Jump to content

பைத்தியம் - U mad bro - குறுங்கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, suvy said:

நல்ல முடிவு அத்துடன் யதார்த்தமான முடிவும் அதுதான்.......!  👍

இது நடந்து இரு வருடங்களுக்கு முன் இருக்கும்.......பின்னடி காலத்தில் கொஞ்சம் ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறார் ஒருநாள் பிரச்சினை கூட யாரோ போன் செய்து போலீஸ் மற்றும் அவசர வண்டியும் வந்து கொண்டு போனது. பின்பு அவரை தனியான ஒரு ஆஸ்பத்திரியில் சில நாட்கள் வைத்திருந்து பின் விட்டு விட்டார்கள் .......பிறகு அவர் சரியான அமைதியாகி விட்டார்.....இப்ப நன்றாக இருக்கிறார்கள்........!

டயபிட்டீஸ் மெல்லெனக் கொல்லும் ஒரு வருத்தம்தான்......கொஞ்சம் கவனித்து உணவுகளை எடுத்து வந்தால் வருத்தம் இருந்த போதிலும் நலமாக வாழலாம்.......மனக்கட்டுப்பாடு மிக மிக அவசியம்.......!  😁

 

நன்றி அண்ணா.

நீங்கள் சொல்வது போல் கஞ்சல்கள் வயிற்றில் சேர்ந்தாலும், மனதில் சேர்ந்தாலும் ஆபத்துத்தான்.

முதலில் கஞ்சலை உள் எடுப்பதை குறைக்க வேண்டும் அல்லது ஆபத்து நெருங்கும் அறிகுறி தெரிந்ததும் ஆவது உதவியை எடுக்க வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பைத்தியம் U mad bro பாகம் I நதியே…நதியே காதல் நதியே நீயும் பெண்தானே…. அடி நீயும் பெண்தானே …. நிசப்தமான இரவை குலைத்தபடி சங்கர் மகாதேவன் போனில் பாடத்தொடங்கி இருந்தார். ச

goshan_che

முன் குறிப்பு பாகம் IV ம் V ம் இக்கதையின் இரு வேறுபட்ட முடிவுகள் (கிளைமாக்ஸ்). ———————————————— பாகம் IV இன்று ஒரு மிக முக்கியமான நாள். அவனுக்கும் இவனுக்குமான அந்த சம்பாசணை நி

goshan_che

பாகம் II அவனுக்கும் இவனுக்குமான நட்பு அலாதியானது. வாழ்க்கைமுறை, சமயம், பிரதேசம், தெரிவுப்பாடங்கள் என பலதிலும் வேறுபட்டிருந்தாலும் தமிழும், கவிதையும், நாடகமும், புத்தகங்களும் அந்த இடைவெளியை இட்டு

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

பாகம் IV ஐ தவிர்த்து பாகம் III இருந்து நேரடியாக பாகம் V ஐ வாசிக்கவும்.

பாகம் V

ஹைபோகிளைசீமியா ஒரு பொல்லாத விசயம். சாதாரணமாக இருப்பது போல் இருக்கும், ஆனால் உணவையும் மருந்தையும் கிரமமாக எடுக்காது போனால் குருதியில் குளுகோசின் அளவு திடீரென்று, ஹிடின்பேர்க்கின் அறிக்கைக்கு பின்னான அதானியின் நிகர மதிப்பு போல கிடுகிடு என இறங்க தொடங்கி விடும்.

உடல் வியர்க்கும், நடுங்கும், கடும் கோபம் வரும், ஏன் ஆக ரத்த குளுகோசின் அளவு குறைந்தால் கொலை வெறி கூட வரும். இன்னும் குறைந்தால் கோமாக்கு கொண்டுபோய் ஆளின் கதையையே முடித்து விடும்.

இதை எல்லாம் தவிர்க்கவேண்டும் என்றுதான் அவன் கோப்பி கடைக்குள் நுழைகிறான்.  ஆனால் அவனின் லக் அப்படி, கோப்பி கடையில் ஒரு கூட்டம் சனமாக இருந்தது. அந்த நெரிசலில் நிற்க தலையை சுத்தி கொண்டு வந்தது அவனுக்கு.

பிரித்தானியரில் என்ன கெட்ட பழக்கம் இருந்தாலும் வரிசையில் நிற்கும் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. ஆனால் இப்போ அந்த நல்ல பழக்கமே அவனுக்கு எமனாக வந்து விடும் போல் இருந்தது. ஒரு வழியாக வரிசையில் முன்னுக்கு நின்றவனிடம் தன் நிலையை சொல்லி, அனுமதி பெற்று இரெண்டு சீனி தூவிய டோநட்களையும் ஒரு கோக் கானையும் வாங்கி கொண்டு மேசையில் போய் அமர்ந்தான் அவன்.

கோக் குடியாதேங்கோ எண்டு சொல்லுறது இதுக்குத்தான். குளுகோஸ் தண்ணிக்கு அடுத்து ரத்தத்தில் சீனியின் அளவை உடனடியாக கூட்ட கோக்கை விட்டால் வேறு பானம் இல்லை.

….இதைதான் வருத்தம் ஏதும் இல்லாத பிள்ளையள் கூட வாங்கி குடிக்குதுகள். பின்ன ஏன் டயபிடிஸ் வராது…..

நினைத்தபடியே…கோக் கானை “டொப்” என மூடி உடைத்து பருக தொடங்கினான் அவன்.

கோப்பி கடையில் கல்லாவில் நின்றவனை நினைக்க நினைக்க அவனுக்கு கோவம் பற்றி கொண்டு வந்தது. என்ன அசிரத்தை இது? ஏதோ இலவசமாக தருவது போல் இருந்தது அவனின் பாவனையும் நடந்து கொண்ட முறையும். முந்தி எல்லாம் இந்த நாட்டில் இப்படி இல்லை. முன்பு யூகேயில் கஸ்டமர் சேர்விஸ் நன்றாக இருக்கும்.  இப்போ?…பச்….  

அவனை பார்த்தால் உக்ரேன் காரன் போல இருந்ததது. உக்ரேன்காரர் உக்கல் சனம், நிறவெறி பிடித்தவர் என யாழ்களத்தில் முருகர்சாமி அண்ணை எழுதியது ஏனோ அவனுக்கு நியாபகம் வந்தது.

கிட்டதட்ட ஒரு இருபது நிமிடம் ஆகி இருக்கும். கோக் கான் முக்கால்வாசி தீர்ந்து விட்டிருந்தது. ஆனாலும் ஓடர் பண்ணிய டோநட்டை இன்னும் காணவில்லை.

“ஹலோ ஆம் ஐ கெட்டிங் மை டோ நட் டுடே, ஓர் டுமோரோ”?

கொஞ்சம் சத்தமாகவே உக்ரேன்காரனை டோநட் இன்றா அல்லது நாளையா கிடைக்கும்? கேட்டான் அவன்.

ஆனால் அந்த உக்ரேனியனோ (முடிவே கட்டிவிட்டான்) கோப்பி மெசின் அருகில் எதையும் கேளாதவன் போல் நின்று எதையோ கழுவிக்கொண்டிருந்தான்.

திடீரென திரும்பி பார்த்தால் அந்த உக்ரேனியன் அவனை நோக்கி ஒரு பெரிய கத்தியோடு ஓடி வந்து கொண்டிருந்தான்…….. கண்களில் நிறவெறி ஜொலி ஜொலித்தது……..

”என்ர பிள்ளையாரே, முருகர்சாமி அண்ணை உவங்களை உக்கல் எண்டு சொன்னது சரிதான்”

என ஒரு கணம் அவன் திகைத்து நின்றாலும்…….

மறுகணமே அவனின் உடலில் அதிரீனலீனின் “தப்பியோடு அல்லது சண்டையிடு” பொறிமுறை வேலை செய்ய தொடங்கி இருந்தது.

 உக்ரேனியன் கொண்டு வரும் கத்தியோ பெரிது…வேறு வழியில்லை, ஒரு நல்ல கனமான மரக்கதிரையை தூக்கி கொண்டு அந்த உக்ரேனியனை நோக்கி பாய்ந்தான் அவன்.

——————————————

அப்போதுதான் டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ், அவனின் பிரான்சில் இருந்து வருவிக்கபட்டிருந்த தம்பிக்கும், டாக்டர் பிரணவணுக்கும்  சீசீடிவி படங்களை போட்டு காட்டி முடித்திருந்தார்.

தம்பிக்கு ஏதோ விளங்கியது போலவும் இருந்தது ஆனால் விளங்காதது போலவும் இருந்தது.

கேள்வி குறியோடு டாக்டரின் முகத்தை பார்த்தான் தம்பி.

மொழி பிரச்சனையை விளங்கி கொண்ட டாக்டர்,

”ஐ வில் எக்ஸ்பிளைன் டு ஹிம் இன் ஹிஸ் ஓன் லாங்குவேஜ்”……..

என பிலிப்சுக்கு சொல்லியபடி தம்பியிடம் தனது புலம்பெயர் கொச்சை தமிழில்  பேச தொடங்கினார்.

சீசீடிவி பார்தனிங்கள்தானே…சும்மா டோநட் எடுத்து கொண்டிருந்த அவர போட்டு நல்லா அடிச்சு வச்சிருக்கிறார். இதுக்கு ஒரு ரீசனும் இல்லை.

பொலிஸ் அன் புரொவோக்ட் அட்டாக் எண்டு சொல்லினம்…..

அதுக்கு முதல் மூண்டு அவர்ஸ் காரில இருந்து…போனில கதைச்சிருக்கிறார்….

ஆனால் போனை செக் பண்ணி பார்த்தா அந்த மூண்டு அவர்ஸ்சும் எந்த ஒரு கோலும் கூட வரலேல்ல உங்கட அண்ணாக்கு….

அதுமாரி….சில மாசமா…. ஒவ்வொரு நாள் காலமையிலும், பின்னேரமும் ஒப்பசிட்டா இருக்கிறா ஸ்கூல் வாசலில் வந்து நிண்டிருக்கிறார்….. 

ஆனா நாங்கள் செக் பண்ணி பார்த்தா உங்கட அண்ணாக்கு பிள்ளையோ, வைவ்வோ கூட இல்லை.

எல்லாம் சேர்த்து பார்த்தா எனக்கு இது ஒரு மனசு சரியில்லாத வருத்தம் எண்டுதான் விளங்குது….

இத நான், தொடர்ந்து வெளிநாட்டில தனியாவே இருந்ததால வந்த ஒரு மெண்டல் ஹெல்த் பிரச்சனை என சஸ்பெட்க் பண்ணுறன்….

அதால… உங்கட அண்ணையை செக்சன் பண்ணுற முடிவை எடுக்கப்போறம்….

செக்சன் எண்டால்…? புரியாதவனாக கேட்டான் தம்பி.

செக்சன் எண்டால்…. வந்த வருத்தம் மாறும் வரைக்கும் அவரை ஒரு சைகியாடிரிக் கொஸ்பிடலை தடுத்து வச்சிருப்பம். உங்களுக்கு விருப்பம் இல்லாட்டி நீங்கள் அப்பீல் பண்ணலாம். நாளைக்கு ஒரு இண்டர்பிரிட்டரை வச்சு எல்லாத்தையும் வடிவா சொல்லுறன்.

அவன் இப்போதைக்கு வெளியில் வர வாய்ப்பில்லை என்பதை முடிந்தளவு தன்மையாக சொன்னார் டாக்டர் பிரணவன்.

என்ன செய்தாலும்….. அண்ணையை பழையபடி மாத்தி தாங்கோ டொக்டர்….

எங்களை எல்லாம் வெளிநாட்டுக்கு எடுத்து ஆளாக்கினது அவர்தான்….

கண்ணீர் புரண்டோட…கை கூப்பினான் அவனின் தம்பி.

அப்ப கூட்டத்தை முடிக்கலாம்……

என்ற தோரணையில்……. கையை திருப்பி…..

மணிக்கூட்டை வெறித்துப்பார்த்தார் இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ்.

(யாவும் கற்பனை)

முற்றும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபா.

ஐந்தாம் பாகம் பற்றிய பார்வையையும் எழுதுங்கள்.🙏🏾

நன்றி சுவை அண்ணா. இப்ப எழுதியதை வாசிதால் சேது விக்ரம் நியாபகம் வருவாரோ?😀

இந்தப் பாகத்தில்… திடீரென்று இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ் வருவது ஏன் என்று புரியவில்லை.
அவரை யார் அழைத்தார்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இந்தப் பாகத்தில்… திடீரென்று இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ் வருவது ஏன் என்று புரியவில்லை.
அவரை யார் அழைத்தார்கள்.

இந்த கதையின் தலையங்கம் "பைத்தியம்" என்பதை கவனத்தில் எடுக்கவும்.:379:

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, குமாரசாமி said:

இந்த கதையின் தலையங்கம் "பைத்தியம்" என்பதை கவனத்தில் எடுக்கவும்.:379:

 

🤣 பாவம் எண்டு ஒரு கெளரவபாத்திரம் கொடுத்த என்னைதான் வையணும்🤣 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

🤣 பாவம் எண்டு ஒரு கெளரவபாத்திரம் கொடுத்த என்னைதான் வையணும்🤣 

 ஐயனே! ஒன்றும் அறியா பாலகனா நீவீர்......? :rolling_on_the_floor_laughing:

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

 ஐயனே! ஒன்றும் அறியா பாலகனா நீவீர்......? :rolling_on_the_floor_laughing:

ஒண்டும் தப்பா எழுதவில்லை தெய்வமே…கதைக்கு கொஞ்சம் ஜனரஞ்சகத்தை கூட்ட ஒரு சுவாரஸ்யமான மனிதர் தேவைப்பட்டார்…அவ்வளவே….🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/2/2023 at 18:56, தமிழ் சிறி said:

இந்தப் பாகத்தில்… திடீரென்று இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ் வருவது ஏன் என்று புரியவில்லை.
அவரை யார் அழைத்தார்கள்.

அவர் எங்குமே வருவார்....எவருமே கேள்விகள் கேட்க முடியாது...அது தான்  இந்த    உலகின்..விதிமுறைகள்   🤣😂

21 hours ago, குமாரசாமி said:

 ஐயனே! ஒன்றும் அறியா பாலகனா நீவீர்......? :rolling_on_the_floor_laughing:

இல்லையே...அவன்...அவர்  தான்....யாழ் களத்திலும் வருவார்    

22 hours ago, குமாரசாமி said:

இந்த கதையின் தலையங்கம் "பைத்தியம்" என்பதை கவனத்தில் எடுக்கவும்.:379:

 

ஆமாம் தலையங்கம்   கதைக்கு மட்டுமல்ல   வாசிப்போர்க்கும்.........சேர்ந்து    என்பதையும் கவனத்தில் கொள்ள   🤣🤣🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kandiah57 said:

அவர் எங்குமே வருவார்....எவருமே கேள்விகள் கேட்க முடியாது...அது தான்  இந்த    உலகின்..விதிமுறைகள்   🤣😂

இல்லையே...அவன்...அவர்  தான்....யாழ் களத்திலும் வருவார்    

ஆமாம் தலையங்கம்   கதைக்கு மட்டுமல்ல   வாசிப்போர்க்கும்.........சேர்ந்து    என்பதையும் கவனத்தில் கொள்ள   🤣🤣🤪

இண்டைக்கு என்ன வெறியே? என்ன பிராண்ட்? :rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

இண்டைக்கு என்ன வெறியே? என்ன பிராண்ட்? :rolling_on_the_floor_laughing:

மர்டின் பிரண்டி 🤣 நீங்கள்  எங்கே  வீட்டில் அல்லது கொட்டிலில்  இருகிறீர்கள  🤣😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kandiah57 said:

மர்டின் பிரண்டி 🤣 நீங்கள்  எங்கே  வீட்டில் அல்லது கொட்டிலில்  இருகிறீர்கள  🤣😂

கொட்டில்.....கொட்டிலிலை தான் இருந்து என்ஜாய் பண்ணுறன் :cool:

இப்ப இந்த பாட்டு போய்க்கொண்டிருக்கு.....நாடி நரம்பெல்லாம் முறுக தலையை ஆட்டி ஆட்டி கேட்டுக்கொண்டிருக்கிறன்:man_dancing::woman_dancing:

 

20 minutes ago, Kandiah57 said:

மர்டின் பிரண்டி 🤣

யூ மீன் ரெமி மார்டின் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

அவர் எங்குமே வருவார்....எவருமே கேள்விகள் கேட்க முடியாது...அது தான்  இந்த    உலகின்..விதிமுறைகள்   🤣😂

இல்லையே...அவன்...அவர்  தான்....யாழ் களத்திலும் வருவார்    

ஆமாம் தலையங்கம்   கதைக்கு மட்டுமல்ல   வாசிப்போர்க்கும்.........சேர்ந்து    என்பதையும் கவனத்தில் கொள்ள   🤣🤣🤪

சிறி அண்ணாக்கு வெள்ளி கிழமை எண்டால், கந்தையா அண்ணைக்கு சனி கிழமை 🤣.

12 minutes ago, குமாரசாமி said:

கொட்டில்.....கொட்டிலிலை தான் இருந்து என்ஜாய் பண்ணுறன் :cool:

இப்ப இந்த பாட்டு போய்க்கொண்டிருக்கு.....நாடி நரம்பெல்லாம் முறுக தலையை ஆட்டி ஆட்டி கேட்டுக்கொண்டிருக்கிறன்:man_dancing::woman_dancing:

 

யூ மீன் ரெமி மார்டின் 😎

கு.சா அண்ணை நாள் பார்க்கும் மூட நம்பிக்கைகள் இல்லாதவர்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

கொட்டில்.....கொட்டிலிலை தான் இருந்து என்ஜாய் பண்ணுறன் :cool:

இப்ப இந்த பாட்டு போய்க்கொண்டிருக்கு.....நாடி நரம்பெல்லாம் முறுக தலையை ஆட்டி ஆட்டி கேட்டுக்கொண்டிருக்கிறன்:man_dancing::woman_dancing:

 

யூ மீன் ரெமி மார்டின் 😎

ஆமாம்.. எதை  குடித்தாலும்.  அப்படி தான் தெரியுது    😂

8 minutes ago, goshan_che said:

சிறி அண்ணாக்கு வெள்ளி கிழமை எண்டால், கந்தையா அண்ணைக்கு சனி கிழமை 🤣.

அப்போ ஞாயிற்றுக்கிழமை யாருக்கு....முத்தார்சாமிக்கா.  ?. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kandiah57 said:

முத்தார்சாமிக்கா

ஓ….அவருக்கு இப்படி ஒரு காரணப்பெயரும் இருக்கா🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

சிறி அண்ணாக்கு வெள்ளி கிழமை எண்டால், கந்தையா அண்ணைக்கு சனி கிழமை 🤣.

கு.சா அண்ணை நாள் பார்க்கும் மூட நம்பிக்கைகள் இல்லாதவர்🤣

வட் யூ மீன்? :beaming_face_with_smiling_eyes:

நான் அமாவாசையில தான் நல்லகாரியமே தொடங்குவன் :face_with_tears_of_joy:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2023 at 01:28, goshan_che said:

ஐந்தாம் பாகம் பற்றிய பார்வையையும் எழுதுங்கள்

நகைச்சுவையாக போன ஒன்று கடைசியில் இந்த மாதிரி ஆழமான செய்தியுடன் முடியும் என எதிர்பார்த்திருக்கவில்லை.. 

வலிகள் வரும் பொழுதுதான் வாழ்க்கையை புரிந்து கொள்ள முடிகிறது. இரு முடிவுகளுமே கவலையைத் தந்தாலும், இந்தக் கவலையின் ஊடாக இவர்களைப் போன்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள உதவுகிறது.. எங்களையும் பரந்துபட்டளவில் சிந்திக்க உதவுகிறது. 

என்னைப் பொறுத்த வரை யாவும் கற்பனை என கூற முடியாது உள்ளது ஏனெனில்  இப்படியானவர்களை எங்கோ ஓரிடத்தில் சந்தித்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம் என்றே நினைக்கிறேன். 

பாராட்டுகள் கோஷான்!

ஆனாலும் முருகர்சாமியை வம்பிற்கு இழுக்காவிட்டால் கோஷானிற்கு அந்த நாள் நல்லதாக முடியாது என நினைக்கிறேன்!!!

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப் பிழை
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நகைச்சுவையாக போன ஒன்று கடைசியில் இந்த மாதிரி ஆழமான செய்தியுடன் முடியும் என எதிர்பார்த்திருக்கவில்லை.. 

வலிகள் வரும் பொழுதுதான் வாழ்க்கையை புரிந்து கொள்ள முடிகிறது. இரு முடிவுகளுமே கவலையைத் தந்தாலும், இந்தக் கவலையின் ஊடாக இவர்களைப் போன்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள உதவுகிறது.. எங்களையும் பரந்துபட்டளவில் சிந்திக்க உதவுகிறது. 

என்னைப் பொறுத்த வரை யாவும் கற்பனை என கூற முடியாது உள்ளது ஏனெனில்  இப்படியானவர்களை எங்கோ ஓரிடத்தில் சந்தித்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம் என்றே நினைக்கிறேன். 

பாராட்டுகள் கோஷான்!

ஆனாலும் முருகர்சாமியை வம்பிற்கு இழுக்காவிட்டால் கோஷானிற்கு அந்த நாள் நல்லதாக முடியாது என நினைக்கிறேன்!!!

நன்றி பிரபா.

உண்மையில் முதலில் அந்த முருகர்சாமி அண்ணை reference இல்லாமல்தான் எழுதினேன். ஆனால் வாசித்துப்பார்த்தால் ஒரே அழுகாச்சி காவியமாக இருந்தது.

ஒரு இழையோடும் நகைச்சுவையும் வேண்டும், வாசகரை ஒரு கணம் திசை திருப்பி விட்டு மீண்டும் கதைக்கு இழுத்து வரவும் வேண்டும். 

என்ன செய்யலாம் என நினைத்த போது இந்த தேவையை பூர்த்தி செய்ய வாசகருக்கு பரிச்சயமான ஒரு நபரை உள்வாங்கலாம் என முடிவு செய்தேன்.

அப்படி உள்ளே வந்தவர்தான் முருகர்சாமி அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தலைப்பில் நானும் ஒன்று எழுதுகிறேன் என்ற போதே தம்பி பெரிசாக தருவான் என்று தெரியும் ஆனால் இது வேற..... 

எதிர் பாராத முடிவுகள்

வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் படைப்புகள். 

(தொடர்கள் என்று வரும்போது முடிந்த பிறகு ஒன்றாக வாசிக்கவே இவ் இயந்திர வாழ்வில் நேரம் கிடைக்கிறது. மன்னித்தருள்க)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, விசுகு said:

உங்கள் தலைப்பில் நானும் ஒன்று எழுதுகிறேன் என்ற போதே தம்பி பெரிசாக தருவான் என்று தெரியும் ஆனால் இது வேற..... 

எதிர் பாராத முடிவுகள்

வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் படைப்புகள். 

(தொடர்கள் என்று வரும்போது முடிந்த பிறகு ஒன்றாக வாசிக்கவே இவ் இயந்திர வாழ்வில் நேரம் கிடைக்கிறது. மன்னித்தருள்க)

நன்றி அண்ணா.

நானும் தொடர்களை இப்படித்தான் வாசிக்கிறேன். ஏனைய திரிகளில் என் பதில்கள் சுணங்கி வருவதை கண்டிருப்பீர்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்து முடித்து விட்டேன்.உங்களுக்கு நல்ல எழுத்தாற்றலும் ,அதை விட நல்ல கற்பனையாற்றலும் இருக்கிறது ...தொடர்ந்தும் எழுதுங்கோ 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/2/2023 at 09:28, goshan_che said:

அவனை பார்த்தால் உக்ரேன் காரன் போல இருந்ததது. உக்ரேன்காரர் உக்கல் சனம், நிறவெறி பிடித்தவர் என யாழ்களத்தில் முருகர்சாமி அண்ணை எழுதியது ஏனோ அவனுக்கு நியாபகம் வந்தது.

முருகர்சாமியை மறக்க முடியலையோ?

முடிவு நினைத்த மாதிரி அமையவில்லை என ஒரு ஆதங்கம்.

பாராட்டுக்கள் கோசான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

வாசித்து முடித்து விட்டேன்.உங்களுக்கு நல்ல எழுத்தாற்றலும் ,அதை விட நல்ல கற்பனையாற்றலும் இருக்கிறது ...தொடர்ந்தும் எழுதுங்கோ 
 

நன்றி அக்கா. வருகைக்கும், வாசித்தமைக்கும், பாராட்டுக்கும்🙏🏾.

2 hours ago, ஈழப்பிரியன் said:

முருகர்சாமியை மறக்க முடியலையோ?

முடிவு நினைத்த மாதிரி அமையவில்லை என ஒரு ஆதங்கம்.

பாராட்டுக்கள் கோசான்.

மறக்கத்தகுமோ…முப்பாட்டன் எல்லோ…🙏🏾.

உங்கள் எண்ணைப்படி முடிவை அமைக்காமைக்கு மன்னிக்கவும்.

நன்றி அண்ணா.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 13/2/2023 at 19:56, goshan_che said:

வேர்க் புரொம் ஹோம் என்றாலே வேலையை தவிர மிச்சம் எல்லாம் செய்யும் நாள் என்பது எழுதப்படாத சட்டம் ஆகி விட்ட நாட்டில் அவன் மட்டும் என்ன விதி விலக்கா?

கார் கழுவுவது, உடுப்பு தோய்ப்பது, ஆருக்கும் சம்பளம் வாங்காமல் அட்வைஸ் கொடுப்பது, யாழிலும் வட்சாப்பிலும் உழட்டுவது, இடைக்கிடையே, முதலாளி பாவம் எண்டு கொஞ்சம் வேலையும் செய்வது. இதுதான் அவனின் இந்த வேர்க் புரொம் ஹோம் நாட்களின் ரூட்டின். 

 

நாங்களும் வேர்க் புரொம் ஹோம். ஆனால் இந்த ரூட்டின் எல்லாம் கிடையாது. கடுமையான உழைப்பில் சுகம் கண்டவர்கள்! கிடைக்கும் சம்பளத்திற்கு வேலை செய்யவேண்டும் என்ற குற்றவுணர்வு உள்ளவர்கள்!

ஆனால் கொஞ்சமாக வேலை செய்வதால் அலுவலகத்திற்கு வாங்கோ என்று உருட்டத் தொடங்கிவிட்டார்கள்.

கதை இன்னமும் வாசித்து முடிக்கவில்லை.. வாசிக்க தூண்டும் எழுத்து👏👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை பாகம் IV இல்லாமல் பாகம் V ஆகவே முடித்திருக்கலாம். இதுதான் கதையாகப் பிரகாசிக்கின்றது🤩 நல்ல வாசிப்பனுவத்தைத் தருகின்றது😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நாங்களும் வேர்க் புரொம் ஹோம். ஆனால் இந்த ரூட்டின் எல்லாம் கிடையாது. கடுமையான உழைப்பில் சுகம் கண்டவர்கள்! கிடைக்கும் சம்பளத்திற்கு வேலை செய்யவேண்டும் என்ற குற்றவுணர்வு உள்ளவர்கள்!

ஆனால் கொஞ்சமாக வேலை செய்வதால் அலுவலகத்திற்கு வாங்கோ என்று உருட்டத் தொடங்கிவிட்டார்கள்.

கதை இன்னமும் வாசித்து முடிக்கவில்லை.. வாசிக்க தூண்டும் எழுத்து👏👏

யாழில் ஒரு உள்ளூர் கபடி போட்டி விடாமல் -போட்டி வைக்கும் போதே நீங்கள் கடும் உழைப்பாளி என்பதை தெரிந்து கொண்டேன் ஜி🤣.

57 minutes ago, கிருபன் said:

கதையை பாகம் IV இல்லாமல் பாகம் V ஆகவே முடித்திருக்கலாம். இதுதான் கதையாகப் பிரகாசிக்கின்றது🤩 நல்ல வாசிப்பனுவத்தைத் தருகின்றது😀

 

நன்றி. வாசிப்பில் கரை கண்ட உங்களையே திருப்திபடுத்திய எழுத்து என்பது பெருமையாக உள்ளது🙏🏾.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கோசான் உங்கள் படைப்பாற்றல் மிகவும் அபாரமாக இருக்கிறது. நம்மைச் சுற்றி நிகழும் சாதாரண விடயங்களுக்குள் அசாதாரணத்தை ஊகிப்பது கடினம். கோசான் உங்கள் கருத்தாடல்களை நாளாந்தம் வாசிக்கத் தவறுவதில்லை. கருத்தாடல்களே அதிகமாக உங்களை மிகவும் புடம்போட்டிருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது. எழுத்தின் லாவகம் செம்மையாக இருதரப்பு வாதங்களையும் சமாந்தரமாக பயணிக்க வைத்திருக்கிறது. கதாப்பாத்திரங்களின் ஆளுமைதான் கதைகளை வெற்றிகரமாகக் காவிச்செல்லும். அபாரமான எழுத்தாளர். வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) மூன்று வருட காலத்திற்கு நாணய மாற்று கருமப்பீடங்களை இயக்குவதற்கான ஏலத்தில் ஐந்து நிறுவனங்கள் வென்றுள்ளன. அவற்றின் மொத்த ஏல மதிப்பு 2.3 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமாகும். இதன்படி,  இலங்கை வங்கி 798.028 மில்லியன் ரூபாய்களுடனும், சம்பத் வங்கி 633.662 மில்லியன்களுடனும், கொமர்சல் வங்கி 381.364 மில்லியன்களுடனும், தோமஸ் குக் லங்கா (பிரைவேட்) லிமிடெட் 299.064 மில்லியன்களுடனும், ஹட்டன் நெசனல் வங்கி 225.689 மில்லியன் ரூபாய்களுடனும் ஏலத்தில் வென்று, நாணய மாற்று கருமப்பீடங்களை தக்கவைத்துள்ளன. தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு  துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் முன்வைத்த பிரேரணைக்கு அமைவாக நேற்று அமைச்சரவை இந்த ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் நிலையான கொள்முதல் குழு ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏல ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தன. https://tamilwin.com/article/five-entities-win-bia-currency-exchange-counter-1730964676#google_vignette
    • தென்னிந்திய மொழிகள் எல்லாம் தமிழில் இருந்து காலவொட்டதில் பிரிந்தன என்றால் எல்லோரும் ஒரே மரபு இன மக்கள்  தானே. இதிலென்ன தமிழ் பெரிய மேளம், தெலுங்கு சின்ன மேளம் என பிரிப்பு என்பது புரியவில்லை. எமக்கு தொடர்பில்லாத பக்கத்து நாட்டில் சாதிப்பிரிவினைகளை ஊக்குவிக்கும் கதையாடல்களை மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வமாக உள்ள நாம் எமது நாட்டில் இன ஒடுக்குமுறை என்று ஒலமிடுவது முரண்பாடாக தெரியவில்லையா? 
    • அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் தோல்விக்கான 5 முக்கிய காரணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்பிடம் தோற்கும் ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது பெண் வேட்பாளர் கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸை தோற்கடித்து, அமெரிக்க அதிபராக மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் நுழைகிறார் டொனால்ட் டிரம்ப். டிரம்புக்கும் ஹாரிஸுக்கும் இடையிலான போட்டி, பலர் எதிர்ப்பார்த்தது போல மிக நெருக்கமானதாக இல்லை. 2020-ஆம் ஆண்டு போல் அல்லாமல், ஆரம்பம் முதலே டிரம்ப் முன்னிலை வகித்து வந்தார். வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் பெரும்பாலான அமெரிக்கர்கள் டிரம்புக்கு தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் கடந்த ஜுலை மாதம் விலகிய பிறகு, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் கமலா ஹாரிஸ். 2016-ஆம் ஆண்டு டிரம்ப் அதிபரான போது ஹிலாரி கிளிண்டன் அவரிடம் தோல்வியை தழுவினார். அதன் பிறகு டிரம்புக்கு எதிராக போட்டியிட்டு தோற்ற பெண் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆவார், அவர் தோற்றதற்கு முக்கியமான ஐந்து காரணங்கள் என்னென்ன?   பொருளாதாரம் வேலையின்மை குறைவாகவும், பங்குச் சந்தை வலுவாகவும் இருந்த போதிலும் கூட அமெரிக்கர்கள் பலர் பணவீக்கத்தின் விளைவுகளை சந்தித்து வருவதாக கூறுகின்றனர். நாட்டின் பொருளாதாரம் அவர்களுக்கு ஒரு பெரும் கவலையாக உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பணவீக்கம் கடுமையாக உயர்ந்தது. 1970-களில் இருந்ததை விட பணவீக்கம் அதிகரித்தது. இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்ப டிரம்புக்கு ஒரு வாய்ப்பாக இது அமைந்தது. “நீங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது செழிப்பாக இருக்கிறீர்களா?” என்ற கேள்வியை அவர் மக்களிடம் முன் வைத்தார். 2024-ஆம் ஆண்டில் உலகின் பல்வேறு பகுதிகளில், ஆட்சியில் இருக்கும் கட்சியை மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நிலவும் பணவீக்கம் இதற்கு ஒரு காரணமாகும். அமெரிக்க வாக்காளர்களும் மாற்றத்துக்காக காத்திருந்துள்ளனர். நான்கில் ஒரு அமெரிக்கர் மட்டுமே நாட்டின் போக்கு குறித்து திருப்தியாக இருக்கின்றனர். மூன்றில் இரண்டு பேர் நாட்டின் பொருளாதாரம் குறித்து பெரிய நம்பிக்கைக் கொள்ளவில்லை. “பண வீக்க உயர்வுக்கு பைடனின், பெரிய செலவுகளை உள்ளடக்கிய திட்டங்களும் காரணமாகும். இது மக்களுக்கு கவலை அளிக்கக் கூடியதாகவே இருந்தது. பைடனின் திட்டங்கள் குறித்து மக்களிடம் எதிர்மறையான எண்ணங்கள் உருவாகின. இதனால் கமலா ஹாரிஸுக்கு தேர்தல் வெற்றி சவாலானது” என்று வெளியுறவுக் கொள்கைகள் குறித்து எழுதி வரும் மைக்கேல் ஹிர்ஷ் கூறினார். சி.என்.என் ஊடகத்தின் தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்புகளின் படி, பொருளாதாரத்தை கையாள்வதில் ஹாரிஸை விட டிரம்புக்கே தங்கள் ஆதரவு என 50%க்கும் மேலானவர்கள் தெரிவித்துள்ளனர். பொருளாதாரம் தங்களின் பிரதான பிரச்னை என்று 31% வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். பைடனின் செல்வாக்கின்மை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பைடனின் பொருளாதாரக் கொள்கைகள் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்ததாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன மாற்றத்துக்கான வேட்பாளர் என்று கமலா ஹாரிஸ் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும், ஜோ பைடன் ஆட்சியின் துணை அதிபராக இருந்து கொண்டு, தனது தலைமையிடமிருந்து தன்னை தனித்துக் காட்டுவதில் அவர் சிரமப்பட்டார். பணவீக்கத்தை கையாள்வதிலும், அமெரிக்கா - மெக்சிகோ எல்லை பிரச்னையை கையாள்வதிலும் அமெரிக்கர்களுக்கு பைடன் மீது அதிருப்தி இருந்த போதிலும், கமலா ஹாரிஸ் பைடனுக்கு விசுவாசமாக இருந்துள்ளார். இதற்கு முக்கியமான எடுத்துக்காட்டாக, ஏபிசி ஊடகத்தின் தி வியூ என்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் பங்கேற்ற போது நிகழ்ந்ததை அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தனது பின்புலத்தைப் பற்றி தெரியாத அமெரிக்கர்களுக்கு கமலா ஹாரிஸ் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக பலர் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தனர். ஆனால், பைடனை விட தான் எவ்வாறு மாறுபட்டவராக இருப்பார் என்று கேட்டதற்கு விளக்கமளிக்க கமலா தடுமாறினார். “எனக்கு எதுவும் தோன்றவில்லை” என்று அவர் பதிலளித்தார். இது டிரம்பின் பிரசார விளம்பரத்தில் பின்பு பயன்படுத்தப்பட்டது. இந்த உரையாடல் கமலாவுக்கு ‘நாசகரமானதாக’ அமைந்தது என்று பராக் ஒபாமாவின் முன்னாள் ஆலோசகர் டேவிட் எக்செல்ராட் தெரிவித்தார். ஜனநாயகக் கட்சியில் ஒரு “பிம்பச் சிக்கல்” நிலவுவதாக அந்தக் கட்சியுடன் தொடர்புடையவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடைய வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஒருவர், முதலில் கட்சியில் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள மேல்தட்டு ஆட்களை வெளியே அனுப்ப வேண்டும் என்று பிபிசியின் லோன் வெல்ஸிடம் கூறினார். வேறு சிலர், கட்சியின் பிரசாரத்துக்கான முயற்சிகளை பாராட்டினர். விலைவாசி உயர்வு போன்ற விவகாரங்கள் வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, கட்சியின்‘பிம்பச் சிக்கலுக்கு’ காரணம் என்று கருதினர். குடியரசு கட்சி ஆதரவாளருடன் டிரம்பின் பிரசாரக் கூட்டத்தின் போது நடந்த உரையாடல் தனக்கு நினைவுக்கு வருவதாக வெல்ஸ் கூறுகிறார். “குடியரசுக் கட்சியை டிரம்ப் முற்றிலும் ‘மறு உருவாக்கம்’ செய்துள்ளார் என்று அந்த ஆதரவாளர் கூறினார். மேல் தட்டு மக்களின் கட்சி என்ற பிம்பத்திலிருந்து விலகி, உழைக்கும் வர்க்கத்தினரை டிரம்ப் அணுகினார். அதே நேரம் ஜனநாயகக் கட்சியினர் ஹாலிவுட்டின் கட்சியாக மாறிவிட்டதாக அவர் கூறினார்” என்று வெல்ஸ் தெரிவித்தார்.   சமூக பிரச்னைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருத்தடை விவகாரத்தை கமலா ஹாரிஸ் கையில் எடுத்த வேளையில் குடியேற்ற விவகாரத்தை டிரம்ப் பேசினார் பொருளாதாரத்தை தவிர, தேர்தலை தீர்மானிக்கக் கூடியவை உணர்ச்சி மிகுந்த விவகாரங்கள் ஆகும். கருத்தடை விவகாரத்தை ஜனநாயகக் கட்சியினர் கையில் எடுத்த போது, குடியேற்ற விவகாரம் குறித்து டிரம்ப் பேசினார். பைடனின் ஆட்சியில் நடைபெற்ற வரலாறு காணாத எல்லை மோதல்களும், குடியேற்றம் காரணமாக எல்லைக்கு அருகில் இல்லாத மாகாணங்களிலும் ஏற்பட்ட தாக்கங்களும், இந்த விவகாரத்தில் பைடனை விட டிரம்ப் மீது மக்கள் அதிக நம்பிக்கைக் கொள்ள காரணமாக இருந்தன என்று ப்யூ ஆய்வு மையம் நடத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. எடிசன் ஆய்வு கருத்துக்கணிப்புகளின் படி, கருத்தடை உரிமைகளை மீட்டெடுப்பது குறித்த கமலா ஹாரிஸின் தீவிர பிரசாரம், பெண் வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு 54% ஆதரவை பெற்றுத் தந்தது. டிரம்புக்கு 44% ஆதரவு மட்டுமே இருந்தது. எனினும், 2020-ஆம் ஆண்டில் தனது போட்டியாளருக்கு 42% பெண் வாக்காளர்களின் ஆதரவு இருந்த போது, பைடனுக்கு 57% பெண்களின் ஆதரவு இருந்தது. தனது போட்டியாளரை விட கமலா பெற்றிருந்த முன்னிலை, பைடன் பெற்றிருந்ததை விட குறைவாகும். டிரம்பின் ஆதரவாளர்களில் 54% ஆண்கள், 44% பெண்கள் ஆவர். இறுதியில், 2022-ஆம் ஆண்டு கருத்தடை விவகாரத்துக்கு இருந்த தாக்கம் இந்த முறை இல்லை. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் ஹூவர் நிறுவனத்தில் உள்ள பிரிட்டன் அமெரிக்க வரலாற்று ஆய்வாளர் நியால் ஃபெர்குசன், “அமெரிக்க வாக்காளர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி கடந்த நான்கு ஆண்டுகளின் கொள்கைகளை மறுத்துள்ளனர்” என்கிறார். பண வீக்கத்தை உண்டாக்கிய பொருளாதாரக் கொள்கைகள், மத்திய கிழக்கில் போருக்கு இட்டுச் சென்ற வெளியுறவுக் கொள்கை, சமூக கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர் என்று அவர் கூறுகிறார். “ஜனநாயக கட்சி தனது பல முற்போக்கான முன்னெடுப்புகளில், வெள்ளை அமெரிக்கர்கள் மட்டுமல்ல, அமெரிக்க உழைக்கும் வர்க்கத்தை மட்டுமல்ல, லத்தீன் அமெரிக்கர்களையும், ஹிஸ்பானிக் மக்களையும் அந்நியப்படுத்தியது. நாடு முழுவதிலும் மக்களை அந்நியப்படுத்தியது” என்று அவர் பிபிசி ரேடியோ-4 நிகழ்ச்சியில் பேசிய போது தெரிவித்தார். ஜனநாயகக் கட்சிக்கு தெளிவான செய்தி கிடைத்துள்ளது. அமெரிக்க மக்களுக்கு இந்த கொள்கைகள் தேவை இல்லை. அவர்களுக்கு வலிமையின் மூலம் அமைதி வேண்டும். பணவீக்கம் இல்லாத செழிப்பு வேண்டும்.   கருப்பின மற்றும் லத்தீன் வாக்காளர்களிடையே குறைந்த செல்வாக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லத்தீன் அமெரிக்கர்கள், குறிப்பாக ஆண்களிடம் டிரம்ப் அதிக வாக்குகளைப் பெற்றார். பென்சில்வேனியா மாகாணத்தையும் அதன் 19 தேர்வாளர் குழு வாக்குகளையும் டிரம்ப் கைப்பற்றிய போது, அவர் வெள்ளை மாளிகைக்குள் மீண்டும் நுழையப் போகிறார் என்பது உறுதியானது. 1988-ஆம் ஆண்டு முதல் அந்த மாகாணத்தை ஜனநாயகக் கட்சி ஒரே ஒரு முறை மட்டுமே, 2016-ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டனை டிரம்ப் தோற்கடித்த போது மட்டுமே இழந்துள்ளது. அரிசோனா, நெவேடா, ஜார்ஜியா, வட காரோலினா போன்ற முக்கியமான மாகாணங்களில் ஹாரிஸ் தனது பிரசாரத்தின் போது அதீத கவனம் செலுத்தியிருந்தார். டிரம்ப் ஆட்சியின் போது ஏற்பட்ட பிரிவினைகளால் வெறுப்படைந்த, அங்குள்ள ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களையும் தன் பக்கம் ஈர்க்க இந்த முயற்சிகளை ஹாரிஸ் மேற்கொண்டார். ஆனால் அது பலனளிக்கவில்லை. கருப்பினத்தவர், லத்தீன் அமெரிக்கர்கள், இளம் வாக்காளர்களிடம் ஜனநாயகக் கட்சிக்கு வழக்கமாக கிடைக்கும் ஆதரவு இந்த முறை சிதறியது. கல்லூரி படிப்பை முடிந்த நகரவாசிகளிடம் கமலா தனது ஆதரவை தக்க வைத்துக் கொண்டாலும், ஜனநாயகக் கட்சியின் கோட்டைக்குள் டிரம்புக்கு கிடைத்த ஆதரவை தோற்கடிக்க அது போதவில்லை. எடிசன் ஆய்வு மையத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி, கமலா ஹாரிஸ் கருப்பின மக்களின் 86% வாக்குகளையும் லத்தீன் அமெரிக்கர்களின் 53% வாக்குகளையும் பெறுவார் என்று கூறியது. எனினும் 2020-ஈல் பைடன் இதை விட அதிக முன்னிலை வகித்திருந்தார். அவர் கருப்பின மக்களின் 87% வாக்குகளையும் லத்தீன் அமெரிக்கர்களின் 65% வாக்குகளையும் பெற்றிருந்தார். லத்தீன் ஆண் வாக்காளர்களிடம் டிரம்ப் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். அவர்களிடம் கமலாவுக்கு 44% வாக்குகளும் டிரம்புக்கு 54% வாக்குகளும் இருந்தன. இதே பிரிவு மக்களிடம் பைடனுக்கு 2020-ஈல் 59% வாக்குகள் இருந்தன. குடியரசுக் கட்சிக்கு ஆதரவான கிராமப்புற பகுதிகளில், 2020-ஆம் ஆண்டு பைடனுக்கு கிடைத்ததை விட, ஹாரிஸுக்கு குறைவான வாக்குகளே கிடைத்தன. இது 2016-ஆம் ஆண்டு கிளிண்டனுக்கு கிடைத்த ஆதரவுக்கு நிகராக குறைவாகவே இருந்தது.   டிரம்பை மையப்படுத்திய பிரசாரம் பட மூலாதாரம்,GETTY 2016-ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன் செய்தது போலவே, கமலா ஹாரிஸும் டிரம்பை மையப்படுத்தியே தனது பிரசாரத்தை மேற்கொண்டார். இந்த தேர்தலை டிரம்ப் மீதான பொது வாக்கெடுப்பாக அவர் முன்னிறுத்தினார். பிரசாரத்தின் கடைசி வாரங்களில், வெள்ளை மாளிகையின் தலைமைப் பணியாளர் (chief of staff) ஜான் கெல்லி, டிரம்ப் ஹிட்லரை ஆராதிப்பவர் என்று கூறியிருந்ததை சுட்டிக்காட்டி, "டிரம்பை பாசிசவாதி, மனநோயாளி, நிலையற்றவர்" என்று கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார். இந்த தேர்தலை ஜனநாயகத்துக்கான போராட்டம் என்று கமலா ஹாரிஸ் வர்ணித்தார். ஜூலை மாதம் அதிபர் தேர்தலில் இருந்து விலகும் முன் பைடனும் இதையே தான் கூறியிருந்தார். “டொனால்ட் டிரம்பை தாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்திய கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் தோல்வியை தழுவினார்” என்று தனது எக்ஸ் பக்கத்தில், தேர்தல் கருத்து கணிப்பாளர் ஃப்ராங் லுண்ட்ஸ் பதிவிட்டிருந்தார். “டிரம்பைப் பற்றி வாக்காளர்களுக்கு ஏற்கனவே தெரியும். கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அவர் முதலாம் ஆண்டில் என்ன செய்வார் என்று தெரிந்துக் கொள்ளவே மக்கள் விரும்பினர்” என்று அவர் கூறியிருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy9jxzlp0q8o
    • கனடாவில் உள்ள ஒரு   கடற்கரையில்....  மலசலம் கழித்து விட்டு,   மண்ணால்  மூடி விட்டுப் போகும் அளவுக்கு கொஞ்சம் முன்னேறி இருக்கின்றார்கள் என அறிந்தேன். 😂
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.