Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புடினை கடுமையாக விமர்சித்த ரஷ்ய எம்.பி..! இந்தியாவில் மர்ம மரணம் – தொடரும் விசாரணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஹெகலிய ரம்புக்வெல.... வெறியால் பல்கனியில் இருந்து விழுந்ததைப் பற்றி 
இன்னும் ஒரு திரி... பல உறவுகள் கருத்து எழுதி, பல பக்கங்களுடன் இருந்தது. 
அதில் சிரிப்புக்கும் பஞ்சம்  இல்லை. அதனை தேடுகின்றேன் கண்டு பிடிக்க முடியவில்லை.

நீங்கள் சொல்வது சின்ன பகவதி ரமித் ரம்புக்வெல, பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் வெளிக் கதவை திறந்து “உச்சா” போக வெளிகிட்டதை பற்றிய செய்தி என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

நீங்கள் சொல்வது சின்ன பகவதி ரமித் ரம்புக்வெல, பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் வெளிக் கதவை திறந்து “உச்சா” போக வெளிகிட்டதை பற்றிய செய்தி என நினைக்கிறேன்.

In Russia they are investigating: Why did the man commit suicide in the  toilet of the plane? - time.news - Time News

ஓகோ... அதனைத்தான், இதனுடன் போட்டு குளப்பி விட்டேன்.  
சின்னப்ப பகவதி, கிரிக்கெட் வீரர் அல்லவா?
அவருக்கு... விமானத்தில் உச்சா போகிற இடம் தெரியாதா.  
 வாசிக்கத் தெரியாதவர்களுக்கு...  கதவிலேயே, படம் கீறி வைத்திருப்பார்களே. 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தமிழ் சிறி said:

ஓம் சி.ப அப்பா தயவில் தேசிய அணியில் இடம்பெற்றவர்.

தண்ணி கண்ணை கட்டி விட்டது🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதினை விமர்சித்த ரஷிய கோடீசுவரர் ஆன்டோவ் உள்காயம் ஏற்பட்டு மரணம்; பிரேத பரிசோதனை அறிக்கை

3-29.jpg

ரஷியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கல்வி கொடையாளராக அறியப்பட்டவர் பாவெல் ஜென்ரிகோவிச் ஆன்டோவ். கடந்த சில நாட்களுக்கு முன் ஒடிசாவுக்கு சுற்றுலாவுக்காக நண்பர்களுடன் வந்துள்ளார். ஒடிசாவின் ராயகடா பகுதியில் உள்ள ஓட்டலில் ஒன்றாக தங்கியிருந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். மொத்தம் 4 பேர் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், ஓட்டலின் 3-வது தளத்தில் உள்ள ஜன்னல் வழியே கீழே விழுந்து அவர் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் தகவல் அறிந்து வந்து, அவரது உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இதுபற்றி ஆன்டோவ் மரண வழக்கை விசாரித்து வரும் போலீஸ் சூப்பிரெண்டு விவேகானந்தா சர்மா கூறும்போது, பாவெல் கடந்த ஞாயிற்று கிழமை (டிசம்பர் 25-ந்தேதி) மரணம் அடைந்துள்ளார். அவரது குடும்பத்தினரின் அனுமதியை பெற்று அவரது உடலை கடந்த திங்கட் கிழமை தகனம் செய்து விட்டோம் என கூறியுள்ளார்.

இந்த தகவலை உறுதி செய்துள்ள ரஷிய நாடாளுமன்ற துணை சபாநாயகரான வியாசெஸ்லாவ் கார்துகின் மற்றும் ரஷிய சட்டசபை சபாநாயகர் விளாடிமிர் கிசெலியோவ் ஆகியோரும் உறுதி செய்துள்ளனர். ஆன்டோவின் சக கட்சி உறுப்பினரான விளாடிமிர் புடானோவ் (வயது 61) என்பவர் அதே ராயகடா ஓட்டலில் மரணம் அடைந்த 3 நாட்களுக்குள் பாவெல்லும் மரணம் அடைந்து உள்ளார். உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்பினை அடுத்து, ரஷிய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்தவர்களில் ஆன்டோவும் ஒருவர் ஆவார். எனினும், அந்த வாட்ஸ்அப் தகவல் உடனடியாக அழிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், ஆன்டோவ் மரணம் பற்றிய பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

அதில், உள்காயம் ஏற்பட்டதில் ஆன்டோவ் மரணம் உடைந்து உள்ளார் என அதற்கான காரணம் தெரிவிக்கின்றது. அவரது நண்பரான விளாடிமிர் புடானோவ் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து உள்ளார் என்றும் மற்றொரு பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கின்றது. சக நண்பர் மரணம் அடைந்ததில் அதிர்ச்சி அடைந்து ஆன்டோவ் தற்கொலை செய்து கொண்டார் என ஒருபுறம் கூறப்படுகிறது.

எனினும், அது தள்ளி விடப்பட்டு ஒன்றாக இருக்க கூடும் என்றும் மற்றொரு புறம் கூறப்படுகிறது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்காக அவர்கள் தங்கியிருந்த ராயகடா ஓட்டலுக்கு, சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் செல்ல இருக்கின்றனர். ரஷிய சுற்றுலாவாசிகளான இவர்களுடன் தம்பதியான மிகாயில் துரோவ் மற்றும் நடாலியா பனசெங்கோ என்ற தம்பதியும் தங்கி இருந்துள்ளது. அவர்கள் இருவரும், வேறொரு அறையில் தனியாக தங்கியிருந்து உள்ளனர்.
 
https://akkinikkunchu.com/?p=233707

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

அவரது குடும்பத்தினரின் அனுமதியை பெற்று அவரது உடலை கடந்த திங்கட் கிழமை தகனம் செய்து விட்டோம் என கூறியுள்ளார்.

சபாஷ் சர்மா. அப்படியே ஷாப்டர் வழக்கை விசாரிக்க சர்மாவை கூட்டி வந்தால் - இந்நேரம் காடாத்தி பாலும் ஊற்றி இருக்கலாம். சும்மா வச்சு இழுத்து கொண்டிராமல்.

  • கருத்துக்கள உறவுகள்

பொலீஸ் சுப்பிரெண் விவேகானந்தா சர்மாவுக்கு புதின் பெட்டி கொடுத்திருப்பார்.

உக்ரெய்ன் போர் ஆரம்ப்பித்ததிலிருந்து தவறி விழுந்து இறந்தவர்களில் பலர் ரஸ்யாவின் Gazprom எரிவாயு நிறுவனத்தில் அதியுயர் பதவியில் இருப்பவர்கள் அல்லது எரிவாயு நிறுவனங்களில் முதன்மை முதலீட்டாளர்கள்.

அடுத்ததாக தற்கொலை செய்ய விரும்பும் Gazprom நபர்கள் வழக்கம்போல் யன்னலால் பாய்ந்து ஜனநாயகவாதி புதின் அவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தாமல் வேறு விதமாக யோசிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, இணையவன் said:

டிரிப் அட்வைசர், புக்கிங் டொட் கொம் போன்ற தளங்களில், ரஸ்யாவில் அதிக 5 ஸ்டார் மதிப்பீடு பெற்ற ஹோட்டல் இதுதானாம் 🤣 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

டிரிப் அட்வைசர், புக்கிங் டொட் கொம் போன்ற தளங்களில், ரஸ்யாவில் அதிக 5 ஸ்டார் மதிப்பீடு பெற்ற ஹோட்டல் இதுதானாம் 🤣 

இந்த ஹோட்டலில், விருந்தினர் அறைகள் மூன்றாம் மாடிக்கு மேலே மட்டும் தான் இருக்கின்றன என்கிறார்களே? உண்மையா?😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

அடுத்ததாக தற்கொலை செய்ய விரும்பும் Gazprom நபர்கள் வழக்கம்போல் யன்னலால் பாய்ந்து ஜனநாயகவாதி புதின் அவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தாமல் வேறு விதமாக யோசிக்கவும்.

மா.மி. புதின் எவளவு நேர்மையர். அலெக்சி நவால்னியையே நீதிமன்றமூடாகச் சிறையில்தான் அடைத்துள்ளார். அப்படிப்பட்ட அவரை உலகு சந்தேகப்படலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இந்த ஹோட்டலில், விருந்தினர் அறைகள் மூன்றாம் மாடிக்கு மேலே மட்டும் தான் இருக்கின்றன என்கிறார்களே? உண்மையா?😂

இலங்கையில் நாலாம் மாடிக்கும், இரஸ்யாவில் மூன்றாம் மாடிக்கும் போவதுதான் வீடு பேறுக்கான விரைவு பாதை என்கிறார் உடான்ஸ்சாமி🤣.

large.65226057-D7E7-4A11-9B10-195337EAF92F.jpeg.e2c708f58d39ef464c1ae988df0af0b5.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

மா.மி. புதின் எவளவு நேர்மையர். அலெக்சி நவால்னியையே நீதிமன்றமூடாகச் சிறையில்தான் அடைத்துள்ளார். அப்படிப்பட்ட அவரை உலகு சந்தேகப்படலாமா?

இல்லை சந்தேகபடவில்லை.
தனக்கு தானே விஷம்  ஏற்றி தன்னை தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் தோல்வியடைந்த நவால்னியை பாசிஸ யேர்மனி தனது நாட்டிற்கு எடுத்து சென்று சுகபடுத்திவிட்டது. அவரை புரின் ஏன் சிறையில் போடுவான் என்று ஒரு லேசான நெருடல் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

இலங்கையில் நாலாம் மாடிக்கும், இரஸ்யாவில் மூன்றாம் மாடிக்கும் போவதுதான் வீடு பேறுக்கான விரைவு பாதை என்கிறார் உடான்ஸ்சாமி🤣.

சில முன்பாதுகாப்பு நடவடிக்கைளை புட்டின் விரோதிகள் எடுக்கலாம் என நினைக்கிறேன்:

1. நில மட்டம் (ground), அல்லது நிலத்தின் கீழ் (basement) மட்டத்தில் மட்டுமே தங்கி நிற்க வேண்டும் ஹோட்டல்களில்.

2. இந்த லெவலுக்கு மேலே போய் உச்சா போவதாக இருந்தாலும், எப்போதும் ஒரு பரசூட்டை அணிந்த படி தான் போக வேண்டும் (எலொன் மஸ்க்கிடம் கேட்டால், சட்டைப் பையில் அடங்கக் கூடிய பரசூட்டை உடனே வடிவமைக்க தன் எஞ்சினியர் படையை ஏவி விடுவார்!)

3..

மேலும் ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன!

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Justin said:

சில முன்பாதுகாப்பு நடவடிக்கைளை புட்டின் விரோதிகள் எடுக்கலாம் என நினைக்கிறேன்:

1. நில மட்டம் (ground), அல்லது நிலத்தின் கீழ் (basement) மட்டத்தில் மட்டுமே தங்கி நிற்க வேண்டும் ஹோட்டல்களில்.

2. இந்த லெவலுக்கு மேலே போய் உச்சா போவதாக இருந்தாலும், எப்போதும் ஒரு பரசூட்டை அணிந்த படி தான் போக வேண்டும் (எலொன் மஸ்க்கிடம் கேட்டால், சட்டைப் பையில் அடங்கக் கூடிய பரசூட்டை உடனே வடிவமைக்க தன் எஞ்சினியர் படையை ஏவி விடுவார்!)

3..

மேலும் ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன!

3.  வாயில் ஒரு பெரிய பிளாஸ்திரியாக ஒட்டி கொள்ளலாம்…

4. அதையும் மீறி வார்த்தைகள் வந்து விடும் அபாயம் இருந்தால் சத்திர சிகிச்சை மூலம் நாக்கை நீக்கலாம்….

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, இணையவன் said:

உக்ரெய்ன் போர் ஆரம்ப்பித்ததிலிருந்து தவறி விழுந்து இறந்தவர்களில் பலர் ரஸ்யாவின் Gazprom எரிவாயு நிறுவனத்தில் அதியுயர் பதவியில் இருப்பவர்கள் அல்லது எரிவாயு நிறுவனங்களில் முதன்மை முதலீட்டாளர்கள்.

அடுத்ததாக தற்கொலை செய்ய விரும்பும் Gazprom நபர்கள் வழக்கம்போல் யன்னலால் பாய்ந்து ஜனநாயகவாதி புதின் அவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தாமல் வேறு விதமாக யோசிக்கவும்.

மேற்குலகு    இதுவரைக்கும் தங்களது  பல கொலைகளுக்கும் விபத்துக்களுக்கும் விடை சொல்லாமல் மர்மம் என பூச்சாண்டி காட்டுவது போல்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.