Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீர்காழியில் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சிலைகள், செப்பேடுகள் கண்டெடுப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீர்காழியில் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சிலைகள், செப்பேடுகள் கண்டெடுப்பு!

சீர்காழியில் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சிலைகள், செப்பேடுகள் கண்டெடுப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோவில் உள்ளது.

இந்தக் கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

இந்நிலையில், மேற்கு வாசல் கோபுரம் அருகே யாக சாலைக்காக மண் எடுக்கும் பணிகள் நடைபெற்றது.

அப்போது அங்கே 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம்,100-க்கும் மேற்பட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சிலைகளின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படும் நிலையில், சம்பவ இடத்திற்கு தொல்லியல் துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

கோவிலில் பல சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதனை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

https://athavannews.com/2023/1330240

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

341332926_774882970738688_2583276211546120191_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=YQnLP504fR8AX-x4Hi8&_nc_ht=scontent-muc2-1.xx&oh=00_AfCaKYXb84yrKAJ1HJq0ZTEHoNgx3ChW_9iu_tc0WPQ_Gg&oe=6442D1E8

No photo description available.

May be an image of 10 people

No photo description available.

May be an image of 1 person

No photo description available.

May be an image of 3 people

No photo description available.

May be an image of 3 people

May be an image of 5 people and tree

May be an image of 12 people

May be an image of 11 people

No photo description available.

தேவாரம் எழுதப்பட்ட செப்பேடுகள்.

இன்றைய நாளில் தமிழக வரலாற்றில் ஒரு குறிப்பிடத் தகுந்த தொல்லியல் சான்று 
பெரும் ஆவணமாகக் கிடைத்துள்ளது.

சீர்காழி சட்டநாதர்_கோவில் புனரமைப்புப் பணியின்போது பூமிக்கடியில் இருந்து 
பஞ்சலோக சுவாமி சிலைகளும் செப்பேடு தொகுதிகளும் கிடைத்தன.
இந்த செப்பேட்டில் தேவாரப்பதிகங்கள் எழுதப்பட்டிருப்பதுதான்  மிகப்பெரும் வியப்பு.
அரியதொரு வரலாற்று ஆவணம்.

சைவத்தின் மிக பிரம்மாண்ட எழுச்சிக்கு அடித்தளமிட்டவர்கள்...அப்பர், சுந்தரர், 
ஞானசம்பந்தர் என்னும் மூவர். இவர்கள் தீந்தமிழில் பாடிய பதிகங்கள் 
திருமுறைகள் என்றும் தேவாரம் என்றும் அழைக்கப்பட்டன.
காலம்.. கிபி 6 - 9 ஆம் நூற்றாண்டு.

வாய்வழியாக மட்டும் பாடப்பட்ட தீந்தமிழ் பதிகங்களாம் தேவாரத் திருமுறைகளின் மூலம் எங்கே.? பதிகங்கள் எழுதப்பட்ட சுவடிகள் எங்கே.? தேடலைத் தொடங்கினார் பேரரசர் இராஜராஜர்.
திருநாரையூர் நம்பியாண்டர் நம்பி என்பவரின் துணையோடு 
சிதம்பரம் கோவிலில் பூட்டியிருந்த அறையில் இருந்த தேவாரச் சுவடிகளை மீட்டு 
திருமுறைகளாகத் தொகுத்தார் இராஜராஜர். 

திருமுறைகண்ட செல்வன் என்ற பெயரையும் பெற்றார்.
தான் எழுப்பிய தஞ்சை பெரியகோவிலில் தேவாரம் பாட 48 ஓதுவார்களை நியமித்து 
உடுக்கை வாசிப்பவர் ஒருவரையும் மத்தளம் கொட்டும் ஒருவரையும் நியமித்து 
தினமும் திருமுறைப் பதிங்கள் ஒலிக்கச் செய்தார்.

அவ்வகையில்..
திருமுறைச் சுவடிகளை மீட்டுத்தந்த சிதம்பரம் கோவில் 
தேவாரப் பெருங்கோவிலாக அறியப்பட்டது.
ஆடவல்லான் முன்பு தினந்தோறும் தேவாரம் பாடப்பட்டன. 
தேவாரம் பாடிய மூவரின் திருவுருவங்கள் வீதியுலா வந்தது. 
தேவாரம் பாட மண்டபங்கள் எழுப்பப்பட்டன. 

தேவாரம் பாடுவோருக்கும் கேட்போருக்கும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன. 
இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகள் இச்செய்தியை உறுதி செய்கின்றன.

கங்கைகொண்ட சோழன் இராஜேந்திரரின் 24 ஆம் ஆட்சியாண்டு.
நக்கன் பரவை நாச்சியார் என்பவர் கோவிலுக்கு பல்வேறு அறப்பணிகள் செய்கிறார். 
அவற்றில் ஒன்று..  கோவிலில் நாள்தோறும் திருத்தொண்டத்தொகை பாடுவோருக்கு 
தானம் அளிப்பது. சிவனின் அடியார் வரலாற்றை செந்தமிழில் கூறும் 
திருத்தொண்டத்தொகை தேவார மூவரில் ஒருவரான சுந்தரர் எழுதியது.

விக்ரமச்சோழன் காலம்.
அவரது முதன்மை அதிகாரியாக இருந்தவர்.
" அரும்பாக்கிழான் மனையிற் கூத்தன் காலிங்கராயன் "
இவர் தில்லை திருச்சிற்றம்பலமுடையாருக்குச் செய்த அறப்பணிகள் ஏராளம்..
தான் செய்த செயல்களை செந்தமிழ் செய்யுட்களாக கல்வெட்டில் வடித்துள்ளார்.
தமிழ் பதிகங்களான தேவாரத்தை சிதம்பரம் கோவிலில் பாட விரிவான ஏற்பாடுகளைச் செய்தார்.

ஞானசம்பந்தர்  முதலிய தேவார மூவரும் பாடியருளிய தேவாரத்
திருப்பதிகங்களை தடையின்றி எல்லாரும் இருந்து கேட்பதற்கு 
தேவார மண்டபத்தைத் தில்லையிலே எடுப்பித்த செய்தியை கூறும் கல்வெட்டு..
‘நட்டப் பெருமானார் ஞானங் குழைத்தளித்த
சிட்டப் பெருமான் திருப்பதியம் - முட்டாமைக் கேட்போர்க்கு மண்டபத்தைச் செய்தான்
தெவ்வேந்தர் கெட வாட்போக்குந் தொண்டையர்கோன் மன்"
(தெ. இ. க. தொகுதி IV. பக்கம், 34 ..செய்யுள் 15)

திருக்கோயிலில் நாள்தோறும் இளங் குழந்தைகளுக்குப் பாலும் எண்ணெயும் வழங்குமாறு 
ஏற்பாடு செய்த செய்தி..
“செல்வி திருந்தறங்கள் தென்னகரித் தில்லைக்கே
நல்லமகப் பால்எண்ணெய் நாடோறுஞ்- செல்லத்தான்
கண்டான் அரும்பையர்கோன் கண்ணகனீர் ஞாலமெல்லாங் கொண்டானந் தொண்டையார் கோன்'' 
(தெ. இ. தொகுதி IV. பக்கம் 34, செய்யுள் 18)

திருமுறைப் பதிகங்கள் சுவடியில் இருந்தால்தானே அவைகள் செல்லரித்து அழியும். எப்போதும் திருமுறைப் பதிகங்கள் அழியாதவாறு சுவடியில் இருந்தப் பாடல்கள் அனைத்தையும் செப்பேட்டில் எழுதச் செய்தார். செப்புப் பட்டையத்தில் ஆவணமாக பதிவு செய்தார்..
‘முத்திறத்தார் ஈசன் முதற்றிறத்தைப் பாடியவாறு ஒத்தமைத்த செப்பேட்டி னுள்ளெழுதி
 - இத்தலத்தின் எல்லைக் கிரிவாய் இசையெழுதினான் கூத்தன் தில்லைச்சிற் றம்பலத்தே சென்று' 
(தெ. இ. க. தொகுதி IV, பக்கம் 34, செய்யுள் 21)

இவ்வாறு தேவராப்பாடல்கள் முழுவதையும் காலத்தால் அழியா ஏற்பாடாக 
செப்பேட்டில் எழுதப்பட்டது .. இந்த தேவாரம் எழுதப்பட்ட செப்பேடுகள் இன்று எங்கு 
யாரிடம் உள்ளது என்ற விபரம் அறியக்கிடைக்கவில்லை..

இந்த சூழலில்தான்.. இன்று சீர்காழி கோவிலில்  தேவாரம் எழுதப்பட்ட செப்பேடுகள் 
கிடைத்துள்ளது. முதல் பார்வையில் தேவாரப் பதிகங்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளன.

செப்பேடு யார்.காலம்.?
எத்தனை இதழ்கள்..?
என்னென்ன பாடல்கள்.?
விபரங்கள் விரைவில் வெளிவரும்.
Marirajan rajan
வேணுகோபால் மாதவன்
புகைப்படங்கள்::: தருமை ஆதீனம் இணையப் பக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

செப்பேடுகளில் தேவாரம் அழிவடையாமல் இருக்க எழுதப்பட்டிருக்கும், யாருடையதோ கைகளில் அகப்படாதிருக்க புதைத்து வைத்தார்களோ? 
இணைப்பிற்கு நன்றி தமிழ்சிறி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி தமிழ்சிறி, நல்லதொரு பதிவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஏராளன் said:

செப்பேடுகளில் தேவாரம் அழிவடையாமல் இருக்க எழுதப்பட்டிருக்கும், யாருடையதோ கைகளில் அகப்படாதிருக்க புதைத்து வைத்தார்களோ? 
இணைப்பிற்கு நன்றி தமிழ்சிறி அண்ணா.

ஏராளன், அந்நியர் படை எடுப்பின் போது.... புதைத்து வைத்திருக்கலாம் என நம்புகிக்கின்றேன்  
இதுவரை நாம் கேள்விப்படாத தேவாரங்கள் எல்லாம் கிடைத்திருக்கும் என நம்புகின்றேன்.
இவற்றை வைத்து தமிழ் பல்கலைக் கழங்கள் கூட ஆராய்ச்சிகளை செய்யத் தொடங்கும்.
நிச்சயம் மதத்துக்கு அப்பால்.... தமிழ் மொழிக்கு கிடைத்த 
ஒரு பெரும்  பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும்.
இதன் மூலம் தமிழின் சிறப்பை மேலும் உணரக் கூடியதாக இருக்கும்.

 

 

6 minutes ago, உடையார் said:

இணைப்பிற்கு நன்றி தமிழ்சிறி, நல்லதொரு பதிவு

நன்றி உடையார்... எனக்கும் மிகவும் இனம் புரியாத மகிழ்ச்சியாக உள்ளது.
சம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் காலத்திற்கு முந்தைய 
செப்பேடுகள் என்பது எனது ஊகம் .
இவ்வளவிற்கும்... சம்பந்தரின் சொந்த ஊர்... சீர்காழி என்பது கவனிக்கப் பட வேண்டியது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அருமையானதொரு பகிர்வு சிறியர், மிக்க நன்றி.......!   🙏

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of measuring stick

ஓங்கிய விரலால் ஊன்றியன் றவற்கே     
        ஒளிதிகழ் வாளது கொடுத்தழ காய    
    கோங்கொடு செருந்தி கூவிள மத்தங்     
        கொன்றையுங் குலாவிய செஞ்சடைச் செல்வர்    
    வேங்கைபொன் மலரார் விரைதரு கோயில்    
        வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே!

Kathiwakkam naveenan
வேணுகோபால் மாதவன்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

அருமையானதொரு பகிர்வு சிறியர், மிக்க நன்றி.......!   🙏

நன்றி சுவியர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of elephant

May be an image of rhinoceros

No photo description available.

No photo description available.

No photo description available.

May be an image of 3 people and tree

 

May be an image of 6 people

May be an image of 6 people

அதிசய தகவல் …… ஆனந்தமான செய்தி!
தோண்ட தோண்ட வெளிப்படும் தேவார செப்பேடுகள்...
தென்னாடுடைய சிவனே போற்றி!
என  தேவாரம் எழுதப்பட்ட இன்றைய நாளில்
தமிழக வரலாற்றில், ஒரு குறிப்பிடத் தகுந்த தொல்லியல் சான்று 
பெரும் ஆவணமாகக் கிடைத்துள்ளது.

Siva Thirukumaran

  • கருத்துக்கள உறவுகள்

சீர்காழி சட்டைநாதர் கோவில் அதிசயம் - தோண்டத்தோண்ட சிலைகள், செப்பேடுகள்

தொல்லியல், அகழாய்வு, சீர்காழி, தேவாரம், சிலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 36 நிமிடங்களுக்கு முன்னர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள சட்டைநாத சுவாமி திருக்கோவிலில் யாக சாலைக்கு மண்ணெடுக்கத் தோண்டியபோது 20க்கும் மேற்பட்ட பழங்கால சிலைகளும் நூற்றுக்கணக்கான செப்பேடுகளும் கிடைத்துள்ளன.

குடமுழுக்கு பணிகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாத சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடத்துவதற்கு பணிகள் நடந்துவருகின்றன. மே 24ஆம் தேதி அங்கு குடமுழுக்குச் செய்யப்படவுள்ளது.

இந்த நிலையில், அந்த விழாவுக்கு யாக சாலை அமைக்க மண் எடுப்பதற்காக கோவிலுக்குள் மேற்குக் கோபுர வாசல் அருகே நேற்று பள்ளம் தோண்டப்பட்டது. இரண்டடி ஆழம் தோண்டிய நிலையில், சில சிலைகள் தட்டுப்பட்டன. இதையடுத்து, மிகக் கவனமாக பணிகள் நடைபெற்றன.

அப்போது அந்தப் பள்ளத்தில் இருந்து விநாயகர், முருகன், வள்ளி - தெய்வானை, சோமாஸ்கந்தர், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சிவகாமி உள்பட 23 செப்புச் சிலைகள் கிடைத்தன.

 

இந்தச் சிலைகள் அரையடி முதல் இரண்டு அடி வரை உயரம் கொண்டவையாக இருந்தன. இதுதவிர, 493 செப்பேடுகளும் 16 பூஜை பொருட்களும் 15 பீடங்களும் 50 வேறு சில உலோகப் பொருட்களும் கிடைத்தன.

தொல்லியல், அகழாய்வு, சீர்காழி, தேவாரம், சிலை

இங்கு கிடைத்த செப்பேடுகளில் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற சீர்காழி தேவாரப் பதிகம் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், அனைத்து செப்பேடுகளையும் முழுமையாகப் படித்த பிறகே, அதில் என்னென்ன பாடல்கள் அல்லது தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பது தெரியவரும்.

இதுபோல பொருட்கள் கிடைத்த தகவல் தெரிந்ததும் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கோயிலுக்கு அவற்றைப் பார்வையிட்டார்.

'மிகப் பெரிய அதிசயம்'

இந்தப் பொருட்கள் கிடைத்த தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் கோவிலுக்கு வந்தனர். ஆனால், அந்தப் பொருட்களை வருவாய்த் துறையினர் எடுத்துச் செல்ல கோவில் நிர்வாகத்தினர் அனுமதிக்கவில்லை. இப்போதைக்கு இந்தப் பொருட்கள் கோவிலிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இன்று, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் ஓலைச்சுவடி பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நூலாக்கக் குழுவைச் சேர்ந்த ஆறு பேர் சென்னையிலிருந்து சீர்காழி சென்று அந்த செப்பேடுகளில் உள்ள தகவல்களை ஆராய்ந்து வருகின்றனர்.

"இது மிகப் பெரிய அதிசயம். இதுவரை தமிழ்நாட்டில் செப்பேட்டில் எழுதப்பட்ட தேவாரம் கிடைத்ததில்லை. ஆனால், தேவாரப் பாடல்கள் செப்பேட்டில் எழுதப்பட்டதாக கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. சிதம்பரம் கோவிலில் குலோத்துங்கச் சோழனிடமும் அவனது மகன் விக்கிரம சோழனிடமும் தளபதியாக இருந்த நரலோக வீரன் என்பவன் செப்பேடுகளில் தேவாரப் பாடல்களை எழுதியதாக சிதம்பரம் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

ஆகவே தற்போது கிடைத்துள்ள செப்பேடுகள் அவனால் எழுதப்பட்டதாக இருக்கலாம்" என்கிறார் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

தொல்லியல், அகழாய்வு, சீர்காழி, தேவாரம், சிலை

செப்பேட்டில் எழுதப்பட்ட தேவாரம்

குலோத்துங்கச் சோழனிடமும் விக்கிரம சோழனிடமும் தளபதியாக இருந்த நரலோக வீரன், சிதம்பரம் கோவிலில் பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார். இந்தக் கோவிலில் இரண்டு பெரிய நுழைவாயில்களைக் கட்டவும் சந்நிதியை விரிவுபடுத்தவும் செய்தார். ஊர்வலப் பாதைகளில் விளக்குகளை எரியச் செய்தார். நடராசர் பிட்சாடன யாத்திரையில் செல்வதற்காக ரிஷப வாகனம் ஒன்றை அமைத்துத் தந்தார். அதோடு நூறு கால் மண்டபம் ஒன்றையும் கட்டினார்.

இவர் திருஞான சம்பந்தர் தேவாரத்தை ஓதுவதற்கென்று மண்டபம் ஒன்றை அமைத்ததோடு, மூவர் தேவாரத்தை செப்பேடுகளில் எழுதவும் ஏற்பாடு செய்ததாக தனது பெரிய புராண ஆய்வு நூலில் மா. ராசமாணிக்கனார் கூறியிருக்கிறார்.

இந்தச் சிலைகளும் செப்பேடுகளும் ஏன் மண்ணில் புதைக்கப்பட்டிருக்கின்றன? "தமிழ்நாட்டின் மீது பல முறை அந்நியர் படையெடுப்பு நடந்திருக்கிறது.

தொல்லியல், அகழாய்வு, சீர்காழி, தேவாரம், சிலை

மாலிக் கபூர் படையெடுப்பு, பிரெஞ்சு படையெடுப்பு, ஆங்கிலேயர் படையெடுப்பு என தொடர்ந்து நடந்திருக்கிறது. இப்போது கிடைத்திருப்பவை முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தைச் சேர்ந்தது என்பதால் மாலிக் கபூர் படையெடுப்பிலிருந்து இந்தப் பொருட்களைக் காக்க புதைத்துவைக்கப்பட்டிருக்கலாம்" என்கிறார் பாலசுப்பிரமணியம்.

தமிழ்நாட்டில் இதுவரை செப்பேட்டில் எழுதப்பட்ட தேவாரம் கிடைத்ததில்லை என்றாலும், கல்வெட்டுகளில் தேவாரப் பாடல்கள் கிடைத்துள்ளன. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரிக்கு அருகில் உள்ள திருவிடைவாயிலில் உள்ள புண்ணியநாதர் கோவிலில் 1912ஆம் ஆண்டில் கல்வெட்டில் ஒரு தேவாரப் பாடல் கண்டுபிடிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள சட்டைநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பட்ட சைவத் திருத்தலமாகும். திருஞானசம்பந்தர் ‘தோடுடைய செவியன்‘ என்ற பதிகத்தைப் பாடியது இந்தத் தலத்தில்தான் என நம்பப்படுகிறது.

இக்கோயிலில் நாற்பத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. பல்லவ மன்னர்களின் காலத்திலேயே கட்டப்பட்ட இந்தக் கோவில் தொடர்ந்து சோழ மன்னர்களால் மேம்படுத்தப்பட்டது. வீர ராஜேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், ராஜாதிராஜன் ஆகிய சோழ மன்னர்கள் இந்தக் கோவிலுக்கு நிவந்தங்களை அளித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/cyjrjeevklno

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

சீர்காழியில் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சிலைகள், செப்பேடுகள் கண்டெடுப்பு!

அதிசயம்,அற்புதம்.
சந்தோசமான செய்தி.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.🙏🏼

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க முகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 

தமிழ் ஆர்வலர்களுக்கு மிகவும் ஆனந்தத்தைத் ஏற்படுத்தும் செய்தி. வடக்கிற்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் செய்தியும் கூட

நன்றி சிறியர். 👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image

சைவம் தழைக்க, சனாதன தர்மம் செழிக்கப் புதையுண்ட தெய்வங்களும், 
சமய குரவரின் திருவாக்குகளும் வெளிவருகின்றன.

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 
சீர்காழி சட்டை நாதர் ஆலயத்தில் இன்று கண்டெடுக்கப்பட்ட 
தெய்வத் திருமேனிகள் மற்றும் தேவார செப்பேடுகள்! 

திருஞானசம்பந்தர் எழுதிய...  
திருக்கோணேஸ்வரத் திருப்பதிகத்தின் கிடைக்கத் தவறிய 7வது பாடல் 
இதில் கிடைக்கப்பெற்றது என்பதும் சிறப்பே.

 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஏராளன் said:

 

 

மாலிக் கபூர் படையெடுப்பு, பிரெஞ்சு படையெடுப்பு, ஆங்கிலேயர் படையெடுப்பு என தொடர்ந்து நடந்திருக்கிறது. இப்போது கிடைத்திருப்பவை முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தைச் சேர்ந்தது என்பதால் மாலிக் கபூர் படையெடுப்பிலிருந்து இந்தப் பொருட்களைக் காக்க புதைத்துவைக்கப்பட்டிருக்கலாம்" என்கிறார் பாலசுப்பிரமணியம்.

தமிழ்நாட்டில் இதுவரை செப்பேட்டில் எழுதப்பட்ட தேவாரம் கிடைத்ததில்லை என்றாலும், கல்வெட்டுகளில் தேவாரப் பாடல்கள் கிடைத்துள்ளன. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரிக்கு அருகில் உள்ள திருவிடைவாயிலில் உள்ள புண்ணியநாதர் கோவிலில் 1912ஆம் ஆண்டில் கல்வெட்டில் ஒரு தேவாரப் பாடல் கண்டுபிடிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள சட்டைநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பட்ட சைவத் திருத்தலமாகும். திருஞானசம்பந்தர் ‘தோடுடைய செவியன்‘ என்ற பதிகத்தைப் பாடியது இந்தத் தலத்தில்தான் என நம்பப்படுகிறது.

இக்கோயிலில் நாற்பத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. பல்லவ மன்னர்களின் காலத்திலேயே கட்டப்பட்ட இந்தக் கோவில் தொடர்ந்து சோழ மன்னர்களால் மேம்படுத்தப்பட்டது. வீர ராஜேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், ராஜாதிராஜன் ஆகிய சோழ மன்னர்கள் இந்தக் கோவிலுக்கு நிவந்தங்களை அளித்துள்ளனர்.

தேவாரங்களை பாதுகாக்க செப்பேடுகளில் எழுதி அதனைப் பாதுகாக்க புதைத்து வைத்துள்ளார்கள்.
இன்னும் எவ்வளவு வரலாற்று பொக்கிசங்கள் மறைந்துள்ளனவோ?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அழியாது!  தமிழரின் எதிரிகளுக்கு இது உவப்பில்லாமல் இருக்கலாம். தமிழ்நாட்டையும் தமிழ் இழத்தையும் முறையாக தொல் பொருள் ஆய்வுகள் செய்தால் மேலும் பல அதியங்கள் வெளிவரும் . தமிழரின் தொன்மையும் வெளிப்படும். ஒரு நாள் இது நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றை கொண்டு போய் ஆய்வு செய்யப் போறம் எண்டு தொல் பொருள்காரர் ஓடி வந்திருக்கினம். 

அதெல்லாம் தரேல்லாது, கோயில் ஆதீனத்துக்கு சொந்தம், அங்கையிருந்து தான் எடுத்தது. நீங்கள் தாராளமா இங்க வந்து ஆராயுங்கோ, தேவையான வசதி செய்து தல்லாம் எண்டு போட்டார் ஆதீன குரு...  

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

செப்பேடுகளின் உண்மை பற்றி மன்னர் மன்னனின் கருத்துகள்

 

அரசர்களின் காலத்தின் ஓலை நடைமுறைகள் பற்றி சான்றுகளோடு பேசுகிறார். செப்பேடு என்றால் என்ன? கல்வெட்டு என்றால் என்ன? அரசர்களால் எழுதப்படுவது எது? போன்ற விபரங்கள் குறித்தும் உரையாடுகிறார். முழுவதும் பார்த்தபோது எங்கட தலையில் வரலாறு என பொய்களை விதைத்துள்ளார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ஏராளன் said:

செப்பேடுகளின் உண்மை பற்றி மன்னர் மன்னனின் கருத்துகள்

 

அரசர்களின் காலத்தின் ஓலை நடைமுறைகள் பற்றி சான்றுகளோடு பேசுகிறார். செப்பேடு என்றால் என்ன? கல்வெட்டு என்றால் என்ன? அரசர்களால் எழுதப்படுவது எது? போன்ற விபரங்கள் குறித்தும் உரையாடுகிறார். முழுவதும் பார்த்தபோது எங்கட தலையில் வரலாறு என பொய்களை விதைத்துள்ளார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

பிராமணர்களால்...  திரிக்கப் பட்ட சோழ வரலாற்றை ஆதாரத்துடன் நிறுவுகின்றார்.
காணொளிக்கு நன்றி ஏராளன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/4/2023 at 14:42, தமிழ் சிறி said:

திருஞானசம்பந்தர் எழுதிய...  
திருக்கோணேஸ்வரத் திருப்பதிகத்தின் கிடைக்கத் தவறிய 7வது பாடல் 
இதில் கிடைக்கப்பெற்றது என்பதும் சிறப்பே.

மனதுக்குள் வேதனைகள் புதையுண்டு நிற்கும் காலத்தில் தமிழகத்திற் புதையுண்டுபோன அரியபல பொகிசங்கள் கிடைத்துள்ளமை மகிழ்வைத்தருகிறது. தமிழ் அழியாது. தமிழை ஏளனம் செய்வோரே கற்றுக்கொள்ளும் நிலை இந்தியாவில் தோன்றும். சோழ மன்னர்களது செயலால் தமிழ் மீண்டுவருகிறது. இந்திய ஆரிய உயர்வர்க்கத்தினருக்கு உவப்பான செய்தியல்ல. ஆனால், வரலாற்றை மறைத்துவிமுடியாதபடி ஆலயங்களில் இருந்து வெளிவருகின்றன.

இணைப்புகளுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.