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அநேகமாக 2023இல் இது நடக்கலாம். குளிர்காலத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது. ஆனால், பிரிட்டன், கனடா மற்றும் ஜெர்மனியிலிருந்து வரும் அனைத்து குளிர்கால உபகரணங்களையும் கொண்டு யுக்ரேன் படைகள் ரஷ்யாவை விட சிறப்பாக இந்த காலத்தைச் சமாளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜனவரிக்குள், கிரைமியாவின் விடுதலை எனும் இறுதிக்கட்டத்திற்கு யுக்ரேன் சென்றுவிடும். போர் என்பது விடாமுயற்சிக்கான சோதனை என்பதை வரலாற்றிலிருந்து நாம் அறிவோம். யுக்ரேனிய மக்கள் மற்றும் படைவீரர்களின் உறுதியையும், யுக்ரேனின் தளவாட நிலைமை வேகமாக முன்னேறுவதையும் பார்க்கும்போது, ரஷ்யாவின் தோல்வியைத் தவிர வேறு எந்த விளைவையும் என்னால் சிந்திக்க முடியவில்லை. கெர்சனிலிருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டது என்னை இந்த முடிவுக்கு இட்டுச் சென்றது. முதலில் யுக்ரேனிய மக்களுக்கு உளவியல் ரீதியாக ஊக்கம், இரண்டாவதாக ரஷ்யாவின் மோசமான தோல்வி, மூன்றாவதாக யுக்ரேனின் படைகளுக்கு ஒரு முக்கிய செயல்பாட்டு அனுகூலம் ஆகிய அனைத்தும் கிரைமியாவிற்குள் நுழையும் யுக்ரேனிய ராணுவத்தின் கைகளிலேயே உள்ளது. 2023ஆம் ஆண்டின் இறுதியில் கிரைமியா முழுவதுமாக யுக்ரேனியக் கட்டுப்பாடு மற்றும் இறையாண்மைக்குள் திரும்புவதைக் காணலாம் என்று நான் நம்புகிறேன், ஏதேனும் ஓர் உடன்படிக்கை மூலமாக செவஸ்டோபோலில் ரஷ்யாவின் கடற்படை இருப்பை படிப்படியாக (தோராயமாக 2025 வரை) அகற்ற அனுமதிக்கும். மரியபோல் மற்றும் பெர்டியன்ஸ்க் ஆகிய முக்கியமான துறைமுகங்கள் உட்பட அசோவ் கடற்கரையின் பகுதிகளை யுக்ரேன் புனரமைக்கும். மேலும், டினிப்ரோவிலிருந்து கிரைமியாவிற்கு தண்ணீரைத் திருப்பிவிடும் வடக்கு கிரைமியன் கால்வாயை மீண்டும் திறப்பது அதில் கவனிக்கத்தக்க விஷயமாக இருக்கும்.

"இதே நிலை தொடரலாம்"

டேவிட் ஜென்டெல்மேன், டெல் அவிவில் உள்ள ராணுவ நிபுணர் போர் எப்படி முடியும் என்பதைவிட, இரு நாடுகளும் அடுத்த கட்டத்தில் எதனைச் சாதிக்க விரும்பும் என்பதைப் பார்ப்போம். ரஷ்யாவின் 300,000 அணிதிரட்டப்பட்ட துருப்புகளில் பாதி பேர் மட்டுமே ஏற்கனவே போர் நடக்கும் பகுதிகளில் உள்ளனர். மீதமுள்ளவர்கள், கெர்சனில் இருந்து பின்வாங்கிய பிறகு விடுவிக்கப்பட்ட வீரர்களுடன் இணைந்து புதியதொரு தாக்குதலை மேற்கொள்ளலாம். லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளின் ஆக்கிரமிப்பு தொடரும், ஆனால் டான்பாஸில் யுக்ரேனியப் படைகளைச் சுற்றி வளைக்க தெற்கிலிருந்து பாவ்லோகிராட் வரை ஒரு பெரிய ரஷ்யப்படை கட்டமைக்கப்பட்ட வாய்ப்பு குறைவு. தற்போதைய யுக்திகளே இனியும் தொடரும். பாக்முட் மற்றும் அவ்திவ்கா பகுதிகளைப் போல ஸ்வடோவ்-கிரெமின்னா பகுதிகளிலும் யுக்ரேனிய படைகள் மெதுவாக முன்னேறுவதே திட்டமாக இருக்கும். யுக்ரேனிய எரிசக்தி உள்கட்டமைப்பைக் குறிவைப்பது மற்றும் பிற தாக்குதல்கள் மூலம் யுக்ரேனை பலவீனப்படுத்தும் இந்த போர் யுக்தி முடிவுக்கு வரும். கெர்சனில் இருந்து ரஷ்ய பின்வாங்கலுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க யுக்ரேனியப் படைகளும் விடுவிக்கப்பட்டன. அவர்களுக்கு மூலோபாய ரீதியாக மிகவும் முக்கியமான திசை தெற்கு பக்கம்தான். தெற்குப்புறமாக மெலிடோபோல் அல்லது பெர்டியன்ஸ்க் நோக்கி முன்னேறுவதன் மூலம் ரஷ்ய எல்லையில் இருக்கும் கிரைமியா பகுதியைக் கைப்பற்ற முடியும். இது யுக்ரேனுக்கு ஒரு பெரிய வெற்றியாக இருக்கும். இதைத் தடுக்கவே ரஷ்யர்கள் மெலிடோபோலைப் பலப்படுத்துகிறார்கள். யுக்ரேனுக்கான மற்றொரு வழி ஸ்வடோவ். இப்பகுதியை யுக்ரேன் கைப்பற்றினால், அது வடக்கு திசையில் ரஷ்யாவுக்கு பெரும் ஆபத்தாக இருக்கும். இந்த கட்டத்தில் எவ்வளவு யுக்ரேனியப் படைகள் தாக்குதலுக்கு தயாராக இருக்கின்றன? அடுத்த சில மாதங்களில் எத்தனை புதிய ரிசர்வ் படைகள் கவச வாகனங்கள் மற்றும் கனரக ஆயுதங்களுடன் தயாராகும் என்பதும் தான் இங்கே பெரிய கேள்வி. குளிர்காலத்திற்கு பிறகு இந்த கேள்விக்கான பதில் நமக்கு கிடைக்கும். அப்போது இந்த போர் எப்படி முடியும் என்பதற்கான பதிலும் நமக்கு கிடைக்கும்.

https://www.bbc.com/tamil/articles/cd1gvnxvjgqo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு ஊதுகுழல் ஊடகமான பிபிசி மேற்கு சார்பான 5 தெரிவுகளோட்டு நிப்பாட்டி விட்டது.

6ம் தெரிவாக, ரஸ்யா கிய்வை 3 நாளில் பிடிக்கும், ஒட்டு மொத்த உக்ரேனையும் 2 கிழமையில் கிளியர் பண்ணும், உக்ரேனிய பெண்கள் ரஸ்ய தாங்கிகள் மீது பூங்கொத்தை வீசி, சிறையில் இருந்த தப்ப படையில் சேர்ந்த வாக்கனர் கூலி படை குற்றவாளிகளுக்கு லிப்-டு-லிப் உம்மா அடிப்பார்கள் என்ற தெரிவையும் சேர்திருக்க வேண்டும்.

இது நடக்கத்தான் 90% வாய்ப்பு உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

மேற்கு ஊதுகுழல் ஊடகமான பிபிசி மேற்கு சார்பான 5 தெரிவுகளோட்டு நிப்பாட்டி விட்டது.

6ம் தெரிவாக, ரஸ்யா கிய்வை 3 நாளில் பிடிக்கும், ஒட்டு மொத்த உக்ரேனையும் 2 கிழமையில் கிளியர் பண்ணும், உக்ரேனிய பெண்கள் ரஸ்ய தாங்கிகள் மீது பூங்கொத்தை வீசி, சிறையில் இருந்த தப்ப படையில் சேர்ந்த வாக்கனர் கூலி படை குற்றவாளிகளுக்கு லிப்-டு-லிப் உம்மா அடிப்பார்கள் என்ற தெரிவையும் சேர்திருக்க வேண்டும்.

இது நடக்கத்தான் 90% வாய்ப்பு உண்டு.

அது தான் நடக்கலயே🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

மேற்கு ஊதுகுழல் ஊடகமான பிபிசி மேற்கு சார்பான 5 தெரிவுகளோட்டு நிப்பாட்டி விட்டது.

6ம் தெரிவாக, ரஸ்யா கிய்வை 3 நாளில் பிடிக்கும், ஒட்டு மொத்த உக்ரேனையும் 2 கிழமையில் கிளியர் பண்ணும், உக்ரேனிய பெண்கள் ரஸ்ய தாங்கிகள் மீது பூங்கொத்தை வீசி, சிறையில் இருந்த தப்ப படையில் சேர்ந்த வாக்கனர் கூலி படை குற்றவாளிகளுக்கு லிப்-டு-லிப் உம்மா அடிப்பார்கள் என்ற தெரிவையும் சேர்திருக்க வேண்டும்.

இது நடக்கத்தான் 90% வாய்ப்பு உண்டு.

இதைக்கொஞ்சம் விரிவாக எழுதினால் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தால் ஒரு புத்தகமாக வெளியிடலாமே? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒமிக்குரோனுடன் கொரோனா முடியுது என்று எழுதின ஆக்களும் இருக்கினம். அப்படித்தான் இதுகும்.. முடியும்..??! 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

அது தான் நடக்கலயே🤔

இனி நடக்கும் (மேலே எழுதியது கோசான் அல்ல, உடான்ஸ் சாமியார்). 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

மேற்கு ஊதுகுழல் ஊடகமான பிபிசி மேற்கு சார்பான 5 தெரிவுகளோட்டு நிப்பாட்டி விட்டது.

6ம் தெரிவாக, ரஸ்யா கிய்வை 3 நாளில் பிடிக்கும், ஒட்டு மொத்த உக்ரேனையும் 2 கிழமையில் கிளியர் பண்ணும், உக்ரேனிய பெண்கள் ரஸ்ய தாங்கிகள் மீது பூங்கொத்தை வீசி, சிறையில் இருந்த தப்ப படையில் சேர்ந்த வாக்கனர் கூலி படை குற்றவாளிகளுக்கு லிப்-டு-லிப் உம்மா அடிப்பார்கள் என்ற தெரிவையும் சேர்திருக்க வேண்டும்.

இது நடக்கத்தான் 90% வாய்ப்பு உண்டு.

இன்னும் ஒரு தெரிவுண்டு. உக்ரைன் அடிக்கிற அடியில்... ரஷ்சியா நேட்டோவிடம் முழுமையாக சரணடைந்து அகண்ட நேட்டோ கூட்டமைப்பு ஜப்பானில் போய் முடிந்து அடுத்த அடி.. வடகொரியாவுக்கு.. அதன் பின் சீனா காலி. போற வழியில ஈரான் துடைத்தழிக்கப்பட்டு.. இஸ்ரேல் வசமாகும் என்று ஒன்றுண்டு. அதனை 7வதாக வைச்சுக் கொள்ளச் சொல்லி பிபிசிக்கு சொல்லிப் பாருங்கள். பிரித்தானிய இராணுவ அமெரிக்க வால்பிடி ஆய்வாளர்களுக்கு உது விளங்க இன்னும் வசதி வரல்லைப் போல. 

Edited by nedukkalapoovan
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

இதைக்கொஞ்சம் விரிவாக எழுதினால் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தால் ஒரு புத்தகமாக வெளியிடலாமே? 😂

பிறகு புலமை-பொய்யர்கள் கோவித்து கொண்டால்?🤣

Just now, nedukkalapoovan said:

இன்னும் ஒரு தெரிவுண்டு. உக்ரைன் அடிக்கிற அடியில்... ரஷ்சியா நேட்டோவிடம் முழுமைசாக சரணடைந்து அகண்ட நேட்டோ கூட்டமைப்பு ஜப்பானில் போய் முடிந்து அடுத்த அடி.. வடகொரியாவுக்கு.. போற வழியில ஈரான் துடைத்தழிக்கப்பட்டு.. இஸ்ரேல் வசமாகும் என்று ஒன்றுண்டு. அதனை 7வதாக வைச்சுக் கொள்ளச் சொல்லி பிபிசிக்கு சொல்லிப் பாருங்கள். பிரித்தானி இராணுவ வால்பிடி ஆய்வாளர்களுக்கு உது விளங்க இன்னும் வசதி வரல்லைப் போல. 

அதை பி பி சி போடாது - பிறகு நடுநிலை வேசம் கலைந்து போய்விடும் எல்லே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இனி நடக்கும் (மேலே எழுதியது கோசான் அல்ல, உடான்ஸ் சாமியார்). 

அப்போ சாமியாரின் 2023 எதிர்வுகூறலில் இதுவும் அடங்குமா?🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

அப்போ சாமியாரின் 2023 எதிர்வுகூறலில் இதுவும் அடங்குமா?🤭

அது சாமி நிஷ்டையில் இருக்கும் போது எழுதியது. இது சாமி மட்டை யாகும் முன் எழுதியது😂.

அது சரி நீங்கள் கணிப்பை எழுதி விட்டீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அது சாமி நிஷ்டையில் இருக்கும் போது எழுதியது. இது சாமி மட்டை யாகும் முன் எழுதியது😂.

அது சரி நீங்கள் கணிப்பை எழுதி விட்டீர்களா? 

கணிக்க நான் என்ன சாமியாரா?
4நாள் இருக்கு அதற்கிடையில் ஏதும் தோன்றினால் எழுதுகிறேன் அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

கணிக்க நான் என்ன சாமியாரா?
4நாள் இருக்கு அதற்கிடையில் ஏதும் தோன்றினால் எழுதுகிறேன் அண்ணை.

நன்றி. சும்மா அடிச்சு விடுங்கோ. 

இப்ப நான் கருத்து எழுதுறன்…என்ன கருத்தாளரா🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றுத்தான் சொன்னேன்

கண்ணுக்கெட்டியதூரம்  ரசியாவுக்கு வெளிச்சம் இல்லையென....

இன்று காலை எழுதினேன்

தடுத்தல் துரத்துதல் உட்புகுதல்  என...

அட  நானும் ஆய்வுக்கட்டுரை  எழுதலாம்  போல கிடக்கு??🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

அது சரி நீங்கள் கணிப்பை எழுதி விட்டீர்களா? 

 @குமாரசாமி அண்ணை இங்கை பாருங்கோ….
இவர் இந்தத் திரிக்கு சம்பந்தம் இல்லாத விடயத்தை இங்கு கதைக்கிறார். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

நேற்றுத்தான் சொன்னேன்

கண்ணுக்கெட்டியதூரம்  ரசியாவுக்கு வெளிச்சம் இல்லையென....

இன்று காலை எழுதினேன்

தடுத்தல் துரத்துதல் உட்புகுதல்  என...

அட  நானும் ஆய்வுக்கட்டுரை  எழுதலாம்  போல கிடக்கு??🤣

 

இந்த ரண்டு வரியையும் 20 ஆல பெருக்கி, அதில ஒரு 10 சம்பந்தமில்லாத தகவல்களையும் சேர்த்து , பெட்டி, எண்கோணம் அப்படி இப்படியெண்டு நாலு ஷேப்புகளையும் சேருங்கொ - "ஆய்வு" கட்டுரை றெடி😂.

எங்க பப்ளிஷ் பண்ணுறதா உத்தேசம்?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

இந்த ரண்டு வரியையும் 20 ஆல பெருக்கி, அதில ஒரு 10 சம்பந்தமில்லாத தகவல்களையும் சேர்த்து , பெட்டி, எண்கோணம் அப்படி இப்படியெண்டு நாலு ஷேப்புகளையும் சேருங்கொ - "ஆய்வு" கட்டுரை றெடி😂.

எங்க பப்ளிஷ் பண்ணுறதா உத்தேசம்?

 

முதலில்  இந்த ஆய்வாளர்கள்  மீது எனக்கிருக்கும் அலர்யி போகணுமே???🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Justin said:

இந்த ரண்டு வரியையும் 20 ஆல பெருக்கி, அதில ஒரு 10 சம்பந்தமில்லாத தகவல்களையும் சேர்த்து , பெட்டி, எண்கோணம் அப்படி இப்படியெண்டு நாலு ஷேப்புகளையும் சேருங்கொ - "ஆய்வு" கட்டுரை றெடி😂.

எங்க பப்ளிஷ் பண்ணுறதா உத்தேசம்?

மானே, தேனே, பொன்மானே…. இதை போல், இடைக்கிடை அதிரடி, பூகம்பம், இடிமுழக்கம், போன்ற சொற்களை சேர்ப்பது உங்களை “பிரபல ஆய்வாளர்” பட்டியலில் சேர்க்கும், உன்குழாயில் ஓளிப்படமாயும் ஏற்றி துட்டு பார்க்கலாம்.

40 minutes ago, விசுகு said:

 

முதலில்  இந்த ஆய்வாளர்கள்  மீது எனக்கிருக்கும் அலர்யி போகணுமே???🙏

 

58 minutes ago, தமிழ் சிறி said:

 @குமாரசாமி அண்ணை இங்கை பாருங்கோ….
இவர் இந்தத் திரிக்கு சம்பந்தம் இல்லாத விடயத்தை இங்கு கதைக்கிறார். 🤣

ஒரு சின்ன விளம்பரம் பண்ணினால் தப்பா🤣

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது மிக பெரும் ஒன்றிணைந்த கல்வி சமூகத்தை கட்டியமைக்கும் திட்டம் , எவ்வளவு தூரம் சாத்தியமாக்குவீர்களோ தெரியாது. ஆனால் முடிந்தவரை  இப்போதிலிருந்தே படிப்படியாக ஆங்கில கல்வி முறைமையை இலங்கை முழுவதும் அறிமுகபடுத்துங்கள், அவரவர் தாய்மொழி கட்டாய பாடமாக இருக்கட்டும். சிங்களவனுக்கும் தமிழனுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் இளம் தலைமுறையாவது மேற்குலக சிறுவர்கள்போல் தமக்குள்ளேயே ஒரு நட்புறவை உருவாக்கி  ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாக்குக்காக வன்மம் வளர்க்கும் அரசியலையும் அரசியல் வாதிகளையும் ஓரளவாவது ஓரம் கட்டலாம். ஆக குறைந்தது உயர்தரம்வரை படித்தால் கூட ஆங்கில அறிவின்மூலம் இணையவழி கல்வியின் மூலமாகவாவது சர்வதேச கல்விதரத்தை  அடையலாம் வேலை வாய்ப்புகள் பெறலாம். சொந்த மொழியில் பாடத்திட்டங்களை கற்றுவிட்டு பல்கலைகழகம் கிடைக்கவில்லையென்றால் அப்பன் தொழிலையோ அல்லது அகப்பட்ட தொழிலையோ செய்துகொண்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓடியபடி  மறுபடியும் படிக்காத ஒரு சமூகம் போலவே வறுமையுடன் இளைஞர்களின் எதிர்காலம் தொடரும். இன்று மேற்குலகம் முழுவதும் இந்தியர்கள் பரந்து விரிவதற்கு அவர்களின் ஆங்கிலவழி கல்வியே 70% மான காரணம் மீதி அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடத்திட்டங்கள்.
    • நீங்கள் எழுதியதில் இருந்தே தெரிகிறதே, சின்ன மேளம் என ஒருவரை அடையாளம் காண்பது,  ஒருவரின் சாதியை, அதுவும் சாதி உட்பிரிவை கொண்டு அவரினை ஆர் என அடையாளம் கண்டு அதன் படி அவருக்கு உரிய மரியாதையை கொடுப்பது. அதாவது பெரிய மேளம் என்றால் ஒரு மரியாதை, சின்ன மேளம் என்றால் இன்னொரு மரியாதை. இதைத்தான் சா-தீய எண்ணம் என்பார்கள். இங்கே கருணாநிதியை, ரெண்டு பெண்டாட்டி காரன் என பழித்திருக்கலாம். தமிழின கொலையாளி, துரோகி என பழித்திருக்கலாம். இன்னும் எவ்வளவோ இருக்கு அந்த ஈனப்பிறவியை பழிக்க. ஆனால் நீங்கள் பழிக்க எடுத்து கொண்ட சொல் சின்ன மேளம். எப்பொருள் யார் யார் வாயும் கேட்கலாம் ஆனால் உள்ள கிடக்கை அவர் அவர் எழுத்தில் வெளிவந்து விடும்.  
    • கடனை வாங்கி சாப்பிட்டவர்களுக்கே இந்த தினாவெட்டு என்றால் லீ குவான் யூ போன்றவர்களுக்கு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்.
    • இவரே வடக்கு காவிகளின் சொற் கேட்டு ஆடுபவர். இதற்குள் மற்றவர்களை பார்த்து கருத்து வேறு.  அம்பி காலம் கெட்டு கிடக்குது.🙂
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.