Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சதாம் ஹுசைனின் 'ரகசிய ஆயுத தேடல்' முழுமையடையாமல் போனது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சதாம் ஹுசைனின் 'ரகசிய ஆயுத தேடல்' முழுமையடையாமல் போனது ஏன்?

சதாம் உசைன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,கோர்டன் கொரேரா
  • பதவி,பாதுகாப்பு செய்தியாளர், பிபிசி
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

இராக் படையெடுப்பின் இருபது ஆண்டுகளுக்குப் பிறகும், "பேரழிவு ஆயுதங்கள்" (WMDs) இருந்தனவா என்பது இன்னும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. இந்த படையெடுப்பு தாக்குதலில் பிரிட்டன் பங்கேற்பை, “பேரழிவு ஆயுதங்களின் இருப்பு” என்பதை வைத்தே நியாயப்படுத்தினர்.

பேரழிவு ஆயுத தேடல் பற்றிய புதிய விவரங்கள் பிபிசி தொடரான 'ஷாக் அண்ட் வார்: இராக் 20 இயர்ஸ் ஆன்' என்ற தொடரின் ஒரு பகுதியாக வெளிவந்துள்ளது. இந்தத் தொடர் இராக்கின் "பேரழிவு ஆயுதங்கள்" தேடலில் நேரடியாக ஈடுபட்ட டஜன் கணக்கானவர்களுடன் செய்யப்பட்ட நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டது.

இராக் உடனான போரில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருவதாக 2001ஆம் ஆண்டு டிசம்பரில் மூத்த எம்ஐ6 அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டபோது, அவர் அதிர்ச்சியடைந்தார்.

எம்ஐ6 என்பது பிரிட்டனின் ரகசிய உளவு சேவை அமைப்பு.

 

எம்ஐ6 அதிகாரிகளின் அதிர்ச்சியை அமரிக்காவின் சிஐஏ அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்துகிறார்.

"அவர்களுக்கு மேசைக்கு அருகிலேயே மாரடைப்பு வந்துவிடும் என்று நான் நினைத்தேன். அவர்கள் கண்ணியமான மனிதர்களாக இல்லாமல் இருந்திருந்தால் மேசையின் எதிர் முனையில் அமர்ந்திருந்த என்னை அறைந்திருப்பர்,” என்று இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த அமெரிக்க உளவுத் துறையான சிஐஏவின் இராக் நடவடிக்கைக் குழுவின் தலைவர் லூயிஸ் ரூய்டா கூறுகிறார்,

இச்செய்தி விரைவில் பிரிட்டனின் பிரதமர் அலுவலகத்தை சென்றடைந்தது. இது தூதாண்மை அதிகாரிகளுக்கு பதிலாக உளவாளிகளால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

அப்போது MI6 இன் தலைவராக இருந்த சர் ரிச்சர்ட் டியர்லவ் பிபிசிக்கு அளித்த பேட்டியில், இராக் படையெடுப்பு குறித்து பிரிட்டன் பிரதமருக்கு முதலில் தெரிவித்தவர் தான்தான் என்று கூறினார்.

"நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இப்போது தயாராகத் தொடங்குங்கள். ஏனென்றால் அவர்கள் (அமெரிக்கா) தாக்குதலுக்கு தயாராகி வருவதாகத் தெரிகிறது என்று நான் பிரதமரிடம் கூறினேன்,” என்று அவர் தெரிவித்தார்.

பிரிட்டனின் வெளிவிவகார உளவு நிறுவனமான MI6 அதன் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் மிகவும் குழப்பமான அத்தியாயங்களில் ஒன்றில் ஈடுபடவிருந்தது.

அமெரிக்காவைப் பொருத்தவரை பேரழிவு ஆயுதங்களின் பிரச்னையை விட சதாம் ஹூசேனை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதுதான் முக்கியமானதாக இருந்தது.

"சதாம் ஹூசேனிடம் ரப்பர் பேண்டும், காகிதக் கிளிப்பும் இருந்திருந்தால் கூட இராக் மீது படையெடுத்திருப்போம்" என்கிறார் ரூய்டா.

இராக்கின் ரசாயன, உயிரியல் மற்றும் அணு ஆயுதங்களால் பிரிட்டன் ஆபத்தில் இருந்தது.

இராக் "பேரழிவு ஆயுதங்கள்" வைத்திருப்பதாக சில சமயங்களில் பிரிட்டிஷ் அரசும் குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் ஆயுதங்கள் அங்கே இருப்பதாக தங்கள் சொந்த உளவாளிகள் தங்களிடம் கூறியதாக அந்த நேரத்தில் இருந்த அமைச்சர்கள் கூறுகிறார்கள்.

"எனக்கு கிடைத்த உளவுத்தகவல்களை புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாக இருந்தது. நான் யாரை நம்பினேனோ, அந்த நம்பிக்கைக்கு பாத்திரமானவர் அவர் என்று நான் கருதுகிறேன்,” என்று முன்னாள் பிரதமர் சர் டோனி பிளேயர் என்னிடம் கூறினார்.

தாக்குதலுக்கு முந்தைய நாள் மாலையில் கூட்டு புலனாய்வுக் குழுவிடம் உறுதிமொழி கேட்டதாக அவர் கூறுகிறார். தவறான தகவல் அளித்தமைக்காக உளவுத்துறையை விமர்சிக்க அவர் மறுக்கிறார்.

அப்போதே இதுகுறித்த சந்தேகம் இருந்ததாக மற்ற அமைச்சர்கள் கூறினர்.

"மூன்று சந்திப்புகளில் நான் ரிச்சர்ட் டியர்லவ்வை விசாரித்தேன். உளவுத்துறை செய்தியின் ஆதாரம் பற்றி அவரிடம் கேட்டேன்." என்று அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோ கூறுகிறார்.

"இதைப் பற்றி எனக்கு ஒரு சங்கடமான உணர்வு இருந்தது. ஆனால் டியர்லவ் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முகவர்கள் நம்பகமானவர்கள் என்று எனக்கு உறுதியளித்தார்."

இறுதி முடிவை எடுப்பவர்கள் அவர்கள்தான் என்பதால் இதற்கு தலைவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜாக் ஸ்ட்ரோ கூறினார்.

இராக் விவகாரத்தை உளவுத்துறை தோல்வியாக பார்க்கிறீர்களா என்று பிபிசி அவரிடம் கேட்டபோது. இதற்கு அவர் எதிர்மறையாக பதிலளித்தார்.

இராக்கில் ஆயுதங்கள் இருந்ததாகவும், அவை சிரியாவிற்குள் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர் இன்னும் நம்புகிறார்.

சர் ரிச்சர்ட் டியர்லவ்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

சதாம் ஹுசேனிடம் பேரழிவு ஆயுதங்கள் இருந்ததா?

பிரிட்டனின் அப்போதைய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஒருங்கிணைப்பாளராக இருந்த சர் டேவிட் ஓர்மண்ட், "இது ஒரு மாபெரும் தோல்வி" என்கிறார்.

சதாம் ஹுசேன் பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற கருத்தை ஆதரிக்கும் தகவல்கள் மட்டுமே அரசு நிபுணர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும், அதை ஆதரிக்காத தகவல்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

தங்களுக்கும் இதுபற்றிய கவலை இருந்ததாக MI6 இல் உள்ள சிலர் கூறினர்.

இராக்கில் பணியாற்றிய ஒரு அதிகாரி, பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில், "அந்த நேரத்தில் நாங்கள் செய்வது தவறு என்று உணர்ந்தேன்" என்று கூறுகிறார்.

2002 ஆம் ஆண்டு பற்றி குறிப்பிட்ட ஒரு மூத்த அதிகாரி, "இராக், பேரழிவு ஆயுத திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது என்றும் இது ஆபத்தை உருவாக்கியுள்ளது என்றும் கூறுவதற்கு புதிய அல்லது நம்பகமான உளவுத்துறை தகவல் அல்லது மதிப்பீடு எதுவும் இருக்கவில்லை" என்று கூறுகிறார்.

"அரசின் பார்வையில் இராக்கின் 'பேரழிவு ஆயுதங்கள்' பிரச்னையை நியாயப்படுத்த அவர்கள் செய்யக்கூடிய ஒரே விஷயம் இதுதான் என்று நான் நினைக்கிறேன்."

2002 வசந்த காலத்தில், தற்போதைய உளவுத்துறை சீரற்றதாக இருந்தது. நீண்டகாலமாக MI6 இல் பணியாற்றும் முகவருக்குக்கூட இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய தகவல் ஏதும் இருக்கவில்லை.

இந்த சந்தேகத்தை வலுப்படுத்த, புதிய ஆதாரங்களிடமிருந்து புதிய உளவுத்துறை தகவல்கள் சேகரிக்கப்பட்டன. 2002 செப்டம்பரில் இந்த ஆவணத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டபோது இது நடந்தது.

புலனாய்வுத் துறையை சேர்ந்த ஒருவர் ஒரு செய்தியை டிகோட் செய்ததை நினைவுகூர்கிறார். இராக் மீது நடவடிக்கை எடுக்க பிரிட்டிஷ் மக்களை வற்புறுத்துவதை விட அதிகமாக புலனாய்வு அமைப்பின் பங்கு இருக்கவில்லை என்று அந்த செய்தியில் கூறப்பட்டது.

Caption-மத்திய லண்டனில் உள்ள MI6 தலைமையகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மொபைல் ஆய்வகத்தின் வளர்ச்சி

2002 செப்டம்பர் 12 தேதி சர் ரிச்சர்ட் டியர்லவ் டவுனிங் ஸ்ட்ரீட்டிற்கு ஒரு புதிய செய்தி வட்டாரம் அளித்த செய்தியைக் கொண்டு வந்தார். சதாம் ஹூசேன் ஆயுதத் திட்டத்தை மறுதொடக்கம் செய்துள்ளதாகவும், விரைவில் புதிய விவரங்களை வழங்குவதாகவும் அந்த நபர் உறுதியளித்தார்.

இந்த ஆதாரம் முழுமையாக ஆராயப்படாவிட்டாலும், அவரது தகவல்கள் நிபுணர்களிடம் பகிரப்படாவிட்டாலும், அதன் விவரங்கள் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரட்டன் பிரதமருக்கு மிக நெருக்கமாக அவர் ஆனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சர் ரிச்சர்ட் மறுக்கிறார்.

வரும் மாதங்களில் அந்த செய்தி வட்டாரம் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை, இறுதியில் அவரிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தகவல்களுக்கு ஈடாக பணம் சம்பாதிக்க அல்லது இராக்கில் இருந்து சதாம் ஹுசைனை தூக்கி எறிய அவர் விரும்பியிருக்கலாம் என்று பின்னர் கருதப்பட்டது.

“ஜனவரி 2003 இல், ஜோர்டானில் சதாமின் உளவுப் பிரிவில் அவருக்கு எதிராகத் திரும்பிய ஒருவரை நான் சந்தித்தேன். அமெரிக்காவின் பார்வையில் இருந்து விலகி, உயிரியல் ஆயுதங்களில் பணிபுரியும் மொபைல் ஆய்வகங்களை உருவாக்குவதில் தான் ஈடுபட்டதாக அவர் கூறினார்.

இந்த நபரின் கூற்றுக்கள் காரணமாக, முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கோலின் பவல் ஐக்கிய நாடுகள் சபையில் இந்த பிரச்சனையை எழுப்பினார். இருப்பினும், இந்த தகவலை நம்ப முடியாது என்று அமெரிக்க அரசு ஒரு 'நோட்டீஸ்' வெளியிட்டது.

அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அரசுகள் நம்பியிருந்த 'கர்வ்பால்' என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட மற்றொரு செய்தி ஆதாரமும், ஆய்வகம் பற்றிய தகவலைத் தருகிறது.

பேரழிவு ஆயுதங்கள் பற்றிய விசாரணை

2003 போருக்கு சில வாரங்களுக்கு முன்பு, நான் வடக்கு இராக்கில் உள்ள ஹலாப்சா கிராமத்திற்குச் சென்றேன். 1988 இல் சதாம் ஹூசேனின் படைகள் அவர்கள் மீது ரசாயன ஆயுதங்களை வீசிய நாள் குறித்து உள்ளூர்வாசிகள் பேசுவதைக் கேட்டேன்.

1990களின் முற்பகுதியில் ஐநா ஆயுத ஆய்வாளர்களிடம் இருந்து நேர்மறையான விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சதாம் பெரும்பாலான WMD(ஆபத்தான ஆயுதங்களை கூட்டாக அழிப்பது) திட்டத்தை அழிக்க உத்தரவிட்டதாக இராக்கின் உயர்மட்ட விஞ்ஞானி ஒருவர் பின்னர் என்னிடம் கூறினார்.

இராக் தலைவர் பின்னர் திட்டத்தை மறுதொடக்கம் செய்திருக்கலாம் என்று அந்த விஞ்ஞானி கூறினார். ஆனால் இராக் அனைத்தையும் ரகசியமாக அழித்துவிட்டது. அண்டை நாடான இரானுக்கு எதிராக தான் பயன்படுத்தக்கூடிய ஏதோவொன்று தன்னிடம் இருப்பதாக நம்ப வைக்க இராக் இந்த புரளியை கிளப்பிவிட்டது என்றும் கருதப்படுகிறது.

இதன்காரணமாகத்தான் பின்னர் இராக் அனைத்தையும் அழித்ததற்கான ஆதாரத்தை கேட்டபோது அந்த நாட்டால் அதை அளிக்கமுடியவில்லை.

2002 இன் பிற்பகுதியில், பேரழிவு ஆயுதங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக ஐநா ஆய்வாளர்கள் இராக்கிற்குத் திரும்பினர். மேற்கு நாடுகளால் ரகசிய மொபைல் ஆய்வகங்கள் என்று சுட்டிக்காட்டப்பட்ட தளங்கள் தங்களுக்கு நினைவில் இருப்பதாக அவர்களில் சிலர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

2003 ஜனவரியில் டோனி பிளேயர் சர் ரிச்சர்டிடம் "எனது எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. ஏனென்றால் பேரழிவு ஆயுதங்களின் ஆதாரங்களைக் கண்டறியும் அழுத்தம் அதிகரிக்கிறது,” என்று நகைச்சுவையாக கூறினார்.

மார்ச் 2003: தெற்கு இராக்கில் பிரிட்டிஷ் படைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"அந்த நேரத்தில் மிகவும் மனச்சோர்வு ஏற்பட்டது,"என்று சர் ரிச்சர்ட் நினைவு கூர்ந்தார்.

ஐநா ஆயுத ஆய்வாளர் "திறமையற்றவர்" என்று சர் ரிச்சர்ட் குற்றம் சாட்டுகிறார்.

2003 இன் ஆரம்பம் வரை தானும் ஆயுதங்கள் இருக்கிறது என்று நம்பியதாக ஐ.நா.வின் ரசாயன மற்றும் உயிரியல் ஆய்வுகளுக்கு தலைமை தாங்கும் ஹான்ஸ் பிளிக்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால் ரகசிய தகவல் கிடைத்ததும் அதன் இருப்பு குறித்து சந்தேகம் எழுந்தது. ஆதாரத்திற்கு இன்னும் சிறிது கால அவகாசம் வேண்டியிருந்தது. ஆனால் அதை அவரால் பெற முடியவில்லை.

”2003 மார்ச் வரை எந்த தீவிரமான ஆதாரமும் கிடைக்காதபோதிலும், போரை நிறுத்த வழி இல்லை. அதன் பிறகும் WMD எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எல்லாமே சிதைந்து போயின,” என்ற போருக்குப் பிந்தைய மூலத்தின் உள் மதிப்பாய்வை ஒரு முன்னாள் MI6 அதிகாரி நினைவு கூர்ந்தார்.

இது உளவாளிகள் மற்றும் அரசியல்வாதிகள் இருவருக்கும் ஆழமான மற்றும் நீடித்த விளைவுகளை ஏற்படுத்துவதாக இருந்தது.

https://www.bbc.com/tamil/articles/c3grvjynx3xo

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகம் இன்னுமா இந்த BBC யை நம்பிக்கொண்டிருக்கிறது? 

 பாதுகாப்பிலும் செல்வச் செழிப்பிலும் ஈராக் ஐரோப்பாவைவிட பல மடங்கு  முண்ணணியில் திகழ்ந்ததாக 1980 களில் தொழில் நிமித்தம் ஈராக்கில் பல ஆண்டுகளாக வாழ்ந்த எனது நண்பரொருவர் அடிக்கடி எனக்குக் கூறுவார். 

இன்று ஈராக்கின் நிலை ? 

இதே நிலமைதான் லிபியாவுக்கும். 

ஈராக்கிலும் லிபியாவிலும் சனநாயகத்தை நிலைநாட்ட NATO நாடுகள் படையெடுத்திருப்பார்களோ 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக்கில் இருந்து சிரியாவுக்கு அணு ஆயுதங்கள் கடத்தப்பட்டிருந்தால் இப்போ சிரியாவில் இருந்திருக்க வேண்டுமே?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

ஈராக்கில் இருந்து சிரியாவுக்கு அணு ஆயுதங்கள் கடத்தப்பட்டிருந்தால் இப்போ சிரியாவில் இருந்திருக்க வேண்டுமே?

அணு ஆயுதங்கள் சதாமிடம் இருந்ததாக யார் சொன்னது?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Justin said:

அணு ஆயுதங்கள் சதாமிடம் இருந்ததாக யார் 

அப்போ ஆபத்தான ஆயுதங்கள் என எடுத்துக்கொள்ளுங்கள்.

பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் என எடுத்துக்கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

அப்போ ஆபத்தான ஆயுதங்கள் என எடுத்துக்கொள்ளுங்கள்.

பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் என எடுத்துக்கொள்ளுங்கள்.

 பேரழிவு ஆயுதங்கள் சதாமிடம் இருப்பதாக அமெரிக்காவும், பிரிட்டனும் பொய் சொன்னது இதற்காகத் தான்.

அணு ஆயுதம் தயாரிக்க முற்படுகிறார்கள் என்றிருந்தால், அமெரிக்கா போயிருக்க முடியாது. சர்வதேச நடைமுறைப்படி அணுவாயுத கண்காணிப்பு  அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA) போய் பரிசோதித்திருக்க வேண்டும். ஏற்கனவே 2003 ஜனவரியில் இப்படியான ஒரு  பரிசோதனையை பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தின் படி பூர்த்தி செய்து அணுவாயுத முயற்சிகள் இல்லையென IAEA முடிவு செய்து விட்டது.

எனவே தான் இரசாயன, உயிரியல் ஆயுதங்கள் இருப்பதாகப் பொய் சொன்னார்கள். குர்திஷ் மக்கள் மீது 1988 இல் சதாமின் படைகள் நடத்திய சரின் (sarin) இரசாயன ஆயுதத் தாக்குதலை நடத்தியிருந்தமையால் (இதில் இது வரை இறந்தோரின் எண்ணிக்கை 12,000 மேல்) இதைச் சிலர் நம்பினர். எனவே, சதாமின் இரத்தக் கறை படிந்த வரலாறும் சேர்ந்து தான் அமெரிக்க, பிரிட்டன் அரசுகளின் பொய்க்குப் பலம் சேர்த்து அவருக்கு ஆப்பு வைத்தது.

பி.கு: சிரியாவுக்கு ஈராக்கின் அணுவாயுதம் போகவில்லை. ஆனால், 2013 இல்   சரின், மஸ்ரார்ட்  gas தாக்குதலை சிரியாவின் படைகளும் மக்கள் மீது நடாத்தின. 1000 பேர், பெரும்பாலும் குழந்தைகள், பெண்கள் டமாஸ்கசில், இதனால் இறந்தனர். 

  • கருத்துக்கள உறவுகள்

BBC யின் செய்திகள் ஒப்பீட்டளவில் okey போலத் தென்படுகிறது. 

😀

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

அணு ஆயுதங்கள் சதாமிடம் இருந்ததாக யார் சொன்னது?

2003 அமெரிக்கா எதை சொல்லி ஈராக் மீது போர் தொடுத்தார்க‌ள்................

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பையன்26 said:

2003 அமெரிக்கா எதை சொல்லி ஈராக் மீது போர் தொடுத்தார்க‌ள்................

☝️மேலே மெனக்கெட்டு எழுதியிருக்கிறேனே பையன்? வாசிக்கவில்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்
On 15/3/2023 at 16:24, nunavilan said:

அப்போ ஆபத்தான ஆயுதங்கள் என எடுத்துக்கொள்ளுங்கள்.

பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் என எடுத்துக்கொள்ளுங்கள்.

சதாமிடம் அணு ஆயுதம் இல்லை என பட்லர் தலைமையிலான குழு சொன்ன பின் தான் 2ம் வளைகுடா யுத்தம் நிகழ்ந்தது.

ஆனால் எப்போதும் சதாமிடம் இரசாயன ஆயுதங்கள் இருந்தன. ஈரான் யுத்தத்தில் கூட பாவித்தார்.

அவர் அதை குர்திகள், சியாக்கள், மீதும் பாவித்தார்.

இதனால் ஈராக்கில் no fly zone கூட அறிமுகபடுத்தப்பட்டது.

 இரசாயன ஆயுதம் சதாமிடம் இருந்தது.

அடிப்படையான உயிரியல் ஆயுதம் என்பது எந்த நாடும் தயாரிக்க கூடியதுதான்.

ஆனால் அதுவல்ல போருக்கான காரணம்.

அதை மேற்கின் மீது பாவிக்குன் இயலுமையை சதாம் பெற்றுவிட்டார், 45 நிமிடத்தில் மேற்கை தாக்க கூடிய வலுவை பெற்று விட்டார் - என புஷ்சும், பிளேரும் சொன்னார்கள்.

👆🏼இதுதான் பச்சை பொய். இதுதான் ஆக்கிரமிபுக்கான காரணமாக சொல்லப்பட்டது. இதனால்தான் அந்த யுத்தம் தவறான யுத்தம் என கருதப்படுகிறது.

Robin Cook என்ற முன்னாள் வெளிவிவகார அமைச்சர், அன்றைய தொழில்கட்சியின் தூண், தனது கபினெட் அமைச்சர் பதவியை தூக்கி எறிந்து விட்டுப்போனார்.

1 மில்லியன் மக்கள் லண்டனில் வீதிக்கு வந்து போராடினார்கள். 

ஊடகங்கள் இரு பக்க நியாயத்தையும் கூறின.

ஆனால் புஷ் எடுத்த முடிவை மாற்றவில்லை, பிளாரும் கூடவே போய் சீரழிஞ்ச்சார்.

முன்னதாக Camp David இல், புஷ், பிளேர் அதிகாரிகள் இன்றி 1 மணி நேரம் பேசினர். இது புட்டினுடன் டிரம் சந்தித்ததை போன்றது. பிளேர் இப்படி செய்தது தவறு. அந்த சந்திப்பில்தான் “என்ன நடந்தாலும்” பிரிட்டன் அமெரிக்காவுடன் போருக்கு வரும் என்ற உறுதிமொழியை பிளேர் கொடுத்தார்.

 

Edited by goshan_che
உயிரியல், இரசாயன ஆயுத வேறுபாடு சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

https://www.theguardian.com/commentisfree/2023/mar/17/robin-cook-stop-iraq-war-speech
 

@nunavilan

நான் மேலே சொன்ன ராபின் குக் பதவி விலகலை பற்றி அவரின் விசேட ஆலோசகராக பணி ஆற்றியவர் இன்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

குறிப்பாக ராபின் குக்கின் உரையில் சொல்வது அவதானத்துக்குரியது.

 

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசிக்குப் போட்டியாக வரும் எண்ணமில்லையென்றாலும் 2003 இல் (20 வருடங்கள் முன்பு தான், 200 வருடங்கள் முன்பல்ல!) நடந்த சம்பவங்களை நினைவிலிருந்தும் செய்திகளின் படியும் சொல்வதில் தவறில்லை. அப்படிச் சொல்லாவிட்டால் "நேட்டோ ஈராக்கின் மீது படையெடுத்தது" என்று ரிக்ரொக் பார்த்து வரலாறு படிக்கும் பேர்வழிகள் சொல்வதை நம்ப வேண்டி வரும்!😎

ஈராக் மீது புஷ் குழுவின் படையெடுப்பை எதிர்த்தது அமெரிக்க, பிரிட்டன் மக்கள் மட்டுமல்ல . பிரான்ஸும் ஜேர்மனியும் வெளிப்படையாகவே இதை எதிர்த்தன. இதனால் சினமடைந்த அமெரிக்கப் படைத்துறையினர், ஈராக்கில் இருந்த அமெரிக்கப் படையினருக்கு அனுப்பும் உணவில் இருந்த French fries  ஐ , "Freedom fries" என்று பெயர் மாற்றி அழைத்தனர்.  

  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2023 at 15:29, Justin said:

☝️மேலே மெனக்கெட்டு எழுதியிருக்கிறேனே பையன்? வாசிக்கவில்லையோ?

நான் ஆர‌ம்ப‌ம் முத‌ல் வாசித்துட்டு வ‌ரும் போது தான் என் க‌ருத்தை எழுதினேன்.............அத‌ற்கு கீழ‌ தான் உங்க‌ளின் விள‌க்க‌ம் இருந்த‌து ப‌ச்சை புள்ளி மூல‌ம் ந‌ன்றி சொன்னேன்....................

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Justin said:

பிபிசிக்குப் போட்டியாக வரும் எண்ணமில்லையென்றாலும் 2003 இல் (20 வருடங்கள் முன்பு தான், 200 வருடங்கள் முன்பல்ல!) நடந்த சம்பவங்களை நினைவிலிருந்தும் செய்திகளின் படியும் சொல்வதில் தவறில்லை. அப்படிச் சொல்லாவிட்டால் "நேட்டோ ஈராக்கின் மீது படையெடுத்தது" என்று ரிக்ரொக் பார்த்து வரலாறு படிக்கும் பேர்வழிகள் சொல்வதை நம்ப வேண்டி வரும்!😎

ஈராக் மீது புஷ் குழுவின் படையெடுப்பை எதிர்த்தது அமெரிக்க, பிரிட்டன் மக்கள் மட்டுமல்ல . பிரான்ஸும் ஜேர்மனியும் வெளிப்படையாகவே இதை எதிர்த்தன. இதனால் சினமடைந்த அமெரிக்கப் படைத்துறையினர், ஈராக்கில் இருந்த அமெரிக்கப் படையினருக்கு அனுப்பும் உணவில் இருந்த French fries  ஐ , "Freedom fries" என்று பெயர் மாற்றி அழைத்தனர்.  

பிரான்ஸ் தனது வான்பரப்பை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க மறுத்து விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

பிபிசிக்குப் போட்டியாக வரும் எண்ணமில்லையென்றாலும் 2003 இல் (20 வருடங்கள் முன்பு தான், 200 வருடங்கள் முன்பல்ல!) நடந்த சம்பவங்களை நினைவிலிருந்தும் செய்திகளின் படியும் சொல்வதில் தவறில்லை. அப்படிச் சொல்லாவிட்டால் "நேட்டோ ஈராக்கின் மீது படையெடுத்தது" என்று ரிக்ரொக் பார்த்து வரலாறு படிக்கும் பேர்வழிகள் சொல்வதை நம்ப வேண்டி வரும்!😎

ஈராக் மீது புஷ் குழுவின் படையெடுப்பை எதிர்த்தது அமெரிக்க, பிரிட்டன் மக்கள் மட்டுமல்ல . பிரான்ஸும் ஜேர்மனியும் வெளிப்படையாகவே இதை எதிர்த்தன. இதனால் சினமடைந்த அமெரிக்கப் படைத்துறையினர், ஈராக்கில் இருந்த அமெரிக்கப் படையினருக்கு அனுப்பும் உணவில் இருந்த French fries  ஐ , "Freedom fries" என்று பெயர் மாற்றி அழைத்தனர்.  

யாரோ ஒரு அமெரிக்க முக்கியஸ்தர்(பவல்?) பிரெஞ்சுகாரரை cheese eating surrender monkeys எனவும் சொன்னார்.

32 minutes ago, பையன்26 said:

நான் ஆர‌ம்ப‌ம் முத‌ல் வாசித்துட்டு வ‌ரும் போது தான் என் க‌ருத்தை எழுதினேன்.............அத‌ற்கு கீழ‌ தான் உங்க‌ளின் விள‌க்க‌ம் இருந்த‌து ப‌ச்சை புள்ளி மூல‌ம் ந‌ன்றி சொன்னேன்....................

பையன் ஒரு கிழமைக்கு முன், இன்னும் ஒரு திரியில், நானும் அணு ஆயுதம் இல்லை, நேட்டோ சம்பந்த படவில்லை, IAEA பற்றி எல்லாம் உங்களுக்கு பதில் எழுதினேன்.

ஆனால் அதை கொஞ்சம் நகைசுவையாக எழுதியமையால் கடந்து போனீர்களோ தெரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனி ஈராக் மீதான இரண்டாவது போர் தொடுப்பிற்கு ஆதரவு கொடுக்காமல் விலகி நின்றது அமெரிக்காவிற்கு பெரும் சினத்தை கொடுத்தது. அதற்கு பதிலாக இன்று வட்டியும் முதலுமாக  ஜேர்மனி மூலம் உக்ரேனில் வைத்து சாதிக்கின்றது அமெரிக்கா.

ஏனெனில் இன்று ஆட்சியில் இருக்கும் கட்சிகள் போர் விரும்பிகள் அல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சதாம் ஹுசேனை வீழ்த்திய வல்லரசுகள் - 20 வருடங்களுக்கு முந்தைய வரலாறு எழுப்பும் கேள்விகள்

சதாம் ஹுசைன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

2003ஆம் ஆண்டு, மார்ச் 20ஆம் தேதி. அமெரிக்கா மற்றும் அதன் நேச நாட்டுப் படைகள் இராக் மீது படையெடுத்து சதாம் ஹுசேனின் ஆட்சியை வீழ்த்தின.

இராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகவும், அது சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தல் என்றும் அமெரிக்கா கூறியது. ஆனால் பெரும்பாலான நாடுகள் இராக்குக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஆதரிக்க மறுத்து விட்டன.

படையெடுப்பை அமெரிக்கா விரும்பியது ஏன்?

1990-1991 வளைகுடா போரில், அமெரிக்கா ஒரு பன்னாட்டு கூட்டணிக்குத் தலைமை ஏற்று நடத்தியது. இது இராக் படைகளைக் குவைத்திலிருந்து வெளியேற்றியது.

பின்னர், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 687ஐ நிறைவேற்றி, இராக்கின் அனைத்துப் பேரழிவு ஆயுதங்களையும் (WMDs) அழிக்க உத்தரவிட்டது - பேரழிவு ஆயுதங்கள் என்பது அணு, உயிரியல் மற்றும் ரசாயன ஆயுதங்கள் மற்றும் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள உள்ளடக்கியது.

 

1998 இல், இராக் ஐ.நா ஆயுத ஆய்வாளர்களுடனான ஒத்துழைப்பை நிறுத்திய பின், அமெரிக்காவும் பிரிட்டனும் வான்வழி தாக்குதல்களால் பதிலடி கொடுத்தன.

நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையம் மற்றும் வாஷிங்டனில் உள்ள பென்டகன் மீது அல்-கொய்தா நடத்திய 11 செப்டம்பர் 2001 தாக்குதல்களுக்குப் பிறகு, அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் நிர்வாகம் இராக் மீது படையெடுப்பதற்கான திட்டங்களைத் தொடங்கியது.

சதாம் தொடர்ந்து பேரழிவு ஆயுதங்களைச் சேமித்து தயாரித்து வருவதாகவும், இரான் மற்றும் வட கொரியாவுடன் ஒரு சர்வதேச "தீய சக்திகளின்” ஒரு பகுதியாக இராக் இருப்பதாகவும் அதிபர் புஷ் கூறினார்.

அக்டோபர் 2002இல், அமெரிக்க நாடாளுமன்றம் இராக்கிற்கு எதிராக ராணுவ பலத்தைப் பயன்படுத்த அனுமதித்தது.

"இராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதற்கு குறிப்பிடத்தக்க சான்றுகள் இருப்பதாக வாஷிங்டனில் உள்ள பலர் நம்பினர். அது உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது" என்று லண்டனில் உள்ள சதம் ஹவுஸில் ஒரு வெளிநாட்டு விவகார சிந்தனைக் குழுவின் அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் மற்றும் அமெரிக்கா செயல்முறைத் திட்டத்தின் இயக்கநர் டாக்டர் லெஸ்லி விஞ்சமுரி கூறுகிறார்.

பிப்ரவரி 2003இல், அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரான கொலின் பவல், இராக்கிற்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு அனுமதி வழங்குமாறு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை கேட்டுக் கொண்டார். அந்நாடு, அதன் பேரழிவு ஆயுத திட்டத்தால் முந்தைய தீர்மானங்களை மீறுவதாக குற்றம்சாட்டினார்.

ஆனால், அவர் சபையை வற்புறுத்தவில்லை. 2002 இல் இராக்கிற்குச் சென்ற ஐ.நா மற்றும் சர்வதேச எரிசக்தி ஆணையத்தின் ஆயுத ஆய்வாளர்களில் பெரும்பாலானோர், பேரழிவு ஆயுதங்களின் ஆதாரங்களைக் கண்டறிய முனைய விரும்பினர்.

ஆய்வாளர்கள் அறிக்கைக்காகக் காத்திருக்கப் போவதில்லை என்று கூறிய அமெரிக்கா, இராக்கிற்கு எதிராக "விருப்பமுள்ளவர்களின் கூட்டணியை" கூட்டியது.

போரை ஆதரித்த நாடுகள்

கூட்டணியில் இருந்த 30 நாடுகளில், பிரிட்டன், ஆஸ்திரேலியா, போலந்து ஆகியவை படையெடுப்பில் பங்கேற்றன. பிரிட்டன் 45,000 துருப்புகளையும், ஆஸ்திரேலியா 2,000 துருப்புகளையும், போலாந்து 194 சிறப்புப் படை உறுப்பினர்களையும் அனுப்பின.

குவைத் தனது எல்லையில் இருந்து படையெடுப்பை நடத்த அனுமதித்தது.

"வில்னியஸ் குழுவில்" உள்ள பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து, ஸ்பெயினும் இத்தாலியும் அமெரிக்க தலைமையிலான கூட்டணிக்கு ராஜீய ஆதரவை அளித்தன.

இராக் ஒரு பேரழிவு ஆயுதத் திட்டத்தைக் கொண்டிருப்பதாகவும், ஐநா தீர்மானங்களை மீறுவதாகவும் அந்த நாடுகள் அனைத்தும் நம்பின.

அமெரிக்காவும் பிரிட்டனும் சுமத்திய குற்றச்சாட்டுகள்

இராக்கில் உயிரியல் ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான "மொபைல் ஆய்வகங்கள்" இருப்பதாக 2003ஆம் ஆண்டு ஐ.நா.விடம் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கொலின் பவல் தெரிவித்தார். இருப்பினும், 2004 ஆம் ஆண்டில், இதற்கான ஆதாரம் " திடமாக இல்லை" என்று ஒப்புக்கொண்டார்.

கிழக்கு மத்தியதரைக் கடலில் உள்ள இங்கிலாந்து இலக்குகளைத் தாக்க 45 நிமிடங்களுக்குள் இராக்கிய ஏவுகணைகள் தயார் செய்யப்படலாம் என்று பிரிட்டன் அரசாங்கம் ஒரு உளவுத்துறை ஆவணத்தை வெளியிட்டது.

பிரிட்டனின் அப்போதைய பிரதமர் டோனி ப்ளேர், சந்தேகத்துக்கு இடமின்றி சதாம் ஹுசேன் தொடர்ந்து பேரழிவு ஆயுதங்களை தயாரிக்கிறார் என்று கூறினார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கொலின் பவல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கொலின் பவல்

இராக்கின் WMD திட்டத்தைப் பற்றி தங்களுக்கு நேரடியாகத் தெரியும் என்று கூறிய ரஃபித் அஹ்மத் அல்வான் அல்-ஜனாபி என்ற ரசாயன பொறியாளர் மற்றும் மேஜ் முஹம்மது ஹரித் என்ற உளவுத்துறை அதிகாரி ஆகிய இரு இராக்கியர்களின் கூற்றுகளை இரு நாடுகளும் பெரிதும் நம்பி இருந்தன. வேண்டும் என்றே ஆதாரங்களை இட்டுக்கட்டியதாக அந்த இருவரும் பின்னர் கூறினர்.

போரை ஆதரிக்க மறுத்த நாடுகள்

அமெரிக்காவின் இரண்டு அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோ இதற்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டன.

ஐரோப்பாவில் இரண்டு முக்கிய அமெரிக்க நட்பு நாடுகளான ஜெர்மனியும் பிரான்சும் ஆதரவை மறுத்தன.

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் டொமினிக் தி வில்பின், ராணுவ தலையீடுதான் "மோசமான தீர்வாக இருக்கும்" என்றார்.

துருக்கி - சக நேட்டோ உறுப்பினர் மற்றும் இராக்கின் அண்டை நாடு - அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளை அதன் விமான தளங்களைப் பயன்படுத்த அனுமதிக்க மறுத்தது.

1990-91 வளைகுடா போரில் இராக்கிற்கு எதிராக அமெரிக்காவை ஆதரித்த செளதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகள் 2003இல் அதன் படையெடுப்பை ஆதரிக்கவில்லை.

லண்டன் SOAS பல்கலைக்கழகத்தில் மத்திய கிழக்கு அரசியலில் நிபுணரான பேராசிரியர் கில்பர்ட் அச்சார், "வளைகுடா அரபு நாடுகள் இந்த திட்டத்தை முட்டாள்தனம் என்று நினைத்தன. "சதாமின் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு இரான் இராக்கை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும் என்று அவர்கள் கவலைப்பட்டன," என்கிறார்.

போரில் என்ன நடந்தது?

20 மார்ச் 2003 அன்று விடியற்காலையில், ஆபரேஷன் இராக்கி ஃப்ரீடம், 2,95,000 அமெரிக்க மற்றும் நட்பு நாடுகளின் படைகள் குவைத்துடனான இராக் எல்லை வழியாக இராக்கை ஆக்கிரமித்தன.

குர்திஷ் பெஷ்மெர்கா போராளிகளின் 70,000 உறுப்பினர்கள் நாட்டின் வடக்கில் இராக் படைகளுடன் போரிட்டனர். மே மாதத்திற்குள், இராக்கின் ராணுவம் தோற்கடிக்கப்பட்டு அதன் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சதாம் ஹுசேன் பின்னர் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

இருப்பினும், இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

2004இல், நாட்டில் ஒரு மதவாத கிளர்ச்சி சூழ்ந்தது. பிந்தைய ஆண்டுகளில், இராக்கின் சுன்னி மற்றும் ஷியா முஸ்லிம் பிரிவுகளுக்கு இடையே உள்நாட்டுப் போர் வெடித்தது. அமெரிக்க துருப்புக்கள் இராக்கில் இருந்து 2011இல் தான் வெளியேறின.

2003 மற்றும் 2011 க்கு இடையில் 4,61,000 பேர் இராக்கில் போர் தொடர்பான காரணங்களால் இறந்ததாகவும், போருக்கு 3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவானதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் சிந்தனைக் குழுவின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் கரின் வான் ஹிப்பல் கூறுகையில், "இந்தப் போரினால் அமெரிக்கா நிறைய நம்பகத்தன்மையை இழந்துவிட்டது.

"இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் நாங்கள் ஏன் அமெரிக்க உளவுத்துறையை நம்ப வேண்டும் என மக்கள் சொல்வதை நீங்கள் இன்னும் கேட்கலாம்,” என்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/c3g71g3p0xgo

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2023 at 15:13, Justin said:

பிபிசிக்குப் போட்டியாக வரும் எண்ணமில்லையென்றாலும் 2003 இல் (20 வருடங்கள் முன்பு தான், 200 வருடங்கள் முன்பல்ல!) நடந்த சம்பவங்களை நினைவிலிருந்தும் செய்திகளின் படியும் சொல்வதில் தவறில்லை. அப்படிச் சொல்லாவிட்டால் "நேட்டோ ஈராக்கின் மீது படையெடுத்தது" என்று ரிக்ரொக் பார்த்து வரலாறு படிக்கும் பேர்வழிகள் சொல்வதை நம்ப வேண்டி வரும்!😎

ஈராக் மீது புஷ் குழுவின் படையெடுப்பை எதிர்த்தது அமெரிக்க, பிரிட்டன் மக்கள் மட்டுமல்ல . பிரான்ஸும் ஜேர்மனியும் வெளிப்படையாகவே இதை எதிர்த்தன. இதனால் சினமடைந்த அமெரிக்கப் படைத்துறையினர், ஈராக்கில் இருந்த அமெரிக்கப் படையினருக்கு அனுப்பும் உணவில் இருந்த French fries  ஐ , "Freedom fries" என்று பெயர் மாற்றி அழைத்தனர்.  

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.