Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

                                                                                                    தையல்கடை.

  தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(1).

 

                                                                                            சுமதி சதயம் நட்ஷத்திரம் கும்பராசி...... அன்று லீவுநாளானபடியால் சுமதி வீட்டில் சின்ன சின்ன வேலைகள் செய்து கொண்டிருக்கிறாள்.எல்லாம் வளந்திட்டுதுகள் ஒரு வேலையும் செய்கிறதில்லை.பிள்ளைகளுக்கு திட்டும் நடக்குது.தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கு.  சுமதி ஒரு பெரிய ஹோட்டலில் முப்பதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மேலாளராக பணிபரிகிறாள்.அவளுக்கு ஒரு வீட்டுக்காரரும் இரண்டு பிள்ளைகளும் ஒரு கணவனும் இருக்கிறார்கள். மூத்தவன் முகிலன் பதினெட்டு வயது அடுத்து வானதி பத்து வயது. அவர்கள் இப்போதும் வாடகை வீட்டில் இருப்பதால், இப்ப உங்களுக்கு புரிந்திருக்கும் அவளின் வீட்டுக்காரர் யார் என்று.......!கணவன் சுரேந்தரும் வீடுகள் விற்கும் வாங்கும் ஒரு ஏஜென்சியில் மேலாளராக இருக்கிறார். சுமதிக்கு நல்ல ஊதியமும் காரும் கொம்பனி கொடுத்திருக்கு. இவற்றைவிட அவளுக்கு நன்றாகத் தையல் வேலை  தெரியும். அதனால் வீட்டில் ஒரு தனியறையில் தையல் மிசின் வைத்து அக்கம் பக்கம் தெரிந்தவர்கள், உறவினர்களுக்கெல்லாம் ஆடைகள் நவீன மாடல் ப்ளவுஸ்கள் தைத்து கொடுத்து உபரியாக சம்பாதிக்கிறாள். இதெல்லாம் இருந்தபோதிலும் அவளுக்கென்று ஒரு ஆசை இந்த "லா சப்பலில்"  சொந்தமாக ஒரு தையல்கடை போடவேண்டும் என்று.

                                                                    அதற்குத் தோதாக சென்றவாரம்தான் எதேச்சயாக அவள் சேகரிடம் கட்டிய சீட்டு ஒன்று சீட்டு கேட்டு ஏற்றுகிற வல்லுநர்கள் வரத் தவறியதால் குறைந்த கழிவில் சுமதிக்கு கிடைத்திருக்கு. அந்தப் பணம் இன்னும் சில நாட்களில் கைக்கு வந்து விடும்.என்ன ஒரு பிரச்சினை என்றால் அதை அப்படியே வங்கியிலும் போட முடியாது. நூற்றியெட்டு கேள்விகள் கேட்பாங்கள். இன்றைய நாளில் வீட்டில் வைத்திருப்பதும் பிரசினைதான்.கள்ளர்களுக்கும் உளவாளிகள் உண்டு.அவங்களும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆயுதங்களைக் கொண்டுவந்து வெகு சுளுவாக பணம் நகைகள் மட்டும் எடுத்துக் கொண்டு போயிடுறாங்கள். பக்கத்தில ஐ போன் 14 இருந்தாலும் தொடுகிறதில்லை. வீடும் அலுங்காமல் குலுங்காமல் பூட்டியபடியே இருக்கும்.

                                                                        ஆனால் சுமதிக்கு நகைகள் பற்றி பயமில்லை. அவையெல்லாம் வங்கிப் பெட்டியில் ஆழ்நிலைத் தியானத்தில் இருக்கின்றன. இவன் மூத்தவன் முகிலன் மட்டும் ஒரு பெட்டையாய் பிறந்திருந்தால் ஒரு சாமத்தியவீடு செய்து அதைக் காரணம் காட்டியாவது கொஞ்சப் பணத்தை வங்கிகளில் போட்டிருக்கலாம்.இப்போதைக்கு அதற்கும் வழியில்லை. அவனுக்கும் இப்ப பதினெட்டு வயதாகின்றது. ஒரு காதில் கடுக்கணும் போட்டுக்கொண்டு உரித்த சேவல் மாதிரி ஒரு மோட்டுச் சைக்கிளில் யுனிக்கு போய்வாறார். சுமதியின் கை பழக்கத்தில் வேலைகளை பர  பர  வென்று செய்ய மனம் தனக்குள் கணக்கு போட்டுக்கொண்டு இருக்கு. உடனே மூளைக்குள் பளிச் என ஒரு யோசனை, ஏன்  நான் இந்தப் பணத்தைக் கொண்டு "லா சப்பலில்" ஒரு கடை போடக் கூடாது.  நாலு தையல் மிசின் வாங்கிப் போட்டு மூன்று நாலு ஆட்களை சம்பளத்துக்கு வைத்துக்கொண்டு வியாபாரம் ஆரம்பிக்கலாம் தானே.

                                                                        மெலிதாகத் தோன்றிய எண்ணம் நேரம் செல்ல செல்ல விருட்ஷமாய் வளர்ந்து கொண்டிருக்கு. அப்போது செற்றியில் கிடந்த அவளது போன் ரிங்டோன் "  ரஞ்சிதமே ரஞ்சிதமே " என்று அழைக்கிறது. செய்த வேலையை அப்படியே போட்டு விட்டு அங்கு போகிறாள். கவிதாதான் அழைப்பு எடுத்திருந்தாள். ஓ .கவிதா எப்படி சுகம் என்று தொடங்கி அக்கம் பக்கம் மற்றும் நண்பர்கள்  எல்லாரையும்  அலசிக் கழுவிக் கொண்டிருக்கும் பொழுது தொலைகாட்சியில் ஒரு ஐயா அங்கவஸ்திரம் அணிந்து வீபூதி சந்தனம்,குங்குமம் எல்லாம் போட்டுக் கொண்டு இராசிபலன் சொல்லுகிறார்.அப்போது வீட்டின் அழைப்புமணி ஒலிக்கிறது. பொறடி கவிதா ஆரோ பெல் அடிக்கினம்,நான் பிறகு எடுக்கிறன். என்ர வீட்டுக்காரர்தான் வாறதெண்டவர் அவராய்த்தான் இருக்கும் என நினைத்துக்கொண்டு கதவைத் திறக்க அவர்தான் நிக்கிறார். பொறுங்கோ அங்கிள் கவர் எடுத்துக் கொண்டு வாறன் என்று சொல்லி உள்ளே சென்று செக் இருந்த கவரைக் கொண்டுவந்து அவரிடம் குடுத்து விட்டு அவர் சொன்ன "A " ஜோக்குக்கு சிரித்து கதைத்துக் கொண்டிருக்க....

 

                                                                        இராசிபலனில், எதிலும் நிதானத்தை கடைபிடிக்கும் கும்பராசி அன்பர்களே !  உங்களுக்கு ஏழரை சனியின் கடைக்கூறு நடைபெறுவதால் மிச்சம் இருக்கும் இரண்டு வருடங்களும் நீங்கள் மிகக் கவனமாய் இருக்க வேண்டும். மேலும் இன்னும் இரு மாதங்களில் குருபகவான் ஆறாம் வீட்டில் மறைவதால் சனியும் உக்கிரேன் மாதிரி உக்கிரமாக  உங்களை வாட்டும். பிரச்சினைகளும் எந்தப் பக்கம் என்றில்லாமல் ரஷ்ய ஏவுகணைகள் போல் அடுத்தடுத்து வந்து தாக்கும். அதனால் இப்ப இருக்கிற பணத்தை, சொத்துக்களை பாதுகாத்து வைத்திருந்தாலே போதுமானது.இரு வருடங்களுக்கு புதிதாய் முதலீடுகள் செய்வதை தவிர்த்தல் நல்லது.சதயம் நட்ஷத்திரத்தில் பிறந்த கும்பராசிக்காரர்களே உங்களின் கும்பம் ஓடிகிற அளவுக்கு சுமை இருப்பதால் எதிலும் கவனம் தேவை........தொடர்ந்து அடுத்து அழகிய கண்களையுடைய மீனராசி அன்பர்களே.........!

                                                                                              அப்போது அந்த பலூன் ஜோக்குக்கு சிரித்தவாறு உள்ளே வந்த சுமதி அட கும்பராசிக்கு சொல்லி முடிஞ்சாச்சுது போல, ச் சா.... மிஸ் பண்ணிட்டன் என்று சொல்லியபடி செற்றியில் அமர்கிறாள். சற்று நேரத்தில் அவளது கணவன் சுரேந்தர் வேலையால் அலுத்துக் களைத்து  வீட்டிற்குள் வருகிறார்.

இன்னும் தைப்பார்கள்........!   🥻

  • Like 14
  • Thanks 1
  • Haha 2
  • Replies 93
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திரில் ஆன கதை போல இருக்கு.... 😎
மொத்தமாக வந்த சீட்டுக்காசை, ஏழரைச் சனியன்...   
கொண்டு போகப் போகுது போலை கிடக்கு. 
தொடருங்கள் சுவியர், வாசிக்க ஆவலாக உள்ளேன். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

அவளுக்கு ஒரு வீட்டுக்காரரும் இரண்டு பிள்ளைகளும் ஒரு கணவனும் இருக்கிறார்கள்.

என்னையா போட்டு குழப்புகிறீர்களே?

2 hours ago, suvy said:

சொன்ன "A " ஜோக்குக்கு சிரித்து கதைத்துக் கொண்டிருக்க.

அப்படி என்ன தான் A ஜோக்கு சொல்லியிருப்பார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னையா போட்டு குழப்புகிறீர்களே?

நீங்கள் மீண்டும் ஒரு முறை கதையை நன்றாக ஊன்றிக்  கவனித்து வாசிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிண்றீர்கள்......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

சென்றவாரம்தான் எதேச்சயாக அவள் சேகரிடம் கட்டிய சீட்டு ஒன்று சீட்டு கேட்டு ஏற்றுகிற வல்லுநர்கள் வரத் தவறியதால் குறைந்த கழிவில் சுமதிக்கு கிடைத்திருக்கு.

நானும் ஒருமுறை (20 வருடம் முன்பு)சீட்டு கட்டினேன்.

சீட்டு அன்று மறந்திடால் அந்த நேரத்துக்கு போன் அடித்து ஏத்திவிட்டுடுவேன்.

ஒருதடவை கூட நேரில் போனதில்லை.

2 minutes ago, suvy said:

நீங்கள் மீண்டும் ஒரு முறை கதையை நன்றாக ஊன்றிக்  கவனித்து வாசிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிண்றீர்கள்......!  😂

ஒரு வீட்டுகாரர்.

ஒரு கணவர்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

நானும் ஒருமுறை (20 வருடம் முன்பு)சீட்டு கட்டினேன்.

சீட்டு அன்று மறந்திடால் அந்த நேரத்துக்கு போன் அடித்து ஏத்திவிட்டுடுவேன்.

ஒருதடவை கூட நேரில் போனதில்லை.

ஒரு வீட்டுகாரர்.

ஒரு கணவர்.

ஆஹா.....கற்பூரம் ஐயா நீங்கள் .....!  👍

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதை வெகு சுவாரசியமாக போகிறது. கும்பராசிக்கு சுக்கிர பெயர்ச்சி 18 ம் திகதி வரைக்கும் நல்லமில்லையாம்🤣.

நானும் முந்தி சீட்டு எடுத்தால் நல்லா கழிவு எடுக்க விட்டு கடைசியாய்தான் எடுப்பேன். ஆனால் ஏத்தி விடும் ரிஸ்க் எடுத்ததில்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு குடும்பத்தின் கதை சொல்ல வெளிக்கிட்டு "வீட்டுக் காரனையும்"  கையோடு கூடி வந்துள்ளீர்கள்.   தொடருங்கள் வேடிக்கையை  வாசிப்போம். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, suvy said:

சென்றவாரம்தான் எதேச்சயாக அவள் சேகரிடம் கட்டிய சீட்டு ஒன்று சீட்டு கேட்டு ஏற்றுகிற வல்லுநர்கள் வரத் தவறியதால் குறைந்த கழிவில் சுமதிக்கு கிடைத்திருக்கு.

8 hours ago, suvy said:

சுமதிக்கு நகைகள் பற்றி பயமில்லை. அவையெல்லாம் வங்கிப் பெட்டியில் ஆழ்நிலைத் தியானத்தில் இருக்கின்றன. இவன் மூத்தவன் முகிலன் மட்டும் ஒரு பெட்டையாய் பிறந்திருந்தால் ஒரு சாமத்தியவீடு செய்து அதைக் காரணம் காட்டியாவது கொஞ்சப் பணத்தை வங்கிகளில் போட்டிருக்கலாம்.

8 hours ago, suvy said:

இவன் மூத்தவன் முகிலன் மட்டும் ஒரு பெட்டையாய் பிறந்திருந்தால் ஒரு சாமத்தியவீடு செய்து அதைக் காரணம் காட்டியாவது கொஞ்சப் பணத்தை வங்கிகளில் போட்டிருக்கலாம்.இப்போதைக்கு அதற்கும் வழியில்லை. அவனுக்கும் இப்ப பதினெட்டு வயதாகின்றது. ஒரு காதில் கடுக்கணும் போட்டுக்கொண்டு உரித்த சேவல் மாதிரி ஒரு மோட்டுச் சைக்கிளில் யுனிக்கு போய்வாறார்.

9 hours ago, suvy said:

அப்போது அந்த பலூன் ஜோக்குக்கு சிரித்தவாறு உள்ளே வந்த சுமதி அட கும்பராசிக்கு சொல்லி முடிஞ்சாச்சுது போல, ச் சா.... மிஸ் பண்ணிட்டன் என்று சொல்லியபடி செற்றியில் அமர்கிறாள். சற்று நேரத்தில் அவளது கணவன் சுரேந்தர் வேலையால் அலுத்துக் களைத்து  வீட்டிற்குள் வருகிறார்.

இன்னும் தைப்பார்கள்........!   🥻

நம்ம தல லேசில கதை சொல்லாது. கதை சொல்ல வெளிக்கிட்டால் ஒரே அதிரடிதான். :beaming_face_with_smiling_eyes:

சமூகக்கதை பிரமாதம் தொடருங்கள். :red_heart:

நாயகன் மீண்டும் வாறார் :smiling_face_with_heart_eyes:
நம்ம தையல் நாயகி :cool:

 

  • Like 1
Posted

தையல் கதை நகைச்சுவையோடு சுப்பராக போகிறது. லா சப்பலில் கடை போடுறாவோ இல்லையோ என்பதை பாத சனி முடிவெடுக்கும் போல.

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்குத் தெரிஞ்சிருந்த கொஞ்ச நெஞ்ச சாதக அறிவையும் கதை உடைச்சுப் போட்டுது…! மிகவும் முக்கியமான மனுசன் குரு பகவான்! அவரே ஆறாமிடத்தில மறைஞ்சு போனால் சாதகி எங்கே போய் மறைவதாம்?

சரி…தொடருங்கள், சுவியர்…!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(2).

 

                                  கதவைத் திறந்து கொண்டு வரும்போதே இவங்கள் துலைவராலை மனுஷர் நிம்மதியா ஒரு வேலை வெட்டிக்கு போய்  வர ஏலாமல்    இருக்கு ......!

--- ஏனப்பா வரும்போதே புறுபுறுத்துக் கொண்டு வாறியல் .....

---அதுக்கில்லையப்பா வருமானம் வருதோ இல்லையோ மாசக்கடைசியில வீட்டுக்காரர் வாடைக்காசுக்கும், மெட்ரொக்காரரின்  வேலைநிறுத்தமும் வந்திடும். நான் இரண்டு மணித்தியாலத்துக்கு முதல் வந்திருப்பன் இவங்களால சனத்துக்குள்  இடிபட்டு நெரிபட்டு இப்ப வாறன் வேர்த்தொழுக .......உள்ளே போய் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து குளிர்தண்ணீர்ப் போத்தலை எடுத்து குடித்து விட்டு ஒரு பியர் டின்னையும் எடுத்துக் கொண்டு மேசையில் இருந்த வறுத்த கடலை, கசுகொட்டை, பாதாம் பைக்கட்டையும்  எடுத்துக் கொண்டு வந்து சுமதியின் அருகில் அமர்கிறார். சுமதியும் எழுந்துபோய் காற்றாடி பொத்தானை அழுத்தி விட்டு வந்து அவரருகில் மார்பு உரச நெருக்கமாக உட்காருகிறாள். நல்ல காற்றும் அவளின் அருகாமையும் சுரேந்தரின் மன இறுக்கத்தை தளர்த்தி இதமாக்குகின்றது.

                                                       ---இஞ்சயப்பா உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டே ......ம்....சொல்லு......

சேகரிட்ட நாங்கள் போட்ட சீட்டு இந்தமுறை எங்களுக்குத்தான் விழுந்திருக்கு. வழக்கமா சீட்டு ஏத்தி விடுகிற ஆட்கள் இந்த ஸ்ட்ரைக்கால வர பிந்திப் போட்டினம். கழிவு குறைவென்ற படியால் நான் எடுத்துப் போட்டன். வார கிழமை சேகர் காசை கொண்டுவந்து தாறனெண்டு சொன்னவர்.

---அப்படியே சங்கதி....இந்த ஸ்ட்ரைக்கால நல்லதும் நடந்திருக்கு எண்டு சொல்லுறாய். நல்லது....நீங்கள்தான் உடுப்புகள் தைத்து கஷ்டப்பட்டு  சீட்டு போட்டனீங்கள், வாங்கி பத்திரமாய் வைத்திருங்கோ.

--- நானும் முதல் அப்படிதானப்பா நினைச்சனான், பிறகுதான் யோசித்தன், நாங்கள் ஏன் "லா சப்பலில்" ஒரு இடம் எடுத்து தையல் கடை போடக்கூடாது.

சுரேந்தர் இடைமறித்து உது  உமக்கு இப்ப தேவையோ, ஏற்கனவே நீங்கள் அங்க இங்க என்று அலைந்து திரிந்து செய்யும் வேலை சிரமமானது,......

சுமதியும் கொஞ்சம் பொறப்பா நான் சொல்லுறதையும் கேளுங்கோவன். அதுக்குள்ளே "ஆடறுக்கமுதல் விதைக்கு விலை பேசுறியள் "

--- சரி சொல்லும், அவளும் (கிளாசில் பியரை நிரப்பி விட்டு பருப்பு பக்கட்டையும் பிரித்து வைக்கிறாள்).

ம்...தங்கட காரியம் நடக்க வேணுமென்றால் எல்லாம் செய்வினம்.மனதுக்குள் நினைத்துக் கொள்கிறான், சொல்லவில்லை

--- என்னிடம் இப்ப தைக்க வாற ஆட்கள் கனபேர் வருகினம்.கடை திறந்தால் இரண்டு பேரை கூட வைத்தும் வேலை செய்யலாம். அதுக்கு மேல கடை என்று ஒன்று இருந்தால் பின்னடி காலத்திலும் எங்களுக்கு உதவும்.

---சிறிது யோசித்த சுரேந்தரும் சுமதி சொல்வதும் சரியென்று தோன்றவே, ம்....முதல்ல காசு கைக்கு வரட்டும் பிறகு இடம் பார்க்கலாம் என்ன .....!

சுமதியும் புருஷனை சரிகட்டிய மகிழ்ச்சியுடன் எழுந்து சென்று கோப்பையில் இடியாப்பமும் சொதியும் விட்டுகொண்டுவந்து குடுக்கிறாள். சுரேந்தரும் என்னப்பா ஒரு முட்டையாவது பொரித்திருக்கலாமே  என்று சொல்லிப்  போட்டு சாப்பிட்டுவிட்டு கட்டிலுக்கு செல்கிறான்.

சுமதியும்  காற்றடியையும்  தொலைக்காட்சி பெட்டியையும் அனைத்து விட்டு அறைக்குள் போகிறாள். சிறிது நேரத்தில் அவனே எதிர்பாராமல் அவனுக்கு சுடச்சுட சூடாக கோழிப்பிரியாணி விருந்து படைக்கப் படுகின்றது.........!

தைத்துக்கொண்டு இருக்கிறார்கள்..........!  💞  

  • Like 6
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

85-A9-AE5-D-19-EA-4356-B1-A8-E2-E7-B3193
தையல் கதை/வகை பலவிதமாக இருக்கும் போல உள்ளது..கதைக்கு நன்றி சுவி அண்ணா!!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(3).

 

"லா சப்பல்"  யூரோப் மட்டுமன்றி உலகில் இருக்கும் புலம்பெயர்ந்தவர்கள் எல்லோருக்கும் அது ஒரு மயக்கும் சொர்க்கம். அங்கிருந்து மனைவி அல்லது காதலியை கையைக் கோர்த்துக் கொண்டு  சிறிது தூரம் நடந்து சென்றால் கூடப் போதும் உலக அதிசயமாம் ஈபிள்டவர் கண்முன் தெரியும். அந்த இடத்தில் ஒரு சதுர அடி இடம் எடுப்பதே பெருங் கஷ்டம். சுரேந்தரும் சுமதியும் பல தரகர்கள், நண்பர்கள் எல்லோரிடமும் சொல்லி சொல்லி ஒரு மாதிரி கடையொன்று வாடகைக்கு எடுத்திருந்தார்கள். அந்தக் கடைக்கு கீழேயும் சாமான்கள் வைத்து எடுக்க சௌகரியமாக பாதாள அறையொன்று உண்டு.கடையை அவர்கள் ஒரு தகுதிவாய்ந்த கம்பனிமூலமாக தமது வேலைகளுக்கு ஏற்றவாறு திருத்தி,பாதாள அறை உட்பட வர்ணங்கள் பூசி அங்கு தமக்கும் ஒரு ஆபிஸ் அறையும், நிலைக் கண்ணாடியுடன் உடைகள் மாற்றும் அறையும் அமைத்து முன்பக்கம் விராக்கிகள்,கண்ணாடி அலுமாரிகள் எல்லாம் பொருத்தி விட்டிருந்தார்கள்.

                                           கடைக்கு "லக்கி டெய்லரிங் அன்ட் டெக்ஸ்டைல்ஸ்" என்று பெயர்பலகையும் நியான் லைட்டுடன் பூட்டி விட்டிருந்தார்கள். பின் வங்கியிலும் கடன் எடுத்து நான்கு நவீன மாடல் தையல் மிஷின்களும் இன்னபிற சாமான்களும் வாங்கிப் போட்டிருந்தார்கள். இன்னும் 15/20 நாளில் கடை திறப்புவிழா செய்யுமளவுக்கு வேலைகள் முடிந்து விட்டிருந்தன.

                                                       சுமதி தையல்கடை திறக்கப் போகிறாளாம் என்னும் செய்தி அவளது உறவினர்கள் நண்பர்கள் வட்டாரத்தில் "அணைந்த எரிமலையாய் புகைந்து அமேசன் காட்டுத் தீயாய் " வியாபித்து அடுத்து வந்த கலியாணவீடு,சாமத்திய வீடு,பிறந்தநாள் கொண்டாட்டங்களில் எல்லாம் முக்கியமான பேசுபொருளாகி இருந்தது. அன்று காலை பத்து மணியிருக்கும் சுமதி தொலைக்காட்சியில் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல்  சீரியஸாக பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கைத்தொலைபேசி "ரஞ்சிதமே"என்று அழைக்கிறது.

---ஹலோ....ஓ....ஓ  நான் சுமதி யார் நீங்கள் என்று கேட்க ,  அக்கா அது நான்தான் பிரேமா நீங்கள் வீட்டிலேயே இருக்கிறீங்கள். உங்களிடம் ஒரு விஷயம் கதைக்க வேணும் .....

---ஓம்....இண்டைக்கு விடுமுறைதானே வீட்டில்தான் நிக்கிறன், என்ன விஷயம் சொல்லுங்கோ....

--- இருங்கோ அக்கா, நான் பக்கத்துலதான் நிக்கிறன் ஐந்து நிமிசத்தில அங்கு வாறன் போன் கட்டாகின்றது. தொடர்ந்து சற்று நேரத்தில் அழைப்பு மணி ஒலிக்க சுமதி கதவைத் திறக்கிறாள். பிரேமா கையில் ஒரு சொக்கிலேட் பெட்டியுடன் உள்ளே வருகிறாள்.

--- வாங்கோ பிரேமா ! வந்து இருங்கோ, கண்டு கனகாலம். என்ன குடிக்கிறீங்கள்.

--- பிரேமாவும் சொக்கிலேட் பெட்டியை அவளிடம் கொடுத்து விட்டு  கொஞ்சம் தயங்கியபடி அது வந்து சுமதியக்கா நீங்கள் "லா சப்பலில்" தையல்கடை திறக்கப் போவதாக அறிந்தனான்.அதுதான் உங்களிடம் வேலை இருக்குமோ என்றுதான்......எனக்கு தையல் வேலை எல்லாம் தெரியும்.

--- சுமதியும் அவளிடம், பிரேமா  நான் அங்கு தையல்கடை திறக்கத்தான் போறன். ஆனால் அதுக்கு "pole emploi " (ஆட்களின் தகுதிக்கு ஏற்றபடி வேலை எடுத்துக் கொடுக்கும் அதிகாரமுள்ள அரசாங்க அமைப்பு) மூலமாகத்தான் ஆட்கள் எடுக்க பதிஞ்சிருக்கிறன். மேலும் எனக்கு புதிய மொடல் மிசின்களில் ஆடைகளை நன்றாக வெட்டித் தைக்கத் தெரிந்த ஆட்கள்தான் வேணும். பெண்களின் சட்டைகள், ப்ளவுஸ்கள் மட்டுமன்றி பிள்ளைகளின் உடுப்புகளும் தைக்கத் தெரிந்திருக்க வேணும். நேற்றுத்தான் அப்படி ரோகிணி என்றொரு பிள்ளையையும் எடுத்தனான்.

                                       அதுசரி நீங்கள் இங்கு தையல் வகுப்புகளுக்கு போன சான்றிதழ்கள் ஏதாவது வைத்திருக்கிறீங்களோ.

--- இல்லையக்கா , நான் ஊர்ல தையல் வேலை எல்லாம் செய்தனான்.அக்கம் பக்கம் எல்லாம் நான்தான் தைத்துக் குடுக்கிறது. நீங்களும் இங்கு எல்லாருக்கும் தைத்து குடுக்கிறனீங்கள் என்று எனக்குத் தெரியும்.நீங்கள் கொஞ்சம் கொஞ்சம் டிசைன்கள் காட்டித் தந்தால் நான் கெதியா தச்சுப் போடுவன்.

---பிரேமா நீங்கள் கடைசியா எப்ப தைத்தனீங்கள். எனக்குத் தெரிந்து நீங்கள் இங்கு வந்தே பத்து வருடங்கள் இருக்கும் போல .......

---ஓமக்கா, கொஞ்சம் டச் விட்டுப் போச்சு என்டாலும் நான் சமாளிச்சுடுவன்.

--- அதுக்கில்லை பிரேமா ஏற்கனவே 5 / 6 பேர் என்னிடம் வேலை கேட்டிருக்கினம்.அதிலும் எனக்கு இந்த ஆபிரிக்கன்ஸ் , அல்ஜீரியன்ஸ் ஆட்களின் ஆடைகளும் தைக்கத் தெரிந்திருக்க வேணும். எதுக்கும் உங்கட பெயரையும் நான் குறித்து வைத்து கொள்கிறன்.  பின்பு வளமையாய் கதைத்து விட்டு போகும் போது அக்கா நானும் கடைக்கு கிட்டத்தான்  இருக்கிறன் இருப்பது நிமிச நடை கடைக்கு வாறதுக்கு  என்று சொல்லி விட்டு போகிறாள்.

 

                                         அதுவரை அறைக்குள் இருந்து இவர்களின் உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்த சுரேந்தர் வெளியே வந்து சுமதியிடம், இஞ்ச பாருமப்பா நீங்கள் ஒரேயடியா "pole emploi" வில் இருந்து ஆட்கள் எடுத்தால் அவர்கள் கண்டதுக்கும் "லோ " கதைப்பினம். இவர்களை மாதிரி ஒன்றிரண்டு பேர் இருப்பதுதான் நல்லது. பயபக்தியுடன் பணிவாக வேலை செய்வினம் என்று சொல்ல, ஓமப்பா நீங்கள் சொல்வதும் சரிதான் என்று சுமதியும் ஆமோதிக்கிறாள்.

இன்னும் தைப்பார்கள் ..........!  👗

  • Like 5
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

தச்சுக் கிழிக்கும் தையல்கள் .......

தைக்கட்டும்......தைக்கட்டும் ..நல்லாய் தைச்சு கிழிக்கட்டும் :pokal:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(4).

 

                                                                  பிறிதொருநாள் சுமதி வெளியில் இருந்து தனது வீட்டுக்குள் வரும் போது அங்கு அவள் கணவன் சுரேந்தருடன் ஒரு ஆணும் பெண்ணுமாக  இருவர் கதைத்துக் கொண்டிருப்பது தெரிகிறது.அவளும் அவர்கள் தனது கணவனின் நண்பர்கள் என நினைத்துக் கொண்டு அவர்களுக்கு bonjour (வணக்கம்) சொல்கிறாள்.திரும்பி அவள் உள்ளே போக எத்தனிக்கையில் சுரேந்தர் அவளை அழைத்து இவர் எனது வேலையிடத்து சக நண்பர்.எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர். இந்தப் பெண் மிருதுளா இவரது மருமகள் என்று சொல்ல அவர்களும் சுமதிக்கு bonjour சொல்கின்றனர். தொடர்ந்து இவாவும் இங்கு தையல் வகுப்புகளுக்கு போயிருக்கிறா. மற்றும் புடவைக் கடைகளில் விற்பனைப் பகுதியில் வேலைசெய்த அனுபவமும் இருக்கு என்று சொல்ல சுமதியும் மிருதுளாவைப் பார்க்கிறாள். அவள் மிகவும் இளமையாகவும் அழகாகவும் இருக்கிறாள். வயதும் ஓரு இருபத்தைந்துக்குள்தான் இருக்கும். சரளமாக பிரெஞ்சும் கதைக்கிறாள்.......அவர்களும் இவர்களின் கடையில் வேலை கேட்டுத்தான் வந்திருந்தார்கள்.

                                                                                                மிருதுளாவுடன் கதைத்த சிறிது நேரத்திலேயே அவள் கடையை நிர்வகிக்கக் கூடிய ஆளுமையான பெண் என்று சுமதி புரிந்து கொள்கிறாள்.  சுமதி ஆண்களைப் பார்த்து நீங்கள் சற்று நேரம் கதைத்துக் கொண்டிருங்கள் என்று சொல்லி விட்டு, மிருதுளாவைக் கூட்டிக் கொண்டு தான் தைக்கும் மிசின் உள்ள அறைக்குப் போகிறாள்.அங்கு அவள் ஒரு ப்ளவுஸ் துணியையும் அதை கத்தரித்து தைக்க வேண்டிய அளவுகளையும் குடுத்து இதை இப்போது உன்னால் வெட்டித் தைக்க முடியுமா என்று கேட்க, மிருதுளாவும் ஓம்....டிசைனை சொல்லுங்கள் என்று எதுவித பதட்டமுமின்றி சொல்கிறாள். உடனே சுமதி அவளிடம் இது ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியுடையது,ஒரு நாற்பது வயதிருக்கும். அளவுகளைப் பார்த்தாலே உனக்குப் புரியும். அவவுக்கு கொஞ்சம் பெரிய மார்புகள். நார்மலா சிறிது கீழிறங்கி இருக்கும். அதனால் ப்ளவுசில் அவை எடுப்பாக இருப்பதுபோல் "கப்" வைத்து தைக்க வேண்டும். அவவுக்கு இடுப்பிலும் சிறிது சதை போட்டிருக்கு, அதற்கேற்றாற் போல் கீழ்ப்பட்டி 5 செ.மீ அகலமாயும் இருக்கட்டும். மற்றது பின்பக்கம் பிரா லேஸ் மட்டத்துக்கு ஓப்பனாக இருக்கட்டும். கழுத்தடியில் குஞ்சம் வைத்து ஒரு நாடா தைத்து விடு. கவனம் இது அவ நாளைக்கு ஒரு திருமணத்துக்கு போடுவதற்காக கொண்டு வந்து தந்தவ. நல்ல ரிச் லூக்கா இருக்க வேண்டும்.

--- நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தடித்த துணியில் உள்ளே லைனிங் வைத்து "கப்" எடுப்பாக இருக்கும்படி தைக்க வேண்டும். முக்கியமான இடங்களில் "ஷி துரூ" வாகவும் இருக்க வேண்டும். ..... ஓம் அப்படித்தான், லைனிங் துண்டும் மேசையில் இருக்கு, நீங்கள் வேலை செய்யுங்கோ, நான் போய் முகம் கழுவிவிட்டு வருகிறேன் என்று கிளம்பும் பொழுது மிருதுளாவும் அந்த சில்க் துணிக்கேற்றவாறு மிசின் ஊசி மற்றும் பொபின் இலக்கங்களை சரிசெய்கிறாள். அதை பார்த்த சுமதியும் திருப்தியுடன் ம்......இவளிடம் கொஞ்சம் விசயம் இருக்கு என்று நினைத்துக் கொண்டு கதவைச்சாத்தி விட்டு போகிறாள்......!

                                சற்று நேரத்தின் பின் சுமதி  தன்னை சிறிது அலங்கரித்துக் கொண்டு ட்ரேயில் நான்கு கோப்பியும் சீனிக்கட்டிகளும் சிறிய கரண்டிகளுடனும் வந்து ஆண்களிடம் இரண்டைக் குடுத்து விட்டு அறைக்குள் சென்று மிருதுளாவுக்கும் கோப்பியை வைக்கும் போது அவளும் அந்த ப்ளவுசை தைத்து முடித்து அங்கிருந்த பொம்மைக்கு அதை அணிவித்து பினிஷிங் வேலையை செய்து கொண்டிருந்தாள். சுமதிக்கு அவளை மிகவும் பிடித்து விட்டது. தான் சொன்னதை அப்படியே புரிந்து கொண்டு சிறப்பாக வேலை செய்திருந்தாள். மேலும் தன கற்பனையையும் செலுத்தி தேவையான இடங்களில் பொன் நிற லேஸ்சும் சின்ன முத்துக்களும் தைத்திருந்தாள். பின் இருவரும் கோப்பியை அருந்திவிட்டு கதைத்துக் கொண்டு ஹாலுக்கு வருகின்றார்கள்.......!   

இன்னும் தைப்பார்கள்.........!   🦺

  • Like 4
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவர்கள் தைக்கிறது இருக்கட்டும், சுவியர்…! உங்களுக்கு எப்படி இவ்வளவு பெண்களின் உடல் வாகு தெரியும்?😁

தொடருங்கள்….!

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தையலாள் என்றும் ஒரு பெயர் இல்லத்தரசிகளுக்கு உண்டெல்லோ.
கதை நன்றாகப் போகிறது அண்ணை, முடிவு(சனி) தான் என்னாகுமோ?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/2/2023 at 14:00, தமிழ் சிறி said:

திரில் ஆன கதை போல இருக்கு.... 😎
மொத்தமாக வந்த சீட்டுக்காசை, ஏழரைச் சனியன்...   
கொண்டு போகப் போகுது போலை கிடக்கு. 
தொடருங்கள் சுவியர், வாசிக்க ஆவலாக உள்ளேன். 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிறியர்.....உங்களின் வழமையான பொழிப்பா எடுத்து வர்ணம் தீட்டிய கருத்துக்கள்தான் பிடிக்கும்.... 😁

On 13/2/2023 at 18:35, goshan_che said:

கதை வெகு சுவாரசியமாக போகிறது. கும்பராசிக்கு சுக்கிர பெயர்ச்சி 18 ம் திகதி வரைக்கும் நல்லமில்லையாம்🤣.

நானும் முந்தி சீட்டு எடுத்தால் நல்லா கழிவு எடுக்க விட்டு கடைசியாய்தான் எடுப்பேன். ஆனால் ஏத்தி விடும் ரிஸ்க் எடுத்ததில்லை.

இப்போதெல்லாம் கடைசி சீட்டை காண்பதே அரிது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோஷான் -சே.......! 😂

On 13/2/2023 at 18:46, நிலாமதி said:

ஒரு குடும்பத்தின் கதை சொல்ல வெளிக்கிட்டு "வீட்டுக் காரனையும்"  கையோடு கூடி வந்துள்ளீர்கள்.   தொடருங்கள் வேடிக்கையை  வாசிப்போம். 

வாசியுங்கள் சகோதரி, உங்களின் ஊக்கம்தான் என்னையும் இங்கு கதையென்று எதோ ஒன்றை எழுத வைக்கின்றது......நன்றி தாயே......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15/2/2023 at 04:59, suvy said:

அதுவரை அறைக்குள் இருந்து இவர்களின் உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்த சுரேந்தர் வெளியே வந்து சுமதியிடம், இஞ்ச பாருமப்பா நீங்கள் ஒரேயடியா "pole emploi" வில் இருந்து ஆட்கள் எடுத்தால் அவர்கள் கண்டதுக்கும் "லோ " கதைப்பினம். இவர்களை மாதிரி ஒன்றிரண்டு பேர் இருப்பதுதான் நல்லது. பயபக்தியுடன் பணிவாக வேலை செய்வினம் என்று சொல்ல, ஓமப்பா நீங்கள் சொல்வதும் சரிதான் என்று சுமதியும் ஆமோதிக்கிறாள்.

அப்ப பிரோமா செலக்ரட்.

4 hours ago, suvy said:

அளவுகளைப் பார்த்தாலே உனக்குப் புரியும். அவவுக்கு கொஞ்சம் பெரிய மார்புகள். நார்மலா சிறிது கீழிறங்கி இருக்கும். அதனால் ப்ளவுசில் அவை எடுப்பாக இருப்பதுபோல் "கப்" வைத்து தைக்க வேண்டும். அவவுக்கு இடுப்பிலும் சிறிது சதை போட்டிருக்கு, அதற்கேற்றாற் போல் கீழ்ப்பட்டி 5 செ.மீ அகலமாயும் இருக்கட்டும். மற்றது பின்பக்கம் பிரா லேஸ் மட்டத்துக்கு ஓப்பனாக இருக்கட்டும். கழுத்தடியில் குஞ்சம் வைத்து ஒரு நாடா தைத்து விடு. கவனம் இது அவ நாளைக்கு ஒரு திருமணத்துக்கு போடுவதற்காக கொண்டு வந்து தந்தவ. நல்ல ரிச் லூக்கா இருக்க வேண்டும்.

சுவி நீங்க தையலிலும் கில்லாடி போல கப் எல்லாம் வைத்து தைக்கிறீங்க.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவ்வளவு  விபரமாக பெண்களின் பிளவுஸ் பறறி தெரிந்து வைத்திருக்கிறார் . அடுத்த பிளவுஸ் ...சுவியரிடம் ( தையல் காரியிடம்) தான்  தைக்கவேண்டும்.நன்றாக தையுங்கோ . வாடிக்கையாளர் லைன் இல் வந்து கொண்டு   இருக்கிறார்கள்.

எனக்கு மட்டும் சொல்லுங்க பிட்டிங் ரூம் இல்  கேமரா கிமரா  இல்லைத்தானே 😀  .

Posted

 

16 hours ago, suvy said:

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தடித்த துணியில் உள்ளே லைனிங் வைத்து "கப்" எடுப்பாக இருக்கும்படி தைக்க வேண்டும். முக்கியமான இடங்களில் "ஷி துரூ" வாகவும் இருக்க வேண்டும்

8256_1091856820854740_675958239374446747

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(5).

                                                                                      அன்று "லா சப்பலில்" சுரேந்தர் சுமதியின் தையல்கடை "லக்கி டெய்லரிங் அன்ட் டெக்ஸ்டைல்ஸ்" அதிக ஆடம்பரமின்றி எளிமையாக திறப்புவிழா நடந்தேறியது. அங்கிருக்கும் அக்கம் பக்கத்து கடை முதலாளிமார் வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்கள் என பலரும் வந்திருந்து சிறப்பித்திருந்தார்கள்.எல்லோருக்கும் சிற்றூண்டிகளுடன்  குளிர்பானங்களும் வழங்கப் பட்டன. கண்ணாடி அலுமாரிகள் நிறைய துணிகள்,புடவைகள் இத்யாதியுடன் நவீனமான நான்கு தையல் மெஷின்களும் கொலுவீற்றிருந்தன.சுமதி சுரேந்தர் ,ரோகிணி,மிருதுளா, பிரேமா எல்லோரும் விருந்தாளிகளை விழுந்து விழுந்து உபசரித்துக் கொண்டிருந்தார்கள்.

                                                                                 சிலர் குறும்பாக அக்காமாரே மத்தியானம் சாப்பாடும் இருக்குதோ என்று கேட்க ரோகிணி முன்வந்து ஓமண்ணை பக்கத்தில கோயிலில் அன்னதானம் நடக்குது வயிறு முட்ட சாப்பிட்டுட்டு போகலாம் என்று சொல்ல எல்லோரும் சிரிக்கிறார்கள். அன்றுமட்டும் சுமதிக்கு பணமாகவும் பரிசுப் பொருட்களாகவும் நிறைய சேர்ந்திருந்தன. காரணம் அவள் எல்லோர் வீட்டு வைபவங்களுக்கு போய் தாராளமாய் மொய் வைத்துவிட்டு வருவாள். அதுகள் எல்லாம் இப்ப வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன.அவையெல்லாம் தனியாக பிரேமாவின் பாதுகாப்பில் இருந்தன. ஆரம்பத்தில் கடை வேலைகளைக் கவனிப்பதற்காக சுமதி ஒருமாதம் விடுப்பு எடுத்திருந்தாள்.

                                                                          அடுத்தநாள் சுமதியின் போனில் துறைமுகத்தில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வருகின்றது. அதில் அவள் இந்தியாவில் இருந்து தருவித்த சில பெட்டிகள் வந்திருப்பதாகவும் அவற்றை வந்து பெற்றுக்கொள்ளும் படியும் குறிப்பிட்டிருக்கின்றது. அந்தப் பெட்டிகளுக்குள்தான் நிறைய துணிமணிகள், றோல்கோல்டு ஆபரணங்கள்,கைக்கடிகாரங்கள் மற்றும் தையல்களுக்கு தேவையான ஊசிகள்,கிளிப்புகள் லொட்டு லொசுக்குகள் எல்லாம் இருக்கின்றன.அவற்றை எடுப்பதற்காக ஒன்லைனில் ஒரு வானை ஒழுங்கு செய்துகொண்டு பாரிஸில் இருந்து 200 கி.மீ. தூரத்தில் இருக்கும்" le havre"என்னுமிடத்துக்கு பயணப் படுகிறாள். வானை ஒட்டிக்கொண்டு வந்தவர் ஒரு இளைஞன்.நல்ல களையான முகம் முகத்தில் இருக்கும் குறுந்தாடி மிகவும் அழகாய் இருக்கின்றது. (இந்த சுரேனிடம் சொல்லுறனான் நீங்கள் ஒரு தாடி வையுங்கோப்பா   உங்களுக்கு எடுப்பா இருக்கும் என்று சொன்னால் மனுஷன் கேட்குதே இல்லை. இந்தப் பொடியனுக்கு நல்ல வடிவாயிருக்கு என்று நினைத்துக் கொள்கிறாள்) இருவரும் பிரெஞ்சில் கதைத்துக் கொண்டு வருகிறார்கள். வெளியே மென்மையான மழைத்தூறல். வானின் வைப்பர் 10 செக்கண்டுக்கு ஒருமுறை அசைந்து கொண்டிருக்கு. வானுக்குள்  A / C யின் கதகதப்பு இதமாய் இருக்கிறது.

--- என்ன இன்று மழை பெய்து கொண்டிருக்கும் போல ....(இங்கு அறிமுகம் இல்லாதவருடன் பேச்சு வரும்பொழுது முதல்ல காலநிலை பற்றி கதைப்பினம்).

--- பெரிசாய் மழை வராது, நாள் முழுதும் இப்படித்தான் தூறிக்கொண்டிருக்கும்.

--- என்பெயர் சுமதி......உங்களை எப்படி அழைப்பது.....

---என் பெயர்  கபிரியேல் ஜான்சன் .....ஆனால் முதற்பெயர் கபிரியேல் மேடம்.....

---மேடம் அவசியமில்லை நீ சுமதி என்றே அழைக்கலாம்.....கபிரியேல் நீ கனகாலமாக இங்கு வேலை செய்கிறாயா .....(இங்கு பெரும்பாலும் வயது வித்தியாசமின்றி  ஒருமையிலும் பெயர் சொல்லியும் அழைப்பது வழமை).

---  ஓம் சுமதி, சுமதி அழகான பெயர்.......மூன்று வருடங்கள் இருக்கும்.

--- உனக்கு இந்த வேலை நல்லா பிடித்திருக்குது போல ரசித்து வண்டி ஓட்டுவதுபோல் தெரிகிறது.

--- ரொம்பப் பிடிக்கும் சுமதி  ஆனால் இந்த வாரத்துடன் எனது வேலை ஒப்பந்தம் முடிவடைகிறது. இனி வேறு வேலை தேட வேண்டும்....

--- எதற்காக வேலையை விடுகிறாய்.

--- எங்கள் கொம்பனியை  வேறொரு கொம்பனி வாங்கியிருக்கிறார்கள். அவர்களின் கொம்பனி பாரிசில் இருந்து வெகு தூரத்தில் இருக்கிறது அதுதான் சிலரை சம்பளத்துடன் நிப்பாட்டுகிறார்கள்.

--- இதற்கு முன் நீ என்ன வேலை செய்தனி.

--- நான் முன்பு ஒரு தோல் ஆடைகள் தைக்கும் பக்டரியில் வேலை செய்தேன். சில நாட்களில் அந்த தோல் சுவாசம் எனக்கு அலர்ஜி ஆகி விட்டது.அதனால் அதை விட்டுட்டு இந்த வேலையில் சேர்ந்தேன்.

--- அப்படியா.....அதற்குள் வானும் அவர்களது பொதி இருக்கும் களஞ்சிய அறைக்கு வந்து விட்டிருந்தது.

                                                அங்கிருந்த அவர்களின் பார்சல்கள், பெட்டிகள் எல்லாம் எடுத்து வானில் ஏற்றிவிட்டு அருகே இருந்த கடற்கரையில் ஒரு நல்ல ரெஸ்டூரன்ரில் போய் மதிய உணவை சாப்பிட்டபின் பில் குடுக்கப் போன காபிரியேல்லை சுமதி தடுத்து தானே பணமும் டிப்ஸும் குடுக்கிறாள். சிறிது ஓய்வெடுத்தபின் இருவரும்  பரிசுக்கு திரும்பி வருகிறார்கள்.

                                           ஏன் சுமதி நீங்கள் இவ்வளவு பொருட்கள் இறக்குமதி செய்திருக்கிறீர்கள் ஏதாவது ஒன்லைனில் விற்பனை செய்கிறீர்களா......

--- இல்லை கபிரியேல்,நான் சமீபத்தில்தான் லா சப்பலில் ஒரு தையற்கடை திறந்திருக்கிறேன்.அதற்குத்தான் இவையெல்லாம். இனியும் மலேசியா சிங்கப்பூரில் இருந்தெல்லாம் பொருட்கள் இறக்குமதி செய்ய வேண்டும்.

---வெறும் தையற்கடை மட்டுமா.

--- தையற்கடையுடன் டெக்ஸ்ட்டைலும். இப்போது நாங்கள் அங்குதான் போகிறோம், அப்போது நீ பார்க்கலாம்.

மேலும் நீ விரும்பினால் கொஞ்ச நாள் எனது கடைக்கு வந்து வேலை செய்யலாம். பின்பு உனக்குப் பிடித்த வேலை கிடைத்ததும் தாராளமாக நீ விலகிச் செல்லலாம்.

--- ஓ.....நீங்கள் இவ்விதம் சொன்னதுக்கு நன்றி சுமதி, ஆனால் நான் யோசித்து பதில் சொல்கிறேன்.

 

இன்னும் தைப்பார்கள்......!  🥽

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, suvy said:

மேலும் நீ விரும்பினால் கொஞ்ச நாள் எனது கடைக்கு வந்து வேலை செய்யலாம். பின்பு உனக்குப் பிடித்த வேலை கிடைத்ததும் தாராளமாக நீ விலகிச் செல்லலாம்.

தம்பிக்கு வெள்ளி திசை வேலை செய்ய போகுது போல.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு தாயன்பின் நாய் நேசம் . .......!   🙏
    • கண்ணருகே வெள்ளி நிலா ........ மஞ்சுளா  &  அசோகன் ........!  😍
    • வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : சொன்ன படி கேளு மக்கர் பண்ணாத எத்தனை வேலை இருக்கு அத்தனையும் உங்கப்பனா செய்வான் நான் தான செய்யணும் காலைல தோப்பு போய்ட்டு போனது வந்தது பாக்கணும் அப்றம் இங்க வந்து தவுடு வைக்கணும் தண்ணி கட்டனும் அப்பறம் வயலு வாய்க்கா ஒன்னா ரெண்டா போ போ ஒழுங்கா சொன்னத கேளு   ஆண் : சொன்ன படி கேளு மக்கர் பண்ணாதே என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே அரைச்ச பருத்தி கொட்ட புண்ணாக்கு நான் தாரேன் அகத்தி கீர கட்டு அவுக்காம நான் தாரேன் அட ராமா ராமா ராமா ராமா ஓ ஓ ஓ டேய் ஆண் : ஏன்டி என் வெள்ளையம்மா முட்டை முன் போல இல்லையம்மா ஆண் : சேவல் கிட்ட நீயும் கொஞ்சி குலாவ வேணும் கொஞ்சமா நீயும் போனா குஞ்சுகள் எங்க தோணும்   கதிரு கதிரு நல்ல வருது வருது அடேய் மருது மருது அத மேய்ஞ்சா தவறு என் சாட்டை கம்பு நீளம் பாத்திருக்க நீயும் அட டா டா டா சி சொன்ன படி கேளு ஆண் : உள்ளூரு காளை எல்லாம் நீ வேணான்னு சொல்லலையா நெல்லூர் காளைகிட்ட உன்ன நான் கொண்டு சேக்கலையா ஆண் : உன் வாடி பட்டி வம்சம் தாடிகொம்புக்கு போச்சு உன் கன்னுகுட்டி அம்சம் கண்ணுங்கபடலாச்சு அடி சரசு சரசு பெரு பெருசு பெருசு அந்த பழசு பழசு அத மறந்தா தவறு என் சாட்டை கம்பு நீளம் பாத்திருக்க நீயும் அட டா டா டா சி சொன்ன படி கேளு ........!   --- சொன்ன படி கேளு ---
    • அர்ச்சுனா அவசரப்பட்டு இப்போது பாதை மாறி பயணிப்பதாகவே எனக்கு படுகிறது.  தான்தோன்றித்தனமாக யாழ் வைத்தியசாலைக்கு சென்று சத்திய மூர்த்தியை சந்தித்ததும், அங்கு ஊழியர்களுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதும் தப்பு. எதிராளிகளை பழிவாங்குவதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இவர் பெற்றுக்கொண்டாதாக எண்ணத்தோன்றுகிறது.  அநீதியை தட்டிக்கேட்பதற்கு சரியான வழிமுறைகளை பின்பற்றாமல், தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அனைத்தையும் ஒரு நாளிலேயே  சரிசெய்துவிடலாம் என்று எண்ணி செயலாற்றுவது முற்றிலும் மடமை.  அர்ச்சுனாவின் இந்த வக்கிர போக்கும் ஒரு அதிகார துஷ்பிரயோகம் தான். நீதியை நிலைநாட்ட புறப்பட்டவர் எக்காலக்கட்டத்திலும் பண்பு தவறி நடக்கவோ அராஜகத்தை கையில் எடுக்கவோ கூடாது. அதைத் தமிழ் மக்களும் நீண்டகாலத்துக்கு சகித்துக்கொள்வார்கள் என்று கூறமுடியாது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.