Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிகவும் இரகசியமான புலனாய்வு பாதுகாப்பு தகவல்கள் இணையத்தில் வெளியானது எப்படி - குழப்பத்தில் அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

10 APR, 2023 | 10:39 AM
image

அமெரிக்காவின் மிகவும் இரகசியமான புலனாய்வு பாதுகாப்பு தகவல்கள் கசிந்துள்ள நிலையில் இதனை அம்பலப்படுத்தியது யார் என்பது குறித்து அமெரி;க்க அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

உக்ரைனின் வான்பாதுகாப்பு  இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு அமைப்பின் செயற்பாடுகள் உட்பட பல முக்கிய பாதுகாப்பு புலனாய்வு தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் இதனை வெளியிட்டது யார் என்பதை கண்டறிவதற்கான தீவிர முயற்சிகளில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்தவர்களே இந்த விபரங்களை அம்பலப்படுத்தியிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உக்ரைன் யுத்தம்,சீனா மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா உட்பட பல பகுதிகள் குறித்த ஆவணங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது அமெரிக்காவின் நேசநாடு இல்லை அமெரிக்காவை சேர்ந்த ஒருவரே என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வெளியாகியுள்ள பல ஆவணங்கள் அமெரிக்காவிடமே இருந்ததால்  இதனை அமெரிக்காவை சேர்ந்த ஒருவரே அம்பலப்படுத்தியிருக்கவேண்டும் என பென்டகனின் முன்னாள் அதிகாரியான மைக்கல் மல்ரே ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன இதனை ரஸ்ய ஆதரவு சக்திகள் செய்திருப்பதற்கான நடவடிக்கைகளை நிராகரிக்க முடியாது என தெரிவிக்கும் அதிகாரிகள் விக்கிலீக்சிற்கு ( 2013)பின்னர் இவ்வளவு பெருமளவு தகவல்கள் கசிந்துள்ளது இதுவே முதல்தடவை என தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/152530

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் கசிய விட்டதாகவும் ஒரு செய்தி பரவியுள்ளது. உண்மை, பொய் தெரியவில்லை.
இஸ்ரேலின் நத்தனியாகுவுக்கு எதிராக ஊர்வலங்கள் செய்ய அமெரிக்கா பின்னணியில் செயல்பட்டது காரணமாக கூறப்படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் இரகசிய ஆவணங்கள் கசிந்தமை குறித்து அவுஸ்திரேலியா கவலை

Published By: RAJEEBAN

10 APR, 2023 | 10:56 AM
image

அமெரிக்காவின் போர் புலனாய்வு இரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளமை குறித்து கவலை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலியா இது தொடர்பில் அமெரிக்காவிடமிருந்து மேலதிக தகவல்களை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளமை குறித்து கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அரசாங்க பேச்சாளர் அமெரிக்கா விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக துரிதமாக அறிவித்துள்ளமை குறித்து திருப்தியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்களை கோரியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.உக்ரைன் யுத்தம்,சீனா மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா உட்பட பல பகுதிகள் குறித்த ஆவணங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/152535

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஏராளன் said:

அமெரிக்காவின் இரகசிய ஆவணங்கள் கசிந்தமை குறித்து அவுஸ்திரேலியா கவலை

அவுஸ்க்கு ஏன் கவலை?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அவுஸ்க்கு ஏன் கவலை?

வேற என்ன?

நாங்கள் அமெரிக்காவுக்கு தலையும் , சீனாவுக்கு வாலும் காட்டின படி காலம் தள்ளுறம்..!

இது சீனனுக்குத் தெரிந்தால் என்ன நினைப்பான் என்ற கவலை தான்..!😃

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

அவுஸ்க்கு ஏன் கவலை?

பேர்த் எனும் இடத்தில் அமெரிக்காவின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான் கட்டளைப்பீடம் உள்ளதாக இங்குள்ளவர்கள் கூற்கிறார்கள் (அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளா அல்லது அணுகுண்டினை கொண்ட நீர்முழ்கிகளா என்பதில் தெளிவில்லை) ஆனால் இணையத்தில் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

அணுகுண்டு நீர்மூழ்கியினை தம்து நாட்டில் வைத்திருப்பதும் ஆபத்து என்பதாகவும் இருக்கலாம்.

முன்பு வலது சாரி கட்சிதான் எதற்கெடுத்தாலும் அமெரிக்காவிற்காக குரல் கொடுப்பது, தற்போது இடது சாரி அரசு உள்நாட்டு பொருளாதாரத்தில் மட்டும் கவனம் செலுத்துவதால் அமெரிக்க நலனை விட உள்நாட்டு நலனில் அக்கறை காட்டுவதோடு சரி.

அல்லது எப்போதும் போல ஏரோப்பிளேனில போற சனியனை ஏணி வைச்சு இறக்கிற பிளானாகவும் இருக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

PENTAGON 'LEAKED DOCUMENTS': Leak reveals US spying on Russia's war in Ukraine | Russia-Ukraine war

 

 

  • கருத்துக்கள உறவுகள்

https://eelam.tv/watch/project-beacon-to-destroy-ltte-yogi-speech_vmWvdTiCQJxBqr1.html

இரஸ்சியாவுடனான் இந்த போரில் தமிழ் மக்களின் போராட்டத்தினை ஒடுக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட உத்தி போன்றே அனைத்து வழங்கல் பாதைகளை மூடி ஒரு யுத்தத்தினை தொடுத்தற்கு ஒப்பான நாசகார நடவடிக்கையினையே மேற்கொண்டது, ஆரம்பத்தில் இந்தியாவிற்கு, அமெரிக்கா வரலாற்றில் எந்த பக்கம் இருக்கிறோம் என்றெல்லாம் எச்சரித்தது, அதே போல சீனா போன்ற நாடுகளுக்கும் அமெரிக்கா மறைமுக மிரட்டல்கள் எல்லாம் விடுத்தும் அமெரிக்கா எதிர்பார்த்த மாதிரி தமிழ் மக்களின் போராட்டத்தினை முடக்க உலகம் ஒன்று பட்டது போல இரஸ்சிய விவகாரத்தில் உலகம் ஒன்று பட முடியாமல் போய்விட்டது.

தற்போது அமெரிக்க கூட்டணிக்குள்ளேயே பிளவு ஏற்படும் நிலமை உருவாகிவிட்டது.

அமெரிக்காவின் எகொபித்த உலக வல்லாதிக்க உலக ஒழுங்கே கேள்விக்குள்ளாகும் நிலைக்கு நிலமை வந்து விட்டது.

இரஸ்சியா கூறுவது போல இந்த யுத்த முடிவில் புதிய உலக ஒழுங்கு ஏற்படுமா? அதன் மூலம் தமிழ் மக்களுக்கு விடியல் ஏற்படுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, vasee said:

அமெரிக்காவின் எகொபித்த உலக வல்லாதிக்க உலக ஒழுங்கே கேள்விக்குள்ளாகும் நிலைக்கு நிலமை வந்து விட்டது.

மெதுவாக புகைய ஆரம்பித்துவிட்டது...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் நடவடிக்கைகளை அமெரிக்கா வேவுபார்த்ததா?

Published By: RAJEEBAN

13 APR, 2023 | 11:21 AM
image

ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் நடவடிக்கைளை அமெரிக்கா வேவுபார்த்தது என்ற விடயம் இணையத்தில் கசிந்துள்ள அமெரிக்காவின் இரகசிய இராணுவ புலனாய்வு ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் ரஸ்யாவின் நலன்களை ஏற்றுக்கொள்ளக்கூடியவராக காணப்படுகின்றார் என அமெரிக்கா கருதியுள்ளது.

அன்டோனியோ குட்டரசை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வந்துள்ளமை அந்த ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

உக்ரைன் யுத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் என்ன கருதுகின்றார் என்பது குறித்த விடயங்கள் இந்த ஆவணங்களி;ல் காணப்படுகின்றன.

உலகஉணவு நெருக்கடிக்கு பின்னர்ரஸ்யாவிற்கும் துருக்கிக்கும் இடையில் கைச்சாத்தான  உடன்படிக்கை குறித்து அமெரிக்க ஆவணங்களில் பல விடயங்கள் காணப்படுகின்றன.

அந்த உடன்படிக்கையை பாதுகாப்பது குறித்து ஐநா செயலாளர் நாயகம் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுகின்றார் அவர் ரஸ்யாவின் நலன்களை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளார் என கசிந்த ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/152803

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம், எங்கண்ட உடான்ஸ் சாமியார் வேலை எண்டால், தாரும் நம்பவா போறியள்.

ஆள் டபக்கெண்டு தலைமறைவாப் போனதையும் சேர்த்துப் பாருங்கோ! 😇

  • கருத்துக்கள உறவுகள்

வயது இருபதுகளில் உள்ள  ஒருவரால்  ஆவணம் கசிய விடப்பட்டதாம். உபயம்: Washington post.

பி கு: நான் வாசிக்கவில்லை. வானொலி ஒன்றில் கேட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

Snowden -2 :rolling_on_the_floor_laughing:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரகசிய ஆவணங்களை வெளியிட்டு அமெரிக்காவுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியவர் இந்த 21 வயது இளைஞரா?

அமெரிக்க இளைஞர்

பட மூலாதாரம்,FACEBOOK

14 ஏப்ரல் 2023, 08:41 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்த ஆண்டு மார்ச் மாதத்தின் துவக்கத்திலிருந்து இணையத்தில் அமெரிக்க ராணுவத்தின் அதிரகசிய ஆவணங்கள் கசிந்து பெரும் சர்ச்சைகளை உருவாக்கி வந்தன.

யுக்ரேன் போரைப்பற்றிய அமெரிக்காவின் அவதானிப்புகள், அமெரிக்காவின் நட்பு நாடுகள் குறித்த முக்கியமான ரகசியங்கள் இவ்வாவணங்களில் காணப்பட்டன.

இப்போது, அந்த ஆவணங்கள் கசிந்தது தொடர்பாக அமெரிக்க விமானப்படையின் தேசிய காவல்படையைச் சேர்ந்த 21 வயதேயான வீரர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஜாக் டெய்க்ஸேய்ரா என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் அவரை, மாசாச்சுசெட்ஸில் அவரது வீட்டிலிருந்து FBI அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

 

அமெரிக்க அட்டர்னி ஜெனெரல் மெர்ரிக் கார்லண்ட், இச்சந்தேக நபர் பெரும் சிக்கல்களின்றி கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார். விசாரணை குறித்தோ, ரகசியங்கள் பகிரப்பட்டதன் நோக்கம் குறித்தோ அவர் வேறெந்த தகவல்களையும் தெரிவிக்கவில்லை.

யார் இந்த இளைஞர்?

ஒரு டீ-ஷர்ட்டும் அரைக்கால் சட்டையும் அணிந்து, கைகளை உயர்த்தியபடி பின்னோக்கி நடந்து, துப்பாக்கியேந்திய அதிகாரிகளிடம் டெய்க்ஸேய்ரா சரணடையும் காட்சிகள் வெளியிடப்பட்டன.

அமரிக்க அரசையும் அதன் ராஜாங்க உறவுகளையும் சங்டகப்படுத்தியதாகக் கருதப்படும் இந்த இளைஞர் மாசாச்சுசெட்ஸில் அமெரிக்க விமானப்படையின் தேசிய காவல் படையின் புலனாய்வுப் பிரிவில் தகவல் தொழில்நுட்ப நிபுணராக 2019ஆம் ஆண்டிலிருந்து பணிபுரிந்து வந்திருக்கிறார். இவ்வலுவலகம் செல்ஃபோன் உபயோகம் தடைசெய்யப்பட்ட ஒரு இடம்.

இவர் ‘Cyber Transport Systems journeyman’ என்ற இளையவர்களுக்கான ஒரு பணியில் அமர்த்தப்பட்டிருந்தார். அமெரிக்க விமானப்படையின் இணையதளம், இப்பணியிலிருப்பவர்கள் அமெரிக்க விமானப்படையின் உலகளாவிய தகவல் தொலைதொடர்பு இளைப்புகளை செயல்படுத்துவர் என்று கூறுகிறது.

அவரோடு பள்ளியில் படித்ததாகக் கூறிக்கொள்ளும் 22 வயதான எட்டி சூஸா, டெய்க்ஸேய்ரா தனது நண்பர் இச்சம்பவத்தில் சந்தேக நபராக அறிவிக்கப்பட்டிருப்பது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

“அவன் ஒரு நல்ல பையன். வம்புகளுக்குப் போகாத, அமைதியான பையன். இது ஒரு சிறுவனின் முட்டாள்தனமான தவறாகத்தான் எனக்குப் படுகிறது,” என்றர் சூஸா.

அமெரிக்கா

பட மூலாதாரம்,REUTERS

மீம்கள், ஜோக்குகளுடன் சேர்த்து பகிரப்பட ராணுவ ரகசியங்கள்

முதலில் இந்த ஆவணங்கள் ஆன்லைன் கேம் விளையாடுபவர்கள் உரையாடப் பயன்படுத்தும் டிஸ்கார்ட் (Discord) என்ற சமூக ஊடகச் செயலியில் பதிவிடப்பட்டன.

இந்த சமூக ஊடகச் செயலியில் ஒரு குழுவிற்கு டெய்க்ஸேய்ரா தாலைவராக இருந்தார் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இக்குழுவில் ரஷ்யா, யுக்ரேன் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த இளம் ஆண்களே அதிகம் இருந்திருக்கின்றனர். இவர்கள், மீம்கள், மரியாதைக்குறைவான நகைச்சுவை துணுக்குகள், வெட்டி அரட்டைகள் போன்றவற்றையே இக்குழுவில் பெரிதும் பகிர்ந்துகொள்வர் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

இச்செயலியில் TheExcaliburEffect, jackdjdtex and TexKilledYou, போன்ற பல பெயர்களில் இவர் உலாவி வந்திருக்கிறார்.

அக்குழுவின் ஒரு உறுப்பினர், டெய்க்ஸேய்ரா தான் அக்குழுவிலிருந்தவர்களிலேயே வயதில் மூத்தவரென்றும், அவர் குழுவிலிருந்த மற்றவர்களிடம் தனது செல்வக்கைப் பதியவைக்க முயன்றார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மற்றொரு உறுப்பினர், டெய்க்ஸேய்ரா மறவர்களை எளிதில் கவரும் வகையில் நடந்துகொள்ளக் கூடியவரென்றும், துப்பாக்கிகளின் மீது பெரும் ஆர்வமுடையவரென்றும் கூறினார்.

அமெரிக்கா

பட மூலாதாரம்,REUTERS

எப்படிப் பரவின ரகசியங்கள்?

முதலில், டிஸ்கார்ட் சமூக ஊடகத்தளத்தில் 50 முதல் 100 ரகசிய ஆவணங்கள் கசிந்தன.

ரகசிய ஆவணங்கள் முதலில் டிஸ்கார்ட் ஊடகத்தளத்தில் கசிந்திருந்தாலும், அவை அதற்கு வெளியே பகிரப்பட்டதும்தான் அமெரிக்காவின் பென்டகன் அதிகாரிகளுக்கு அது தெரியவந்து உடனே குற்றவாளிக்கான தேடுதல் வேட்டையைத் துவங்கினர்.

இச்சம்பவத்திற்குப் பிறகு பென்டகன் ரகசியத் தகவல்கள் பரிமாறப்படும் செயல்முறையைத் தாம் மறுபரிசீலனை செய்யவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால், இளம் பணியாளர்களிடம் பெரும் பொறுப்புகளை ஒப்படைப்பது அமெரிக்க ராணுவத்தின் இயல்பு என்று ஒரு செய்தித்தொடர்பாளர் கூறினார்.

அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கசிந்த ஆவணங்களில் இருந்த 5 முக்கியத் தகவல்கள்

1) ஐ.நா சபையின் பொதுச்செயலளர் அன்டோனியோ குட்டரெஸ் ரஷ்ய-யுக்ரேன் போரில் ரஷ்யாவின் நலன்களைப் பாதுகாக்க முனைப்பு காட்டியதாக கருதிய அமெரிக்கா அணுக்கமாகக் கண்காணித்து வந்தது.

2) சீன தொலைதொடர்பு நிறுவனமான Huaweiயின் 5G திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதைப் பற்றி ஜோர்டன் நாட்டு அதிகாரிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது.

3) யுக்ரேன் போரின் பலி எண்ணிக்கையை வெளியிடுவதில் ரஷ்ய தேசிய புலனாய்வவு நிறுவனமான FSBக்கும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இடையே சிக்கல்கள் இருந்துள்ளன. இது ரஷ்ய ராணுவத்திலும், புலனாய்வு நிறுவனத்திலும் அமெரிக்கா எந்த அளவு ஊடுருவியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

4) பிரிட்டன், லாட்வியா, ஃப்ரான்ஸ், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் சிறப்புப் படைகள் யுக்ரேனில் செயல்பட்டு வந்தன. இது யுக்ரேனில் Natoவின் ஈடுபாடு இருந்ததாகக் கூறிவந்த ரஷ்யாவின் நிலைப்பாட்டை உறுதிசெய்வதாக அமையும்.

5) சீனா ஃபிப்ரவரியில் சோதனை முயற்சியாகத் தனது ஹைப்பர்சோனிக் ஏவுகளையைச் சோதித்தது.

https://www.bbc.com/tamil/articles/cq5zvz7eqd9o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Pentagon Leaks : பென்டகன் இராணுவ ரகசியக் கசிவும், உளவியல் யுத்தமும் | Unmayin Tharisanam | IBC Tamil

 

  • கருத்துக்கள உறவுகள்

ரகசியம் பரவினது என்று சொல்கிறார்களே தவிர,
ஓரு ரகசியத்தியையும், நமக்கு சொல்ல மாட்டேங்குறாங்க. 😂 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

ரகசியம் பரவினது என்று சொல்கிறார்களே தவிர,
ஓரு ரகசியத்தியையும், நமக்கு சொல்ல மாட்டேங்குறாங்க. 😂 🤣

கூழ் முட்டை ரகசியங்களை வெளியிலை என்னெண்டு சொல்லுறது? :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2023 at 23:30, குமாரசாமி said:

அவுஸ்க்கு ஏன் கவலை?

ஒரு நேரத்தில் அவுஸ் ராணுவ பாதுகாப்பு சம்பந்த மிசின்களில் விண்டோவை தூக்கி எறிந்தது ஆனால் சைனாவின் அராஜகமான அரசியல் சில தீவுகளை வாங்கி அங்கு அவுஸ் மக்களை அனுமதிக்காமல் அராஜகம் அவுசின் முக்கிய ஏற்றுமதிகள் இரும்பு போன்றவற்றில் சைனாவின் அடாவடித்தனம் அவுஸை அமெரிக்காவை நோக்கி நகர தள்ளபட்டுள்ளது .

அத்துடன் எதிர்கால லித்தியம் பற்றரி க்கு தேவையான 9௦ வீத லித்தியம் அங்குதான் உள்ளது ஒருகன்டமாக உள்ளது என்றாலும் எதிர்காலத்தில் சிதைக்க பட போவது உறுதி.

இல்லை 23 புலிகேசி போல் இருக்கணும் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

 

இல்லை 23 புலிகேசி போல் இருக்கணும் .

இதுதான் நடக்கும்😄

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.