Jump to content

நாடு முழுவதும் இராணுவ விவசாய பண்ணைகளில் மரக்கறிகள் மற்றும் நெல் அறுவடை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாடு முழுவதும் இராணுவ விவசாய பண்ணைகளில் மரக்கறிகள் மற்றும் நெல் அறுவடை

அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் நாடு முழுவதும் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் உள்ள இராணுவப் விவசாய பண்ணைகளில் பெரும்போக நெல் அறுவடை மற்றும் பருவகால மரக்கறிகளை அறுவடைசெய்யும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கமைய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேயால் நிறுவப்பட்ட பசுமை விவசாய வழிநடத்தல் குழுவுடன் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் படையினர், பங்கொல்ல, தயாகம, ரிதியகம, மெனிக்பார்ம், வீரவில மற்றும் இரணைமடு ஆகிய இராணுவப் விவசாயப்பண்ணைகளில் கடந்த சில நாட்களாக நெல் மற்றும் மரக்கறிகளை அறுவடை செய்தனர்.
அதன்படி இராணுவப் பண்ணைகளில் இருந்து 120.3 மெற்றிக் தொன் நெல்லினை படையினர் அறுவடை செய்துள்ளனர்

2021 ஜனவரி 4 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக நிறுவப்பட்ட இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியானது தற்போது நாடு முழுவதிலும் உள்ள 19 இராணுவ விவசாயப்பண்ணைகளை நிர்வகித்து வருகின்றது.
இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் படைத்தளபதியும் இராணுவ நிதி முகாமைத்துவ பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர மற்றும் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் அரோஷ ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

20230210_agriphotos_01-300x193.jpg20230210_agriphotos_04-300x193.jpg20230210_agriphotos_05-300x193.jpg20230210_agriphotos_07-300x193.jpg

இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணி ஏற்கனவே உள்நாட்டு மற்றும் பொது நெல்வகைகள், கரட், பூசணி, கத்தரி, சோளம், முள்ளங்கி போன்றவற்றை பயிரிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தப் பயிர்கள் மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படவுள்ளது .

https://thinakkural.lk/article/239104

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்கு அவசியமற்ற வகையில் ஊதிப் பெருத்த இராணுவத்தை வைச்சிருந்தால்.. அதன் செலவை கட்டுப்படுத்த இப்படியாவது உழைப்பிக்கத்தான் வேணும்.

ஆனால்.. இந்த அறுவடைகள் சந்தைக்கு வரும் போது.. பெரும் விலை கொடுத்து எரிபொருள்.. உரம்.. உட்பட வாங்கி விவசாயம் செய்த ஏழை விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திக்கு இலாப மீட்டக் கூடிய விலை கிடைக்காமல் போகலாம். அவர்களை பட்டினி போட்டு இவர்களை வாழ வைக்க வேண்டிய தேவையில்.. சொறீலங்கா இராணுவப் பெருக்கம் உள்ளமை.. குறித்து மேன்மை தங்கிய ஐ எம் எவ் கவனம் செலுத்த வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nedukkalapoovan said:

எங்கடை இராணுவம் சண்டைக்கு அல்ல விவசாயம் செய்யுது என்று... 
சர்வதேச நாணய நிதியத்துக்கு காட்டத்தான் படங்களுடன் செய்தி பரப்பப் படுகிறது. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

எங்கடை இராணுவம் சண்டைக்கு அல்ல விவசாயம் செய்யுது என்று... 
சர்வதேச நாணய நிதியத்துக்கு காட்டத்தான் படங்களுடன் செய்தி பரப்பப் படுகிறது. 😂

ஏலுமெண்டால் உங்கடை ஆருயிர் சுமந்திரனை வந்து உப்புடி சொல்லச் சொல்லுங்கோ பாப்பம் :rolling_on_the_floor_laughing:

Bild

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி லிங்கம் போட்டுத்தாக்கி விட்டார்.

யாருக்கடா வேண்டும் உங்கள் 13, சர்வதேசமே குடியொப்பம் நடாத்து எண்டு சொல்கிறார்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

சிவாஜி லிங்கம் போட்டுத்தாக்கி விட்டார்.

யாருக்கடா வேண்டும் உங்கள் 13, சர்வதேசமே குடியொப்பம் நடாத்து எண்டு சொல்கிறார்.

வீடியோ இருந்தா போடுங்கோ….

பார்த்து சிரிப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐஎம்எஃப் ன்  முக்கிய நிபந்தனையே ராணுவ குறைப்பு இவர்கள் இராணுவ விவசாய  பண்ணைகளை  காட்டி ராணுவ குறைப்பு செய்யாமல் தப்பலாம் என்று சிங்களம் நினைக்குது அவை குறைக்காமல் இருப்பதும் ஒருவகையில் நல்லதே அதிகபடியான ராணுவ சிலவு சொறிலங்காவை மீள எழும்ப விடாது . 

17 minutes ago, Nathamuni said:

சிவாஜி லிங்கம் போட்டுத்தாக்கி விட்டார்.

யாருக்கடா வேண்டும் உங்கள் 13, சர்வதேசமே குடியொப்பம் நடாத்து எண்டு சொல்கிறார்.

அவர்  கேட்டவுடன் குடியொப்பம் நடாத்த பக்கத்தில் உள்ள சகுனி கிந்தியா விடுமா ? வட இந்தியர்களுக்கு தென்னிந்திய பூர்வீக குடிகளின் இரத்த உறவுகள் சுபீட்சம் அடைவதை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் என்பது கோமாளிலிங்கத்துக்கு தெரியாதா டெலோவில் இருந்து என்ன அரசியல் படித்தவராம் ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகளுக்கு எரிபொருள், உரம் இல்லை, இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? அது சரி இவர்களின் விவசாயப்பண்ணை நாட்டில எங்கையிருக்கு? வடபகுதி மக்கள் அகதிமுகாமில் குடிக்க கஞ்சிக்கு வழியில்லாமல் பெருமுச்சு விட, அவர்களின் நிலத்தில் இவர்கள் விவசாயம் செய்து காசு பாக்கினம். இதுகளையும் உலக நாணய நிதியத்துக்கு சொல்லுங்கோ. இது நாங்கள் இடம்பெயர்ந்தது முதல் நடக்குது. அப்போ அது ஆக்கிரமிப்பு, காட்ட முடியவில்லை, இப்போ பகிரங்கமாக சொல்கிறார்கள் காரணம்; அவர்கள் ஆயுதப்படையல்ல விவசாய அபிவிருத்திப்படை என்று பெயரை மாற்றி  காட்டுகினம். சர்வதேசம் பாராட்டுவதோடு இதையும் சேர்த்து பாராட்டும் ரணிலுக்கு மகுடம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

ஏலுமெண்டால் உங்கடை ஆருயிர் சுமந்திரனை வந்து உப்புடி சொல்லச் சொல்லுங்கோ பாப்பம் :rolling_on_the_floor_laughing:

Bild

சுமத்திரனால் எப்பவுமே மூடிய கதவுக்குலதான் அரசியல் செய்ய முடியும் 😃வெளியில வந்து வீர வேசமா அறிக்கை ஒன்று விடுவார் பாருங்க சிங்கம் தோத்து ஓடும் அவ்வளவுக்கு நடிப்பு . 

இந்தபடத்தில் குல்லாவை மாட்டி இன்னும் கேவலமாகி உள்ளார் .

பக்கதிலை ராகுல் சாணக்கியன் வேறு குல்லாவை  மாட்டி போட்டோ வேறு ........ராகுலின் அடியாலுகள் மலம் வீசமுன் எஸ்கேப் ஆகிவிடுவது நல்லது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கைப்பாத்தால் தங்கள்  அடையாளம், பிரச்சினை எல்லாத்தையும் மறந்து, மாற்றியடித்து வெகு விரவில் ஒன்றுமில்லாமல் தெருவில தலையை பிச்சுக்கொண்டு ஓடப்போகிறார்கள் போலுள்ளதே! 

"காகம் அன்னநடை நடக்க வெளிக்கிட்டு தன் நடையையும் இழந்ததாம்."

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.