Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் ஜனாதிபதியாக 3 ஆவது தடவையாக ஸீ ஜின்பிங் தெரிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் ஜனாதிபதியாக 3 ஆவது தடவையாக ஸீ ஜின்பிங் தெரிவு

Published By: Sethu

10 Mar, 2023 | 09:42 AM
image

சீனாவின் ஜனாதிபதி ஸீ ஜின்பிங், 3 ஆவது தடவையாகவும் அந்நாட்டின் நாடாளுமன்றத்தினால் இன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக மேலும் 5 வருடங்களுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் ஸீ ஜின்பிங் நியமிக்கப்பட்டிருந்தார். 

அதைத் தொடர்ந்து  அவரின் 3 ஆவது ஜனாதிபதி பதவிக்காலத்தை நாடாளுமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

சீனாவின் வரலாற்றில் மாவோ சேதுங்குக்குப் பின்னர் மிகச் சக்திவாய்ந்த தலைவராக விளங்குகிறார்.

69 வயதான ஸீ ஜின்பிங்,  2012 ஆம் ஆண்டு முதல் சீன ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார்.

https://www.virakesari.lk/article/150153

  • கருத்துக்கள உறவுகள்

ப் பூ… 3 தரமாம்…. பிஸ்கோத்து….

நம்ம தலை புட்ஸ் வாழ்நாள் ஜனாதிபதி தெரியுமா?

நம்ம தலை-தலை கிம்மு?

3 தலைமுறையா ஜனாதிபதி.

வந்துட்டாரு தூக்கி கிட்டு.

# போவியா🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இவர், ரஷ்ய காவியத் தலைவன், வட கொரியா, ஈரான் தலைமைகள் எல்லாம்  பூமியில் உள்ள மனிதர்களின்  தவத்தின் பயனாக  தோன்றியவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

ப் பூ… 3 தரமாம்…. பிஸ்கோத்து….

நம்ம தலை புட்ஸ் வாழ்நாள் ஜனாதிபதி தெரியுமா?

நம்ம தலை-தலை கிம்மு?

3 தலைமுறையா ஜனாதிபதி.

வந்துட்டாரு தூக்கி கிட்டு.

# போவியா🤣

மூன்றாம் தடவையாக வந்ததில் என்ன தவறு இருக்கின்றது? :cool:

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது முறையாக சீன அதிபராகி வரலாறு படைத்தார் ஜின்பிங்

ஷி ஜின்பிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஸ்டீபன் மெக்டோனல்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • இருந்துபெய்ஜிங்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

சீன அதிபர் ஷி ஜின்பிங், அந்நாட்டின் பொம்மை நாடாளுமன்றத்தில் மூன்றாவது முறையாக அதிபராகப் பதவியேற்றுள்ளார். மாவோவுக்குப் பிறகு சீன தலைவர்கள் இருமுறை மட்டுமே அதிபர் பதவியை வகித்துள்ளனர். அவருக்குப் பிறகு தற்போது ஷி ஜின்பிங் தான் மூன்றாவது முறையாக சீன அதிபர் பதவியை வகிக்கிறார்.

இந்த அதிகார பலப்படுத்துதலைத் தொடர்ந்து, 69 வயதான ஷி ஜின்பிங், சீனாவின் மிகுந்த மேலாதிக்கம் கொண்ட தலைவராக மாறியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராக ஷி ஜின்பிங் உள்ளதன் பின்னணியில் இருந்து அவருக்கான அதிகாரம் கிடைத்துள்ளது.

அவர் மூன்றாவது முறையாக அதிபராகப் பதவி ஏற்பார் என்பது பெரியளவில் எதிர்பார்க்கப்பட்டதுதான். வரும் நாட்களில் புதிய பிரீமியர்(பிரதமர்) மற்றும் பல்வேறு அமைச்சர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

புதிதாக நியமிக்கப்படுபவர்கள் அனைவரும் ஷி ஜின்பிங் விசுவாசிகளாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஷி ஜின்பிங்கின் நம்பர் டூவாக லி கியாங்கும் அடக்கம்.

அரசாங்க எதிர்ப்பு ஆர்பாட்டங்களைத் தூண்டிவிட்ட தனது பூஜ்ஜிய-கோவிட் கொள்கையைத் தொடர்ந்து சீனாவை வெளியுலகுக்குத் திறந்தபோது ஷி ஜின்பிங் தனது ஆட்சியை உறுதிப்படுத்தினார்.

இந்த வாரம் நடக்கும் தேசிய மக்கள் காங்கிரஸ் மற்றும் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு ஆகியவற்றின் இரண்டு அமர்வுகள், வரும் ஆண்டுகளில் சீனாவின் பாதையைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குவதால் அவை உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.

மாவோ சேதுங்கிற்கு பிறகு, சீனாவில் தலைவர்கள் இரண்டு முறை மட்டுமே பதவியில் இருந்துள்ளனர். ஷி ஜின்பிங் 2018ஆம் ஆண்டில் இந்தக் கட்டுப்பாடு மாற்றப்பட்டபோது, சீன தலைவர் மாவோவுக்கு பிறகு வரலாற்றில் காணப்படாத ஒரு நபராக அவரை மாற்றியது.

ஷி ஜின்பிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிகாரத்தில் தனது பிடியை வலுவாக்கும் ஷி ஜின்பிங்

ஷி ஜின்பிங், தன்னை மையமாக வைத்து சீன கம்யூனிஸ்ட் கட்சியை ஷி ஜின்பிங் மாற்றி அமைத்துள்ளார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவரை எதிர்ப்பதற்கு ஆளே இல்லை.

கிட்டத்தட்ட 3,000 பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் ரப்பர் ஸ்டாம்ப் அமர்வான வருடாந்திர அரசியல் கூட்டத்தில், சீன பிரீமியர் (பிரதமர்) மாற்றம் செய்யப்படுவதில் இது வெளிப்படும்.

உலகின் 2வது பெரிய பொருளாதார நாட்டின் பிரீமியராக தேர்ந்தெடுக்கப்படுவர் பெயரளவில் அந்நாட்டை நிர்வகிப்பவராக இருப்பார். அதிகார அமைப்பில் ஷி ஜின்பிங்கிற்கு அடுத்த இடத்தில் அவர் இருப்பார்.

தேசிய மக்கள் காங்கிரஸின் முதல்நாள் அமர்வில் சீனாவின் தற்போதைய பிரீமியர் லி காச்சியாங் நடுநாயகமாக இருப்பார். பின்னர், புதிய பிரீமியர் -அனேகமாக லி கியாங்- இந்த இடத்தைப் பெறுவார்.

ஷி ஜின்பிங் மீதான விசுவாசத்தை வைத்துப் பார்க்கும்போது லி காச்சியாங் , லி கியாங் இடையே மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன.

ஷி ஜின்பிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில், நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த குழுவான ஏழு பேர் கொண்ட பொலிட்பீரோ நிலைக்குழுவிற்குப் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவர்கள் அனைவரும் ஷி ஜின்பிங்கிற்கு விசுவாசமானவர்கள்.

தற்போது நடைபெறும் தேசிய மக்கள் காங்கிரஸில் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் தலைமை பதவியும் மாற்றப்படவுள்ளன. ஷி ஜின்பிங்கிற்கு விசுவாசமானவர்களுக்கே இந்தப் பதவிகள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள் தகுதியற்றவர்கள் என்று அர்த்தமல்ல. ஆனால் ஷி ஜின்பிங்கிற்கு அவர்கள் அச்சமில்லாமல், வெளிப்படையான ஆலோசனைகளை வழங்கத் தயாராக இருப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.

"இந்த மாற்றங்கள் மூலம் ஒருபுறம், ஷி தனது புதிய தலைமையை வைத்து தான் செய்ய விரும்புவதைச் செய்துகொள்ள முடியும். ஆனால் மறுபுறம், தன் கருத்துக்கு எதிர் கருத்தே இல்லாத சூழலில் அவர் சிக்கிக்கொள்ளும் ஆபத்து உள்ளது," என்று வணிகப் பிரமுகர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/c6p6p23rd4mo

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மூன்றாம் தடவையாக வந்ததில் என்ன தவறு இருக்கின்றது? :cool:

எல்லாம் ஒரு வயித்தெரிச்சல்தான். வேறென்ன? 

சீனா கடந்த 25 வருடங்களில் 600 மில்லிய்னுக்கும் மேற்பட்ட தனது பிரசைகளை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுத்துள்ளது. 

அந்த நாடு வளர்ச்சியடைந்து கெளரவமாக வாழ்வது பலருக்கு கடுப்பைக் கிளப்புகிறது. 😀

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

மூன்றாம் தடவையாக வந்ததில் என்ன தவறு இருக்கின்றது? :cool:

Power corrupts; absolute power corrupts absolutely.

-Baron Acton -

அதிகாரம் துஸ்பிரயோகத்துக்கு வழி சமைக்கும், மட்டற்ற அதிகாரம், மட்டற்ற துஸ்பிரயோகத்துக்கு வழி சமைக்கும்.

- அக்டன் பிரபு -

அதிகாரத்தில் இருப்பவருக்கு அதை இழந்தால் எப்படி வாழுவேன் என்ற நினைப்பு/பயம் எப்போதும் இருக்க வேண்டும்.

சாவுப்பயம் போல - ஒருதலைவனை வழிதவறாமல்ப்பேண இந்த பயம் அவசியம்.

தேர்தல் மூலம் வாக்காளர் மாற்றமாட்டார் என்ற பயம் இல்லாத நாடுகளில் கூட கட்சி மாற்றும் என்ற பயம் இருக்க வேண்டும். 

இதனால்தான் மண்டேலா அடுத்து வர முடியும் என்று தெரிந்தும் விலகினார்.

இதனால்தான் ரூசவோவேல்ட்டுக்கு பின் அமெரிக்க அரசியல் அமைப்பை மாற்றி two term limit ஐ கொண்டு வந்தார்கள்.

அரசியல் சட்டத்தில் இருக்கும் இந்த முற்போக்கு சட்டதை தமக்கென மாற்றி அடுத்தடுத்தும் தாமே வர வேண்டும் என நினைப்போர் தமது பேராசையால் நாட்டின் நலனை அழிப்பதே வழமை. அதன் தொடர்சியாக அவர்களின் நலனும் அழியும்.

இலங்கையில் ராஜபக்சேகளின் அழிவு இப்படி மாற்றியதில் இருந்துதான் தொடங்குகிறது. இன்னும் பல உதாரணங்கள் உண்டு.

கூடவே இது ஒரு நல்ல தலைவனுக்கு அழகல்ல. தலைமைதுவத்தின் மிக முக்கியமான பங்கு succession planning. அஞ்சல் ஓட்டத்தில் என்னை அடுத்து வருவன் என்னை போல் ஓடும் படி வளர்ப்பதில்தான் நான் நல்ல தலைவனா இல்லையா என்பது தெரியும்.

இதைதான் வள்ளுவரும் “தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்” என்கிறார்.

குரல் நல்லா இருக்கும் போது கச்சேரிகள் செய்வதை நிறுத்துவதுதான் பாடகருக்கும், கேட்பவருக்கும் நல்லம்.

  • கருத்துக்கள உறவுகள்

றொபேட் முகாபேக்கு இவ்வளவு எதிர்ப்பு காட்டவில்லை. ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது முறையாக  பதவி ஏற்ற,  ஜின்பிங்கிற்கு… வாழ்த்துக்கள். 🫡 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, nunavilan said:

றொபேட் முகாபேக்கு இவ்வளவு எதிர்ப்பு காட்டவில்லை. ஏன்?

இவர்கள் எல்லாம்… உதயநிதிக்கு பிறகு, இன்பநிதியை…
நாலாவது தலைமுறையாக முதலமைச்சர் ஆக்கிற திட்டத்தில் இருக்கிற ஆட்கள். 😂
முகாபேக்கு எல்லாம் எதிர்ப்பு காட்டினால்…
வேசம் வெளித்துவிடும் என்று பம்மிக் கொண்டு இருப்பார்கள். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சீன அதிபராக ஜின் பிங் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டமைக்கு ஆதவையோ எதிர்ப்பையோ தெரிவிக்கும் தார்மீக உரிமை சீனர்களுக்குத்தானே இருக்கிறது. 

UK யும் USம் EUவும் ஏன் வயிறெரிவான்? 

சீனாவின் அசுர வளர்ச்சி பலருடைய வயிற்றில் புளியைக் கரைக்கிறது என்பதுதான் உண்மை. 

😉

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

றொபேட் முகாபேக்கு இவ்வளவு எதிர்ப்பு காட்டவில்லை. ஏன்?

 ரொபெர்ட் முகாபே வெள்ளையர் என்பதால் இருக்குமோ🤣.

முகாபேயை நான் இங்கே இப்படி எழுதிய போது - இதே நபர்கள்தான் அவர் கறுப்பின நாயகன் என்றும், வெள்ளையரை விரட்டுவதால் நான் அடிமை புத்தியில் எழுதுகிறேன் என்றும் எழுதினார்கள்.

அதே மனிதர்கள்தான் அமீத்ஷாவும், மோடியும் கஸ்மீரி தேசிய இனத்தின் உரிமையை பறித்த போது அதை வரவேற்று எழுதி, எதிர்த்து எழுதிய எனக்கு முஸ்லிம் நேசன் பட்டமும் தந்தார்கள்.

குழுவாதம் தலைக்கேறினால் முன்பு என்ன எழுதினோம் என்பதும் மறந்து விடுமா?

5 hours ago, தமிழ் சிறி said:

இவர்கள் எல்லாம்… உதயநிதிக்கு பிறகு, இன்பநிதியை…
நாலாவது தலைமுறையாக முதலமைச்சர் ஆக்கிற திட்டத்தில் இருக்கிற ஆட்கள். 😂
முகாபேக்கு எல்லாம் எதிர்ப்பு காட்டினால்…
வேசம் வெளித்துவிடும் என்று பம்மிக் கொண்டு இருப்பார்கள். 🤣

இன்ப நிதிக்கு அடுத்து துன்ப நிதி வந்தாலும் அது தேர்தல் மூலம் என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, goshan_che said:

அதிகாரம் துஸ்பிரயோகத்துக்கு வழி சமைக்கும், மட்டற்ற அதிகாரம், மட்டற்ற துஸ்பிரயோகத்துக்கு வழி சமைக்கும்

சீன அரசு சரியில்லை,சர்வாதிகார ஆட்சி, மனித உரிமை சீனாவில் இல்லை,அஜாரக ஆட்சி.  தனி மனித சுதந்திரம் சீனாவில் இல்லை எனும் நாடுகளிடமும் வீடுகளிடமும் மக்களிடமும் உங்களைப்போன்ற ஆசான்களிடமும் இருப்பது எல்லாம் made in China தான்.:zany_face:

28 minutes ago, குமாரசாமி said:

சீன அரசு சரியில்லை,சர்வாதிகார ஆட்சி, மனித உரிமை சீனாவில் இல்லை,அஜாரக ஆட்சி.  தனி மனித சுதந்திரம் சீனாவில் இல்லை எனும் நாடுகளிடமும் வீடுகளிடமும் மக்களிடமும் உங்களைப்போன்ற ஆசான்களிடமும் இருப்பது எல்லாம் made in China தான்.:zany_face:

எத்தனை திரிகளில் மேற்கினைக் கிழித்துத் தொங்க விட்டிருப்போம். அதற்காக மேற்கின் உணவு முதற்கொண்டு உடை வாகனம் மருத்துவம் உட்பட எல்லா வசதியையும் அனுபவிக்காமல் இருக்க முடியுமா! அதுபோலத்தான் 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, இணையவன் said:

எத்தனை திரிகளில் மேற்கினைக் கிழித்துத் தொங்க விட்டிருப்போம். அதற்காக மேற்கின் உணவு முதற்கொண்டு உடை வாகனம் மருத்துவம் உட்பட எல்லா வசதியையும் அனுபவிக்காமல் இருக்க முடியுமா! அதுபோலத்தான் 😂

ஒரு நாட்டில் ஆளும் கட்சிக்கு எதிராக எத்தனை எதிர்க்கட்சிகள் இருக்கும். இருக்கணும். அது போல் தான் நானும் நான் சார்ந்தவர்களும்.
ஆளும் கட்சியில் இருப்பதினால் செய்வதெல்லாம் சரியாகி விடாது. அது போல் ஜேர்மனியில்  கேடு கெட்ட ஆளும் கட்சியின் நடவடிக்கைக்கு எதிராக பிற கட்சிகளும் உள்ளன.

எனவே.

சரி பிழைகளுக்கு அப்பால்  நான் குடியிருக்கும் நாடு எது செய்தாலும் நன்றிக்கடனாக தலை ஆட்டவேண்டும் என்கிறீர்களா?
அப்படியென்றால் ஈழ விடுதலைப்போருக்கு எதிராக மேற்குலக நாடுகள் சிங்கள அரசிற்கு ஆயுத உதவி செய்தது சரியென ஆமோதிப்பீர்கள்.....நன்று நன்று மிக மிக நன்று.:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

சீன அரசு சரியில்லை,சர்வாதிகார ஆட்சி, மனித உரிமை சீனாவில் இல்லை,அஜாரக ஆட்சி.  தனி மனித சுதந்திரம் சீனாவில் இல்லை எனும் நாடுகளிடமும் வீடுகளிடமும் மக்களிடமும் உங்களைப்போன்ற ஆசான்களிடமும் இருப்பது எல்லாம் made in China தான்.:zany_face:

இப்ப மேற்கை கரிச்சு கொட்டி கொண்டு இருக்கும், புட்டினை மாண்புமிகு என்று புகழும் பேராசான்கள் வீட்டில் எல்லாம் லாடா வாகனம் இல்லைத்தானே பி எம் டபிள்யூ தானே.

டிவி? ஜப்பான் ?

போன் ? அமெரிக்கன் அல்லது தென் கொரியன் ?

பந்தயம் கட்டலாம் ரஸ்யாவில் உருவான ஒரு குண்டுமணி கூட வீட்டில் இராது.

முந்தி எரிவாயுவாவது ரஸ்யன் இப்ப அதுவும் இல்லை.

இவ்வாறுதான் எல்லாரும் - வக்கணையா கதைக்க மட்டும் ரெடி, ஆனால் செயல் நேர்மாறு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, goshan_che said:

பந்தயம் கட்டலாம் ரஸ்யாவில் உருவான ஒரு குண்டுமணி கூட வீட்டில் இராது.

மூலப்பொருட்கள் இன்னும் இன்றும் ரஷ்யா தான்.....பிறகு கொலம்பஸ்காரனிட்டை இருந்து டபுளுக்கு றிபுள் விலை குடுத்து வாங்குவம்.வாங்கணும். இல்லாட்டி பிச்சுப்புடுவன் பிச்சு
 
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

13 minutes ago, இணையவன் said:

எத்தனை திரிகளில் மேற்கினைக் கிழித்துத் தொங்க விட்டிருப்போம். அதற்காக மேற்கின் உணவு முதற்கொண்டு உடை வாகனம் மருத்துவம் உட்பட எல்லா வசதியையும் அனுபவிக்காமல் இருக்க முடியுமா! அதுபோலத்தான் 😂

ஒரு நாட்டில் ஆளும் கட்சிக்கு எதிராக எத்தனை எதிர்க்கட்சிகள் இருக்கும். இருக்கணும். அது போல் தான் நானும் நான் சார்ந்தவர்களும்.
ஆளும் கட்சியில் இருப்பதினால் செய்வதெல்லாம் சரியாகி விடாது. அது போல் ஜேர்மனியில்  கேடு கெட்ட ஆளும் கட்சியின் நடவடிக்கைக்கு எதிராக பிற கட்சிகளும் உள்ளன.

எனவே.

சரி பிழைகளுக்கு

இங்கே நீங்கள் குறிப்பிடும் யாரும் மேற்கை எப்போதும் ஒரேயடியாக ஆதரித்தவர்கள் அல்ல.

கியூபா, ஈராக், ஈழம், என பல இடங்களில் மேற்கை விமர்சித்து எழுதியோர்.

அது மட்டும் அல்ல - உக்ரேன் விடயத்தில் எடுத்த நிலைப்பாட்ட்டை இவர்கள் யாரும் தாய்வான் விடயத்தில் எடுக்கவில்லை.

இவை எல்லாமுமே உங்களுக்கு நன்றாக தெரியும்.

ஆனால் குதர்க்கம், குழு நிலைவாதம் தலைக்கேறி - உங்களுக்கு மாற்று கருத்தை சொல்பவர்களை மேற்கின் அடிமைகள், வெள்ளைதோல் விசுவாசிகள் என கீழ்தரமாக முதலில் எழுத தொடங்கியது யார் என யோசித்து பாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, goshan_che said:

முந்தி எரிவாயுவாவது ரஸ்யன் இப்ப அதுவும் இல்லை.

குளத்தோட கோவிச்சுக்கொண்டு kuண்டி கழுவாமல் விட்ட கதை......அது சரி ஏன் ராசா சாமான் சக்கட்டையள் எல்லாம் இந்த நெருப்பு விலை??

3 minutes ago, goshan_che said:

ஆனால் குதர்க்கம், குழு நிலைவாதம் தலைக்கேறி - உங்களுக்கு மாற்று கருத்தை சொல்பவர்களை மேற்கின் அடிமைகள், வெள்ளைதோல் விசுவாசிகள் என கீழ்தரமாக முதலில் எழுத தொடங்கியது யார் என யோசித்து பாருங்கள்.

இதற்கான காரணம் நிர்வாகத்திற்கு தெரிந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

குளத்தோட கோவிச்சுக்கொண்டு kuண்டி கழுவாமல் விட்ட கதை......அது சரி ஏன் ராசா சாமான் சக்கட்டையள் எல்லாம் இந்த நெருப்பு விலை??

பொருளாதார தடையை ஜேர்மனியில் இருந்து ஒளிவீச்சில் பார்த்தவன் இல்லை. பஞ்சில்  லாம்பெண்ணை தோய்த்து வந்த வெளிச்சத்தில் படித்தவன்.

ஒரு காரியம் நடக்க சில சுமைகளை தாங்கி கொள்ளத்தான் வேண்டும் என்பதை நாம் சிறுவர்களாகவே கற்று கொண்டுள்ளோம். 

பல ஐரோப்பிய நாட்டினரும் அப்படியே. அதனால்தான் பல மில்லியன் சனதொகை கொண்ட ஜேர்மனி போன்ற நாடுகளில் சில ஆயிரம் பேர் ரஸ்யாவுக்கு ஆதரவாக போராடுகிறார்கள்.

நாளைக்கு எனது மகன் போலந்து எல்லையில் துவக்கோடு நிற்பதா? இல்லை இப்போ சாமன்விலையை பொறுத்துகொள்வதா என்பதுதான் கேள்வி எனும் போது - விடை மிக இலகுவானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

நாளைக்கு எனது மகன் போலந்து எல்லையில் துவக்கோடு நிற்பதா? இல்லை இப்போ சாமன்விலையை பொறுத்துகொள்வதா என்பதுதான் கேள்வி எனும் போது - விடை மிக இலகுவானது.

அப்போ ரஷ்யாவிடம் உள்ளதெல்லாம் தகர டப்பா என நீங்கள் சொன்னதெல்லாம் சும்மா தமாஷ்????

5 minutes ago, goshan_che said:

பொருளாதார தடையை ஜேர்மனியில் இருந்து ஒளிவீச்சில் பார்த்தவன் இல்லை. பஞ்சில்  லாம்பெண்ணை தோய்த்து வந்த வெளிச்சத்தில் படித்தவன்.

நீங்கள் நீங்கள் சார்ந்தோரும் பொருளாதார தடை வந்த பின் தான் லாம்பும் பஞ்சு விளக்கும்.
நான் படித்த காலத்தில் தனிய லாம்பு மட்டுமே.
கால் நடையாய் 3 கிலோமீற்றர் நடந்து ரயிலேறி,பஸ் ஏறி படித்தவன் நான்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

அப்போ ரஷ்யாவிடம் உள்ளதெல்லாம் தகர டப்பா என நீங்கள் சொன்னதெல்லாம் சும்மா தமாஷ்????

உக்கல் உக்ரேனை பிடிக்க ஒரு வருடமாய் முக்கி, கீவ் வரை வந்து அடிவாங்கி ஓடி, பிடித்த ஒரே பெரு நகர் கெசோனையும் விட்டு ஓடி, இப்போ ஒரு பட்டினத்தை பிடித்து விட்டு …வடிவேலு ஸ்டைலில் கலர்ஸ் காட்டும் போதே தெரிகிறதே மரபு வழி போரில் ரஸ்யா பிஸ்கோத்து என்பது.

ஆனால் உக்ரேனில் வச்சு இந்த அடியை கொடுக்காமல் விட்டால் அடுத்த பத்து ஆண்டில் போலந்தை சொறிந்து பார்க்கும் ஆர்வம், வல்லமை ரஸ்யாவுக்கு வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, goshan_che said:

ஒரு காரியம் நடக்க சில சுமைகளை தாங்கி கொள்ளத்தான் வேண்டும் என்பதை நாம் சிறுவர்களாகவே கற்று கொண்டுள்ளோம். 

உங்களை விட என்னைப்போன்றவர்கள் படித்தது ,சுமைகளை சுமந்தது அதிகம். வாலிப சுகங்களை இழந்தது அதிகம். இன்றுவரை பிறந்த மண் சுகமும் இல்லை வாழும் மண் சுகமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

உங்களை விட என்னைப்போன்றவர்கள் படித்தது ,சுமைகளை சுமந்தது அதிகம். வாலிப சுகங்களை இழந்தது அதிகம். இன்றுவரை பிறந்த மண் சுகமும் இல்லை வாழும் மண் சுகமும் இல்லை.

அவை பொது நோக்குக்காகவா? அல்லது தனி மனித முன்னேற்றதுக்காகவா?

தமிழினம் உய்ய நீங்கள் வெளிநாடு வரவில்லைதானே அண்ணை.

ஆனால் என் போன்றோர், யுத்த வடுவை, பொருளாதார சுமையை, அவை தந்த மனச்சிதைவை - இனம் விடுதலை பெற வேண்டும் என்ற பொது நோக்கில் சகித்து கொண்டோம்.

அந்த ஓர்மம் - இன்னும் அப்படியேதான் இருக்கிறது. பொருள்விலை ஏற்றம் எல்லாம் ஜுஜுபி.

2ம் உலக யுத்த வடுவை தாங்கி நின்ற ஐரோப்பிய மக்களிடமும், அதே ஓர்மம் தலைமுறைதாண்டியும் நிற்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ரொபெர்ட் முகாபே வெள்ளையர் என்பதால் இருக்குமோ🤣.

முகாபேயை நான் இங்கே இப்படி எழுதிய போது - இதே நபர்கள்தான் அவர் கறுப்பின நாயகன் என்றும், வெள்ளையரை விரட்டுவதால் நான் அடிமை புத்தியில் எழுதுகிறேன் என்றும் எழுதினார்கள்.

என்றும் எழுதினார்கள் என்று சப்பை கட்டு கட்டாமல் முகாபே பச்சை நிறமாகவே இருக்கட்டும். 30 வருடத்துத்து மேலாக ஆட்சி செய்தவரை பற்றி எழுதாமல் யாரோ மேற்கு ஊடகத்துக்கு அடி பணிந்து எழுதுவது போலுள்ளது.

மன்னர் ஆட்சி என்று என்று  கூட இருக்கும்  ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் ஆட்சி பற்றி குறிப்பிட ஏன் நாணி  கோணி ஆகுறீர்கள்.

மற்றது நீங்கள் மற்றவர்களுக்கு அளிக்காத பட்டத்தையா  உங்களுக்கு அளித்து விட்டார்கள்??🙃

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.