Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் விபத்தில் உயிரிழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் விபத்தில் உயிரிழப்பு

யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் விபத்தில் உயிரிழப்பு

யாழ் .பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் சிகிச்சை பயணின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, வீதியின் குறுக்கே நாய் ஒன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளானதில், தலைக் கவசம் கழன்றமையினால் தலையில் பலத்த காயத்திற்கு இலக்காகி, யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துளமை குறிப்பிடத்தக்கது.
 
https://athavannews.com/2023/1323855

  • Replies 53
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கட்டாக்காலி  நாயினால், ஒரு உயிர் பறி போய் விட்டது. 
ஆழ்ந்த அனுதாபங்கள்.

யாழ். மாரகரசபை இனி, கட்டாக்காலி நாய்களை பிடிக்கும் வேகத்தை 
இரு மடங்காக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது விபத்து அல்ல, கொலை எனச்  சந்தேகிக்கப்படுகிறது.  இவர் EPDP யில் அதிருப்தியுற்று அண்மையில்தான் அதில் இருந்து விலகியிருந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் வடமராட்சியில் வீதி ஓரத்தில்  தலையில் பலத்த காயங்களுடன்  காணப்பட்ட அவரை, சுயநினைவற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார்கள். அவருக்கு அருகில் தலைக்கவசமும் கிடந்துள்ளது. 

 தலையில் மட்டுமே காயங்கள் காணப்பட்டுள்ளன. உடலின் வேறுபகுதியில் காயங்கள் எதுவும் இல்லை. அத்துடன், அவர் மெதுவாகவே மோட்டார் சைக்கிளை ஓட்டும் பழக்கத்தைக் கொண்டவர் , வேகமாக ஓட்டுபவரல்ல என்பதும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியதாகும். 

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

இது விபத்து அல்ல, கொலை எனச்  சந்தேகிக்கப்படுகிறது.  இவர் EPDP யில் அதிருப்தியுற்று அண்மையில்தான் அதில் இருந்து விலகியிருந்தார்.

EPDP இல் கொலைகார நாய் எல்லாம் உறுப்பினராக இருக்கின்றது போலிருக்கு! குறுக்கே பாய்ந்து கொல்லவும் பயிற்சி கொடுத்திருக்கின்றார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்☹️

வெள்ளவத்தை ஈ ஏ குரே மாவத்தையில் ரெமி அண்ணாவுடன் பாட்மிண்டன் ஆடிய தருணங்கள் மறக்க முடியாதவை!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

EPDP இல் கொலைகார நாய் எல்லாம் உறுப்பினராக இருக்கின்றது போலிருக்கு! குறுக்கே பாய்ந்து கொல்லவும் பயிற்சி கொடுத்திருக்கின்றார்கள்!

 EPDP யை குறை சொன்னவுடன் கிருபனுக்குக் கோபம் வருகிறது.  . நிம்பள் என்னிடம் நோ   கோபம் சரியா?  டக்ளஸ் உறவுக்காறரோ 🤣

கொலை என்பதுதான்  நம்பத்தகுந்த தகவல்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

 EPDP யை குறை சொன்னவுடன் கிருபனுக்குக் கோபம் வருகிறது.  . நிம்பள் என்னிடம் நோ   கோபம் சரியா?  டக்ளஸ் உறவுக்காறரோ 🤣

கொலை என்பதுதான்  நம்பத்தகுந்த தகவல்கள் 

அதென்ன இப்படியான செய்திகள் உங்களுக்கு மட்டுமே கிடைக்குது 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரதி said:

அதென்ன இப்படியான செய்திகள் உங்களுக்கு மட்டுமே கிடைக்குது 

புலனாய்வுக் கிளி என்று வைத்துக்கொள்ளுங்களேன். 

(புலனாய்வுப் புலி என்று கூறப்போய், தமிழ்த் தேசியத்தைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் திருகுவாளிகளின் மண்டகப்படியை ஏன் வேண்டிக் கட்டிக்கொள்வான் 🤣)

உண்மையில் இது விபத்து அல்ல, திட்டமிடப்பட்ட கொலை என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

உண்மையில் இது விபத்து அல்ல, திட்டமிடப்பட்ட கொலை என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். 

குறுக்கால ஓடின நாய்க்கு புரோக்கிராம் பண்ணி முடுக்கிவிட்டவருக்குத் தெரியாமல் வேறு யாருக்குத் தெரியும்!

யாழ்ப்பாணத்தில் மரண விசாரணை அதிகாரி இருக்கின்றார். மரணத்துக்கான காரணத்தை உறுதிப்படுத்த வழிகள் சட்டபூர்வமாக உள்ளன. அவர்களுக்குத் தெரியாத விடயங்கள் எல்லாம் @Kapithan க்கு தெரியுமென்பது அவர் புலனாய்வுக் கிளி என்பதால் அல்ல. வெறும் புருடா விடும்  போலிச் செய்திகளை நம்பும் பழக்கத்தினால் வந்தது. அல்லது யாழ் களத்தில் வந்து வாசிப்பவர்களை குழப்பி வசியப்படுத்தும் நோக்கமாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவரோ வல்லவரோ கூடாத இடம் தனில் கால் வைச்சால்.. இப்படி விபத்துக்கள் நடக்கலாம். அற்புதன் முதல் பல உதாரணங்கள். என்ன கொலைச் செயலாளர் இன்னும் மந்திரி. மாலை வேற போட்டுக்கிட்டு திரியுறார். 

12 hours ago, தமிழ் சிறி said:

கட்டாக்காலி  நாயினால், ஒரு உயிர் பறி போய் விட்டது. 
ஆழ்ந்த அனுதாபங்கள்.

யாழ். மாரகரசபை இனி, கட்டாக்காலி நாய்களை பிடிக்கும் வேகத்தை 
இரு மடங்காக்க வேண்டும்.

சும்மா போங்கண்ணா. ஒரு நாய் பிடிக்க 25,000 தொடக்கம் 30,000 கையூட்டு வாங்குது மாநகர சபை. நீங்க என்னடாண்ணா. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையிலையே நாய்தான் குறுக்காலை போனதோ எண்டு யார் கண்டார்? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

யாழ்ப்பாணத்தில் மரண விசாரணை அதிகாரி இருக்கின்றார். மரணத்துக்கான காரணத்தை உறுதிப்படுத்த வழிகள் சட்டபூர்வமாக உள்ளன.

இப்பவும் நம்புகிறீர்களா?

இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த  தினேஸ் சப்டர் கதையே இன்னும் தீரவில்லை… 

உயிரோடு உள்ளவர்களுக்கே மரணசான்றிதழ் கொடுக்கும் அதிகாரிகள் 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, MEERA said:

இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த  தினேஸ் சப்டர் கதையே இன்னும் தீரவில்லை… 

உயிரோடு உள்ளவர்களுக்கே மரணசான்றிதழ் கொடுக்கும் அதிகாரிகள் 

நினைத்தேன் எழுதிவிட்டீர்கள். மரணவிசாரணை அறிக்கை நாள்செல்லச்செல்ல பேரத்திற்கேற்ப மாறி மாறி காட்டும்.

றெமீடியஸ் த. தே. கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர் என நினைக்கிறன். பல சமூக சீர்கேட்டு வழக்குகளுக்காக  நீதிமன்றத்தில் ஆஜராகியவர் என செய்திகள் முன்பு வந்தன.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

குறுக்கால ஓடின நாய்க்கு புரோக்கிராம் பண்ணி முடுக்கிவிட்டவருக்குத் தெரியாமல் வேறு யாருக்குத் தெரியும்!

யாழ்ப்பாணத்தில் மரண விசாரணை அதிகாரி இருக்கின்றார். மரணத்துக்கான காரணத்தை உறுதிப்படுத்த வழிகள் சட்டபூர்வமாக உள்ளன. அவர்களுக்குத் தெரியாத விடயங்கள் எல்லாம் @Kapithan க்கு தெரியுமென்பது அவர் புலனாய்வுக் கிளி என்பதால் அல்ல. வெறும் புருடா விடும்  போலிச் செய்திகளை நம்பும் பழக்கத்தினால் வந்தது. அல்லது யாழ் களத்தில் வந்து வாசிப்பவர்களை குழப்பி வசியப்படுத்தும் நோக்கமாகவும் இருக்கலாம்.

யார் செய்திருப்பார்கள் என்பதை வாசிப்பவர்கள் ஊகித்துவிடுவார்கள் எனும் பயம் தங்களுக்கு கடுப்பேற்றுவது புரிகிறது. 

""யாழ்ப்பாணத்தில் மரண விசாரணை அதிகாரி இருக்கின்றார். மரணத்துக்கான காரணத்தை உறுதிப்படுத்த வழிகள் சட்டபூர்வமாக உள்ளன.""

👆நீங்கள் கூறு இதே ஆட்கள்தான் யுத்த காலத்திலும் இருந்தார்கள், தற்போதும் இருக்கிறார்கள். தங்களின் இதே வாதம்  யுத்த காலத்திற்கும் பொருந்துமா ? அதையும் ஒருமுறை கூறிவிடுங்கள். 

😏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

1) நினைத்தேன் எழுதிவிட்டீர்கள். மரணவிசாரணை அறிக்கை நாள்செல்லச்செல்ல பேரத்திற்கேற்ப மாறி மாறி காட்டும்.

2) றெமீடியஸ் த. தே. கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர் என நினைக்கிறன். பல சமூக சீர்கேட்டு வழக்குகளுக்காக  நீதிமன்றத்தில் ஆஜராகியவர் என செய்திகள் முன்பு வந்தன.

1) அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட கலகங்களுக்கும் பொறுப்பானவர்கள் நாட்டை விட்டு வெளியேற அவர் மிகவும் உறுதுணையாக இருந்தார். அதற்காகவே அவர் கொல்லப்பட்டார் எனக் கூறப்படுகிறது.  அத்துடன் அரகலய வை ஒழுங்கு செய்தவர்களுள் ஒருவர்  அண்மையில் இந்தோனேசியாவில் வைத்து கொல்லப்பட்டிருந்தார். அவருடன் சேர்த்து  அரகல்லயவுடன் தொடர்புபட்ட மிகவும் முக்கியமானவர்களில் மூவர் அண்மைய நாட்களில்  கொல்லப்பட்டுள்ளனர். 

2) ரெமீடியஸ் ஒரு Criminal Lawyer. கிரிமினல் வழக்குகளை கையாள்வது அவரது தொழில்.  அதை வைத்து அவரை எடைபோடுவது சரியான அணுகுமுறையாக இருக்காது.  கிரிமினல் வழக்குகளில் முன்னிலையாகுவதற்கு முன்னர், குறிப்பாக யுத்த காலங்களில்  அவர் மனித உரிமை மீறல்  வழக்குகளில் கைது செய்யப்பட்ட தமிழர்களுக்காக முன்னிலையானார். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அத்துடன் அரகலய வை ஒழுங்கு செய்தவர்களுள் ஒருவர்  அண்மையில் இந்தோனேசியாவில் வைத்து கொல்லப்பட்டிருந்தார்.

அவரை அவரது பிரேசில் மனைவியும், அவரது துணையாளரும் கொன்றதாகவே செய்திகள் வருகின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

இப்பவும் நம்புகிறீர்களா?

இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த  தினேஸ் சப்டர் கதையே இன்னும் தீரவில்லை… 

உயிரோடு உள்ளவர்களுக்கே மரணசான்றிதழ் கொடுக்கும் அதிகாரிகள் 

முடியப்பு றெமீடியஸ் மரணத்தில் இணையத்தில் @Kapithanஐத் தவிர வேறு எவரும் அவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகப்பட்டு எழுதியுள்ளார்களா? நான் தேடிய வரையில் காணவில்லை.

சிறிலங்காவில் எல்லாம் ஒழுங்காக நடக்கும் என்று கூறவரவில்லை. ஆனால் விபத்துக்களையும் கொலை என்று எதுவித ஆதாரமும் இல்லாமல் எழுதுவது சதிக்கோட்பாட்டாளர்களின் வேலை என்றே பார்க்கின்றேன். நமது @Kapithan conspiracy theories களைப் பரப்புவதில் மகாராஜா!

6 hours ago, Kapithan said:

யார் செய்திருப்பார்கள் என்பதை வாசிப்பவர்கள் ஊகித்துவிடுவார்கள் எனும் பயம் தங்களுக்கு கடுப்பேற்றுவது புரிகிறது. 

""யாழ்ப்பாணத்தில் மரண விசாரணை அதிகாரி இருக்கின்றார். மரணத்துக்கான காரணத்தை உறுதிப்படுத்த வழிகள் சட்டபூர்வமாக உள்ளன.""

👆நீங்கள் கூறு இதே ஆட்கள்தான் யுத்த காலத்திலும் இருந்தார்கள், தற்போதும் இருக்கிறார்கள். தங்களின் இதே வாதம்  யுத்த காலத்திற்கும் பொருந்துமா ? அதையும் ஒருமுறை கூறிவிடுங்கள். 

😏

எதுவித ஆதாரமும் இல்லாமல் எழுதுவது யாழ் கள விதிக்குள் வராது.  எனவே ஊகத்தில் எழுதாமால் உண்மையை எழுதுங்கள். யாழில் எழுதக் கடினமாக இருக்கு என்றால் அகல் நியூஸிலும் எழுதலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2023 at 02:54, தமிழ் சிறி said:

கட்டாக்காலி  நாயினால், ஒரு உயிர் பறி போய் விட்டது. 
ஆழ்ந்த அனுதாபங்கள்.

யாழ். மாரகரசபை இனி, கட்டாக்காலி நாய்களை பிடிக்கும் வேகத்தை 
இரு மடங்காக்க வேண்டும்.

கடைசியாக எப்போது இலங்கை சென்று வந்தீர்கள்? 

நாய் என்ன ஆடு மாடு எல்லாம் A9 வீதியிலேயே குடும்பம் நடத்துகின்றது. வீதியை பயன்படுத்துபவர்கள் தான் அவதானத்துடன் செல்லவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

புலனாய்வுக் கிளி என்று வைத்துக்கொள்ளுங்களேன். 

(புலனாய்வுப் புலி என்று கூறப்போய், தமிழ்த் தேசியத்தைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் திருகுவாளிகளின் மண்டகப்படியை ஏன் வேண்டிக் கட்டிக்கொள்வான் 🤣)

உண்மையில் இது விபத்து அல்ல, திட்டமிடப்பட்ட கொலை என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். 

அவரை நன்கு தெரிந்தவர்கள் ,அவரோடு வேலை செய்யும் சடடத்தரணிகள், அவரது குடும்பம், அவரது மச்சான் ஆர்னோட் முதற்  எல்லோரும் விபத்து தான் என்று சொல்லும் போது உங்களுக்கு மட்டும் எப்படி கொலை என்று செய்தி கிடைத்தது ...நீங்கள் தான் ஆளை வைத்து கொலை செய்து இருக்க வேண்டும்...இப்படி தேவையில்லாமல் வதந்தியை பரப்புவதே உங்கள் போன்றவர்களது வேலை ...அதை நம்பவும் யாழில் கொஞ்சப் பேர் இருக்கினம் .
அவர் விழும் போது அவரது ஹெல்மெட் தலையில் இருந்து விழுந்து விட்டது...அவர் சரியாய் ஹெல்மெட் மாட்டி இருக்கவில்லை ...விட்டால் அந்த நாயும் டக்ளஸ் விட்டு நாய் இனிய சொல்லுவீங்கள் போல இருக்குது .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MEERA said:

இப்பவும் நம்புகிறீர்களா?

இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த  தினேஸ் சப்டர் கதையே இன்னும் தீரவில்லை… 

உயிரோடு உள்ளவர்களுக்கே மரணசான்றிதழ் கொடுக்கும் அதிகாரிகள் 

தினேஷ் சாப்டர் கதை வேற ...உண்மையில் அவரது கொலைக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே ?...எத்தனையோ பெரிய பதவிகளில் இருந்த படித்தவர்கள் ,பெரிய பணக்கார வியாபாரரிகள் எல்லாம் வெளிநாடு போகும் போது அமைதியாய் இருந்த அரசு இவர்[தமிழர்] நாட்டை விட்டு போகும் தான் பொருளாதாரம் பாதிக்க போகுது என்று கொலை செய்ததா?...அவரது கொலைக்கு காரணம் குடும்பம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

கடைசியாக எப்போது இலங்கை சென்று வந்தீர்கள்? 

நாய் என்ன ஆடு மாடு எல்லாம் A9 வீதியிலேயே குடும்பம் நடத்துகின்றது. வீதியை பயன்படுத்துபவர்கள் தான் அவதானத்துடன் செல்லவேண்டும். 

2004´ம் ஆண்டு (ஜனவரி, செப்ரெம்பர்) இரண்டுதரம் ஸ்ரீலங்காவிற்கு போய் வந்தேன்.
அதன் பின் போக.. சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

முடியப்பு றெமீடியஸ் மரணத்தில் இணையத்தில் @Kapithanஐத் தவிர வேறு எவரும் அவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகப்பட்டு எழுதியுள்ளார்களா? நான் தேடிய வரையில் காணவில்லை.

1) சிறிலங்காவில் எல்லாம் ஒழுங்காக நடக்கும் என்று கூறவரவில்லை. ஆனால் விபத்துக்களையும் கொலை என்று எதுவித ஆதாரமும் இல்லாமல் எழுதுவது சதிக்கோட்பாட்டாளர்களின் வேலை என்றே பார்க்கின்றேன். நமது @Kapithan conspiracy theories களைப் பரப்புவதில் மகாராஜா!

2) எதுவித ஆதாரமும் இல்லாமல் எழுதுவது யாழ் கள விதிக்குள் வராது.  எனவே ஊகத்தில் எழுதாமால் உண்மையை எழுதுங்கள். யாழில் எழுதக் கடினமாக இருக்கு என்றால் அகல் நியூஸிலும் எழுதலாம்.

1) உங்கள் கடுப்புக்கான காரணம்  புரிகிறது கிருபன்.   முடிந்தால் எனது கூற்றுப் பிழை என நிரூபியுங்கள்.

இந்திய இராணுவ காலத்திலிருந்தே உங்களைப்போன்ற ஆட்களைக் கண்டிருக்கிறோம். உங்களை அறியாமலேயே நீங்கள் யார் என்பதை வெளிக்காட்டுகிறீர்கள். இது ஆரம்பத்திலிருந்தே உங்களின் மீது எனக்கு  இருந்த சந்தேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஊர்ஜிதப்படுத்துகிறது அதற்காக உங்களுக்கு நன்றிகள் பல 🤣

2) நீங்கள் யாழ் கள விதிக்குட்பட்டுத்தான் மதகின் மேல் குந்தியிருந்து விசிலடிக்கிறீர்களோ ? 🤨

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

அவரை நன்கு தெரிந்தவர்கள் ,அவரோடு வேலை செய்யும் சடடத்தரணிகள், அவரது குடும்பம், அவரது மச்சான் ஆர்னோட் முதற்  எல்லோரும் விபத்து தான் என்று சொல்லும் போது உங்களுக்கு மட்டும் எப்படி கொலை என்று செய்தி கிடைத்தது ...நீங்கள் தான் ஆளை வைத்து கொலை செய்து இருக்க வேண்டும்...இப்படி தேவையில்லாமல் வதந்தியை பரப்புவதே உங்கள் போன்றவர்களது வேலை ...அதை நம்பவும் யாழில் கொஞ்சப் பேர் இருக்கினம் .
அவர் விழும் போது அவரது ஹெல்மெட் தலையில் இருந்து விழுந்து விட்டது...அவர் சரியாய் ஹெல்மெட் மாட்டி இருக்கவில்லை ...விட்டால் அந்த நாயும் டக்ளஸ் விட்டு நாய் இனிய சொல்லுவீங்கள் போல இருக்குது .

நான்தான்  ஆதாரமில்லாமல் கதைக்கிறேன் என்கிறீர்கள். உங்கள் வாதத்திற்கு ஆதாரம் எங்கிருந்து வருகிறது? 

டக்ளஸோ அல்லது EPDP யினரே கொலை செய்தார்களென்று எங்குமே நான் கூறவில்லை. நீங்களாகக் கற்பனை செய்தால் அது உங்கள் தெரிவு. 

"எனது வார்த்தைகளுக்கு மட்டுமே நான் பொறுப்பு". (உபயம்; விசுகர் 😀)

16 hours ago, satan said:

அவரை அவரது பிரேசில் மனைவியும், அவரது துணையாளரும் கொன்றதாகவே செய்திகள் வருகின்றன.

அவை செய்திகள் மட்டுமே. அவை உண்மையான காரங்கள் அல்ல. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

1) உங்கள் கடுப்புக்கான காரணம்  புரிகிறது கிருபன்.   முடிந்தால் எனது கூற்றுப் பிழை என நிரூபியுங்கள்.

தான் சொல்வது மட்டும் உண்மை என்பவருடன் பேசப் புகுபவன் பெரு மூடன். முதலில் ஒரு கூற்றை வைப்பவர்தான் அது சரியென்று நிறுவும் கடப்பாடு உடையவர். ஆனால் அதை @Kapithan இடம் எதிர்பார்ப்பது வெறும் முட்டாள்தனம்.

1 hour ago, Kapithan said:

இந்திய இராணுவ காலத்திலிருந்தே உங்களைப்போன்ற ஆட்களைக் கண்டிருக்கிறோம். உங்களை அறியாமலேயே நீங்கள் யார் என்பதை வெளிக்காட்டுகிறீர்கள். இது ஆரம்பத்திலிருந்தே உங்களின் மீது எனக்கு  இருந்த சந்தேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஊர்ஜிதப்படுத்துகிறது அதற்காக உங்களுக்கு நன்றிகள் பல 🤣

நீங்கள் யாரென்பது யாழ் களத்தில் வெளிச்சுக் கனகாலம் @Kapithan.

நீலச்சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும்.. நரியின் வேசம் கலைஞ்சு போச்சு டும் டும் டும்..😂

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கிருபன் said:

தான் சொல்வது மட்டும் உண்மை என்பவருடன் பேசப் புகுபவன் பெரு மூடன். முதலில் ஒரு கூற்றை வைப்பவர்தான் அது சரியென்று நிறுவும் கடப்பாடு உடையவர். ஆனால் அதை @Kapithan இடம் எதிர்பார்ப்பது வெறும் முட்டாள்தனம்.

நீங்கள் யாரென்பது யாழ் களத்தில் வெளிச்சுக் கனகாலம் @Kapithan.

நீலச்சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும்.. நரியின் வேசம் கலைஞ்சு போச்சு டும் டும் டும்..😂

திரும்பவும்  ஒருமுறை மதில்மேல் குந்தியிருந்து ஒரு விசில் அடித்திருக்கிறீர்கள். அம்புட்டெதே. 😀

பிறர் கூறுவது எல்லாம் பொய் என நம்புபவன் யார் எனவும் தாங்கள் கூறலாமே? 

🤣

(பலர் தங்களின் உண்மையான அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்காடி வருகிறார்கள். அதில் காகிதப் புலி, செலண்ஸ்கி,உட்பட  தாங்களும் அடக்கம். என்னை அடையாளம் கண்டுகொண்டதாக தாங்கள் கூறியபடியால் இனி என்னைப்பற்றி நானே கூறுவதற்கு ஒன்றுமே இல்லையல்லவா ? 🤣 எனது அடையாளத்தைக் கண்டுபிடிப்பதற்கு தாங்கள் கடுமையாக முயற்சிப்பது புரிகிறது. முடிந்தால் கண்டுபிடித்து இங்கே பகிரங்கமாக வெளிக்காட்டுங்கள் 👍😉)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.