Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் அதிரடி சோதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அனுகுண்டு வ‌ட‌கொரியா தொட்டு அமெரிக்காவுக்கு எதிரான‌ ப‌ல‌ நாடுக‌ள் வைச்சு இருக்கின‌ம் 

ஏன் அமெரிக்கா அவேன்ட‌ நாட்டுக்குள் போக‌ வில்லை

கால‌ப் போக்கில் ஈரானும் அனு ஆயுத‌ம் வைச்சு இருக்கிறோம் என்று அறிவிக்கும் நாள் வ‌ரும் 
அமெரிக்காவால் ஈரானுக்குள் நுழைய‌ முடியுமா பிரோ

கேட்க்க‌ நாதியில்லா நாடுக‌ள் மீது தான் அமெரிக்கான்ட‌ வீர‌ம் 

ர‌ஸ்சியா
வ‌ட‌கொரியா
ஈரான் இப்ப‌டியான‌ நாடுக‌ளுட‌ன் அமெரிக்கா ம‌ல்லு க‌ட்ட‌ த‌ய‌க்க‌ம்  

ப்ரோ இப்ப பொயிண்டுக்கு வந்திடீங்க ப்ரோ….

அணுகுண்டு ஈராக் வைத்திருந்தால்…அமெரிக்கா கிட்டயும் போயிருக்காது.

வரலாறு நீண்டது ப்ரோ…

ரிச்சர்ட் பட்லரின் IAEA சோதனை அறிக்கைகள், யுரேனியத்தை செறிவாக்கலில் (enriching uranium) ஈராக் முன்னேறியிருந்ததா என அவர் என்ன சொன்னார், அணுகுண்டை காவி செல்லும் யுத்தகணைகள் (war heads) ஈராக் வசம் இருந்ததாக அமெரிகாவோ, பிரிட்டனோ சொன்னதா, இந்த சமயம் தோற்கடிக்கப்பட்ட ஐநா பாதுகாப்பு கவுன்சில் பிரேரணை அணு ஆயுதம் பற்றி ஏதும் சொன்னதா?

இப்படி சிலதை தேடி பார்த்தால் வரலாறு புரியும் ப்ரோ.   

12 minutes ago, குமாரசாமி said:

எழுத்து பிழைகளை நக்கலடிக்கும் நீங்கள் மாற்று திறனாளிகளையும் நக்கலடிக்க தயங்க மாட்டீர்கள்.

நானும் யாழ்களத்தில் எழுத பழகி  எழுத்து பிழைகளுடன் எழுத ஆரம்பிக்கும் போது சக உறவு ஒருவர் வந்தமாம் வாசிச்சமாம் என்றிருக்கோணும் என பதில் எழுதி இருந்தார்.

பிழைகளை திருத்த மனம் இல்லாவிட்டாலும் தமிழில் எழுதிய கருத்தை நையாண்டி பண்ணாமல் இருந்தாலே தமிழ் உலகிற்கு பேருதவியாக இருக்கும். ஏனெனில் அவர்கள் தமிழர்கள். அடுத்த முறை திருத்தி எழுதுவார்கள். 😎

சரிங்க பெரியவரே,

இனிமேல் உங்களை போல் யாழில் தன்மையாக எழுத முயற்சிக்கிறேன்.

  • Replies 59
  • Views 3.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

ஸ்னோடனும், அசாஞ்சும் அமெரிக்க உளவு தகவல்களை பகிரங்கபடுத்தி அதன் மூலம் அமெரிக்க உளவாளிகள், தகவல் கொடுப்போர் உயிருக்கு ஆபத்து விளைவித்தனர் என்பது குற்றச்சாட்டு.

பைடன், டிரம்ப் மீது இன்னும் உளவு தகவல்களை பகிரங்கபடுத்கியதாக குற்றச்சாட்டு வைக்கப்படவில்லை. உளவு தகவல்களை முறைகேடாக பத்திரப்படுத்தினர் என்பதே குற்றச்சாட்டு. 

இவர்களும் உளவு தகவலை பகிரங்கபடுத்தினர் அல்லது இன்னொரு நாட்டுக்கு கொடுத்தனர் என நிறுவப்பட்டால் - இருவருக்கும் அதைவிட மோசமான நிலை ஏற்படும்.

பதில் மேலே

ரஷ்யா மற்றும் சீனா வடகொரியாவில் கொடுக்கப்படும் தண்டனைகளும் நாட்டை காட்டிக்கொடுப்போர் சம்பந்தப்பட்டதே.நாட்டு ரகசியங்களை வெளியே  கசிய விடுபவர்களுக்கானதும்.:beaming_face_with_smiling_eyes:

தீர்ப்பு வரும் வரைக்குமாவது வக்காளத்து வாங்குவதை நிறுத்தி வையுங்கள் :rolling_on_the_floor_laughing:

7 minutes ago, goshan_che said:

சரிங்க பெரியவரே,

உப்பிடி பதில் எழுதுற ஆக்களை கன பேர பாத்திட்டன் அப்பு....வேறை ஆரோடையும் உங்கட எழுத்து விண்ணாணத்த காட்டுங்கோ :face_savoring_food:

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

தீர்ப்பு வரும் வரைக்குமாவது வக்காளத்து வாங்குவதை நிறுத்தி வையுங்கள் :rolling_on_the_floor_laughing:

அதுதான் வடிவா எழுதி உள்ளேனே…இவர்கள் இருவரும்

1. ரகசியத்தை முறை கேடாக கையாண்டார்களா

2. அல்லது கசிய விட்டார்களா

என்பதை பொறுத்துத்தான்..தீர்ப்பு அமையும்.

2வது என்றால், அசாஞ்ச, ஸ்னோடோனை விட பெரிய ஆப்பு பைடன், டிரம்புக்கு உண்டு.

9 minutes ago, குமாரசாமி said:

உப்பிடி பதில் எழுதுற ஆக்களை கன பேர பாத்திட்டன் அப்பு....வேறை ஆரோடையும் உங்கட எழுத்து விண்ணாணத்த காட்டுங்கோ :face_savoring_food:

சரிங்கண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நான் கேட்ட கேள்விக்கு பதில் இன்னொரு கேள்வியா🤣.

வாழ்துக்கள்! நீங்களும் தேர்ந்த யாழ்கள கருத்தாளர் ஆகிவிட்டீர்கள்🤣

ஜனநாயக நாட்டில் சட்டம் எல்லாருக்கும் பொதுவானதே ஆனால் அதை நடைமுறைபடுத்துவதில் வழுக்கள் வரலாம், வராமலும் போகலாம்.

உண்மையில் என் பார்வையில் அமெரிக்கா ஒரு குறை-ஜனநாயக நாடே. ஸ்கண்டிநேவியா, ஐரோப்பா வில் சில நாடுகள்தான் உண்மையான ஜனநாயக ஆட்சிக்கு கிட்ட நெருங்கி வருவன.

ஆனால் அமெரிக்காவில் கூட, நிக்சன், கிளிண்டன், டிரம்ப், இப்போ பைடன் என நாம் அறிய 4 பதவியில் உள்ள அதிபர்கள், பதவியில் இருக்கும் போதே அரச அதிகாரிகளால் விசாரணைக்குள்ளாகி உள்ளனர்.

இப்போ என் கேள்வியை மீள கேட்கிறேன். ஆம். இல்லை என பதில் சொல்லும் எளிமையான கேள்வி. இது. திரி திசை திரும்பும் என்ற அச்சம் வேண்டாம் (அது எப்படியும் திரும்பித்தான் தீரும்🤣).

ஒகே ப்ரோ…நீங்க சொன்னா க்ரெட்க்டாதான் இருக்கும் 🤣.

உங்க கூட இருந்த ஈராக்கிய முதியர் பெயர் கெமிக்கல் அலி இல்லையே?

ஜ‌ரோப்பிய‌ ஊட‌க‌ங்க‌ளில் ப‌ல‌ அந்த‌ நாட்க‌ளில் ச‌தாம் அனுகுண்டு வைத்து இருப்ப‌தாக‌ அத‌ற்காக‌ தான் அமெரிக்கா ப‌டைக‌ள் ஈராக்கில் ப‌டையெடுத்த‌து என்று சொன்னார்க‌ள் ஆர‌ம்ப‌த்தில்

பிற‌க்கு தோசைய‌ மாற்றி போட்டு தானே ஆக‌னும் ஈராக்கில் அனுகுண்டு இல்லாட்டி அமெரிக்கா செய்த‌து ச‌ரி என்று ஞாய‌ப‌டுத்த‌னும் எல்லோ பிரோ 

நேர‌த்துக்கு நேர‌ம் பொய்க‌ளை அவுட்டு விடுவாங்க‌ள்

ச‌தாம் அனுகுண்டு செய்ய‌ வெளிக்கிட‌ தானாம் அமெரிக்கா த‌டுத்த‌து 🤣😁😂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

ஓம் ப்ரோ… அப்பெல்லாம்…IAEA எண்டு ஒரு ஐரோபிய ஊடகம், அதில ரிச்சர் பட்லர் எண்டு ஒருத்தர் நியூஸ் வாசிப்பார்.

பிறகு UN Security Council Resolution என்று ஒரு பத்திரிகை வேற வரும்.

பூரா பொய்யாவே இருக்கும் ப்ரோ.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

சீனாவில் ஷி இப்படி ஒரு காரியத்தை செய்திருந்தால், அல்லது ரஸ்யாவில் புட்டின் இப்படி ஒரு காரியத்தை செய்திருந்தால் - அந்த நாட்டு அமைப்புகள், இவர்கள் பதவியில் இருக்கும் போதே இப்படி ஒரு சோதனையை நடத்தி இருக்க முடியுமா?

நீங்கள், இலங்கை தீவில் பிறந்தவர், வளர்ந்தவர், ஒன்றில் உயர்தரம், அல்லது பல்கலைக்கழகம் வரை படித்தவர் இலங்கைத் தீவில், என்று சொல்லி இருந்தீர்கள்.

தொடர்ந்து, இலங்கைத் தீவில் வசித்து இருந்தால், இந்த கேள்வியை கேட்டு இருப்பீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kadancha said:

நீங்கள், இலங்கை தீவில் பிறந்தவர், வளர்ந்தவர், ஒன்றில் உயர்தரம், அல்லது பல்கலைக்கழகம் வரை படித்தவர் இலங்கைத் தீவில், என்று சொல்லி இருந்தீர்கள்.

தொடர்ந்து, இலங்கைத் தீவில் வசித்து இருந்தால், இந்த கேள்வியை கேட்டு இருப்பீர்களா? 

இலங்கை தீவில் இருக்கும் போதே இந்த கேள்வியும் அதற்கான பதிலும் எனக்கு தெரியும்.

இலங்கை தீவை தலைமுழுகியமைக்கு இந்த புரிதலும் ஒரு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

உங்களுக்கு தெரிந்து இருப்பினும், நான் கேட்டது, கேட்டு இருப்பீர்களா வேறு இவரின் கருத்தை அறிவதற்கு?

22 minutes ago, goshan_che said:

இலங்கை தீவை தலைமுழுகியமைக்கு இந்த புரிதலும் ஒரு காரணம்.

அந்த வாய்ப்பு கிடைத்து இருக்காவிட்டால். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இப்போ என் கேள்வியை மீள கேட்கிறேன். ஆம். இல்லை என பதில் சொல்லும் எளிமையான கேள்வி. இது. திரி திசை திரும்பும் என்ற அச்சம் வேண்டாம் (அது எப்படியும் திரும்பித்தான் தீரும்🤣).

உங்களது கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்ற இரண்டு தெரிவு மட்டுமா உள்ளது, தெரியாது என்று ஒரு தெரிவில்லையா?

பைடன் இப்போது குற்றவாளியா அல்லது குற்றமற்றவரா?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, vasee said:

உங்களது கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்ற இரண்டு தெரிவு மட்டுமா உள்ளது, தெரியாது என்று ஒரு தெரிவில்லையா?

பைடன் இப்போது குற்றவாளியா அல்லது குற்றமற்றவரா?

அதிகாரிகள் தமது கடமைகளை செய்திருக்கிறார்கள்

இனி நீதி, சட்டம், பதவி என பல படிமுறைகளை தாண்டணும். அதையும் மீறினால் மக்களின் தீர்ப்பு தேர்தலில் சொல்லப்படும். 

இதைத் தான் ஜனநாயகப்பண்பு என்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

அதிகாரிகள் தமது கடமைகளை செய்திருக்கிறார்கள்

இனி நீதி, சட்டம், பதவி என பல படிமுறைகளை தாண்டணும். அதையும் மீறினால் மக்களின் தீர்ப்பு தேர்தலில் சொல்லப்படும். 

இதைத் தான் ஜனநாயகப்பண்பு என்கிறோம். 

சிறந்த பதில்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kadancha said:

உங்களுக்கு தெரிந்து இருப்பினும், நான் கேட்டது, கேட்டு இருப்பீர்களா வேறு இவரின் கருத்தை அறிவதற்கு?

ஓம். அப்போதே பலரை இது சம்பந்தமாக கேள்விகள் கேட்டு, கிடைத்த பதில்களை வைத்து ஆராய்ந்ததில்தான் மேலே கூறிய புரிதலை எய்தமுடிந்தது.

இலங்கையில் இருக்கும் மட்டும் யாரும் எங்கள் கண்ணைகட்டி விட்டு விட்வில்லையே? தியன்மென் சதுக்கமும், பெர்லின் சுவரின் வீழ்ச்சியும் அங்கே இருந்து அவதானித்த விடயங்கள்தான்.

9 hours ago, Kadancha said:

அந்த வாய்ப்பு கிடைத்து இருக்காவிட்டால். 

இதே புரிதல் இருந்து இருக்கும்.

ஆனால் வெளியேற முடியாது சிக்கிக்கொண்ட ஒரு இடத்தில், சூழ இருக்கும் நடைமுறைகளை சகித்து கொண்டு வாழ வேண்டி இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

உங்களது கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்ற இரண்டு தெரிவு மட்டுமா உள்ளது, தெரியாது என்று ஒரு தெரிவில்லையா?

தெரியாது என்பது தெரிவுதான். ஆனால்…

இது தெரியாமல் விசுகு அண்ணா கூறியதை நீங்கள் கேள்விக்கு உட்படுத்த முடியாதல்லவா?

இதை சொல்லவா இத்தனை நேரம் இழுத்தீர்கள்?

தெரியாது என சொல்வதால் திரி திசைமாறும் என ஏன் பயந்தீர்கள் 🤣.

4 hours ago, vasee said:

பைடன் இப்போது குற்றவாளியா அல்லது குற்றமற்றவரா?

தெரியாது 🤣

பிகு

பயப்படவேண்டாம் எளிமையான ஆனால் அசெளகரியமான கேள்விகளை கண்டு நான் நழுவுவமாட்டேன்.

பைடன் இப்போ சந்தேகத்துரியவர். மேலே இருவகை குற்றங்களை பட்டியல் இட்டு உள்ளேன். மேலான பார்வைக்கு குறைந்த பட்சம் 1ம் வகை குற்றத்தையாவது அவர் இழைத்துள்ளதாக தெரிகிறது.

ஆனால்…அது என்ன…ஆ…ஜனநாயகம்…அதன் ஒரு பண்பு…ஒருவர் குற்றம் தீர்க்கும் வரை, அல்லது ஏற்கும் வரை அவர் சுத்தவாளியே (innocent until proven guilty).

ஆகவே கு.சா அண்ணை அவர்கள் கூறியது போல்…தீர்ப்பு வரும் வரை காத்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

அதிகாரிகள் தமது கடமைகளை செய்திருக்கிறார்கள்

இனி நீதி, சட்டம், பதவி என பல படிமுறைகளை தாண்டணும். அதையும் மீறினால் மக்களின் தீர்ப்பு தேர்தலில் சொல்லப்படும். 

இதைத் தான் ஜனநாயகப்பண்பு என்கிறோம். 

அருமை.

இப்போ பிரிதானிய அமைச்சரவை அந்தஸ்து உள்ள,  பழைமைவாத கட்சி தவிசாளரும், அப்போ நிதி மந்திரியாக இருந்தவருமான ஷகாவி வரி கட்டுவதில் தவறு விட்டார் என்று, அவரின் கீழ் இருந்த வரி, சுங்க பகுதி அவருக்கு மில்லியன் கணக்கில் அபராதம் விதித்துள்ளது.

இவர் தொடர்ந்தும் பதவி வகிக்க தகுதியானவரா என்ற சர்ச்சை இப்போ ஓடுகிறது.

தனது திணைக்களத்தின் மந்திரிக்கே வரி கட்டவில்லை என நோட்டீஸ் கொடுக்கும் தைரியத்தை ஒரு இடைநிலை அரச அதிகாரிக்கு கொடுத்து, அதனால் எந்த ஆபத்தும் வராமால் காத்து நிற்கிறது பாருங்கள் - இதுதான் ஜனநாயகம். 

இங்கே கரிச்சு கொட்டுவோர் எல்லாரும் இந்த அமைப்பினால் நன்மை அடைந்தோரே.

ஆனால் ஊரில் ஒரு சொலவடை உண்டு

”திண்ட சட்டிக்குள்…….”

தலிபானிய முஸ்லிம்களுக்கும், தமிழ்தாலிபான்களுக்கும் இது பிறவிக் குணம்🤣.

https://www.bbc.co.uk/news/uk-politics-64373509

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஆம்

இந்த  ஐனநாயகத்தை  தான்  நாம்  எல்லோரும் அனுபவித்தபடி  உள்ளோம்

ஆனால்  சும்மா கிடைக்கும் எதற்கும்  பெறுமதி  அரிதே...

ஆனால்  இந்த  நாடுகளில் இதற்காக  மக்கள்  கொடுத்த விலைகள்  மிக  மிக  அதிகம்

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, விசுகு said:

ஆம்

இந்த  ஐனநாயகத்தை  தான்  நாம்  எல்லோரும் அனுபவித்தபடி  உள்ளோம்

ஆனால்  சும்மா கிடைக்கும் எதற்கும்  பெறுமதி  அரிதே...

ஆனால்  இந்த  நாடுகளில் இதற்காக  மக்கள்  கொடுத்த விலைகள்  மிக  மிக  அதிகம்

விசுகு அண்ணா ... யதார்த்தமான கருத்துக்களால் போட்டு தாக்குறீங்க. இனிமேல் உங்கள் மீதான பார்வையும் மாறலாம்.😄

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Sasi_varnam said:

விசுகு அண்ணா ... யதார்த்தமான கருத்துக்களால் போட்டு தாக்குறீங்க. இனிமேல் உங்கள் மீதான பார்வையும் மாறலாம்.😄

சசி அது தான் அண்மையில் @விசுகு என்னில் மாற்றம் தெரிகிறதா என்று சுயபரிசோதனை செய்திருந்தார்.

நானும் அதற்குள் எழுத வேண்டும் என்று தவறவிட்டு விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

தெரியாது என்பது தெரிவுதான். ஆனால்…

இது தெரியாமல் விசுகு அண்ணா கூறியதை நீங்கள் கேள்விக்கு உட்படுத்த முடியாதல்லவா?

இதை சொல்லவா இத்தனை நேரம் இழுத்தீர்கள்?

தெரியாது என சொல்வதால் திரி திசைமாறும் என ஏன் பயந்தீர்கள் 🤣.

நீங்கள் ஆரம்பத்தில் நான் எழுதிய கருத்தினை வாசித்து பாருங்கள், நான் சாதாரணமாகத்தான் குறிப்பிட்டுள்ளேன் இது  ஜனநாயகமா என்பது தெரியாது ஆனால் பொதுவான வேலை நடைமுறை என ( பெரிய பந்தியாக எழுதியமையால் கருத்தினை நீங்கள் சரியாக உள்வாங்கவில்லையோ அல்லது reactive மனநிலையில் இருந்தமையாலோ இரஸ்சியா சீனா என வேறு ஒரு தளத்திற்கு கருத்தாடலை எடுத்து சென்றீர்கள்)

ஜனநாயகம் என்பது ஒரு ஆட்சி முறைமை.

ஆட்சிமுறைமையினையும் சட்டவாக்கத்தினையும் பலர் போட்டு குழப்புவதால்தான் பல புரிந்துணர்வு பிரச்சினை தோன்றுகிறது.

அதுமட்டுமல்லாமல் நாங்களாக குறைவான தரவுகளினடிப்படையில் முடிவிற்கு வருவது (Jumping into conclusions).

ஒரு விடயத்தில் பல தாக்க காரணிகள் உள்ளது என்பதை விளக்குவதற்காகத்தான் பைடன் குற்றவாளியா இல்லையா என கேட்டேன்.

இன்னுமொரு விடயம் அவசரப்பட்டு எமது எதிர்பார்ப்பினடிப்படையில் விடயங்கள் நிகழ்வதாக தவறாக நம்ப தலைப்படுவது.

ஒரு கணவனுக்கும் மனைவிக்குமிடையே சண்டை அதனால் இருவரும் பேசுவதில்லை, ஒரு நாள் கணவன் தனது மனைவிக்கு ஒரு குறிப்பு ஒன்றினை எழுதி வைத்து விட்டு நித்திரைக்கு சென்றா, அந்த குறிப்பில் "எனக்கு நாளை காலை 9 மணிக்கு ஒரு முக்கிய அறிமுகதேர்வுள்ளது 7 மணிக்கு எழுப்பிவிடவும்".

மறுநாள் காலை கணவன் நித்திரையால் எழுந்த பொது நேரம் 9:30, பக்கத்தில் ஒரு குறிப்பு காணப்பட்டது , "7:00 ஆகி விட்டது நித்திரையால் எழுந்திரு" என.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, vasee said:

இல்லை உங்கள் பதில் இதை ஒரு breach of data protection என்ற கோணத்தில் அணுகியதை புரிந்து கொண்டேன்.

ஆனால் இதன் பின் புலம் இதுவல்ல.

விசுகு அண்ணா “ஜனநாயகத்தை” பற்றி எழுதியமை இதை வெறுமனவே data breach அடிப்படையில் அணுகி அல்ல.

நீங்கள் விசுகு அண்ணா எழுதியதை மேற்கோள் காட்டிவிட்டு, இதை சாதாரண வேலையிட data breach உடன் ஒப்பிட்டு - இதற்கும் ஜனநாயகத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை, இது வெறும் அலுவலக நடைமுறை என்பதாக (தொனிக்க) எழுதினீர்கள்.

ஆனால் இது வெறும் data breach அல்ல, அமரிக்க ஜனாதிபதி சாதாரண அலுவலக மேலாளரும் இல்லை, சோதனையிடப்பட்ட இடம் (வெள்ளைமாளிகை) சாதாரண அலுவகமும்மில்லை.

இங்கேதான் விசுகு அண்ணா சொன்னதும், நான் கேட்ட கேள்வியும், ஜனநாயகமும் சம்பந்த படுகிறது.

பைடன், டிரம்ப், கிளிண்டன், நிக்சன் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் போது அவர்களின் கீழ் வரும் திணைக்களங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாப்போல், 

ஏன் சீனாவில், ரஸ்யாவில், இந்தியாவில், இலங்கையில் நடப்பதில்லை?

பதில்? ஜனநாயகம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.

இதே திரியில் நீங்களே உங்களுக்கு ஜனநாயகம் என்றால் என்ன என்பது தெரியவில்லை என எழுதியாதால் சொல்கிறேன்…

நீங்கள்தான் ஜனநாயகத்துக்கும், சட்டம், ஒழுங்கு, சட்டதின் மேலாண்மை (law and order and rule of law) கும் உள்ள நெருங்கிய தொடர்பை பற்றி விளங்காமல் குழம்புகிறீர்கள்.

இங்கே இந்த அதிகாரிகள் பயமின்றி பதவியில் இருக்கும் அதிபர் மேல் நடவடிக்கை எடுக்க யார் அல்லது எது அவர்களுக்கு அதிகாரத்தை கொடுக்கிறது?

அமெரிக்காவின் அரசியல் சட்டம். இந்த அதிகாரத்தை இந்த அதிகாரிகளுக்கு கொடுக்கிறது.

அமெரிக்காவின் நீதி மன்றங்கள் இந்த அதிகாரிகள் இலக்கு வைக்கப்படின் தக்க பாதுகாப்பு வழங்கும்.

ஜனநாயகம் என்பது தனியே பெரும்பான்மை ஆட்சி அல்ல. அப்படி நடந்தால் அதன் பெயர் குழு ஆட்சி (mob rule).

ஜனநாயக்கதில் பெரும்பான்மை விருப்பு உள்ளவர் கூட எதேச்ச அதிகாரமாக நடக்க முடியாதவாறு பல checks and balances (தடுப்புகளும், கண்காணிப்புகளும்) உண்டு.

இந்த checks and balances ஐ கொடுப்பது சட்டம். அதை கவனமாக நடைமுறைபடுத்துவது நீதிமன்றம்.

இங்கே அதிகாரிகளுக்கு துணிவை கொடுப்பது - இந்த checks and balances தான்.

ஒரு ஜனநாயக நாட்டில் நிர்வாக அதிகாரம் (அரசாங்கம்), சட்ட ஆக்கல் (பாராளுமன்றம்), நீதிமன்றம் ஆகிய மூன்று தூண்கள் உள்ளன.

இவை ஒன்றை ஒன்று எல்லை மீறாதவாறு கண்காணித்துகொள்ளும்.

இதற்கும் அப்பால் நாலாவது தூணாக தம்மளவில் சுயாதீனமான பத்திரிகை துறை இருக்கும் (Independent but not unbiased press).

இவை எல்லாம் சரிவர இயங்கும், அரசியல் தலைமை தேர்தல் மூலம் தெரிவாகும் நாடுதான் ஜனநாயக நாடு.

ஆகவே ஜனநாயகத்தின் அடிப்படையே சட்டம்தான்.

Edited by goshan_che

நான் கூறுவது Code of conduct breach, நிறுவனமோ அமைப்போ அது சார்ந்து இயங்குவதற்கான அடிப்படை வரையறை.

நான்  வேலை செய்வது உயிரியல் பாதுகாப்பு பொறிமுறை அடுக்கு 3 கொண்டது, ஒரு பொருளோ விடயமோ தவறுதலாக வெளியே செல்வதற்கான நிகழ்தகவு பூச்சியம் ஆகும் ஆனால் திட்டமிட்டு வெளியில் எடுத்து செல்லலாம்,  அப்படி நிகழ்ந்தால் நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் காப்பதற்காகவே அதற்கான வரையறை உண்டு, அது நிறுவனத்தின் சொந்த பாதுகாப்பு நடைமுறையே அது போலவே இந்த விடயத்திலும் பார்க்கிறேன்.

இதில் பெரிதாக எனக்கு வேறு விடயம் புரியவில்லை. எதற்காக இதற்குள்  ஜனநாயகத்தினை சேர்க்கவேண்டும் என.

இல்லை இதுதான் ஜனநாயகத்திற்கு வரைவிலக்கணம் என்றால் சரி நான் கூறியது பிழை நீங்கள் கூறியது சரி , மேற்கொண்டு தொடர விரும்பவில்லை.

6 minutes ago, goshan_che said:

அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.

இதே திரியில் நீங்களே உங்களுக்கு ஜனநாயகம் என்றால் என்ன என்பது தெரியவில்லை என எழுதியாதால் சொல்கிறேன்…

நீங்கள்தான் ஜனநாயகத்துக்கும், சட்டம், ஒழுங்கு, சட்டதின் மேலாண்மை (law and order and rule of law) கும் உள்ள நெருங்கிய தொடர்பை பற்றி விளங்காமல் குழம்புகிறீர்கள்.

இங்கே இந்த அதிகாரிகள் பயமின்றி பதவியில் இருக்கும் அதிபர் மேல் நடவடிக்கை எடுக்க யார் அல்லது எது அவர்களுக்கு அதிகாரத்தை கொடுக்கிறது?

அமெரிக்காவின் அரசியல் சட்டம். இந்த அதிகாரத்தை இந்த அதிகாரிகளுக்கு கொடுக்கிறது.

அமெரிக்காவின் நீதி மன்றங்கள் இந்த அதிகாரிகள் இலக்கு வைக்கப்படின் தக்க பாதுகாப்பு வழங்கும்.

ஜனநாயகம் என்பது தனியே பெரும்பான்மை ஆட்சி அல்ல. அப்படி நடந்தால் அதன் பெயர் குழு ஆட்சி (mob rule).

ஜனநாயக்கதில் பெரும்பான்மை விருப்பு உள்ளவர் கூட எதேச்ச அதிகாரமாக நடக்க முடியாதவாறு பல checks and balances (தடுப்புகளும், கண்காணிப்புகளும்) உண்டு.

இந்த checks and balances ஐ கொடுப்பது சட்டம். அதை கவனமாக நடைமுறைபடுத்துவது நீதிமன்றம்.

இங்கே அதிகாரிகளுக்கு துணிவை கொடுப்பது - இந்த checks and balances தான்.

ஒரு ஜனநாயக நாட்டில் நிர்வாக அதிகாரம் (அரசாங்கம்), சட்ட ஆக்கல் (பாராளுமன்றம்), நீதிமன்றம் ஆகிய மூன்று தூண்கள் உள்ளன.

இவை ஒன்றை ஒன்று எல்லை மீறாதவாறு கண்காணித்துகொள்ளும்.

இதற்கும் அப்பால் நாலாவது தூணாக தம்மளவில் சுயாதீனமான பத்திரிகை துறை இருக்கும் (Independent but not unbiased press).

இவை எல்லாம் சரிவர இயங்கும், அரசியல் தலைமை தேர்தல் மூலம் தெரிவாகும் நாடுதான் ஜனநாயக நாடு.

ஆகவே ஜனநாயகத்தின் அடிப்படையே சட்டம்தான்.

ஜன்நாயக நாடுகளுக்கிடையே சட்ட்டம் வேறுபடும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

அதுமட்டுமல்லாமல் நாங்களாக குறைவான தரவுகளினடிப்படையில் முடிவிற்கு வருவது (Jumping into conclusions).

யாரும் இங்கே jumping to conclusions செய்யவில்லை.

ரஸ்யா, சீனா போன்ற நாடுகளை பல வருடமாக அவதானித்ததின் பின்னான முடிவே இது.

சீனாவின் கம்யூனிச கட்சி கூட்டத்தில் இருந்து வலுகட்டாயமாக வெளியே தூக்கி செல்லப்பட்ட முன்னாள் அதிபர் ஹூ எங்கே?

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி யாருக்கும் இக்கதி நேர்ந்ததா?

அலிபாபாவின் சீ ஈ ஓ - ஜக் மா ஏன் திடீரென்று காணாமல் போய் பின் இப்போ ஜப்பானில் வாயை மூடி ஒளிந்து வாழ்கிறார்?

ஒவ்வொரு நாளும் எலோன் மஸ்க் பைடனுக்கு டுவிட்டரில் கல் எறிந்து விட்டு எப்படி பிரச்சனை இல்லாமல் இருக்கிறார்?

இப்படி ஆயிரகணக்கான வித்தியாசங்களை அடுக்கலாம்.

ஆகவே இதில் jumping to conclusions எதுவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, vasee said:

இதில் பெரிதாக எனக்கு வேறு விடயம் புரியவில்லை. எதற்காக இதற்குள்  ஜனநாயகத்தினை சேர்க்கவேண்டும் என.

இல்லை இதுதான் ஜனநாயகத்திற்கு வரைவிலக்கணம் என்றால் சரி நான் கூறியது பிழை நீங்கள் கூறியது சரி , மேற்கொண்டு தொடர விரும்பவில்லை.

சரி கொஞ்சம் வித்தியாசமாக சொல்கிறேன்.

1. ரஸ்யாவில் ஒரு தனியார் ரஸ்ய கம்பெனி - அதில் தொழில் ரகசியம் கசிந்து விடுகிறது. கம்பெனி நடவடிக்கை எடுக்கும்.

2. அதே விசயம் அமெரிக்காவில் ஒரு அமெரிக்க கம்பெனியில் நடக்கிறது. அந்த கம்பெனியும் அதே நடவைக்கையை எடுக்கிறது.

இதுவரை உங்கள் ஒப்பீடு சரி.

இப்போ

1. புட்டின் ஒரு ஆவணத்தை தன் வீட்டுக்கு கொண்டு போய் விடுகிறார்.

2. பைடனும் அதை ஒத்த ஆவணத்தை தன் வீட்டுக்கு கொண்டு போய் விடுகிறார்.

இப்போ அமெரிக்காவின் அமைப்புகள் பைடனை சோதனை இட்டதை போல் ரஸ்ய அமைப்புக்கள் புட்டினை நெருங்க கூட நினைக்குமா?

புட்டின் அல்ல, மோடியை இப்படி நெருங்க சிபிஐ யால் முடியுமா (பதவியில் இருக்கும் போது).

இதுதான் ஜனநாயக நாட்டுக்கும், பெயரளவில் ஜனநாயகம் உள்ள நாடுகளுக்கும் வித்தியாசம்.

இதுதான் ஜனநாயகத்தின் வரைவிலக்கணம் இல்லை.

ஆனால் உடலில் உயிர் உள்ளதை நாடி துடிப்பு காட்டுவது போல, பைடன் மீதான நடவைக்கை போன்றவை ஜனநாயகம் உயிரோடு உள்ளது என்பதை காட்டும் அறிகுறிகள்.

15 minutes ago, vasee said:

ஜன்நாயக நாடுகளுக்கிடையே சட்ட்டம் வேறுபடும்.

நிச்சயமாக ஆனால் அடிப்படை தத்துவம் மாறாது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

சரி கொஞ்சம் வித்தியாசமாக சொல்கிறேன்.

1. ரஸ்யாவில் ஒரு தனியார் ரஸ்ய கம்பெனி - அதில் தொழில் ரகசியம் கசிந்து விடுகிறது. கம்பெனி நடவடிக்கை எடுக்கும்.

2. அதே விசயம் அமெரிக்காவில் ஒரு அமெரிக்க கம்பெனியில் நடக்கிறது. அந்த கம்பெனியும் அதே நடவைக்கையை எடுக்கிறது.

இதுவரை உங்கள் ஒப்பீடு சரி.

இப்போ

1. புட்டின் ஒரு ஆவணத்தை தன் வீட்டுக்கு கொண்டு போய் விடுகிறார்.

2. பைடனும் அதை ஒத்த ஆவணத்தை தன் வீட்டுக்கு கொண்டு போய் விடுகிறார்.

இப்போ அமெரிக்காவின் அமைப்புகள் பைடனை சோதனை இட்டதை போல் ரஸ்ய அமைப்புக்கள் புட்டினை நெருங்க கூட நினைக்குமா?

புட்டின் அல்ல, மோடியை இப்படி நெருங்க சிபிஐ யால் முடியுமா (பதவியில் இருக்கும் போது).

இதுதான் ஜனநாயக நாட்டுக்கும், பெயரளவில் ஜனநாயகம் உள்ள நாடுகளுக்கும் வித்தியாசம்.

இதுதான் ஜனநாயகத்தின் வரைவிலக்கணம் இல்லை.

ஆனால் உடலில் உயிர் உள்ளதை நாடி துடிப்பு காட்டுவது போல, பைடன் மீதான நடவைக்கை போன்றவை ஜனநாயகம் உயிரோடு உள்ளது என்பதை காட்டும் அறிகுறிகள்.

நிச்சயமாக ஆனால் அடிப்படை தத்துவம் மாறாது.

நான் தொடர்ந்து கருத்து இதில் எழுதமாட்டேன் என கூறிவிட்டு இதில் திரும்பவும் கருத்து எழுதுவதாக நினைக்க வேண்டாம் ஆனால் இந்த கருத்து நன்றாக உள்ளது என்பதை ஒத்துகொள்வதற்காகவே கருத்து பதிந்துள்ளேன்.

கருத்து இதில் தொடர விருப்பமில்லை என்பதற்கு பொதுவாக கருத்துக்கள் ஒரு இடத்திலேயே சுற்றி கொண்டிருக்கும், அத்தோடு தற்போது சிறிது வேலைப்பளு காரணமாக நேரம் செலவிட விரும்பவிலை அவ்வளவுதான் வேறு எந்த காரணமுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, vasee said:

நான் தொடர்ந்து கருத்து இதில் எழுதமாட்டேன் என கூறிவிட்டு இதில் திரும்பவும் கருத்து எழுதுவதாக நினைக்க வேண்டாம் ஆனால் இந்த கருத்து நன்றாக உள்ளது என்பதை ஒத்துகொள்வதற்காகவே கருத்து பதிந்துள்ளேன்.

கருத்து இதில் தொடர விருப்பமில்லை என்பதற்கு பொதுவாக கருத்துக்கள் ஒரு இடத்திலேயே சுற்றி கொண்டிருக்கும், அத்தோடு தற்போது சிறிது வேலைப்பளு காரணமாக நேரம் செலவிட விரும்பவிலை அவ்வளவுதான் வேறு எந்த காரணமுமில்லை.

நீங்கள் சொன்னதை நானும் அவ்வாறு நேர்மறையாகவே புரிந்துகொண்டேன். மனத்தாங்கல் ஏதும் இல்லை🙏🏾.

நான் எழுதுவது உங்களை மேற்கோள் காட்டியே ஆயினும், பதில் பலருக்கு🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.