Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் மீது வழக்குப் பதிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் மீது வழக்குப் பதிவு

தேவாலயத்திற்கு வரும் இளம் பெண்களிடம் ஆபாசமாக பேசி நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய குமரி பாதிரியார்
17 மார்ச் 2023, 05:10 GMT
புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் பலரை நிர்வாணமாக வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டிய குற்றச்சாட்டில் களியக்காவிளை பாதிரியார் மீது குவியும் புகார்கள் அடிப்படையில் குமரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாதிரியாரை தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ. இவர் அழகிய மண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பணிபுரிந்து வந்தார்.

தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் பழகி அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி முதலில் அன்பாக பேசத் தொடங்கி, நெருக்கமாகப் பழக முயன்றதாக காவல்துறை தெரிவித்தது.

மேலும், பாதிரியாருடன் பழகும் பெண்களிடம் வாட்ஸ்-அப் மூலம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொள்ள ஆரம்பித்து, பின் அந்தப் பெண்களை நிர்வாணமாக வீடியோ பதிவு செய்து வைத்துக்கொண்டு அதை வைத்து மிரட்டி பெண்களை பாலியல்ரீதியாகத் தொந்தரவு செய்வதாக புகார்கள் எழுந்தன.

 

இந்நிலையில் காட்டாத்துறை அருகே பிலாவிளை பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான ஆஸ்டின் ஜியோ பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் அவர் இளம் பெண்களுடன் செய்த ஆபாச பேச்சு, வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்தார். இதை அறிந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோக்கும் மாணவன் ஆஸ்டின் ஜியோவுக்கம் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பாதிரியார் பெனிடிக் ஆன்டோ கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஆஸ்டின் ஜியோ தன்னை மிரட்டி பணம் கேட்பதாகவும் நான் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாகவும் புகார் அளித்தார்.

பாதிரியார் அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் ஆஸ்டின் ஜினோவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஆஸ்டின் ஜினோவின் தாயார் நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு அளித்ததோடு பாதிரியாருக்கு எதிராக ஏராளமான பெண்களிடம் ஆபாச சாட்டிங் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள், தடயங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைச் சமர்ப்பித்தார்.

இதனிடையே கடந்த 11ஆம் தேதி காட்டாத்துறை அருகே உள்ள ஆலந்தட்டுவிளையைச் சேர்ந்த பெண் ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ இளம்பெண்களுக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கூறி குமரி மாட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்ததுடன் பாதிரியார் தொடர்பான ஆபாச வீடியோக்களையும் பதிவுகளையும் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

தேவாலயத்திற்கு வரும் இளம் பெண்களிடம் ஆபாசமாக பேசி நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய குமரி பாதிரியார்

அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் குமரி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த புகார் மனுவில், "நான் அவர் மதபோதகராகப் பணியாற்றிய ஆலயத்துக்கு சென்றேன். முதலில் சாதாரணமாகப் பேசி ஆசி வழங்கினார். பின்னர் தவறான முறையில் என்னைத் தொட்டுப் பேசத் தொடங்கினார். இதனால் சம்பந்தப்பட்ட மத வழிபாட்டு பங்கை விட்டு மாறி நாங்கள் சென்று விட்டோம். எனினும் அவர் என் தாயாரிடம் எனது செல்போன் நம்பரை வாங்கி என்னிடம் பேசினார்.

ஒரு கட்டத்தில் செய்வதறியாது நானும் பேசினேன். ஆனால் பாலியல் ரீதியாக வாட்ஸ்-அப்பில் பேசினார். வீடியோ கால் செய்து தொந்தரவு செய்தார். என்னை மட்டுமல்லாது பல பெண்களிடம் அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை நான் தெரிந்து கொண்டு எச்சரித்தேன். நான் போலீசில் புகார் அளிப்பேன் என்று கூறினேன். அதற்கு என்னை மிரட்டினார். எனவே இது தொடர்பாக மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்ட டிருந்தது.

இந்தப் புகார் அடிப்படையில் பாதிரியார் பெனிடிக் ஆன்டோ மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வியாழக்கிழமை மாலை நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாலியல் குற்றம் தொடர்பாக இதுவரை ஐந்து பெண்கள் பாதிரியார் பெனடிக் ஆன்டோ மீது ஆன்லைன் மற்றும் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஹரன் பிரசாத் பாதிரியார் பெனடிக் ஆன்டோ மீதான புகார்களின் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தினார். இதை அறிந்த பாதிரியார் தலைமறைவாகிவிட்டார்.

சிறையில் உள்ள ஆஸ்டின் ஜினோவின் தாயார் மினி அஜிதா பிபிசி தமிழிடம் பேசுகையில், "பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதுடன் அந்தப் பெண்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

தேவாலயத்திற்கு வரும் இளம் பெண்களிடம் ஆபாசமாக பேசி நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய குமரி பாதிரியார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எனது மகனுடன் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் பாதரியாரிடம் பாவ மன்னிப்பு வாங்கச் சென்றபோது பாதிரியாருடன் அறிமுகம் ஏற்பட்டது. பிறகு அந்த மாணவியின் செல்போனுக்கு இரவு நேரங்களில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி, அந்த மாணவியை அறை நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்து அனுப்புமாறு மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன அந்தப் பெண் பாதிரியார் குறித்து பெற்றோரிடம் சொல்ல முடியாததால் என் மகனிடம் 'தன்னை காப்பாற்றுமாறு' உதவி கேட்டுள்ளார். பாதிரியார் அந்தப் பெண்ணுக்கு அனுப்பிய புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை அனுப்பியுள்ளார்.

கல்லூரி மாணவிக்கு அளித்த பாலியல் தொந்தரவு குறித்த எனது மகன் பாதிரியாரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையை சரி செய்து கொள்ளலாம் என வழக்கறிஞர் மூலம் எனது மகனை அந்தப் பாதிரியார் தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.

என் மகன் அங்கு செல்வதற்கு முன் வீட்டில் இருந்த பொருட்களை அவரே உடைத்துவிட்டு பாதிரியார் பெண்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்களை என் மகன் சித்தரித்து அந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்துவிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக என் மகன் மீது பாதிரியார் பொய் புகார் அளித்ததால் போலீசார் என் மகனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பாதிரியார் வீட்டுக்குச் சென்றபோது அவர் நாடகமாடி வீட்டிலுள்ள பொருட்களை உடைத்ததாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது என் மகன் பாதிரியார் லேப்டாப்பை எடுத்து வந்து விட்டான். அந்த லேப்டாப்பில் 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளன.

தேவாலயத்திற்கு வரும் இளம் பெண்களிடம் ஆபாசமாக பேசி நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய குமரி பாதிரியார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எனவே, நிரபராதியான தனது மகனுக்கு நியாயம் வழங்கவேண்டும் என்று காவல் துறையிடம் வேண்டிக் கொள்கிறேன். பாதிரியார் போர்வையில் பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்து ஆபாச செயல்களில் ஈடுபட்டு வந்த பெனடிக் ஆன்டோ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஸ்டின் ஜினோவின் தாயார் மினி அஜிதா கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் பேசினார். அவர், "பாதிரியார் குறித்து சமூக ஊடகங்களில் வெளியான ஆபாச புகைப்படங்கள், வீடியோ மற்றும் பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் மீது வியாழக்கிழமை சைபர் கிரைம் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். மேலும் அந்த வீடியோ தொடர்பான உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது," என்றார்.

மேலும் "பாதிரியாரிடம் மற்றொரு லேப்டாப் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பாதிரியார் தலைமறைவாகியுள்ளதால் அந்த மடிக்கணினியைக் கைப்பற்ற முடியவில்லை. இருப்பினும் விரைவில் பாதிரியார் கைது செய்யப்படுவார். அப்போது அவரிடம் உள்ள செல்போன் ஹாட்டிஸ்க், பென்டிரைவ், லேப்டாப் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படும்.

ஒருவேளை அவரிடம் உள்ள மின் சாதனப் பொருட்களில் இருந்து வீடியோ புகைப்படங்கள் அழிக்கப்பட்டிருந்தால், தடயங்களை அழித்ததாக கூடுதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் மீட்டெடுக்கப்படும்," என்று அந்த சைபர் கிரைம் அதிகாரி தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cevnxlrr0ndo

  • கருத்துக்கள உறவுகள்

பாதிரியார் நல்ல கட்டுமஸ்தான ஆளாக தான் இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஈழப்பிரியன் said:

பாதிரியார் நல்ல கட்டுமஸ்தான ஆளாக தான் இருக்கிறார்.

நித்தியென்பார் ஜக்கி வாசுதேவென்பார்

பெனெடிக்ட் அண்டோ அருமை அறியாதார் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 நீவீர் பெரிய நடிகன்யா.....:beaming_face_with_smiling_eyes:

Bild

Bild

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

 நீவீர் பெரிய நடிகன்யா.....:beaming_face_with_smiling_eyes:

Bild

Bild

animiertes-kuss-bild-0002.gif animiertes-kuss-bild-0093.gif

இந்த பாதிரியார்... "பிரான்ஸ் கிஸ்"  அடிச்ச படமும் இணையத்திலை உலாவுதாம்.
எனக்கு அதை பார்க்கும் பாக்கியம்,  இன்னும் கிடைக்கவில்லை.  🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா இந்த பாதிரிய போட்டு இந்த வாங்கு வாங்கிறீங்களே….நீங்ககெல்லாம் யாரு?

நாங்களா….

நாங்கள்தான் அந்த ஜக்கி ஆசிரமத்தில இருந்து வெளியேறின பொண்ணு….

புல் தடக்கி கிணத்துக்குள்ள விழுந்தது எண்டு எழுதின ஆட்கள்…🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, goshan_che said:

ஆமா இந்த பாதிரிய போட்டு இந்த வாங்கு வாங்கிறீங்களே….நீங்ககெல்லாம் யாரு?

நாங்களா….

நாங்கள்தான் அந்த ஜக்கி ஆசிரமத்தில இருந்து வெளியேறின பொண்ணு….

புல் தடக்கி கிணத்துக்குள்ள விழுந்தது எண்டு எழுதின ஆட்கள்…🤣

ஜக்கியையும் நாங்கள் எதிர்க்கின்றோம். கண்டனமும் தெரிவித்திருந்தோம்.:cool:

9 minutes ago, தமிழ் சிறி said:

இந்த பாதிரியார்... "பிரான்ஸ் கிஸ்"  அடிச்ச படமும் இணையத்திலை உலாவுதாம்.
எனக்கு அதை பார்க்கும் பாக்கியம்,  இன்னும் கிடைக்கவில்லை.  🤣

Bild

பிளீஸ்......:beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

 

Bild

பிளீஸ்......:beaming_face_with_smiling_eyes:

ப்ரோ.... அந்த லிங்க்  மீண்டும் கண்ணில் பட்டால்,   
நிச்சயம் உங்கள்  தபால் பெட்டிக்கு அனுப்பி வைக்கின்றேன்.  😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, தமிழ் சிறி said:

ப்ரோ.... அந்த லிங்க்  மீண்டும் கண்ணில் பட்டால்,   
நிச்சயம் உங்கள்  தபால் பெட்டிக்கு அனுப்பி வைக்கின்றேன்.  😂

தபால் பொட்டியையே நிர்வாகம் தூக்கிக்கொண்டு போனால் நான் என்ன செய்வேன் ப்ரோ????? :face_with_tears_of_joy:

 

Tamil Movie GIF - Tamil Movie Crying - Discover & Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தபால் பொட்டியையே நிர்வாகம் தூக்கிக்கொண்டு போனால் நான் என்ன செய்வேன் ப்ரோ????? :face_with_tears_of_joy:

 

Tamil Movie GIF - Tamil Movie Crying - Discover & Share GIFs

வட்ட கிணறு வத்தாதா கிணறு வடிவேலு மரண காமெடி 100% சிரிப்பு உறுதி || Vadivel  comedy - YouTube

Top Gs Postbox Stickers for Android & iOS | Gfycat

இங்கை இருந்த, தபால் பெட்டியை, நேற்று ராத்திரியில் இருந்து காணவில்லை சார்... 🤣

எனக்கு...  @நிழலியிலை தான் சந்தேகம். 😂

Edited by தமிழ் சிறி

2 hours ago, குமாரசாமி said:

தபால் பொட்டியையே நிர்வாகம் தூக்கிக்கொண்டு போனால் நான் என்ன செய்வேன் ப்ரோ????? :face_with_tears_of_joy:

 

 

தனி மடல் (பெட்டி) வேலை செய்யவில்லையா 

2 hours ago, தமிழ் சிறி said:

வட்ட கிணறு வத்தாதா கிணறு வடிவேலு மரண காமெடி 100% சிரிப்பு உறுதி || Vadivel  comedy - YouTube

Top Gs Postbox Stickers for Android & iOS | Gfycat

இங்கை இருந்த, தபால் பெட்டியை, நேற்று ராத்திரியில் இருந்து காணவில்லை சார்... 🤣

எனக்கு...  @நிழலியிலை தான் சந்தேகம். 😂

அது நான் இல்லை...எனக்கு  ஒரு ஆள் மேல் டவுட் இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

பாதிரியார் நல்ல கட்டுமஸ்தான ஆளாக தான் இருக்கிறார்.

பாத‌ர் என்று எங்க‌ட‌ சொந்த‌த்திலும் ஒருத‌ர் இருக்கிறார்

அவ‌ரின் காம‌ வெறி அதிக‌ம்............ஆனால் புரித‌ல் இல்லா ம‌க்க‌ளுக்கு அவ‌ர் பாத‌ர்....................முந்தி சைவ‌ ம‌த‌த்தில் இருந்து பிற‌க்கு ம‌த‌ம் மாறின‌வ‌ர்................அந்த‌ ம‌த‌த்துக்கு அவ‌ர் உண்மையும் நேர்மையுமாய் இருப்பதில்லை என்ப‌தே என் குற்ற‌ச்சாட்டு................... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நிழலி said:

அது நான் இல்லை...எனக்கு  ஒரு ஆள் மேல் டவுட் இருக்கு 

வாணம் விட்டவன்  தான் தப்புறதுக்கு வாணம் விட்டவுடனையே ஆரோ விட்டுட்டான் எண்டு சத்தமாய் சொல்லுவானாம்....:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

தனி மடல் (பெட்டி) வேலை செய்யவில்லையா 

அது நான் இல்லை...எனக்கு  ஒரு ஆள் மேல் டவுட் இருக்கு 

நிழலி…  கனகாலமாக இருந்த அந்தப் பெட்டியையே காணவில்லை.
யாரில்…. டவுட் என்று, அவரின் முதல் எழுத்தை சொல்லவும்.
மிச்சத்தை நாங்கள், கண்டு பிடித்துக் கொள்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்

`திருமணத்தை எதிர்த்த பெற்றோர்; பல பெண்களுடன் நெருக்கத்தைத் தொடர்ந்த பாதிரியார்!' - விசாரணையில் தகவல்

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (29). பேச்சிப்பாறை, பிலாங்காலை தேவாலயங்களில் பங்குத்தந்தையாக இருந்திருக்கிறார். பேச்சிப்பாறையைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச சாட்டிங் செய்த வழக்கில் சைபர் க்ரைம் போலீஸார் இவர்மீது வழக்கு பதிவுசெய்த நிலையில், நேற்று கைதுசெய்யப்பட்டார். நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பாதிரியாரை, வரும் 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவிடம் நேற்று காலை முதல் போலீஸார் நடத்திய விசாரணையில், பல புதிய தகவல்கள் வெளியாகியிருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும், அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் முடிவுசெய்திருக்கின்றனர். போலீஸார் பிடியில் சிக்காமல் இருக்க தனது செல்போனின் சிம்கார்டை மாற்றியிருக்கிறார் பாதிரியார். மொத்தத்தில் மூன்று புதிய செல்போன்களை வாங்கியவர், 11 சிம்கார்டுகளை மாற்றியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

 
கைதான பாதிரியார்
 
கைதான பாதிரியார்

பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு இறையியல் கல்வி, தத்துவவியல் உள்ளிட்டவை படித்திருக்கிறார். இவருக்கு ஆங்கிலம், மலையாளம், தமிழ் ஆகிய 3 மொழிகள் தெரியும். சென்னையில் பயிற்சி காலத்தின்போது ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அதன் பின்னர் அந்தப் பெண்ணை பாதிரியார் காதலிக்கத் தொடங்கியிருக்கிறார்.

காதலித்தவர்கள் பின்னர் மிக நெருக்கமாக இருந்திருக்கின்றனர். கத்தோலிக்க பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ளாமல் சேவையாற்ற வேண்டும் என்பது மரபு. ஒருகட்டத்தில், பாதிரியார் பொறுப்பிலிருந்து வெளியேறி காதலியைக் கரம்பிடித்து குடும்ப வாழ்க்கை வாழ அவர் ஆசைப்பட்டிருக்கிறார்.

பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபோது
 
பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபோது
 

ஆனால் அவரது வீட்டில் உள்ளவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லையாம். சிறு வயதிலேயே பாதிரியாராக வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டதால், அவரை சாதாரண வாழ்க்கைக்கு வர வேண்டாம் என குடும்பத்தினர் கூறினார்களாம். தனது காதல் ஆசை நிறைவேறாத பிறகும், அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து பழகிவந்திருக்கிறார். இருவரும் அவ்வப்போது வீடியோ காலில் பேசுவது வழக்கமாம். அவ்வாறு பேசும் சமயங்களில்தான் அந்தரங்க காட்சிகளை வீடியோவில் பதிவுசெய்திருக்கிறார். அந்த வீடியோக்களை லேப்டாப் ஒன்றில் வைத்திருந்திருக்கிறார். சென்னையிலுள்ள அந்தப் பெண் அவ்வப்போது குமரி மாவட்டத்துக்கும் வந்து, பாதிரியாரை தனியாகச் சந்திப்பது வழக்கமாம்.

கைதுசெய்யப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ
 
கைதுசெய்யப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ

இது தவிர தனக்கு அறிமுகமான அனைத்து இளம்பெண்களுடன் செல்ஃபி எடுத்து, அந்த போட்டோக்களை லேப்டாப்பில் பாதுகாத்து வைத்திருக்கிறார். புது...புது இளம்பெண்களுடன் வாட்ஸ்அப் சாட்டிங் செய்வது பாதிரியாரின் பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. சாட்டிங் செய்யும்போதே இளம்பெண்களின் மனநிலை என்ன என்பதை புரிந்துகொள்வாராம். யாரையும் மிரட்டியோ, அச்சுறுத்தியோ எதுவும் செய்யவில்லை என பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ விசாரணையில் கூறியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

`திருமணத்தை எதிர்த்த பெற்றோர்; பல பெண்களுடன் நெருக்கத்தைத் தொடர்ந்த பாதிரியார்!' - விசாரணையில் தகவல் | Police interrogates priest Benedict arrested for sexual abuse - Vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.