Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பைத்தியம்

U mad bro

பாகம் I


நதியே…நதியே காதல் நதியே நீயும் பெண்தானே….

அடி நீயும் பெண்தானே ….

நிசப்தமான இரவை குலைத்தபடி சங்கர் மகாதேவன் போனில் பாடத்தொடங்கி இருந்தார்.

சை…இந்த அலாம் டோனை மாத்த வேணும்.

பழைய நொக்கியா மாரி இல்லை, இந்த போனில் புதிதா ஒரு டோன் போடுறதுகுள்ளா போதும் போதும் எண்டாயீடும்.

நினைத்து கொண்டே கட்டிலில் இருந்து பிரண்டு, போனின் அலார்மை அணைத்தான் அவன்.  அலாம் அடிக்கிறது என்றால் அது ஒரு கிழமை நாள், காலை ஆறரை மணியாக இருக்க வேண்டும்.

அவன்…….

அப்படி ஒன்றும் கதாநாயகன் களை எல்லாம் இல்லாவிடிலும் இந்த கதையின் நாயகர்களில் ஒருவன். ஒரு பெண்ணின் கணவன். ஒரு மகனின் தந்தை.

கட்டிலில் திரும்பி பிரண்டபோதுதான் அருகில் மனைவி இல்லை என்பது உறைத்தது. நேற்றே சொல்லி இருந்தாள் “நாளைக்கு காலமை அப்பாவுக்கு ஹொஸ்பிட்டல் அப்பொயிண்ட்மெண்ட், ஸ்கூல் ரன் உங்கள் பாடு”. 

கட்டிலால் எழுந்து பல்லை விளக்கி விட்டு வந்து மகனை எழுப்பி, மகனுடன் பள்ளிக்கு வெளிக்கிடசொல்லி தேவாரம் பாடி, இடையில் உணவும் தயார் செய்து, அதை உண்ணவும் வைத்து, வெளியே ரத்தம் உறையும் குளிரில் நிண்டபடி காரில் படிந்திருக்கும் பனியை சுரண்டி…….

நினைக்கவே அலுப்பாக இருந்தது அவனுக்கு. ஆனாலும் செய்யதான் வேண்டும்.

சோம்பலாய் எழுந்து போனை பார்த்தால் - இவன் மிஸ்டுகால் என காட்டியது.

இவன்……..

இந்த கதையின் இன்னுமொரு நாயகன். கொழும்பில் நல்ல வசதியாக வாழும் ஒருவன். மூன்று மாடியில் ஏழு அறை வீடு, டிரரைவர், சமமையல்காரன், தோட்டகாரன் என சகல செளபாக்கியமுமான வாழ்க்கை வாழ்பவன்.

சரி ஏதோ ஸ்கூல் விசயமாக்கும். பிறகு அடிப்பம். என நினைத்தபடி வேலையில் மூழ்கிப்போனான் அவன்.

காரில் இருந்து மகன் இறங்கி போகும் போது, urgent. Plz call…..plz அவனின் போனில் இவன் அனுப்பிய குறுஞ்செய்தி மின்னியது.

(தொடரும்)

(யாவும் கற்பனை அல்ல)

 ——————————————-  

 

  • Replies 77
  • Views 6.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • முன் குறிப்பு பாகம் IV ம் V ம் இக்கதையின் இரு வேறுபட்ட முடிவுகள் (கிளைமாக்ஸ்). ———————————————— பாகம் IV இன்று ஒரு மிக முக்கியமான நாள். அவனுக்கும் இவனுக்குமான அந்த சம்பாசணை நி

  • பாகம் II அவனுக்கும் இவனுக்குமான நட்பு அலாதியானது. வாழ்க்கைமுறை, சமயம், பிரதேசம், தெரிவுப்பாடங்கள் என பலதிலும் வேறுபட்டிருந்தாலும் தமிழும், கவிதையும், நாடகமும், புத்தகங்களும் அந்த இடைவெளியை இட்டு

  • பாகம் III அவனின் காருக்குள் மூச்சுக்காற்று புகாராகி, கண்ணாடியிலும் பதிந்து ஒரு திரைச்சீலை போல் ஆகி இருந்தது. அநேகமாக மூன்று அல்லது மூன்றரை மணி நேரம்  அவன் இப்படி காரில் இருந்தபடியே பேசி கொண்

  • கருத்துக்கள உறவுகள்

Okay..என்னவோ சொல்ல வாறீங்க..விளங்கின மாதிரியும் விளங்காத மாதிரியும் .. பார்ப்போம்..

Edited by பிரபா சிதம்பரநாதன்

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் குறுங்கதை என்பது ஒரு நெடுங் …….!

தொடருங்கள்….!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

….விளங்கின மாதிரியும் விளங்காத மாதிரியும் .. பார்ப்போம்..

சக்சஸ்! இந்த குழப்பத்தை எதிர்பார்த்தே எழுதுகிறேன்.

நன்றி பிரபா.

2 hours ago, புங்கையூரன் said:

தொடரும் குறுங்கதை என்பது ஒரு நெடுங் …….!

தொடருங்கள்….!

 

நன்றி அண்ணா.

ஓம்…என்ன பெயர் என்பதில் ஒரு குழப்பம்தான் எனக்கும்.

இது நிமிடக்கதை, சிறுகதை இல்லை.

நவீனம்/ நாவலும் இல்லை. 

நெடுங்கதை என்றால் நாவலின் இன்னொரு பெயர்?

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய் இருக்கு தொடருங்கள் கோஷன்-சே.........!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

நல்லாய் இருக்கு தொடருங்கள் கோஷன்-சே.........!   👍

நன்றி அண்ணா. வரவுக்கும் ஊக்கத்துக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது தம்பியின் சொந்த கதையோ?

ஸ்கூல் ரன் ஓடுவது நீங்க தான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

இது தம்பியின் சொந்த கதையோ?

ஸ்கூல் ரன் ஓடுவது நீங்க தான்.

சிங்கம் திண்ணையில் நின்று துள்ளும் போது ஸ்கூல் ரன் பற்றி அழுத்துக்கொண்டவர் நாயகன் இவரேதான் .😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

இது தம்பியின் சொந்த கதையோ?

ஸ்கூல் ரன் ஓடுவது நீங்க தான்.

யாவும் கற்பனை அல்ல என்றால், எதுவுமே கற்பனை அல்ல என்று அர்த்தம் எடுக்க கூடாது🤣

8 minutes ago, பெருமாள் said:

சிங்கம் திண்ணையில் நின்று துள்ளும் போது ஸ்கூல் ரன் பற்றி அழுத்துக்கொண்டவர் நாயகன் இவரேதான் .😀

 

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் ஆரம்பமும், நகர்வும்...  வாசிக்கும் ஆவலை தூண்டி உள்ளது. 👍
இங்கிலாந்திலும், இலங்கையிலும் நடக்கும் கதை என ஊகிக்கின்றேன். 😂
இடையில் வரும் மெல்லிய நகைச்சுவையும் அருமை. 🤣
தொடருங்கள் கோசான். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பெருமாள் said:

சிங்கம் திண்ணையில் நின்று துள்ளும் போது ஸ்கூல் ரன் பற்றி அழுத்துக்கொண்டவர் நாயகன் இவரேதான் .😀

சுயசரிதை என்றே தலைப்பை வைத்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

சுயசரிதை என்றே தலைப்பை வைத்திருக்கலாம்.

ஈழப்பிரியன்... நானும் அதைத்தான் நினைத்தேன். 😂
கதையில்ல் வரும் பாத்திரங்கள், கோசான் குடும்பத்தை சுற்றியே உள்ளது. 😁
கோசானின் மாமனாரும், இங்கிலாந்தில் வசிக்கிறார் என்று 
இந்தக் கதையின் மூலம் அறிந்து கொண்டோம். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்... நானும் அதைத்தான் நினைத்தேன். 😂
கதையில்ல் வரும் பாத்திரங்கள், கோசான் குடும்பத்தை சுற்றியே உள்ளது. 😁
கோசானின் மாமனாரும், இங்கிலாந்தில் வசிக்கிறார் என்று 
இந்தக் கதையின் மூலம் அறிந்து கொண்டோம். 🤣

ஆள் ரொம்பவும் உசார் பாட்டி.

இதோட கதையை மாத்துறாரோ தெரியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

கதையின் ஆரம்பமும், நகர்வும்...  வாசிக்கும் ஆவலை தூண்டி உள்ளது. 👍
இங்கிலாந்திலும், இலங்கையிலும் நடக்கும் கதை என ஊகிக்கின்றேன். 😂
இடையில் வரும் மெல்லிய நகைச்சுவையும் அருமை. 🤣
தொடருங்கள் கோசான். 🙂

நன்றி அண்ணா.

4 hours ago, ஈழப்பிரியன் said:

சுயசரிதை என்றே தலைப்பை வைத்திருக்கலாம்.

🤣 அடுத்த ஆக்கத்துக்கு ஐடியா தந்தமைக்கு நன்றி. தலைப்பு கூட தயார்…. 

ஒரு முறிந்த பேனா முனகுகிறது🤣

3 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்... நானும் அதைத்தான் நினைத்தேன். 😂
கதையில்ல் வரும் பாத்திரங்கள், கோசான் குடும்பத்தை சுற்றியே உள்ளது. 😁
கோசானின் மாமனாரும், இங்கிலாந்தில் வசிக்கிறார் என்று 
இந்தக் கதையின் மூலம் அறிந்து கொண்டோம். 🤣

மம்மி டாடி எல்லாம் லண்டனில்தானே லிவிங்ஸ்டன்🤣.

மை பிரதர் மார்க் வா ஆல்சோ.

1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆள் ரொம்பவும் உசார் பாட்டி.

இதோட கதையை மாத்துறாரோ தெரியாது.

இப்ப பாருங்கோ….. அடுத்த அத்தியாயத்தில் “அவன்” அசகாய சூரன் எண்டு பில்டப்ப கொடுத்து என் கெத்த காட்டுறன்🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் II

அவனுக்கும் இவனுக்குமான நட்பு அலாதியானது. வாழ்க்கைமுறை, சமயம், பிரதேசம், தெரிவுப்பாடங்கள் என பலதிலும் வேறுபட்டிருந்தாலும் தமிழும், கவிதையும், நாடகமும், புத்தகங்களும் அந்த இடைவெளியை இட்டு நிரப்பி, மேலதிகமாகவும் ஒரு பிணைப்பை ஏற்படுத்த போதுமாயிருந்தன.  

இருவரும் கிண்டல் அடிப்பதில் ஆளை ஆள் சளைத்தவர்கள் இல்லை என்பது மேலும் அவர்கள் நட்பை எப்போதும் கலகலப்பான உறவாக வைத்திருந்தது.

இவனின் மெசேஜை பார்த்ததில் இருந்து, அவனுக்கு கொஞ்சம் கலக்கலாமகவே இருந்தது.

அவர்களுக்கு இடையில் இப்படியான pranks செய்வதும் வழமைதான்.

அதுபோல் இதுவும் இவனின் குழப்படிகளில் ஒன்றாக இருக்கலாம்.

போன கிழமை கூட வாட்சப்பில் மாவீரர் நாளுக்கு இவன் எழுதியதை வாசித்து விட்டு, அவன் ஒரு தெரியாத நம்பரில் இருந்து கோல் எடுத்து சிங்களத்தில் “மாத்தையா டக்சி ஓடர் பண்ணீர்கள், வீட்டுக்கு வெள்ளை வான் ஒன்று அனுப்பவா” என கேட்டு கலாய்திருந்தான். இதுவும் அதுக்கான இவனின் பதிலடியாக இருக்கலாம்.

 ஆனால் அவனின் உள்ளுணர்வு இது ஏதோ வேறு பிசகு என கூறியது. 

பரவாயில்லை இன்றைக்கு வேர்க் புரொம் ஹோம்தான், நல்ல வேளையாக வேலை போனையும்   கையோடு எடுத்து வந்தது வசதியாக போய்விட்டது.      

வேர்க் புரொம் ஹோம் என்றாலே வேலையை தவிர மிச்சம் எல்லாம் செய்யும் நாள் என்பது எழுதப்படாத சட்டம் ஆகி விட்ட நாட்டில் அவன் மட்டும் என்ன விதி விலக்கா?

கார் கழுவுவது, உடுப்பு தோய்ப்பது, ஆருக்கும் சம்பளம் வாங்காமல் அட்வைஸ் கொடுப்பது, யாழிலும் வட்சாப்பிலும் உழட்டுவது, இடைக்கிடையே, முதலாளி பாவம் எண்டு கொஞ்சம் வேலையும் செய்வது. இதுதான் அவனின் இந்த வேர்க் புரொம் ஹோம் நாட்களின் ரூட்டின். 

ஆகவே அருகில் இருக்கும் டெஸ்கோவில் காரை விட்டு விட்டு என்ன எண்டு கேட்போம் என நினைத்தவாறே காரை டெஸ்கோ கார்பார்க்குக்குள்  விரட்டினான் அவன்.

என்ன மச்சான் ஓகேயா? அவனின் கேள்விக்கு பதில் வர தாமதித்தது….

மச்சான்…டேய்…என்னடா மெசேஜ் போட்டிருந்தாய்…என்ன ஏர்ஜெண்ட் மட்டர்?

தொண்டையை கனத்தபடி இவன் பேசத்தொடங்கினான்…..

ஐ’ ம் குட் படி. ஐ டு ஹாவ் எ குவஸ்யன் போர் யூ….

டேய் லூஸ் விளையாட்டு விளாடாத…வேலை கடுப்பில நிக்கிறன் பிறகு அடிக்கிறன்….

நோ..நோ…லிசின் மேட்… ஐயம் சீரியஸ் எபவுட் திஸ்…

அட்சரம் பிசகாத லண்டன் உழைக்கும் வர்க்க ஆங்கில உச்சரிப்பில்….

தன் பிரச்சனையை எடுத்து சொல்ல ஆரம்பித்து இருந்தான்….

வாழ்வில் என்றுமே இங்கிலாந்துக்கு வந்தே இராத, பிரித்தானியாவுடன்  எந்தவித பரிச்சயமும் இல்லாத இவன்.

(தொடரும்)

(யாவும் கற்பனை அல்ல)

 ——————————————-  

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் எழுதியபின் திண்ணையிலை அறிக்கை ஒன்று விடுங்கோ வந்து பார்ப்பம் அதுவரை இந்த திரி பக்கம் எட்டியும் பார்க்க மாட்டன் .😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

எல்லாம் எழுதியபின் திண்ணையிலை அறிக்கை ஒன்று விடுங்கோ வந்து பார்ப்பம் அதுவரை இந்த திரி பக்கம் எட்டியும் பார்க்க மாட்டன் .😃

ப்ரோ…நிண்டு வாசிச்சு கருத்து சொல்லுங்கோ ப்ரோ 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கால அங்கொட இஞ்சாலை பைத்தியம்.... :face_with_tears_of_joy:

தொடருங்கள் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கார் கழுவுவது, உடுப்பு தோய்ப்பது, ஆருக்கும் சம்பளம் வாங்காமல் அட்வைஸ் கொடுப்பது, யாழிலும் வட்சாப்பிலும் உழட்டுவது, இடைக்கிடையே, முதலாளி பாவம் எண்டு கொஞ்சம் வேலையும் செய்வது. இதுதான் அவனின் இந்த வேர்க் புரொம் ஹோம் நாட்களின் ரூட்டின். 

 

என்ன பாஸ் உங்க லிஸ்டில் சமையலைக் காணோம்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ப்ரோ…நிண்டு வாசிச்சு கருத்து சொல்லுங்கோ ப்ரோ

அதாவது பொறுமை கிடையாது  சாமியார் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அங்கால அங்கொட இஞ்சாலை பைத்தியம்.... :face_with_tears_of_joy:

தொடருங்கள் :cool:

🤣. வாசிச்சி முடிய நீங்கள் எங்கையோ🤣

2 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன பாஸ் உங்க லிஸ்டில் சமையலைக் காணோம்?

அது மட்டும் செய்யவே மாட்டமே. வேணும் எண்டால், ஏலாக்கட்டம் எண்டால் air fryer சுவிட்சை போட்டு விடலாம் 🤣.

1 hour ago, பெருமாள் said:

அதாவது பொறுமை கிடையாது  சாமியார் .

சரி பாஸ் “முடிஞ்சதும் அறிவிக்கிறன்”🤣 

54 minutes ago, நிழலி said:

தொடருங்கள் கோஷ்.

 

நன்றி நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, goshan_che said:

🤣. வாசிச்சி முடிய நீங்கள் எங்கையோ🤣

வேறை...எங்கை நேர மூளாய் தான்....:406:

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் கோசான். மிகுதியையும் வாசிக்கும் ஆவலுடன் உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

த்யவு செய்து தொடரும் என்பதைப் பொறித்த இடங்களில் போடாதீர்கள் எண்டு நான் சொன்னால் கேட்கவா போகின்றீர்கள்? தொடருங்கள்…!

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.