Jump to content

உக்ரேன் ஜனாதிபதியை ஒருபோதும் கொலை செய்யமாட்டேன் என புட்டின் உறுதிமொழி வழங்கினார் - இஸ்ரேலின் முன்னாள் பிரதமர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேன் ஜனாதிபதியை ஒருபோதும் கொலை செய்யமாட்டேன் என புட்டின் உறுதிமொழி வழங்கினார் - இஸ்ரேலின் முன்னாள் பிரதமர்

By Rajeeban

06 Feb, 2023 | 10:54 AM
image

உக்ரேன் ஜனாதிபதியை ஒருபோதும் கொலை செய்ய மாட்டேன் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தன்னிடம் உறுதியளித்தார் என முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் நவ்டாலி பெனெட்  பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

ரஸ்யா உக்ரேன் மீதான தனது நடவடிக்கைகளை ஆரம்பித்த சில நாட்களின் பின்னர்  ரஸ்யாவிற்கான தனது விஜயத்தின் போது புட்டின் இந்த உறுதிமொழியை வழங்கினார் என  முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் ஆரம்பநாட்களில் சமாதான முயற்சிகளிற்காக நான் மொஸ்கோவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை ஜெலென்ஸ்கியின் உயிருக்கு ஆபத்தில்லை என புட்டின் உறுதியளித்தார் என முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஜெலென்ஸ்கியை கொலை செய்ய திட்டமிடுகின்றீர்களா என நான் புட்டினிடம் கேட்டேன்  அதற்கு அவர் நான் ஜெலென்ஸ்கியை கொலை செய்யமாட்டேன் என தெரிவித்தார் என நவ்டாலி பெனெட் தெரிவித்துள்ளார்.

நான் அதற்கு நீங்கள் ஜெலென்ஸ்கியை கொலை செய்யமாட்டேன் என்ற வாக்குறுதியை தருகின்றீர்கள் என கருதுகிறேன் என தெரிவித்தேன் அதற்கு புட்டின் ஆம் நான் அவரை கொல்ல மாட்டேன் எனவும் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் நான் மொஸ்கோ விமானநிலையத்திற்கு செல்லும் வழியில் உக்ரைன் ஜனாதிபதியை தொடர்புகொண்டு இதனை தெரிவித்தேன் அதற்கு அவர் நீங்கள் உறுதியாக சொல்கின்றீர்களா என கேட்டார் நான் ஆம் புட்டின் 100 வீதம் உறுதியாக தெரிவித்தார் என குறிப்பிட்டேன் எனவும் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.
 

 

https://www.virakesari.lk/article/147494

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“”இதன் பின்னர் நான் மொஸ்கோ விமானநிலையத்திற்கு செல்லும் வழியில் உக்ரைன் ஜனாதிபதியை தொடர்புகொண்டு இதனை தெரிவித்தேன் அதற்கு அவர் நீங்கள் உறுதியாக சொல்கின்றீர்களா என கேட்டார் நான் ஆம் புட்டின் 100 வீதம் உறுதியாக தெரிவித்தார் என குறிப்பிட்டேன் எனவும் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.“”

அதுவரை மறைவாக இருந்த செலண்ஸ்கி, இவ்வாறு புடின் கூறியதாக அறிவிக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்களில் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து "நான் யாருக்கும் அஞ்சவில்லை" அன அறிவித்ததாகக் கூறப்படுகிறது. (அவர் அவ்வாறு கூறியதையிட்டு கருத்துச் சொல்ல ஏதுமில்லை ). ஆனால் இதன் பின்னரே மேற்குலக ஊடகங்கள் அவரை ஒரு Super Hero போன்று சித்தரிக்க ஆரம்பித்தன.

🤣

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதி உத்தமர் மாண்புமிகு புட்டின் அவர்களின் வாக்குறுதியின் பின்னரே…
”பங்கரில்” மாதக் கணக்காக படுத்திருந்த கோமாளி செலென்ஸ்கி… முதன் முறையாக வெளியே வந்து பெருமூச்சு விட்டாராம். 😂 🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

24/02/22 வியாழன் - ரஸ்ய படை எடுப்பு ஆரம்பம்

25/02/22 வெள்ளி - கியவ்வின் மத்தியில், கட்டிடங்களுக்கு வெளியே வந்து  செலன்ஸ்கியும், அவரின் பிரதமரும் இந்த வீடியோவை வெளியிட்டார்கள். இதன் சாரம்சம், நானும், அமைச்சர்களும் இங்கேதான் இருக்கிறோம். எங்கும் ஓடவில்லை.

05/03/22 - இஸ்ரேலிய பிரதமர் பென்னேட் மஸ்கோ போய் புட்டினை சந்தித்தார்.

 

 

large.46C059C1-E1ED-4471-9D83-D630538DCFE2.jpeg.5953117d0bb29529893627df3ca17073.jpeglarge.4E9D387F-5E36-4DA1-BAE2-2ACEA5586A61.jpeg.cf95e32234b87466a91a5a42446c8da4.jpeg

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அதி உத்தமர் மாண்புமிகு புட்டின் அவர்களின் வாக்குறுதியின் பின்னரே…
”பங்கரில்” மாதக் கணக்காக படுத்திருந்த கோமாளி செலென்ஸ்கி… முதன் முறையாக வெளியே வந்து பெருமூச்சு விட்டாராம். 😂 🤣

எமதாட்கள் சில பல விடயங்களை தமக்கு ஏற்றாற்போல மறதி நோய்க்கு ஆளாகிவிடுகின்றனர்.  🤣

ஈராக்கை ஆக்கிரமித்து , அழித்து, எதிர்வரும் பங்குனியுடன் 20 வருடங்களாகிறது. லிபியா 12 வருடங்களாகிறது..  மேற்கால் கடந்த 20 வருடங்களுக்குள் கொல்லப்பட்ட இரு நாட்டின் தலைவர்களில் சதாம் ஹுசைனும் மும்மர் கடாபியும் அடங்குவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

24/02/22 வியாழன் - ரஸ்ய படை எடுப்பு ஆரம்பம்

25/02/22 வெள்ளி - கியவ்வின் மத்தியில், கட்டிடங்களுக்கு வெளியே வந்து  செலன்ஸ்கியும், அவரின் பிரதமரும் இந்த வீடியோவை வெளியிட்டார்கள். இதன் சாரம்சம், நானும், அமைச்சர்களும் இங்கேதான் இருக்கிறோம். எங்கும் ஓடவில்லை.

05/03/22 - இஸ்ரேலிய பிரதமர் பென்னேட் மஸ்கோ போய் புட்டினை சந்தித்தார்.

 

 

large.46C059C1-E1ED-4471-9D83-D630538DCFE2.jpeg.5953117d0bb29529893627df3ca17073.jpeglarge.4E9D387F-5E36-4DA1-BAE2-2ACEA5586A61.jpeg.cf95e32234b87466a91a5a42446c8da4.jpeg

சும்மா விடுங்க கோசான். காவடியைத் தூக்கினால ஆடிய்தானே ஆகவேணும்🤣இதுக்கெல்லாம் விளக்கம் குடுத்துக்கொண்டு! 

பிற்குறிப்பு: காவடியத் தூக்கீட்டம் இனி விடவே மாட்டம்🙄

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

I am here in Kyiv, I am not hiding, I am not afraid,’ Zelensky challenges enemy on Day 12

President cautions the West that Russia would not stop with Ukraine, ‘the beast wants more, more and more’.

THEPRINT TEAM 8 March, 2022

https://theprint.in/world/i-am-here-in-kyiv-i-am-not-hiding-i-am-not-afraid-zelensky-challenges-enemy-on-day-12/863546/?amp

(1) இதைத்தான் கூறுவது, வேலியில போன ஓணானை பிடித்து இரு கால்களுக்கு இடையில் விடுவது என்று. தமிழகக் கவிஞர் நன்றாகப் பாடுவாரோ ? 

 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, வாலி said:

சும்மா விடுங்க கோசான். காவடியைத் தூக்கினால ஆடிய்தானே ஆகவேணும்🤣இதுக்கெல்லாம் விளக்கம் குடுத்துக்கொண்டு! 

பிற்குறிப்பு: காவடியத் தூக்கீட்டம் இனி விடவே மாட்டம்🙄

புரிகிறது வாலி.

உண்மையிலேயே சில நேரம் பாக்க பாவமாய்த்தான் கிடக்கும்.

இதை இப்படியே விட்டு விடலாம்தான். 

ஆனாலும் மேலோட்டமாக செய்தியை வாசிப்பவர்கள், இந்த சாம்பிராணி புகையில் மாட்டகூடாது என்பதால் தரவுகளை மட்டும் கொடுக்கிறேன்.

செலன்ஸ்கி 25/02/22 இலேயே கியவின் ரோட்டில் வந்து நிண்டு வீடியோ போட்டு, நான் எங்கும் ஓடவில்லை என சொல்லி விட்டார்.

பென்னெட் மாஸ்கோ போனது 05/03/22 - அதற்கு முன்னும், பின்னும் செலன்ஸ்கி கியவ்வில் இருந்திருக்கிறார். வெளியில் வந்திருக்கிறார், இரவு நேரம் வீடியோ வெளியிட்டும் இருக்கிறார்.

கீழே எழுதியுள்ளது அடிப்படை புரிதலாவது உள்ளவர்களுக்கு மட்டும். 

மேலே மிக தெளிவாக பெப் 25ம் திகதி டைம்ஸ் ஒவ் இஸ்ரேல் செலனஸ்கி கியவ்வில் நிண்டு வீடியோ போட்ட செய்தியை போட்டுள்ளது.

மார்ச் 5, புட்டின் உத்தரவாதம் தரும் வரை செலன்ஸ்கி பதுங்கி கிடந்தார் எண்டால், பெப்ரவரி 25இல் இந்த செய்தி எப்படி அச்சேறியது?

சிம்பிள் லாஜிக். 

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் எங்கள் செலன்ஸ்க்கி. 🤡

எனது கூற்றுக்கு ஆதாரம் இணைத்துள்ளேன். முடிந்தால் அது பிழை என நிரூபிக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணையில் ஜஸ்ரின் சாமியார் அருளியது, சில வாரங்கள் முன்பு ("சுய மேற்கோள்" விதி மீறல் இல்லையென நினைக்கிறேன்😎😞 "பொய் புரட்டுக்களை ஏற்றுக் கொள்ளும் படி சிறுகச் சிறுக மன அமைப்பை மாற்றியமைத்து, பின்னர் உரிய சந்தர்ப்பம் வரும் போது தங்கள் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வர்!".

இதற்கு எடுபட்டுப் போகும் வெள்ளந்தி மக்கள் இருக்கும் வரை இந்த ரெக்னிக் தொடரும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட்வைசுக்கு நன்றி 🤣

நம்புவது நம்பாதது அவரவர் தெரிவு 👇

Putin promised not to kill Zelensky – former Israeli PM

The Ukrainian leader sought assurance before posting a video declaring he wasn’t “afraid of anyone,” Naftali Bennett claims
 

Putin promised not to kill Zelensky – former Israeli PM

FILE PHOTO: Naftali Bennett and Vladimir Putin speak during a meeting in Sochi, Russia, October 22, 2021 ©  AP / Evgeny Biyatov

Former Israeli Prime Minister Naftali Bennett has revealed to Israeli media that Russian President Vladimir Putin told him that he would not have Ukrainian President Vladimir Zelensky assassinated. Bennett flew to Moscow Zelensky's request, who declared that he was“not afraid of anyone,” only after Putin assured his safety.

Bennet traveled to Moscow as Israeli PM last March, in a failed bid to broker an early ceasefire between Russia and Ukraine, he told Israel’s Channel 12 on Saturday.

With Russian forces surrounding Kiev, Zelensky was reportedly hiding in an undisclosed location at the time of the meeting. Bennett told the channel that the Ukrainian leader had tasked him with securing an assurance from Putin that he would not be targeted for assassination.

“Are you going to kill Zelensky?” Bennett asked Putin. The Russian president said that he would not, to which Bennett again asked for his word that he wouldn’t have the Ukrainian president killed. Putin gave his word, Bennett said.

 

Zelensky behind Macron’s calls to Putin – Paris

Bennett said that he called Zelensky immediately after leaving the Kremlin, telling him “he’s not going to kill you.” Zelensky asked for confirmation, and Bennett told him that he was “one hundred percent” sure that Putin would not have him eliminated.

Two hours later, Zelensky posted a video from his office in Kiev, explaining that he was “not hiding,” and “not afraid of anyone.” The video address was described as defiant by Western media outlets, but it was unknown until now that Zelensky essentially asked Putin permission – via Bennett – to reveal his location before making his statement.

Bennett described Putin as “smart and sharp,”and a supporter of the Jewish people. However, he said that the Russian leader’s demeanor became cold when Zelensky and his officials were mentioned, with Putin describing them as “Nazis” and “warmongers.”

The former PM – who shared office with Yair Lapid until stalwart conservative Benjamin Netanyahu returned to power in December – said that “everything” he did on his trip to Moscow was “coordinated with the United States, Germany and France.”

Bennett’s interview came a day after French Foreign Ministry spokeswoman Anne-Claire Legendre confirmed that President Emmanuel Macron “mainly” spoke to Putin by phone at the request of Zelensky. Meanwhile, as the leaders of France and Israel carried his messages to Moscow, Zelensky himself publicly declared that he would never talk to Putin, and forbade his officials from engaging in any negotiations with the Russian leader.

https://www.rt.com/russia/570996-bennett-putin-kill-zelensky/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

திண்ணையில் ஜஸ்ரின் சாமியார் அருளியது, சில வாரங்கள் முன்பு ("சுய மேற்கோள்" விதி மீறல் இல்லையென நினைக்கிறேன்😎😞 "பொய் புரட்டுக்களை ஏற்றுக் கொள்ளும் படி சிறுகச் சிறுக மன அமைப்பை மாற்றியமைத்து, பின்னர் உரிய சந்தர்ப்பம் வரும் போது தங்கள் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வர்!".

இதற்கு எடுபட்டுப் போகும் வெள்ளந்தி மக்கள் இருக்கும் வரை இந்த ரெக்னிக் தொடரும்! 

நிச்சயமாக.

இங்கே கூட ஆதாரம் எண்டு ஒரு புரட்டு எடுத்து விடப்பட்டுள்ளது.

அதாவது, 

போரின் 2ம் நாள் செலன்ஸ்கி வெளியில் வந்து பேசினார். 

போரின் 12ம் நாளும் வெளியில் வந்து பேசினார். 

மேலே இரு பேச்சுக்களுக்கும் உள்ள பொருளடக்க வித்தியாசம் ஆங்கிலம் தெரிந்தோருக்கு புரியும்.

அதே போல் 2ம் நாள் சொன்ன சிலதை, 12ம் நாளும் சொல்லி உள்ளார். (எப்படி பல மாவீரர் உரைகளில் தலைவர் ஒரு விடயத்தை மீள பிரஸ்தாபித்தாரோ அப்படி).

இதை எடுத்து கொண்டு, 2ம் நாள் உரையை, வீடியோவை முழுவதுமாக மறைத்து - அல்லது அது உண்மையில் 12ம் நாள்தான் நடந்தது என திரித்து…ஒரு கதை பின்னப்படுகிறது.

இது உண்மையிலேயே ஆங்கில பரிச்சயம் குறைவான உறவுகளின் தலையில் மிளகாய் அரைக்கும் முயற்சி.

நீங்கள் சொல்வது போல், ரஸ்யா விடயத்தில் அவர்களை இவ்வாறு “பதப்படுத்தி” விட்டால்,

ஏனைய விடயங்களில் அவர்களை ரோவின் முகவரிக்கு மாற்றி விடுவது இலகுவாக இருக்கும் என்பதே திட்டம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெலியில போறத ஏன் வேட்டிக்குள்ள விடுவான் 🤣

செலன்ஸ்க்கிகள் முடிந்தால் பிழையென நிரூபிக்கலாம். 

F: Forbes 

 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இதை இப்படியே விட்டு விடலாம்தான். 

ஆனாலும் மேலோட்டமாக செய்தியை வாசிப்பவர்கள், இந்த சாம்பிராணி புகையில் மாட்டகூடாது என்பதால் தரவுகளை மட்டும் கொடுக்கிறேன்.

 

அது 👍
மேலோட்டமாக செய்தியை வாசிப்பவர்கள் மட்டுமல்ல, உண்மையை இங்கே அறிந்து கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் கூட  பொய்கள் புரட்டுக்களை தான் உண்மைகள் என்று நம்பிவிடுவார்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.