Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழரின் அபிலாசைகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nochchi said:

கோசன் - சே அவர்களே, இங்கே யாரும் தமது கருத்துகளை அல்லது ஆலோசனைகளைப் பதியவில்லை என்று கருதாது கருத்துகளை முன்வைத்தால் வாசிப்பார்களென்றே எண்ணுகின்றேன். மற்றும் இங்கு கருத்தாடும் அனைவருக்கும் நன்றி. 

சத்தியாக்கிரகம் - அடிதடி – ஒப்பந்தம் - ஒப்பந்தம் கிழிப்பு – தமிழின அழிப்பு  - போர் - சமாதான ஒப்பந்தம் - தமிழின அழிப்பு என்று ஒரே வட்டமாகச் சுழன்றடிக்கும் தமிழர் வாழ்வு தந்த பட்டறிவு, விரக்திகூட எழுதத் தடையாக இருக்கலாம். தற்போதைய பேச்சுவார்தைகூட சிங்களம் தன்னை நிலைநிறுத்தத் தமிழரை ஏமாற்றும் மற்றொரு நகர்வென்பதே பெரும்பாலான தமிழரது நிலை. நிற்க....

நன்றி நொச்சி.

கருத்து வைக்கவில்லை என்ற கவலையை விட, நான் சொல்வதை சீர்தூக்கி (scrutinize) பார்ப்பது குறைவாக உள்ளதே என்பதே என் அங்கலாய்ப்பு.

ஏமாற்று பட்டதான்பாலான “விரக்தி” எனக்கும் உண்டு. எனக்கும் தீர்வு வரும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் நம் தெரிவுகளை இட்டு நமக்குள் பேசி தெளிவதில் பிழையில்லை என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.

1 hour ago, Justin said:

கோசான், எனக்கும் இந்தக் குறைந்த பங்களிப்பு அதிசயம் தருகிறது. நாங்கள் மூன்று தசாப்தங்களாகப் பேசிக் கொண்டும், யாசித்துக் கொண்டும் இருக்கும் சில lofty தீர்வுகளின் துல்லியமான கூறுகளைப் பேச அனேகர் தயாராக இல்லை, அயர்ச்சியா அல்லது வேறெதும் காரணமா தெரியவில்லை.

"ஒற்றை ஆட்சி" "எக்க ராஜ்ஜிய" "சமஷ்டி" ஆகிய சில சொற்களை வைத்துக் கொண்டு பக்கக் கணக்காக doctoral theses எழுதிய மக்கள்  granular details என்று வந்தால் பட்டியலிடத் தயங்குகிறார்கள்!

ஆனால், தொடருங்கள், நானும் எனக்குத் தெரிந்ததைப் பதிகிறேன். நேரத்திற்கு நன்றி! 

நன்றி அண்ணா.

Edited by goshan_che

  • Replies 65
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nochchi said:

மாகாண எல்லைக்குட்பட்ட ஆட்சிப் பிரதேசத்தில் மாகாண காவற்றுறை முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் ஒரு முதன்மைக் காவல்துறை ஆணையர், முன்று துணை ஆணையர்கள், பிராந்திய ஆணையர்கள் கொண்டதொரு பொறிமுறையின் கீழான காவற்றுறைக் கட்டமைப்பும், மத்திய அரசின் கீழ் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு, போதைப்பொருள் கடத்தல் போன்ற விடயங்களையும் கையாள இணைந்த காவற்றுறைக் கட்டமைப்பும் அமைதல் பொருத்தமானது.
எந்தவகைக் காவற்றுறைக் கட்டமைப்பாயினும் சமத்துவமான சட்ட ஒழுங்குபேணல் தொடர்பான வரைவுகள் அவசியமாகும். இவையனைத்தையும் கட்டமைத்தல், கட்டுப்படுத்தல், நெறிப்படுத்துதல், கற்பித்தல் போன்றவற்றை அணியம் செய்ய தலைசிறந்த காவற்றுறை ஆணைக் குழு ஒன்று இருக்க வேண்டும். அது தமிழ், முஸ்லீம், சிங்கள உறுப்பினர்களைக் கொண்டதாக இருத்தல் ஐயமற்ற அல்லது அச்சமற்ற செயற்பாடுகளுக்குத் துணைபுரியலாம்.

நன்றி,

நான் இங்கே வேணும் என்றே அலகின் தலைமைபீடத்தையும் (முதலமைச்சர்), உள்ளூர் பொலிசின் அரசியல் தலைமை பீடத்தையும் வெவெவ்வேறாக வைத்திருக்க பிரேரித்தேன். 

இதன் அடிப்படையாக நான் கொள்வது பொலீசின் சுயாதீனத்துவத்தையே.

உதாரணமாக வட அயர்லாந்து பொலிசை எடுத்தால். தீர்வுக்கு முன்னதாக அது மாகாண (வட அயர்லாந்து), மத்திய (யூகே) அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் அது இருந்தமை ஒரு தவறாக கருதப்பட்டது. பின்னர் மேலே உள்ளதை ஒத்த ஒரு பொறிமுறை தீர்வின் அம்சமாக ஆகியது.

அதே போல் இங்கிலாந்திலும் படிப்படியாக உள்ளூர் பொலிஸ் சேவைகளின் அரசியல் தலைமைதுவத்தை முழுநேர அரசியல்வாதிகளிடம் இருந்து விலத்தும் போக்கு உள்ளது.

இலங்கையில் இப்போ பொலிஸ் அதிகாரம் முழுவதும் உள்நாட்டு அமைச்சர், ஜனாதிபதியிடம் குவிந்துள்ளதை நான் ஒரு தவறாக காண்கிறேன்.

அதன் பிரதி போல், உள்ளூர் பொலிஸ் அதிகாரங்களை கட்டாயம் முதல் அமைச்சரிடம் கொடுக்த்தான் வேணுமா?

பொலிஸ் ஆணையாளரை + குழாமை மக்கள் நேரடியாக தேர்வது, அல்லது தேர்தெடுக்க பட்ட மக்கள் பிரதிநிதிகள் கூடி ஒரு ஆணையமாக செயல்படுத்தும் போது, கூடிய ஜனநாயக பொறுப்பு கூறலும், ஓருவரிடத்தில் அதிகாரம் குவிவதும் தடுக்கப்படும். 

அதாவது முதல்வர் அரச பரிபாலனத்தை செய்ய, ஆணையர் அல்லது ஆணையம் சுயாதீனமாக பொலிஸ் வேலையை செய்யலாம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் நன்றிகள்

தொடர்ந்து வாசித்து வருகிறேன்

எனக்கு பேச்சு என்றாலே அலர்ஜி.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

முற் குறிப்பு

இதில் அநேகம் பேர் கருத்து சொல்வதாக காணோம்.

கோசான் லூஸ்தனமா கற்பனை காண்கிறார் எண்டு நினைக்கிறார்களோ தெரியவில்லை🤣. அல்லது மேற்கின் திட்டத்தை கோஷான் விக்கிறார் என்ற ஐயமோ?  

கோசான் உங்கள் அளவுக்கு அளவுக்கு அரசியல் நுண்ணறிவு எனக்கு இல்லாததால் அதிகம் எழுதவில்லை. ஆனால் தொடர்ந்து வாசிக்கிறேன். அதே போல்  பலரும் வாசிக்கிறார்கள்.

அதேவேளை இப்படியான சட்ட விளக்கங்களுடன் கூடிய அரசியற்தீர்வு முன்மொழிவுக் கருத்துக்களுக்கு பதிலளிப்பது என்பது, ஊர்பபுதினத்தில் ஒரு செய்தியை வாசித்து அதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதியை திட்டி அவதூறு பண்ணி நாலு வசனம் எழுதுவது போல் இலகுவானதல்ல.   அதனால் இங்கு கருத்துகள் குறைவாக உள்ளது.

இருந்தாலும் தொடர்ந்து எழுதுங்கள். நான் உட்பட  பலர் வாசிப்பார்கள். இவ்வாறான கருத்துக்கள் பலருக்கும் அரசியல் தெளிவை பெறவும் பரந்துபட்ட அரசியல் அறிவைப் பெறவும்  உதவியாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

முற் குறிப்பு

இதில் அநேகம் பேர் கருத்து சொல்வதாக காணோம்.

கோசான் லூஸ்தனமா கற்பனை காண்கிறார் எண்டு நினைக்கிறார்களோ தெரியவில்லை🤣. அல்லது மேற்கின் திட்டத்தை கோஷான் விக்கிறார் என்ற ஐயமோ?  

அல்லது எழுதுவதை குழப்ப வேண்டாம் என்ற நல்லெண்ணமாகவும் இருக்கலாம்.

தர்க்கம்தான் ஒரு விடயத்தை வழுக் களையும். ஆகவே கருத்துக்களை சொல்லுங்கள்.

எது எப்படியோ 1.3 K பார்திருக்கிறார்கள்.  அந்த நம்பிக்கையில் தொடர்கிறேன்.

—————-

நாங்கள் இங்கு கருத்து எழுதினால், உங்களுக்கு காதாலை புகை போகும் பரவாயில்லையா. 😂
ஆக்கபூர்வமான திரியை… கேலிக் கூத்தாக்க விரும்பாததால் கருத்து பகிரவில்லை. 😎
நீங்கள் சோர்வடையாமல்…. ✍️எழுதுங்கள் கோசான்.🤗
நாங்கள், வாசித்துக் கொண்டு இருக்கின்றோம். 🙂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, தமிழ் சிறி said:

நாங்கள் இங்கு கருத்து எழுதினால், உங்களுக்கு காதாலை புகை போகும் பரவாயில்லையா. 😂
ஆக்கபூர்வமான திரியை… கேலிக் கூத்தாக்க விரும்பாததால் கருத்து பகிரவில்லை. 😎
நீங்கள் சோர்வடையாமல்…. ✍️எழுதுங்கள் கோசான்.🤗
நாங்கள், வாசித்துக் கொண்டு இருக்கின்றோம். 🙂

அதே......👍🏼

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

கருத்து வைக்கவில்லை என்ற கவலையை விட, நான் சொல்வதை சீர்தூக்கி (scrutinize) பார்ப்பது குறைவாக உள்ளதே என்பதே என் அங்கலாய்ப்பு.

ஏமாற்று பட்டதான்பாலான “விரக்தி” எனக்கும் உண்டு. எனக்கும் தீர்வு வரும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் நம் தெரிவுகளை இட்டு நமக்குள் பேசி தெளிவதில் பிழையில்லை என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.

On 14/12/2022 at 18:52, nochchi said:

கோசான் - சே மற்றும் சசிவர்ணம் ஆகியோரால் சுட்டப்படும் சமகால அரசியற் கருத்தாய்வு விடயங்கள் சிறப்பு. ஏனையவர்களது கருத்துகளும் ஏமாற்றங்கள் மற்றும் பட்டறிவின் வழியே மனங்களை ஊடறுத்து நிற்பவையே. யாழ் களத்தினது நோக்குநிலையிலானதொரு திரியாக நகர்கிறது. இவை வெவ்வேறாகவும் தனித்தனியாகவும் பேசப்பட்டாலும், ஒரு விழிப்பு நிலைக்கானதும், கூட்டிணைந்த கருத்தாடலுக்கும், சமகால அரசியற் புரிதலுக்கும் தமிழரது எதிர்கால நலன் நோக்கிலான குறைந்தபட்சத் தெளிவை அடையவும் இதுபோன்ற கருத்தாடல்கள் அவசியமானது.  அனைவருக்கும் நன்றி.

தமிழர்கள் நூறு ஆண்டுகளாகச் சிங்களத் தலைமைகளால் ஏமாற்றப்பட்டுவருகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, நான் ஏலவே சுட்டியதுபோல் ஒரு தெளிவான உரையாடலாக வளர்வதுகூட இன்றைய சூழலில் தேவையானதே. 
நன்றி

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர் பாதுகாப்பு/ பொலிஸ் அதிகாரம்….தொடர்ச்சி -4

உள்ளூர், தேசிய பொலிஸ் சேவைகளின் சேர்மானமும் ஆட்சி கூம்பும்

1. உள்ளூரியல் (localism) தத்துவத்தின் அடிப்படையாக கொண்டு, உள்ளூர் பொலிஸ் சேவையில் இருப்போர் அந்த அலகின் மக்கள் தொகையின் இன விகிதாசாரப்படி அமைய வேண்டும் என அமைத்தும்.

2. இலங்கயில் எப்பாகத்தில் பொலிஸ் சேவையில் சேரவும் இரு மொழிகளும் பேசும் அளவுக்கு தேர்சியும், அதிகாரிகள் தரத்தினர் குறைந்தது இரு பாடங்களிலும் சாதாரண தர சித்தியும் அடைந்திருத்தால் அவசியம் என அமைத்தும்.

3. பொலிஸ் சேவையில் சேரும் போதும் தொடர்ந்தும் கொடுக்கப்படும் பயிற்சியின் போது நாட்டின் வேறுபட்ட கலாச்சார, மொழி, பண்பாட்டியல், சமய, சமூக வேறுபாடுகளை பற்றிய முறைசார் கற்கை நெறிகளை கொடுத்து, பொலிசாரின் நிறுவன நடத்தை, கலாச்சாரத்தில் (institutional behavior and culture) நாட்டின் பல்லினதுவத்தை மதிக்கும், பேணும் பாங்கை அதிகரிக்க செய்வதன் மூலமும்.

 நவீன, உள்ளூர்-நட்பான, இலகுவில் அணுக கூடிய உள்ளூர், தேசிய பொலிஸ் சேவைகளை அமைத்து கொள்ளலாம்.

4. இந்த சேவைகளின் ஆட்சி கூம்பை பொறுத்தவரை தற்போது உள்ள பொலிஸ் சேவை கமிசனை இன்னும் சுயாதீனமாக்கி, தேசிய அரசின் வலுவை குறைத்து, உள்ளூர் அலகின் தலைவரின் வலுவை கூட்டி ஒரு பொறிமுறையை கோரலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர் பாதுகாப்பு/ பொலிஸ் அதிகாரம்….தொடர்ச்சி -4

உள்ளூர், தேசிய பொலிஸ் சேவைகளின் மீதான முறைப்பாடுகள் பொறுப்புகூறல்

1. ஒரு சுயாதீன முறைப்பாட்டு அமைப்பை நிறுவி (independent police complaints commission) - இதை சட்ட வலு மிக்கதாக்கி, பொலிஸாரின் நடத்தை மீது சாதாரண குடிகளும் முறைப்பாடு செய்யும், அதை விரைந்து விசாரித்து, தகுந்த தண்டனையும் கொடுக்கும் அதிகாரத்தை இந்த அமைபுக்கு கொடுக்கலாம்.

2. இந்த அமைப்புக்கு ஆட்சேர்க்கும் போது தற்போது உள்ள  தேசிய பொலிஸ் முறைப்பாட்டு ஆணையத்தை சேவை  இன்னும் சுயாதீனமாக்கி, தேசிய அரசின் வலுவை குறைத்து, உள்ளூர் அலகின் தலைவரின் வலுவை கூட்டி ஒரு பொறிமுறையை கோரலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடைக்கால முடிவுரை

மேலே திரட்டபடாத தேவைகளின் பட்டியலில் இருந்து பொலிஸ் அதிகாரம் என்ற திரட்டப்பட்ட தேவையையும்,

அந்த தேவையை எவ்வாறு நிலைகளுக்குள் சிக்கிகொள்ளாமல், நாம் நலன்களை அடையாளம் கண்டு அதனை அடைவதன் மூலம் பூர்த்தி செய்யலாம் என்பதையும் ஓரளவு விலாவாரியாகவே அலசி இருக்கிறோம்.

இதை போலவே, காணி, கல்வி, பூகோள எல்லை ஏனைய திரட்டப்பட்ட தேவைகளையும் இதை ஒத்த அணுகுமுறை மூலம் அணுகுவதால் நாம் சாதிக்ககூடியதாக இருக்க கூடும்.

நிற்க:

இதை ஒரு திரியாக அன்றி கருத்தாகவே நான் எழுத ஆரபித்தேன் என்பது தெரிந்ததே.  

ஆனால் இதை எழுத தொடங்கியதன் பின் எனக்கு சிலது மனதில் சற்றே தெளிவாக விளங்கியது.

அவையாவன;

1. ஒரு தேசிய இனமாக அபிலாசைகளை கொண்டிருப்பது தவறல்ல. ஆனால் அந்த அபிலாசைகளை அடையும் தகமை அந்த தேசிய இனத்துக்கு இருக்க வேண்டும்.

2. இந்த தகமைகளில் முக்கியமானது. ஒரு தேசிய இனம் உள்ளும், புறமுமாக தாம் ஒரு கூட்டம் என உணர வேண்டும்.

உதாரணமாக சிங்கள தேசிய இனத்தை எடுத்தால், பல வேறுபாடுகளை கடந்து கிட்டதட்ட அனைவருமே சிங்கள மொழி அதன் பால்பட்ட சிங்கள இன அடையாளத்தை தமது என உணருகின்றனர். 

மலைநாட்டு சிங்களவர் தான் சிங்களவர் கீழ்நாட்டு சிங்களவர் சற்றே சிங்களத்துவம் குறைந்த சிங்களவர் என அவர்கள் நினைப்பதில்லை.

மதவிடயத்திலும் அப்படியே.

அவர்கள் மத்தியில் வேறுபாடுகள், நான் பெரிது நீ பெரிது போட்டிகள் இல்லாமல் இல்லை.  

ஆனால் நாம் எல்லோரும் சம-சிங்களவர் என்ற அற்புதமான புரிதல் இருக்கிறது. பெளத்ததுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டாலும் கூட.

இதனால்தான் அவர்கள் அரசியல்வாதிகள் எவ்வளவு பிடுங்கு பட்டாலும், இனம் என்று வரும் போது ஆளையாள் மேவி நடந்து இன நலனை காத்து நிற்க முடியுமாய் இருக்கிறது.

நாமும் இப்படி ஒரு இனமாமக ஒரு காலத்தில் இருந்தோம்.

2005 வாக்கில் ஒரு தேசமாக தேவைப்பட கூடிய தகமைகள் அனைத்தையும் கொண்டு, நம்மை ஒரு இனமாக ஒற்றை அடையாளமாக உள்ளும் புறமுமாக உணர்ந்து - ஒரு தேசிய இனமாக பரிணமித்து நின்றோம்.

அன்று நாம் சிங்களவரை விட ஒரு படி மேல் போய், எந்த மதத்துக்கும், பிரதேசத்துக்கும் முன்னுரிமை கொடாத ஒரு நவீன தேசிய இனமாக மிளிர்ந்தோம்.

அன்று நாம் ஒற்றை இன அடையாளத்தை ஏற்றது போலவே எமது தலைமையும் அந்த ஒற்றை அடையாளத்தின் பால் ஒழுகி நின்றது.

அன்று நாம் இந்த உயரிய அபிலாசைகளுக்கு (higher aspirations) தகுதி உடையவராய் இருந்தோம்.

ஆனால் இன்று?

நாமே பிரதேச ரீதியிலும், சமய ரீதியிலும் நமது ஒற்றை இன அடையாளத்தில் இருந்து விலகி ஓடுகிறோம். நாளைக்கு சாதியும் இந்த பட்டியலில் சேரக்கூடும்.

2023 இல் ஒரு வெளியார் ஈழ தமிழரை உற்று நோக்குவாராயின் - ஒரு தேசிய இனத்துக்கான தகமைகள் எதையும் எம்மிடையே காண மாட்டார்.

மக்கள் எவ்வழியோ, தலைவர்களும் அவ்வழியே.

இதையே எமது சுயநலமான, விலைபோன, பொய்யான, கோமாளி தலைவர்களும் பிரதிபலிக்கிறார்கள்.

3. ஆகவே இந்த அபிலாசைகளை பற்றி எழுதுவது இப்போ எனக்கு அசந்தர்பமாக தெரிகிறது. கொஞ்சம் கற்பனாவாதமாகவும் கூட.

4. ஆகவே  இப்போதைக்கு ஒரு இடைக்கால முடிவுரையை எழுதுகிறேன்.

புறச்சூழல் மாற்றங்கள் தொடர்ந்தும் எழுத வேண்டிய தேவையை உணர்தினால் தொடர்ந்து எழுதுகிறேன்.

வேறு யாரும் தொடர விரும்பினால் தொடரவும். 

இதுவரை பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

உதாரணமாக சிங்கள தேசிய இனத்தை எடுத்தால், பல வேறுபாடுகளை கடந்து கிட்டதட்ட அனைவருமே சிங்கள மொழி அதன் பால்பட்ட சிங்கள இன அடையாளத்தை தமது என உணருகின்றனர். 

மலைநாட்டு சிங்களவர் தான் சிங்களவர் கீழ்நாட்டு சிங்களவர் சற்றே சிங்களத்துவம் குறைந்த சிங்களவர் என அவர்கள் நினைப்பதில்லை.

மதவிடயத்திலும் அப்படியே.

அவர்கள் மத்தியில் வேறுபாடுகள், நான் பெரிது நீ பெரிது போட்டிகள் இல்லாமல் இல்லை.  

ஆனால் நாம் எல்லோரும் சம-சிங்களவர் என்ற அற்புதமான புரிதல் இருக்கிறது.

தமிழர்களை வெளியிலிருந்தே பிரித்துவிடுகிறார்கள்.

சிங்களவர்களை பிரிக்க எவருமே முயலவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

தமிழர்களை வெளியிலிருந்தே பிரித்துவிடுகிறார்கள்.

சிங்களவர்களை பிரிக்க எவருமே முயலவில்லை.

100% உண்மை.

ஒரு காலத்தில் அவர்களை மேல் நாடு கீழ் நாடு, பெளத்தம், கிறிஸ்தவம் என பிரித்து வைத்துள்ளார்கள்.

ஆனால் அநகாரிக தர்மபால போன்றோர் வந்து ஒற்றை அடையாளத்தை கட்டி எழுப்ப - அதை அப்படியே பிடித்து அதன் வழி நிற்கிறார்கள்.

தலைவர் அதையே எமக்கு செய்ய விழைந்தார் - ஆனால் அவரை project ஐ முடிக்க முதல் விரைந்து அனுப்பிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இடைக்கால முடிவுரை

மேலே திரட்டபடாத தேவைகளின் பட்டியலில் இருந்து பொலிஸ் அதிகாரம் என்ற திரட்டப்பட்ட தேவையையும்,

அந்த தேவையை எவ்வாறு நிலைகளுக்குள் சிக்கிகொள்ளாமல், நாம் நலன்களை அடையாளம் கண்டு அதனை அடைவதன் மூலம் பூர்த்தி செய்யலாம் என்பதையும் ஓரளவு விலாவாரியாகவே அலசி இருக்கிறோம்.

இதை போலவே, காணி, கல்வி, பூகோள எல்லை ஏனைய திரட்டப்பட்ட தேவைகளையும் இதை ஒத்த அணுகுமுறை மூலம் அணுகுவதால் நாம் சாதிக்ககூடியதாக இருக்க கூடும்.

நிற்க:

இதை ஒரு திரியாக அன்றி கருத்தாகவே நான் எழுத ஆரபித்தேன் என்பது தெரிந்ததே.  

ஆனால் இதை எழுத தொடங்கியதன் பின் எனக்கு சிலது மனதில் சற்றே தெளிவாக விளங்கியது.

அவையாவன;

1. ஒரு தேசிய இனமாக அபிலாசைகளை கொண்டிருப்பது தவறல்ல. ஆனால் அந்த அபிலாசைகளை அடையும் தகமை அந்த தேசிய இனத்துக்கு இருக்க வேண்டும்.

2. இந்த தகமைகளில் முக்கியமானது. ஒரு தேசிய இனம் உள்ளும், புறமுமாக தாம் ஒரு கூட்டம் என உணர வேண்டும்.

உதாரணமாக சிங்கள தேசிய இனத்தை எடுத்தால், பல வேறுபாடுகளை கடந்து கிட்டதட்ட அனைவருமே சிங்கள மொழி அதன் பால்பட்ட சிங்கள இன அடையாளத்தை தமது என உணருகின்றனர். 

மலைநாட்டு சிங்களவர் தான் சிங்களவர் கீழ்நாட்டு சிங்களவர் சற்றே சிங்களத்துவம் குறைந்த சிங்களவர் என அவர்கள் நினைப்பதில்லை.

மதவிடயத்திலும் அப்படியே.

அவர்கள் மத்தியில் வேறுபாடுகள், நான் பெரிது நீ பெரிது போட்டிகள் இல்லாமல் இல்லை.  

ஆனால் நாம் எல்லோரும் சம-சிங்களவர் என்ற அற்புதமான புரிதல் இருக்கிறது. பெளத்ததுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டாலும் கூட.

இதனால்தான் அவர்கள் அரசியல்வாதிகள் எவ்வளவு பிடுங்கு பட்டாலும், இனம் என்று வரும் போது ஆளையாள் மேவி நடந்து இன நலனை காத்து நிற்க முடியுமாய் இருக்கிறது.

நாமும் இப்படி ஒரு இனமாமக ஒரு காலத்தில் இருந்தோம்.

2005 வாக்கில் ஒரு தேசமாக தேவைப்பட கூடிய தகமைகள் அனைத்தையும் கொண்டு, நம்மை ஒரு இனமாக ஒற்றை அடையாளமாக உள்ளும் புறமுமாக உணர்ந்து - ஒரு தேசிய இனமாக பரிணமித்து நின்றோம்.

அன்று நாம் சிங்களவரை விட ஒரு படி மேல் போய், எந்த மதத்துக்கும், பிரதேசத்துக்கும் முன்னுரிமை கொடாத ஒரு நவீன தேசிய இனமாக மிளிர்ந்தோம்.

அன்று நாம் ஒற்றை இன அடையாளத்தை ஏற்றது போலவே எமது தலைமையும் அந்த ஒற்றை அடையாளத்தின் பால் ஒழுகி நின்றது.

அன்று நாம் இந்த உயரிய அபிலாசைகளுக்கு (higher aspirations) தகுதி உடையவராய் இருந்தோம்.

ஆனால் இன்று?

நாமே பிரதேச ரீதியிலும், சமய ரீதியிலும் நமது ஒற்றை இன அடையாளத்தில் இருந்து விலகி ஓடுகிறோம். நாளைக்கு சாதியும் இந்த பட்டியலில் சேரக்கூடும்.

2023 இல் ஒரு வெளியார் ஈழ தமிழரை உற்று நோக்குவாராயின் - ஒரு தேசிய இனத்துக்கான தகமைகள் எதையும் எம்மிடையே காண மாட்டார்.

மக்கள் எவ்வழியோ, தலைவர்களும் அவ்வழியே.

இதையே எமது சுயநலமான, விலைபோன, பொய்யான, கோமாளி தலைவர்களும் பிரதிபலிக்கிறார்கள்.

3. ஆகவே இந்த அபிலாசைகளை பற்றி எழுதுவது இப்போ எனக்கு அசந்தர்பமாக தெரிகிறது. கொஞ்சம் கற்பனாவாதமாகவும் கூட.

4. ஆகவே  இப்போதைக்கு ஒரு இடைக்கால முடிவுரையை எழுதுகிறேன்.

புறச்சூழல் மாற்றங்கள் தொடர்ந்தும் எழுத வேண்டிய தேவையை உணர்தினால் தொடர்ந்து எழுதுகிறேன்.

வேறு யாரும் தொடர விரும்பினால் தொடரவும். 

இதுவரை பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி.

இந்திய இராணுவம் எமது பகுதியில் நிலை கொண்டிருந்த காலம்; இரண்டு ஊர்களுக்க்கிடையே சண்டை, இளைஞர் ஒருவர் அவருடன் படிக்கும் மாணவியினை நக்கலாக எதோ சொல்ல  ஆரம்பித்த பிரச்சினை இரண்டு ஊர்களுக்கிடையேயான சண்டையாக பரிணமிக்க இருந்தது சரியான நேரத்தில் போராளிகள் தலையிட்டமையால் உயிரிழப்பு ஏற்படவில்லை.

இரண்டு ஊர் மக்களையும் விசாரனைக்கு அழைத்த போராளிகள்; ஒரு ஊரில் உள்ள கூட்டத்தில் ஒரு முன்னால் போராளியினை அடையாளங்கண்டுவிட்டார்கள்.

அவரைதான் முதலில் கூப்பிட்டு எந்தவித விசாரணையுமின்றி அவரை அடித்து நொருக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கும் நிலைக்கு உள்ளாக்கிவிட்டார்கள்.

இந்த வகையில் மக்களை கடும் தண்டனை மூலம் மக்களை ஓரணியில் தற்காலிகமாக இணைக்கலாம், ஆனால் நீண்டகாலத்திற்கு அது பயன்படாது.

மக்கள் உணர்வு ரீதியாக உணரவேண்டும், அதுதான் நீண்டகால தீர்வாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இதே யாழில் ஒரு காலத்தில் இந்த அணுகுமுறை பிழை என பக்கம் பக்கமாக வாதிட்டவன் நான்.

எதிர்மறையான மனோதத்துவ சிகிச்சை (reverse psychology) மூலம்  யாழ்கள உறவுகள் எனக்கு இந்த அணுகுமுறை சரியானது என புரியவைத்து விட்டனர் 🤣.

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

இந்தளவு தூரம் எனக்கு ஆழமான அரசியல் பார்வை எல்லாம் இப்போதைக்குத் தெரியாது.

பெரியவர்களின் முடிவே நல்லம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.