Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பதவி விலகினார் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பதவி விலகினார் !

25 JAN, 2023 | 09:15 PM
image

 

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

இன்று (ஜனவரி 25) முதல் ராஜினாமா அமுலுக்கு வருவதாக ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழுவின்  உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/146699

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இதுவரை பதவி விலகலை : உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

By T. SARANYA

27 JAN, 2023 | 04:32 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பி.எஸ்.எம்.சார்லஸ் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய செய்தியை ஊடகங்கள் வாயிலாக அறிந்துக் கொண்டோம்.

பதவி விலகலை அவர் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பதவி விலகமாட்டார்கள்.

ஏனெனில் அவர்கள் மீது முழுமையான நம்பிக்கை உள்ளது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவில் வெள்ளிக்கிழமை (ஜன 27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம் ஜனநாயகத்திற்கு கிடைத்த பிரதான வெற்றியாக கருதுகிறோம்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் எவ்வளவு நிதி செலவு செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம் ஊடாக பொறுப்பாக்கப்பட்டுள்ளது.

தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம் கடந்த 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இதற்கமைய கடந்த 24 ஆம் திகதி அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.

இதற்கமைய இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் வாக்காளர் ஒருவர் ஒரு வேட்பாளருக்கு 20 ரூபா மாத்திரம் செலவிட வேண்டும் அதன்படி ஒரு தேர்தல் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை இந்த 20 ரூபாவினால் பெருக்கி வரும் தொகையை அந்த வேட்பாளர் உரிய தேர்தல் தெர்குதிக்கான பிரசார நடவடிக்கைளுக்கு செலவிட வேண்டும்.அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தேர்தல் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கையை 20 ரூபாவினால் பெருக்கி வரும் தொகையில் 60 சதவீதத்தை மாத்திரம் குறித்த தேர்தல் தொகுதிக்காக செலவிட வேண்டும்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தலுக்காக தான் செலவு செய்த நிதி,அந்த நிதியை பெற்றுக்கொண்ட விதம் ஆகியவற்றுக்கான மூல ஆவணங்களை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இருவார காலத்திற்குள் முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும்.போலியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு,அது உறுதிப்படுத்தப்பட்டால் அந்த வேட்பாளரின் அரசியல் பதவி இரத்து செய்யப்படும்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பதவி விலகவுள்ளதாக ஊடகங்களிலும்,சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகள் வெளியாகியுள்ளன. ஆணைக்குழுவின் உறுப்பினராக பதவி வகித்த பி.எஸ்.எம்.சார்லஸ் உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதை ஊடகங்கள் வாயிலாகவே அறிந்துக் கொண்டோம். பதவி விலகல் தொடர்பில் இதுவரை உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு ஏதும் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறவில்லை.

பி.எஸ்.எம்.சார்ல்ஸ் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதால் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாது.ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பதவி விலகமாட்டார்கள்,அவர்கள் மீது முழுமையான நம்பிக்கை உள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/146845

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் விலகல்?

அதிகாரத்தில் உள்ளோர் மனம் கோணாதபடி நடப்பதில் சாள்ஸ் வல்லவர் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

அமர்வுகள் இடம்பெறும்போது சுற்றித்திருந்த உறுப்பினர்கள் – கண்டித்த சபாநாயகர்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இராஜினாமா :அரசியலமைப்பு பேரவைக்கு அறிவிக்கப்படவில்லை !

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்துள்ளதாக இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என அரசியலமைப்பு பேரவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதன் தலைவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக இருந்த சார்லஸ், சமீபத்தில் ராஜினாமா செய்த நிலையில் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை நான்காக குறைந்தது.

https://athavannews.com/2023/1322140

  • கருத்துக்கள உறவுகள்

சார்ள்ஸ் அனுப்பிய இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்கவில்லை-ஜனாதிபதி அலுவலகம்

சார்ள்ஸ் அனுப்பிய இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்கவில்லை-ஜனாதிபதி அலுவலகம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அனுப்பிய இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கவில்லை என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி கடந்த வாரம் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் ஜனவரி 25 அன்று தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்ததுடன், அவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

ஏன் விலகல்?

அதிகாரத்தில் உள்ளோர் மனம் கோணாதபடி நடப்பதில் சாள்ஸ் வல்லவர் தானே?

இவருக்கு... கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது போல் தெரிகின்றது.
ஏனென்றால்... வேறு ஒரு முஸ்லீம்   உறுப்பினருக்கும், மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. 👇

தேர்தல் ஆணைக்குழுவின் மற்றொரு உறுப்பினருக்கும் கொலை மிரட்டல்!

தேர்தல் ஆணைக்குழுவின் மற்றொரு உறுப்பினருக்கும் கொலை மிரட்டல்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் எம்.எம்.மொஹமட்டுக்கு பதவியை இராஜினாமா செய்யுமாறு நேற்று (27) இரவு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக கொலை மிரட்டல் வந்த எஸ்.பி. திவரத்னவுக்கு மீண்டும் ஒருமுறை குறுஞ்செய்தி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட உறுப்பினர்களான பத்திரன மற்றும் திவரத்ன ஆகியோருக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2023/1322151

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பி.எஸ்.எம் சார்ள்ஸின் இராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்கவில்லை

 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அனுப்பிய இராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கவில்லை என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

charls-300x169.jpeg
ஜனவரி 25 ஆம் திகதி, திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜிநாமா செய்ததுடன், அவரது இராஜிநாமா கடிதமும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/236332

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டல்-விசாரணைகள் ஆரம்பம்

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டல்-விசாரணைகள் ஆரம்பம்

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டலுடன் தொடர்புடைய தொலைபேசி இலக்கம் குறித்து விசாரணை நடத்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர்.

ஆணைக்குழு உறுப்பினர்கள் எஸ்.பி. திவாரட்ன மற்றும் கே.பி.பி. பத்திரன ஆகியோர் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில் ,அவர்களின் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1322199

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணைக்குழுவின் மற்றொரு உறுப்பினரையும் பதவி விலகுமாறு மரண அச்சுறுத்தல் ; விசாரணைகளை ஆரம்பித்தது சி.ஐ.டி.

By T. SARANYA

29 JAN, 2023 | 09:26 AM
image

(எம்.மனோசித்ரா)

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் எம்.எம்.மொஹம்மட்டை பதவி விலகுமாறு வலியுறுத்தி தொலைபேசியூடாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு அவருக்கு இவ்வாறு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட எஸ்.பி.திவாரத்னவிற்கும் குறுஞ்செய்தியூடாக மீண்டும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த உறுப்பினர்கள் இருவருக்கும் தேவையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, குற்றப்புலனாய்வு பிரிவினால் (சி.ஐ.டி.) இது தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான எஸ்.பி.திவாரத்ன மற்றும் கே.பி.பி.பத்திரண ஆகியோரை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த 18 ஆம் திகதி தொலைபேசியூடாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் பின்னணியிலேயே தற்போது மீண்டுமொரு உறுப்பினரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.

இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் எஸ்.பி.திவாரத்ன மற்றும் எம்.எம்.மொஹம்மட் ஆகியோர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவாவிற்கு அறிவித்துள்ளனர்.

அதற்கமைய குறித்த இரு உறுப்பினர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/146942

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் சார்ள்ஸின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்!

By T. SARANYA

07 FEB, 2023 | 03:30 PM
image

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் இராஜினாமாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் முன்னர் அறிவித்திருந்தார்.

இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் செயலாளர்  சமன் ஏக்கநாயக்க  சார்லஸிடம் இன்று (பெப் 07) தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/147637

மக்கள் சுதந்திரமாக தம் பிரதிநிதிகளை தெரிவு செய்வதை உறுதிப்படுத்துவதற்கு தான் இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இது வரை காலம் இந்த ஆணைக்குழுவில் இருந்து மக்களின் வரிப்பணத்தின் மூலம் சம்பளம், சலுகைகள் என வருமானம் பார்த்து விட்டு, மக்களின் காசில் வயிறு வளர்த்து விட்டு, மக்கள் தேர்தல் ஒன்றின் மூலம் தம் உள்ளூர் பிரதினிதிகளை தெரிவு செய்ய முனையும் போது, அதை குழப்பியடிக்க, ரணிலின் சூழ்ச்சியிற்கு ஒத்தாசை கொடுக்கும் விதமாக பதவி விலகியுள்ளார் இவர்.

தமிழ் அதிகாரிகள் என்றால் அரசுக்கு வாலை ஆட்டி, நக்கி விடவும் செய்வார்கள் என்பதை மீண்டும் மீண்டும் சாள்ஸ் நிரூபிக்கின்றார்.

இன்னுமொருவரும் பதவி விலகினால், ஆணக்குழுவின் தீர்மானங்கள் செல்லுபடியற்றதாகி விடும் (தீர்மானம் ஒன்று நிறைவேற தலைவரைத் தவிர்த்து ஆகக் குறைந்தது 3 பேராவது இருக்க வேண்டும் என நினைக்கின்றேன்). பின்னர் பொதுஜன பெரமுனவின் விருப்புக்கு ஏற்றவாறு தேர்தலை பிற்போட முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றம் தலையிட்டு தேர்தலை நடத்தினாலொழிய தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. அரச ஊழியர்களின் சம்பளம் வழங்க காசில்லையாம், அதால தேர்தல் நடத்தவும் காசில்லை என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தம்மா மகிந்தரின் ஆள் என்பது தெரிந்ததே. 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2023 at 14:09, நிழலி said:

மக்கள் சுதந்திரமாக தம் பிரதிநிதிகளை தெரிவு செய்வதை உறுதிப்படுத்துவதற்கு தான் இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இது வரை காலம் இந்த ஆணைக்குழுவில் இருந்து மக்களின் வரிப்பணத்தின் மூலம் சம்பளம், சலுகைகள் என வருமானம் பார்த்து விட்டு, மக்களின் காசில் வயிறு வளர்த்து விட்டு, மக்கள் தேர்தல் ஒன்றின் மூலம் தம் உள்ளூர் பிரதினிதிகளை தெரிவு செய்ய முனையும் போது, அதை குழப்பியடிக்க, ரணிலின் சூழ்ச்சியிற்கு ஒத்தாசை கொடுக்கும் விதமாக பதவி விலகியுள்ளார் இவர்.

தமிழ் அதிகாரிகள் என்றால் அரசுக்கு வாலை ஆட்டி, நக்கி விடவும் செய்வார்கள் என்பதை மீண்டும் மீண்டும் சாள்ஸ் நிரூபிக்கின்றார்.

இன்னுமொருவரும் பதவி விலகினால், ஆணக்குழுவின் தீர்மானங்கள் செல்லுபடியற்றதாகி விடும் (தீர்மானம் ஒன்று நிறைவேற தலைவரைத் தவிர்த்து ஆகக் குறைந்தது 3 பேராவது இருக்க வேண்டும் என நினைக்கின்றேன்). பின்னர் பொதுஜன பெரமுனவின் விருப்புக்கு ஏற்றவாறு தேர்தலை பிற்போட முடியும்.

முள்ளிவாய்க்கால் நேரம் களத்தில் நின்று ஓரளவுக்கு நியாயமாக செயல்பட்டவர் என நினைக்கிறேன் (பிழை என்றால் திருத்தவும்).

பின்னர் இதை காரணம் காட்டியே புலி என முத்திரை குத்தப்பட்டு பழிவாங்கபட போவதாக மிரட்டியதும் அப்படியே அரசின் பக்கம் சாய்ந்து விட்டார் என நினைக்கிறேன்.

அன்று முதல் நாய்க்கு வாழ்க்கைபட்டால் குரைத்துத்தான் தீர வேண்டும் என்ற நிலை என நினைக்கிறேன்.

On 7/2/2023 at 14:27, ஏராளன் said:

நீதிமன்றம் தலையிட்டு தேர்தலை நடத்தினாலொழிய தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. அரச ஊழியர்களின் சம்பளம் வழங்க காசில்லையாம், அதால தேர்தல் நடத்தவும் காசில்லை என்கிறார்கள்.

தேர்தல் நடக்குமா போல தெரியவில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தேர்தல் நடக்குமா போல தெரியவில்லை.

அப்போ சுமந்திரனின் திட்டம் என்னாவது? சுதந்திர தினத்தில் தலையையாவது காட்டியிருக்கலாம், தேர்தலை நம்பி எல்லாக் கனவும் கைநழுவிப்போச்சு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.