Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/2/2023 at 18:46, நிலாமதி said:

ஒரு குடும்பத்தின் கதை சொல்ல வெளிக்கிட்டு "வீட்டுக் காரனையும்"  கையோடு கூடி வந்துள்ளீர்கள்.   தொடருங்கள் வேடிக்கையை  வாசிப்போம். 

வீட்டுக்காரர் பாவம், கொஞ்சம் சபல புத்தி, இனி வருவாரோ தெரியவில்லை......! 😂

On 13/2/2023 at 23:10, குமாரசாமி said:

நம்ம தல லேசில கதை சொல்லாது. கதை சொல்ல வெளிக்கிட்டால் ஒரே அதிரடிதான். :beaming_face_with_smiling_eyes:

சமூகக்கதை பிரமாதம் தொடருங்கள். :red_heart:

நாயகன் மீண்டும் வாறார் :smiling_face_with_heart_eyes:
நம்ம தையல் நாயகி :cool:

இது போன்ற ஊக்கங்கள் கதையை தொடர மகிழ்சியாக இருக்கும்.....நன்றி கு. சா.....!   😂

On 14/2/2023 at 02:48, nunavilan said:

தையல் கதை நகைச்சுவையோடு சுப்பராக போகிறது. லா சப்பலில் கடை போடுறாவோ இல்லையோ என்பதை பாத சனி முடிவெடுக்கும் போல.

வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி நுணா .........!  👍

On 14/2/2023 at 03:50, புங்கையூரன் said:

எனக்குத் தெரிஞ்சிருந்த கொஞ்ச நெஞ்ச சாதக அறிவையும் கதை உடைச்சுப் போட்டுது…! மிகவும் முக்கியமான மனுசன் குரு பகவான்! அவரே ஆறாமிடத்தில மறைஞ்சு போனால் சாதகி எங்கே போய் மறைவதாம்?

சரி…தொடருங்கள், சுவியர்…!

சனியை குரு பார்த்தால் அவர் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்......குரு மறைந்ததினால் அவர் நிறைய குத்தாட்டம் போடத்தான் செய்வார்.........!😂

  • Replies 93
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15/2/2023 at 10:59, suvy said:

தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(3).

"லா சப்பல்"  யூரோப் மட்டுமன்றி உலகில் இருக்கும் புலம்பெயர்ந்தவர்கள் எல்லோருக்கும் அது ஒரு மயக்கும் சொர்க்கம். அங்கிருந்து மனைவி அல்லது காதலியை கையைக் கோர்த்துக் கொண்டு  சிறிது தூரம் நடந்து சென்றால் கூடப் போதும் உலக அதிசயமாம் ஈபிள்டவர் கண்முன் தெரியும். அந்த இடத்தில் ஒரு சதுர அடி இடம் எடுப்பதே பெருங் கஷ்டம். சுரேந்தரும் சுமதியும் பல தரகர்கள், நண்பர்கள் எல்லோரிடமும் சொல்லி சொல்லி ஒரு மாதிரி கடையொன்று வாடகைக்கு எடுத்திருந்தார்கள். அந்தக் கடைக்கு கீழேயும் சாமான்கள் வைத்து எடுக்க சௌகரியமாக பாதாள அறையொன்று உண்டு.கடையை அவர்கள் ஒரு தகுதிவாய்ந்த கம்பனிமூலமாக தமது வேலைகளுக்கு ஏற்றவாறு திருத்தி,பாதாள அறை உட்பட வர்ணங்கள் பூசி அங்கு தமக்கும் ஒரு ஆபிஸ் அறையும், நிலைக் கண்ணாடியுடன் உடைகள் மாற்றும் அறையும் அமைத்து முன்பக்கம் விராக்கிகள்,கண்ணாடி அலுமாரிகள் எல்லாம் பொருத்தி விட்டிருந்தார்கள்.

                                           கடைக்கு "லக்கி டெய்லரிங் அன்ட் டெக்ஸ்டைல்ஸ்" என்று பெயர்பலகையும் நியான் லைட்டுடன் பூட்டி விட்டிருந்தார்கள். பின் வங்கியிலும் கடன் எடுத்து நான்கு நவீன மாடல் தையல் மிஷின்களும் இன்னபிற சாமான்களும் வாங்கிப் போட்டிருந்தார்கள். இன்னும் 15/20 நாளில் கடை திறப்புவிழா செய்யுமளவுக்கு வேலைகள் முடிந்து விட்டிருந்தன.

                                                       சுமதி தையல்கடை திறக்கப் போகிறாளாம் என்னும் செய்தி அவளது உறவினர்கள் நண்பர்கள் வட்டாரத்தில் "அணைந்த எரிமலையாய் புகைந்து அமேசன் காட்டுத் தீயாய் " வியாபித்து அடுத்து வந்த கலியாணவீடு,சாமத்திய வீடு,பிறந்தநாள் கொண்டாட்டங்களில் எல்லாம் முக்கியமான பேசுபொருளாகி இருந்தது. அன்று காலை பத்து மணியிருக்கும் சுமதி தொலைக்காட்சியில் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல்  சீரியஸாக பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கைத்தொலைபேசி "ரஞ்சிதமே"என்று அழைக்கிறது.

---ஹலோ....ஓ....ஓ  நான் சுமதி யார் நீங்கள் என்று கேட்க ,  அக்கா அது நான்தான் பிரேமா நீங்கள் வீட்டிலேயே இருக்கிறீங்கள். உங்களிடம் ஒரு விஷயம் கதைக்க வேணும் .....

---ஓம்....இண்டைக்கு விடுமுறைதானே வீட்டில்தான் நிக்கிறன், என்ன விஷயம் சொல்லுங்கோ....

--- இருங்கோ அக்கா, நான் பக்கத்துலதான் நிக்கிறன் ஐந்து நிமிசத்தில அங்கு வாறன் போன் கட்டாகின்றது. தொடர்ந்து சற்று நேரத்தில் அழைப்பு மணி ஒலிக்க சுமதி கதவைத் திறக்கிறாள். பிரேமா கையில் ஒரு சொக்கிலேட் பெட்டியுடன் உள்ளே வருகிறாள்.

--- வாங்கோ பிரேமா ! வந்து இருங்கோ, கண்டு கனகாலம். என்ன குடிக்கிறீங்கள்.

--- பிரேமாவும் சொக்கிலேட் பெட்டியை அவளிடம் கொடுத்து விட்டு  கொஞ்சம் தயங்கியபடி அது வந்து சுமதியக்கா நீங்கள் "லா சப்பலில்" தையல்கடை திறக்கப் போவதாக அறிந்தனான்.அதுதான் உங்களிடம் வேலை இருக்குமோ என்றுதான்......எனக்கு தையல் வேலை எல்லாம் தெரியும்.

--- சுமதியும் அவளிடம், பிரேமா  நான் அங்கு தையல்கடை திறக்கத்தான் போறன். ஆனால் அதுக்கு "pole emploi " (ஆட்களின் தகுதிக்கு ஏற்றபடி வேலை எடுத்துக் கொடுக்கும் அதிகாரமுள்ள அரசாங்க அமைப்பு) மூலமாகத்தான் ஆட்கள் எடுக்க பதிஞ்சிருக்கிறன். மேலும் எனக்கு புதிய மொடல் மிசின்களில் ஆடைகளை நன்றாக வெட்டித் தைக்கத் தெரிந்த ஆட்கள்தான் வேணும். பெண்களின் சட்டைகள், ப்ளவுஸ்கள் மட்டுமன்றி பிள்ளைகளின் உடுப்புகளும் தைக்கத் தெரிந்திருக்க வேணும். நேற்றுத்தான் அப்படி ரோகிணி என்றொரு பிள்ளையையும் எடுத்தனான்.

                                       அதுசரி நீங்கள் இங்கு தையல் வகுப்புகளுக்கு போன சான்றிதழ்கள் ஏதாவது வைத்திருக்கிறீங்களோ.

--- இல்லையக்கா , நான் ஊர்ல தையல் வேலை எல்லாம் செய்தனான்.அக்கம் பக்கம் எல்லாம் நான்தான் தைத்துக் குடுக்கிறது. நீங்களும் இங்கு எல்லாருக்கும் தைத்து குடுக்கிறனீங்கள் என்று எனக்குத் தெரியும்.நீங்கள் கொஞ்சம் கொஞ்சம் டிசைன்கள் காட்டித் தந்தால் நான் கெதியா தச்சுப் போடுவன்.

---பிரேமா நீங்கள் கடைசியா எப்ப தைத்தனீங்கள். எனக்குத் தெரிந்து நீங்கள் இங்கு வந்தே பத்து வருடங்கள் இருக்கும் போல .......

---ஓமக்கா, கொஞ்சம் டச் விட்டுப் போச்சு என்டாலும் நான் சமாளிச்சுடுவன்.

--- அதுக்கில்லை பிரேமா ஏற்கனவே 5 / 6 பேர் என்னிடம் வேலை கேட்டிருக்கினம்.அதிலும் எனக்கு இந்த ஆபிரிக்கன்ஸ் , அல்ஜீரியன்ஸ் ஆட்களின் ஆடைகளும் தைக்கத் தெரிந்திருக்க வேணும். எதுக்கும் உங்கட பெயரையும் நான் குறித்து வைத்து கொள்கிறன்.  பின்பு வளமையாய் கதைத்து விட்டு போகும் போது அக்கா நானும் கடைக்கு கிட்டத்தான்  இருக்கிறன் இருப்பது நிமிச நடை கடைக்கு வாறதுக்கு  என்று சொல்லி விட்டு போகிறாள்.

                                         அதுவரை அறைக்குள் இருந்து இவர்களின் உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்த சுரேந்தர் வெளியே வந்து சுமதியிடம், இஞ்ச பாருமப்பா நீங்கள் ஒரேயடியா "pole emploi" வில் இருந்து ஆட்கள் எடுத்தால் அவர்கள் கண்டதுக்கும் "லோ " கதைப்பினம். இவர்களை மாதிரி ஒன்றிரண்டு பேர் இருப்பதுதான் நல்லது. பயபக்தியுடன் பணிவாக வேலை செய்வினம் என்று சொல்ல, ஓமப்பா நீங்கள் சொல்வதும் சரிதான் என்று சுமதியும் ஆமோதிக்கிறாள்.

இன்னும் தைப்பார்கள் ..........!  👗

Batik Sarong - Shirt Kits for Men - Alponso Batiks

Batik Sarong - Shirt Kits for Men - Alponso Batiks Batik Sarong - Shirt Kits for Men - Alponso Batiks Batik Sarong - Shirt Kits for Men - Alponso Batiks Batik Sarong - Shirt Kits for Men - Alponso Batiks Batik Sarong - Shirt Kits for Men - Alponso Batiks

தையல் கடைக்கு... தமிழ்ப் பெயரை, வைக்காத... 
சுவியருக்கும், சுமதிக்கும் வன்மைமாயன கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். 😎

கதை சூடு பிடிக்கத்  தொடங்குகின்றது தொடருங்கள் ✍️ சுவியர்.
வாசிக்க ஆவலாக உள்ளோம்.  

அந்தக் கடையில்... தனிய பெண்களுக்கான பிளவுஸ் மட்டும்தான் தைப்பார்களா. 😂
ஆண்களுக்கு... சாரம் தைத்து தர மாட் டார்களா. 🤣
ஓம் என்றால்... பத்து பற்றிக் சாரம் தைக்கிற பிளான் இருக்கு. 😁

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(6).

                                                              கடந்த இரண்டரை மாதங்களாக கடை நல்ல வருமானத்துடன் நடந்து கொண்டிருக்கு. சுமதியும் காலையில் தனது வேலைக்கு போவதும், மாலையில் கடைக்கு வந்து வேலையும் செய்து, கணக்கு வழக்கெல்லாம் பார்த்துக் கொண்டு போவதும் வழமை. கடையில் பிரேமா, ரோகிணி, மிருதுளா மற்றும் கபிரியேல் வேலை செய்கிறார்கள். மூன்று பெண்களும் காலை 8:30 க்கு வேலைக்கு வந்து மாலை 5:00 மணிக்கு கிளம்பி விடுவார்கள்.கபிரியேல் மட்டும் மதியம் 13:00 மணிக்கு வந்து 20: 00 மணி வரை இருந்து சுமதியுடன் சேர்ந்து வேலை செய்து விட்டு கடையை பூட்டிக்கொண்டு போவார்கள். சுமதி அப்படி அவர்களின் வேலை நேரத்தை அமைத்திருந்தாள். மிருதுளாவும், சுமதியும் ஆடைகள் வெட்டித் தைப்பதைப் பார்த்து பார்த்து கபிரியேலும் தைக்கப் பழகியிருந்தான்.அதற்கு அவன்முன்பு தோல் பக்டரியில் வேலை செய்ததும் ஒரு காரணம். லா சப்பலில் செவ்வாயில் இருந்து ஞாயிறுவரை கடைகள் திறந்திருக்கும். திங்கள் பெரும்பாலான கடைகள் பூட்டியிருக்கும்.

                                    அன்று செவ்வாய் கிழமை. பிரேமாவிடம் ஒரு வேலை சொல்வதற்காக சுமதியும் காலை 8:40 க்கு கடைக்குப் போன் செய்கிறாள். யாரும் போன் எடுக்கவில்லை. என்ன பார்ப்பம் என்று காரில் 9:00 மணிக்கு வந்திருந்தாள். கடை பூட்டி இருக்குது. திறப்புகளில் ஒரு செட் பிரேமாவிடம் இருக்கும். பிரேமாதான் காலையில் எட்டரைக்கு கடை திறப்பது.அவள் இன்னும் வரவில்லை. தன்னிடம் இருந்த சாவியைப் போட்டு கடையை திறந்து விட்டு வேலை செய்யும்போது 9:15 க்கு மிருதுளாவும் ரோகிணியும் வருகின்றார்கள்.

--- என்ன மிருதுளா இப்ப வாறீங்கள்.நான் எட்டரைக்கெல்லோ கடை திறக்க வேண்டும் என்று சொன்னனான்.

--- இல்லை அக்கா நாங்கள் எட்டரைக்கு வந்திடுவோம்.ஆனால் பிரேமாவிடம்தான் சாவி இருக்கு. அவ 9:30 போல்தான் வந்து கடையை திறக்கிறவ.

--- இது எவ்வளவு நாளா நடக்குது.ஏன் நீங்கள் இதை எனக்கு முன்பே சொல்லவில்லை. சனி,ஞாயிறு நான் காலையில் கடைக்கு வரும்போது நீங்கள் மூவரும் எட்டரைக்கே வருகிறீர்கள் தானே.

--- சிறிது நேரம் இருவரும் பேசாமல் நிக்க ரோகிணி முன்வந்து, அது வந்து அக்கா கிழமை நாட்களில் அவ ஒன்பதரைக்குத்தான் வாறவ. ஏனென்று தெரியாது.

--- அப்ப மத்தியானம் என்ன செய்கிறனீங்கள்.

---  மத்தியானமும் அவ 11:30 க்கு வெளியே போவா பின் 14:30 க்குத்தான் வாறவ. நானும் மிருதுளாவும் இங்கேயே சாப்பிட்டுட்டு தொடர்ந்து வேலை செய்துகொண்டிருப்போம். 13:00 மணிக்கு கபிரியேலும் வந்திடுவான்.

--- சரி....அவனின் நேர அட்டவனை 13:00 லிருந்து 20:00 வரை என்று சொல்லி விட்டு சரி நீங்கள் போய் வேலை செய்யுங்கோ. அவர்கள் சென்று தங்களது மிஷின்களில் அமர்ந்ததும் பிரேமா கையில் ஒரு பெரிய பையுடன் அசைந்து அசைந்து வருகிறாள். தூரத்தில் வரும்போதே கடை திறந்திருப்பதைக் கண்டு இன்னும் வேகமாக  அரக்கப் பரக்க ஓடி வருகிறாள். கடைக்குள் வந்த பிரேமா எதிர்பாராமல் அங்கு சுமதியை கண்டதும் திகைத்துப் போய் விட்டாள். சுமதியும் எதுவும் தெரியாததுபோல் இருக்க அவள் சென்று தனது மிஷினில் அமர்ந்து கொள்கிறாள்.

                                                 சிறிது நேரம் கழித்து சுமதி பிரேமாவிடம் என்ன பிரேமா இவ்வளவு தாமதமாக வாறீங்கள்.

--- அது சுமதி திடீரென்று வீட்டில் விருந்தாளிகள் வந்திட்டினம், நேற்றிரவு படுக்க நேரமாயிட்டுது. அதுதான் வரத் தாமதமாயிட்டுது.

--- நீங்கள் போன் செய்திருந்தால் நான் வந்து திறந்திருப்பேன். அல்லது மிருதுளாவிடம் திறப்பைக் கொடுத்திருக்கலாம்.

--- நான் அதை யோசிக்கேல்ல சுமதி.

---  கடை திறந்து இந்த இரண்டரை மாதத்தில்  நீங்களும் ரோகிணியும் கன விடுமுறைகள் எடுத்திருக்கிறீங்கள். பத்தாதற்கு இடையிலயும் சோற் லீவுகளும் எடுக்கிறீங்கள். இப்படியென்றால் நான் என்னென்று கடையை நடத்துவது.உங்களை நம்பித்தானே நான் இந்தக் கடையை விட்டுட்டு போறனான்.சரி வேலையை செய்யுங்கோ. எனக்கு வேலை இருக்கு நான் போட்டுவாறன். வெளியே போகிறாள்.....!

                                                                வெளியே வந்த சுமதி தனது சித்தப்பா முறையான ஒருவரிடம் போகிறாள். அவர் இப்போது பென்ஷன் எடுத்துக்கொண்டு இருக்கிறார்.முன்பு ஒரு சொசைட்டியில் இரவுக்  காவலாளியாக  ஒரு பெரிய நாயும் வைத்துக்கொண்டு வேலை பார்த்தவர். அந்த நிர்வாகம் அவருக்கும் நாய்க்கும் தனித்த தனியாக சம்பளம் கொடுத்து வந்தது. அவர் ஒய்வு பெற்ற சில மாதங்களில் அந்த நாயும் வயதாகி இறந்து விட்டது.

--- என்ன பிள்ளை திடீரென்று உனக்கு சித்தப்பாவின் ஞாபகம் வந்திருக்கு.

--- அதொன்றுமில்லை சித்தப்பா நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்.

--- என்ன உதவி, என்ன செய்யவேணும் சொல்லு.

--- நான் கடை திறந்தது உங்களுக்கு தெரியும்தானே,அங்கு நாலுபேர் வேலை செய்கிறார்கள். அவர்கள் வேலைக்கு எந்தெந்த நேரம் வருகினம், எப்பப்ப வெளியே போக்கினம் என்றெல்லாம் ஒரு இரண்டு கிழமை வேவு பார்த்து எனக்கு அப்பப்ப தெரிவிக்க வேண்டும். நீங்கள் கடைப்பக்கம் வந்தாலும் என்னை தெரிந்தமாதிரி  காட்டிக் கொள்ளக் கூடாது. சரியா ....!

--- அதுக்கென்ன துப்பறிய சொல்கிறாய் செய்திட்டால் போச்சு.

--- நான் சித்தப்பா, என்ர வேலைக்கு காலம போயிட்டு பின்னேரம்தான் கடைக்கு வாறானான். வந்து பார்த்தால் அங்கு சரியாக வேலை நடப்பதில்லை போல் தெரிகிறது.அதுதான் உங்களிடம் வந்தனான்.

--- ஓம்.....எனக்கு விளங்குது பிள்ளை என்று சொல்லிவிட்டு அவர் குடுத்த ஜூசையும் குடித்து விட்டு சுமதி வீட்டுக்கு போகிறாள்..........!

இன்னும் தைப்பார்கள்..........!  🎽

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு வியாபாரத்தைத் தொடங்கி நடத்தும் போது வதும் பிரச்சனைகளைத் தெளிவாக அறிந்திருக்கின்றீர்கள். அதுவும் மூளை கூடிய எமது இனத்தவரைக் கொண்டு நடத்துவது இன்னும் கஷ்டம். தொடருங்கள்…!சுமதி நன்றாகக் கையாள்கிறார்..!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

நல்ல சுவாரசியமான கதை!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறுகதை போட்டிகளுக்கும் எழுதலாமே சவியண்ண..முயற்சி செய்யுங்கள்.✍️🖐️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/2/2023 at 11:54, ஏராளன் said:

தையலாள் என்றும் ஒரு பெயர் இல்லத்தரசிகளுக்கு உண்டெல்லோ.
கதை நன்றாகப் போகிறது அண்ணை, முடிவு(சனி) தான் என்னாகுமோ?

ஓம்.....அவையள் தான் தைக்கினம்........நன்றி வருகைக்கும் கருத்துக்கும் ஏராளன் ........!  👍

On 14/2/2023 at 13:32, பிரபா சிதம்பரநாதன் said:

85-A9-AE5-D-19-EA-4356-B1-A8-E2-E7-B3193
தையல் கதை/வகை பலவிதமாக இருக்கும் போல உள்ளது..கதைக்கு நன்றி சுவி அண்ணா!!

உங்களின்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.......கொஞ்சம் ஊறுகாய் உணவுக்கு மட்டுமல்ல கதைக்கும் தேவையாய் இருக்கிறது.......!  😁

On 16/2/2023 at 14:26, ஈழப்பிரியன் said:

அப்ப பிரோமா செலக்ரட்.

சுவி நீங்க தையலிலும் கில்லாடி போல கப் எல்லாம் வைத்து தைக்கிறீங்க.

என் நிலைமை உங்களுக்கென்ன தெரியும், மனுசியைக் கூட்டிக் கொண்டு தையல் கடையெல்லாம் ஏறி இறங்கியதில் வந்த அனுபவம்தான்.......!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவி. அண்ணா கதை நன்றாக இருக்கிறது..👍...எதையாவது பார்த்து எழுதுகிறீர்களா    ?🤣😂 இல்லை உங்கள் சுய ஆக்கமா?.  சுரேந்தர் ஏன் கடைப்பக்கம். வருவதில்லை  ?  இவ்வளவு திறமையுள்ள சுமதிக்கு ஒரு மெஷினைப். பொருத்தி வருகிற......போகிற.    நேரத்தை பதிவு செய்ய தெரியவில்லை… வாழ்த்துக்கள் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

சுவி. அண்ணா கதை நன்றாக இருக்கிறது..👍...எதையாவது பார்த்து எழுதுகிறீர்களா    ?🤣😂 இல்லை உங்கள் சுய ஆக்கமா?.  சுரேந்தர் ஏன் கடைப்பக்கம். வருவதில்லை  ?  இவ்வளவு திறமையுள்ள சுமதிக்கு ஒரு மெஷினைப். பொருத்தி வருகிற......போகிற.    நேரத்தை பதிவு செய்ய தெரியவில்லை… வாழ்த்துக்கள் 

கந்தையர் சும்மா அவசரப் படக்கூடாது, அவ இப்பதானே கடை திறந்து பிரச்சினைகளை சந்திக்கிறா........வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே......!   😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(7).

                                                                          கடை வழமைபோல் நடந்து கொண்டிருக்கு. கடைச் சாவி இப்போதும் பிரேமாவிடம்தான் இருக்குது. சுமதி பின்னேரம் வரும்போது அநேகமாக பிரேமா ரேணுகா கடையில் இருக்க மாட்டார்கள். மிருதுளாவும் கபிரியேலும்  வேலை செய்துகொண்டு இருப்பார்கள். பின் மிருதுளாவும் அன்றைய கணக்கு வழக்குகளை சுமத்தியிடம் விபரித்து விட்டு போவது வழக்கம். கபிரியேலும்  சுமதியும் அதன்பின் 20:00 மணிவரை வேலை செய்துவிட்டு கடையை பூட்டிவிட்டு செல்வார்கள்.

                                                                                                இரு வாரங்களின் பின் சித்தப்பா அவள் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் ஆதாரங்களுடன்  கூறிய தகவல்களைப் பார்த்த போது சுமதிக்கு தலை வெடித்து விடும் போல் இருந்தது. சித்தப்பா கடையில் நடப்பனவற்றை தன்னிடமிருந்த சிறிய ரகசிய கமராவில் பதிவு செய்து வைத்திருந்தார். அவர் தந்த தகவல்கள் படி.........!

---  கடை காலை 09:00 / 09:30 மணிக்கு மேல்தான் தினமும் பிரேமா வந்து கடை திறக்கிறாள். அதுவரை ரோகிணி, மிருதுளா வீதியில் அல்லது தேநீர் கடைகளில் இருக்கிறார்கள். பல வாடிக்கையாளர்கள் கையில் பார்சல்களுடன் வந்து பார்த்து விட்டு வேறு கடைகளுக்கு செல்கிறார்கள்.

--- பின் அவர்கள் மூவரும் தேநீர் பிஸ்கட் சாப்பிட்டு கதைத்து வேலை தொடங்க மேலும் அரை மணிக்கு மேல் ஆகிவிடும்.

--- அப்போது வரும் வாடிக்கையாளர்களிடம் அன்பாகவும் மரியாதையாகவும் கதைத்து ஓடர்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். அதில் ஒரு குறையுமில்லை.

--- அப்பப்ப சில நாட்களில் மட்டும் ரோகிணி தலையில் விக்ஸ் போன்ற ஓயின்மெண்ட் பூசிக்கொண்டு கீழ் அறைக்குப் போகிறாள். மிஷினில் இருந்து வேலை செய்வது குறைவு.

--- மிருதுளா எப்போதும் வயர்லெஸ் போனில் கதைத்தபடிதான் அல்லது பாட்டு கேட்க்கிறாளோ தெரியவில்லை .....வேலை செய்கிறாள்.  தினமும் மாலையில் கடைக்கு வெளியே சென்று ஒரு இளைஞனுடன் கதைத்துக் கொண்டிருந்து விட்டு வருகிறாள். கடந்த சில நாட்களில் அவர்கள் இருவரும் வீதியால் போகிறவர்கள் திரும்பிப் பார்க்குமளவு நிறைய சண்டை பிடிக்கிறார்கள்.

---காலையில் 11:30 மணிக்கெல்லாம் பிரேமா வெளியே போய் விடுகிறாள். அவளைப் பின்தொடர்ந்து கவனித்ததில் அவள் நேராக ஒரு சிறுவர் பாடசாலைக்கு சென்று இரண்டு சிறு பிள்ளைகளை வீட்டிற்கு கூட்டி செல்வதும் பின் 13:30 க்கு மீண்டும் அவர்களை பாடசாலையில் விட்டுவிட்டு 14:30 மணியளவில் கடைக்கு வருகிறாள்.மாலை 16:45 க்கு மீண்டும் வீட்டுக்கு செல்கிறாள்.

--- ரோகிணியும் மிருதுளாவும் 13:00 மணிக்கு கபிரியேல் வந்ததும் தாம் கொண்டுவந்த உணவையோ அல்லது கடையிலோ சாப்பிடுவார்கள்.

--- கபிரியேல் மட்டும் தினமும் சரியாக 13:00 மணிக்கு வேலைக்கு வருகிறான்.ஒரு நிமிடமும் சும்மா இருப்பதில்லை.நன்றாக வேலை செய்கிறான்.

--- கடையில் மிருதுளாதான் ஓடர் துணிகளை வெட்டுகிறாள். கபிரியேலும் ரோகிணியும் அவற்றை தைக்கிறார்கள்.

--- ஆட்கள் பொருட்கள் வாங்க வரும்போது ரோகிணி கீழ் அறையில் இருந்து வந்து வியாபாரம் செய்துவிட்டு போகிறாள்.

--- பிரேமாவுக்கு இன்னும் மிஷின்களை சரியாக செட் செய்து தைக்கத் தெரியவில்லை.மிருதுளாவோ ரோகிணியோதான் அவளுக்கு உதவி செய்கிறார்கள். மேலும் அவள் தனது வீட்டில் இருந்து துணிகளை இங்கு கொண்டுவந்து தைத்துக் கொண்டு போவதுபோல் தெரிகிறது.

--- பின் மாலை 17:00 மணிக்கு நீ வந்து விடுகிறாய். நீயும் கபிரியேலும் 20:00 வரை வேலை செய்து பின் கடையை பூட்டி விட்டு செல்கிறீர்கள்.

--- மேலும் கபிரியேல் பகலில் என்ன செய்கிறான் என்று நான் கவனித்ததில் அவன் விரைவில் ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து விடுவான் போல்தான் தெரிகிறது.நன்கு நாட்களுக்கு முன் அவன் பரிசுக்கு வெளியே இருக்கும் ஒரு லொறிக்  கம்பெனியில் ஒரு மிக நீளமான (long vehicle) லொறியை அவர்களுக்கு ஓடிக் காட்டியதைப் பார்த்தேன். அவனிலும் பிழையில்லை காரணம் இளம் பொடியள் இப்படி ஒரு அறைக்குள் இருந்து வேலை செய்வது மூச்சு முட்டுறது மாதிரி இருக்கும் அவங்களுக்கு.

                                                           அவரிடமிருந்து அவ்வளவு தகவல்களையும் வீடியோக்களையும் தனது போனுக்கு மாற்றிவிட்டு எழும்ப சுரேந்தர் வந்து வாங்கோ மாமா, இருந்து சாப்பிட்டுட்டு போங்கோ.

--- வேண்டாம் மருமோன் அங்க பிரிட்ஸில நேற்றையான் மீன் குழம்பு இருக்கு நான் போறன்.

--- அதெல்லாம் நாளைக்கு சாப்பிடலாம் என்று சொல்லிவிட்டு ஒரு கிளாசில் சிகப்பி நிற வைனை குடுத்து விட்டு இது கையாக் (gaillac) வைன் மாமா நல்லாய் இருக்கும். நான் மாசிக் கருவாட்டு சாம்பலுடன் பிட்டும் மற்றும்  இறால் குழம்பும்  வைத்திருக்கிறன் சூப்பராய் இருக்கும்.

--- இஞ்சேருங்கோ, இரவாச்சுது பிறகு மாமா தனியா வீட்டுக்கு போகவேனும், கணக்க ஒண்டும் எடுக்கிறேல்ல கொஞ்சமா எடுத்துட்டு போய் சாப்பிடுங்கோ இரண்டு பேரும் என்று சொல்லி விட்டு சுமதி போகிறாள்.

இன்னும் தைப்பார்கள்.........!  🎀

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(8).

அன்று இரவு சுமதிக்கு தூக்கமே வரவில்லை.அங்கும் இங்கும் புரண்டு புரண்டு படுக்கிறாள். அடிக்கடி எழுந்து போய் தண்ணீர் குடித்து விட்டு வருகிறாள். அவளைப் பார்க்க சுரேந்தருக்கு பாவமாய் இருக்கிறது. முன்பென்றால் இந்த நேரம் நல்ல உறக்கத்தில் இருப்பாள்.

--- என்னப்பா இந்தக் கடை திறந்ததில் இருந்து நீங்கள் நிம்மதியாய் உறங்கி நான் பார்க்கேல்ல. ஏன் கடையில் ஏதாவது பிரச்சனையோ.

--- அதில்லையப்பா, ஆட்கள் சரியாக வேலை செய்கிறார்களில்லை. இப்ப ஏன்தான் கடை திறந்தேன் என்று இருக்கு.

--- எல்லாம் அந்த சீட்டுக்காசு வந்ததால் வந்த வினை. இனிமேல் ஒரு சீட்டும் போடவேண்டாம். கொஞ்சம் பொறுத்து, நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம், இதெல்லாம் சரி செய்திடலாம், இப்ப நிம்மதியாக  தூங்கும்.

--- கணவனின் அந்த ஆறுதல் வார்த்தை அவளுக்கு இதமாக இருக்கிறது. சுரேந்தர் லேசில் ஒண்றிலையும்  தலையிடுவதில்லை. ஆனால் தலையிட்டால் மனுசன் அதில் ஒரு தீர்வு காணாமல் விடாது. மெதுவாக கொஞ்சம் எழுந்து அவன் மார்பில் தலை வைத்துப் படுக்க அவனும் தனது நீண்ட கரங்களால் அவளைத் தன்னுடன் சேர்த்து அனைத்துக் கொள்கிறான்.

                                                                    அன்று திங்கட்கிழமை. லா சப்பலில் கடைகள் எல்லாம் பூட்டியிருக்கு. சுரேந்தர் சொல்லியபடி சுமதியும் வேலைக்கு விடுமுறை போட்டிருந்தாள். இருவருமாக காலை 09:00 மணிக்கு கடைக்கு வருகிறார்கள். சற்று நேரத்தில் கடைகளுக்கு c c t v கமரா பொருத்துபவர்கள் வர இருவரும் அவர்களை கடைக்குள் அழைத்து செல்கிறார்கள்.உடனே வேலையைத் தொடங்கியவர்கள்,கடைக்கு உள்ளே வெளியே எல்லாம் கமரா பொருத்தி மேலும் சில இடங்களில் சின்னஞ்சிறிய ரகசியக் காமராக்களையும் அங்கு வேலை செய்பவர்களும் அறியாதவாறு பொருத்திவிட்டு, இவர்களது ஒவ்பீஸ் அறையில் சில சிறிய டீ .வீ களையும் பொருத்தி இருந்தார்கள். பின்பு இவர்களது போனுக்கும் போலீசுக்கும் தொடர்பு ஏற்படுத்தி விட்டு போகிறார்கள்.

                                       செவ்வாய்கிழமை வழமைபோல் வேலைக்கு வந்தவர்கள் கடைக்கு வெளியேயும் உள்ளேயும் கமராக்கள் பொருத்தி இருப்பதைப் பார்த்து விட்டு அது சாதாரணமானது தானே என்று பெரிதாக அலட்டிக் கொள்ளாமல்  தத்தமது வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

(1)  CDD : contrat à durée déterminée = வேலை ஒப்பந்தம்  முடிவடையும் காலம். முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் செய்யப்படும் ஒப்பந்தம். அது ஒரு மாதமோ,மூன்று மாதமோ, ஒரு வருடமோ, இரண்டு வருடமாகவும் இருக்கலாம். அந்தந்த திகதி முடிய அவர்கள் வேலையால் நிப்பாட்டுப் படுவார்கள். சில சமயம் புதுப்பிக்கப் படுவதும் உண்டு.

(2) CDI : contrat à durée indéterminée.= நிரந்தரமான வேலை ஒப்பந்தம்.

                                               தற்போது இவர்களின் கடையில் வேலை செய்ப்பவர்களின் காலம் மூன்று மாதங்கள். இந்த காலகட்டத்தில் முதலாளியும் அவர்களை வேளையில் இருந்து நிப்பாட்டலாம். அல்லது தொழிலாளியும் வேலை பிடிக்காதவிடத்து தாங்களே விட்டு விலகலாம். இவர்களுக்கு அந்த ஒப்பந்தகாலம் முடிய இன்னும் இரண்டு மூன்று நாட்களே இருந்தன.

                                                சுமதியும் இது சம்பந்தமாக தனது கணக்காய்வாளருடன் ( comptabilité) கலந்தாலோசித்துதான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.என்று பலதையும் நினைத்துக் கொண்டு தனது வேலையிடத்துக்கு காரில் போகிறாள். மனதில் இதே சிந்தனை. நான் எங்கே பிழை விடுகிறேன். ஏன் என்னால் இதை சரிவர நிர்வகிக்க முடியவில்லை. ஒரு சிறு கடையை வைத்திருக்கும் நானே இவ்வளவு சிரமப்படுகிறேன் என்றால் ஒவ்வொரு இடத்திலையும் ஒவ்வொரு கடையாக பல கடை வைத்திருப்பவர்களுக்கு எவ்வளவு பிரச்சினை இருக்கும். எல்லா இடத்திலும் இருபது , முப்பது பேர் என்று சம்பளத்துக்குத்தானே ஆட்களை வைத்து நடத்துகின்றார்கள். ஒருவேளை என்னால் கடையை நடத்த முடியாமல் போய் விடுமோ. தினமும் நானும் கபிரியேலும் ஐந்து மணியில் இருந்து எட்டு மணிவரை செய்யும் வேளையில் பாதியளவு கூட பகலில் இவர்கள் செய்யவில்லையே. இதோ இந்தக் கருக்கலில் காலை 04:30 க்கு நான் வேலைக்கு போய்கொண்டிருக்கிறேன். இவர்களுக்கு எட்டரைக்குத்தானே வேலை தொடங்குது, அதுக்கும் ஒழுங்காய் நேரத்துக்கு வருவதில்லையே.......நிறைய யோசிக்கிறாள்.

                                                                                                                                                                                                           வேலையிடம் வந்ததும் வண்டியை நிறுத்தி விட்டு கந்தோருக்குள் போகிறாள். அவள் வருவதற்கு முன்பே பெரும்பாலான தொழிலாளிகள் வந்திருந்தனர்.எல்லோரும் அவளுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு தத்தமது வேலையிடங்களுக்கு செல்கின்றனர். அவளது உதவியாளர் அன்று வேலைக்கு வந்தவர்கள், வராதவர்கள் மற்றும்  சுகயீன விடுப்பில் இருப்பவர்கள் என்று அனைவரின் அறிக்கையையும் கொண்டு வந்து அவளிடம் தருகிறார்.

இப்போது சுமதி  தனது கடைப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் மறந்து விட்டாள்.அந்த கம்பெனியன் மேலதிகாரியாக மாறிவிட்டிருந்தாள் .அப்போது அரை மணி நேரம் தாமதமாக இருவர் வேலைக்கு வருகின்றனர்.

--- அவர்கள் மன்னிக்கவும் மேடம், கொஞ்சம் தாமதமாகி விட்டது என்கிறார்கள்.

--- சுமதி தனது உதவியாளரைப் பார்த்து ஏன் இன்று மெட்ரொ,பஸ் எதுவும் ஓடவில்லையா. அப்படி ஒன்றும் இல்லை மேடம் எல்லாம் வழமைபோல் ஓடுகின்றன என்று அவர் கூறுகிறார்.  உடனே சுமதி அவர்களின் பக்கம் திரும்பி,நீங்கள் போயிட்டு நாளைக்கு வாங்கோ.உங்களின் இடங்களுக்கு ஆட்களை அனுப்பியாகி விட்டது.

--- கொஞ்சம் தயவு செய்யுங்கள் மேடம் இனிமேல் இப்படி நடக்காது என்கிறார்கள்.

--- உங்களுக்குத் தெரியும்தானே காலை 08:45 க்கு முன்பாக ஒவ்வொரு கந்தோர்களிலும் எமது கிளீனிங் வேலையை முடித்து விட்டு நாங்கள் வெளியேறிவிட வேண்டும் என்பது. நீங்கள் இப்படி தாமதமாய் வந்தால் எப்படி. ஒன்றும் செய்யேலாது நீங்கள் போகலாம். அவர்களும் கொஞ்ச நேரம் சோகமாய் நின்று விட்டு திரும்பிப் போகிறார்கள். இன்னொரு இளம் ஆபிரிக்கன் பெண் அங்கு ஒரு அழகிய சிறுமியுடன் நிக்கிறாள். சுமதியும் அவர்களை பார்த்து நீங்கள் ஏன் இன்னும் இங்கு நிக்கின்றீர்கள் என்று கேட்க உடனே உதவியாளர் அவளிடம்  அந்தப் பெண்ணை வேலை பழக pole emploi அனுப்பி இருக்கு.இவவின் ஒப்பந்தம் நேற்றுடன் முடிந்து விட்டது. அந்த சான்றிதழ் எடுக்கிறதுக்கு வந்திருக்கிறா. அது தயாராக அறையில் இருக்கு, நான் போய் எடுத்து வருகிறேன் என்று சொல்லி விட்டு போகிறார்.......!

இன்னும் தைப்பார்கள் ................!   🎽

  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, suvy said:

இன்னும் தைப்பார்கள் ................!   🎽

தைக்கட்டும்.....:thx:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

தைக்கட்டும்.....:thx:

சுவியருக்கு வாழ்க்கை நிறைய அனுபவங்களை அள்ளி இறைத்திருக்கின்றது போல கிடக்குது..!

ஏன் சுமதி இவ்வளவு அப்பாவியா இருக்கிறாவோ தெரியாது..!

நான் மட்டும் தான் ஒரு அப்பாவி என்று இவ்வளவு நாளும் நினைச்சிருந்தன்..! 

தைக்கட்டும்…!

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, suvy said:

இன்னும் தைப்பார்கள்

என்ன அடிக்கடி நுhல் அறுகுது போல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(9).

--- உன்னுடைய பெயர் என்ன.

--- கதீஜா மேடம். நீ போட்டிருக்கிற ஆடைகளும் அணிகலன்களும் அழகாய் இருக்கு. உனது ஊர் எங்கு இருக்கிறது.

--- நன்றி மேடம், எனது பெற்றோர் நைஜீரியாவை சேர்ந்தவர்கள்.ஆனால் நானிங்குதான் பிறந்து வளர்ந்தேன்.

--- அட இந்தச் சிறுமியும் அழகாக தலையலங்காரம் (தலையில் சின்னன் சின்னனாய் நிறைய பின்னல்கள் பின்னி அவற்றில் அழகழகான ரிப்பன் கட்டியிருந்தாள்). செய்திருக்கிறாள். யார் செய்தது. சிறுமியை கேட்க அவளும் இவளைக் கை காட்டுகிறாள்.

--- நல்லது இனி நீ என்ன செய்யப் போகிறாய்.

--- வேலை ஒன்று எடுக்கும்வரை மீண்டும் வகுப்புக்கு போக வேண்டும். இல்லையென்றால் pole emploi இரண்டு மாதம் காசை வெட்டி விடுவார்கள். வேலையொன்று கிடைத்தால் அங்கு போகத் தேவையில்லை, அவர்களுக்கு அறிவித்து விட்டு வேலைக்குப் போகலாம்.

--- எதுவரை படித்திருக்கிறாய்.

--- அவள் தனது பையில் இருந்து c .v  யை எடுத்துக் கொடுக்கிறாள். அதில் அவளது படிப்பு, இதுவரை அவள் செய்த வேலைகள் + வேலையிடங்கள் எல்லாம் விபரமாக இருக்கிறது.

--- ஓ....பேஷன் & மாடலிங் எல்லாம் படித்திருக்கிறாய்.

--- ஓம் ....மேடம்.

--- சரி....அப்படியெனில் நீ ஒன்று செய், வாற செய்வாய் கிழமை காலை 08:30 க்கு முன் இந்த இடத்துக்கு வந்து என்னைப் பார், நான் உனக்கேற்ற தகுதியான வேலை தருகிறேன் என்று சொல்லி தனது கடை விலாச அட்டையைக் கொடுக்கிறாள். பின் உதவியாளர் அங்கு வர அவரிடம் "arret de travail" சான்றிதழை வாங்கிக் கொண்டு நன்றி சொல்லிவிட்டு இருவரும் போகிறார்கள்.

                                                  அவர்கள் சென்றதும் சுமதி தனது உதவியாளரிடம் அவளின் வேலை மற்றும் ஒழுங்கு பற்றிக் கேட்க அவர் சொன்னதும் அவளுக்குத் திருப்தியாய் இருக்கு.

                                                                           பின் அந்த உதவியாளர் சுமதியிடம் மேடம் அந்த இருவரின் இடத்துக்கு இன்னும் ஆட்கள் போகவில்லை அதனால் அவர்களை அங்கு அனுப்பி இருக்கலாம் என்று சொல்ல அவளும் அது எனக்குத் தெரியும், அந்த ஹோட்டல் வேலைதானே அதை நாமிருவரும் போய் செய்து விட்டு வரலாம். அவர்களது விடுமுறை நாளில் அவர்களுக்கு வேலை ஒன்றைக் குடுத்து இந்த லீவு நாளை சரிசெய்து விடுங்கள் என்கிறாள்.

"கல்லுக்குள் ஈரம்" போல் இருக்கும் அவளது உள்ளத்தைப் பார்த்து அவர் புன்முறுவல் செய்கிறார்.

--- என்ன சிரிக்கிறீர்கள், இந்தக் கம்பெனி நன்றாக இருக்க வேண்டும். அதுக்கு நாமெல்லாம் விசுவாசமாக வேலை செய்ய வேண்டும். அதே நேரம் தொழிலாளிகளும் பாதிக்கப் படக் கூடாது புரியுதா.

--- புரியுது மேடம்.

                                                        வேலை முடிந்து காரில் வரும்போது நினைக்கிறாள், என்னுடைய வேலைத்தளத்தில் முப்பது பேருக்கு மேலாக ஆட்களை வைத்து கையாளுகிறேன்.ஆனால் எனது கடையில் மூன்று நான்கு பேரை வைத்துக் கொண்டு தடுமாறுகின்றேன். அன்றைய நாளை நினைத்துப் பார்க்கும்போது தான் விடும் தவறுகள் புலப்படத் தொடங்குகிறது. அத்துடன் மனதில் ஒரு தெளிவும் ஏற்படுகிறது.

                                                                                                                   லா சப்பலுக்கு வந்த சுமதி பார்க்கிங்கில் காரை விட்டுட்டு தனது போன் மூலம் காருக்கு டிக்கட் கட்டனம் செலுத்திவிட்டு சுற்று முற்றும் பார்க்கிறாள்.17:00 மணிக்கு இன்னும் முப்பது நிமிடங்கள் இருக்கின்றன. எதிரே "கபே பரத் " தை பார்த்ததும் இரண்டு பாலப்பம் சாப்பிட வேண்டும் போல் இருந்தது. உள்ளே சென்று இரண்டு அப்பத்துக்கும் இஞ்சி போட்ட பாலதேனீருக்கும் சொல்லிவிட்டு ஆயாசமாய் கதிரையில் சாய்ந்து கொள்கிறாள். பின் தனது" comptabilité " க்கு (கணக்காய்வாளர்) போன்செய்து தனது வேலையாட்களின் வேலை ஒப்பந்தங்கள் பற்றி கேட்டு அவற்றில் சில திருத்தங்கள் செய்ய சொல்லி விட்டு கொண்டுவந்து தரும்படி சொல்கிறாள்.

                                                                                                        உபசரிப்பாளர் சுட சுட கொண்டுவந்த அப்பத்தை ரெண்டு கடி கடித்து இஞ்சித் துருவல் போட்ட அந்த டீ  தொண்டைக்குள் இறங்கும்போது ரொம்ப சுகமாக இருக்கின்றது.இஞ்சித் துருவல் பல்லிடுக்கில் சிக்குவதும் நாக்கு அதை தேடிச்சென்று ருசித்து இழுத்து வருவதும் அருமையாக இருக்கிறது. அவள் 17:00 மணிக்கு கடைக்குள் வந்ததும் மிருதுளா அவளிடம் கணக்கு வழக்குகளை ஒப்படைத்து விட்டு போய் வருகிறேன் என்று இருவரிடமும் சொல்லிவிட்டு கிளம்புகிறாள். கபிரியேல் கொப்பியில் அளவுகள் பார்த்து துணிகளை வெட்டிக் கொண்டிருக்கிறான். அங்கு வரும் ஓடர் சாரங்களை அளவுகள் பார்க்காமலே அதன் கோடுகளை நேர்ப்படுத்தி அழகாக தைத்து வைக்கிறான். இந்த மூன்று மாதத்துக்குள் அவன் சுமதியிடமும் மிருதுளாவிடமும் பார்த்துப் பார்த்து துணிகளை நன்றாக வெட்டித் தைக்கப் பழகியிருந்தான். பிரேமாவும் ரோகிணியும் அங்கில்லை. கதவின் மணியொலி கேட்டு நிமிர்ந்த கபிரியேல் சுமதியைப் பார்த்து சிநேகபூர்வமான ஒரு புண்ணகை செய்து விட்டு மீண்டும் தனது வேலையில் கவனத்தை செலுத்துகிறான். சுமதியும் ஏற்கனவே மிருதுளா தைத்து வைத்த கட்டிங்ஸ்சை எடுத்து சிரத்தையுடன் தைக்கிறாள்.சிலர் வந்து தைத்த ஆடைகளை வாங்கிக் கொண்டு பணம் குடுத்துவிட்டு செல்கின்றனர். வேறு சிலர் காசோலைகள் குடுத்த போது அதை மறுத்து பணமாகவோ அன்றி விசாகாட் மூலமாக பணத்தைப் பெற்றுக் கொள்கிறாள்.

                                             அன்று சுமதி காலை 08:30 க்கு வேலைக்கு வருகிறாள். முன்பே அங்கு கதீஜா வந்து நிக்கிறாள். பெரிய பெரிய வயலட் கலரில் பூக்கள் போட்ட ட்ரவுசரும் அதே துணியில் மேலே கொலர் வைத்த கோட்டும், ட்ரவுஸர் தொடைகளையும் பின்னழகையும் இறுக்கமாய் பிடித்திருக்க முழங்காலின் கீழே அது பெல்பாட்டமாய் விரிந்து இறங்குகிறது. கால்களில் அகலமான குதியுள்ள வெள்ளைநிற  உயரமான சாண்டில்ஸ் அவளது பின் அழகை மேலும் மெருகூட்டுகிறது. மேலே அணிந்திருக்கும் கோட்டினுள்ளே நீளமான வெள்ளை பெனியன் அணிந்திருக்கிறாள். அவள் நடக்கும் போது மார்புகள் இரண்டும் உள்ளாடை அணியாததால் தென்றலில் அசையும் சன்பிளவர்ஸ் போல் மென்மையாக அசைகின்றன. கழுத்தை சுற்றி இருக்கும் வெள்ளிசெயினில் இருந்து ஒரு செயின் இழை மட்டும் நேராக நெஞ்சுக்குள் ஒற்றை மின்னல்போல் இறங்கி  மோட்ஷமடைகிறது. காதுகளில் இருந்து தோளைத் தொடுவதுபோல் பெரிய வெள்ளி வளையங்கள், தேனில் மிதக்கும் குலோப்ஜாமூன் போல் கண்ணக் கதுப்புகள், துரு துறுவென அங்குமிங்கும் அலையும் விழிகள், இமைகளின் மேல் முடியை முற்றாக மழித்துவிட்டு வில்போன்று நீளமாக கண் மை பூசி இமையின் மேற்புறத்தில் மயில் கழுத்து வர்ணத்தில் வர்ணம் பூசி இருந்தாள். சற்றே பெருத்த உதடுகளில் கடுஞ் சிகப்பு கலரில் உதட்டுச்சாயம் போட்டிருந்தாள். பெண்களையே கிறங்கடித்து விடும் அவள் அழகின் முன் ஆண்கள் எம்மாத்திரம்.

                                                                                                      இருவரும் பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொள்கிறார்கள். பின் சுமதி கடையைத் திறந்து அலாரங்களை நிறுத்தி விட்டு அவளையும் அழைத்துக் கொண்டு உள்ளே வருகிறாள். அப்போது அங்கு வந்த கணக்காய்வாளர் ஒரு பைலை அவளிடம் குடுத்து விட்டு போகிறார். அவள் அதை தனது மேசை லாட்சியில் வைத்து விட்டு மேலே வருகிறாள். பின் சுமதி கதீஜாவுக்கு கடையையும் கீழே இருக்கும் ட்ரெஸிங் அறையையும் சுற்றி காட்டிக்கொண்டிருக்கும் பொழுது மிருதுளாவும் ரோகிணியும்  உள்ளே வருகின்றார்கள். இவர்கள் இருவரையும் பார்த்து அவர்கள் இருவரும் வணக்கம் சொல்லிவிட்டு தத்தமது வேலைகளை செய்கின்றனர். சுமதி இவர்களுடன் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுது, கதீஜா அங்கிருந்த நவீனமான மெஷின்களையும் ஆபிரிக்கன் திருமண ஆடைகளையும் நீளநீளமான தலைமுடிகள் பக்கட்டுகளையும் பார்த்து வியந்து நிக்கிறாள். அப்போது தன்னருகே வந்த சுமதியிடம் மேடம் எனக்கு நீங்கள் என்ன வேலை தரப்போகிண்றீர்கள், தையல் வேலையா, தலை பின்னுகிற வேலையா. நீ மட்டும் இங்கு எனக்கு பிடித்த மாதிரி வேலை செய்தால் அவற்றுடன் அதை விட பெரிய வேலையொன்றும் உனக்குத் தருகிறேன் என்கிறாள்.  வழக்கம்போல் பிரேமாவும் 09:30 க்கு வருகின்றாள். அங்கு சுமதியைப் பார்த்ததும் ஒரு அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு தனது மெஷினில் சென்று அமர்கிறாள்.மறக்காமல் தான் கொண்டுவந்த பெரிய பையை தனது காலுக்கருகில் வைத்துக் கொள்கிறாள்......!

இன்னும் தைப்பார்கள்..........!   🎀

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, suvy said:

அண்ணலும் நோக்கினார்,

அவளும் நோக்கினாள்…!

அற நெறியறிந்த முனிவரும் நோக்கினார்…!

கம்பன் தோற்றான் போங்கள்…!

சுபியர்…!😅

Just now, புங்கையூரன் said:

அண்ணலும் நோக்கினார்,

அவளும் நோக்கினாள்…!

அற நெறியறிந்த முனிவரும் நோக்கினார்…!

கம்பன் தோற்றான் போங்கள்…!

சுபியர்…!😅

சுவியர்…!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வர்ணனைகள் தேர்ந்த எழுத்தாளர் போன்று இருக்கு!
தொடருங்கள் சுவி அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன அடிக்கடி நுhல் அறுகுது போல.

அடிக்கடி நூல் விட்டால் அறத்தானே செய்யும்....

Vadivelu Vaigai Puyal GIF - Vadivelu Vadivel VaigaiPuyal - Discover & Share  GIFs | Comedy pictures, Comedy clips, Funny gif

21 minutes ago, ஏராளன் said:

வர்ணனைகள் தேர்ந்த எழுத்தாளர் போன்று இருக்கு!

இவர் இப்பத்தான் நித்திரையாலை எழும்பி வந்திருக்கிறார்...🙃
தல வேற லெவல் :cool:

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/2/2023 at 15:26, நிலாமதி said:

இவ்வளவு  விபரமாக பெண்களின் பிளவுஸ் பறறி தெரிந்து வைத்திருக்கிறார் . அடுத்த பிளவுஸ் ...சுவியரிடம் ( தையல் காரியிடம்) தான்  தைக்கவேண்டும்.நன்றாக தையுங்கோ . வாடிக்கையாளர் லைன் இல் வந்து கொண்டு   இருக்கிறார்கள்.

எனக்கு மட்டும் சொல்லுங்க பிட்டிங் ரூம் இல்  கேமரா கிமரா  இல்லைத்தானே 😀  .

வர வேண்டும் ....வரவேண்டும்.......உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.கமராக்கள் வரும்  ஆனால் அங்கு வராது.....!  😁

On 17/2/2023 at 02:37, nunavilan said:

8256_1091856820854740_675958239374446747

எல்லாம் உங்களின் ஊக்கத்தினால்தான்.....முடிந்தவரை யாழுக்கு நல்ல கதையொன்று குடுப்பம் என்று.....!  😁

On 17/2/2023 at 16:44, ஈழப்பிரியன் said:

தம்பிக்கு வெள்ளி திசை வேலை செய்ய போகுது போல.

தம்பிக்கு வெள்ளி திசையோ என்னமோ சுமதிக்கு சிரமத் திசை என்று யோசியர் சொல்லியிருக்கிறார் பார்க்கேல்லையோ.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/2/2023 at 09:17, தமிழ் சிறி said:

Batik Sarong - Shirt Kits for Men - Alponso Batiks

Batik Sarong - Shirt Kits for Men - Alponso Batiks Batik Sarong - Shirt Kits for Men - Alponso Batiks Batik Sarong - Shirt Kits for Men - Alponso Batiks Batik Sarong - Shirt Kits for Men - Alponso Batiks Batik Sarong - Shirt Kits for Men - Alponso Batiks

தையல் கடைக்கு... தமிழ்ப் பெயரை, வைக்காத... 
சுவியருக்கும், சுமதிக்கும் வன்மைமாயன கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். 😎

கதை சூடு பிடிக்கத்  தொடங்குகின்றது தொடருங்கள் ✍️ சுவியர்.
வாசிக்க ஆவலாக உள்ளோம்.  

அந்தக் கடையில்... தனிய பெண்களுக்கான பிளவுஸ் மட்டும்தான் தைப்பார்களா. 😂
ஆண்களுக்கு... சாரம் தைத்து தர மாட் டார்களா. 🤣
ஓம் என்றால்... பத்து பற்றிக் சாரம் தைக்கிற பிளான் இருக்கு. 😁

உங்களுக்கு சாரம் தைக்க வேறொருத்தர் வருகிறார்...... இன்று உங்களின் பிறந்தநாளுக்கு ஓடர் குடுங்கோ உடனே விசேஷமாய் தைத்து அனுப்பப் படும்......!  😂

On 18/2/2023 at 10:59, புங்கையூரன் said:

ஒரு வியாபாரத்தைத் தொடங்கி நடத்தும் போது வதும் பிரச்சனைகளைத் தெளிவாக அறிந்திருக்கின்றீர்கள். அதுவும் மூளை கூடிய எமது இனத்தவரைக் கொண்டு நடத்துவது இன்னும் கஷ்டம். தொடருங்கள்…!சுமதி நன்றாகக் கையாள்கிறார்..!

பிரான்ஸ் வந்து முப்பது வருடங்களுக்கு மேலாகின்றது, இதில் கூட அனுபவப் படவில்லையென்றால் எப்படி .... உங்களின் கருத்துக்கள் என்னை மேலும் ஊக்கப் படுத்துகின்றது புங்கை.....நன்றி ......!  😂

On 18/2/2023 at 15:42, நன்னிச் சோழன் said:

நல்ல சுவாரசியமான கதை!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.....நன்றி நன்னிச் சோழன் ......தொடர்ந்து வாசியுங்கோ, இன்னும் சுவாரஸ்யம் கூட இருக்கும்.......!  😁

On 18/2/2023 at 16:52, யாயினி said:

சிறுகதை போட்டிகளுக்கும் எழுதலாமே சவியண்ண..முயற்சி செய்யுங்கள்.✍️🖐️

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி ....... அவற்றுக்கெல்லாம் நிறைய மினக்கட வேண்டும்.சும்மா ஏனோ தானோ என்று எழுதேலாது..... இது எங்கள் யாழ் உறவுகளுக்குள் சரியோ பிழையோ சமாளித்துக் கொண்டு போவார்கள் என்னும் நம்பிக்கைதான்.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, குமாரசாமி said:

அடிக்கடி நூல் விட்டால் அறத்தானே செய்யும்....

Vadivelu Vaigai Puyal GIF - Vadivelu Vadivel VaigaiPuyal - Discover & Share  GIFs | Comedy pictures, Comedy clips, Funny gif

இவர் இப்பத்தான் நித்திரையாலை எழும்பி வந்திருக்கிறார்...🙃
தல வேற லெவல் :cool:

அடக்கடவுளே சின்னப் பொடியளை கலாய்க்க வேணாம் அண்ணை.

Posted
On 18/2/2023 at 15:55, Kandiah57 said:

சுவி. அண்ணா கதை நன்றாக இருக்கிறது..👍...எதையாவது பார்த்து எழுதுகிறீர்களா    ?🤣😂 இல்லை உங்கள் சுய ஆக்கமா?.  சுரேந்தர் ஏன் கடைப்பக்கம். வருவதில்லை  ?  இவ்வளவு திறமையுள்ள சுமதிக்கு ஒரு மெஷினைப். பொருத்தி வருகிற......போகிற.    நேரத்தை பதிவு செய்ய தெரியவில்லை… வாழ்த்துக்கள் 

8 hours ago, ஏராளன் said:

வர்ணனைகள் தேர்ந்த எழுத்தாளர் போன்று இருக்கு!
தொடருங்கள் 

நீங்கள் சுவி அண்ணாவின் பழைய ஆக்கங்களை வாசிக்கவில்லை என தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, nunavilan said:

நீங்கள் சுவி அண்ணாவின் பழைய ஆக்கங்களை வாசிக்கவில்லை என தெரிகிறது.

வாசித்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(10).

                                                                          சுமதியும் கதீஜாவை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து விட்டு, இவரை நான் புதிதாக வேலைக்கு எடுத்திருக்கிறேன். மிருதுளாவைப் பார்த்து நீ இவளுக்கு இங்கு செய்ய வேண்டிய வேலைகள் பற்றி விளக்கமாய் சொல்லிக் குடு. அவளின் நடவடிக்கைகள் எல்லாம் பார்த்து முடிவு செய்து கொள்ளலாம். பின் கதீஜாவிடம் நீ இன்று மதியத்துடன் வீட்டுக்கு போய் விட்டு நாளை காலையில் இருந்து வேலைக்கு வரவும். காலை 08:30 க்கு கடைக்குள் இருக்க வேண்டும் என்பதை ரொம்ப அழுத்தி சொல்கிறாள். அவளும் சரி மேடம் என்று சொல்லி விட்டு மிருதுளாவுடன் போகிறாள். பின் சுமதியும் நீங்கள் வேலையைப் பாருங்கள் நான் போட்டு பிறகு வருகிறேன். வெளியே போகிறாள்.....!

                                                                               மதியம் ஒன்டரைக்கு சுமதி கடைக்கு வர அங்கு மிருதுளா,ரோகிணி,கபிரியலோடு கதீஜாவும் நிக்கிறாள். பிரேமா இன்னும் வேலைக்கு வரவில்லை.

--- ஏன் கதீஜா நீங்கள் 12:00 மணிக்கே போயிருக்கலாமே.

--- பரவாயில்லை மேடம், மிருதுளாவோடு வேலை செய்து கொண்டு இருந்ததில் நேரம் போனது தெரியவில்லை.சரி நான் போயிட்டு நாளை காலை எட்டரை மணிக்கு வந்து விடுகிறேன். நன்றி மேடம் என்று சொல்லி விட்டு போகிறாள். வாடிக்கையாளர்கள் வருவதும் போவதுமாக கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இரண்டரைக்கு பிரேமா அங்கு வருகிறாள். அப்போதும் அங்கு சுமதியைப் பார்த்ததும் அவளுக்கு ஒருமாதிரி இருக்கிறது.

                                                                      நேரம் 15:00 மணி.சுமதி ரோகிணியை கூட்டிக் கொண்டு தனது ஆபீஸ் அறைக்குப் போகிறாள். அங்கு ஒரு நீளமான மேசையும் அதன் மேல் மறைவாக கடைக் கேமராக்களின் பதிவுகளைக் காட்டும் தொலைக்காட்சிப் பெட்டியும் இருக்கிறது. அது கடையின் ஒவ்வொரு பகுதிகளையும் தனித்தனியாக பிரித்துக் காட்டிக்கொண்டிருக்கு. ரோகிணியை எதிரில் அமரச் சொல்லி விட்டு பைலில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து அவளிடம் கொடுக்கிறாள். அதை வாங்கிப் படித்த ரோகிணி,என்ன மேடம் என்னை வேலையில் இருந்து நிப்பாட்டி இருக்கிறீர்கள். நான் ஒழுங்காத்தானே வந்து வேலை செய்து விட்டு போகிறேன்.

--- இல்லை ரோகிணி நீ இந்த மூன்று மாதத்தில் பலநாட்கள் விடுமுறையில் நின்றிருக்கிறாய். ஆனால் நீ திருப்தியாய் சொல்லிக்கொள்ளும்படி ஒரு வேலையும் செய்வதில்லை.

--- எப்படி சொல்லுறீங்கள் மேடம், நான் pole emploi வால் வேலைக்கு வந்தனான். தகுந்த காரணமின்றி நீங்கள் என்னை நிப்பாட்டினால் நான் அவர்களிடம் முறையிட வேண்டி வரும். பிறகு உங்களுக்குத்தான் பிரச்சினை.

--- சுமதிக்கு எழும்பி நின்று அறையணும்போல இருக்கு ஆயினும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.அதற்குமுன் இதையும் கொஞ்சம் பாருங்கள். தனது போனை எடுத்து இயக்கி அவளின் பக்கம் திருப்புகிறாள். அதில் ரோகிணி வேலைநேரத்தில் கீழ் அறையில் போனில் பாட்டுக் கேட்டு தலையாட்டிக் கொண்டு இருப்பதும், ஆட்கள் வரும்போது விக்ஸ் பூசிக்கொண்டு படுத்திருப்பதும், அவர்கள் போனதும் மீண்டும் பாட்டுக்கு அபிநயம் பிடிப்பதும் துல்லியமாக பதிவாகி இருக்கு.

--- ஆ.....இதல்லாம் எப்படி.....என்னை மன்னித்து கொள்ளுங்கள் மேடம். அப்படியே சரணாகதியாகி விட்டாள்.

--- நான் இப்பவே இதை pole emploi வுக்கு அனுப்ப முடியும். அது மட்டுமல்ல இந்த மூன்றுமாத காலத்திற்குள் உனது வேலை எனக்குத் திருப்தி இல்லையென்றால் உன்னை வேளையில் இருந்து தூக்க அதிகாரமும் இருக்கு. அதேபோல் இந்த வேலை உனக்குப் பிடிக்கவில்லையென்றால் கூட நீயாகவே நிக்கவும் உனக்கும் அதிகாரம் உண்டு. சரி....சரி எனக்கு நேரமில்லை. பேசாமல் கையொப்பமிட்டு விட்டு பேப்பரை எடுத்துக் கொண்டு கிளம்பு. உனது சம்பளப் பாக்கிப் பணம் உனது வங்கிக் கணக்குக்கு வரும்.  உனக்கு வேலைகள் நன்கு தெரியும். இப்படி நடிப்பது, தேவையின்றி லீவு எடுப்பது போன்ற தவறுகள் செய்யாது விட்டால் நீ நல்லா முன்னேறலாம்.

---ரோகிணியும் கையொப்பமிட்டு கவலையுடன்  கடிதத்தை வாங்கிக் கொண்டு போகிறாள்.

                                                         அடுத்து வெளியே வந்த சுமதி பிரேமாவை அழைத்துக் கொண்டு ஆபிஸ் அறைக்குப் போகிறாள். அவளிடமும் சுமதி அந்தக் கடிதத்தைக் கொடுக்கிறாள். அதை பார்த்த பிரேமா, என்ன சுமதி என்னையும் வேலையை விட்டு நிப்பாட்டி இருக்குதுபோல.

--- ஓம் பிரேமா, எனக்கு வேற வழியில்லை.

--- ஏன் நான் தாமதமாய் வந்து போகிறேன் என்றா.

--- அது மட்டுமல்ல பிரேமா, நீங்கள் எனக்கு நன்கு தெரிந்தவர் என்பதனால் புதிதாக கடை திறந்த எனக்கு மிகவும் உதவியாய் இருப்பீர்கள் என்றுதான், உங்களுக்கு இந்த நவீன தையல் முறைகள் தெரியாது என்ற போதிலும் உங்களை வேலைக்கு எடுத்தேன். ஆனால் இங்குள்ளவர்களில் மிகவும் மோசமாக நடந்து கொள்பவர் நீங்கள்தான். இது எனக்கு பெரிய ஏமாற்றம்தெரியுமா.

--- நான் மட்டுமா, ஏன் மிருதுளா கூட வெளியே போய்..... போய் வருகிறாதானே.

--- ப்ளீஸ் பிரேமா அவளை பற்றி இப்போது கதைக்க வேண்டாம். இதை நீங்கள் சொல்ல வேண்டிய நேரம் இப்போது அல்ல, முன்பே சொல்லியிருக்க வேண்டும். மிருதுளா வெளியே போய் வருகிறாள், ரேணுகா வேலை நேரத்தில் கீழ் அறையில் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறாள் என்று. ஆனால் இப்போது நான் பல கண்களால் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன்.நீங்கள் செய்யும் வேலைகள் உட்பட.

--- பிரேமாவுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. தலை குனிந்து கொண்டு இருக்கிறாள்.

--- சுமதி மேலும் தொடர்ந்து எட்டரைக்கு திறக்க வேண்டிய கடையை நீங்கள் ஒன்பதரைக்கு வந்து திறப்பதால் இரண்டு வேலையாட்கள் இரண்டு மணித்தியாலங்கள் வேலை செய்யாமல் வெளியே நிக்கினம். இந்தக் கடைக்கு வரவேண்டிய ஓடர்கள் வேறு இடங்களுக்குப் போய் விடுகிறது. மேலும் நீங்கள் தினமும் 11:30 க்கு போய் பின் 14:30 க்கு வருகிறீர்கள். அதன்பின்பு 16:30 க்கு போய் விடுகிறீர்கள்.

                                           ஒரு பையில் இருந்து வெட்டிய துண்டு துண்டு துணிகளை எடுத்து மேசைமேல் போடுகிறாள். அவற்றைப் பார்த்ததும் பிரேமா திகைத்து விட்டாள், முழிகள் இரண்டும் பிதுங்கி வெளியே விழுந்திடும் போல் இருக்கின்றன. சுமதி தொடர்ந்து இவையாவும் எங்கட கடைத் துணிகள் இல்லை. நீங்கள் பாட்டுக்கு தனி ஓடர்கள் எடுத்து இங்கு கொண்டுவந்து இங்குள்ள பொருட்களை பயன்படுத்தி தைத்துக் கொண்டு போகிறீர்கள். அதிகம் ஏன் இப்போது கூட நீங்கள் கொண்டுவந்த பையில் உங்களது தனிப்பட்ட ஓடர் துணிகள்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இதை உங்களால் மறுக்க முடியுமா. இது எவ்வளவு பெரிய மோசடி தெரியுமா. உங்களுக்கு பின் வந்த பொடியன் துணிகளை வெட்டிட பழகியதுடன் விதம் விதமாக தைக்கவும் செய்கிறான். உங்களாலும்  கூட முயற்சியுடன் வேலை செய்திருந்தால் அது முடிந்திருக்கும். ஆனால்.......சரி ....சரி நீங்கள் கடிதத்தில் கையொப்பமிட்டு விட்டு  செல்லுங்கள்.

--- இல்லை சுமதி இது முழுக்க முழுக்க எனது தவறுதான்.இனிமேல் இப்படி செய்ய மாட்டேன். இந்த ஒருமுறை மட்டும் மன்னித்து விடுங்கோ. கண்களில் கண்ணீர் முட்டி நிக்கிறது, குரல் தளும்புகிறது.

--- இல்லை பிரேமா ......நீங்கள் விரும்பினாலும் உங்களால் அது முடியாது. உங்களின் பேரப்பிள்ளைகளை காலையில் பாடசாலைக்கு கொண்டுபோய் விடவேண்டும்.மதியம் அவர்களை கூட்டிப்போய் சாப்பிடவைத்து மீண்டும் பாடசாலையில் விட்டுட்டு வரவேண்டும். அதனால் இந்த வேலை உங்களுக்கு சாத்தியமில்லை. புரிந்து கொள்ளுங்கள்.

--- பிரேமாவும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் கையொப்பமிட்டு விட்டு கடிதத்தை எடுத்துக் கொள்கிறாள்.

--- உங்களுடைய சம்பளப் பணம் வழமைபோல் வங்கிக் கணக்குக்கு வரும்.என்று சுமதி சொல்கிறாள். இருவருமாக வெளியே வருகிறார்கள். சுமதியும்  மறக்காமல் கடையின் சாவிக்கொத்தை அவளிடமிருந்து வாங்கி வைத்துக் கொள்கிறாள். பின் பிரேமாவும் எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு வெளியே போகிறாள்.

                                 அடுத்து மிருதுளாவைக் கூட்டிக்கொண்டு ஆபிஸ் அறைக்கு அழைத்து வந்து கவருடன் கடிதத்தைக் கொடுக்கிறாள்.

--- என்ன மேடம் அவர்களைப் போல் எனக்கும் வேலை நிறுத்தக் கடிதம்தானே.......நான் உங்களுடன் விவாதிக்கப் போவதில்லை, நான் செய்த தவறு எனக்குத் தெரியும். என் பொல்லாத நேரம் தப்பு செய்தபோது வேலை இருந்தது, அந்தத் தப்பு விலகியதோடு வேலையும் விட்டுப் போகிறது. என்று சொல்லி கடிதத்தைப் பார்க்காமல் கையொப்பமிடப்போகிறாள்.

--- அவளை இடைமறித்த சுமதி கடிதத்தை வாசித்துப் பார்த்து ஒப்பமிடு மிருதுளா. அப்படித்தான் கடிதத்தில் எழுதியிருக்கிறது. பின் அதைப் படித்துப் பார்த்த மிருதுளா, என்ன மேடம் எனக்கு மேலும் ஆறு மாதங்கள் வேலையை நீட்டித்து இருக்கிறீங்களா.

--- ஓம் மிருதுளா.....நியாயமாய் பார்த்தால் நான் உனக்கு நிரந்தர வேலைக் கடிதம்தான் தந்திருக்க வேண்டும். ஆனால் நீ வேலை நேரத்தில் வெளியே போய் விடுகிறாய் அதன் காரணம் எனக்குத் தெரியாது,அதுதான் இந்த ஆறு மாதகால ஒப்பந்தக் கடிதம். வெளியே உனக்கிருக்கும் பிரச்சினைகள் பற்றி நான் கேட்கப்போவதில்லை. ஆனால் அது தெரிந்தால் உனது வேலை நேரத்தை மாற்றித் தருகிறேன். அதற்கு ஒரே காரணம் உனது வேலைத் திறமையும் வேலை நேரத்தில் உன் உண்மையான உழைப்பும்தான். கடைக்குள் ஒரு நிமிடமும் வீணாக்காமல் ரொம்பத் திறமையாக வேலை செய்கிறாய். அதைபோல் தொடர்ந்தும் நீ வேலை செய்ய வேண்டும். நீ என்னை விட இளையவளானாலும் நான் உன்னிடம் இருந்து நிறைய வேலை கற்றுக்கொள்ள வேண்டும். இதை சொல்ல நான் கொஞ்சமும் வெட்கப்படவில்லை. அவ்வளவு கெட்டிகாரி நீ.

--- மேடம் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.நீங்கள் என்மீது வைத்திருக்கும் அபிப்பிராயத்துக்கும், நம்பிக்கைக்கும் மிக்க நன்றி மேடம். இப்போது எனது வேலை நேரம் மாற்ற வேண்டிய அவசியமில்லை. மேலும் உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்வேன். என் வாழ்க்கையில் ஒரு பெரிய தப்பு செய்ய இருந்தேன், இரு நாட்களுக்கு முன் அது எல்லாம் விலகி விட்டது.

--- உனக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் என்னிடம் சொல்லு நான் அதைத் தீர்த்து வைப்பேன்.

--- அதொன்றுமில்லை மேடம், கடந்த ஒரு வருட காலமாக நான் ஒருவரை விரும்பி வந்தேன். அவன் ஒரு வேலையும் செய்யிறதில்லை, எந்த வேலையிலும் நிலைத்து நிப்பதில்லை. (எப்படித்தான் இவங்கள் ஒரு வேலை விட்ட உடனே அடுத்த வேலை எடுக்கிறாங்களோ தெரியாது.) உங்களுக்குத் தெரியுமா நான் இந்த வேலைக்கு வருவதற்கு முன் ஆறு மாதங்கள் chômage சில் வேலை தேடிக் கொண்டிருந்தேன்.  ( ஒருவர் வேலை இன்றி இருக்கும்போது pole emploi அவர்கள் முன்பு செய்த வேலைகளை கணக்குப் பார்த்து அவர்கள் வேலை எடுக்கும் வரை பணம் குடுக்கும். அது மட்டுமன்றி அவர்கள் வேலை எடுப்பதற்கு உதவிகளும் செய்யும்). இவன் அடிக்கடி என்னிடம் பணம் கேட்பான் நானும் குடுப்பேன்.ஒருநாள் யோசித்து, இவன் என்ன செய்கிறான் என்று சில நாட்களாக அவனுக்குத்  தெரியாமல் அவனைப் பின்தொடர்ந்து கண்காணித்தேன். பார்த்தால் அந்த அயோக்கியன் என்னைப்போல் மேலும் இரண்டு பெண்களை ஏமாற்றிக் கொண்டிருந்தான். நான் பின்பு மற்ற இரு பெண்களையும் சந்தித்து அவரின் ஏமாற்று வேலைகள் எல்லாவற்றையும் சொல்லி இரண்டு நாட்களுக்கு முன் நாங்கள் மூவருமாக சேர்ந்து அவருக்கு நல்லா அடி, குத்து, உதை எல்லாம் குடுத்து விட்டு வந்தோம். இனி நான் யாரையும் நம்பி ஏமாறமாட்டேன் மேடம்.

--- ஏன் நீ அவனுடன் செக்ஸ் ஏதாவது ......

--- அந்த கன்றாவியை ஏன் கேட்கிறீங்கள் மேடம், அந்த கயவனை காதலன் என்று நம்பி நாலைந்து முறை டேட்டிங் எல்லாம் போனோம், எல்லாம் என் செலவில்தான்.

--- சுமதியும் அடிப்பாவி என்று சொல்ல அவளும் நானாவது பரவாயில்லை மேடம்.அதுல ஒருத்தியுடன் அவன் "லிவிங் டு கெதராய்" வாழ்ந்து வந்திருக்கிறான். (இருவரும் கவலையை மறந்து சிரிக்கிறார்கள்).

                                         பின் சுமதியும் அவளிடம் கடைச் சாவிக்கொத்தை குடுத்து இனிமேல் நீதான் காலையில் வந்து கடை திறக்க வேண்டும். கடை திறந்ததும் நேரே உள்ளே போகக் கூடாது. முதலில் அலாரமை நிறுத்த வேண்டும்.தவறினால் அது சத்தமிட்டு ஊரைக் கூட்டிவிடும். போலீசும் வந்து விடுவார்கள் ஆதலால் கவனமாய் இருக்க வேண்டும் என்று சொல்கிறாள்.

--- மிருதுளாவும் அது எனக்கு தெரியும் மேடம்.பிரேமாவுடன் சில சமயங்களில் நானும் திறந்திருக்கிறேன் என்கிறாள்.......!

இன்னும் தைப்பார்கள்.......!   👗

  • Like 6
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சுமதி பாஸாகி விட்டாள்  போல உள்ளது…!

தொடருங்கள் சுவியர்…!

Edited by புங்கையூரன்

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.