Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பண்ணை சுற்றுவட்ட பகுதியிலுள்ள நாகபூசணி அம்மன் சிலை அகற்றப்படுமென ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

16 APR, 2023 | 10:12 AM
image

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசணி அம்மனை குறிக்கும் நாகபூசணி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு பொலிஸார் தீவிரம் காட்டியுள்ளனர்.

20230416_090209.jpg

நீதிமன்றின் கட்டளை என யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் ஒப்பமிடப்பட்ட அறிவித்தல் உருவச்சிலைக்கு அருகாமையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

20230416_085853.jpg

யாழ்ப்பாணம் நீதிமன்ற வழக்கு இலக்கம் குறிப்பிட்டு பொலிஸாரின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

15 ஆம் திகதி யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் பரிசோதகரினால் யாழ்.பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் ஊர்காவற்றுறை வீதியில் எவ்வித அனுமதியுமின்றி சட்டத்திற்கு புறம்பாக இனந்தெரியாத நபர்கள் மூலம் பார்வதி அம்மன் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக எதிர்காலத்தில் போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் இன, மத, சமூக உடன்பாடுகளுக்கு விளைவுகள் ஏற்படும் நிலை உருவாகி சமாதான சீர்குலைவு ஏற்பட வாய்ப்புள்ளதென அறிக்கை செய்து அந்தச் சிலையினை அகற்றுவதற்கு வீதி அபிவிருத்தி சபையின் அதிகாரிக்கு கட்டளையொன்றை பிறப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

எனவே இந்தச் சிலையினை உரிய அனுமதிபெற்று அமைத்து இருப்பின் அவ் அனுமதியுடன் அல்லது உருவாக்கிய நபர்கள் யாரேனும் இருந்தால் அல்லது இந்தச் சிலையினை உரிமை கோரும் யாராவது இருந்தால் 18.04.2023ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு சமூகமளித்து உரிமை கோருமாறும் மன்று கட்டளையிடுவதுடன் இதன் உரிமை கோருவதற்கு தவறும் பட்சத்தில் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் இந்தச் சிலை அகற்றப்படும் என இத்தால் அறியத்தருகின்றேன் என்றுள்ளது.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தை பிரதிபலிக்கும் வகையில் யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் திருவுருவச் சிலைக்கு தமிழ் புதுவருடப் பிறப்பன்று உருத்திர சேனா அமைப்பினால் பால் அபிசேகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் உருத்திர சேனா அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு 3 மணிநேரம் தீவிர விசாரைணக்கு உள்படுத்தப்பட்டனர்.

உருவச் சிலையை அமைத்தவர்கள் தொடர்பில் தமக்கு தகவல் தெரியாது என்றும் தாம் பால் அபிசேகம் செய்ததாகவும் உருத்திர சேனா அமைப்பினர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/152911

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பகுதியில் தினமும் எழும் புத்தர் சிலைகள் எல்லாம்,
நீதிமன்ற அனுமதியை பெற்றா அமைக்கின்றார்கள்.

குருந்தூர் மலலையில்… நீதி மன்றம் விகாரை அமைக்கப் படாது என்று அறிவித்த பின்பும்..
பிரமாண்ட விகாரை கட்டியுள்ளார்களே… அதற்கு இந்தப் பொலிசார் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.

 அவர்களே அடாவடியாக புத்தரை எல்லா இடமும் வைப்பார்களாம்,
தமிழன் செய்தால்… சட்டம், மண்ணாங்கட்டி… அது,இது என்று வந்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாகபூசனி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்ற பொலிஸார் தீவிர முனைப்பு !!

நாகபூசனி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்ற பொலிஸார் தீவிர முனைப்பு !!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசனி அம்மனை குறிக்கும் நாகபூசனி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு பொலிஸார் தீவிரம் காட்டியுள்ளனர்.

நயினாதீவு விகாராதிபதியின் தலையீட்டினாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசனி அம்மன் திருவுருவச் சிலைக்கு தமிழ் புதுவருடப் பிறப்பில் பால் அபிசேகம் உருத்திர சேனா அமைப்பினால் செய்யப்பட்டது.

இந்த நிலையில் உருத்திர சேனா அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு 3 மணிநேரம் தீவிர விசாரைணக்கு உள்படுத்தப்பட்டனர்.

உருவச் சிலையை அமைத்தவர்கள் தொடர்பில் தமக்கு தகவல் தெரியாது என்றும் தாம் பால் அபிசேகம் செய்ததாகவும் உருத்திர சேனா அமைப்பினர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

எந்தவொரு அனுமதியுமின்றி அமைக்கப்பட்ட நாகபூசனி அம்மனின் சிலையை அகற்ற தீவிர நடவடிக்கையில் யாழ்ப்பாணம் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, குறிகாட்டுவான் இறங்குதுறையில் வைக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்த அரச மரத்தை கடற்படையினர் திறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1330184

  • கருத்துக்கள உறவுகள்

பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட நாகபூசணி அம்மனின் சிலையை பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ்

பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட நாகபூசணி அம்மனின் சிலையை பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட நயினாதீவு நாகபூசணி அம்மனின் சிலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.

பண்ணை பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று விட்டே குறித்த சிலையை அமைச்சர் பார்வையிட்டார்.

நாகபூசணி அம்மனின் சிலை வியாழக்கிழமை இரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், அம்மனின் சிலைக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை உருத்திரசேனை அமைப்பால் அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், ஏனைய மதங்களை பாதிக்காத வகையில் ஒவ்வொருவருடைய மத உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

https://athavannews.com/2023/1330181

  • கருத்துக்கள உறவுகள்

அம்மன் சிலையை அகற்றுவதாக இருந்தால்தமிழர் பிரதேசங்களில்  அத்து மீறி கட்டப்பட்ட விகாரைகள் ,புத்தர் சிலைகள் அற்றப்பட வேண்டும்.சுற்று வட்டத்திற்குள் உள்ள சிலை எவ்வாறு போக்குவரத்துக்கு இடையூறாக அமையும்.தனித்தமிழ் பிரதேசத்தில் அமைக்கப்ப்ட சிலை எவ்வாறு இன மத  ஒற்றுமையைச் சீர் குலைக்கும்.?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

தமிழர் பகுதியில் தினமும் எழும் புத்தர் சிலைகள் எல்லாம்,
நீதிமன்ற அனுமதியை பெற்றா அமைக்கின்றார்கள்.

குருந்தூர் மலலையில்… நீதி மன்றம் விகாரை அமைக்கப் படாது என்று அறிவித்த பின்பும்..
பிரமாண்ட விகாரை கட்டியுள்ளார்களே… அதற்கு இந்தப் பொலிசார் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.

 அவர்களே அடாவடியாக புத்தரை எல்லா இடமும் வைப்பார்களாம்,
தமிழன் செய்தால்… சட்டம், மண்ணாங்கட்டி… அது,இது என்று வந்து விடுவார்கள்.

இதையே தான் நானும் சொல்லவந்தேன். தமிழர் தங்கள் பூர்வீக நிலத்தில் தங்கள் கடவுள்களை வைத்து வணங்கினால் இன மத நல்லிணக்கம் கெடுமென்றால் அவர்களின் நிலத்தில் அவர்களுக்கு அறிமுகமில்லாத வழக்கத்தில் வணக்கத்திலில்லாத கடவுள்களை அவர்களின் கடவுள்களை அகற்றிவிட்டு தங்கள் கடவுளை செருகுவதால் இன மத நல்லிணக்கம் கெடாதா? இவர்கள் இந்தச்சிலையை வைத்ததால் இன மத நல்லிணக்கம் கெட்டுவிட்டது என யாராவது முறையிட்டார்களா? இவர்கள் ஏன் குமுறுகிறார்கள்? நாளைக்கு பாருங்கள் இதே இடத்தில புத்தர் தோன்றுவார், அவர் தன்னை அங்கே வைத்து வழிபடச்சொன்னார் என்று கதை விடுவார்கள். எனக்கென்னவோ இந்தச் சிலை வைப்புகள் உடைப்புகள் எல்லாம் சிங்களத்தின் ஏவலாளர்கள் தங்களை அரசியலில் முன்னிலைப்படுத்துவதற்காக செய்யும் அல்லது அவர்களின் ஆசீர்வாதத்தோடு அரங்கேறும் கைங்கரியம்போல்த் தோன்றுகிறது.  

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நீதிமன்ற நீதிவான்.. இந்தக் கட்டளையில் உள்ள எழுத்துப்பிழைகளையாவது திருத்தச் சொல்வாரா..??! எத்தனையோ.. அரச மரங்களும் புத்தர் சிலைகளும.. விகாரைகளும்... அனுமதி இன்றி அடாத்தாக எழும் போது கண்மூடித்தூங்கும் நீதி மான் கள்.. இதில் மட்டும் தங்கள் வித்துவத்தைக் காண்பிப்பது என்ன எஜமான விசுவாசமா..??!

அதுசரி.. கடற்தொழில் அமைச்சரும் நாகபூசணி அம்மன் பக்தரோ...பெளத்தர்களே இல்லாத இடங்களில் புத்தர் எழுந்த போது மற்ற மதங்களின் மனங்களின் நோவு தெரியாமல் கிடந்தவர்.. எந்தப் பிரச்சனைக்கும் முன்னுக்கு வராதவர்.. இதில் மட்டும்.. மத சமத்துவம் பேசிக்கிட்டு வருவதேனோ..??!

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா அந்த உருத்திர சேனா அமைப்பு? 

இதுவரை கேள்விப்படாத புது அமைப்பாக இருக்கிறது. சிவசேனா அமைப்பிற்குப் போட்டி அமைப்பா அல்லது சிவசேனை அமைப்பின் இன்னொரு கிளை அமைப்பா? 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people

இதேவேளை, குறிகாட்டுவான் இறங்குதுறையில் வைக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்த 
அரச மரத்தை கடற்படையினர் திறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போ... புத்தர் அங்கு வரப் போறார். 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 3 people

இதேவேளை, குறிகாட்டுவான் இறங்குதுறையில் வைக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்த 
அரச மரத்தை கடற்படையினர் திறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போ... புத்தர் அங்கு வரப் போறார். 

சொறீலங்கா முப்படைகளில் மோசமான சிங்கள பெளத்த பேரின ஆக்கிரமிப்பு பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதில் சொறீலங்கா கடற்படை மிக மோசமானது. அதுதான் கடற்புலிகள் துரத்தி அடித்தார்கள் போலும். இங்கு மட்டுமல்ல.. புங்குடுதீவு நுழைவாயிலில் பெரிய கடற்படை முகாம் காவல்கோபுரங்கள் எல்லாம் அமைக்கப்பட்டிருப்பதோடு.. பெரிய புத்த விகாரையும் அமைக்கப்பட்டு.. ஏதோ நயினாதீவுக்கு செல்லும் இடமெல்லாம் பெளத்தமயமான காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. அதன் நீட்சியாகத்தான்.. பண்ணை சுற்றுவட்டத்தில் அம்மன் இருப்பு பார்க்கப்படுகிறது. ஏனெனில்.. நயினாதீவுக்கு வரும் சிங்களவர்களின் தரிப்பிடங்களில் பண்ணை சுற்றுவட்டமும் கோட்டைப் பிரதேசமும் முக்கியம் வகிக்கிறது. அங்கு கடற்படை முகாம்.. அதிரடிப்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளதோடு.. இராணுவம் தினமும் குப்பைகளை அள்ளி துப்பரவு செய்யும் பணிக்கும் அமர்த்தப்பட்டுள்ளது.

ஏனோ தெரியவில்லை.. குருநாகலில்.. அம்மனை வழிபடும்.. சிங்களவர்கள்.. யாழ்ப்பாணத்தில் அம்மனை தூக்கி வீசுகிறார்கள். அவங்களுக்கே அவங்க செய்வதின் தார்ப்பரியம் புரிவதில்லை.

இதில் எல்லாம் முக்கிய பங்களிப்பது ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள முப்படைகளும்.. பொலிஸூம் தான். இவர்கள் தான் பெளத்த பிக்குகளினதும்.. பெளத்த சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசியல்வாதிகளினதும்.. செயற்பாட்டு ஏஜென்டுகள். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

யாரப்பா அந்த உருத்திர சேனா அமைப்பு? 

இதுவரை கேள்விப்படாத புது அமைப்பாக இருக்கிறது. சிவசேனா அமைப்பிற்குப் போட்டி அமைப்பா அல்லது சிவசேனை அமைப்பின் இன்னொரு கிளை அமைப்பா? 

சிவசேனையைப் போல உருத்திரசேனையும் அண்மை மாதங்களாகத் துடிப்பாகச் செயல்பட்டு வருகிறது.                                                                                                                    - அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்.-

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சைவர்களை அடக்காதீர்; மரபுகளைச் சிதைக்காதீர்: மறவன்புலவு சச்சிதானந்தம்!

Screenshot-2023-04-16-at-12.17.41-PM.png

“வட மாகாண சபையின் உள்ளூராட்சியர், நடுவண் அரசின் நெடுஞ்சாலை ஆட்சியர், பொலிஸார் மூவரும் இணைகின்றாராம். நீதி மன்றத்தை நாடி பண்ணையில் அருள்மிகு நாக பூசணி அம்மன் திருவுருவச் சிலையை அகற்றுவார்களாம்” எனக் கூறியதாக மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (15.04.2023) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  என்ன துணிச்சல்? நாகர்களின் நாடு. தமிழ்க் காப்பியம் மணிமேகலை கூறும் நாக நாடு இது. நாகங்களை வழிபடும் நாடு இது.

நாகத்தை இலிங்கமாகப் பார்த்தால் நாகலிங்கம், அம்மனாகப் பார்த்தால் நாகபூசணி நாகம்மாள், மரமாகப் பார்த்தால் நாகலிங்கப் பூ மரம், வீட்டுக்கு வீடு, கோயிலுக்குக் கோயில் நாக தம்பிரான் வழிபாடு.

சங்கப் புலவர்களுள் ஈழத்தின் நாகநாட்டாரை நாகனார் என்பர். 15-20 சங்கப் புலவர் பெயர்கள் நாகனார் என்றாகும். யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்த அருள்மிகு நாகபூசணித் திருவுருவம் வரலாற்றுச் சிறப்புடையது. மகாவம்சம் கூறும் மகோதரனும் குலோதரனும் அவன் முன்னோரும் வழிபட்டது.

அத்திருவுருவத்தை முதலில் அழித்தவர் போர்த்துக்கேயக் கத்தோலிக்கர். ஒல்லாந்தர் காலத்திலும் அருள்மிகு நாகபூசணித் திருவுருவத்தை மீளவைக்கவில்லை. ஆங்கிலேயர் காலத்தில் பண்ணையில் அருள்மிகு நாகபூசணித் திருவுருவத்தை மீளமைத்தனர். மகாவமிசம் கூறும் நாக மன்னர்களான மகோதரனும் குலோதரனும் முன்னோரும் வழிபட்ட திருவுருவத்தையே மீளமைத்தனர். 

பண்ணைப் பாலம் கட்ட முன்பு, படகில் மண்டை தீவு, வேலணை, புங்குடு தீவு, நயினா தீவு செல்வோர் பண்ணைக் கடலைக் கடந்தனர். அருள்மிகு நாகபூசணி திருவுருவத்தை வணங்கியே வழிபட்டே படகுகளில் ஏறினர். அங்கிருந்து படகுகளில் வந்து கரையிறங்கி யாழ்ப்பாணம் செல்வோரும் வணங்கி வழிபட்டு மாநகர் புக்கனர். பழைமை வாய்ந்தது. புத்தர் வருமுன்பே நாகர்களின் வழிபடும் திருவுருவமானது. அண்மைய 30 ஆண்டுப் போர்க்காலத்தில் சிதறிச் சின்னா பின்னமாகியது. மீளவைத்தவர் நாகர்களின் தோன்றலரான நம்பிக்கையாளர்.

என்ன துணிச்சல் ஆட்சியாளருக்கு? அகற்றுவார்களாம். வரலாற்றை அழிப்பார்களாம். நாக மரபை நம்பிக்கை ஒளியை அருள் பெருக்கத்தை அழிப்பார்களாம். 300 சைவக் குடும்பங்கள். வழிபாட்டிடம் அருள்மிகு பிள்ளையார் கோயில். அந்த வளாகத்துள் அரச அமைச்சர் ஆதரவுடன் மதவெறியர் புத்தப் பள்ளியும் பல்சாலையும் கட்டினர்.

புத்த சமயத்தவர் ஒருவரும் வாழாத கொக்கிளாயில் நிகழ்ந்த இந்த அத்துமீறலை, அடாவடித்தனத்தை அட்டூழியத்தை அகற்ற முதுகெலும்பில்லாத அரச இயந்திரம், நாகர்களான சைவர்களின் பல்லாயிரமாண்டுப் பண்ணைப் பராம்பரியத் திருவுருவத்தை அகற்ற நீதிமன்றத்தை நாடுவராம்.

சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அரச நிலம். அங்கே மதவெறியரின் வேளாங்கண்ணிக் கத்தோலிக்கத் தேவாலயம். பிரதேசச் செயலகத்தின் நிலம். அகற்றினார்களா அரசினர்? பிரதேச சபை உரிமம் அற்ற கட்டடம். அகற்றினார்களா உள்ளூராட்சியினர்? மன்னார் – முசலி நெடுஞ்சாலை ஓரக் கட்டடம். அகற்றினரா நெடுஞ்சாலையினர்? வழக்காவது தொடுத்தார்களா?

சைவக் குடும்பங்களும் செறிந்த சிலாவத்துறையில் நிகழ்ந்த இந்த அத்துமீறலை, அடாவடித்தனத்தை அட்டூழியத்தை அகற்ற முதுகெலும்பில்லாத அரச எந்திரம், நாகர்களான சைவர்களின் பல்லாயிரமாண்டுப் பண்ணைப் பராம்பரியத் திருவுருவத்தை அகற்ற நீதிமன்றத்தை நாடுவராம்.

பரந்தன் ஏ9 நெடுஞ்சாலை ஓரம். நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் தலைமை தாங்கிய மெதடிசுத்த தேவாலயம். முன்னே அரசு நிலத்தில், பிரதேசச் செயலக உரிமமின்றி, பிரதேச சபை உரிமம் இன்றி நெடுஞ்சாலைக் காணியில் ஒன்பது அடி உயரச் சிலுவை.

கண்ணுள் குற்றவில்லையா? கண்கள் பிடரியிலா? சைவக் குடும்பங்களும் செறிந்த பரந்தனில் நிகழ்ந்த இந்த அத்துமீறலை, அடாவடித்தனத்தை அட்டூழியத்தை அகற்ற முதுகெலும்பில்லாத அரச எந்திரம், நாகர்களான சைவர்களின் பல்லாயிரமாண்டுப் பண்ணைப் பராம்பரியத் திருவுருவத்தை அகற்ற நீதிமன்றத்தை நாடுவராம்.

மட்டக்களப்பு அருகே ஒட்டமாவடி. பல்லாயிரமாண்டு வரலாற்றுக் கொற்றவைக் கோயில். தமிழரின் ஐவகை நிலத்துள் பாலை நிலத் தெய்வப் பெருமாட்டி. அருள்மிகு காளியாத்தாள் திருக்கோயில். அமைச்சர் பதவியைப் பயன்படுத்தினேன். தொல்லியல் சின்னத்தை அகற்றினேன். அருள்மிகு காளியாத்தாள் கோயிலை இடித்தேன், அழித்தேன். அந்த நிலத்தை மசூதிக்கு வழங்கினேன். அங்கே மசூதியார் கட்டடம் அமைத்தனர். சொன்னவர் மதவெறிப் புல்லர் இசுபுல்லர்.

சைவக் குடும்பங்களும் செறிந்த ஒட்டமாவடியில் நிகழ்ந்த இந்த அத்துமீறலை, அடாவடித்தனத்தை அட்டூழியத்தை அகற்ற முதுகெலும்பில்லாத அரச எந்திரம், நாகர்களான சைவர்களின் பல்லாயிரமாண்டுப் பண்ணைப் பராம்பரீயத் திருவுருவத்தை அகற்ற நீதிமன்றத்தை நாடுவராம்.

நான் பட்டியலிட்டவை அண்மைய 30 ஆண்டுப் போருக்குப் பிந்தைய நிகழ்வுகள். இவை எடுத்துக் காட்டுகள். இவை ஒத்த எண்ணிக்கையுள் அடங்கா அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள். அட்டூழியங்கள்.

இவை யாவும் சைவ மரபை அகற்றும் அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள். அட்டூழியங்கள். புத்தர், கிறித்தவர், முகமதியர் யாவரும் சைவ மரபுகளை அழிக்கக் குறிவைக்கின்றனர். பண்டைய நாக வம்சத்தை அழிப்போம். இயக்க வம்சத்தை அழிப்போம். அவர்களின் தோன்றலர் காலங்களுக்கூடாகச் செதுக்கிச் செதுக்கிக் கூர்மையாக்கும் பண்பாட்டு வழமைகளை அழிப்போம். நம்பிக்கை மரபுகளைச் சிதைப்போம். வாழ்வியல் கூறுகளை உடைத்தெறிவோம்.

வட மாகாண சபையின் உள்ளூராட்சியர், நடுவண் அரசின் நெடுஞ்சாலை ஆட்சிச் சபையார், பொலிஸா மூவரும் இணைகின்றனராம். நீதி மன்றத்தை நாடுவராம். பண்ணையில் அருள்மிகு நாக பூசணி அம்மன் திரு உருவச் சிலையை அகற்றுவராம். சைவர்கள் வாழாவிருப்பர் எனக் கனவு காண்கின்றனர். அற வழியை வாழ்வாகக் கொண்ட, அறவாழி அந்தணர்களைச் சீண்டுகின்றனர்.

என்ன துணிச்சல் ஆட்சியாளருக்கு? அகற்றுவார்களாம். வரலாற்றை அழிப்பார்களாம். நாக மரபை நம்பிக்கை ஒளியை அருள் பெருக்கத்தை அழிப்பார்களாம். சைவர்களாகிய நாங்கள் சவாலை ஏற்போம். சந்திப்போம். நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம். பணிவோம் அல்லோம். இடுக்கட்பட்டிருப்பினும் இரந்து யாரையும் விடுக்கட் பிரான் என வினவுவோம் அல்லோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

https://akkinikkunchu.com/?p=243550

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கிருபன் said:

 

என்ன துணிச்சல் ஆட்சியாளருக்கு? அகற்றுவார்களாம். வரலாற்றை அழிப்பார்களாம். நாக மரபை நம்பிக்கை ஒளியை அருள் பெருக்கத்தை அழிப்பார்களாம். சைவர்களாகிய நாங்கள் சவாலை ஏற்போம். சந்திப்போம். நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம். பணிவோம் அல்லோம். இடுக்கட்பட்டிருப்பினும் இரந்து யாரையும் விடுக்கட் பிரான் என வினவுவோம் அல்லோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

https://akkinikkunchu.com/?p=243550

என்ன வீர வசனங்கள், காவியை கண்டால் பெட்டி பாம்பாகிவிடுவரே😂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

என்ன வீர வசனங்கள், காவியை கண்டால் பெட்டி பாம்பாகிவிடுவரே😂

மொட்டையை… கண்டால், பெட்டிப் பாம்பாகி விடுவார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, கிருபன் said:

நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம். பணிவோம் அல்லோம். இடுக்கட்பட்டிருப்பினும் இரந்து யாரையும் விடுக்கட் பிரான் என வினவுவோம் அல்லோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

வேட்டியை கழட்டிக்குடுக்கேக்கை உந்த வீரமெல்லாம் எங்கே போனது? அப்பவே நினைத்திருப்பான் இவர் யார் என்பது.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

மொட்டையை… கண்டால், பெட்டிப் பாம்பாகி விடுவார். 😂

மொட்டையைக்கண்டாலே பயமா🤣, அப்ப என்னைக்கண்டால் கட்டாயம் ஓடுவார்😁

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, உடையார் said:

மொட்டையைக்கண்டாலே பயமா🤣, அப்ப என்னைக்கண்டால் கட்டாயம் ஓடுவார்😁

அவர்... சேவ் எடுத்த, கிளீன்  மொட்டைக்குத்தான் பயம்.  😂
இயற்கையாக விழுந்த மொட்டையில்... ஐந்தாறு மயிர் எப்படியும் தப்பி இருக்கும். 🤣animiertes-kopf-bild-0108.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

மொட்டையை… கண்டால், பெட்டிப் பாம்பாகி விடுவார். 😂

2 hours ago, உடையார் said:

மொட்டையைக்கண்டாலே பயமா🤣, அப்ப என்னைக்கண்டால் கட்டாயம் ஓடுவார்😁

இரண்டு தெய்வங்கள் பண்ணைப் பாலத்தில் சந்திக்கின்றன :rolling_on_the_floor_laughing:

Mottai Boss.Gif GIF - Mottai boss Rajinikanth Thalaivar - Discover & Share  GIFs

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

இரண்டு தெய்வங்கள் பண்ணைப் பாலத்தில் சந்திக்கின்றன :rolling_on_the_floor_laughing:

Mottai Boss.Gif GIF - Mottai boss Rajinikanth Thalaivar - Discover & Share  GIFs

யாழ்.களத்தில்...  யாருக்கு கூட animiertes-kopf-bild-0095.gif மொட்டை animiertes-kopf-bild-0092.gif என்று, ஒரு கணக்கெடுப்பு நடத்த வேணும்.  animiertes-kopf-bild-0099.gif🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, தமிழ் சிறி said:

யாழ்.களத்தில்...  யாருக்கு கூட animiertes-kopf-bild-0095.gif மொட்டை animiertes-kopf-bild-0092.gif என்று, ஒரு கணக்கெடுப்பு நடத்த வேணும்.  animiertes-kopf-bild-0099.gif🤣

நான் கவரிமான் இனம் :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.நீதிமன்ற வளாகத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு!

யாழ்.நீதிமன்ற வளாகத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு!

தீவக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள நயினா தீவு நாகபூசணி அம்மன் சிலையினை அகற்ற அனுமதி கோரி யாழ்.பொலிசாரினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ள நிலையில் யாழ்.நீதிமன்ற வளாகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்து அமைப்புகள் சார்பில் சட்டத்தரணி சுமந்திரன், ஸ்ரீகாந்தா, திருக்குமரன் உட்பட மேலும் பல சட்டத்தரணிகளும் இந்து அமைப்புகள் சார்பில் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ளனர்.

IMG-20230418-WA0022.jpg

IMG-20230418-WA0020.jpg

IMG-20230418-WA0019.jpg

https://athavannews.com/2023/1330316

  • கருத்துக்கள உறவுகள்

நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுவதற்கான அனுமதியைக் கோர பொலிசாருக்கு அதிகாரங்கள் இல்லை - சுமந்திரன்

நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவினை வழங்கவில்லை என்றும் மாறாக பிறிதொரு தினத்தில் எழுத்து மூல சமர்ப்பணங்களை முன்வைக்குமாறும் நிதிமன்றம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் உள்ள நாகபூசணி அம்மன் சிலையை அகற்ற பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை இன்று (18) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிமன்ற சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணை நிறைவடைந்த பின்னர் நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு தினத்திற்கு முதல் நாள் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் நாகபூசணி அம்மன் சிலை வைக்கப்பட்டது. 

அந்த சிலையினால் போக்குவரத்திற்கு இடையூறு எனவும், மதங்களுக்கு இடையில் முரண்கள் ஏற்பட கூடிய வாய்ப்புக்கள் உண்டு எனவும் அதனால் அந்த சிலையை அகற்ற நீதிமன்றில் பொலிசார் அனுமதி கோரியிருந்தனர்.

எனினும் இவ்வாறு அனுமதி கோருவவதற்கு பொலிசாருக்கு அதிகாரங்கள் இல்லை என்பதை நீதிமன்ற சமர்ப்பணத்தில் குறிப்பிட்டிருந்ததாக எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியிருந்தார்.

எழுத்துமூல சமர்ப்பணங்களிற்காக வழக்கு எதிர்வரும் 04.05.2023 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுவதற்கான அனுமதியைக் கோர பொலிசாருக்கு அதிகாரங்கள் இல்லை - சுமந்திரன் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2023 at 16:58, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசனி அம்மன் திருவுருவச் சிலைக்கு தமிழ் புதுவருடப் பிறப்பில் பால் அபிசேகம் உருத்திர சேனா அமைப்பினால் செய்யப்பட்டது.

சும்மா இருந்த பொடியளை அழைத்து பயிற்சி கொடுத்து பல குழுக்களாக பிரித்து அடிபட வைத்து சுகம் கண்ட நாடு, அண்ணாமலை, மருதமலை, இமயமலைகள் வந்து கொழுத்திப்போட்ட வெடியில் புதுப்புது அமைப்புகள் தோன்றி  நாட்டை மீண்டும் கொழுத்தும் முயற்சி, இலங்கை இந்திய தரகர்கள் செய்யும் வேலை. பிறகு ஐயையோ! நடந்து விட்டதா? நான்தடுக்கிறேன், பந்தாடுகிறேன் என்று ஓடி வருவார்கள் அறிக்கையோடு. செந்தில் கவுண்டமணி பகிடி பாப்பதுபோல் உள்ளது இந்த தரகர்களின் நகைச்சுவை. அவர்கள் என்ன செய்வார்கள்?அவர்களுக்கு தெரிந்த அரசியலது,   தெரிந்ததைத்தானே செய்ய முடியும். 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நாகபூசணி அம்மன் சிலை விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு !

jaffna.jpg
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குறித்த வழக்கை தொடர பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் பொலிஸார் வழக்கிடு தகைமை மற்றும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் கேள்விக்குட்படுத்தி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்து அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, இந்து அமைப்புக்கள் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம், நல்லூர் ஆதினம் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல சட்டத்தரணிகளும் முன்னிலையாகி கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி வழக்கு விசாரணையின் போது நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த வழக்கை தள்ளுபடி செய்தது.

https://thinakkural.lk/article/253970

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.