Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு இலட்சம் இலங்கைக் குரங்குகளை வழங்குமாறு சீனா கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, satan said:

தமக்கென ஒரு நாடு இல்லாமற் போனாலும் பரவாயில்லை, தமிழனுக்கென்றொரு நாடு அமைந்துவிடக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

அவர்கள் மட்டும் அல்ல கைபர் கணவாய் மூலம் பாரத நாட்டுக்கு வந்த வந்தேறி கூட்டமும் நிக்கிறார்கள் .

  • Replies 85
  • Views 5.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பிறந்து தற்போது வெளிநாடுகளில் வாழும் 🐒🐒 கள் என்ன மாதிரி 😄

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

இந்த நாய், பூணை சாப்பாடுகள் மிக மோசமானது.

மனிதர், சுவைத்துப் பாரார் என்று, மனிதர் சாப்பிடாத பல ஜயிட்டங்களை அரைத்துக் கலப்பார்கள்.

உதாரணமாக, குடல் பிரட்டல், மூளைப் பொரியல் , ரத்தவறை என்று நம்ம ஊரில் வறுமை காரணமாக உண்பவைகளை, வெள்ளையர் சீண்டுவதில்லை.

அவைகள் வளர்ப்பு பிராணிகள் உணவாகும்.

பணம் இருப்பவர்கள், இதுதான் வேண்டும் என்று ஓடர் பண்ணுவர்.

உண்மை. ஆனாலும் வெள்ளைகார்கள் நிறைய நோய்களுக்கு ஆளாகிறவர்கள் தான். தசைகளை விட மற்ற உறுப்புகள் நிறய அனாவசியமான தாதுக்களை சேகரித்து வைத்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

குரங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு முயற்சி - சூழல் ஆர்வலர் கடும் எதிர்ப்பு

Published By: RAJEEBAN

13 APR, 2023 | 10:18 AM
image

இலங்கையில் காணப்படும் சில வகை குரங்குகளை  சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்கம் குழுவொன்றை நியமித்தமை குறித்து சூழல் விவகாரங்களிற்கான சட்டத்தரணி கலாநிதி ஜகத் குணவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் மாத்திரம் சில வகை குரங்குகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வகை குரங்குகளே பயிர்ச்செய்கைக்கு  பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றால் இது குறித்த தீர்மானங்களை விஞ்ஞான அடிப்படையில் எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பயிர்களிற்கு பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக குரங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வது என்ற முடிவை சாதாரணமாக எடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி செய்யப்படும் குரங்குகள் என்ன அடிப்படையில் தெரிவு செய்யப்படும் சீனாவில் அவைகளிற்கு உகந்த காலநிலை காணப்படுமா? போன்ற விடயங்கள் குறித்து முதலில் ஆராய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் உயிரியல் பூங்காவிற்கு கூட ஏன் இவ்வளவு பெருந்தொகை குரங்குகள் தேவை என்ற கேள்வி எழுந்துள்ளது என தெரிவித்துள்ள அவர் தற்போதைய சட்டப்படி சூழல் பாதுகாப்பு நோக்கங்களிற்காக மாத்திரம் விலங்குகளை ஏற்றுமதி செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மாமிசத்திற்காக குரங்குகளை ஏற்றுமதி செய்ய முடியாது விஞ்ஞான ஆராய்ச்சிக்காக ஏற்றுமதி செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/152792

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2023 at 13:46, குமாரசாமி said:

என்ன நாதமுனியர்! பொசுக்கெண்டு இப்பிடி சொல்லிப்போட்டியள்?
இஞ்சை ஜேர்மனியிலை பன்றி,மாடு எண்டு பார்த்தால் எந்தவொரு உறுப்பையும் மிச்சம் வைக்க மாட்டார்கள். எல்லாத்தையும் பிரயோசனமாக்கி போடுவார்கள். :rolling_on_the_floor_laughing:

Brat wurst (sausage) க்குள் இவை தானேஅரைத்து போடப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2023 at 19:46, குமாரசாமி said:

என்ன நாதமுனியர்! பொசுக்கெண்டு இப்பிடி சொல்லிப்போட்டியள்?
இஞ்சை ஜேர்மனியிலை பன்றி,மாடு எண்டு பார்த்தால் எந்தவொரு உறுப்பையும் மிச்சம் வைக்க மாட்டார்கள். எல்லாத்தையும் பிரயோசனமாக்கி போடுவார்கள். :rolling_on_the_floor_laughing:

 

23 hours ago, nunavilan said:

Brat wurst (sausage) க்குள் இவை தானேஅரைத்து போடப்படுகிறது.

That's Not A Smart Thing To Say… (17 GIFS) - Izismile.com Bbq Deutschland GIF by Netto Marken Discount - Find & Share ...

அதே.... அதனால் தான், சுவையோ அதிகம்.  
இறைச்சிக்காக வெட்டப் படும் விலங்கின்... மயிர், பல்லு, எலும்புகளைத் தவிர,
மிகுதி அனைத்தும்  "பிராட் வூஸ்ருக்குள்" சங்கமமாகி விடும்.  😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'வயிற்று பசிக்காக அங்க இங்க புடுங்கி திண்டம் அது குற்றம் என்று நாடு கடத்துகறீங்க.. ஆனால்..... i BBC NEWS தமிழ் நாட்டை கொள்ளை அடிச்சு எல்லோரை நடுத்தெருவில் நிறுத்திய திருடர்களுக்கு செங்கம்பளம் விரிச்சி பாதுகாப்பும் கொடுக்குறீங்க!! "நல்ல நாடு உங்கட நாடு"'

 

 

 

May be an image of 2 people and text that says 'நாம நாட்ட நாசமாக்கயுமில்ல, நாம அரசியல்ல எறங்கயுமில்ல.. அப்போ நாம ஏன் நாட்ட உட்டு போகனும்..?'

தேயிலை, இறப்பர்  ஏற்றுமதி செய்தார்கள்.
இப்ப.. நம்மை, ஏற்றுமதி செய்யப் போகிறார்கள். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'i இலங்கையில் இருந்து ஒரு இலட்சம் குரங்குகள் சீனாவிற்கு வழங்கப்படவுள்ளன News டேய் மாப்ள நீ சீனா போக நல்ல சந்தர்ப்பம் ஒன்னு வந்திருக்கு!! ஆமா மொத்த செலவையும் சீனாவே ஏத்துகுதாம்'

 

May be an image of 11 people and text that says 'lankan monkeys நீ கடனாளியானத்துக்கு எங்கள அறுத்து ஆராய்ச்சி பன்ன அனுப்புறயே இது நியாயமாடா சகவமிகம என்னப்பா செய்ரது தலைக்கு மேல கடன் வாங்கிட்டம் சொல்ரத செஞ்சிதானே ஆகனும்'

 

May be an image of text that says 'lankans monkey safely arrived at'

animiertes-affen-bild-0093.gif 🐒நாங்கள்...  ஒரு பிரச்சினையும் இல்லாமல் சீனா வந்து சேர்ந்தோம். 😂 
மற்ற மங்கி 🐵: இனிதான்(டா)  பிரச்சினையே ஆரம்பிக்கப் போகுது. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2023 at 20:19, nunavilan said:

Brat wurst (sausage) க்குள் இவை தானேஅரைத்து போடப்படுகிறது.

sausage நான் எப்பவும் வாங்குவதேயில்லை 😁

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, உடையார் said:

sausage நான் எப்பவும் வாங்குவதேயில்லை 😁

வாழ்க்கையில்… பெரும் பகுதியை வீணாக்கி விட்டீர்கள். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் முடிவை முறியடித்தே தீருவோம்

இலங்கையின் குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதன் பின்னணியில் கோடிக்கணக்கான கடத்தல் இருப்பதாக சுரக்கிமு ஸ்ரீலங்கா தேசிய இயக்கத்தின் வணக்கத்திற்குரிய பஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

ஒரு இலட்சம் குரங்குகளை வெளிநாடுகளில் உள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு அனுப்புவது இந்நாட்களில் மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாக இருப்பது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஏனைய அமைச்சின் அதிகாரிகளால் எடுக்கப்படும் இவ்வாறான தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இலங்கை மக்கள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்ர்.

உயிரியல் ஆராய்ச்சிக்காக குரங்குகளை இலங்கைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படுவதாகவும், இந்த முடிவை மாற்றிக்கொள்ள எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்கவிருப்பதாகவும் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் மேலும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/249224

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, தமிழ் சிறி said:

 

That's Not A Smart Thing To Say… (17 GIFS) - Izismile.com Bbq Deutschland GIF by Netto Marken Discount - Find & Share ...

அதே.... அதனால் தான், சுவையோ அதிகம்.  
இறைச்சிக்காக வெட்டப் படும் விலங்கின்... மயிர், பல்லு, எலும்புகளைத் தவிர,
மிகுதி அனைத்தும்  "பிராட் வூஸ்ருக்குள்" சங்கமமாகி விடும்.  😂

சனம் கியூவிலை நிண்டு வாங்கி ரசிச்சு ருசிச்சு சாப்பிடும். :beaming_face_with_smiling_eyes:

4 hours ago, உடையார் said:

sausage நான் எப்பவும் வாங்குவதேயில்லை 😁

4 hours ago, தமிழ் சிறி said:

வாழ்க்கையில்… பெரும் பகுதியை வீணாக்கி விட்டீர்கள். 😂 🤣

 

உடையார் இடியப்பம்,புட்டு,சோறு,கருவாடு எண்ட வேலியை விட்டு தாண்ட மாட்டார் :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள தேசத்தால் அதன் சுதேசிய உயிரினங்களையே பாதுகாக்க முடியவில்லை... என்றால்.. தமிழீழம் அவற்றை உள்வாங்கக் காத்திருக்கிறது. சீனாவுக்கு.. ஹிந்தியாவுக்கு.. அமெரிக்காவிற்கு விற்பதை விடுத்து.. அருகில் எல்லையில் உள்ள.. தமிழீழத்துக்கு அனுப்பி வையுங்கள்.. தகுந்த conservation திட்டமிடலின் கீழ் இவற்றை பாதுகாக்கவும் காக்கவும் தமிழீழத்தவரால் முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

சனம் கியூவிலை நிண்டு வாங்கி ரசிச்சு ருசிச்சு சாப்பிடும். :beaming_face_with_smiling_eyes:உடையார் இடியப்பம்,புட்டு,சோறு,கருவாடு எண்ட வேலியை விட்டு தாண்ட மாட்டார் :rolling_on_the_floor_laughing:

ஒரு முறை ஜேர்மனியில் இதனை சாப்பிட்டவர்கள் கூட 
அடுத்த முறை வரும் போது... விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள்.
அல்லது... தொலை பேசியில் கூட... இதன் சுவையை பற்றி சொல்லி புகழுவார்கள்.
 @nunavilanக்கே தெரிந்திருக்குது என்றால், பாருங்கோவன்.😂
ஹ்ம்ம்ம்.... @உடையார்ருக்கு இதனை சாப்பிடும் பாக்கியம் கிடைக்கவில்லை. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

உடையார் இடியப்பம்,புட்டு,சோறு,கருவாடு எண்ட வேலியை விட்டு தாண்ட மாட்டார் :rolling_on_the_floor_laughing:

அதென்றால் 100% வீதம் உண்மை👍,

இந்த மேற்கு & சைனா உணவுகளை காண்டாலே தூர ஓடிவிடுவேன், சில உணவுகளை தவிர🤣

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்விடமே இல்லாமல் போன 'தொங்கு மான்' - ஒரு தேசத்தால் கைவிடப்படும் விலங்கின் கதை

இலங்கையில் வாழ்விடம் அற்றுப்போன தொங்குமான்
 
படக்குறிப்பு,

தொங்குமான்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,யூ.எல். மப்றூக்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

அந்தச் சிறிய காடு இப்போது அங்கு இல்லை. 'கண்ணாக் காடு' என்று அதற்குப் பெயர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, இலங்கையின் அம்பாறை மாவட்டம் - அட்டாளைச்சேனை பகுதியில் அந்தக் காடு - குரங்குகளின் வாழ்விடமாக இருந்தது.

ஆற்றங்கரையோரத்தை அண்டி, கண்ணா மரங்கள் வளர்ந்திருந்த அந்தக் காட்டுப் பகுதி, இப்போது மக்கள் குடியிருப்பாக மாறியுள்ளது.

அந்தக் காட்டில் வாழ்ந்த குரங்குகள் இப்போது நிரந்தர வாழ்விடமின்றி அலைந்து திரிகின்றன. அவை தமக்கான உணவுகளைத் தேடி, மனிதர்களின் குடியிருப்புப் பகுதிகளுக்குள் அடிக்கடி வந்து செல்லும்.

இதனால் வீடுகளின் கூரைகள் - குரங்குகளால் சேதமடைவதாகவும் தமது வளவுகளில் வளர்ந்து நிற்கும் பலன் தரும் மரங்களை குரங்குகள் நாசம் செய்வதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

 

தனது பாடசாலைக் காலத்தில் கண்ணாக் காட்டுக்குள் நண்பர்களுடன் அடிக்கடி சென்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஜலால், அங்கு 'குரங்கு வெற்றிலை'யை நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்ட கதையைக் கூறுகின்றார்.

குரங்கு வெற்றிலை

”அங்கிருந்த மரம் ஒன்றின் இலைக்கு - குரங்கு வெற்றிலை' என்று பெயர். ஓரிரு அடிகள் உயரத்துக்கு அந்த மரம் வளரும், அதன் இலைகள் 'பொட்டு'கள் போன்று வட்டமாக இருக்கும்.

அந்த இலைகளையும் குரும்பட்டியையும் (தேங்காயின் பிஞ்சு) சேர்த்து குரங்குகள் உண்ணும். அதன்போது வெற்றிலை சாப்பிட்டால், வாய் சிவப்பதைப் போல், குரங்குகளின் வாய் சிவக்கும். அதைப் பார்த்து நாங்களும் குரும்பட்டியுடன் 'குரங்கு வெற்றிலை'யை சாப்பிட்டுப் பார்ப்போம், வாய் முழுக்கச் சிவந்து விடும்" என்கிறார் ஜலால்.

”அப்போதெல்லாம் குரங்குகளைக் காண வேண்டுமென்றால், அவற்றின் வாழ்விடங்களுக்குத்தான் செல்ல வேண்டும். எங்கள் சிறுவயதில் ஊருக்குள் குரங்குகளை நாங்கள் கண்டதே இல்லை. ஆனால், இப்போது எங்கள் குடியிருப்புப் பகுதிக்குள் குரங்குகள் அடிக்கடி வருகின்றன" என்கிறார் அவர்.

இலங்கையில் வாழ்விடம் அற்றுப்போன தொங்குமான்
 
படக்குறிப்பு,

ஜலால்

ஒரு காலத்தில் எப்போதாவது மட்டுமே ஊருக்குள் காண முடிந்த குரங்குகள், இப்போது மக்கள் குடியிருப்புகளுக்குள் அடிக்கடி நுழைந்து அச்சுறுத்துகின்றன, பயிர்களை நாசம் செய்கின்றன.

அதனால் விவசாயத்துக்கு அழிவையும் ஏற்படுத்தும் விலங்குளில் ஒன்றாக குரங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இலங்கையில் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களின் பட்டியலில் இருந்து குரங்கினங்கள் நீக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொல்வதுகூட இப்போது சட்டப்படி குற்றமில்லை.

இலங்கையில் 30 லட்சம் வரையிலான குரங்குகள் உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார். மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் தோராயமாக எட்டு மனிதர்களுக்கு ஒரு குரங்கு எனும் கணக்கில் உள்ளது.

இந்தப் பின்னணியில்தான் இலங்கையிலிருந்து சீனாவுக்கு ஒரு லட்சம் குரங்குகளை வழங்குவதற்கான பேச்சுவார்த்தையொன்று அரசாங்க மட்டத்தில் நடந்துள்ளது. சீனாவிலுள்ள மிருகக் காட்சிசாலைகளில் இந்தக் குரங்குகள் வைக்கப்படுமெனக் கூறப்படுகிறது.

ஆயினும், இறைச்சிக்காகவே இலங்கையிலிருந்து குரங்குகள் சீனாவுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாக, சமூக ஊடகங்களில் சந்தேகம் வெளியிடப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், இதை அமைச்சர் மஹிந்த அமரவீர மறுத்துள்ளார்.

இந்த நிலையில் குரங்கு இறைச்சியை உண்ணும் - சீனர்களின் பழக்கம் குறித்து, ஆச்சரியத்தோடும் அருவருப்போடும் சமூக ஊடகங்களில் கணிசமானோர் பதிவுகளை இடுகின்றனர்.

தொங்கு மான்

ஆனால், குரங்கு இறைச்சி உண்பவர்கள் இலங்கையிலும் உள்ளனர் என்கிறார் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட உயிரியல் பிரிவு தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எம். றியாஸ் அஹமட்.

'சில நோய்களுக்கு நிவாரணியாக இருக்கும்' என்கிற நம்பிக்கையில் குரங்கு இறைச்சியை புசிப்பவர்களும் உள்ளனர்.

'தொங்கு மான்' எனும் பெயரில் - இவர்கள் குரங்கு இறைச்சியை சாப்பிடுவதாக றியாஸ் அஹமட் கூறுகின்றார்.

"குரங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாடி, அதன் இறைச்சியை ஆடு மற்றும் மாடு போன்றவற்றின் இறைச்சிகளுடன் கலந்து, மோசடியாக சிலர் விற்பனை செய்வதும் உண்டு," என்று வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகப் பொறுப்பாளர் ஏ.ஏ. ஹலீம் பிபிசி தமிழிடம் கூறினார்.

"குரங்குகளைப் பிடித்தல், அடைத்து வைத்தல், கொல்லுதல் போன்ற செயற்பாடுகள் வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றமாக இருந்தது.

ஆனால் இப்போது பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் இருந்து குரங்கினங்கள் நீக்கப்பட்டுள்ளமையால், குரங்கு வதைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது சாத்தியமில்லை" என ஹலீம் குறிப்பிடுகின்றார்.

ஆயினும் காட்டுயிர் சரணாலயங்களுக்குள் நுழைந்து அங்கிருக்கும் குரங்கு உள்ளிட்ட எந்தவோர் உயிரினம் அல்லது பறவைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட முடியாது எனவும் அவர் விவரித்தார்.

இலங்கையில் வாழ்விடம் அற்றுப்போன தொங்குமான்
 
படக்குறிப்பு,

ஏ.ஏ. ஹலீம்

சூழல் சமநிலையில் குழப்பம் ஏற்படும் என அச்சம்

இலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்தமை பிரச்னையா அல்லது குரங்குகள் விவசாயத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றமை பிரச்னையா என்பது தொடர்பில் தெளிவு பெற வேண்டியுள்ளது என்கிறார் சிரேஷ்ட விரிவுரையாளர் றியாஸ் அஹமட்.

குரங்குகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டமையினாலேயே, அவை மனித குடியிருப்புகளுக்குள் வருவதாகவும் விவசாயத்துக்கு நாசம் ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

யுத்தத்திற்குப் பின்னர் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டு, குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றமை காரணமாக, ஏராளமான விலங்குகள் தமது வாழ்விடங்களை இழந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சீனாவுக்கு வழங்கும் பொருட்டு பெருந்தொகையான குரங்குகளை இலங்கையிலிருந்து அப்புறப்படுத்தும்போது, இங்குள்ள சூழல் சமநிலையில் குழப்பம் ஏற்படும் என்றும் அவர் கூறுகின்றார்.

"காடுகள் உருவாவதற்கு குரங்குகள் பாரிய பங்களிப்பை வழங்குகின்றன. குரங்குகள் உண்ணும் பழங்களின் விதைகள், அவற்றின் மலம் மூலம் பரவி முளைத்து மரங்களாக வளர்கின்றன. காடுகள் அதிகரிக்கும் போதுதான் மழை வீழ்ச்சியும் தாராளமாகக் கிடைக்கும்” என்று கூறுகிறார் விரிவுரையாளர் றியாஸ் அஹமட்.

மேலும், "பெரும் எண்ணிக்கையில் குரங்குகள் அப்புறப்படுத்தப்படும் போது, காடுகளின் உருவாக்கம் குறைந்து, மழை வீழ்ச்சியில் பாதிப்பு ஏற்படும். குரங்குளின் மலம் மற்றும் எச்சங்கள் இல்லாமல் போகும்போது மண் வளமும் குறையும்,” என்கிறார்.

அதுமட்டுமின்றி மகரந்தச் சேர்க்கை ஏற்படுவதற்கும், குரங்குகளின் நடமாட்டம் பெருமளவில் பங்களிப்பை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

"குரங்குகளை வேட்டையாடும் விலங்குகள் சூழலில் குறைவடைந்தமை, குரங்குகளின் பெருக்கத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது" என, அவர் குறிப்பிட்டார்.

"நரி, ஓநாய், சிறிய சிறுத்தை போன்றவை குரங்குகளை வேட்டையாடும். ஆனால், அவற்றின் எண்ணிக்கைகளும் குரங்குகள் வாழும் சூழலியல் பகுதிகளில் குறைந்து விட்டன. இதுவும் குரங்குகளின் பெருக்கத்துக்கு ஒரு வகையில் காரணமாக அமைந்து விட்டது,” என அவர் விவரித்தார்.

இலங்கையில் வாழ்விடம் அற்றுப்போன தொங்குமான்
 
படக்குறிப்பு,

சிரேஷ்ட விரிவுரையாளர் றியாஸ் அஹமட்

குரங்குகள் அழிந்தால் மரங்களும் அழியும்

”ஓர் உயிரினத்தை, அது வாழும் சூழலில் இருந்து, பெரும் எண்ணிக்கையில் அப்புறப்படுத்துவதற்கு முன்னர், அதனால் என்ன வகையான பாதிப்புகளெல்லாம் ஏற்படும் என்பதை விஞ்ஞானபூர்வமாக ஆராய வேண்டும். அதன் பின்னரே தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

ஆனால், நமது அமைச்சர்கள் இவை தொடர்பான அறிவுடையவர்களாக இருக்கின்றனரா என்கிற கேள்விகள் உள்ளன,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

"குரங்குகளால் விவசாயத்துக்குப் பாதிப்பு ஏற்படுமாயின், அதைத் தடுக்கும் நடவடிக்கைகளைத்தான் மேற்கொள்ள வேண்டும். பிரதானமாக, குரங்குகளின் வாழ்விடங்களான காடுகளை மீளுருவாக்கம் செய்ய வேண்டும்,” என்று, அவர் ஆலோசனை வழங்கினார்.

”குரங்குகளுக்கு கருத்தடை செய்வதன் மூலம், அவற்றின் அதிகரித்த இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்" என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், 'உலகில் குரங்குகள் அழியும்போது, மரங்களும் அழிந்துபோகும்' என்கிற விஞ்ஞானிகளின் கூற்றை, விரிவுரையாளர் றியாஸ் அஹமட் பிபிசி தமிழிடம் நினைவுபடுத்தினார்.

https://www.bbc.com/tamil/articles/c6pqy5rjjv8o

  • கருத்துக்கள உறவுகள்

மயில்களையும் கூட ஏற்றுமதி செய்ய வேண்டும்: ரங்கே பண்டார

சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் யோசனை குறித்து கருத்து தெரிவித்த ஐ.தே.க பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, முடிந்தால் குரங்குகளை மட்டுமல்ல மயில்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

புத்தாண்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் குரங்குகள் பயிர்களை நாசம் செய்வது மட்டுமன்றி மயில்களும் பயிர்களுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்துகின்றன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட குரங்குகளை ஏற்றுமதி செய்வதை எதிர்ப்பவர்கள் வனாதவில்லுவை, ஆனமடுவ, அனுராதபுரம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று தோட்டங்களுக்கு இந்த குரங்குகள் மற்றும் மயில்களால் ஏற்படும் சேதங்களையும் விவசாய சமூகம் அனுபவிக்கும் இழப்பையும் காண வேண்டும்,” என்று அவர் கூறினார்.

https://thinakkural.lk/article/249296

 

👍

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

”அங்கிருந்த மரம் ஒன்றின் இலைக்கு - குரங்கு வெற்றிலை' என்று பெயர். ஓரிரு அடிகள் உயரத்துக்கு அந்த மரம் வளரும், அதன் இலைகள் 'பொட்டு'கள் போன்று வட்டமாக இருக்கும்.

அந்த இலைகளையும் குரும்பட்டியையும் (தேங்காயின் பிஞ்சு) சேர்த்து குரங்குகள் உண்ணும். அதன்போது வெற்றிலை சாப்பிட்டால், வாய் சிவப்பதைப் போல், குரங்குகளின் வாய் சிவக்கும். அதைப் பார்த்து நாங்களும் குரும்பட்டியுடன் 'குரங்கு வெற்றிலை'யை சாப்பிட்டுப் பார்ப்போம், வாய் முழுக்கச் சிவந்து விடும்" என்கிறார் ஜலால்.

 

ஊரில் பாக்கு மரமென அழைப்போம், இலைகளுடன் பனங்குருத்தோலையை சேர்ந்து சாப்பிடுவது வழக்கம் சிறுவயதில், நன்றாக சிவக்கும், பழங்களும் சுவையானவை 

11 hours ago, ஏராளன் said:

”ஓர் உயிரினத்தை, அது வாழும் சூழலில் இருந்து, பெரும் எண்ணிக்கையில் அப்புறப்படுத்துவதற்கு முன்னர், அதனால் என்ன வகையான பாதிப்புகளெல்லாம் ஏற்படும் என்பதை விஞ்ஞானபூர்வமாக ஆராய வேண்டும். அதன் பின்னரே தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

ஆனால், நமது அமைச்சர்கள் இவை தொடர்பான அறிவுடையவர்களாக இருக்கின்றனரா என்கிற கேள்விகள் உள்ளன,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

"குரங்குகளால் விவசாயத்துக்குப் பாதிப்பு ஏற்படுமாயின், அதைத் தடுக்கும் நடவடிக்கைகளைத்தான் மேற்கொள்ள வேண்டும். பிரதானமாக, குரங்குகளின் வாழ்விடங்களான காடுகளை மீளுருவாக்கம் செய்ய வேண்டும்,” என்று, அவர் ஆலோசனை வழங்கினார்.

 

இங்கு கங்காருகள் பெருகினால் சுட்டுத்தள்ளிவிடுவார்கள், பார்க்க பாவமாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவையடுத்து இலங்கைக் குரங்குகளைக் கோரும் அமெரிக்கா!

Published By: T. SARANYA

17 APR, 2023 | 11:20 AM
image

இலங்கையில் இருந்து குரங்குகளை பெற சீனா தயாராகி வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து, குரங்குகளைப் பெற அமெரிக்காவும் விண்ணப்பித்துள்ளது.

எவ்வாறாயினும், அமெரிக்காவுக்கு தேவையான குரங்குகளின் எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

சீனாவுக்கு 100,000 குரங்குகளை வழங்குவதற்கான வழிமுறைகளை தயாரிப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/152978

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

சீனாவையடுத்து இலங்கைக் குரங்குகளைக் கோரும் அமெரிக்கா!

Published By: T. SARANYA

17 APR, 2023 | 11:20 AM
image

இலங்கையில் இருந்து குரங்குகளை பெற சீனா தயாராகி வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து, குரங்குகளைப் பெற அமெரிக்காவும் விண்ணப்பித்துள்ளது.

எவ்வாறாயினும், அமெரிக்காவுக்கு தேவையான குரங்குகளின் எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

சீனாவுக்கு 100,000 குரங்குகளை வழங்குவதற்கான வழிமுறைகளை தயாரிப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/152978

அமெரிக்காவுக்கும்… சிலோன் குரங்கு மட்டும்தான் வேணுமாம். 😁
சீனா… என்ன செய்தாலும், 🤪
அமெரிக்கா… தானும் அதையே செய்ய வேணும் என்று அடம் பிடிக்குது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

குரங்குகளை சீனாவிற்கு அனுப்பும் திட்டத்திற்கு மாவட்ட விவசாயிகள் அமைப்புகள் ஆதரவு

பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் குரங்குகளின் தொல்லையை குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு அனைத்து மாவட்ட விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் விவசாய அமைச்சிற்கு தங்களது மேலான ஆதரவை தெரிவித்துள்ளனர்.

சீனாவின் உயிரியல் பூங்காக்களுக்கு 100,000 குரங்குகளை வழங்குவதற்கான கோரிக்கையை சில சுற்றுச்சூழல் அமைப்புகளும் பல்வேறு நபர்களும் விமர்சித்திருந்தாலும் எந்தவொரு நபரும் அல்லது அமைப்பும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கவில்லை என விவசாய அமைப்புகள் தெரிவிக்கின்றன.

monkey.jpg

” குரங்குகள் மற்றும் பிற விலங்குகளால் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் சேதம் மிகப்பெரியது” என குறித்த அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், கால்நடைகள் நலனுக்காக செயற்படும் அமைப்பு ஒன்று விவசாய அமைச்சிடம் விடுத்துள்ள கோரிக்கையில், ஒவ்வொரு விவசாயியும் தனது பயிரிடப்பட்ட நிலத்தில் அரை ஏக்கர் நிலத்தை கால்நடை தீவனத்திற்காக ஒதுக்கினால், கால்நடைகளின் சேதத்தை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குரங்குகளை தங்கள் விலங்கியல் பூங்காவிற்கு வழங்குமாறு சீனா கோரிக்கை விடுத்த போதிலும், விவசாய அமைச்சிற்கு இது தொடர்பில் எந்த அதிகாரமும் இல்லை. எனவே, அமைச்சரவை தீர்மானத்தின் பின்னர் வனஜீவராசிகள் திணைக்களம், தேசிய விலங்கியல் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், விவசாய அமைச்சு மற்றும் விவசாய திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாயம், வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு ஆகிய அனைத்து அமைச்சுக்களும் ஒரே அமைச்சாக இருந்தபோது இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.

இதேவேளை, பாதுகாப்பான முறையில் குரங்குகளை பிடிப்பதற்கு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கக்கூடிய விசேட கூண்டு ஒன்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.குரங்குகளை பிடிக்கும் நபர்களுக்கு விசேட பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

https://thinakkural.lk/article/249348

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'எமக்கு செலுத்த வேண்டிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இன்னும் மாதங்களில் செலுத்துங்கள் பங்களாதேஷ் mt MIF 佛 பணமெல்லாம் தர முடியாது வேணும்னா நீயும் 2 லட்சம் குரங்க எடுத்திட்டு போ'

காசு தர முடியாது. 🐵 குரங்கு 🐒 வேணும் என்றால் தாறம்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

சீனாவையடுத்து இலங்கைக் குரங்குகளைக் கோரும் அமெரிக்கா!

 

May be an image of 4 people and text that says 'இலங்கை குரங்குகளை பெற்றுக்கொள்ள அமெரிக்காவும் விண்ணப்பித்தது News MAMVMTN ANN lankans ans மவக்் குரங்குக்கு இப்படி டிமான்டா இருக்கும்னு தெரியாம போச்சேடா!! இனி பிஸ்னஸ்ஸ ஆரம்பிச்சிட வேண்டியதுதான்'

இலங்கை குரங்குகளின் இனப் பெருக்கத்தை அதிகரிக்க...
சின்ன வெங்காயமும், முருங்கக் காயும் கொடுப்பதாக... வச
(த)ந்தி. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலிருந்து குரங்குகள் சீன ஆய்வுகூடங்களிற்கே கொண்டுசெல்லப்படும் - சுற்றாடல் குறித்த அமைப்பு

Published By: RAJEEBAN

17 APR, 2023 | 04:07 PM
image

இலங்கையிலிருந்து அனுப்பப்படும் குரங்குகள் சீனாவின் ஆய்வகங்களிற்கே அனுப்பப்படலாம் என  இலங்கையை சேர்ந்த சுற்றாடல் நீதி அமைப்பின் தலைவர் ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து அனுப்பப்படும் குரங்குகளை சோதனைக்கும் அழகுசாதனப்பொருட்களை சோதனை செய்வதற்கும் மருத்துவபரிசோதனைகளிற்கும் சீனா பயன்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

மிருகக்காட்சி சாலைகளிற்கான சர்வதேச வரைவிலக்கணங்களின் படி சீனாவில் 18 மிருகக்காட்சிசாலைகளே உள்ளன என தெரிவித்துள்ளஅவர் ஒரு மிருககாட்சி சாலைக்கு 5000 குரங்குகள் என கணக்கிட்டாலும் சீனா தெரிவிப்பது நம்பக்கூடிய விடயமாக இல்லை என தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் ஒருஇலட்சம் குரங்குகளை சீனாவிற்கு அனுப்பினாலும் இலங்கையி;ல் குரங்குகளின் எண்ணிக்கை குறையப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வகை குரங்குகளை தலதா மாளிகை அனுராதபுர மிகிந்தல போன்ற ஆலயங்கள் உள்ள பகுதிகளில் இருந்தே பிடிக்கவேண்டும் இந்த வகை குரங்குகளிற்கு மனிதர்கள் போல அந்த பகுதிகளில் வாழ்வதற்கான உரிமையுள்ளது எனவும் ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.

இந்த வழிபாட்டுத்தலங்கள் உள்ள பகுதிகளில் இருந்து குரங்குகளை சீன ஆய்வுகூடங்களிற்கு அனுப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் இந்த முடிவை கைவிடுவார் என கருதுகின்றோம்,அமைச்சரால் தான் நினைத்தபடி விலங்குகளை வேறு நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய முடியாது,ஆனால் வனவிலங்கு திணைக்களத்தின் பணிப்பாளர் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இல்லாவிட்டால் நாங்கள் நீதிமன்றம் செல்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/153042

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and slow loris

 

May be an image of 3 people

May be an image of 3 people

No photo description available.

May be an image of 6 people

No photo description available.

May be an image of 1 person

animiertes-affen-bild-0082.gifநாங்கள்🐒, பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் எடுத்த 🐵 குரூப் போட்டோ. 🤣

 

 

May be an image of 2 people

animiertes-affen-bild-0082.gif சீனா விமான நிலையத்தில் எங்களை கூ ப்பிட வந்த....  புது எசமான். 🤣

 

May be an image of 1 person

animiertes-affen-bild-0082.gif  சீனா எங்கும், இப்பிடி ஒரு விலங்கை 🐵 "கிறில்" பண்ணி சாப்பிடுகிறார்கள்.
அது என்ன🐒 விலங்கு என்று எமக்கு, சொல்கிறார்களில்லை.  🤣

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.