Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10வயது சிறுமியை வன்புணர்வு - தமிழர் பகுதியில் அரங்கேறிய கொடூரம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10வயது சிறுமியை வன்புணர்வு - தமிழர் பகுதியில் அரங்கேறிய கொடூரம்!

Vhg ஏப்ரல் 01, 2023
Photo_1680330250918.jpg

வவுனியா - தாண்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 10 வயது பாடசாலை மாணவியை கடந்த 4 வருடங்களாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டவர்கள் குறித்த சிறுமியின் உடன்பிறந்த சகோதரன் மற்றும் சிறிய தந்தையார் உள்ளிட்ட மூவர் என வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா-தாண்டிக்குளம் பகுதியில் வசிக்கும் 10 வயது மாணவி வவுனியா நகர்ப்புற பாடசாலை ஒன்றில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்று வருகின்றார்.

குறித்த மாணவி கடந்த புதன்கிழமை தனது வகுப்பு சக மாணவிக்கு தனக்கு வீட்டில் நடக்கும் கொடுமைகளையும், பாலியல் வன்புணர்வுகையும் கூறி அழுதுள்ளார்.

இதனையடுத்து அந்த மாணவி குறித்த விடயத்தை தமது வகுப்பாசிரியரிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

ஆசிரியர் சம்மந்தப்பட்ட மாணவியிடம் சம்பவத்தின் உண்மை தன்மையை விசாரித்து அறிந்துக்கொண்டு உடனடியாக, வவுனியா மாவட்ட செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அவர்கள் வவுனியா காவல் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவி மூவரால் கடந்த 4 வருடங்களாக தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்பது காவல்துறை விசாரணைகளில் தெரிய வந்ததையடுத்து துரிதமாக செயல்பட்ட வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் சம்பவத்துடன் தொடர்பான மூவரை கைது செய்துள்ளனர்.

குறித்த மாணவி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் தாயின் இரண்டாவது கணவரான இறம்பைக்குளம் அலகர பகுதியைச் சேர்ந்த 32 வயது நபர், மாணவியின் உடன் பிறந்த சகோதரனான சமனங்குளம் பகுதியை சேர்ந்த 16 வயது இளைஞர், உறவினரான வைரவபுளியங்குளம் பகுதியை சேர்ந்த 53 வயது நபர் ஆகிய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் மூவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும், சிறுமியை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
 
https://www.battinatham.com/2023/04/10.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு வயதிலிருந்து குடும்ப உறுப்பினர்களால் பாலியல் தொல்லையை, துன்பத்தை இந்தக்குழந்தை அனுபவித்திருக்கிறது. தனது குழந்தைத் தனத்தை தொலைத்து துயரத்தை சுமந்திருக்கிறது. நமது சமுதாயம் எங்கே போகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

வவுனியா-தாண்டிக்குளம் பகுதியில் வசிக்கும் 10 வயது மாணவி வவுனியா நகர்ப்புற பாடசாலை ஒன்றில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்று வருகின்றார்.

குறித்த மாணவி கடந்த புதன்கிழமை தனது வகுப்பு சக மாணவிக்கு தனக்கு வீட்டில் நடக்கும் கொடுமைகளையும், பாலியல் வன்புணர்வுகையும் கூறி அழுதுள்ளார்.

இதனையடுத்து அந்த மாணவி குறித்த விடயத்தை தமது வகுப்பாசிரியரிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

ஆசிரியர் சம்மந்தப்பட்ட மாணவியிடம் சம்பவத்தின் உண்மை தன்மையை விசாரித்து அறிந்துக்கொண்டு உடனடியாக, வவுனியா மாவட்ட செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அவர்கள் வவுனியா காவல் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

சக மாணவிக்கும் வகுப்பாசிரியைக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

சக மாணவிக்கும் வகுப்பாசிரியைக்கும் நன்றி.

ஏன்?

அவர்கள் சமூகக்கடமை!!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

ஏன்?

அவர்கள் சமூகக்கடமை!!

பலர் அச்சம் காரசமாக வெளிப்படுத்தத் தயங்குவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஏராளன் said:

பலர் அச்சம் காரசமாக வெளிப்படுத்தத் தயங்குவார்கள். 

அது அரசியல் தொடர்பு கொண்டவர்கள். ஊரில பணக்காரர்கள் என்று பீலா விடுபவர்கள் மீது.

இது சாதாரண பொதுமக்கள்.

பயம் வர காரணம் இருக்க முடியாதே. 👍

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலையான விடயம், எமது சமுதாயத்தை சிங்களம் சிதைக்க முதல் எமது மக்களே சிதைத்துவிடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த சொல்ல?😭

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, கிருபன் said:

குறித்த மாணவி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் தாயின் இரண்டாவது கணவரான இறம்பைக்குளம் அலகர பகுதியைச் சேர்ந்த 32 வயது நபர்,

இரத்த பாசமில்லாத உறவு முறைகளால் தான் பல பிரச்சனைகள் வருகின்றது.
இப்படியான பிரச்சனைகள் வெளிநாடுகளிலும் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

விலாசம் இன்றிய விந்துகளின் சேமிப்பிடங்களாய் எம் தமிழ்ப் பெண்கள்..!

பத்தினிகளும்
பதிவிரதைகளும்
புராணங்களில்…
பால பாடங்களில்…
பக்கம் பக்கமாய்
படித்த மண்ணில்
படி தாண்டிய
பத்தினிகளும்
மாதவிகளும்
பெருகி விட்ட நிலை..!

மாங்கல்யம் இன்றி
மண மேடையின்றி
கன்னிகள் வாழ்வு…!
விலாசமின்றிய
விந்துகளின்
சேமிப்பிடங்களாய்
அவர் தம் தேகம் இன்று..!

சராசரி
பாலியல் அறிவு
கூடவா இல்லை…
ஆண்டு ஒன்பதில்
கற்றது கூடவா
நினைவில் இல்லை….
தனி மனித
ஒழுக்கம் என்ன
பல்கலைக்கழகப் பாடமா
வாத்தியார் கற்றுத்தர..?!
முளைக்க முதல்
பொத்திப் பிடிக்கும் கூட்டம்
இன்று
சந்தி தோறும்
முந்தி விரித்துக் கிடக்கிறது..
ஏனிந்த அவலம்..???!

பெண்கள்…
புலிகளாய் வாழ்ந்த மண்ணில்
வீரம் விதைத்து
வீழ்ந்த இடத்தில்
இன்று
அந்நியரின்
அயோக்கியரின்
அனாதை
விந்துகளின்
அநியாயப் பாய்ச்சலில்
சரிகிறார்
மங்கையர்..!
தூக்கிலும்
கிணற்றிலும்
சாவுகள்..!

இது என்ன
இன அழிப்பா
சுய இருப்பழிப்பா..
சிந்தியுங்கள்..!
முதிர் கன்னிகளாய்
இளம் கன்னிகளாய்
பள்ளிச் சிறுமிகளாய்
பேரிளம் பெண்களாய்
எல்லா நிலையிலும்
அவர் வாழ்வு சீரழிவு..!

அன்று
அண்ணன் வழியில்
அடைந்த ஒழுக்கம்
இன்று
அந்நியர் வழியில்
அடைகிறது சாவு..!
இப்படியே போனால்
புவிதனில்..
எங்கே வாழும்
எம் தமிழினம்..???!
முடிவு தான்
என்ன..????!
சத்தமின்றி
யுத்தமின்றி
தமிழினம்
தானே அழியும்..!

2012 இல் எழுதியது.. இன்னும் தொடருது அதே துன்பம். 

https://kuruvikal.wordpress.com/page/21/

  • கருத்துக்கள உறவுகள்

அந்த  மூன்று பேரில் ஒருத்தன், கூடப் பிறந்த சகோதனாம்.
எவ்வளவு கீழ்த்தரமான மனிதர்கள். 😡

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nedukkalapoovan said:

விலாசம் இன்றிய விந்துகளின் சேமிப்பிடங்களாய் எம் தமிழ்ப் பெண்கள்..!

பத்தினிகளும்
பதிவிரதைகளும்
புராணங்களில்…
பால பாடங்களில்…
பக்கம் பக்கமாய்
படித்த மண்ணில்
படி தாண்டிய
பத்தினிகளும்
மாதவிகளும்
பெருகி விட்ட நிலை..!

மாங்கல்யம் இன்றி
மண மேடையின்றி
கன்னிகள் வாழ்வு…!
விலாசமின்றிய
விந்துகளின்
சேமிப்பிடங்களாய்
அவர் தம் தேகம் இன்று..!

சராசரி
பாலியல் அறிவு
கூடவா இல்லை…
ஆண்டு ஒன்பதில்
கற்றது கூடவா
நினைவில் இல்லை….
தனி மனித
ஒழுக்கம் என்ன
பல்கலைக்கழகப் பாடமா
வாத்தியார் கற்றுத்தர..?!
முளைக்க முதல்
பொத்திப் பிடிக்கும் கூட்டம்
இன்று
சந்தி தோறும்
முந்தி விரித்துக் கிடக்கிறது..
ஏனிந்த அவலம்..???!

பெண்கள்…
புலிகளாய் வாழ்ந்த மண்ணில்
வீரம் விதைத்து
வீழ்ந்த இடத்தில்
இன்று
அந்நியரின்
அயோக்கியரின்
அனாதை
விந்துகளின்
அநியாயப் பாய்ச்சலில்
சரிகிறார்
மங்கையர்..!
தூக்கிலும்
கிணற்றிலும்
சாவுகள்..!

இது என்ன
இன அழிப்பா
சுய இருப்பழிப்பா..
சிந்தியுங்கள்..!
முதிர் கன்னிகளாய்
இளம் கன்னிகளாய்
பள்ளிச் சிறுமிகளாய்
பேரிளம் பெண்களாய்
எல்லா நிலையிலும்
அவர் வாழ்வு சீரழிவு..!

அன்று
அண்ணன் வழியில்
அடைந்த ஒழுக்கம்
இன்று
அந்நியர் வழியில்
அடைகிறது சாவு..!
இப்படியே போனால்
புவிதனில்..
எங்கே வாழும்
எம் தமிழினம்..???!
முடிவு தான்
என்ன..????!
சத்தமின்றி
யுத்தமின்றி
தமிழினம்
தானே அழியும்..!

2012 இல் எழுதியது.. இன்னும் தொடருது அதே துன்பம். 

https://kuruvikal.wordpress.com/page/21/

பத்தினர்களும் பதி விரதர்களும், தனிமனித ஒழுக்க சீலர்களும் எம்மிடையே இருந்திருந்தால் இந்த கவிதைக்கான தேவையே இருக்காது.   கவிதையை பார்ககும் போது இந்த கவிதை எழுதியவர் அதை வலியுறுத்த மாட்டார் என்பது தெளிவாக தெரிகிறது. அடுத்தவருக்கு மட்டும் உபதேசிக்கும் அரத்தமற்ற கவிதை இது. 

  • கருத்துக்கள உறவுகள்

குடி/தூள்/கசிப்பு/கஞ்சா செய்யும் வேலை. கொலை, தற்கொலை, பாலியல் வதைகளுக்கான பிரதான காரணங்கள் இவை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

அன்று
அண்ணன் வழியில்
அடைந்த ஒழுக்கம்
இன்று
அந்நியர் வழியில்
அடைகிறது சாவு..!

55 minutes ago, island said:

பத்தினர்களும் பதி விரதர்களும், தனிமனித ஒழுக்க சீலர்களும் எம்மிடையே இருந்திருந்தால் இந்த கவிதைக்கான தேவையே இருக்காது.   கவிதையை பார்ககும் போது இந்த கவிதை எழுதியவர் அதை வலியுறுத்த மாட்டார் என்பது தெளிவாக தெரிகிறது. அடுத்தவருக்கு மட்டும் உபதேசிக்கும் அரத்தமற்ற கவிதை இது. 

தாங்கள் இந்தக் காலத்தில் வாழாதிருந்திக்கலாம்.. அல்லது பயந்து ஓடிஒளிந்திருக்கலாம். அதனால் அந்தக் காலத்தின் தன்மை புரியவில்லை. கவிதை கடந்த கால நிஜம்.. காணாமல் போன.. ஏக்கங்களை விதைக்கிறதையே புரியமுடியவில்லை.. தங்களால். 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nedukkalapoovan said:

தாங்கள் இந்தக் காலத்தில் வாழாதிருந்திக்கலாம்.. அல்லது பயந்து ஓடிஒளிந்திருக்கலாம். அதனால் அந்தக் காலத்தின் தன்மை புரியவில்லை. கவிதை கடந்த கால நிஜம்.. காணாமல் போன.. ஏக்கங்களை விதைக்கிறதையே புரியமுடியவில்லை.. தங்களால். 

கவிதையின் முக்கிய கரு “ அண்ணன் கூறிய” என்ற விடயத்தை  கூறவில்லை. கடைந்தெடுத்த பிற்போக்குதனத்துக்கு நியாயம் கற்பிக்கவே “அண்ணன் கூறிய” என்ற வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன,  என்பதை விளங்காத அளவுக்கு நாம் இல்லை.  

அண்ணன் படையில் சேர்ந்த புலி வீராங்கனைகளையே  உங்களை போன்ற அதே பிற்போக்கு கண்ணோட்டத்துடன் விமர்சித்தவர்களும் உள்ளார்கள். 

விடுதலை புலிகள் இருந்திருந்தால் இந்த கவிதையை தீயிட்டு கொளுத்தியிருப்பார்கள்.  அவர்கள் இல்லாத இடைவெளியை பயன் படுத்தி சிலர் தமது பிற்போக்குத்தனத்திற்கு வலு சேர்க்க புலிகளை துணைக்கு இழுக்கின்றனர். 

அதாவது புலிகள் இல்லாதது உங்களை போன்றோர் காட்டில் மழை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, island said:

உங்களுக்கு ஆக்கத்தின் அர்த்தம் புரியவில்லை என்பதைத் தவிர.. அண்ணன் மீதான கடுப்புத் தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

உங்களுக்கு ஆக்கத்தின் அர்த்தம் புரியவில்லை என்பதைத் தவிர.. அண்ணன் மீதான கடுப்புத் தெரிகிறது. 

விசயத்தை மடை மாற்றுகின்றீர்கள். வழமையான பல்லவி தான். 

செய்திக்கும் உங்கள் கவிதைக்கும் எந்த கொம்பினேஷனும் இல்லை. செய்தி சிறுமி மீதான பாலியல் துன்புறுத்தலை கூறுகிறது. உங்கள் கவிதை புராணங்களில் வாழ்ந்த பதிவிரதைகள் போல் இன்றுள்ள பெண்கள் இல்லை என  புலம்புகிறது. இதை சுட்டிக்காட்டினால் மடை மாற்றி நியாயப்படுத்த முனைகின்றீர்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

இது என்ன
இன அழிப்பா
சுய இருப்பழிப்பா..
சிந்தியுங்கள்..!
முதிர் கன்னிகளாய்
இளம் கன்னிகளாய்
பள்ளிச் சிறுமிகளாய்
பேரிளம் பெண்களாய்
எல்லா நிலையிலும்
அவர் வாழ்வு சீரழிவு..!

இதென்ன அர்த்தப்படுத்துகிறது.

புராணங்கள்.. இன்று சொல்லிக் கொடுக்கப்படுவதில்லையோ..??! பாட நூல்களில் இல்லையோ...??!

மேலும்..

2 hours ago, nedukkalapoovan said:

சராசரி
பாலியல் அறிவு
கூடவா இல்லை…
ஆண்டு ஒன்பதில்
கற்றது கூடவா
நினைவில் இல்லை….
தனி மனித
ஒழுக்கம் என்ன
பல்கலைக்கழகப் பாடமா
வாத்தியார் கற்றுத்தர..?!

இதையும் சுட்டிக்காட்டுகிறது.

கவிதை எல்லாச் சூழலையும் உள்வாங்கி எழுகிறது. தாங்கள் தான் பிற்போக்குக்கண்ணாடி போட்டுக் கிட்டுப் பார்கிறீர்கள். அதனால் அவை பளிச்சென்று பிற்போக்காகத் தெரிகிறது. அவ்வளவே. 

2 hours ago, nedukkalapoovan said:

பெண்கள்…
புலிகளாய் வாழ்ந்த மண்ணில்
வீரம் விதைத்து
வீழ்ந்த இடத்தில்
இன்று
அந்நியரின்
அயோக்கியரின்
அனாதை
விந்துகளின்
அநியாயப் பாய்ச்சலில்
சரிகிறார்
மங்கையர்..!
தூக்கிலும்
கிணற்றிலும்
சாவுகள்..!

இதையும் படியுங்கள்.. ஆண்களில் எவரை எல்லாம் குறி வைக்கிறது என்பதாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

இதென்ன அர்த்தப்படுத்துகிறது.

புராணங்கள்.. இன்று சொல்லிக் கொடுக்கப்படுவதில்லையோ..??! பாட நூல்களில் இல்லையோ...??!

மேலும்..

இதையும் சுட்டிக்காட்டுகிறது.

கவிதை எல்லாச் சூழலையும் உள்வாங்கி எழுகிறது. தாங்கள் தான் பிற்போக்குக்கண்ணாடி போட்டுக் கிட்டுப் பார்கிறீர்கள். அதனால் அவை பளிச்சென்று பிற்போக்காகத் தெரிகிறது. அவ்வளவே. 

இதையும் படியுங்கள்.. ஆண்களில் எவரை எல்லாம் குறி வைக்கிறது என்பதாகும். 

இது தனி மனித ஒழுக்கம் சார்ந்தது. ஒழுக்கம் இரு பாலாருக்கும் பொதுவானது.  இதை மாற்ற கல்வி, பொருளாதார முன்னேற்றம் தேவை.  புராணகால கற்பனை வேலைக்காகாது. அறிவியலுடன் எமது சமுதாயம் உலகுடன் சொஆல் விட்டு முன்னேறுவதே ஒரே வழி. 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, island said:

இது தனி மனித ஒழுக்கம் சார்ந்தது. ஒழுக்கம் இரு பாலாருக்கும் பொதுவானது.  இதை மாற்ற கல்வி, பொருளாதார முன்னேற்றம் தேவை.  புராணகால கற்பனை வேலைக்காகாது. அறிவியலுடன் எமது சமுதாயம் உலகுடன் சொஆல் விட்டு முன்னேறுவதே ஒரே வழி. 

சரியான பாலியல் கல்வி... பாலியல் சுகாதாரம்..  பாலியல் துஷ்பிரயோக வடிவங்கள்.. அவற்றை இனங்காணக் கற்றுக்கொடுத்தல்.. தற்காத்தல்.. முறையீடு செய்து பாதுகாப்புப்பெறுதல்.. தனிமனித ஒழுக்கத்தை போதிக்கக் கூடிய செயல்வடிவில் காட்டக் கூடிய குடும்பத்தலைமைகள்.. குடும்ப கட்டமைப்புப் பலம்.. தமிழரின் பண்பாட்டு விழுமியங்களின் உயர் தார்ப்பரியம்.. இவற்றினூடான தனி மனித ஒழுக்கம் பற்றிய புத்திப்புகட்டல்.. இவை எல்லாம் ஒற்றிணைந்து இல்லாமல்.. உயர் கல்வி அறிவு.. பொருண்மிய உச்ச அளவை எட்டுவதன் மூலம்.. இந்த பாலியல் சீரழிவுகளில் இருந்து சிறுவர் சிறுமிகள் உட்பட வளர்ந்தோரையும் காப்பது கடினம். இது பொருண்மிய ரீதியில் வளர்ந்த நாடுகளில் கூட சவாலுக்குரிய விடயமாகவே இருக்கிறது. 

ஆனால்.. தமிழர் நிலத்தில்.. இந்த நிலை அருகி இருந்த காலமும்.. தனி மனித ஒழுக்கம் உச்சம் பெற்றிருந்த காலமும் உண்டு. அது ஆண்டவர்களின் நிஜமான சமூக அக்கறையால் பிறந்த ஒன்று. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

இப்போது நீங்கள் வைத்திருப்பது தர்க்கரீதியான வாதம். இப்படிப்பட்ட வாதப்பிரதி வாதங்கள் கருத்தாடல்களே  தேவை. 👍🏼

அதை விட்டு கால்லத்திற்கு ஒவ்வாத புராண பிதற்றல்கள் அல்ல.

நன்றி 🙏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

அதை விட்டு கால்லத்திற்கு ஒவ்வாத புராண பிதற்றல்கள் அல்ல.

இதிகாசங்களும் புராணங்களும் பாக்களும்.. இன்றும் பாடப்புத்தகங்களில் உள்ளன. கம்பரின் இராமாயணத்தில் இருந்து பாக்கள் உள்ளன.. செஞ்சோற்றுக்கடன் எனும் அதிகாரம் இருக்கிறது.. நளவெண்பா உள்ளது.. சீராப்புராணம் உள்ளது.. அது நபிகளைப் பற்றிச் சொல்கிறது.. இப்படி புராணங்களும் இதிகாசங்களும் முற்றாக மறைக்கப்பட்ட ஒரு சமூகம் இல்லை. அந்த வகையில்.. அவையும் மக்களின் சுய ஒழுக்கத்தை புத்திப்படுத்த பயன்படுத்தப்படின் அது தொடர்பில் சமூகம் சரியான வழிநடத்தப்படுதல் அவசியம். இது எல்லா மொழிகளிலும் அதன் தொன்மையை.. ஆளுமையை மையப்படுத்தி பயன்படுத்தப்பட்டே வருகிறது.

இது புதுமைவாதி நவீனத்துவவாதி இல்லை பின் நவீனத்துவவாதி என்ற சுய பெயர் சூட்டலுக்கான தலைப்பல்ல. நிஜ சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை சமூகத்தின் வெவ்வேறு மட்டங்களில் இருந்து ஆராய்ந்து தீர்வுக்கு வழிகாட்ட வேண்டிய தலைப்பு. 

மேலே இணைக்கப்பட்ட கவிதையும் சமூகத்தில் எல்லாத் தரப்புக்கும் புத்திபுகட்ட நினைக்கிறதே தவிர.. பழமைவாதம்.. நவீனவாதம்.. பின்நவீனத்துவாதம் என்ற கற்பிதங்களை காண்பிக்கவில்லை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் 10 வயது சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகம் : சட்ட வைத்திய அறிக்கையில் உறுதி

Published By: T. SARANYA

08 APR, 2023 | 10:35 AM
image

வவுனியாவில் 10 வயது சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று (08) தெரிவித்தனர்.

வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 10 வயது மாணவி ஒருவர் கடந்த 4 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்ததையடுத்து, கடந்த 30 ஆம் திகதி குறித்த மாணவியின் சகோதரன், சிறிய தந்தையார் உள்ளிட்ட 16, 32, 53 வயதுடைய மூவரை வவுனியா பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர்.

குறித்த மூவரும் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையும் வெளியாகியுள்ளது.

குறித்த அறிக்கையில் 10 வயது மாணவி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு  உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் இடம்பெற்றமைக்கு தாயின் பொறுப்பற்ற செயற்பாடே காரணம் என சமூகமட்ட அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/152390

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

குறித்த சம்பவம் இடம்பெற்றமைக்கு தாயின் பொறுப்பற்ற செயற்பாடே காரணம்

நூறு வீத உண்மையிருக்கிறது. தனக்கு நடந்த கொடுமையையை வெளிப்படுத்த அந்தச்சிறுமிக்கு தான் பிறந்த வீட்டிலேயே சந்தர்ப்பம்  கொடுக்கப்படவில்லை, நம்பிக்கையானவர்களும் இருக்கவில்லை. நான்கு வருடங்களாக தனக்கு என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ள முடியாத வயதிலிருந்தே அனுபவித்துக்கொண்டிருந்திருக்கிறாள், முடியாத கட்டத்திலேயே தனது நண்பிக்கு சொல்லி அழுத்திருக்கிறாள் பாவம். அவளது எதிர்காலம் அவளுக்கு ஒரு சுமையாக எண்ணி தன்னையே விலத்தியிருக்கச்செய்யப்போகிறது. கண்டிப்பாக இவளுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்படவேண்டும், இது அவளது தப்பல்ல என்பதை எடுத்துரைத்து எதிர்காலத்தை துணிவுடன் எதிர்கொள்ள ஆலோசனை வழங்கப்படவேண்டும்.

16 minutes ago, ஏராளன் said:

குறித்த மாணவியின் சகோதரன், சிறிய தந்தையார் உள்ளிட்ட 16, 32, 53 வயதுடைய மூவரை வவுனியா பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர்.

தாயும் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படவேண்டும். அவரால் இனிமேல் இந்தக்குழந்தைக்கு பாதுகாப்பில்லை என்கிறபோது அவரும் குற்றவாளியே!       

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இதேவேளை, குறித்த சம்பவம் இடம்பெற்றமைக்கு தாயின் பொறுப்பற்ற செயற்பாடே காரணம் என சமூகமட்ட அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாயை மட்டும் குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை. இந்த நிலைக்கு அந்த நாட்டில் இருக்கும் சமூகப் பாதுகாப்பற்ற சட்டங்களும்.. செயற்பாடுகளும் தான் காரணம். பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிங்கள இராணுவத்தை பாதுகாக்கும் அரசாங்கம்.. சிங்கள பெளத்த பேரினவாதம்.. சிங்கள அரசுக்கு கூலி செய்த தமிழ் - முஸ்லிம் காட்டிக்கொடுப்புக் கூலிகள்.. என்று சமூகத்தில் தண்டிக்கப்பட வேண்டிய.. திருத்தப்பட வேண்டிய குற்றவாளிகள் எல்லோரும் பாதுகாக்கப்பட்டு.. சுதந்திரமாக நடமாட விடப்பட்டிருக்கும் சூழலில்.. எப்படியான சமூகம் கட்டி வளர்க்கப்படும்..?!

பாடசாலைகளிலேயே பாலியல் துஷ்பிரயோகம். பாடசாலையில் ஒரு குழந்தை முறைப்பாடு கொடுக்க முடியாது. அப்படிக் கொடுத்தால்.. அந்தக் குழந்தைக்கு பல அவப்பெயர்கள் சூட்டப்படும். கனதியான விடயங்களை அனானிமஸாக முறைப்பாடு செய்ய முடியாது. அப்படிச் செய்தாலும் ரகசியம் காக்கப்படாது. இப்படி அந்த நாட்டில் எதுவுமே உருப்படியாக செயலில் இல்லாத சூழலில்.. என்ன செய்ய முடியும்.

இந்தச் சூழலை பலர் தவறான வாய்ப்பாக்கி தவறுகளை திரும்பத் திரும்பச் செய்கின்றனர். இப்படியான சூழலில் தான் விடுதலைப்புலிகள்.. மின்கம்பத் தண்டனையை அறிமுகம் செய்ய வேண்டி வந்தது. அப்ப எல்லாரும் பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தவை. இப்படியான சீர்கேடுகள் வெகுவாகக் குறைந்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

காட்டுமிராண்டிகளோடு.. காட்டுமிராண்டி அணுகுமுறைதான் வேலை செய்யும். 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.